• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode En kathal kanmaniye-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சென்னையில் உள்ள தனியார் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம்.

தன்னுடைய லேடி பேர்ட் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தி லாக் செய்த காவியாவின் கண் பார்வையில் அருகில் நிறுத்த பட்டிருந்த ஜெனிபரின் சைக்கிள் பட்டது

மேடம் எனக்கு முன்னாடி வந்துட்டாங்களா என்று மனதில் நினைத்தவள் நேராக ஜெனிபரை தேடி சர்சுக்கு தன் பேக்குடன் சென்று விட்டாள் காவியா.

காவியா சர்ச்க்குள் நுழைந்த பொழுது கர்த்தரின் சிலையின் முன் மண்டியிட்டு கண்களை மூடி மும்முரமாக பிராத்தர்னை செய்து கொண்டிருந்தாள் ஜெனிபர் மேரி.

தனது கனமான புத்தகபையை தோளில் சுமந்தபடி வந்த காவியா அதை பெஞ்சில் வைத்துவிட்டு அவளும் ஜெனிபரின் அருகில் மண்டியிட்டு கர்த்தரை வேண்ட ஆரம்பித்தாள்.

சில நிமிடங்களில் கண்களை திறந்த ஜெனிபர் தோழியை பார்த்து சந்தோஷமானாலும் அவள் வேண்டுதலை கலைக்க விரும்பாமல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

காவியாவும் பிரார்த்தனை முடித்து கண் திறந்து புத்தகபை எடுக்க திரும்பியவள் தோழியை பார்க்க "ஹாய் காவியா" என்றாள் ஜெனிபர்

"ஹாய் ஜெனி" என்று பதிலுக்கு காவியா சொல்ல கைகளை அடித்துக் கொண்டனர்.

"வேண்டுதல் பலமாக இருந்துச்சு" என்று ஜெனிபர் கேட்டுவிட்டு சிரிக்க,
"அங்கே மட்டும் என்ன வாழுது. எனக்கு முன்னாடியே வந்து பிரேயர் பன்ன ஆரம்பிச்சாச்சு" என்றாள் காவியா.

"என்னடி பன்றது... இன்னிக்கு அரையாண்டு பேப்பர் தர போகிறாங்க. என்னை பற்றிதான் தெரியுமில்லையா? அதான் ஆண்டவரே கொஞ்சம் கருணை பன்னி பாஸ் மார்க் தாங்கன்னு சின்சியரா பிரே பன்னேன்" என்றாள் ஜெனிபர் மேரி.

"நானும் நேற்றே விநாயகர் கோவில்ல வேண்டிகிட்டு, இன்னிக்கு காலையில் சரஸ்வதி தேவியையும் வேண்டிகிட்டு இப்பொழுது இங்கேயும் பிரே பன்னிட்டேன். கண்டிப்பாக நானும் பாஸ் பன்னிடுவேன்டி" என்றாள் காவியா.

"சரி வா பெல் அடிக்கப் போறாங்க. நம்ம போயி கடைசி பெஞ்சில் சத்தமில்லாமல் செட்டில் ஆயிடுவோம். இன்னிக்கு எப்படியும் நம்மளை வைச்சு செய்ய போறாங்க" என்றாள் ஜெனிபர் மேரி.

"ஆமாண்டி" என்று காவியா சொல்ல இரு தோழிகளும் வகுப்பறைக்கு விரைந்தார்கள்.

காவியாவும் ஜெனிபரும் சிறு வயதிலிருந்தே ஒரே வகுப்பில் படிக்கும் பள்ளி தோழிகள்.

அவர்கள் இருவரும் பக்கத்து தெருக்களில் வசித்தாலும் இவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் இருப்பதால் எல்லோரும் இவர்களை இரட்டை சகோதரிகள் என்றே அழைப்பார்கள்.

