• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 11

அவன் கொடுத்த ஒரு வாரமும் சீக்கிரமாகச் சென்று மறைய அன்று காலையில் ஊட்டியில் இருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தாள் தென்றல்..

ஊட்டியில் இருந்து வந்தவள் தன்னுடைய வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்துவிட்டு தனது அறையில் அமைதியாக அமர்ந்தாள்..

ஊட்டியில் இருக்கும் பொழுது அவள் தனது காதலை அறிந்து சந்தோசம் அடைந்தாலும் அவளின் மனதோரம் ஏதோவொன்று உறுத்திக்கொண்டே இருக்க அது என்னவென்று புரியாமல் அமர்ந்திருந்தாள் தென்றல்..

மனோ சொன்ன வார்த்தைகளால் அவளின் மனம் காயப்பட்டு இருந்தது அவளுக்கு அதுவரை தெரியவே இல்லை.. ஆனால் அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்க அவளின் மனது உறுத்த ஆரம்பித்தது..

‘இந்த உறுத்தலின் காரணம் என்ன..?’ என்று தென்றல் அவளின் மனதிடம் கேட்டதும், ‘நேரத்திற்கு நேரம் ஆளை மாற்றும் உனக்கு எல்லாம்..?!’ என்று அவன் கேட்ட வார்த்தை அவளின் அடி மனதில் அழமாக பதிந்திருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தாள்..

அதை உணர்ந்த தென்றல், “நான் என்ன தப்பு செய்தேன்..?! ஒருவர் விளையாட்டாக சிரித்து சந்தோசமாக இருந்தால் இந்த உலகம் அவங்களுக்கு கொடுக்கும் பெயர் நடத்தைக் கெட்டவளா..?!” என்று கேட்டவளின் மனம் வலித்தது..

‘அவன் இப்படி ஒரு கேள்வி கேட்க யார் காரணம்..?’ என்று அவள் கேட்டதும், அவளின் மனதில் இருந்த கோபம் அனைத்தும் அவளை பெற்றவள் மீது திரும்பியது..

‘என்னைப் பெற்றவள் என்னை ஒழுங்காக வளர்த்தி இருந்தால் நான் ஏன் இந்த வார்த்தை வாங்க போகிறேன்.. இதுக்கு எல்லாம் அவள்தான் காரணம்.. என்னதான் நான் நல்லவழியில் வளர்ந்தாலும், அவள் கொடுத்துச் சென்ற அனாதை என்ற பட்டம் தானே எனக்கு முன்னாடி சென்று நிற்கிறது..’ என்று நினைத்தவளின் காதல் அவளின் ஆழ்மனதில் புதைக்கப்பட அவன் சொன்ன சொற்கள் அவளின் கண்முன்னே வந்து நின்றது..

“அவன் மீது கொண்ட காதலா பெரியதா..? இல்ல அவன் கொடுத்தவலி பெரியதா..?” என்று யோசிக்க அவன் பேசிய வார்த்தைகள் பெரியது என்று அவளின் மனதில் தோன்றியதும், தன்னுடைய காதலை மனதில் மறைந்தது..

அவளுக்குள் நடக்கும் மாற்றம் அவளுக்கு புரிந்தாலும், அவனின் காதல் கொடுத்த சந்தோசத்தை விட அவன் வார்த்தைகள் கொடுத்த வலிதான் அவளுக்கு அதிகமாக இருந்தது..

அந்த வலிதான் அவளின் காதலை அடி மனதில் போட்டு புதைத்தது.. அவனிடம் அவள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் மாறி, அவளின் மனதின் அடி ஆழத்தில் மறைவதைப் பார்த்தவள்,

“மனோ இப்பொழுது நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னோட காதலை மறைக்கிறதே, நான் உன்னை மறக்கவில்லை.. இன்று என்னோட மனதில் மறைந்த காதலை நீதான் வெளிக்கொண்டு வரணும்.. உன்மேல் எனக்கு கோபம் இல்ல மனோ.. என் மீது தான் எனக்கு கோபம்..” என்றவள் கண்ணீரோடு படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்..

‘ஒரு பெண் விளையாட்டாக இருக்கிறாள்..’ என்று நாம் வார்த்தைகளை விடவே கூடாது.. அந்த வார்த்தைகள் தான் நம்மை அவர்களிடம் இருந்து பிரித்துவிடும்.. ஒருவர் என்ன இயல்போடு இருக்கிறார்களோ அதே இயல்பை ஏற்க நாமும் பழக வேண்டும்..

