• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 1

காலையிலேயே வானம் இருட்டிக் கொண்டு மழை பொழியும் நிலையில் இருக்க குளிர் தென்றல் இதமாக வீச, சூரியன் தனது முகத்தைக் காட்ட கார் மேகத்துடன் போர்க்களம் நடத்தியது. சிலுசிலுவென தென்றலுடன் இணைந்து மெல்லிய மழைத்தூறல் மண்ணை நனைக்க ஊட்டியின் வானிலைக்கு ஏற்றது போல மாறிக் கொண்டிருந்தது கோவை மாநகரம்..!

அந்த நகரத்தின் மைய பகுதியில் அமைத்துள்ள ஒரு ப்ளாட்டில் அந்த வானிலைக்கு ஏற்றது போலவே ஒரு அழகிய கானம் கேட்டது.

மழையே ஒஹ் மழையே, புன்னகை தூவுறியே..

சிலையாய் ஒரு சிலையாய் நிற்க வச்சு பார்க்குறியே..

முத்து முத்து மல்லிகையாய் முத்தமிட்டு சிரிக்கிறியே..

சின்னவுளி நீர்த்துளியாய் என்னைக் கொஞ்சம் செதுக்குறியே..” என்ற பாடலை அதே துள்ளலுடன் பாடியவண்ணம் சமையல் செய்து கொண்டிருந்த தென்றல்.

அவள் பாடலில் தன்னைத தொலைத்த வண்ணம் இருக்க மணியை கவனிக்காமல் விட்டது தான் அங்கே வினையாகிப் போனது.. நேரம் செல்வதைக் கவனிக்காமல் இருந்தவள், பாடல் முடிந்ததும் திரும்பிப் பார்க்க மணி எட்டு ஆக பத்து நிமிஷம் இருக்கிறது என்று காட்டியது..

அதைப் பார்த்த தென்றல், “என்னோட கண்ணுக்கு கண்ணாடி போட்டும் கண்ணு தெரியவில்லையோ..?” என்று ஸ்பெக்ஸை கலட்டி துடைத்துவிட்டு மீண்டும் போட்டுக் கொண்டு மணியைப் பார்க்க அதில் மூன்று நிமிஷம் சென்று மணி ஆக எழு நிமிஷம் இருக்கிறது என்று காட்டியதும், “ஐயோ இன்னும் மணி எட்டு ஆக போகிறதா..?! இந்த பிரதாப் வந்தால் என்னை திட்டியே ஒரு வழி பண்ணிருவானே..” என்று புலம்பியவள் சமையலை முடித்துவிட்டு குளிக்க சென்றவள்.. சரியாக அரைமணி நேரத்தில் ரெடியாகி வெளியே வந்தாள்..

அதே பரபரப்புடன் சமையல் அறைக்கு சென்றவள் சமைத்ததை தட்டில் போட்டு சாப்பிட அமரவும் காலிங்பெல் ஒலிக்க, “ஏற்கனவே லேட்.. இதில் இந்த பெல் வேற சரியாக சாப்பிடும் நேரத்திற்கு அடிக்கும்.. முதலில் இதை கலட்டி காயலாங்கடையில் போடணும்..” என்று தட்டை கையில் எடுத்துக் கொண்டே சென்றவள், கதவை திறக்க உள்ளே வந்தான் பிரதாப்..!

அவனைப் பார்த்த தென்றல், “டேய் எருமை எதுக்குடா இப்போ காலிங்பெல் அடித்தாய்..?!” என்று கேட்டுக் கொண்டே அவன் வீட்டிற்கு வர வழிவிட்டு நின்றவளை முறைத்த வண்ணம் உள்ளே வந்தான் பிரதாப்..

அவனின் பார்வை கண்டு, “என்னடா முறைக்கிறாய்..?!” என்று கேட்டவண்ணம் சோபாவில் அமர்ந்தவள், அவசர அவசரமாக சாப்பிட, அவளின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த பிரதாப், “மணி என்ன என்று தெரியுதா லூசு..?!” என்று கேட்டதும், “ம்ம் நல்ல தெரியும்..” என்று கூறினாள்..

