• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaathal kannalagi 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 3

கையில் ஆதாரத்துடன், அந்த காசியை கைது செய்ய ஜட்ஜ்யிடம் வாரென்ட் ஆர்டர் வாங்கிவிட்டு கமிஷனர் அலுவலகம் நுழைந்தவள், அவரின் அனுமதி கிடைத்தவுடன் அவரை காண அவரின் அறைக்கு சென்றாள்.

அங்கே கமிஷ்னர் காசியிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து, அவளின் ரத்தம் கொதித்தது. ஒரு ரவுடியுடன், தன் மேலதிகாரி சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை காண சகியாமல் சார் என்று சிறிது சத்தமாக அழைத்து விட்டாள்.

அதில் திரும்பிய கமிஷ்னர், அவளின் குற்றம் சாட்டும் பார்வையை பார்த்து திகைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் பேச தொடங்கினார்.

“இவர் ஆள்ன்னு சொல்லி, இப்போ ஒருத்தனை உங்க கஸ்டடி ல எடுத்தது இவர் ஆள் இல்லையாம். இவரை பத்தி தப்பு தப்பா சொல்லிட்டு, ஒரு குரூப் இருக்காங்க, அவங்க ஆள் தான் அவனாம்”.

“சோ இவர் மேல நீங்க கேஸ் போட்டு, கொண்டு வந்த ஆதாரம் எல்லாம் கொடுத்துட்டு வேற கேஸ் பாருங்க. அந்த கைதியை இங்க மாத்த சொல்லிட்டேன், நீங்க போகலாம் மிஸ் சம்யுக்தா” என்று கூறியவரை பார்த்து பல்லை கடித்தாள்.

“சார்! நீங்க இப்போ இவர் கிட்ட பேசிகிட்டு இருந்தது எல்லாம், ஏற்கனவே ரெகார்டாகி இருக்கு சார் என் சிப் மூலமா. அது இப்போ என் கிட்ட தான் பத்திரமா இருக்கு, இதை வெளியே மீடியா கிட்ட கொடுத்திடவா சார்” என்று வெகு பவ்யமாக கேட்டவளை பார்த்து முறைத்தான் அந்த ரவுடி காசி.

கமிஷ்னரோ பயந்தே விட்டார், அவள் கூறிய செய்தியில். இது மீடியாவுக்கு தெரிந்தால், தன்னை எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசி விடுவர் என்பதை அறிந்து தான் பயந்தார்.

எல்லாவற்றிற்கும் மேல், வீட்டில் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல், தன் மனைவியும் தன் மேல் வைத்து இருந்த ஹீரோ இமேஜ் இந்த ஒரே செய்தியில் எல்லாம் கெட்டு விடுமே என்று அஞ்சினார்.

ஆகையால், இப்பொழுது அவள் என்ன சொன்னாலும் அதை கேட்கும் மனநிலைக்கு அவர் வந்து விட்டார். இதை பார்த்துக் கொண்டு இருந்த காசிக்கு, தான் எதிலோ முதல் முறையாக தோற்று விட்டோம் என்று தோன்றியது.

அதை மெய்ப்பித்தது போல், கமிஷ்னரிடம் அவள் வாரென்ட் வாங்கி வந்ததை காட்டிவிட்டு, அவனை கைது செய்ய போவதாக கூறினாள். அவள் கூறியதுடன், அங்கு இருந்த கான்ஸ்டபிலை பார்த்து அவள் கண் அசைக்கவும், அதை புரிந்து கொண்டு காசிக்கு விலங்கை மாட்டி விட்டு, தன் சகாக்களுடன் அழைத்து சென்றார்.

தலையை குனிந்து கொண்டு, தன் தவறை உணர்ந்து கொண்ட கமிஷனரை பார்த்து இப்பொழுது பேச தொடங்கினாள் சம்யுதா.

“உங்க கிட்ட, இதை நான் எதிர்பார்க்கல சார்! ஏற்கனவே நம்ம டிபார்ட்மென்ட் மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் மக்களுக்கு, அதுல நீங்க பண்ண இந்த செயல் வெளியே தெரிஞ்சா என்ன நடக்கும்ன்னு கொஞ்சம் யோசிங்க” என்று மேலும் அவரை கூனி குறுக வைத்துவிட்டு அங்கு இருந்து வெளியேறினாள்.

அங்கே ஜீப்பில், கான்ஸ்டபிள் காசியை வண்டியில் ஏற்றிவிட்டு இவளுக்காக காத்துக் கொண்டு இருந்தார். வந்தவள் காசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, டிரைவரிடம் நேராக கோர்ட் செல்லுமாறு கூறினாள்.

