• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode En Kaathal kanmaniye-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நீங்க திருப்தின்னா அதுவே எங்களுக்கு அதுவே போதும் அப்பாடா கல்யாண விருந்தை யாரும் குறை சொல்லைலப்பா
கல்யாண விருந்துல குத்தங்குறை ஒண்ணுமில்லீங்கோ, சினேகா டியர்
அதிலேயும் அந்த மாம்பழப் பாயசம் ரொம்பவே சூப்பருங்கோ
பந்தி விசாரிப்பும் நல்லாயிருந்துச்சு
தயிர் சாதத்துக்குக் கூட
அப்பளம் வேணுமா-ன்னு
கேட்டு கொண்டு வந்தாங்கப்பா,
சினேகாஸ்ரீ டியர்
பரம திருப்தியா சாப்புட்டோம்ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கண்ணாத்தாள் அவ அக்காவுக்கு நன்றி சொல்ற பானுமதி அம்மா நான் இல்லை எப்படி
சினேகாஸ்ரீ, கிரேட்
எஸ்கேப்புங்கோ
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கல்யாண விருந்துல குத்தங்குறை ஒண்ணுமில்லீங்கோ, சினேகா டியர்
அதிலேயும் அந்த மாம்பழப் பாயசம் ரொம்பவே சூப்பருங்கோ
பந்தி விசாரிப்பும் நல்லாயிருந்துச்சு
தயிர் சாதத்துக்குக் கூட
அப்பளம் வேணுமா-ன்னு
கேட்டு கொண்டு வந்தாங்கப்பா,
சினேகாஸ்ரீ டியர்
பரம திருப்தியா சாப்புட்டோம்ப்பா
நீங்க திருப்தின்னா எனக்கும் திருப்திம்மா
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மேள தாளங்கள் வாசிக்கபட, நாதஸ்வர இசை முழங்க, அய்யர் மந்திரங்கள் ஒத, மேடையில் உறவினர்கள் சூழ்ந்து நிற்க, வந்தவர்கள் அர்ச்சனைகளை கையில் ஏந்தி நிற்க, அய்யர் தாலியை எடுத்து ஆனந்தனிடம் தந்து விட, கெட்டி மேளம் கெட்டிமேளம் என்று சொல்லபட, கல்யாண மேளம் இசைக்கபட, நாதஸ்வரம் முழங்க ஆனந்தன் தாலியை அணிவிக்க கண்ணாத்தாள் தலை கவிழ்ந்து ஏற்றுக் கொண்டாள்.

அவளுக்கு அந்த நேரத்தில் அவளின் மனதில் காரணம் அறியாத பயம், வெட்கம், நடுக்கம் என்று தோன்றி மறைய உணர்ச்சிகளின் கலவையாய் அவள் இருக்க யாரையும் பார்க்க துணிவின்றி தலைகவிழ்ந்து அழுகையுடன் தாலியை ஏற்று நிற்க ஆனந்தன் குங்கும பொட்டு வைத்துவிட்டான்.

மணமக்கள் அக்னி சுற்றி வந்த பின்னர் அம்மி மிதித்த அவள் காலில் ஆனந்தன் மெட்டி அணிவிக்க அதை கூச்சத்துடன் ஏற்றாள் கண்ணாத்தாள்.

மணமக்கள் தம்பதி சமேதராக அப்பா,அம்மா, பெரியவர்கள், என்று அனைவரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.

இரு தரப்பு உறவினர்களும் முறைகளை முதலில் செய்து முடித்து விட பின்னர் இரு தரப்பு உறவினர்கள, நண்பர்கள், தோழிகள் அனைவரும் பரிசுகள் வழங்கி செல்ல கேமராக்கள் அதை பிடிக்க போட்டோக்கள் மழையில் நனைந்தாள் கண்ணாத்தாள்.

மேடையில் நின்ற அவர்களை ஆனந்தன் தரப்பில் அவன் நண்பர்கள், உறவினர்களும் கலாயக்க அவன் அதை சமாளித்து கொண்டிருக்க,
கண்ணாத்தாளை அவள் தோழிகள், உறவினர்கள் வார அவளும் சிரித்தபடி சமாளித்து வந்தாள்.