“லேட் ஆகும் என்றால் முன்னாடியே சொல்ல வேண்டியது தானே.. என்னோட அப்பா வாசலில் நின்றுகொண்டு கத்துகிறார்.. எனக்கு மானமே போகிறது..” என்று பிரதாப் காலையில் வாங்கிய திட்டைப் பற்றி சொல்ல, “சாரி டா லேட் ஆகிருச்சு..” என்று உதட்டைப் பிதுக்கினாள் தென்றல்..

அவளைப் பார்த்த பிரதாப், “உன்னோட சொல்பேச்சு கேட்டு டைபிங் கிளாஸ் சேர்ந்தேன் பாரு என்னை சொல்லணும்.. எட்டு மணிக்கு கிளாஸ் நீ இன்னும் ரெடி ஆகவே இல்ல.. இந்த லட்சணத்தில் அடுத்த மாதம் எக்ஸாம் வேற..” என்று தலையில் அடித்துக் கொண்டான்..

அவனைப் பார்த்து சிரித்த தென்றல், “உன்னோட அப்பா தானே, ‘என்னோட மகனுக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கி தீருவேன்’ என்று சொன்னார்.. அவரைப் போய் கேளுடா.. என்னை திட்ட வந்துட்டா.. அரசாங்க உத்தியோகம் சும்மா கொடுப்பாங்க பாரு..” என்று சொல்லியவள், சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவி சிங்கிள் போட்டுவிட்டு, சுடிதார் துப்பட்டாவை எடுத்து போட்டு பின் பண்ணினாள்..

அவளுக்கு அந்த நேரத்திலும் ஒரு சந்தேகம் தோன்ற, “ஏண்டா இப்போவே உங்க அப்பா இப்படி சொல்கிறாரே.. நாளைக்கு உனக்கு திருமணம் என்றால் எப்படிடா முடிவு எடுப்பார்..” என்று கேட்டாள் தென்றல்..

“அவர சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருகிற பிரகாஷ்ராஜ் மாதிரியே பொண்ணை அவரே செலக்ட் பண்ணிட்டு என்னிடம் சொல்லுவார்..” என்று சொல்ல, “ஐயோ செம.. பிரதாப் அன்னைக்கு உன்னோட நெற்றியில் பெரிய நாமம் தான்..” என்று சிரிக்க அவன் கோபத்தில் முறைத்தான்..

பிறகு அவளைப் பார்த்த பிரதாப், “ஏய் இன்னைக்கு நீ கிளாஸுக்கு வரலை என்று முன்னாடியே சொல்லிருந்தால் நான் ஷிவானி [சிவசுதன்] கூட பார்க் போயிருப்பேன் இல்ல..” என்று கேட்டவன் அவளின் ஸ்கூட்டியின் சாவியை எடுக்க, அவனின் கையில் இருந்து சாவியை பறித்தவள்..

அவள் சாவியை வாங்கியதும், “உன்னோட நியூ மாடல் பல்சர்[சைக்கில்] எங்கே..?!” என்று கேட்டதும், “அது பஞ்சர் தென்றல்.. அதுதான் உன்னோட ஸ்கூட்டியில் போகலாம் என்று வந்தேன்..” என்று சொல்ல அவனை முறைத்த தென்றல்,

“மகனே இன்னைக்கு மட்டும் தான் நான் உன்னை ஸ்கூட்டியில் அழைச்சிட்டு போவேன்... நாளைக்கு நீதான் என்னை பல்சரில் டிராப் பண்ற இல்ல..” என்று மிரட்டியவள்,

“வாடா ஒன்பது மணிக்காவது க்ளாஸுக்கு போகலாம்.. உனக்கெல்லாம் நேரத்தில் கிளம்பணும் என்று தோன்றவே தோன்றாதே..” என்று திட்ட அவள் சொன்னதைக் கேட்ட பிரதாப்,

“எல்லாம் என்னோட நேரம்டி.. இரு எனக்கும் ஒரு நேரம் வரும் அப்பொழுது இருக்கு உனக்கு..” என்று கூறிய பிரதாப் வீட்டை விட்டு வெளியே வர வீட்டைப் பூட்டியவண்ணம், “இன்னைக்கு என்ன டைப் பண்ண சொல்ல போறாரோ..?!” என்று புலம்பிய வண்ணம் அவள் மாடியிலிருந்து இறங்கினாள்..