அவளின் அடி மனதில் புதைந்த காதல் தானாகவே வெளிப்படுமா..?! மனோ அவள் மனதில் இருக்கும் காதலை வெளி கொண்டுவருவானா..?!

அதன்பிறகு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க அவளின் காலிங்பெல் அடிக்க, “பிரதாப் வந்துவிட்டானா..?!” என்ற கேள்வியுடன் எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே நின்றிருந்த நிவாஸைப் பார்த்தவள்,

“ஹாய் நிவாஸ் செல்லம்.. என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க..?!” என்று கேட்டதும் அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைத்த அனுவைப் பார்த்த தென்றல்,

“என்னடா நிவாஸ் தனியாக வந்தானோ என்று நினைத்தேன்.. நீதான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ..?!” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் சோபாவில் அமர்ந்தாள் அனு..

அவளோடு அமைதியாக அமர்ந்திருந்த நிவாஸைப் பார்த்த தென்றல், “டேய் நிவாஸ் உனக்கு என்னடா ஆச்சு..? எப்பவும் ஏதாவது பேசுவாய்.. இன்னைக்கு என்ன ரொம்ப அமைதியாக இருக்கிறாய்..?” என்று அவனின் அருகில் சென்று அமர்ந்து அவனின் முகத்தைப் பார்க்க அவன் அழுக ஆரம்பித்தான்..

அவன் திடீரென்று அழுவதைப் பார்த்த தென்றல், அவனைத் தூக்கி மடியில் அமர வைத்து, “என்னடா எதுக்கு அழுகிறாய்..? என்னவென்று நீ சொன்னால் தானே எனக்கு தெரியும்..?” என்று கேட்டதும்,

“தென்றல் நாங்க வீட்டு மாத்திட்டோம்.. அது ரொம்ப தூரமாக இருக்கு.. இனிமேல் உன்னை தினமும் பார்க்க முடியாது.. உன்னோடு பேச முடியாது.. உன்னோட சண்டை போட முடியாது..” என்று அவன் பட்டியலை அடுக்க தென்றலுக்கு அவனின் பாசம் கண்டு கண்கள் கலங்கினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு,

“டேய் இதுக்கு போய் யாராவது அழுவாங்களா..?!” என்று அவனின் கண்களைத் துடைத்துவிட்டவள், “இங்கே பாரு நீ எவ்வளவு தூரம் போனாலும் தென்றல் உன்னைப் பார்க்க வருவேன்.. இதுக்கெல்லாம் அழுதால் நம்ம கேங் மானம் போகாது..?” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அப்பொழுதுதான் சிரித்தான் நிவாஸ்..

அவன் சிரிப்பதைப் பார்த்த அனு, “நீ ஹப்பாடியோ சரியான ஆளுடா.. இதே பதிலை தானே நானும் ஒரு வாரமாக சொல்கிறேன்.. என்னோட பேச்சை நீ கேட்ட..?!” என்று கேட்டவள் தென்றல் பக்கம் திரும்பி,

“ஒரு வாரம் இவனை சமாளிக்க இவங்க வீட்டில் பட்டபாடு.. இவங்க அம்மா இவனால் அழுதுட்டாங்க தென்றல்..” என்று சொல்ல,
நிவாஸ் பக்கம் திரும்பிய தென்றல்,

“டேய் நான் ஒரு வாரம் ஊரில் இல்ல.. அதுக்கு இத்தனை வேலையை பண்ணிட்டு இப்போ வந்து அழுகிறாயா..?” என்று கேட்டவள் சிரிக்க, அவளின் முகத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் நிவாஸ்

“ம்ம் இப்போ நல்ல சிரி..” என்று அவளின் முகத்தை தனது சால்வையில் துடைத்து விட்டவளைப் பார்த்த அனு, “நாளைக்கு வேலைக்கு வருகிறாயா தென்றல்..?!” என்று கேட்டதும், அனுவின் பக்கம் திரும்பிய தென்றல், “ம்ம் வருகிறேன்..” என்று கூறினாள்..

