• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அர்ச்சனாவும், தனலட்சுமியும் எதை பற்றியும் கவலைபடாமல் முன்வரிசையில் சென்று அமர்ந்து கொள்ள அருகில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டார்கள் அவர்களின் கணவன்கள்.

அவர்கள் அருகில் வந்த இரு வீட்டு உறவினர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்து நின்றனர்.

தனலட்சுமியும், அர்ச்சனாவும் எழுந்து பயந்தபடி நிற்க,
"உன்னை யார்டி இங்கே கூப்பிட்டது?" என்று தன் மகளை பார்த்து கேட்டார் மரகதம்.

"அம்மா" என்று அதிர்ந்து கேட்டபடி அர்ச்சனா நிற்க,
"உன்னையும்தான்" என்று தனலட்சுமியை பார்த்து கேட்டார் மாடசாமி.

"அப்பா" என்று அதிர்ந்து கேட்டாள் தனலட்சுமி.

"உங்கள் உறவு வேண்டாம் என்று நாங்கள் ஒதுக்கி வைத்து விட்டோமே அதனால்தானே கல்யாணத்திற்கு கூட அழைக்க இல்லையே. இப்பொழுது ஏன் வந்தீங்க" என்றார் மாணிக்கம்.

"பெற்ற அப்பா, அம்மா, சொந்தம் என்று எதுவும் வேண்டாம் என்று போய்விட்டு இப்பொழுது எதற்கு வந்து நிற்கிறாய் அர்ச்சனா" என்றார் மரகதம்.

"உனக்கு கீழே ஒரு தங்கை இருக்கிறாள் என்று துளியும் யோசிக்காமல் போய் விட்டு இப்பொழுது ஏன் வந்து நிற்கிறாய்" என்றார் சண்முகம்.

"ஜனங்கள் வருகிற நேரம் ஆச்சு. சட்டுபுட்டுன்னு கிளம்புங்கள்" என்றார் செல்வராஜ்.

இரு வீட்டு சொந்தங்களும் சரமாரியாக தாக்க இருவரும் நிலை குலைந்து நின்றனர்.

அர்ச்சனா தைரியம் வந்தவளாய் அவர்களை எல்லாம் பார்த்து,
"நாங்கள் செஞ்சது தப்புதான். என் வாழ்க்கையை பற்றி யோசித்த நான் அண்ணனை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நான் அதற்காக இத்தனை வருடம் உங்களை விட்டு பிரிந்து தண்டணையை அனுபவித்து விட்டேன். அண்ணாவுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இனியாவது எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கண்ணீர் மல்க கெஞ்சினாள் அர்ச்சனா.

"ஆமாம். கண்ணாவை பற்றி நினைக்காமல் நான் என் வாழ்க்கையை பற்றி மட்டும் யோசித்து தப்பு செய்து விட்டேன். நான் உங்களுக்கும் சரி அதை விட மிகபெரிய தண்டணையை அவளுக்கு கொடுத்து விட்டேன். நான் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இப்பொழுது அவளுக்கு மேரேஜ் ஆகிவிட்டது அல்லவா. இனியாவது எங்களை மன்னித்து ஏற்று கொள்ளுங்கள்" என்றாள் தனலட்சுமி.

"நீங்கள் இப்பொழுது மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா? உங்களால் நாங்கள் அனுபவித்த துன்பம், எங்களை பிரிந்த துன்பம் எல்லாம் போய் விடுமா?" என்றார் மாடசாமி.

"இல்லைதான் ஆனால் இனி மேலும் நாம் பிரிந்து அதே கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா?" என்றாள் அர்ச்சனா.

"உங்கள் எல்லோரையும் விட, எங்களை விட அதிக பாதிப்பு அடைஞ்சவள் கண்ணாதான். அவளை எங்களிடம் போக சொல்ல சொல்லுங்க. நாங்கள் மறுபேச்சு இல்லாமல் சென்று விடுகிறோம்" என்றாள் தனலட்சுமி.

கண்ணாத்தாள் நடப்பதை எல்லாம் நின்று பார்த்து கொண்டிருக்க அவளிடம் எல்லோருடைய பார்வை திரும்பியது.

"சொல்லு கண்ணா. நாங்கள் செஞ்சது தப்பு. நாங்கள் இங்கே இருக்க கூடாது. நாங்கள் போக வேண்டும் என்றால் சொல். நாங்கள் கிளம்பறோம்" என்றாள் தனலட்சுமி.

"சொல்லு கண்ணா தைரியமாக உன் முடிவை உன் வாயாலே சொல்லி விடு" என்றார் மாடசாமி.

"போதும்பா... என் பதிலை நேற்றே சொல்லிட்டேனே. நீங்க எல்லோரும் சம்மதிச்சிட்டிங்க. இப்பொழுது திரும்ப ஒரு முறையா?" என்று தன் தந்தையை பார்த்து சிரித்தபடி கூறினாள் கண்ணாத்தாள்.
Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
தனலட்சுமியும், அர்ச்சனாவும் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் குழம்பியபடி அவர்களை அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

"அப்புறம் என்ன உன் அக்காவை கூட்டிட்டு போம்மா." என்று மாடசாமி சொல்ல மற்றவர்கள் சிரித்தபடி அவர்களை பார்க்க, அர்ச்சனாவும் தனலட்சுமியும் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தார்கள்.

