• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"நீ உள்ளே வா கண்ணா" என்று தங்கையை கையை பிடித்து தனலட்சுமி அழைத்து செல்ல ஆனந்தனுடன் அர்ச்சனா ஆகாஷ் எல்லோரும் உள்ளே சென்றார்கள்

தங்கையை சோபாவில் அமர வைத்துவிட்டு கூட அமர்ந்த தனலட்சுமி அவளிடம்,
"ஏன் கண்ணா... நீ பேசாமல் இருக்காமல் இருக்கிறாய். அக்கா மேல் இன்னும் உனக்கு கோபம் தீரவில்லையா?" என்றாள்.

"ஆமாம்..." என்று தங்கை சொல்ல அக்கா தனலட்சுமி அதிர்ச்சியாகி பின்,
"நான் பன்னது பெரிய தப்புதான் என்னால் நல்லா படிச்சிட்டு இருந்த உன்ன படிப்பு என்னால் கெட்டு போச்சு. நீ டிகிரி படிக்க வேண்டிய ஆளு நான்தான் அதையும் கெடுத்துட்டேன்" என்றாள்.

கண்ணாத்தாள் அமைதியாக இருக்க தனலட்சுமி அழ ஆரம்பித்து பின் அழுகையுடன, "அக்காவை நீ மன்னிக்க மாட்டியா?" என்றாள்.

கண்ணாத்தாள் இல்லை என்று தலை அசைக்க தனலட்சுமிக்கு அழுகையை கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.

தனலட்சுமியின் அழுகையால் எல்லோரும் பதற்றமாகி விட கண்ணாத்தாள் உடனே தன் அக்காவை இறுக கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் தந்தாள்.

கண்ணாத்தாளின் அணைப்பும் முத்தமும் அவள் பாசத்தை காட்டியது.

"என் செல்ல அக்கா மேல் இந்த தங்கைக்கு எப்படி கோபம் வரும்" என்றாள் கண்ணாத்தாள்.

தனலட்சுமி அழுகையை நிறுத்தி விட்டு தன் தங்கையை பார்த்து, "அப்புறம் ஏன் நான் கேட்டதும் ஆமாம் என்று சொன்னேடி" என்றாள்.

"அதுவாக்கா... நான் உன்னை பார்த்ததும் ஷாக் ஆகி நின்ற பொழுது நீ என்னை கூட்டிட்டு வந்து உட்கார வைத்து சென்டிமென்டாக உருகி பேசிட்டு இருந்தாய் அதான் நீ என்னதான் பன்றேன்னு பார்க்கலாமுன்னு நான் அப்படி சொன்னேன்." என்று சொல்லி விட்டு சிரித்தாள் கண்ணாத்தாள்.

"அடிபாவி! நீ இன்னும் கோபமாக இருக்கிறாய் என்று நினைத்து நான் அழதால் என்னை வைத்து நீ விளையாடி இருக்கிறாய். உன்னை" என்று கோபமாக முறைத்தாள் தனலட்சுமி.

"அக்கா! என் செல்ல அக்காகிட்ட நான் விளையாடமல் யார் விளையாடறது சொல்லு"

"நீ ரொம்ப கெட்டு போய் விட்டாய் கண்ணா அக்காவை அழ வைக்கிறாயா நீ" என்று தனலட்சுமி முறைத்தாள்.

"சாரிக்கா என் செல்ல அக்கா இல்லையா சாரி" என்று அணைத்தபடி கண்ணாத்தாள் கூற அவளும் தங்கையை அணைத்து முத்தமிட இருவரும் சிரித்தார்கள்.

"இது உலக மகா நடிப்புடா சாமி" என்று கவுண்டமணி ஸ்டைலில் அர்ச்சனா சொல்ல அக்கா தங்கை இருவரும் கூட்டாக சிரிக்க அனைவரும் சிரிப்பில் பங்கேற்றார்கள்.

"ஒருவழியாக நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இனி நாம் பெற்றோரிடம் சேர வேண்டும்." என்றாள் அர்ச்சனா.

"ஆமாம் அர்ச்சனா நாளைக்கு இவங்க ரிசப்ஷனுக்கு போயி நம்ம பெர்பர்மான்சை காட்டி சேர்ந்துவிடனும்" என்று தனலட்சுமி கூறினாள்.

"என்ன பன்ன போறிங்க? தனா மாதிரி அழ போறிங்களா? அர்ச்சனா மாதிரி காலில் விழ போறிங்களா?" என்றான் ஆகாஷ்.

"அர்ச்சனா காலில் விழுந்தாளா அது என்ன கதை" என்று தனலட்சுமி கேட்க,
"அதுவாக்கா நான் சொல்றேன்" என்று கண்ணாத்தாள் நடந்ததை சொல்லி முடித்தாள்.

"குழந்தை என்றதும்தான் எனக்கு ஞாபகம்" என்றவள் அறைக்கு சென்று தன் மகனை கொண்டு வந்து தங்கை மடியில் வைத்தாள் தனலட்சுமி.