“இன்னா ஏசி, நம்ம கிட்டயே உன் ஆட்டத்தை காட்டிபுட்ட. நான் யாரு, என் பின்னாடி எத்தினி பேர் இருக்காங்க தெரியுமா? எப்பா! உங்க ஏசி அம்மா கிட்ட சொல்லி வை, காசி மேல கை வச்சா இன்னா எல்லாம் நடக்கும்ன்னு” என்று கேலி சிரிப்பில் உதடு துடிக்க, அவளை பார்த்து கூறிக் கொண்டு இருந்தான் காசி.

“இன்னா, ஓவரா சவுண்ட் விடுற! இன்னொரு தபா சவுண்ட் விட்டு பாரு, ஒரே போடா போட்டு தள்ளிட்டு போயிகிட்டே இருப்பேன்” என்று அவனிடம் கர்ஜித்தவள், திரும்பி கான்ஸ்டபிளை ஒரு பார்வை பார்த்தாள்.

அதை புரிந்து கொண்டவர், அவனின் கை விலங்கை கழட்டிவிட்டு, அதை தன் கை ஒன்றிற்கும், மற்றொன்றை பக்கத்தில் இருந்த இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் மாட்டி விட்டார்.

பின் வண்டி ஓரிடத்தில் நிற்கவும், கதவை திறந்தவர் அவனை போகுமாறு செய்கை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் தப்பி சென்றால் நல்லது என்று தோன்றவும் அவன் தப்பி ஓட தொடங்கினான்.

வண்டியில் இருந்து இறங்கியவள், நிதானமாக தன் கை துப்பாக்கியை எடுத்து ட்ரிகரை அழுத்தி குறி பார்த்து அவனை சுட்டாள். கோர்ட்டில், கான்ஸ்டபிளை அடித்து தப்பி செல்ல முயன்றதால், சுட்டதாக கூறி அந்த கேசை மூடி வைத்து விட்டாள்.

அப்பொழுது கோர்ட் விட்டு வெளியே வந்தவள், அங்கே ராசப்பன் அவனின் ஜீப்பில் கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, அந்த வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவனை பார்த்து உள்ளுக்குள் ரசித்தாள்.

அவனோ கோபமாக, அவள் அருகே வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து, அவள் காதருகில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு முனுமுனுத்துவிட்டு சென்றான். அவன் கூறிவிட்டு சென்ற வார்த்தையில், அவளுக்கு பயம் இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவள் அங்கு இருந்து சென்றாள்.

அன்று ஏனோ, சம்யுக்தாவிற்கு அதன் பின் வேலை செய்யும் எண்ணமில்லை. இதை எல்லாம் முடித்துக் கொண்டு அவள் ஸ்டேஷன் வந்து, அங்கே அந்த ரவுடி பாலுவிற்கு பாதுகாப்பு கொடுக்க மேலும் இரண்டு பேரை நியமித்து விட்டு, அவள் வீடு வந்து சேர மறுநாள் ஆனது.

இரண்டு நாள் என்று சொல்லிவிட்டு சென்ற மகள், இப்பொழுது மறுநாளே வந்து நிற்கவும், அவளின் வேலை முடிந்து விட்டது என்று புரிந்தது அவருக்கு. மகளை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு, விசாலாட்சி நேராக சமையல் கூடத்திற்கு சென்று அவளுக்கு பிடித்த உணவுகளை சமைக்கக் தொடங்கினார்.

அங்கே அறைக்கு வந்து குளித்து விட்டு, கட்டிலில் படுத்தவள் சிறிது நேரம் அசந்து தூங்கி விட்டாள். அவள் அசந்து தூங்குவதை பார்த்து, சத்தம் செய்யாமல் அவள் அறைக்குள் நுழைந்தான் ராசப்பன்.

அங்கே அந்த அறைக்குள் அவனை தவிர, வேறு யாருக்கும் வர தைரியம் இல்லை. ராசப்பன் அவனின் ரகசிய வழி மூலமாக, அவளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இன்றும் அவன் அப்படி வந்து, அவளை பார்த்து பேச வந்து இருந்தான்.

இங்கே அவள் அசந்து தூங்குவதை பார்த்து, சத்தம் செய்யாமல் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான். அதற்குள் தூக்கம் சிறிது கலைந்து, புரண்டு படுக்க எண்ணியவள் யாரோ தன்னை கவனிப்பது போல், உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யவும் சட்டென்று பாதுகாப்புக்காக எப்பொழுதும் தன்னுடனே வைத்து இருக்கும் துப்பாக்கியை, மெத்தையின் அடியில் இருந்து எடுக்க கை வைக்கவும், அவள் கையை அவன் பிடிக்கவும் சரியாக இருந்தது.

அவன் கை தன் மீது படவும், அந்த தொடுகையில் அவள் உணர்ந்து கொண்டாள், யார் இங்கு வந்து இருப்பது என்று. சட்டென்று அவள் தன் கண்களை திறந்து, அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“என்ன டி முறைப்பு? நியாயமா, நான் தான் உன்னை பார்த்து முறைக்கணும், தெரிஞ்சிக்க!” என்று கூறியவனை பார்த்து இன்னும் முறைத்தாள்.