உறவினர்கள் கிண்டலுக்கு இடையில் பேச சொல்ல என்ன பேசுவதென்று தெரியாமல் ஆனந்தன் விழிக்க அவளும் வெட்கத்தில் நெளிந்தபடி நிற்க பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை புரிந்து கொண்டனர்.

போட்டோகிராபர்கள் ஆல்பத்தில் பிரிண்ட் செய்ய வேண்டும் என்று விதவிதமாக போஸ்கள் தர சொல்ல, உறவினர்கள், நண்பர்கள், தோழிகள் மறுபடியும் கிண்டல் செய்ய கண்ணாத்தாள் தடுமாற ஆரம்பிக்க ஆனந்தன் எல்லாவற்றையும் சமாளித்து அவளுக்கும் உதவி செய்ய அவள் மனம் மகிழ்ந்தாள்.

மணமக்கள் இருவரும் காலை அதிகம் சாப்பிட முடியாத நிலையில் மதிய வேளையில் உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்து கேலி செய்து கொண்டிருக்க போட்டோ,வீடியோகாரர்கள் படம் பிடிக்க ஆனந்தன் தன் மனைவி கண்ணாத்தாளுக்கு தயங்கியபடி சோறு ஊட்டி விட, கண்ணாத்தாளும் வெட்கத்தில் நெளிந்தபடி வாங்கி கொண்டாள்.

அவள் பின்னர் வெட்கத்துடன் ஆனந்தனுக்கு ஊட்டிவிட ஆனந்தன் வாங்கி கொண்டு விரலை லேசாக கடிக்க அவள் வலி ஒருபுறம் வெட்கம், கூச்சம் மறுபுறம் என்றபடி நெளிய அனைவரும் சிரிக்க திருமண விழா சுபமாய் முடிந்தது.

மணமக்களும், இரு வீட்டு உறவினர்களும் மண்டபத்தை காலி செய்து விட்டு மணமகன் ஆனந்தன் வீட்டிற்கு வந்து விட்டனர்.

தம்பதிகளை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தபின்னர் இடையில் தண்ணீர்குடம் சுமந்து வலது காலால் படி அரிசியை தட்டி விட்டு அடி எடுத்து வைத்து உள்ளே கண்ணாத்தாள் நுழைய அவளுடன் ஆனந்தனும் மற்ற அனைவரும் உள்ளே வந்தார்கள்.

தம்பதிகள் இருவருக்கும் பால் பழம் தர சாப்பிட்டபின்னர் கண்ணாத்தாளை பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற சொல்ல அவளும் அப்படியே செய்ய அனைவரும் சாமி கும்பிட்டனர்.

மணமக்கள் சில மணி நேரம் அங்கிருந்தபின் கிளம்பி கண்ணாத்தளின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.

கண்ணாத்தாள் வீட்டிலும் ஆரத்தியுடன் அவள் வீட்டில் திருமணமாகி மணக்கோலத்தில் தன் கணவனுடன் உள்ளே நுழைந்த பொழுது அவள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியும் வெட்கமும் சிலிர்ப்பும் ஏற்பட்டு இருந்தது.

கண்ணாத்தாளும் ஆனந்தனும் இவ்வாறு இருக்க நண்பர்கள் உபயத்தால் கல்யாண நிகழ்வுகள் கண்ட அர்ச்சனாவும் தனலட்சுமியும் ஒருபக்கம் ஆனந்தத்தில் மகிழ்ந்தாலும் மறுபுறம் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்தி தங்கள் கணவண்கள் தோள் சாய்ந்து அழுக அவர்களை அணைத்து தேற்றினார்கள் காதல் கணவர்கள்.
உண்மையா ஒரு கல்யாணவீட்டுக்கு போயிட்டு வந்தாது போல இருக்கு சினேகா ?????நைஸ் மா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top