• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மனோரஞ்சன் – இளந்தென்றல் திருமணத்திற்கு உங்களை அன்போடு அழைப்பது உங்களின் சந்தியா ஸ்ரீ. அனைவரும் திருமணத்தில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு உங்களின் வரவை எதிர்பார்க்கும் அன்பு உள்ளம் கொண்ட உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ

அத்தியாயம் – 16

அதற்கு பிறகு நாட்கள் விரைந்தோடிச் செல்ல ஒரு நல்ல நாலாகப் பார்த்து தன்னுடைய தாத்தா, சாரு, ரிஷி மூவரையும் அழைத்துக்கொண்டு தென்றலைப் பெண்கேட்டு வந்தான் மனோ.

அவர்களை வரவேற்ற ஷீலாம்மா வீட்டின் ஹாலில் இருக்கும் சோபாவில் அமரவைத்து பேசிக்கொண்டு இருக்க தென்றலுக்கு அனு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்..

ஷீலாம்மா ஒரு சோபாவில் அமர்ந்திருக்க இன்னொரு சோபாவில் ராஜசேகரும், மனோவும் அமர, அதற்கு அடுத்த சோபாவில் ரிஷியும், சாருவும் அமர்ந்தனர்.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் மனோவின் பார்வை தென்றலைத் தேடியதைக் கவனித்த நிவாஸ் அவனின் அருகில் சென்றவன், “மாமா அக்காவுக்கு உள்ளே அலங்காரம் நடக்குது..” என்று மனோவிற்கு தகவல் தெரிவித்தான்..

அவனின் அருகில் குனிந்த மனோ, “தேங்க்ஸ் நிவாஸ் குட்டி..” என்று சொல்ல, “என்ன மனோ குட்டி பையனிடம் ரகசியம் பேசுகிறாய்..?!” என்று குறும்பாகக் கேட்டாள் சாரு..

மனோ அவளுக்கு பதில் சொல்லும் முன்னாடியே, “மாமானுக்கும் மாப்பிள்ளைக்கு நடுவே ஆயிரம் இருக்கும்.. அது எல்லாம் உங்களிடம் சொல்ல முடியுமா..?” என்று கேட்டதும் சாரு, “டேய் நீதானே அன்னைக்கு என்னோட மனோவோட மண்டையை உடைக்கிறேன் என்று சொன்னாய்..?” என்று கேட்டதும்,

“அது அன்னைக்கு சொன்னேன்..” என்று அவன் இழுக்க இவர்கள் இருவரின் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையை உள்ளிருந்து கவனித்த தென்றல் சிரிக்க, “என்னடி தென்றல் என்ன சிரிப்பு..” என்று கேட்டாள் அனு..

“அங்கே நிவாஸ் என்ன கேள்வி கேட்கிறான் பாரு..” என்று சொல்ல, “எல்லாம் எங்களுக்கும் கேட்கிறது நீ நேராக உட்காரு தலைபின்னனும்..” என்று அனு சொல்ல கண்ணாடியைப் பார்த்தவண்ணம் அமர்ந்தாள் தென்றல்..

“அது அன்னைக்கு இன்னைக்கு என்னடா பதில்..” என்று நிவாஸிடம் கேட்டாள் சாரு.. அதுக்கு அவன் சொன்ன பதில் இருக்கே, “நாங்க குழந்தைகள் எங்களின் முடிவும் அரசியல்வாதியின் முடிவும் ஒரே மாதிரி.. எந்த நேரம் என்ன பேசுவோம், என்ன செய்வோம் என்று எங்களுக்கு தெரியாது..” என்று நிவாஸ் சொன்னதைக் கேட்ட தென்றல்,

“ஐயோ சரிக்கு சரி வாயடிக்கிறான் இந்த நிவாஸ்..” என்று சொல்ல, “மாமா அந்த அக்காகிட்ட சொல்லி வைங்க..” என்று சுனிலைப் புரியாமல் பார்த்தான் மனோ..