அவளின் பின்னோடு இறங்கிய பிரதாப், “நம்மைப் போல இன்னும் பத்துபேர் இருந்த ஊர் உருப்பட்டுவிடும்..” என்று சொல்ல கலகலவென்று சிரித்த தென்றல், “அதுதான் நம்ம இருக்கோம் இல்ல..” என்று கூறியவள் தனது ஹெல்மெட்டைத் தலையில் மாட்டிக் கொண்டு, “ம்ம் சீக்கிரம் ஏறுடா.. மணி ஒன்பது ஆக போகிறது..” என்று சொல்ல ஸ்கூட்டியில் பின்னாடி அமர்ந்தான் பிரதாப்.. தென்றல் வண்டியை எடுத்தாள்.. இவங்க டைபிங் கிளாஸ் போவதற்குள் தென்றல் பற்றி தெரிந்து கொள்ளுங்க..

தென்றல் இருபத்தி மூன்று வயதை உடைய தேவதை என்று சொல்ல எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவள் நீங்க கற்பனை பண்ணும் அளவிற்கு அழகு இல்லை..

ஐந்தரை அடி உயரம், வட்ட முகம், வில்லென்று வளைந்த புருவம்.. அழகான மீன் போன்ற விழிகள், அந்த விழிகளுக்கு கண்ணாடி அணிதிருப்பது அவளின் அழகிற்கு அழகை சேர்க்கும்.. நேரான நாசி.. ரோஜா இதழ் போன்ற வடிவான இதழ்கள்.. சங்கு கழுத்து இடை வரை வளர்ந்த கூத்தலை ஸ்டலை வெட்டி விட்டிருந்தாள்.. பூசினார் போல உடல் அமைப்பை உடைய அழகு பாவை..

அவளின் அழகிற்கு அழகு சேர்க்கும் அவள் உதிர்க்கும் புன்னகை..!தனது இதழ்களைத் திறந்து அரிசி தெரிய அவள் சிரித்தால் அதில் மயங்காத மானிடரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவளின் புன்னகை அவ்வளவு அழகு..!

எம்.பி.ஏ. முடித்துவிட்டு கோவையில் பெரிய கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கிறாள்.. ஒரு கம்பெனியில் கூட இவள் ஒரு மாசம் முழுவதும் வேலை செய்ததே கிடையாது.. அவளுக்கு எதிரி வேற யாருமே இல்ல அவளோட வாய் தான்.. இந்த அழகிக்கு வாய் மட்டும் காது வரையில் இருக்கும்.. மௌனத்திற்கும் இவளுக்கும் வெகுதூரம்.. இவள் பற்றி இப்பொழுது இவ்வளவுதான் ஞாபகம் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்..

ஹலோ ஹலோ என்ன எல்லோரும் தென்றலுக்கு ஜோடி பிரதாப்பா..?! என்று யோசிக்கிறீங்க.. பிரதாப் தென்றலுக்கு ஜோடி எல்லாம் கிடையாதுங்க..

அவன் பக்கத்து ப்ளாட்டில் இருக்கும் ஏழாவது படிக்கும் பையன்.. அவன் இருபத்தி மூன்று வயது உடைய தென்றலுக்கு ஜோடியா..?! நினைக்கும் பொழுதே சிரிப்பை அடக்க முடியல..!

இப்பொழுது புரிந்ததா தென்றல் முகம்..?! இது தாங்க தென்றல் இவளுக்கு எட்டு, பத்து, பண்ணிரண்டு, பதினைத்து வயதை உடைய சிவசுதன்[ஷிவானி], பிரதாப், ராகுல், நிவாஸ், சுனில் எல்லாம் தோழர்கள்.. இவர்களுடன் இவள் பேசுவது பார்த்து நம்மை போலவே பலர் ஏமார்ந்திருக்கிறார்கள்..

இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இல்லை ஆனாலும் கூட இவர்கள் நட்பு தென்றல் மூலம் நன்றாகவே தொடர்கிறது என்பது வேறு விஷயம்.. அவளை சுற்றி எப்பொழுது புன்னகை முகங்களே இருக்கும்..

அதே கோவை மாவட்டத்தில் முக்கியமான பகுதியில் அமைதியே தனது அழகாக கொண்டு அமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு. அந்த வீட்டை வெளியே இருந்து பார்க்கும் நடுத்தர மக்களின் மனதில் எப்பொழுதும் உலாவும் ஒரே கேள்வி, ‘இந்த வீட்டில் யாராவது இருக்கிறார்களா..?! இல்ல வீடு மட்டும் தான் இருக்கிறாதா..?’ என்ற கேள்வியுடனே அந்த வீட்டை கடந்து செல்வார்கள்..

அந்த வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே சென்றால் கார்டனில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய ஊஞ்சல் அனைவரின் மனதையும் ஊஞ்சலாடவே அழைக்கும்.. வீட்டிற்குள் நுழைந்ததும் பெரிய ஹால், அதற்கு நேராக அமைக்கப்பட்ட பூஜை அறை அந்த அறையில் தெய்வங்கள் எல்லாம் வெறும் புகைபடத்தில் மட்டுமே இருக்கின்றனர்..

அதன் அருகில் இடது புறம் இருக்கும் அறைதான் சமையல் அறை, ஆனால் அந்த வீட்டில் சமையல் செய்ய என்று யாரும் இல்லை என்பது வேறு விஷயம். அந்த அறையில் இருந்து வெளியே வந்தால், சமையல் அறைக்கு நேர் எதிரே விருந்தினர் அறையும், அலுவலக அறையும் இருக்கும்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மாடியில் மூன்று படுக்கை அறைகள் இருக்கிறது அதில் ஒரு அறை மட்டுமே தனக்கு என்று எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறான்... ‘எங்கும் அமைதி, எதிலும் அமைதி..’ என்று இருக்கும் அந்த வீட்டில் ஒரு அழகான கானம் கேட்கிறது..

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்!

என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்!

நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்!” என்ற பாடலின் வரிகளை கேட்டு எழுந்தவனின் முகத்தில் புன்னகை என்பது மருந்துக்கும் கிடையாது.. காலையில் எழுத்தும் ஜாக்கிங் சென்றுவிட்டு வந்தவன் குளித்துவிட்டு ஆபீசிற்கு கிளம்பினான்..

அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவம், அடுத்தவரை எரிக்கும் நிலையிலேயே இருக்கும் கோபத்தை மட்டும் சுமந்து நிற்கும் சிவந்த கண்கள்.. கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகள்.. இதில் இருந்து வரும் வார்த்தைகள் அடுத்தவரின் மனத்தைக் காயப்படுத்துமே தவிர சந்தோஷப்படுத்தாது.. இவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவனின் தாத்தா ராஜசேகர். அவர் ஊட்டியில் இருக்கிறார்..

இவனின் வயது இருபத்தி ஏழு. இந்த வயதிலேயே சிறந்த இளம் தொழிலதிபர் என்ற பட்டத்தை பெற்று தனது கம்பெனியை திறமையுடன் நடத்தி வருகிறார்.. “ரஞ்சன் கன்ஸ்ட்ரக்ஷன்” எம்.டி. மிஸ்டர் மனோ ரஞ்சன்.

பணத்தால் கட்டப்பட்ட அதிகார கோட்டைக்கு மூடி சூட மன்னன் தான் மனோரஞ்சன்.. பணம் என்பது கடல் அளவு இருந்து தன்னை சுற்றியும் நெருப்பு வளையத்தைப் போட்டு அதற்குள் நின்றவனிடம் நெருங்க யாருக்கும் தைரியம் இல்லை.. அவனை நெருங்க நினைத்தாலே அனைவரும் நடுங்குவார்கள்..

