• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கண்ணாத்தாள் ஏறி சென்ற கார் சில நிமிடங்களில் ஆனந்தன் வீட்டை அடைந்தது.

காரை விட்டு தம்பதிகளாக இறங்கிய அவர்களுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் தன் சூட்கேசுடன் புகுந்த வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள் கண்ணாத்தாள்.

ஆனந்தன் தன் அறைக்கு செல்ல அவளும் பின்னால் சென்று அந்த அறையில் தன் கொண்டு வந்த சூட்கேஸை ஒரிடத்தில் வைத்து கொண்டாள்.

"நீ இந்த பீரோவில் துணி வைத்துக் கொள்ளலாம்" என்று திறந்து காட்ட அவன் துணிகள் இருந்த பீரோவில் அவளுக்கும் இடம் ஒதுக்கி வைத்திருந்தான்.

"கண்ணா... இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. நீ எப்பொழுதும் போல் இரு" என்று ஆனந்தன் சொல்ல சரிங்க என்றாள் கண்ணாத்தாள்.

ஆனந்தனுக்கு போன் வர பேசிக் கொண்டு வெளியில் செல்ல அவன் அறையை பார்வையிட்ட கண்ணாத்தாள் பின் அறைக்கு வெளியில் வந்தாள்.

"என்ன மருமகளே... உனக்கு வீடு பிடிச்சிருக்கா?" என்று பாசத்துடன் கேட்டார் அத்தை மரகதம்.

"பிடிச்சிருக்கு அத்தை" என்று அவள் தயங்கி சொல்ல,
"நல்லா எல்லாபக்கமும் போய் பார்த்து விட்டு வந்து சொல்" என்றார் அத்தை மரகதம்.

"சரிங்க அத்தை" என்று அவள் தலையசைத்த பின்னர் அவள் வீட்டின் பின்புறம் வரை சென்று பார்க்க ஆரம்பித்தாள் .

ஒரு பெரிய ஹால், ஹாலின் எதிரே இரு அறைகள் ஹாலில் சமபாதி அளவில் இருந்தது. ஹாலை அடுத்து பூஜை அறை, அடுத்து சமையலறை, அதற்கு எதிரே ஸ்டோர் ரூம் பின்னால் பாத்ரும், அதற்குபின் தோட்டம் என்று அழகாக இருந்தது.

கண்ணாத்தாள் வீட்டை சுற்றி பார்த்து விட்டு வந்து தன் மாமியார் மரகத்திடம்,
"ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை" என்றாள்.

"சரிம்மா... என் பக்கத்தில் வந்து உட்கார்" என்று அத்தை சொல்ல அவள் தயங்கி நின்றாள்.

"என்ன முழிச்சிட்டு நிற்கிறே. சொல்றது காதில் விழலை" என்று மரகதம் அதட்ட அவள் பயந்து போய் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

மரகதம் அவளை பார்த்து கோபமாய் முறைக்க அவள் மருண்டவிழிகளை கண்டு சிரித்து விட்டாள்.

"நல்லா பொண்ணு நீ. நானும் உன் அம்மா மாதிரிதான். நீ என்னை பார்த்து இப்படி மிரள வேண்டாம்" என்றார் அத்தை.

"சரிங்க அத்தை" என்றபடி கண்ணாத்தாள் சிரிக்க மரகதம் தன் மருமகளை அணைத்து முத்தமிட சிலிர்த்தாள்.

இரவு சமையலுக்கு அத்தைக்கு கண்ணாத்தாள் உதவி செய்ய அவளுக்கு நேரம் ஒடியது.

ஆனந்தன் வந்து சாப்பிட்டபின் அத்தையுடன் சேர்ந்து அடுப்படி வேலைகளை முடித்து விட்டு இன்று என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் அறைக்குள் நுழைந்தாள் கண்ணாத்தாள்.

ஆனந்தன் அவளுக்கு கட்டில் இடம் விட்டு படுத்திருந்தான். அவன் செல்போனில் பாட்டு கேட்டபடி படுத்திருக்க அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.

அவன் சிறிது நேரத்தில் தன் போனை எடுத்து வைத்து விட்டு உறங்க ஆரம்பிக்க, அவளுக்கோ இன்றும் அவளின் எதிர்பார்ப்பு நிராசையாகி விட சரி நாளை பார்ப்போம் என்று தூங்க ஆரம்பித்து விட்டாள் கண்ணாத்தாள்.

அடுத்த வந்த பத்து நாட்களில் பகலில் உறவினர் வீடுகளில் விருந்து, கோவில் என சுற்றி விட்டு இரவில் கண்ணயர்ந்து தூங்க ஆரம்பித்தான் ஆனந்தன்.

கண்ணாத்தாளை மூன்று வேளையும் "சாப்பிட்டியா" என்று விசாரிப்பான். அவள் சமையல் நன்றாக இருக்க அவளை தனிமையில் பாராட்டுவான்.