“என்ன கண்ணா சொல்லி வைக்கணும்..” என்று ராஜசேகர் பணிவாகக் கேட்டதும், “எங்களோட வழியில் அவர்களை தலையிட வேண்டாம் என்று சொல்லுங்க தாத்தா..” என்றான் சுனில்..

“இதுக்கு நீயேன்ன சொல்கிறாய் சாரு..” என்று அவர் அவளைப் பார்த்து கேள்வி கேட்டதும், “தலையைத்தானே விடக்கூடாது.. மூக்கை நுழைக்கலாம் இல்ல..” என்று கேட்டதும் அவளின் அருகில் சென்ற நிவாஸ், “அக்கா கொஞ்சம் குனிங்க..” என்று சொல்ல, “என்னடா..” என்று கேட்டுக் கொண்டே குனிந்தாள்..

அவளின் கன்னத்தில் முத்தமிட்ட நிவாஸ், “நீங்க நல்ல பேசறீங்க.. அப்படியே எங்க தென்றல் அக்கா மாதிரி.. அதனால் நீங்களும் எங்களோட கேங்தான்..” என்று அவன் சொல்ல,

அவனைத் தூக்கி மடியில் அமரவைத்த ரிஷி, “டேய் என்னடா இப்படி பொசுக்குன்னு போஸ்டிங் கொடுத்துடீங்க..?” என்று கேட்டதும், “நாங்க இப்பொழுது தானே சொன்னோம்.. எங்க முடிவு அடிக்கடி மாறிட்டே இருக்கும்..” என்று சொல்ல அவனின் கன்னத்தில் முத்தம் பதித்த ரிஷி,

“நிவாஸ் நானும் இவளைக் கல்யாணம் பண்ணிய நாளில் இருந்து இவளின் வாயை அடிக்கணும் என்று பார்க்கிறேன் என்னால முடியாதை நீ செய்துவிட்டாய்..” என்று சொல்ல அவனின் மீது சாய்ந்து அவனின் முகத்தைப் பார்த்தான்..

“இது எல்லாம் எங்களுக்கு ஜுஜிபி மேட்டர்..” என்றவன், “மாமா எனக்கு இவரை பிடித்திருக்கிறது.. இவங்க மொத்தம் உன்னோட கேங் தான் செல்லம்..” என்று மனோ கூறினான்.. அவனின் மடியில் சுனில் அமர்ந்து கொள்ள மனோவின் அருகில் ராகுல் அமர்ந்து கொண்டான்..

ஷிவானி பிரதாப் இருவரும் அங்கிருந்த குட்டி சேரில் அமர்ந்திருக்க குழந்தைகள் பேசுவதைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர் அவர்களின் பெற்றோர்.. ஷீலாம்மா ராஜசேகருடன் பேசிக்கொண்டிருந்தார்..

நம்ம பஞ்சபண்டவர் மனோவிடம் அமர்ந்துக் கதைபேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்த தென்றல், “அங்கே பாரு அனு.. எல்லா வாண்டுகளும் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பேசிட்டு இருக்குதுங்க..” என்று கூறினாள் தென்றல்

அவளின் தலையில் மல்லிகை பூவைச்சூடிய அனு, “என்ன தென்றல் பொறாமையா..?” என்று சிரிப்புடன் கேட்டதும், “கொஞ்சம் அனு..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த அனு, “நீ பொறாமை படவில்லை என்றால் தான் அதிசயம்..” என்று கூறியவள்

கண்ணாடியில் தென்றலின் முகத்தைப் பார்த்து, “நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் தென்றல்..” என்று கூறியதும், கண்ணாடியில் தன்னுடைய கோலத்தைப் பார்த்தாள் தென்றல்..