அவனின் முகத்தை யாரும் இதுவரையில் அறிந்ததே இல்லை.. அவனின் முகத்தில் புன்னகை மலராத என்று எங்கும் பெண்களின் மத்தியில் கம்பீரமாக நடைபோடும் இளவரசன் மனோரஞ்சன்..

இவனின் தனிமையை இவன் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததே கிடையாது.. பாசம், பந்தம் என்ற சொல்லே இவனின் அகராதியில் கிடையாது.. இவனின் முகம் அப்படியே தென்றலுக்கு எதிர் துருவம்..!

அவன் காரை எடுத்தும் அவனது கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து கால் வர, “ஹலோ ரஞ்சன் ஸ்பீகிங்..” என்று சொல்ல எதிர் புறம் இருந்து, அங்கே வொர்க்ஸ் பிரச்சனை பண்றாங்க என்று சொல்ல கோபத்தில் பல்லைக் கடித்தவன் வேகமாக காரை எடுத்தான்..

அந்த கோயம்புத்தூர் மாநகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க சாலையில் தனது காரை மின்னல் வேகத்தில் செலுத்துக் கொண்டிருந்தான் மனோ..

அவன் வேகமாக சென்றதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவன் என்ன விஷயம் என்பதை விசாரிக்க, “நீங்கள் மட்டும் நல்ல லாபம் பார்க்கிறீங்க.. எங்களுக்கு மட்டும் போனஸ் கொடுப்பதே இல்லை.. இனிமேல் நாங்க வேலை செய்ய மாட்டோம்..” என்று சொல்ல மனோவிற்கு கோபம் வந்தது..

“நான் மட்டும் லாபம் பார்க்கிறேன் உங்களின் உழைப்பை நான் சுரண்டுகிறேனா..?! என்னோட லாபத்தில் நாற்பது சதவீதம் உங்களுக்கு தான் நான் தருகிறேன். இதற்கு மேலும் நீங்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கே அதிகம் என்று புரியவில்லையா..?!” என்று கேட்டதும் எல்லோரும் அமைதியாக நின்றனர்..

“இந்த கம்பெனியில் நானும் ஒரு தொழிலாளியாகவே தான் இருக்கிறேன்.. முதலாளி என்று நினைத்தேன் என்றால் அறிவிப்பே இல்லாமல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு செல்ல எனக்கும் தெரியும்.. இதில் நான் அதிகம் நஷ்டம் அடைய மாட்டேன்.. ஏனென்றால் எனக்கு நிறைய தொழில்கள் இருக்கிறது.. ஆனால் உங்களின் நிலையை கொஞ்சம் மனதில் வைத்து யோசிங்க..” என்றவன் யூனியன் சேர்மேனை முறைத்த முறைப்பில் அவனின் கோபத்தை அறிந்த ரகுராமன், “ஸாரி சார்..” என்று சொல்ல,

“இனிமேல் ப்ராபிளம் பண்ணினால் இன்னைக்கு மாதிரி அமைதியாக போகமாட்டேன்... அப்புறம் என்னை யாரும் தடுக்க முடியாது கம்பெனியை இழுத்து மூடிவிட்டுப் போயிட்டே இருப்பேன்..” என்றவன் காரில் ஏறிச்செல்ல அந்த இடத்தைவிட்டு சென்றான்..

இதுதான் மனோவின் குணம் யாராக இருந்தாலும் நேருக்கு நேர் பதில் கொடுப்பான்.. அவனை குறுக்கு வழியில் அடிக்க நினைத்தால் அப்புறம் அவனின் வலியையை யாராலும் கணிக்கவே முடியாது.. அந்த அளவிற்கு அவனுக்கு கோபமும், வேகமும் அதிகம்.

அவன் காரில் வந்து கொண்டிருக்க அவனின் தாத்தா அழைப்பு வருவதைப் பார்த்து கோபத்தை குறைத்தவன், “தாத்தா நான் டிரைவிங் பண்ணிட்டு இருக்கிறேன்.. நான் பிறகு பேசுகிறேன்..” என்று சொல்லவும் அவர் எதுவும் பேசாமல் போனை வைக்க காரை வேகமாகச் செலுத்த ஆரமித்தான்..

