• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

en kaathal kannalagi 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 4

அன்று காலை ராசப்பனின் வீட்டில், எல்லோரும் தடபுடலாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். காலை எழுந்து வந்த ராசப்பன், வீட்டில் தடபுடலாக நடக்கும் ஏற்பாடுகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் முன் தந்தைக்கும், அவனுக்கும் அப்படி ஒரு சண்டை வீட்டில். அதன் எதிரொலி தான், இந்த தடபுடலான ஏற்பாடு. அவன் இறங்கி வந்ததை பார்த்த அவனின் தாய் காமாட்சி, அவனை பார்த்து முறைத்தார்.

“ஏன் டா ராசு, அப்படி அப்பா கூட சண்டை போட்டுட்டு இப்போ இன்னும் கிளம்பாம இருந்தா என்ன டா அர்த்தம்?” என்று எகிறினார்.

“ம்மா.. நீ போ மா முன்னாடி, எல்லோரையும் கூட்டிட்டு. நான் பின்னாடியே வந்திடுறேன், அப்பா கிட்ட சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு அவன் காலை உணவை உண்டுவிட்டு, மீண்டும் மாடியில் இருக்கும் அவனறைக்கு சென்றான்.

கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன், முதன் முதலில் அவனின் மனைவியை பார்த்த தினத்தை நினைத்து பார்த்தான்.

அன்று சம்யுக்தாவின் பத்தாவது பிறந்தநாள், ஊரில் திருவிழாவும் கூட, சம்யுக்தாவின் குடும்பத்தினர் வந்து இருந்தனர் திருவிழாவிற்கு. பத்து வயதிற்குரிய துறுதுறுப்பும், குண்டு கன்னமும், அந்த கண்களில் வழியும் குறும்பும் தான் முதன் முதலில் ராசப்பனை திரும்பி பார்க்க வைத்தது.

அவளை விட எழு வயது பெரியவனான அவனுக்கு, அப்பொழுது ஒரு குட்டி வாலாக தான் தெரிந்தாள். அவளின் குறும்பை அப்பொழுது ரசித்தான், துறுதுறுவென்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருந்தவளை பிடித்து இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல, ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அவள் செய்யும் குறும்பை ரசித்துக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் அவளை ரசிக்க தொடங்கினான்.

அவளின் கண்ணுக்குள் இருக்கும் பந்து இங்கும், அங்கும் ஓடும் அழகை ரசிப்பதில் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவளின் பதினைந்தாவது பிறந்தநாளில் தான், அவனுக்கு அவளின் முகம் மிகவும் பரிச்சயமானதாக தோன்றியது.

இதுவரை, அவன் கண்கள் அவளை மட்டுமே கவனித்ததில் அவளின் பெற்றோர்களை கவனிக்க தவறினான். இப்பொழுது அவன் அவளின் பெற்றோர்களை கவனித்து பார்த்தான், பார்த்தவன் அதிர்ந்தான்.

அவனின் அத்தை அல்லவா, அவளின் அன்னை. அவர்களும், மகளின் கையை பிடித்துக் கொண்டு, கூட்டத்தில் யாரையோ பார்த்துக் கொண்டு நின்று இருந்ததை கவனித்து, யாரை கவனிக்கிறார்கள் என்று பார்த்தான்.

அங்கே அவனின் தந்தை, அந்த கோவில் கமிட்டிகாரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். அவர் அருகில், அவனின் அன்னை பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார் அவனின் அக்கா கோதையுடனும், தங்கை ரோஜாவுடனும்.

அருகில் இருந்தும் தூரத்தில், இருந்து பார்த்துக் கொண்டு இருந்த அத்தையின் நிலையை நினைத்து வருந்தினான். அவனுக்கும், அவனின் தந்தையின் கோபமும், அவரின் வாதமும் தெரியும்.

அவர் பார்வையில், அது சரியே என்றாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி கோபத்தை பிடித்துக் கொண்டு வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டும். வாழும் நாட்கள் எவ்வளவு என்று, இன்று யாராலும் கணிக்க முடியாது.

இந்த நாட்களில், ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது தான் மிகவும் அவசியம். அத்தையிடமோ, தந்தந்தையிடமோ எதுவும் பேசிட முடியாது இப்பொழுது.

