• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கண்ணாத்தாள் தன் பிளாட்டுக்கு கணவனுடன் திரும்பியவள் குளித்து விட்டு சமையலை தொடங்கி விட்டாள்.

ஆனந்தன் அவளுக்கு உதவி செய்ய சாதம்,வெண்டைக்காய் மோர் குழம்பு, பருப்பு ரசம், உருளை கிழங்கு பொரியல், அப்பளம், பாயசம், வடை என்று ஒரு மினி விருந்தையே அசால்ட்டாக முடித்து விட்டாள் கண்ணாத்தாள்.

தாங்கள் செய்தவற்றை எல்லா ஐட்டங்களையும் அடுக்கி விட்டு ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டார்கள்.

"வாங்க... அவங்களை கூட்டிட்டு வரலாம். பசியாக இருப்பாங்க மணி ஒன்றரை வேற ஆகுது" என்றாள் கண்ணாத்தாள்.

"சரி வா போகலாம்" என்றபடி ஆனந்தன் சென்று கதவை திறக்க சரண்யா விவேக்குடன் பிளாட் வாசலுக்கு வந்து விட்டாள்.

"உங்களை கூப்பிடத்தான் நாங்கள் இருவரும் கிளம்பி வந்தோம்" என்றான் ஆனந்தன்.

"சாப்பாடு விஷயத்தில் என்னை எல்லாம் கூப்பிடற சிரமம் எல்லாம் வைக்க மாட்டேன் அண்ணா. நானாக வந்து விடுவேன். இவரை கிளப்பதான் நேரமாச்சு. வாங்க உள்ளே போகலாம்." என்றாள் சரண்யா.

"சரி வாங்க" என்று ஆனந்தனும் கண்ணாத்தாளும் அவர்களை அழைத்து சென்று டைனிங் டேபிளில் அவர்களை அமர வைத்தார்கள்.

"நீங்களும் உட்காருங்க. நான் பரிமாறிக்கிறேன்" என்று ஆனந்தனையும் அமர வைத்து விட்டாள் கண்ணாத்தாள்.

சரண்யா டைனிங் டேபிளில் அடுக்கி வைத்த ஐட்டங்களை பார்த்து விட்டு,
"அண்ணா! ஒரு பேச்சுக்கு விருந்து கேட்டால் இப்படியா ஐட்டங்களை போட்டு தாக்கி வைப்பீங்க. அண்ணி பாவம் இல்லையா?" என்றாள்.

"அவரும் கூட சமையலுக்கு உதவி செஞ்சாங்க" என்று கணவனை விட்டு தராமல் கூறினாள் கண்ணாத்தாள்.

"என்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கட் பன்னி தந்திருப்பாரு அண்ணா. நீங்கள் அதை போயி ஒர் உதவியாக சொல்றிங்களா அண்ணி?"

"அதுவும் ஒர் உதவிதானேப்பா. அவர் கூட காய்கறி வேறு நறுக்கி தந்தாரு. சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து விட்டால் அதன் பிறகு சமையலை ஈசியாக செய்து விடலாம் இல்லையா?" என்றாள் கண்ணாத்தாள்.

"உங்க புருஷனை எளிதில் விட்டு தரமாட்டிங்களே" என்றாள் சரண்யா.

"அப்புறம் உன்னை மாதிரி போகிற இடத்தில் எல்லாம் என்னை வாருவாங்க" என்று சொல்லிவிட்டு விவேக் சிரிக்க,

"நான் எப்பொழுது உங்களை வாரியிருக்கிறேன் சொல்லுங்க" என்று கோபமாக கேட்டாள் சரண்யா.

"அண்ணா... சரண்யா சும்மா கிண்டலுக்குதான் பேசறாங்க மற்றபடி அவங்கள் மனதில் ஒன்றுமில்லை" என்றாள் கண்ணாத்தாள்.

"கேட்டுக்குங்கோங்க." என்று தணியாத கோபத்துடன் சரண்யா சொல்லி விட்டு பார்க்க,
"என் ஹனியை பற்றி எனக்கு தெரியாதா?" என்று விவேக் கொஞ்சலாக சொன்னான்.