ஆரஞ்சு கலரில் பச்சை வண்ண கரையுள்ள உள்ள சேலை கட்டி நேரெடுத்து கூந்தலைத் தளர்வாக பின்னலிட்டு அதில் மல்லிகை பூச்சூடி கண்களுக்கு அழகாக மையிட்டு மூக்கில் மூக்குத்தி மின்ன கழுத்தில் ஒரு சின்ன செயின் போட்டி கைகளில் கண்ணாடி கண்ணாடி வளையல்கள் போட்டிருக்க நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் போட்டும் வைத்திருக்க கண்களுக்கு ஸ்பெக்ஸ் போட்டிருந்தாள்.. அவளின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்திருந்தது..

தென்றல் தன்னை மெய்மறந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் என்னடி மெய்மறந்து நீயே உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்..” என்று கேட்டதும், அனுவை நிமிர்ந்துப் பார்த்த தென்றல்..

“இல்லடி அலங்காரம் பண்ணுகிறேன் என்று சொல்லி என்னை இந்நேரம் வரையில் பாடாய் படுத்திவிட்டு இப்படி அலங்கோலம் பண்ணி வைத்திருக்கிறாயே இது உனக்கே நியாயமா..?” என்று தென்றல் சிரிக்காமல் கேட்டதும் அவளின் கண்ணில் இருந்த குறும்பைக் கண்ட அனுபமா

“ஒஹ் இதுதான் உங்களின் ஊரில் அலங்கோலமா..? இன்னொருமுறை நான் அலங்கோலம் பண்ணட்டுமா..?” என்று அனு அவளைப் பார்த்துக் கேலியாகக் கேட்டதும், “அம்மா தாயே வேண்டாம்.. இதுவே நல்லத்தான் இருக்கு.. என்னை ஆளை விடுமா..” என்று அவள் கெஞ்சவும், “அந்த பயம் இருக்கணும்..” என்று சொல்ல,

“அனு தென்றலை அழைத்துவா..” என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தாள் ராதா.. அவரின் குரல் கேட்ட தென்றல், “எனக்கு ஒரு சந்தேகம் அனு..” என்று கூறிய தென்றலைக் கேள்வியாகப் பார்த்தாள் அனு..

“இல்ல இந்த டீ கொடுக்கும் பத்து நிமிசத்தில் அவன்தான் எனக்கு எல்லாம் என்று எல்லோரும் எப்படி முடிவேடுக்கிறாங்க..” என்று கேட்டதும் அனு அவளை முறைத்தாள்..

அவளின் முறைப்பைப் பார்த்த தென்றல், “ஏன் கேட்கிறேன் என்றால் காலேஜில் ஒரு குரூப் எடுக்க நாம் எந்த அளவுக்கு யோசிக்கிறோம்.. கல்யாணம் என்று வந்தால் மட்டும் காபி டம்ளாரை கையில் கொடுத்து அதை கொடுக்கும் பத்து நிமிஷத்தில் அவன்தான் எனக்கு எல்லாம் என்று எப்படி எல்லோரும் முடிவேடுக்கறாங்க..?” என்று கேட்டதும் தென்றலை முறைத்த அனு,

“இந்த கேள்விக்கு பதிலை நான் ஷீலாம்மாகிட்ட கேட்டு சொல்லவா தென்றல்..?” என்று அனு கோபமாகக் கேட்க, “ஒருத்தங்க அறிவாக யோசித்தால் உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே..” என்று அவள் உதட்டைப் பிதுக்கியபடியே கூறிய தென்றலைப் பார்த்த அனு..

“இப்பொழுது தானே தெரியுது..” என்று அனு கூறியதும் தன்னை கண்ணாடியில் ஆராய்ந்த தென்றல், “என்னடி தெரியுது..?!” என்று கேட்டதும், “மனோ எதுக்கு அதிரடியாக உன்னை சம்மதிக்க வைத்தார் என்று நான் கூட யோசனை செய்தேன்.. உன்னை யோசிக்க விட்டால் உன்னோட மூளையில் இருக்கும் களிமண்ணை வைத்து நீ தப்பு தப்பாக யோசித்து அதை செய்யவும் செய்வ என்று அவருக்கு தெரிந்துவிட்டது போல.. அதுதான் உன்னை யோசிக்கவே இடம் கொடுக்காமல் பொண்ணு கேட்டு வந்துவிட்டார்..” என்று அனு மூச்சு விட்டாமல் சொல்ல இப்பொழுது அனுவை முறைப்பது தென்றலின் முறையானது..