அதுவும் தந்தையிடம் முடியவே முடியாது, ஏனெனில் அவன் அப்படி ஒரு தறுதலையாக அந்த கால கட்டத்தில் இருந்தான். படிப்பு மீது ஒரு பற்றுதல் இல்லாமல், கல்லூரியில் அரியர்ஸ் அத்தனை வைத்து இருந்தான்.

“தடிமாடு! இப்படி படிக்கிறதுக்கு என்னத்துக்கு காலேஜ் போவனும். நாலு மாடு வாங்கி தரேன், மேய்க்க போ அதை” என்று வீட்டில் வசை மொழி நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும், அவன் தந்தையிடம் இருந்து.

இவனுக்கு அடுத்து தங்கை ரோஜா, படிப்பில் கெட்டி. நன்றாக படித்து, கல்லூரியில் அடி எடுத்து வைத்து, அந்த ஆண்டு டாப் பத்து மாணவர்களுள் ஒருத்தியாக தேர்ந்தெடுத்து பரிசு பெற்று இருந்தாள்.

அவனோ அரியர்ஸ் கிளியர் செய்கிறேன் என்ற பெயரில், இன்னும் அவனின் நண்பர்களுடன் கல்லூரியை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தான். இந்த நிலையில் அவன் தந்தையிடம், எதையும் கேட்டுவிட முடியாது.

அவன் அத்தையிடமோ, இப்பொழுது போய் பேச அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் மனதில், அவனின் கண்ணழகி நன்றாக அமர்ந்து விட்டாள் அப்பொழுதே.

அவளை பற்றியும், அத்தை, மாமா பற்றியும் தெரிந்து கொள்ள அவன் அப்பொழுதே தீயாக வேலை செய்தான், நண்பர்களின் உதவியோடு. அவன் தந்தைக்கு எந்த ஒரு சந்தேகமும் வர கூடாது என்பதற்காக, அவன் எப்படி இருந்தானோ தறுதலையாக அதை விட கூட ஒரு படி மேலாக தறுதலையாகவே அவர் முன் நின்றான், அவன் அரசியலில் இறங்க போகிறேன் என்று சொல்லும் பொழுது.

“டேய்! என்னை வேறுபேத்தாம ஒழுங்கா ஓடிடு, அரசியல் பத்தி என்ன டா தெரியும் உனக்கு. ஊருல, உனக்கு என்ன பெயர் இருக்கு தெரியுமா? வெளியே தலை காட்ட முடியல என்னால, உன்னை நம்பி முதல யார் டா சீட் கொடுப்பா?” என்று ஏகத்துக்கும் எரிச்சல் பட்டார்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“அப்பா, எனக்கு அரசியல் புதுசு தான். எனக்கு எதுவும் தெரியாது தான், ஆனா நீங்க நம்ம ஊரை சுத்தி பாருங்க ஒரு தடவை. இன்னைக்கு பஞ்சாயத்து தலைவரா இருக்கீங்க, உங்களால ஒரு அளவுக்கு தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்”.

“அதே நான் அரசியல் ல இறங்கி நின்னு ஜெய்ச்சா, நம்ம ஊருக்கு இன்னும் எல்லா நல்லதும் பண்ணுவேன். இதனால உங்களுக்கு தான பெருமை, இனி எல்லோரும் உங்களை பாராட்ட தான் செய்வாங்க” என்று தன் நிலையில் உறுதியாக நின்றான் அப்பொழுது.

நீ என்னை எதுவும் கேட்காதே, எப்படியோ போ என்று அவர் நீண்ட விவாதத்தின் பின் அவர் சொல்லிவிட்டு செல்லவும், அவன் அன்று முதல் அரசியலின் எல்லா சூட்சமத்தையும் தெரிந்து கொள்ள களம் இறங்கினான்.

அதில் அவனுக்கு நிறைய ஆட்களின் அறிமுகம் கிடைத்தது, நேரம் வரும் பொழுது அதில் இறங்கினான் முழுதாக. அது மட்டுமில்லாமல், அவனின் கண்ணழகியை தவறாது கண்காணித்து, அவளை பற்றியும் தெரிந்து கொண்டான்.

அவள் போலீஸ் வேலை தேர்ந்தெடுத்தது, அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் மிகவும் பயந்தான். அதில் இருக்கும் ஆபத்துகளையும், சூழ்ச்சியையும் அவன் நன்கு அறிவான்.