கண்ணாத்தாள் பேசி கொண்டே எல்லோருக்கும் சாப்பாட்டை பரிமாறி விட்டாள்.

"முதலில் நான் சாப்பிடுகிறேன் பிறகு நான் இதை பற்றி யோசிக்கிறேன். அண்ணி... நீங்கள் இருக்கிங்களே. எங்கள் கூட பேசிகிட்டே சாப்பாட்டை பரிமாறிட்டிங்களே" என்ற சரண்யா சாப்பிட ஆரம்பித்தாள்.

"வாவ்! பென்டாஸ்டிக்! அண்ணி உங்க கைபக்குவம் அருமை." என்று மனதார பாரட்டியபடி சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டு முடித்தாள் சரண்யா.

இறுதியாக பாயசத்தை ருசித்து சாப்பிட்ட தம்பதியினர் கை கழுவி விட்டு எழுந்தனர்.

"அண்ணி! நீங்கள் உட்காருங்க. உங்களுக்கு நான் பரிமாற போகிறேன்" என்ற சரண்யா கண்ணாத்தாளை அமர வைத்து சாப்பாட்டு பரிமாறி சாப்பிட வைத்தாள்.

கண்ணாத்தாள் சாப்பிட்டு முடித்த பின்னர் அனைவரும் வந்து சோபாவில் அமர்ந்தனர்.

"சரி அண்ணா... அண்ணி கையால் நல்லா சூப்பர் சாப்பாட்டை திருப்தியாக சாப்பிட்டு விட்டோம். நாங்கள் எங்களின் வசந்த மாளிகைக்கு போயி ஒரு குட்டி தூக்கம் போடுகிறோம்" என்றாள் சரண்யா.

"கொஞ்சம் வெயிட் பன்னுங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற கண்ணாத்தாள் ரெண்டு டிபன்களுடன் வந்தாள்.

"இதில் பாயாசமும்,வடையும் இருக்கு அப்புறமாக சாப்பிடுங்க" என்று கண்ணாத்தாள் அதை தர,

"இது வேறா?" என்று வாங்கி கொண்டாள் சரண்யா.

"சரிப்பா ஆனந்த். நாங்கள் போயிட்டு வருகிறோம்" என்று விவேக் சொல்ல இருவரும் கிளம்பி சென்றனர்.

இரவு ஆனந்தன் பேசிய பொழுது அவர்களை பற்றி சொல்ல கண்ணாத்தாள் மனதில் சரண்யா எனக்கு அக்காவா? அவர்களை மரியாதையாக இனி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

மறுநாள் காலை ஆனந்தன் கிளம்பி சென்று விட என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தாள் கண்ணாத்தாள்.

காலிங் பெல் அடிக்க சென்று அவள் கதவை திறக்க காவ்யா உடன் ஜெனிபர் நின்று கொண்டு இருந்தாள்.

"வா காவியா... வா ஜெனிபர்..." என்று கண்ணாத்தாள் கூப்பிட இருவரும் உள்ளே வந்து தங்கள் நோட் புத்தகங்களுடன் அமர்ந்து கொண்டார்கள்.


Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"என்ன ஜெனி... என் வீட்டுக்கு வர இன்றைக்குதான் வழி தெரிந்ததா உனக்கு?" என்று கிண்டலாக அவளிடம் கேட்டாள் கண்ணாத்தாள்.

"அக்கா... எங்களுக்கு படிக்கவே நேரம் சரியாக இருந்தது. பகலில் என் வீட்டுக்கு காவ்யா வந்து விடுவாள். ஈவினிங் நிர்மலா மிஸ் வீட்டில் படிப்போம். நைட்டில் எங்கள் வீட்டில் படிக்க ஆரம்பித்து விடுவோம் அப்புறம் எங்கே நாங்கள் உங்களுடைய வீட்டுக்கு வர்றது?" என்றாள் ஜெனிபர்.