“உன்னோட முறைப்புக்கெல்லாம் பயப்பட நான் ஆள் இல்லை..” என்றவள் தென்றலின் கையில் காபி டம்ளர் வைத்த தட்டிக் கொடுத்தவள், “என்னிடம் கேட்ட கேள்வியை யோசிச்சிட்டே போய் காபியைக் கொடும்மா..” என்று கூறினாள் அனு..

அவளிடம் தட்டை வாங்கிய தென்றல், “அதை எதுக்கு நான் யோசிக்கணும்..?” என்று கேட்டதும், “உன்னோட அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.. உனக்கு விடை கிடைத்தால் எனக்கு சொல்லிக் கொடுப்பாய் இல்ல அதுதான்..” என்று அனு சிரிக்காமல் கூறினாள்

அனுவை முறைத்த தென்றல், “என்னோட கையில் என்ன இருக்கிறது என்று பாரு..” என்று சொல்ல, “அது ஆறிப்போகும் முன்னால் கொண்டு போய் கொடு..” என்று சொல்லி தென்றலுக்கு பிபியை ஏற்றினாள் அனு..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அதற்குள் அவர்களின் அறைக்கு வந்த ராதா, “நான் தென்றலை அழைத்து வா என்று சொன்னேன்..” என்று அவர் அணுவைத் திட்ட, ‘நல்ல வாங்கு மகளே..’ என்று மனதிற்குள் சொல்லிய தென்றல் அமைதியாக இருக்க, “இருவரும் சீக்கிரம் வாங்க..” என்று அந்த அறையைவிட்டு வெளியே சென்றார்..

அவர் சென்றதும், “வாடி போகலாம்..” என்று தென்றலை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள் அனு.. அங்கிருந்த அனைவரும் தென்றலைப் பார்க்க மனோவின் பார்வை அவளைவிட்டு அசைய மறுத்தது..

எளிமையான அலங்காரத்தில் தேவதையாக நடந்து வந்த தென்றலைப் பார்த்த மனோவின் மனம், ‘புயல் நீ ரொம்பவே அழகாக இருக்கிறாய்..’ என்று மனதில் நினைத்தான் மனோ..

அவள் எல்லோருக்கு காபி கொடுத்துக் கொண்டே வந்த தென்றல் மனோவின் அருகில் வந்ததும் சிரிக்காமல் அவனை நிமிர்ந்து பார்க்க, ‘கொஞ்சம் சிரித்தால் என்ன..?’ என்று தனது பார்வையால் கேட்டான் மனோ..

அவனின் கேள்வி புரிந்த தென்றல் அவனுக்கு காபியைக் கொடுத்துவிட்டு பெரியவர்களால் தாம்பூலத்தட்டு மாற்றப்பட்டு திருமண நாளும் குறிக்கப்பட்டது.. அடுத்த வந்த ஒரு நல்ல நாளில் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க சென்றனர்..

எல்லோரும் திருமணத்திற்கு பட்டு எடுக்க செல்வதாக சொல்லவும் மனோவும் கூடவே வந்தான்.. அவனின் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தான் அவர்களோடு வந்திருந்தான் மனோ.. எல்லோருக்கும் பிடித்தவற்றை எடுக்க சொன்ன மனோ தென்றலைப் பார்த்தான்.. அவள் எதிலும் கவனம் செலுத்தாமல் அமர்ந்திருந்தாள்..

அவளின் அருகில் சென்ற மனோ, “வா தென்றல்..” என்று அழைக்க அவனைப் பார்த்த சாரு, ‘நடத்து மகனே நடத்து..’ என்று சைகை செய்துவிட்டு திரும்பிக்கொள்ள எதுவும் சொல்லாமல் அவனின் பின்னோடு சென்றாள் தென்றல்..