அவளின் குரலில் பழைய துள்ளல் இல்லாததைக் கவனித்த அனு, “என்னடி ஒரு ஸ்ருதியே இல்லாமல் சொல்கிறாய்..?” என்று கேட்டதும், “தென்றல் அனு நீங்க பேசிட்டு இருங்க நான் பிரதாப் அண்ணாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, அவனின் கைகளைப் பற்றிய தென்றல்,

“குட்டிப்பையா நாம் வெளியே பார்க் போகலாம்..” என்று சொல்ல அவளைப் புரியாத பார்வைப் பார்க்க ஆரம்பித்தாள் அனு.. ஆனால் அனுவின் பார்வையைக் கண்டுக் கொள்ளாமல், “நீ போய் பிரதாப் அண்ணாவைப் பார்த்துட்டு வா நிவாஸ்..” என்று சொல்ல,

“சரி தென்றல் சீக்கிரம் கிளம்பு..” என்று சொல்லிவிட்டு அவன் ஓட அவள் எழுந்து பார்க்கிற்கு கிளம்பினாள்.. அவளைப் பார்த்துக் கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாள் அனு..

அனு அமைதியாக இருந்தாலும் அவளின் பார்வை தென்றல் மீதே இருந்தது.. தென்றல் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைப் பார்த்தவள், ‘என்ன இவள் இவ்வளவு குழப்பத்தில் இருக்கிறாள்..?! இவள் இப்படி இருக்கும் ஆளே கிடையாதே..?! என்ன விசயமாக இருக்கும்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..

கொஞ்ச நேரத்தில் கிளம்பிய தென்றல் அனுவை அழைத்துக் கொண்டு வெளியே வர பிரதாப்புடன் வந்து சேர்த்தான் நிவாஸ்.. நால்வரும் கிளம்பிப் பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றனர்.. பிரதாப், நிவாஸ் இருவரும் விளையாட செல்ல ஒரு சிமிண்ட் பெஞ்சில் அமைதியாக அமர்ந்தாள் தென்றல்..

இவர்கள் பார்க்கின் உள்ளே நுழையும்போது தென்றலை இரண்டு கண்கள் சுவாரஸ்யமாக பார்த்ததையும் அவளைத் தொடர்ந்து அவன் வருவதையும் கவனிக்காமல் இருந்தாள் தென்றல்..

அவள் அமைதியை இருப்பதைக் கண்ட அனு அவளின் அருகில் அமர்ந்து அவளின் கைகளோடு தனது கைகளைக் கோர்த்த அனு தென்றலுக்கு தைரியம் கொடுக்க வாய் திறந்தாள் தென்றல்..

“அனு என்னோட பிறந்தநாள் அன்று என்ன நடந்தது என்று தெரியுமா..?!” என்று தென்றல் கேட்டதும், இல்லை என்று தலையசைத்தாள் அனு..

அவளிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள், “இப்பொழுது சொல்லு அனு நான் என்ன செய்யட்டும்..?!” என்று கேட்டதும் தென்றலுக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அமர்ந்திருந்தாள் அனுபமா..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“இப்பொழுது இதோட மட்டும் பிரச்சனை முடியல அனு..” என்று தென்றல் சொல்ல அவளின் முகத்தைக் கேள்வியுடன் பார்த்தாள் அனு..

அவளின் பார்வை கண்டவள், “என்னோட பிறப்பு பற்றியும் நான் வளர்ந்த விதம் பற்றியும் அவன் பேசியது என்னோட அடிமனதில் நெரிஞ்சிமுள்ளாக குத்துகிறது அனு..” என்று சொன்னவள் கண்கள் இரண்டும் கலங்கியது..

“இந்த வார்த்தைக்கு யார் காரணம்..? இதுக்கெல்லாம் என்னோட அம்மா தானே காரணம்..?” என்று கேட்டதும், “தென்றல் அந்த விஷயத்தை நினைக்காதே..” என்று அனு சொல்ல, “சத்தியமாக முடியல அனு..” என்று அழுக ஆரம்பித்தாள் தென்றல்..

அவளை தோளோடு சாய்த்துக் கொண்ட அனு, “தென்றல் என்னடா நீயே இப்படி அழுகிறாய்..? இப்போ உனக்கும் நிவாஸிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது..?” என்று கேட்டதும்,

“என்னோட அம்மாவின் முகம் கூட நான் பார்த்தே இல்ல அனு.. ஆனால் அவள் போகும் பொழுது எனக்கு கொஞ்சம் விஷம் வைத்துக் கொன்றுவிட்டது போயிருக்கலாம்..” என்று சொல்ல,

“தென்றல் இறைவனின் படைப்பில் மாற்றம் இல்லடா.. இது எல்லாம் அவங்க அவங்க சூழ்நிலை..” என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றாள் அனு..