"ஜெனி... அக்கா சும்மாதான் கேட்டேன். உங்களை பற்றி எனக்கு தெரியாதா? நான்தான் தினமும் காவியாவை பார்த்து கொண்டு வருகிறேன் அல்லவா" என்றாள் கண்ணாத்தாள்.

ஜெனிபர் உடனே அவளின் அருகில் வந்து அமர்ந்தபடி, "அக்கா... எங்கள் மேல் கோபம் இல்லையே?" என்று கேட்டாள்.

இதுதான் கள்ளங் கபடமற்ற குழந்தைகள் மனம் என்பது ஆகும். ஒரு நிமிடத்தில் கோபம் கொண்டாலும் மறுநிமிடத்தில் அவர்கள் மனம் மாறி கனிவு வந்து விடும். அவர்களிடம் கோபம் நிலையாக தங்காது.

"என் ஜெனிகுட்டி மேல் கோபம் எப்படி வரும்? நீயே சொல்லு" என்றாள் கண்ணாத்தாள்.

"தெரியும்... நான் கொஞ்சம் கோபமாக பேசின மாதிரி பீல் பன்னினேன் அக்கா அதான் கேட்டேன்"

"எனக்கு கோபம் எல்லாம் இல்லைடா நீ போய் படி" என்றவள் சொல்ல "சரிக்கா" என்ற ஜெனிபர் திரும்பி காவ்யாவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

காவியா, ஜெனிபர் இருவரும் தங்கள் நோட் புத்தகங்களை விரித்து வைத்து கொண்டு ஆழ்ந்த யோசனையில் ஏதோ சிந்தித்தபடியும், தங்களுக்குள் பேசியபடியும் இருந்தனர்.

அவர்கள் முகத்தில் ஒருவித கவலையும் குழப்பமும்
காணப்படுவதை கவனித்து விட்ட கண்ணாத்தாள் என்ன என்று கேட்க தீர்மானித்தாள்.

காலிங் பெல் மறுபடியும் அலற யார் என்று பார்க்க சென்றாள் கண்ணாத்தாள்.

அவள் கதவை திறக்க சரண்யா நின்று கொண்டிருந்தாள்.

"குட்மார்னிங் அண்ணி" என்று அவள் சொல்ல "குட்மார்னிங் அக்கா" என்று வழிவிட சரண்யா உள்ளே வந்தாள்.

"ஹாய் காவியா" என்றபடி வந்த சரண்யாவிடம், "குட்மார்னிங் சரண்யாக்கா" என்றாள் காவியா.

"அக்கா... இது என் பிரண்ட் ஜெனிபர்" என்று காவ்யா சொல்ல, "ஹாய் ஜெனி" என்று ஹைபை தந்தாள்.

"செல்லம்ஸ் என்னபடிக்கிறிங்க" என்று சரண்யா கேட்க.
"மேத்ஸ்" என்று உற்சாகம் இல்லாமல் பதில் வந்தது.

"செல்லம்ஸ் மேத்ஸ் ரொம்ப டார்ச்சர் பன்னுதா?" என்று சரண்யா அவர்களிடம் கேட்க, "ஆமாக்கா... எப்படிக்கா அதை நீங்க கண்டுபிடிச்சிங்க" என்று ஆச்சரியமாக கேட்டாள் காவியா.
"எங்க செல்லங்கள் மேத்ஸ் என்று சோகமாக சொல்றப்பவே தெரியுதே"

"ஆமாக்கா செம டார்ச்சர்" என்று காவியாவிடம் பதில் வர, "அக்காஸ் ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லி தரட்டுமா" என்று சரண்யா கேட்டாள்.

"எங்க மேத்ஸ் உங்களுக்கு தெரியுமா?" என்று ஜெனிபர் கேட்க "தெரியுமே அக்கா பிஇ எல்லாம் படிச்சிருக்கேன்டா" என்றாள் சரண்யா.