அவள் யோசிக்கும் முன்னாடியே அவளை லிப்ட்டிற்குள் அழைத்துச் சென்ற மனோ, “எதுக்கு தென்றல் முகத்தை இப்படி வைத்திருக்கிறாய்..?!” என்று கேட்டான்..

அவள் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்க்க அவளின் விழிகளைப் பார்த்த மனோ, “எதுவாக இருந்தாலும் சொல்லு.. இப்படி சிரிக்காமல் இருக்காதே..” என்று அவன் கூறியதும், “உங்களின் ஸ்டேடஸ்க்கு நான் தகுதியானவளா..?” என்று தனது மனதில் உறுத்திய கேள்வியைக் கேட்டாள் தென்றல்.. அவளின் கேள்வியைப் புரிந்துக் கொண்ட மனோ சாருவிற்கு அழைத்தான்..

மனோவின் அழைப்பைப் பார்த்த சாரு, “ம்ம் சொல்லுடா..” என்று சொல்ல, “நானும், தென்றலும் கொஞ்சம் வெளியே போகிறோம்.. ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுகிறோம் அதுவரை அவர்களை சமாளித்துக்கொள் சாரு” என்று சொல்ல, “ம்ம் நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்ல லிப்ட் நின்றது..

அவளிடம் பேசிவிட்டு போனை வைத்த மனோ, “வா..” என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல அவளின் பின்னோடு சென்றாள் தென்றல்.. அவன் காரில் டிரைவிங் சீட்டில் அமர, முன்னாடி சீட்டில் அமர்ந்தாள் தென்றல்..

அவள் அமர்ந்ததும் காரை எடுத்த மனோ வண்டியை நிறுத்திய இடம் அவனின் கன்ஸ்ட்ரக்ஷன். அதைப் பார்த்த தென்றல் அவனைக் கேள்வியாகப் பார்க்கவும், “இறங்கு தென்றல்..” என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான்..

அவனின் அறைக்குள் சென்றதும், “இங்கே எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க..?” என்று கேட்டாள் தென்றல்.. அவளின் கேள்வியில் அவளின் கையைப் பிடித்து அவனின் ட்ராயிங் அறைக்குள் அழைத்துச் சென்றவள்,

“உன்னோட மனதில் என்ன கேள்வி இருக்கு என்று எனக்கு தெரியாது தென்றல்.. ஆனால் நீ கேட்ட ஸ்டேடஸ் என்ற வார்த்தைக்கு என்னோட பதில் இதுதான்.. என்னிடம் இல்லாதது என்று எதுவும் இல்ல.. பணம், அதிகாரம் எல்லாவற்றிற்கும் நான் ஒருவன் மட்டுமே ராஜா.. அனால் என்னிடம் இல்லாத ஒரு விலைமதிப்பற்ற ஒரு செல்வம் உன்னிடம் இருக்கிறது..” என்று அவன் பொறுமையாக சொல்லவும் அவனின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தாள் தென்றல்.. “புன்னகை..” என்று கூறியவனின் முகம் இறுகிக்கிடந்தது.. “இந்த வரைபடத்தை நான் கோபத்தில் தான் வரைந்தேன்.. ஆனால் அந்த கோபத்தில் கூட உன்னோட புன்னகை ரொம்ப அழகாக இருக்கிறது பார்..” என்று அவன் அந்த வரைபடத்தை அவளுக்கு காட்டினான்..

அவன் கைகாட்டிய திசையில் தன்னுடைய பார்வையைச் செலுத்திய தென்றல் திகைத்துப் போய் நின்றாள்.. அவன் கட்டிய திசை அவளின் புகைப்படமே இருந்தது.. அவனின் கைவண்ணத்தில் அவளின் கர்வப்புன்னகையைத் தாங்கிய வண்ணம் இருந்த அவளின் புகைப்படத்தைப் பார்த்த தென்றல் திகைத்துப்போய் நின்றாள்..