"ஆமாம்... இங்கே என்ன நடக்கிறது? நீங்க என்ன பேசறிங்க? எங்களுக்கு எதுவும் புரியவில்லை" என்று தனலட்சுமி சொல்ல,
"எனக்கும்தான்" என்றாள் அர்ச்சனா.

"அதை உன் தங்கச்சியிடம், உங்க புருஷன்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட்டு வாங்க." என்றார் மீனாட்சி.

"கண்ணா... என்ன பார்த்து கொண்டு நிற்கிறாய். உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லாவற்றையும் சொல்" என்றார் விஜயா.

"என் பேரனை கொடுத்து விட்டு போய் கதை கேளுங்கள்" என்று கமலம் சொல்ல தனசேகர் கொடுத்து விட்டு சென்றான்.

"என் பேத்தியை தந்துட்டு போம்மா" என்று மரகதம் கேட்க ஆகாஷ் கொடுத்து விட்டு சென்றான்.

நடப்பதெல்லாம் கனவா நனவா என்று புரியாது ஆச்சரியத்தில் நின்ற தனலட்சுமியையும், அர்ச்சனாவையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள் கண்ணாத்தாள்.

"கண்ணா... இங்கே என்னடி நடக்குது? நமது அப்பாதான் இப்பொழுது பேசினாரா? நமது சொந்தகாரர்கள்தான் இப்பொழுது பேசினாங்களா? எனக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை" என்று பேசிய தனலட்சுமியின் முகத்தில் சந்தோஷமும், ஆச்சரியமும் இருந்தது.

"ஆமாம்... உன்னையும் எங்களின் புருஷன்களையும் கதை கேட்க சொன்னாங்களே. அது என்ன கதை?" என்று கேள்வி கேட்டாள் அர்ச்சனா.

"ஆமாம்... அது என்ன கதை கண்ணா. நீ என்ன நேற்று அவர்களிடம் சொன்னாய்? அவர்கள் எப்படி எங்களை ஏற்று கொண்டார்கள் சொல்லு" என்றாள் தனலட்சுமி.

"அதை நான் சொல்கிறேன்." என்றபடி உள்ளே வந்த ரஞ்சிதா நடந்ததவற்றை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள்.

நேற்று இரவு 9 மணி.

இரண்டு வீட்டு குடும்பத்தினரும் ஹாலில் சோபாவில் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.

"கண்ணா... ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று எங்களை எல்லாம் கூப்பிட்டு உட்கார வைத்திருக்கிறாய். என்ன விஷயம்?" என்றார் மாணிக்கம் மாமா.

"அவரு சொல்வாரு மாமா" என்று கண்ணாத்தாள் தன் கணவனை மாட்டிவிட அவர்கள் பார்வை ஆனந்தன் பக்கம் திரும்பியது.

"நாங்கள் சொல்ல போகிற விஷயத்தை எப்படி எடுத்து கொள்வீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் செய்தது சரியா தவறா என்று தெரியாது. விஷயம் என்ன என்றால் நாங்கள் ரெண்டு பேரும் இன்றைக்கு அர்ச்சனாவையும், தனாவையும் சந்தித்தோம்." என்று ஆனந்தன் சொன்னவுடன் எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சியும, கேள்விகளும் தோன்ற ஆரம்பித்தன.

"நாங்களாக அவர்களை சந்திக்க செல்லவில்லை. நம்ம பக்கத்து வீட்டு காவ்யா பிரண்ட் ஜெனிபர் வீட்டுக்கு இன்வைட் பன்ன போனோம் இல்லையா. அவர்கள் நம் ஊர்காரர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று சொன்னதால் அழைக்க போனோம். நாங்கள் அப்பொழுதான் அவர்களை சந்தித்தோம்." என்று பேச்சை நிறுத்தி விட்டு பார்த்தான் ஆனந்தன்.

"அர்ச்சனாவும் சரி தனாவும் சரி அவர்கள் செய்த தவறை உணர்ந்து வேதனையுடன் இருக்கிறார்கள் என்று அப்பொழுது எங்களுக்கு தெரிந்தது. அவர்களை நாளை நடக்கும் ரிசப்ஷனுக்கு வர சொல்லி இருக்கிறோம்" என்று ஆனந்தன் கூறி விட்டு அனைவரையும் பார்த்தான்.

"ரிசப்ஷனுக்கு மட்டும்தானா?" என்றார் மாணிக்கம் மாமா.

Write your reply...
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
நல்ல பதிவு ஸ்ரீ சிறியவர்கள் செய்த தவறை புரியவைத்து ஏற்றுக்கொள்ளும் பெரியவர்கள் உண்மையிலே பெரிய மனது படைத்தவர்கள் தான் நன்றி ஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சினேகாஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top