இரட்டை ஜடை பின்னலிட்டு யூனிபார்ம் அணிந்துள்ள இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுத போகும் பதினேழு வயது சிறுமிகள்.

நல்ல உயரம், குறுகுறுப்பான சிறிய கண்கள், குண்டு கன்னங்கள், சிறிய உதடுகள், அடர்த்தியான நீண்ட கூந்தல், புஷ்டியான உடல்வாகு, நல்ல சிவப்பு நிறம் உடையவள் ஜெனிபர் மேரி.

சற்றே குள்ள உருவம், பெரிய கண்கள், குண்டு கன்னங்கள், பெரிய உதடுகள், அடர்த்தியான நீண்ட சுருட்டை கூந்தலுடன் குண்டான தேகம் உடைய மஞ்சள் நிறத்தழகி காவியா.

பன்னிரெண்டாம் வகுப்பில் நுழைந்த அவர்கள் கடைசி பெஞ்சில் சமர்த்தாக அமர்ந்து கொண்டார்கள்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹெட்மாஸ்டர் அறையில் உடற்கல்வி ஆசிரியை நிர்மலா கையை பிசைந்தபடி நிற்க , தலைமை ஆசிரியை விமலாவும் யோசித்தபடி அமர்ந்து இருந்தார்.

"சொல்லுங்க நிர்மலா... மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான புட்பால் காம்படிஷனுக்கு டீம் லிஸ்ட் ரெடியா?" என்றார் விமலா.

"மேடம்... லிஸ்ட் ரெடி ஆனால் எல்லோரும் ஒன்பது,பதினோரம் வகுப்பிலே இருக்காங்க. கண்டிப்பாக எனக்கு இரண்டு பேர் பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்து வேண்டும்" என்றாள் நிர்மலா.

"அவங்களுக்கு பப்ளிக் எக்சாம் வரப் போகுது. அவங்களுக்கு போர்ஷன் முடிச்சு ரிவிசன் வைக்கனும். பிராக்டிகல்ஸ் வேற இருக்கு. ஸ்டடிஸ் பாதிக்கபடும் அப்படின்னு அந்த கிளாஸ் கேர்ள்ஸ் கண்டிப்பாக வர மாட்டாங்களே." என்று தலைமை ஆசிரியை நிர்மலா கேட்டாள்.

"மேடம்... டுவெல்த் பி கேர்ள்ஸ் ஜெனிபர், காவியா கண்டிப்பாக வருவாங்க. காவியா நல்லா அட்டாக்கர். ஜெனிபர் நல்ல கீப்பர். அவங்களை கூட்டி போகவா?"

"அவங்களா? .அதுக ரெண்டும் பார்டர் கேட்டகரியாச்சே. அவங்க ரிவிஷன் டெஸ்ட் அட்டென்ட் பன்னாதான் நல்ல மார்க் எடுப்பாங்க. அவங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்க பிளான் பன்றோம். அவங்களை தவிர வேற ஆளு பாருங்க"

"வேற யாரும் துணிஞ்ச வர மாட்டாங்க. நான் போயி கிளாஸ்ல கேட்கறேன். யாரும் வரலைன்னா நீங்க அவங்களை அனுப்பனும் ஏன்னா நம்மதான் நாலு வருசமாக சாம்பியன் ஆனதுக்கு அவங்கதான் காரணம்"

"சரி... நீங்க போயி கேளுங்க பார்க்கலாம்" என்று சம்மதித்தார் விமலா.

பன்னிரெண்டாம் வகுப்பு பி.
முதல் பேப்பராக தமிழ் தரபட அதில் காவியாவும், ஜெனிபரும் தலா 120 எடுத்தார்கள். அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் 100 இங்கீலீஷ்ல 80 பிசிக்ஸ் 75 கெமிஸ்ட்ரி 70 எடுக்க இனி அவர்களின் எதிரியான மேத்ஸ் பேப்பர் ஒன்றுதான் மிச்சம்.