அந்த திகைப்பில் இருந்து வெளியே வந்தவள், அந்த பென்சில் டிராயிங் பார்த்து, ‘இது எங்களின் முதல் சந்திப்பு..’ என்று நினைத்தவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க, “எனக்கு கோபம் அதிகமாக வரும் தென்றல்.. அந்த கோபத்தைக் கட்டுப்படுத்த நான் இப்படி வரைவேன்..” என்று அவளுக்கு பதில் சொன்னவன்,

“இப்பொழுது ஒன்று மட்டும் சொல்கிறேன்.. என்னோட காயங்களுக்கு நீ மட்டும் தான் வேண்டும்.. பணம், பதவி, அதிகாரம் எல்லாம் இருக்கும் மனோரஞ்சனைப் பார்த்து நீ பயப்படவே இல்ல.. அதே மனோவாக இப்பொழுதும் என்னை நினைத்துக்கொள்.. என்னிடம் மாற்றம் வரும் பொழுது நானே உன்னிடம் வந்து சொல்கிறேன்.. அதுவரை நமது பயணம் இப்படியே தொடரட்டும்..” என்றவன் தொடர்ந்தான்..

“பணத்தால் நமக்கு இடையில் என்று விரிசல் வராது தென்றல்..” என்று அவன் சொல்லவே, “அப்படி வந்தால்..?!” என்று கேட்டாள் தென்றல்.. “அப்படி வந்தால் நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு கட்டுப்படுகிறேன்..” என்று அவன் சொல்ல, “இதில் மாற்றம் வராதே..” என்று அவனை நம்பாமல் கேட்டாள் தென்றல்..

அவளின் முகத்தைப் பார்த்த மனோ, “இல்ல இதில் மாற்றம் வராது..” என்று அழுத்தமாக சொல்லவே, “சரி வாங்க போலாம்..” என்று கூறியவள், “இந்த வரைபடம் இங்கேயே இருக்கட்டும்..” என்று சொல்லிவிட்டு அவனின் அறைவிட்டு வெளியே சென்றாள்..

அந்த வரைபடம் அவளுக்கு உணர்த்திய ஒரே செய்தி, ‘மனோ தன்னைக் காதலிக்கிறான்..’ என்று உணர்ந்தவள், ;இனி நடப்பவை அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும்.. அவனின் மனமாற்றம் வரையில் காத்திருப்போம்’ என்ற முடிவோடு சென்றாள்.. அடுத்தடுத்த வேலைகள அனைத்தும் சரியாக நடக்க அவர்களின் திருமண நாளும் அழகாக விடிந்தது..

கோவையில் இருக்கும் பெரிய மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்தது.. வெளியே ரோஜா பூவின் மனோரஞ்சன் – இளந்தென்றல் என்று மணமக்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது..

அந்த மண்டபம் முழுக்க முழுக்க பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்திருக்க வந்தவர்களை வரவேற்று அமரவைத்துக் கொண்டிருந்தார் ராஜசேகர்.. மற்றவர்கள் அனைவரும் அங்கும் இங்கும் சென்று தன்னுடைய வேலைகளைப் பார்க்க மணமேடையில் பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் மனோரஞ்சன்..

திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பெரிய பெரிய கோடிஸ்வரர்கள் என்பதால் தென்றல் பக்கம் இருந்தவர்கள் கொஞ்சம் விலகி நிற்க, குழந்தைகள் அதெல்லாம் கண்டுக்கொள்ளவே இல்ல..

மனோரஞ்சன் அருகில் சென்ற ராகுல், “மாமா நீங்க பட்டுவேட்டி சட்டையில் சூப்பராக இருக்கீங்க..” என்று சொல்ல, “நான் நல்லாவே இல்லையா..” என்று ராகுலை வம்பிற்கு இழுத்தான் ரிஷி..

