• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் சந்தியா ஸ்ரீ
அப்டேட் சூப்பர்ப் இளம் கன்றுகள் பயம் அறியாது எப்படி நிருபித்துவிட்டார்கள் சிறுவர்கள் அதிலும் நிவாஸ் சொன்னது இனி தென்றலை திட்டினால் ஸ்டெம்பை வைத்து மண்டையை பிளந்துவிடுவேன் இரும்பு மனிதனை புயல் தான் ஆட்டிவைக்குது என்று பார்த்தால் அவளோட குட்டி பட்டாளங்கள் அவனை கதிகலங்க வைத்துவிட்டது சிறுவர்களின் அன்பு அலாதியானது தென்றல் லக்கி கேர்ள் தான் இவர்களின் அன்பை பெற நன்றி அழகான பதிவு சந்தியா ஸ்ரீ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அவள் சிரிப்பதைப் பார்த்து அவளின் அருகில் வந்த அனு, “அடியே சிரிக்காதே..” என்று அவளின் கையைப் பிடித்துக் கிள்ள, “அடியே கிள்ளாதே என்னால் சிரிப்பை அடக்கவே முடியலடி.. என்னை கொஞ்சம் புரிந்துக்கொள் அனு..” என்று சொன்னவள்

மனோவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “இவரிடம் என்னடா பேச்சு வாங்க போகலாம்..” என்று அவர்களை அழைத்துச் செல்ல அவர்களின் பின்னோடு சென்றாள் அனு..

அவர்களோடு இணைந்து நடந்த தென்றல், “டேய் அவனை திட்ட நீங்க நேரில் வருவீங்க என்று எனக்கு தெரியலடா..” என்று கூறியவள் சிரிக்க, “அவனோட இடத்திற்கே வந்து அவனையே மிரட்டும் உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் டா” என்று சொல்ல, “தேங்க்ஸ் தென்றல்..” என்று எல்லாம் கோரஸ் பாடினர்..

அவர்கள் சென்றது தனது காரில் ஏறி சென்றவன் அவன் அறைக்கு சென்று வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.. கண்களில் கண்ணீர் வரும் வரையில் சிரித்தவன், ‘ஐயோ புயல் என்னால முடியலடி.. நான் இந்த மாதிரி சிரித்து பதினேழு வருடம் ஆச்சு தேங்க்ஸ் டா தென்றல்..’ என்று மனதிற்குள் ஆவலுடன் பேசினான்..

அந்த நிகழ்விற்கு பிறகு நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல, அவளும் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் புன்னகைக்க ஆரம்பித்தாள்..

காலையில் எழுவதற்கே பிடிக்காமல் படுக்கையில் புரண்டு கொண்டே படுத்திருந்தாள் தென்றல்.. அவளுக்கு இன்று ஆபீஸ் போகவே விருப்பம் இல்லை.. அது ஏன் என்று அவளுக்கு தெரியவில்லை..

அவள் மெதுவாக எழுந்து பல்லை விலக்கி குளித்துவிட்டு வந்த பிறகும் கூட அவளின் சோர்வு குறையாமல் இருக்க ஈர தலையுடன் அப்படியே படுத்து உறங்கிவிட்டாள்.. அவள் அன்று ஆபீஸ் போகவும் இல்லை.. லீவும் சொல்லவில்லை.. மெயில் மட்டும் பண்ணிவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்..

அவள் செல் அடிக்கும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தவள் மணியைப் பார்க்க அது பத்தாக பத்து நிமிடம் தான் உள்ளது என்று அவளுக்கு எடுத்துரைக்க, “ஐயோ இனி நான் கிளம்பிப் போவதற்குள் இன்னும் அரை மணி நேரம் வேற ஆகுமே..” என்று புலம்பியவள்,

அவசர அவசரமாக எழுந்து கிளம்பியவள் சாப்பிடாமல் கூட ஆபீஸ் செல்ல அவளின்செல் அடித்துக் கொண்டே இருக்க, “இந்த பொன் கண்டு பிடித்தவனை கட்டிவைத்து உதைக்கணும்.. நம்ம அவசரமாக போன் பண்ணும் போது போனே போகாது.. நெட்வர்க் பிசி என்று வரும்..” என்று புலம்பிய வண்ணம் வண்டியை எடுத்தவள் வண்டி அடுத்து நின்ற இடம் அலுவலகம் தான்..

தென்றல் வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். அவள் வரவர தென்றலின் செல் அடிக்க, “ஸ்ஸ் எவண்டா அது காலையில் இருந்து போன் பண்ணிட்டே இருப்பது..?” என்று செல்லை எடுத்துப் பார்த்தவள் முகம் தாமரை மலரென மலர்ந்தது.. அந்த வேகத்துடன் அலுவலகத்தின் உள்ளே வந்தாள்..

எப்பொழுதும் போல அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவனின் பார்வை அவளின் இருக்கையை பார்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்று அமர்ந்தவன்,

அவளின் செல்லிற்கு அழைக்க அது அடித்ததே தவிர வேறு யாரும் எடுக்கவே இல்லை.. அவள் செல் அடித்தது.. அடித்ததுக் கொண்டே இருந்தது.. ஆனால் அவள் எடுக்கவே இல்லை.. என்ன விஷயம் என்று யோசிக்க ஆரம்பித்தவன்,

அங்கிருந்த இண்டர்காமில் அனுவை அழைத்தவன், “என்ன தென்றல் இன்னும் வரவே இல்லையா..? எதுக்கு லீவ் என்று ஏதாவது சொன்னாங்களா..?” என்று அவன் கேட்டதும்,

“தெரியல சார்.. எப்பொழுதும் இந்த நேரம் வந்திருப்பாள்.. இன்று ஏனோ இந்நேரம் ஆகியும் அவள் வரல..” என்று கூறியவள் போனை வைக்கவும் தென்றல் வரவும் சரியாக இருந்தது..