கணித ஆசிரியை கனகவல்லி வகுப்பில் நுழைந்தார். பேப்பர் கட்டை டெஸ்கில் வைத்த அவரை கண்டு முன் பெஞ்சு மாணவிகளுக்கெ கிலி பிடிக்க நம்மவர்கள் நிலை பாவம்.

"ஜெனி... அந்த ஹிட்லர் பேப்பர் திருத்திருச்சு. நம்ம இன்னிக்கு அவ்வளவுதான்." என்று காவ்யா காதுகளில் கிசுகிசுத்தாள்.

"ஏய்! என்னை பயமுறுத்தாமல் எனக்கும் சேர்ந்து பிரே பன்னுடி" என்றாள் ஜெனிபர்.

தோழிகள் இருவரும் கடவுளை பலமாக வேண்ட ஆரம்பித்த வேளையில் 175க்கு மேல் மார்க் எடுத்த மாணவிகளை பாராட்டி பேப்பர் வழங்கினார்.

150 மேல் எடுத்தவர்களை நல்ல மார்க் எடுக்க சொல்ல சரி என்று அவர்கள் வாங்கி செல்ல, 125 மேல் எடுத்தவர்களின் தவறுகளை சொல்லி திட்டி பின் வழங்க அவர்கள் சரி என்று சென்றனர்.

100க்கு மேல் எடுத்தவர்களை கடுமையாக திட்டி பேப்பரை முகத்தில் எறியாத குறையாத தந்து அனுப்ப நம்மவர்கள் கிலி அதிகரித்தது.

"மிச்சம் இருக்கிறது கடைசி பெஞ்ச் மகாராணிகள்தானா" என்று காட்டமாக கனகவல்லி கூற வகுப்பின் கவனமே கடைசி பெஞ்சின் மீது திரும்பியது.

சக பெஞ்ச் மாணவிகள் அட்சயா 98, விசாலாட்சி 90 எடுக்க அவர்கள் அடியுடன் வாங்கி வர இறுதியாக மிஞ்சிய இருவரும் மிரட்சியுடன் பார்த்தார்கள்.

ஜெனிபர், காவ்யா" என்று காட்டமான குரலில் கனகவல்லி அழைக்க பயத்துடன் என்ன திட்ட போறாங்களோ என்று நடுங்கியபடி சென்று டீச்சர் முன் கைகட்டி நின்றார்கள்.

"மிஸ் கூப்பிட்டிங்களா" என்று அவர்கள் தங்கள் மார்க் என்ன என்று தெரிகிறதா என்று ஒரக் கண்ணால் நைசாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

வகுப்பு மாணவிகள் பார்வை முழுக்க அவர்கள் பக்கம் திரும்பியது.

அப்பாடா பாஸ் ஆயிட்டோம். கடவுள் நம்மை கைவிடலை என்று மனதிற்குள் சந்தோஷம் ஆன அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நின்றார்கள்.(என்ன ஒரு சந்தோஷம)

"நீங்க ரெண்டுபேரும் எதுக்கு படிக்க வர்றிங்க" என்று ஆரம்பித்த கணித ஆசிரியை கனகவல்லி சராமரியாக திட்டிவிட்டு கடைசியாக பேப்பரை வீச இருவரும் குனிந்து எடுத்து சென்று மீண்டும் தங்கள் இடம் திரும்பி அமர்ந்தார்கள்.

"120க்கு கீழே எடுத்தவங்க எல்லாம் பேரண்ட்ஸ் கூட்டிட்டு வந்து கிளாஸ் டீச்சரை மீட் பன்னுங்க" என்று கணித ஆசிரியை சொல்ல "இது வேறயா?" என்று ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டார்கள்.

"எக்ஸ்க்யூஸ்மீ மேடம்" என்று நிர்மலா மேடம் உள்ளே நுழைய இருவருக்கும் மகிழ்ச்சி கரை புரண்டது.


Write your reply...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top