• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2

அவள் நிற்பதை பார்த்து புரியாமல் நின்ற மனோ அவளின் கேள்வி புரிய, “எனக்கு கண்ணு இரண்டும் நல்லாவே இருக்கிறது.. உனக்கு தான் பைத்தியம் கிளம்பிடுச்சு போல..” என்று அவன் பதில் கூறவே கோபத்தில் அவனை முறைத்தாள் தென்றல்..

“ஆமா எனக்குதான் பைத்தியம் நான்தான் வேண்டுமென்றே உன்னோட வண்டியின் குறுக்கே வந்து விழுந்தேன் பாரு.. செய்வது ஃபிராடு தனம் இதில் இவனுங்க எல்லாம் நியாயம் பேச வந்துட்டாங்க..” என்று அவளும் அவனை மரியாதை இல்லாமல் பேசினாள்..

பிரதாப்போ தென்றலையும், மனோவையும் மாறிமாறிப் பார்த்தான்.. அவனுக்கு தெரியும் தென்றலுக்கு எப்பொழுதும் கோபத்தைப் பிடித்து வைக்க தெரியாது.. கோபம் வந்தால் சண்டை போடுவாள் ஆனால் அடுத்த நொடியே அனைத்தையும் மறந்து விடுவாள்..

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் மனோவைப் பார்த்ததும், ‘இந்த அண்ணா என்ன செய்ய போறாங்களோ தெரியலையே..?!’ என்று மனதிற்குள் நினைத்தவனின் பார்வை மனோவை பயத்துடனே பார்த்தது..

அவள் தன்னை மரியாதை இல்லாமல் பேசுவதைக் கவனிக்காதவன் அவளைப் பார்வையால் அளந்தான்.. பிறது தன் மனதிற்குள், ‘இவள் எதுக்கு பழைய படத்தில் வரும் விஜயசாந்தி ரேஞ்சில் நிற்கிறாள்..?!’ என்று யோசிக்க,

அவனின் மனமோ, ‘டேய் மடையா இப்போ உனக்கு அவள் விஜயசாந்தி ரேஞ்சில் நிற்பதா முக்கியம்..?! உன்னோட கார் கண்ணாடியை எதுக்கு உடைத்தாள் என்று கேளுடா..’ என்று சொல்ல அவளைப் பார்த்தவனுக்கு, ‘இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா..?’ என்றே தோன்றியது..

“ஏய் இப்பொழுது எதற்கு கார் கண்ணாடியை உடைத்தாய்..?!” என்று கேட்டவனின் குரலில் அதிகாரம் அதிகமாகவே வெளிப்பட்டது..

அவனின் குரலில் அதிகாரத்தை நொடியில் கண்டுக்கொண்ட தென்றல், “என்ன ரொம்ப அதிகாரமாக கேட்கிறாய்.. ஆமா நான் தான் உடைத்தேன்.. ஒன்வே என்பது தெரியாமல் நீ வந்து என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டு எதுவும் தெரியாதது போல போவ.. நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா..?!” என்று கேட்டாள்..

அவள் தெனாவெட்டாக நிற்பதைப் பார்த்தவன், ‘எனக்கு முன்னாடி என்னோட எதிரிங்க கூட நடுங்குவாங்க.. இவள் பாரு என்ன தெனாவெட்டாக நிற்கிறாள்..?!’ என்று மனதில் நினைத்தவன்,

அவளின் பேச்சைக் கேட்ட மனோ கொஞ்சம் கூட அதிராமல், “அதுக்கு என்னோட கார் கண்ணாடியை உடைப்பாயா..? அதைப் பார்த்துவிட்டு நான் சும்மா போகணும் என்று சொல்கிறாயா..? இதை யார் சரி செய்வது..?! அதற்கு ஏற்படும் செலவை யார் ஏற்பது..?!” என்று கேட்டதும்,

அவனைப் பார்த்த தென்றலுக்கு கோபம் எல்லை கடக்க, “உன்னோட கார் கண்ணாடி உடைந்தது என்று இந்த குதிக் குதிக்கிறீயே..? நீ இடித்த இடியில் நான் பரலோகம் போன எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நீயா வந்து பதில் சொல்வாய்..? இல்ல என்னோட இழப்பை சரி செய்வாயா..?” என்று கோபத்தில் கேட்டாள் தென்றல்..