“இல்லடி எவனோ காதல் என்று சொன்னதும், அவனின் சொற்களில் மயங்கி என்னையும் பெற்றுவிட்டு வீட்டில் சொல்ல துணிவில்லாமல் அனாதை ஆசரமத்தின் முன்னே தூக்கி எறிந்துவிட்டு அவள் இன்னொருவனை திருமணம் பண்ணிட்டு சந்தோசமாக போய்ட்டா..” என்று கூறியவளின் குரலில் இருந்த ஆத்திரம் கண்ட அனு,

“அதுதான் வாய் பேச துணிவில்லாமல் செய்துவிட்டாங்க என்று நீயே சொல்கிறாய் இல்ல.. அப்புறம் எதற்கு அதைப் பற்றி பேசுகிறாய்..?” என்று கேட்ட அனுவைப் பார்த்த தென்றல்,

“என்னோட பிறப்பில் நான் தப்பான வழியில் வந்தேன் என்றாலும் என்னோட அம்மா செய்த காரித்தால் இன்னைக்கு எவனிடமோ எல்லாம் என்ன வார்த்தை கேட்க வேண்டி இருக்கிறது..” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்..

அவளுக்கு இருக்கும் கோபம் அவனின் மீது இல்லை.. ‘பிறப்பு தவறு என்பதற்காக யார் என்ன சொன்னாலும் கேட்டுட்டு வாயை மூடிக்கொண்டு வரவேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது..?’ என்று ஒரு வழியில் யோசித்தவள்,

“இன்னைக்கு இந்த கேள்வியை இவன் கேட்பான்.. நாளை வேற எவனோ கேட்பான்.. இதுக்கு எல்லாம் மூலக்காரணம் யாரு அவள் தானே..?!” என்று அவள் கேட்டதும் அவளின் கண்களில் கண்ணில் கண்ணீர் வரவே இல்லை..

“இதுக்கெல்லாம் அவள் தானே காரணம் சொல்லு அனு.. இப்பொழுது சொல்லு அனு.. எனக்கு என்று கேட்பதற்கு ஆள் இல்லாமல் தானே நான் இப்படி வளர்ந்தேன்.. என்னோட நடவடிக்கையை ஒருவன் தவறு என்று சொல்லும் பொழுது சாகலாம் என்று இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்..” என்று கோபத்துடன் கூறினாள்..

அவள் கூறியதைக் கேட்டு அப்படியே சிலையென நின்றான் மனோ.. இதற்கு மேல் இங்கே இருக்க கூடாது என்று அங்கிருந்து செல்ல நினைக்க, “எனக்காக யார் அனு கேள்வி கேட்பாங்க.. நான் ஒரு அனாதை தானே..?!” என்று அழுத தென்றலின் குரல் கேட்ட மனோ..

‘நான் உன்னை அப்படி கேட்டது உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று எனக்கு தெரியாதுடி.. நீ அனாதை என்று யார் சொன்னது..? உனக்கு நான் இருக்கிறேன் தென்றல்..’ என்று கூறியவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்..

அவளின் வலி அவனுக்கு புரிந்தது.. அதே வார்த்தைகளால் அவனும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறான்.. அது தான் அவனது நெஞ்சம் கல்லாக மாற காரணமே..!

அந்த பார்க்கை விட்டு வெளியே வந்த மனோ தனது காரில் ஏறி அதை துரிதமான வேகத்தில் செலுத்த அவள் சொன்ன வார்த்தைகளில் அவனின் மனதில் இருந்த ஈரம் அவனின் கண்களின் வழியே கண்ணீர் துளியாக வெளிவந்தது..

அவனின் மனதில் வந்த காதல் அவனை மனிதனாக மாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தான் மனோ.. மனோவின் மனம் அவளிடம் தஞ்சம் அடைய அவளின் காதல் மனம் அவளின் மனதிலேயே மறந்தது..

இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்பொழுது முடியும் என்று யாருக்கும் தெரியாது.. ஒருவரை நாம் நெருங்கும் போது அவர்கள் நம்மைவிட்டு விலகுவார்கள்.. நாம் விலகும் போது அவர்கள் நம்மை நெருங்குவார்கள் இதற்கு காரணம் அவர்கள் அல்ல..

இதற்கு எல்லாம் மனம் தான் காரணம்.. இந்த காரணம் அறியாத பலர் தங்கள் சந்தோசத்தையும் அழித்து தங்களை சுற்றி உள்ளவர்கள் மனதில் இருக்கும் சந்தோசத்தையும் அழித்து மிருகமாகவே மாறிவிடுகின்றனர்..

மனோவின் மனதில் இருந்த காயம் தான் அவளை காயப்படுத்த காரணமாக அமைத்தது.. அதே காயம் தான் இப்பொழுது அவளின் மீதே காதல் கொள்ளவும் வைக்கிறது.. தென்றல் மனதில் இருக்கும் காதல் வெளிவர மனோ அவனின் மனதை திறக்க வேண்டும் என்ற நிலையில் அவன் தனது மனதை மறைப்பானா..? வெளிபடுத்துவனா..?

தென்றல் பேசியதை மனோ மட்டும் கேட்கவில்லை நிவாஸும் கேட்டான்.. அவள் அனுவிடம் சொல்லி அழுதுக்கொண்டிருக்க தென்றலின் அருகில் வந்த நிவாஸ், “உனக்காக யாரும் இல்ல என்று யார் சொன்னது தென்றல்..?!” என்று கேட்டதும், “இல்லடா இது வேற விஷயம்..” என்றாள் தென்றல்..

“சும்மா மறைக்காதே இதுக்கு எல்லாம் அந்த இரும்பு மனிதன் தான் காரணம்..” என்று கேட்டதும் அவள் ஒன்றும் பேசாமல் இருக்க, “உனக்கு யாரும் இல்ல என்று நினைக்காதே தென்றல் நாங்க இருக்கோம்..” என்று கூறியவன்,

“என்னோட தென்றலை அழுக வைத்தான் இல்ல அவனுக்கு இருக்கு..” என்று கூறிய நிவாஸைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள் தென்றல்.. அவள் சிரிப்பது பார்த்து,

“இப்பொழுது தான் நீ சமத்து சக்கரைக்கட்டி..” என்று சொல்லி அவளின் கன்னத்தில் முத்தமிட்டான் நிவாஸ்.. அவனின் கன்னத்திலும் முத்தமிட்டாள் தென்றல்..

மறுநாள் காலையில் எப்பொழுது வேலைக்கு சென்றவளிடம், “உங்களின் ரிஸைனிங் பற்றி நீங்க ஏதாவது யோசித்தீர்களா..?” என்று அவன் கேட்டதும், “இப்பொழுது எதுவும் இல்லை சார்.. அப்படி ஒரு நிலை வந்தால் சொல்கிறேன்..” என்று சொன்னவளின் குரலில் என்ன இருந்தது என்று அவனால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை..

அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த மனோவின் பார்வையில் அதிர்ச்சி அதிகமாகவே இருந்தது.. அவனின் அதிர்வுக்கு காரணம், அவளின் முகத்தில் இருந்த புன்னகை முற்றிலும் மறைந்து வாடிய மலராக இருந்தாள்..

அவளின் முகத்தைப் பார்த்தவன், “ஏன் இப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டதற்கு, “அது உங்களுக்கு தெரியாத சார்..? நீங்க கேட்ட கேள்விதான் என்னோட முகத்தில் இருந்த புன்னகை மறைய காரணம்..” என்றவளைப் பார்த்த மனோ,

“உன்னோட முகத்தில் புன்னகை மலரும், அதை நான் பார்ப்பேன்..” என்றவனைப் பார்த்தவள் ஏளனமாக நகைத்துவிட்டு சென்றாள்..

அவளின் இடத்திற்கு சென்றவளின் முகத்தில் புன்னகை மீண்டும் அழகாக மலர்ந்தது.. இதுவும் தென்றலின் திருவிளையாடலில் ஒன்றுதான் மக்களே.. அவள் தனது புன்னகையை மறைத்துக் கொண்டு அவனை தவிக்க விடுகிறாள்.. இந்த விளையாட்டும் தொடரும்..

மனோ சொன்னதை செய்வானா..? அவளின் விளையாட்டு அவனுக்கு புரியுமா..?!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top