அந்த நேரம் உள்ளே வந்த தென்றல், “ஹாய் அனு செல்லம்..” என்று சொல்ல அவளை நிமிர்ந்துப் பார்த்த அனு, “என்னடி இன்னைக்கு இவ்வளவு லேட்டாக வருகிறாய்.. இரும்பு மனிதன் உன்னை கேட்டான்.. போ போய் பதில் சொல்லிட்டு வா..” என்று அவள் சொல்ல அவனின் அறையின் கதவைத் தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவள்,

“ஸாரி சார் இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு.. இனிமேல் இப்படி நடக்காது..” என்று அவனைப் பார்க்காமல் பேசிய தென்றலையே பார்த்தான் மனோ.. அவள் முகத்தில் இருந்த சோர்வே சொல்லியது அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று!

அவளின் முகத்தைப் பார்த்து மனதிற்குள், ‘இவளை வீட்டிற்கு போ என்று உரிமையாக சொல்லவும் என்னால் முடியாது.. அப்படியே சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள்.. வீம்பாக வேலை செய்வாள்.. அனுவிடம் சொல்லலாம் என்றால் அவள் என்ன நினைப்பாள் என்றே தெரியல.. இப்போ என்ன பண்ணுவது..?’ என்று யோசித்தவன்,

“உங்களுக்கு எல்லாம் எத்தனை முறைதான் சொல்வது.. லேட்டாக வாராதீங்க என்று.. நீங்க இன்னைக்கு லேட்டாக வந்து என்னிடம் காரணம் சொல்லிட்டு நீங்க போய் உங்க வேலையைப் பார்ப்பீங்க.. நாளை இதே காரணத்தை சொல்லிட்டு வேற யாராவது வந்து நிற்பாங்க.. உங்களோட காரணங்களைக் கேட்கத்தான் நான் இங்கே இருக்கிறேனா..?!” என்று கத்தியவன் குரலைக்கேட்டு எதுவும் பேசாமல் நின்றாள்..

அவளுக்கு தெரியும், ‘இவன் இப்படித்தான்..’ என்று..! அதனால் அவள் அவனின் வார்த்தைகளில் பாதிக்கப்படவே இல்ல.. அவன் பேசிட்டு இருக்க இவள் காதில் வாங்காமல் நின்றிருக்க, “போங்க இன்னைக்கு போய் வீட்டில் தூங்கி எழுந்து நாளைக்கு நேரத்திற்கு வர பாருங்கள்..” என்று சொல்ல அப்பொழுது அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த தென்றல்,

“ஹலோ சார்.. என்னோட செல்லில் அரைமணி நேரத்தில் அறுபது கால் என்ட்ரி ஆகிருக்கிறது..?! இது உங்களின் மொபைல் நம்பர் தானே..?! தேவை இல்லாமல் அழைக்க உங்களுக்கு என்ன லூஸா பிடித்திருக்கிறது..?” என்று கேட்டவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவன் அவனின் இருக்கையில் இருந்து எழுந்து வந்தான்..

அவன் வருவதைப் பார்த்து அவள் மனதில் பயம் ஏழ, அவளின் அருகில் வந்த மனோ, “இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது..” என்று அவன் அழுத்ததுடன் சொல்ல, அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் தென்றல்..

அவளின் முகத்தில் இருந்த கேள்வியைப் படித்தவன், “இருபது கால்ஸ் தான் நான் பண்ணினேன்.. அது உனக்கு எப்படி அறுபது ஆச்சு..” என்று கேட்டவனின் குரலில் இருந்த மாற்றத்தை தென்றல் கவனிக்கவே செய்தாள்..

“என்னோட பி.ஏ. நீங்கதான்.. உங்களுக்கு நான்தான் அழைப்பேன்.. சோ நேரத்திற்கு வந்து பழகுங்க.. இன்று நீங்கள் போகலாம்..” என்று அவன் வாசலை நோக்கி கைகாட்ட, ‘ம்ம் ரொம்பத்தான்..’ என்று நினைத்தவள் அவனின் அறையை விட்டு வெளியே சென்றாள்..

அவள் அறையைவிட்டு சென்றதும், ‘இவ்வளவு முடியல என்று தெரியுது.. அப்புறம் எதற்கு வேலைக்கு கிளம்பி வரணும்..’ என்று அவன் மனதில் நினைக்க, “எல்லாம் நீங்க திட்டுவீங்க என்று தான்..” என்று கூறியவளின் குரலைக்கேட்டு திடுக்கிட்டவன் அவளை நிமிர்ந்து பார்க்க, “தேங்க்ஸ் ஸார்..” என்று கூறியவள் அவனின் அறையின் கதவை மூடிவிட்டு சென்றாள்..

‘அடியே புயல் உன்னை என்ன செய்வது என்று எனக்கே தெரியல..’ என்று நினைத்தவன், அவனின் வேலைகளைக் கவனிக்க சென்றான்..
Semma EPI dear.... சொல்லாத காதல்.....???
 




Keerthi Elango

மண்டலாதிபதி
Joined
Jul 25, 2018
Messages
225
Reaction score
294
Location
Karur
Sema epi sis... Kutties looty sema...sir manasula nenacha madam crct ah badhil solranga....nalla improvement pola....Pavam mano thendral ta matitu mulikuran...hahaha....keep rockinggg dr...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top