அவளின் வார்த்தைகளைக் கேட்ட பிரதாப், ‘தென்றலுக்கு வீடு மட்டும் தானே இருக்கிறது.. அங்கே யார் இருக்காங்க.. அதுதான் யாருமே இல்லையே..’ என்று யோசித்தவன், ‘என்னோட தென்றல் இப்படியெல்லாம் பேச மாட்டாளே..?!’ என்று யோசித்துக் கொண்டே அங்கே நடப்பதைக் கவனித்தான்..

இப்பொழுதும் அவளின் பக்கம் இருக்கும் நியாயம் மனோவிற்குப் புரிந்தாலும் கூட, ‘இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருப்பதும் ஒன்று தான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்..’ என்று நினைத்த மனோ,

“நீ சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனால் இப்பொழுது என்னோட கார் கண்ணாடிக்கு என்ன பதில்..?!” என்று இடது புருவம் உயர்த்தி அவளைப் பார்த்துக் கேட்டான் மனோ..

அதற்குள் அங்கேகூடி இருந்த கூட்டத்தைக் கண்டு அங்கே வந்த ட்ராபிக் போலீஸ், “இங்கே என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், “இவன் ஒன்வே ல வந்து என்னை இடித்து கீழே தள்ளிவிட்டு தப்பிக்க பார்த்தான்.. அதுதான் கார் கண்ணாடியை உடைத்தேன்..” என்று சொல்ல,

‘நான் எப்பொழுது ராங்கா வந்தேன்..?! இது என்னடா காலையில் ஒரே ரோதனையாப் போச்சு..’ என்று மனதினுள் பேசிய மனோவின் காதில் அவள் மரியாதை இல்லாமல் பேசுவது கேட்டதும் கோபத்தோடு அவளின் பக்கம் திரும்பினான்..

அவள் சொன்னதைக் கேட்டவன், “என்ன அவன் இவன் என்றெல்லாம் பேசுகிறாய்..?! இன்னொரு முறை மரியாதை இல்லாமல் பேசினால் இங்கு நடப்பதே வேற.. பொண்ணு என்பதால் பொறுமையாக நின்று பேசுகிறேன்..” என்று கோபத்தில் கத்தினான்..

அவன் பேசுவதைக் கேட்ட தென்றல், “உனக்கு மரியாதை ரொம்ப முக்கியமோ..? முதலில் டயலாக்கை மாற்றுங்க.. இது எல்லாம் தேஞ்சி போன ரெக்கார்டு..” என்று சாதாரணமாக சொல்ல,

‘இவள் யாரைச் சொல்கிறாள்..?!’ என்று புரியாமல் திரும்பிப் பார்த்த டிராபிக் போலீஸ் அங்கே நின்று ருத்ர தாண்டவம் ஆடிய மனோவைப் பார்த்துவிட்டு, “சார் அந்த பொண்ணு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நீங்க கிளம்புங்க..” என்று சொல்ல,

அதுவரை அவனிடம் சண்டைக் கட்டிக் கொண்டிருந்த தென்றல், “என்ன சார் நீங்க அவனைக் கிளம்ப சொல்றீங்க.. இப்பொழுது அவனுக்கு நீங்க பைன் போடல உங்களின் மேல் நான் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியது வரும்..” என்று சொல்ல, மனோ அவளைப் பார்த்த வண்ணம் வண்டியில் சாய்ந்து நின்றான்..