அதை எல்லாம், அவள் எப்படி கடந்து வருவாள் என்று மிகவும் பயந்தான். ஆனால் அவளோ சர்வ சாதரணமாக, எல்லோரையும் ஒரே பார்வையில் அடக்கி, அதை எல்லாம் கடந்து வந்து, இப்பொழுது பெரிய பதவியிலும் இருக்கிறது அவனுக்கு பெருமையாக இருந்தது.

இதை எல்லாம் விட, அவள் ஒரு நாள் இவனை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டதை அவனால், எப்பொழுதும் மறக்க முடியாது.

அந்த கோவில் தெப்பத்தில் ஒரு நாள் அவள் இருப்பதை பார்த்துவிட்டு, அங்கே சென்றவன். அவன் எதிர்பாராதது, அவள் அவனை நோக்கி வந்தது தான்.

“என்ன டா நம்மளை நோக்கி வராளே, நாம அவளை பார்க்கிறது தெரிஞ்சிக்குமோ! சரி எது வந்தாலும் பார்த்துக்கலாம், என்ன சொல்ல போறான்னு கேட்போம்” என்று எண்ணிக் கொண்டு அவளை பார்த்தான்.

அவள் வந்தவள், அவனை பார்த்து கை குலுக்க கையை முதலில் நீட்டினாள். எடுத்தவுடன், இவள் இப்படி கையை நீட்டுவாள் என்று நினைக்காதவன், முதலில் அதிர்ந்தான்.

அதன் பின் தன்னிலை அடைந்து, அவள் கையை பிடித்து கை குலுக்கினான். அவளோ, அவனிடம் எடுத்த உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கவும், அவன் காதில் சரியாக விழுந்ததா என்று தெரியாமல், அதிர்ந்தான்.

“உங்க காதில் சரியாக தான் விழுந்தது, நான் உங்களை கல்யாணம் பண்ண தான் கேட்டேன்” என்று அவன் அதிர்ந்த விதத்திலே அவள் அவனுக்கு, மீண்டும் கூறினாள்.

“உனக்கு நான் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சு தான் இப்போ இந்த முடிவு எடுத்து இருக்கியா?” என்று சற்று தெளிந்த உடன் கேட்டான்.

“ம்ம்.. ஆமா! ஆனா நாம ரெஜிஸ்டர் பண்ணிட்டு, அப்புறம் கோவில் ல சிம்பிளா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். இது நமக்குள்ள கொஞ்ச நாள் இருக்கட்டும், அப்புறம் சொல்லிக்கலாம் நம்ம பாமிலிக்கு” என்று அவள் கூறியதை கேட்டு, முதலில் அதிர்ந்தாலும் இத்தனை நாட்கள் அவளை கவனித்ததால், அவனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்பதும் புரிந்தது.

அவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அவள் கூறியபடியே எல்லாம் செய்து முடித்தான். அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்று காத்து இருந்தவனுக்கு, அவள் அடுத்து ஒன்றும் செய்யாமல் இருந்தது உறுத்தியது.

இது குறித்து அவளிடம் பேசலாம் என்று, ஒரு நாள் அவளை சந்திக்க அவள் எப்பொழுதும் வரும் பாதையில் வழி மறித்து நின்று கேட்டான்.

“நீ, என்னை எதுக்காக கல்யாணம் பண்ணிகிட்டன்னு தெரியும். ஆனா, நீ அடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரியே தெரியல. என்ன காரணம்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டான்.

“ரொம்ப சிம்பிள், உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவும், நீங்க இந்த உண்மையை சொல்லும் பொழுது, அடுத்து எல்லாம் அதுவா நடக்கும்” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

முதலில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை, ஆனால் அதன் பின் இப்பொழுது நடக்கும் ஏற்பாடுகளை பார்த்த பின், அவள் சொல்ல வருவது புரிந்தது.

“ம்ம்.. உன் கேம் ஆரம்பிச்சிடுச்சு போல யுக்தா, நீ நடத்து. இன்னைக்கு எங்க அப்பா பாவம், மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி மாதிரி, அவர் நான் கேட்குற கேள்விக்கும், அவ கேட்க்குற கேள்விக்கும் பதில் சொல்லையே ஆகணும்” என்று நினைத்துக் கொண்டு, அவனும் தயாராகி கீழே வந்து, தன் நண்பன் ஹரியுடன் அவனின் மனைவி சம்யுக்தா பிறந்த வீட்டிற்கு சென்றான், அவளை கையோடு கூட்டிக் கொண்டு வர.

தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமா தீபக் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
samyu enna seiya pora waiting eagerly sis.. interesting epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top