"அக்கா... உன்னை மாதிரியே அழகாக இருக்கான் உன் புள்ளை" என்ற கண்ணாத்தாள் "சித்தியை பாரு சித்தியை பாரு" என்றாள்.

"உம் பேருதான் அவனுக்கும் மாய கண்ணன்" என்று தனலட்சுமி கூறினாள்.


Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"சரி வந்து ரொம்ப நேரமாச்சு. நாங்க இப்பொழுது கிளம்பி போகிறோம். நாளைக்கு அங்கே வந்து உங்க திறமையை எல்லாம் காட்டுங்க" என்றான் ஆனந்தன்.

" நாங்க அசத்திடறோம்" என்று இருவரின் உடன்பிறப்புகள் சொல்ல பிரியமனமில்லாமல் அனைவரும் பிரிந்தார்கள்.

ஜெனிபர் வீட்டுக்கு அவர்கள் வந்து காவியாவை கூட்டிக் கொண்டு வீடு திரும்பினார்கள் கண்ணாத்தாள் மற்றும் ஆனந்தன்.

மறுநாள் மதிய வேளையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆனந்தன் குடும்பமும் கண்ணாத்தாள் குடும்பமும் தயாராக ஆரம்பித்து விட்டார்கள்.

மதியான சாப்பாடு முடிந்தபின் கண்ணாத்தாள் தன் அறையில் இருக்க அவளுடன் ரஞ்சிதா இருந்தாள்.

ஆனந்தன் அறைக்கு வந்து அவளிடம் ஒரு துணி பேக்கை அவளிடம் தந்தான்.

"என்னங்க இது?" என்று கண்ணாத்தாள் அவனிடம் கேட்க "பிரிச்சு பார் உனக்கே தெரியும்" என்றான் ஆனந்தன்.

கண்ணாத்தாள் ஆர்வத்துடன் அவன் தந்த பேக்கை பிரித்து பார்க்க அதிலிருந்த அட்டை பெட்டிக்குள் டிசைனர் சாரி இருந்தது.

அதை பார்த்த கண்ணாத்தாள் முகம் மலர்ந்து சிரித்தாள்.

"கண்ணா... உன் வீட்டுகாரர் ரிசப்ஷனுக்கு சாரி வாங்கிட்டு வந்திரிக்காருடி" என்றாள் ரஞ்சிதா.

"சாரி பிடிச்சிருக்கா?" என்று ஆனந்தன் கேட்டுவிட்டு பார்க்க, "பிடிச்சிருக்குங்க" என்றாள் கண்ணாத்தாள்.

"இதை இன்றைக்கு நடக்கிற வரவேற்புக்கு கட்டிக்கோ என்ன"
என்றான் ஆனந்தன்
"சரிங்க நான் கட்டிக்கிறேன்"

"அப்புறம் கொஞ்ச நேரத்தில் மண்டபத்துக்கு போக ரெடியாக இரு. நீயும் ரஞ்சிதாவும் பியூட்டி பார்லர் போயி மேக்கப் செய்து முடித்துவிட்டு மண்டபத்துக்கு போக வேண்டும்"

"சரிங்க நாங்க ரெடியாக இருக்கிறோம்" என்றாள் கண்ணாத்தாள்

"என் கம்பெனியில் வேலை செய்யறவங்க எல்லாம் அசந்து போகிற மாதிரி நல்லா மார்டனாக மேக்கப் போட்டுட்டு சாரியை கட்டிக்கனும். நீ மேக்கப் போட்ட பின்னாடி இதை கட்டீக்கோ"

"சரிங்க... நான் அப்படியே செய்து விடுகிறேன்" என்று கண்ணாத்தாள் சொல்ல ஆனந்தன் கிளம்பி சென்றான்.

ஆனந்தன் சென்றபிறகு ரஞ்சிதா பக்கம் திரும்பி.
"அக்கா... நீங்கள்தான் எனக்கு ஹெல்ப் செய்யனும். அவர் சொல்ற மாதிரி பேஷனாக சாரி கட்டி மேக்கப் போடறது எப்படி என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரியும்தானே அதனால்தான் கேட்கிறேன்" என்றாள் கண்ணாத்தாள்.

"சரி நான் ஹெல்ப் பன்றேன்." என்று ரஞ்சிதா சொல்ல அவள் நிம்மதியானாள்.

ரஞ்சிதா கல்லூரி வரை சென்று டிகிரி வரை படித்த பெண் என்பதால் அவளுக்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கை கண்ணாத்தாளுக்கு உண்டு அதனால்தான் அவள் உதவியை நாடினாள்.

மதியம் ஆனந்தன் வீட்டில் சொல்லிவிட்டு அவன் முன் சொன்னது போல் அவளையும் ரஞ்சிதாவையும் சிட்டியில் இருக்கிற ஒரு புகழ்பெற்ற பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்றான்.

ஆனந்தனுடன் கண்ணாத்தாளும் ரஞ்சிதாவும் காரை விட்டு இறங்கியபின் பார்லர் வாசலில் நின்றார்கள்.
Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top