அவருக்கு கோபம் வந்ததும், “நீயெல்லாம் என்ன பொண்ணு மாதிரியா இருக்க..?! இப்படி பஜாரி மாதிரி ரோட்டில் நின்று கத்துகிறாய்..? அவர் யார் என்று உனக்கு தெரியுமா..?!” என்று கேட்டதும்,

“தப்பு செய்ததை தட்டிக் கேட்டால் நான் பஜாரியா..?! பரவல்ல அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்ல.. இப்பொழுது அவனுக்கு நீங்க பைன் போடுவீங்களா இல்ல மாட்டிங்களா..?!” என்று கேட்டதும் அதுவரையில் பொறுமையாக இருந்த மனோவிற்கு கோபம் வர, அவளின் அருகில் வேகமாகச் சென்றவன்,

“என்னடி வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இல்லாமல் பேசுகிறாய்..?!” என்று தென்றலின் கன்னத்தில் ‘பளார்..’ என்று ஒன்று விட்டான்.. இதை அங்கே யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. பிரதாப் அதிர்வில் அப்படியே நின்றான்.. அவளை அடித்ததற்கு எல்லாம் அவன் கவலைபாடவே இல்லை..

“நீயெல்லாம் ஒரு பொண்ணு..?!” என்று மனோ சொன்ன வார்த்தை தென்றலின் மனதில் முள்ளேன்று தைத்தது.. அவளை அடித்தவன் உடனே போலீஸ்காரர் பக்கம் திரும்பி,

“காலையில் யார் மூஞ்சியில் முழித்தேனோ..? எல்லாம் தண்ட செலவு.. இந்தாங்க உங்களோட பைன்..” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.. ‘அவன் இதுவரையில் செய்யாத குற்றத்திற்கு தண்டனை வாங்கியதே கிடையாது..’ அந்த கோபத்தில் அவனின் முகம் இறுகியது..

மற்றொன்று என்னவென்றால் தன்னோட தகுதிக்கு அவளிடம் நேருக்கு நேர் மோதியது தன்னோட தன்மானத்திற்கே இழுக்கு என்று நினைத்தான்..

அவன் காரின் அருகில் போகும் வரையில் அமைதியாக நின்ற தென்றல், “ஹலோ..” என்று சொடக்குப் போட்டுக் கூப்பிட நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான் மனோ..

அவனின் அருகில் சென்றவள், “சத்தியமா நீ நல்ல முகத்தில் முழித்திருக்க மாட்டாய்.. இந்த உன்னோட கார் கண்ணாடிக்கு பணம்..” என்று அவனின் கையில் கொடுத்தவள்,

“உனக்கும் எனக்கும் முதல் கணக்கு பைசல் ஆகிவிட்டது.. ஆனால் என்னை அடித்த கணக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது மிஸ்டர்.. ஒரு பொண்ணு என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் என்னை அடித்துவிட்டு ஸாரி கூட கேட்காமல் போகிறாய் இல்ல.. இதுக்கு உனக்கு கண்டிப்பாக தண்டனை இருக்கு..” என்றவள் தொடர்ந்து..

“அதை நான் கொடுக்க மாட்டேன்.. எனக்கு இந்த பழிக்கு பழி வாங்கும் எண்ணம் எல்லாம் வரவே வராது.. ஆனால் இது இத்தோட முடிந்தது என்று மட்டும் நினைக்காதே..” என்றவள் அவனைப் பார்த்து கர்வமாக புன்னகைத்தாள்..

“தென்றல் மேல கைவச்சதுக்கு நீ அனுபவிப்படா..” என்று கூறியவள் தனது ஸ்கூட்டியை எடுக்க அவளின் பின்னோடு ஏறியமர்ந்தான் பிரதாப்..

அவளின் மந்தகாசமான புன்னகை அவனின் மனதை ஏதோ செய்தது.. அவள் சென்றதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் களைந்து செல்ல, தனது காரை எடுத்துக் கொண்டு தனது வழியில் சென்றான் மனோ..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் ஸ்கூட்டியை சீரான வேகத்தில் செலுத்த அவளின் பின்னாடி அமர்ந்திருந்த பிரதாப், “ஏன் தென்றல் அவனை அந்த வாங்கு வாங்கினாய்.. அது என்ன பரலோகம் போனால் உன்னோட குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது என்றெல்லாம் கேட்டாய்..?!” என்று கேட்டான் பிரதாப்..