"அப்பொழுது சரி" என்று நோட்டுடன் அவளிடம் இருவரும் வந்துவிட,
"அக்கா ... நீங்கள் அவர்களுக்கு சொல்லி கொடுங்க. நான் போயி உங்களுக்கு எல்லாம் மதிய சாப்பாடு சமைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கண்ணாத்தாள் கிளம்பினாள்.

"அண்ணி... எங்கே எங்களை விட்டு கிளம்பறிங்க? அடி பிச்சி பிச்சி. நல்லா புள்ளையாக என் கூட சேர்ந்து சொல்லி தாங்க" என்றாள் சரண்யா.

"ஆமாக்கா... நீங்களும் வாங்க" என்று ஜெனிபர் அழைக்க கண்ணாத்தாள் அருகில் அமர சரண்யா சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.

கண்ணாத்தாளும் படிப்பில் கொஞ்சம் கெட்டி என்பதால் அவளும் சொல்லி தர நன்றாக புரிந்து கொண்ட அவர்கள் இருவரும் ஆர்வமாக படித்தனர்.

கண்ணாத்தாள் நடுவில் சமைக்க கிளம்பி செல்ல சரண்யா தனி ஆளாக புரிய வைத்தாள்.

"வாங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு படிக்கலாம்" என்று கண்ணாத்தாள் அழைக்க சரண்யாவுடன் ஜெனிபர், காவியா. கண்ணாத்தாள் என்று நால்வரும் சாப்பிட்டனர்.

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
பகல் தூக்கத்தையும் மறந்து காவியாவும், ஜெனிபரும் ஆர்வமாக படித்தபடி இருக்க,
கண்ணாத்தாள் சாப்பிட ஏதாவது தந்தபடி இருக்க அவர்கள் அதை கொறித்தபடி படித்தனர்.

மாலை வீடு திரும்பும் போது,
"அக்கா... நாங்கள் இதை நைட் படித்துவிட்டு வருகிறோம். நாளைக்கும் சொல்லி தாங்க" என்றாள் ஜெனிபர்.

"நிச்சயமாக. எக்சாம் முடியும் வரை வாங்க." என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்த சரண்யாவும் கிளம்பி சென்றாள்.

இரவு வந்த ஆனந்தனிடம் கண்ணாத்தாள் நடந்தவற்றை கூற அவன் கேட்டுவிட்டு சிரித்தபடி தூங்கினான்.

கண்ணாத்தாளுடன் சரண்யா சேர்ந்து அவர்கள் இருவருக்கும் தினமும் சொல்லி தர அவர்கள் ஆர்வத்துடன் கற்றனர்.

"நாளைக்கு சண்டே ஆச்சே. நாங்கள் ஒருமணி நேரம் மட்டும் வரவா?" என்று ஜெனிபர் கேட்க.
"நோ" என்றாள் சரண்யா.

"சரிக்கா. நீங்கள் சொல்லி கொடுத்ததை படிக்கிறோம்" என்று ஜெனிபர் சோகத்துடன் பதில் சொல்ல அவர்களுடன் கண்ணாத்தாள் சோகமாக பார்த்தாள்.

"ஜெனிகுட்டி... ஏன் சோகம்? ஒன் அவர் வேண்டாம்டா நாளைக்கும் வழக்கம் போல் வாங்க. எங்களுடன் அங்கிள்ஸ் சேர்ந்துப்பாங்க. என்ன டவுட் வேண்டுமானாலும் ரவுண்டு கட்டி கேளுங்க" என்று சரண்யா சொல்ல அனைவரின் முகமும் மத்தாப்பாய் மலர்ந்தது.

"ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்" என்று இருவரும் சொல்ல, "கொஞ்சநேரத்தில் எங்களை எல்லாம் பயமுறுத்திட்டிங்களே அக்கா உங்களை" என்றாள் கண்ணாத்தாள்.

மறுநாள் சர்சுக்கு சென்றுவிட்டு ஜெனிபர் வந்து, காவியா உடன் சேர்ந்து கொள்ள சரண்யா, கண்ணா, விவேக், ஆனந்தன் என மாறி சொல்லி தந்தார்கள்.