“நீ எதுக்கு டா, அந்த எருமைங்க கேஸ் ல மூக்கை நுழைக்குற?” என்று வெடித்தாள் அவனிடம்.

“நான் நுழைய போய் தான், நீ இப்போ இங்க நிம்மதியா தூங்குற. நீ என்ன பெரிய ஜான்சி ராணியா என்ன? கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு?” என்று பதிலுக்கு வெடித்தான் அவன்.

“மூணு பசங்க! மூணு பசங்க! கண் முன்னாடியே துடி துடிச்சு இறந்ததை பார்த்த பிறகு, இதுக்கு காரணமானவங்களுக்கு தண்டனை வாங்கித் தராம சும்மா உட்கார்ந்துட்டு இருக்க சொல்லுறியா?”.

“ஆசைப்பட்டதை படிச்சு, கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்து இருக்கேன். இந்த பதவிக்கு வந்தும், அந்த பசங்க இறந்ததற்கு காரணமானவங்களை பிடிச்சு உள்ள தூக்கி போடாம இருந்தா, அது எனக்கு தான் அசிங்கம்” என்று தீர்க்கமாக கூறியவளை பார்த்து புன்னகைத்தான்.

“நீ நினைச்சது, இப்போ செய்தது எல்லாம் சரி. ஆனா நீ இதுக்கான பின் விளைவுகளை யோசிச்சியா? நீ அந்த காசியை போட்டு தள்ளினதால, அவனுங்க உஷார் ஆகிட்டாங்க.”

“அது மட்டுமா, ஜெயில் ல இப்போ நீ பிடிச்சு வச்சு இருக்கியே பாலு அவன் இப்போ இறந்துட்டான்” என்று அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தாள்.

அவள் அதிர்ந்த விதத்திலே, அவள் எவ்வாறு உணர்கிறாள் என்று அறிவான் ராசப்பன். இருந்தாலும் சூழ்நிலையை இப்பொழுது அவளிடம் தெளிவுபடுத்துவது அவசியம் என்பதால், அவன் சேகரித்த விபரங்களை எல்லாம் கூற தொடங்கினான்.

செய்தி கேட்ட அதிர்ச்சியை விட, அவன் எவ்வாறு இவ்வளவு விபரங்களை சேகரித்தான் என்று மட்டும் அவளுக்கு புரியவே இல்லை. நிஜமாகவே அவன் தன்னை பாதுகாக்க, இவ்வாறு செய்கிறானா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்று அவளுக்கு புரியவில்லை.

“ஆமா! இந்த விபரம் எல்லாம் எதுக்கு நீ சேகரிச்ச? உனக்கும் இந்த கேஸ்க்கும் எந்த சம்பந்தம் இருக்கு?” என்று அவனிடம் இருந்து தெரிந்து கொள்ள வினவினாள்.

“சம்பந்தம் பார்த்தா, அது நீ தான். இப்போ நீ என் அத்தை பொண்ணு மட்டும் கிடையாது, என்னோட பொண்டாட்டியும் கூட. உன்னை பாதுக்காக வேண்டியது, என்னோட கடமை. சரி, கீழே போய் சாப்பிட்டு வந்து படுத்து தூங்கு, நாளைக்கு நிறைய வேலை உனக்கு இருக்கு” என்று கூறிவிட்டு சென்றான்.

“பொண்டாட்டியை பாதுகாக்கிறானா? கொஞ்சம் பொண்டாட்டி மனசை புரிஞ்சிக்க, முயற்சி பண்ணுறானா? இரு டா கூடிய சீக்கிரம் உன்னை, அங்க நம்ம வீட்டுல சந்திக்கிறேன்”.

“நல்லா வச்சு செய்றேன் உன்னை அங்க, அப்போ நீ என்ன பண்ணுறன்னு பார்கிறேன் டா புருஷா” என்று மனதிற்குள் கருவிக் கொண்டு, கீழே இறங்கி சென்றாள்.

அவளின் அன்னை, அவளுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து இருந்தார். இரண்டு நாள் ஒருவித மன உளைச்சலில் இருந்ததால், சரியான சாப்பாடும், தூக்கமும் இல்லை அவளுக்கு. இன்று பசி வேறு அதிகம் இருக்கவும், எப்போதையும் விட கூட வைத்து சாப்பிட்டு முடித்தாள்.

அவள் சாப்பிட்டு முடித்தவுடன், அன்னையிடம் சொல்லிக் கொண்டு மீண்டும் காக்கி உடை மாற்றிக் கொண்டு ஸ்டேஷன் விரைந்தாள். அவள் கைது செய்து இருந்த, அந்த முக்கிய கைதி இறந்த தகவலை கேட்டு, கையை கட்டிக் கொண்டு அங்கே அவளால் சும்மா இருக்க முடியவில்லை.