பிரதாப் கேள்வியைப் புரிந்து சிரித்த தென்றல், “அடப்பாவி நான் செத்துப்போன நீயெல்லாம் என்னை தேடவே மாட்டாயா..?!” என்றவள் குறும்பாகக் கேட்டதும் அவளின் குரலில் இருந்த குறும்பைப் புரிந்துக் கொண்ட பிரதாப்,

“ஹப்பாடி தொல்லை ஒழிந்தது என்று நிம்மதியாக இருப்பேன்.. ஏன் தெரியுமா என்னோட அப்பா என்னை டைபிங் கிளாஸ் அனுப்ப மாட்டார்.. காலையில் தூக்கம் கெடவே கெடாது.. எங்கும் ஜாலி எதிலும் ஜாலி..” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்..

அவனின் மகிழ்ச்சி கண்டு சிரித்தவள், “நான் செத்தா இத்தனை சந்தோசம் என்று தெரிந்த பிறகு சாவை பற்றி நினைப்பேன் என்று நினைக்காதே.. உங்களின் பாசம் இல்லாமல் தென்றலால் இருக்க முடியாது.. சோ சாக மாட்டேன்.. சாவதற்கு முயற்சிக்கவே மாட்டேன்.. எங்கும் கவனம் எதிலும் கவனம்..” என்று அவனைப் போலவே அவள் மகிழ்ச்சியுடன் கூறினாள்..

அவளின் பின்னோடு அமர்ந்திருந்த பிரதாப், “டேய் உனக்கு ஆப்பு யாரும் வைக்க வேண்டாம்.. உன்னோட வாய் ஒன்றே போதும்..” என்று புலம்ப, வாய்விட்டுச் சிரித்த வண்ணம் வண்டியை அனுவின் வீட்டின் முன் நிறுத்தினாள் தென்றல்..

அவள் வண்டியை நிறுத்தியதும் அந்த இடத்தைப் பார்த்த பிரதாப், “ஹைய்யா நிவாஸ் வீட்டுக்கு வந்துவிட்டோம்..” என்று தன்னோட மனதின் மகிழ்ச்சியைக் கூறியவன், வண்டியை விட்டு இறங்க வண்டியைப் பார்க் செய்துவிட்டு அனுவின் வீட்டை நோக்கி இருவரும் நடக்க ஆரமித்தனர்..

“தென்றல் வரும் பொழுது அவனை பழிவாங்குவது போல பேசினாயே.. நீ நிஜமாகவே அவனைப் பழிவாங்க போகிறாயா..?” என்று கேட்டான்..

அவனைப் பார்த்து சிரித்த தென்றல், “அதெல்லாம் ஒரு கோபத்தில் வரும் வார்த்தை.. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டால் இந்த நிமிஷத்தின் நிம்மதி போய்விடும் பிரதாப்..” என்று சொல்ல,

“இந்த காலத்தில் அரைபைத்தியம் எல்லாம் கருத்து சொல்லுது தாங்க முடியலடா பெருமாளே..” என்று அவன் சிரிக்காமல் சொல்ல, அவன் கூறிய அர்த்தம் புரியும் வரை அமைதியாக வந்த தென்றல் அவன் கூறிய வாக்கியத்தின் முழு அர்த்தம் புரிந்ததும், “டேய் மகனே நான் அரை மெண்டலா..?” என்று அவனைத் துரத்த ஆரமித்தாள். அவளின் கைகளில் சிக்காமல் ஓடினான் பிரதாப்..

அவள் அப்படி பேசவும் காரணம் இருக்கிறது குழந்தைகள் முன்னாடி நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து பின்நாளில் பெரிய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்பதே..!

தனது முழு கோபத்தையும் தன்னுடைய காரின் வேகத்தில் காட்டினான் மனோ.. அவனின் மனம் செந்தணல் போல எரிந்தது.. அவன் இதுவரை இப்படி பட்ட ஒரு பெண்ணை அவனின் வாழ்வில் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம்.. தினமும் அவன் பல பெண்களைக் கடந்து தான் வருகிறான்.. ஆனால் அப்பொழுது எல்லாம் ஏற்படாத கோபம் அவளின் மேல் இன்று தோன்றியது..