காவியாவும் ஜெனிபரும் மறுநாள் தேர்வில் வினாத்தாள் வாங்கி பார்த்துவிட்டு இருவரும் புன்னகைத்தபடி எழுத தொடங்கி விட்டார்கள்.

கண்ணாத்தாள் வீட்டில் சரண்யா அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள்.

காவியா, ஜெனிபரும் கதவை திறந்து கொண்டு வந்து அவர்களை ஆளுக்கு ஒருவராக கட்டிக் கொண்டார்கள்.

"செல்லம்ஸ்... எக்சாம் முடிந்து விட்டதால் ஒரே குஷி மூடுல இருக்கீங்களா? ஹக் எல்லாம் பன்றிங்க" என்றாள் சரண்யா.

"அதுக்காக நாங்கள் ஹக் செய்யவில்லைக்கா. நாங்கள் இருவரும் இன்றைக்குதான் மேத்ஸ் எக்சாமை ரொம்ப சந்தோஷமாக எழுதினோம்." என்றாள் காவியா.

"இதுக்கு முன்னாடி ஒன்றும் தெரியாமல் அதிக நேரம் எழுதறவங்களை பார்ப்போம் இல்லை என்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வோம்." என்றாள் ஜெனிபர்.

"இன்று நாங்கள் யாரையும் பார்க்கவில்லை ஏன் நாங்களே ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவே இல்லை. நிர்மலா மிஸ்தான் ஹாலில் இருந்தார்கள. அவங்களே ஆச்சரியபட்டு எங்களை தட்டீ கொடுத்தார்கள் உங்களை மாதிரி" என்றாள் காவியா.

"அவர்களை வெயிட் பன்னி பார்த்து ஹக் பன்னி விட்டு அவர்களிடம் உங்களை பற்றி எல்லாம் சொல்லிட்டு வீட்டுக்கு கூட போகாமல் இங்கே வருகிறேன்" என்றாள் ஜெனிபர்.

"அப்படியா செல்லங்களா! நாங்களும் உங்களுக்காக ஸ்வீட் செய்துவிட்டு எப்பொழுது வருவீங்க என்று வெயிட்டிங்" என்று கேசரியை நீட்டினாள் கண்ணாத்தாள்.

"தாங்க்ஸ் அக்கா" என்று வாங்கிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணால் சைகை செய்து விட்டு பின்னர் "கண்ணாஅக்கா... சரண்யா அக்கா கண்ணை மூடுங்க" என்றனர்.

"எதுக்கு செல்லம்ஸ்" என்று சரண்யா கேட்க "நீங்கள் எதுவும் பேசாமல் கண்ணை மூடுங்க" என்றாள் ஜெனிபர்.

"சரி தங்கம்ஸ்" என்று இருவரும் கண்களை மூட "ஆ காட்டுங்க" என்றனர்.

அவர்கள் வாயை திறக்க கேசரி எடுத்து இருவருக்கும் ஊட்டி விட்டு "சாப்பிடுங்க" என்று கோராசாக சொன்னார்கள்.

அவர்கள் இருவரும் கண்களை திறக்க கட்டி கொண்டு முத்தமிட பதிலுக்கு முத்தம் தந்து ஊட்டி விட்டார்கள்.

"சரி நாங்க வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வருகிறோம்" என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பி சென்றார்கள்.

"நானும் தூங்கிட்டு வர்றேன் அண்ணி" என்று சரண்யாவும் கிளம்பி சென்றாள்.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சினேகாஸ்ரீ டியர்
நன்றி பானுமதி அம்மா நானும் அப்டேட் தந்துட்டேன் இனி யாரும் தர மாட்டாங்க என்று நினைக்கிறேன் அதனால் படித்துவிட்டு அமைதியாக தூங்குங்க பானுமதி அம்மா குட் நைட் காலையில் பார்ப்போம் அப்படின்னு கண்ணாவும் சரண்யாவும் சொல்ல சொல்றாங்க பானுமா பாருங்களேன் அவங்களை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top