தன் வீட்டு விருந்துடன் அவள் வீட்டு விருந்துக்கும் சென்று அங்கே அவன் அவர்களிடம் தன்மையாக நடக்க "கண்ணா... நீ கொடுத்து வைச்ச மகராசி அதனால்தான் இப்படி ஒரு புருஷன் கிடைச்சிருக்கார்" என்று எல்லோரும் பாராட்ட அவள் மகிழ்ந்தாள்.

Message…Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அதே சமயம் இங்கே ஆனந்தனின் நண்பர்கள். உறவினர்கள் "கண்ணாத்தாளின் ரொம்ப அழகாக இருக்காள். அவள் உனக்கு கிடைத்தது உன் அதிர்ஷ்டம்தான் ஆனந்தா" கண்ணாத்தாளை புகழந்தார்கள்.

சில பேர் அவனை நேராகவும், சில பேர் அவனுக்கு பின்னாலும் அவன் நிறத்தை வைத்து கிண்டல் அடிக்க ஆனந்தனுக்குள் அது தாழ்வு மனபான்மையை விதைத்தது.

கண்ணாத்தாளின் தரப்பிலும் அவளுக்கு இந்த நிற வேறுபாடு பற்றி பேசினார்கள் என்றாலும் அவளின் மனதில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவே இல்லை.

ஆனந்தனின் நற்பண்புகள்தான் அவளுக்குள் அவனை உயர்த்தி காட்டி கொண்டு வந்தது.

"அவர் கறுப்பாக இருந்தால் என்ன? அவர் மனம் வெள்ளையாக இருக்கிறது என்னிடமும், என் வீட்டை சேர்ந்தவர்களிடமும் அன்பாக பாசமாக இருக்கிறார் அது போதும்." என்று அவள் பேச அனைவரும் கண்ணாத்தாளை பாராட்டி சென்று விடுவார்கள்.

கண்ணாத்தாளின் அப்பா, அம்மா, அத்தை,மாமா,தோழி பானு என்று எல்லோரையும் அடிக்கடி பார்த்து விடுவதால் அவளுக்கு பிரிவின் தூக்கம் என்பதே இல்லை.

அவள் மாமியார் மரகதம், ஆனந்தனின் மாமா மாணிக்கம், அத்தை விஜயா, அருண் குமார், ரஞ்சிதா அனைவரும் நன்றாக பழக, அவளும் அதே ஊரில் இருப்பதாலும் கண்ணாத்தாளை பொறுத்தவரை திருமண வாழ்க்கை எந்த பிரிவின் துக்கத்தையும் தரவில்லை.

சென்னையில் ஆனந்தன் சொந்த பிளாட்டில் வசித்து வாங்கி வருவதால் அவனுக்கு அங்கே இனிமேல் வீடு தேடும் அவசிபம் இல்லை.

ஆனந்தனின் விடுமுறை முடிய இருப்பதால் அவர்களை குடி வைக்க நினைத்த இரு வீட்டு
பெரியவர்கள் நல்ல நாளில் அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பி சென்றார்கள்.

கண்ணாத்தாள் தான் இத்தனை ஆண்டுகள் சுற்றி திரிந்த தன் அழகிய கிராமத்தை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தாள்.

அவளின் மனதில் இரண்டாவது முறையாக பிரிவின் வலி தோன்றியது. ஏற்கனவே அவள் வீட்டிலிருந்து திருமணமாகி புகுந்த வீடு வந்த பொழுது முதல் முறை அந்த வலியை உணர்ந்திருந்தாள்.

சென்னைக்கு வேனில் இரு வீட்டு சொந்தங்களுடன் இரவு பயணம் செய்த அவளுக்கு பயண களைப்பு தெரியவில்லை.

அவள் பயணம் செய்த வேன் மற்றும் பொருட்கள் ஏற்றி வந்த லாரி இரண்டும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் உள்ளே சென்று நின்றது.

வைஷ்ணவி அபார்ட்மென்ட்ஸ் பெயர் தாங்கிய அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில்தான் ஆனந்தன் பிளாட் உள்ளது.

ஆனந்தனுக்கு திருமணம் என்று அபார்ட்மென்ட்வாசிகளுக்கு தெரியும் ஆனால் இவ்வளவு அழகான மனைவி அமைவாள் என்று எதிர்பார்க்காத அவர்கள் எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து விட்டு தங்கள் வேலைகளை தொடர்ந்தார்கள்.

தன்னுடைய பிளாட்டுக்கு சொந்தங்களுடன் அவன் செல்ல அவள் கூட சென்றாள்.

ஆனந்தன் தம்பதியினர் சந்தித்த முதல் நபர் எதிர் பிளாட்டை சேர்ந்த சிதம்பரம் தம்பதியினர்.



Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Anandhan anbana husband than ....eppo romantic ana hubby a mara poraan. Nice epi sis
மாறுவான் கொஞ்சம் பொறுங்க ஸ்ரீதேவி அப்புறம் இன்னொரு பாரா இருக்கு அதையும் படிங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top