ஒரு திருப்பத்தில் ஒன்வே என்பதை கவனிக்காமல் திருப்பியவன், அங்கே வைத்திருக்கும் போர்டைப் பார்த்துவிட்டு ரிவர்ஸ் எடுத்தான்.. ஆனால் அவன் காரை செலுத்திய வேகத்திற்கு போர்டைக் கவனித்தவன் எதிரே வந்த ஸ்கூட்டியை கவனிக்காமல் வண்டியை எடுக்க காரின் கண்ணாடி உடைந்த சத்தம், கேட்டு காரின் முன்னாடி இருந்த கண்ணாடியைப் பார்க்க, அதில் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு, சரியான கோபத்தோடு நின்றிருந்தாள் தென்றல்..

தென்றல், பிரதாப் இருவரும் ஸ்கூட்டியில் வர, அவள் ஒன்வேயில் திருப்புவதைப் பார்த்த பிரதாப், “இப்பொழுது எதுக்கு ஒன்வே ல போகிறாய்..” என்று கேட்டான்.. “ஏண்டா நான் சரியாக தானே போகிறேன்..” என்று புரியாமல் கேட்டாள் தென்றல்..

அவள் சொன்னதைக் கேட்டு, “நீ சரியாகத்தான் போவாய்.. ஆனால் ஏதாவது குறுக்கு வழியில் புகுந்து போகலாம் என்று வந்தால் நம்ம நிலை என்ன என்று யோசி..” என்று சொல்லவும் தென்றலின் ஸ்கூட்டி காரில் மோதி கீழே சரியவும் சரியாக இருந்தது..

இது நடக்கும் என்று எதிர்பார்க்காத தென்றல் கீழே சரியும் முன்னே வண்டியை பேலன்ஸ் பண்ணி நிறுத்தியவள், “பிரதாப் உனக்கு ஒண்ணும் ஆகவில்லையே..” என்று கேட்க, “இல்ல தென்றல் எனக்கும் ஒண்ணும் ஆகவில்லை..” என்று அவன் சொன்னதும்,

“டேய் பிரதாப் இறங்குடா...”வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய தென்றல் துப்பட்டா எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, காரை நோக்கி செல்ல இவர்கள் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மனோ..

கார் நிற்காமல் ரிவர்ஸ் போவதை கவனித்தவள் அவன் தப்பிக்க நினைப்பதாக நினைத்துவிட்டு, “பிரதாப் அந்த பேப்பர் வெய்ட்டை எடு..” என்று சொல்லவும், அதை அவளின் கையில் கொடுத்தான் பிரதாப்..

அவனுக்கு தெரிந்துவிட்டது தென்றல் நல்ல வைச்சி செய்ய போகிறாள் என்று அவன் கொடுத்த பேப்பர் வெய்ட்டை காரின் கண்ணாடியை உடைத்தாள்.. அது உடைந்த மறுநொடியே கோபத்தில் காரை விட்டு இறங்கினான் மனோ..

அவன் காரை விட்டு இறங்கியதும், அவனை பார்வையில் அளந்தவள், “உனக்கு கண்ணு இரண்டும் நல்லதானே இருக்கிறது.. ஒன்வே என்பதை கவனிக்காமல் யார் கூட பேசிட்டு வந்த..?!” என்று கேட்டதும் ஒரு நொடி சிலையாக நின்றான் மனோ..

அவன் தொழில் எதிரிகளை நேரில் சந்தித்தே பழக்கப்பட்டவன், இவளின் நேரடி அதிரடியில் எதுவும் புரியாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்றான்..

அவள் அவனின் பார்வையை கவனிக்காமல் கோபத்தில் கண்கள் இரண்டும் சிவக்க, அவள் சுடிதாருக்கு போடும் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு நிற்பது பழைய படங்களில் வரும் விஜயசாந்தி ரேஞ்சில் நின்றிருந்தாள்..

இவளின் பேச்சிற்கு பதில் அடி கொடுப்பான நம்ம மனோ..?! அடுத்து என்ன நடக்கும்..?!
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
ரொம்ப நன்றி பானும்மா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top