என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று தெரிந்தாலும் அவளுக்கு சில விஷயங்கள் முழுதாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக தான் இப்பொழுது அவள் இங்கே வந்து இருப்பதும், அவள் எண்ணியது போல் அங்கே ராசப்பன் ஒரு ஓரமாக நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இவனை, இன்னும் நாம முழுசா தெரிஞ்சிக்கலையோ! என்னை பாதுகாக்கிறான் சொல்லுறது சரி, ஆனா இங்க ஏன் நிற்கணும் இப்போ? முதல ஸ்டேஷன் உள்ள போயிட்டு வந்து, அப்புறம் இவனை தனியா டீல் பண்ணனும்”.

உள்ளே அவள் சென்ற பொழுது, அங்கே கமிஷ்னர் நின்று கொண்டு இருந்ததை பார்த்தவள், அவர் அருகே சென்று அவரை உருத்து விழித்தாள். அவரோ குற்ற உணர்ச்சியில், அவளை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தார்.

அதன் பின் அவள் அங்கே என்ன நடந்தது என்பதை, அங்கு இருந்த கான்ஸ்டபில் ஏகாம்பரமிடம் விசாரணை நடத்தினாள். அவரோ, கும்பலாக முகமூடி அணிந்த நான்கைந்து பேர் வந்து, ஸ்டேஷனை அடித்து நொறுக்கிவிட்டு, இவர்களையும் அடித்து விட்டு, அந்த கைதியை கொன்றுவிட்டு சென்றதை கூறினார்.

அவர் தலையிலும் அவர்கள் அடித்து இருந்ததால், தலையில் கட்டிட்டு முதலுதவி செய்து இருந்தனர். அவரிடம் விசாரித்துவிட்டு, ஸ்டேஷனை நன்றாக அலசிக் கொண்டு இருந்தாள், சிறிதாக எதவாது துருப்பு சீட்டு கிடைத்தாலும், இதை செய்தவர்களை பிடித்து விட வேண்டும் என்ற வெறியே இருந்தது அவளுக்குள்.

எல்லா இடத்தையும் அலசிவிட்டு, துருப்பு சீட்டு எதுவும் கிடைக்காததால் அவள் சோர்ந்து போய் வெளியே வந்தாள். அப்பொழுதும், வெளியே அதே இடத்தில் நின்று இருந்தான் ராசப்பன்.

என்ன தோன்றியதோ, அவள் அவனை நோக்கி சென்றாள். அவனிடம் எப்படி கேட்பது என்று சிறிது தடுமாறினாலும், அவள் நினைத்ததை கேட்டு விட்டாள்.

“நீங்க நிஜமாவே அரசியல்வாதி தானா, இல்லை எதுவும் போலீஸ் வேலை ல இருக்கீங்களா? இந்த கேஸ் ல என்னை விட, உங்களுக்கு தான் நிறைய தெரிஞ்சு இருக்கு. உங்களுக்கும், இந்த கேஸ்க்கும் என்ன சம்மந்தம்?” என்று அவளுக்கு இருந்த சந்தேகத்தை கேட்டாள்.

அவனோ, அவளை பார்த்து மெச்சுதலாக புன்முறுவல் பூத்தான். அவன் புன்னகையிலே, அவள் நினைத்தது சரி என்பது போல் இருந்தது.

“நீ போய் வீட்டுல நிம்மதியா தூங்கு, நான் எல்லா விபரமும் அப்புறம் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு அவன் ஜீப்பில் ஏறி சென்றான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவள், பின் அவளும் தன் வீட்டிற்கு சென்றாள். ஏனோ, அன்று அவளுக்கு தூக்கமே இல்லை.

அவள் வேறு ஒரு காரனத்திற்காக தான், அவனை திருமணம் செய்து இருந்தாள். அவனை பற்றி தனக்கு தெரியும் என்று எண்ணி இருந்தவள், இன்று ஏனோ அப்படி நினைக்க முடியவில்லை.

“நான் கூட உன்னை தப்பா நினைச்சிட்டேன், இனி உன்னை பத்தி நிறைய தெரிஞ்சிக்க போறேன் டா ராசுக்குட்டி” என்று எண்ணிக் கொண்டு, ஒரு வித மோன நிலையிலே படுத்து உறங்கினாள்.

தொடரும்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends after a long time i have posted this story epi.. doing some editing work in this story, daily epis will be there for this story.. and alagiyin kaathal thavam tom epi is there not sure about the timing .. will post soon as possible.. plz read and share your valuable comments.. thank u all for ur wonderful support friends..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமா தீபக் டியர்
 




Last edited:

stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
nice update sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top