அவனை நிமிர்ந்து பார்த்த ராகுல், “உங்களுக்கு இன்னைக்கு திருமணம் இல்லையே.. நீங்க எதுக்கு பட்டுவேட்டி சட்டை போட்டிருக்கீங்க.. இருங்க நான் சாரு அக்காகிட்ட சொல்கிறேன்..” என்று சொல்ல, “டேய் போதும்டா அது ஒன்னு போதும் அவள் என்னை வாங்கு வாங்கு என்று வாங்க..” என்று சொல்ல, “சரி..” என்று சிரித்தான் ராகுல்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நல்ல விலை உயர்ந்த துணிகளை எடுத்துக் கொடுத்திருந்தான் மனோ.. அவனுக்கு அவர்கள் ஏழ்மை தெரியவே இல்லை.. அவர்கள் தென்றல் மீது வைத்திருக்கும் பாசம் பெரிதாக தெரிந்தது.. அவன் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க, “பொண்ணை அழைத்துட்டு வாங்க..” என்று குரல் கொடுத்தார் ஐயர்..

மணமகளின் அறையில் இருந்து தென்றலை அழைத்து வந்தனர்.. அப்பொழுது அவள் வரும் திசையைப் பார்த்துக் கொண்டே ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான் மனோ.. மயில் பச்சை கலரில் பட்டுடுத்தி, தலை முழுக்க மல்லிகை பூ சூடுயவள் கண்ணுக்கு மையிட்டு முகத்தில் மூக்குத்தி மின்ன உதட்டில் சின்ன புன்னகை அரும்ப அளவான நகைகளை அணிந்துக்கொண்டு குனிந்ததலை நிமிராமல் மணமேடை ஏறியவளை அணுஅணுவாக ரசித்தான் மனோ..

மணமேடையில் அவனின் அருகில் வந்து அவள் அமரும் வரையில் அவள் தன்னைப் பார்க்கவே இல்லை என்பதில் அவனின் மனதிற்குள் வருத்தம் சூழ்ந்தது.. அவனின் அருகில் வந்து அமர்ந்த தென்றல் அவனிடம், “கொஞ்சம் சிரித்தால் என்ன முத்தா உதிர்ந்து போகும்..?” என்று கேட்டதும் அவளைப் பார்த்தான் மனோ..

இதுவரை அவள் தன்னைப் பார்க்கவே இல்லை என்ற வருத்தம் எல்லாம் மறைந்து போக, ‘இவள் எப்பொழுது என்னைப் பார்த்தாள்..?’ என்ற கேள்வியே அவனின் மனதில் தோன்றியது.. அதில் அவனின் மனம் கர்வம் கொண்டது..

“கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்று கூறிய ஐயர் அவனின் கையில் மாங்கல்யத்தை கொடுக்க அதை வாங்கிய மனோ, ‘என்னோட தென்றலை எக்காரணம் கொண்டு என்னிடமிருந்து பிரித்துவிடாதே கடவுளே.. நாங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும்..’ என்று மனதார வேண்டிக்கொண்டு அவளின் கழுத்தில் அவன் தாலியைக் கட்ட,

‘என்னோட மனோ என்றும் என்னோடு இருக்க வேண்டும்.. என்னை அவரிடமிருந்து பிரித்துவிட்டாதே.. இந்த பந்தம் இன்று போல் என்று தொடரவேண்டும்..’ என்ற வேண்டுதலுடன் அவன் கட்டிய தாலியை தலைகுனிந்து ஏற்றாள் தென்றல்.. பெரியவர்கள் அர்ச்சதைதூவி அவர்களை வாழ்த்த்தினர்..

அவளுக்கு மூன்று முடிச்சையும் அவனே போட்டு அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் இட அப்பொழுது அவளின் முகத்தைப் பார்த்த மனோவின் மனம் நிறைந்தது..

அவளின் கண்களில் அவனின் மீதான காதலை வெளிபடுத்திய தென்றல் அவளின் இதழ்களில் புன்னகையை அழகாக மலரவிட அதைப் பார்த்த மனோவின் மனம் சந்தோசம் கொள்ள அவர்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தனர்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top