அவனின் பார்வை அந்த உடைந்த கண்ணாடியைப் பார்க்க அதில் அவள் தன்னிடம் பேசிய வார்த்தைகளும் அதற்கு தான் கொடுத்த பதிலும் கடைசியாக அவள் செய்த காரியமும் அவனின் மனதில் நன்றாக பதிந்து போனது..

அதுவும் அவளின் முகத்தில் தோன்றிய கர்வபுன்னகை அவனின் மனதில் மாறாத ஒரு ஓவியமாக பதிந்ததை அவன் கவனிக்கவே இல்லை அதற்கு அவனின் மனது அவனின் புன்னகையை ஓவியம் என்று வரைந்தாலும், அவனின் கோபம் அவனின் கண்ணை மறைத்தது..

அவனின் அலுவலகம் வந்ததும் வழியில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நிறுவனத்தின் முதலாளி என்ற எண்ணத்தை மட்டும் மனதில் தேக்கி அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான் மனோரஞ்சன்..

அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் அவனுக்கு காலை வணக்கம் செலுத்த அதை தலையசைத்துப் பெற்றுக் கொண்டவன் அவனின் அறைக்குள் சென்றான்..

அவன் சென்றதும் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பிரபா, “என்னடா கடுவன் பூனை செம கடுப்பில் போகிறது..” என்று கேட்டதும், எதற்கோ வெளியே வந்த மனோவின் காதுகளில் பிரபா பேசிய வார்த்தைகள் கேட்க அதை நின்று கவனிக்க ஆரமித்தான்..

அவன் தங்களைக் கவனிப்பது தெரியாமல் அவளின் அருகில் அமர்ந்திருந்த ஆனந்த், “அது என்னைக்கு தான் சிரிச்ச முகமாக வந்ததை நீ பார்த்த.. அவனுக்கு தான் சிரிப்பே வாராதே.. ஆனால் இவனைக் கட்டிக்க போகிறவள் கண்டிப்பாக போன ஜென்மத்தில் ரொம்ப பாவம் செய்தவளாகத்தான் இருப்பாள்..” என்று அவளுக்கு சிரிப்புடன் நக்கலையும் கலந்து பதில் சொல்ல, அவனின் முன்னாடி கோபத்தின் மொத்த வடிவமாக நின்றிருந்தான் மனோ..

அவனை அங்கே எதிர்பார்க்காத ஆனந்த் அவனைப் பார்த்தும் பயத்துடன் எழுந்து நிற்க அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த பிரபாவின் புன்னகை அவளின் உதட்டிலேயே உறைந்து போக மனோவைப் பயத்தோடு பார்த்தாள்..

“உங்கள் இருவருக்கும் இனிமேல் இங்கே வேலை கிடையாது.. என்னோட வாழ்க்கையில் வரும் பொண்ணு புண்ணியம் பண்ணிருக்களா..? இல்ல பாவம் பண்ணிருக்களா என்பதை ஆராய்ச்சி பண்ண நான் உனக்கு சம்பளம் தரவில்லை..

“ஒழுங்காக வேலைப் பார்க்கும் எண்ணம் இருந்தால் இங்கே இருந்து வேலையைப் பாருங்க.. இல்ல எங்களால் அது முடியாது என்று நினைத்தால் இதுதான் வழி இப்படியே நீங்கள் இருவரும் கிளம்பலாம்..” என்று சொல்ல இருவரும் தங்கள் பேசியது தவறு என்றுணர்ந்து அமைதியாக நிற்க, மீண்டும் தனது அறைக்கு சென்றவன்,

“காலையில் இவளுடன் சண்டை போட்டுவிட்டு வந்ததும் போதும் என்னோட நிம்மதியே மொத்தமாகப் போச்சு.. சரியான ராட்சசி..” என்று திட்டிக்கொண்டே அவளின் புன்னகை முகத்தை அப்படியே வரைந்தான்..

அவனுக்கு இது ஒரு பழக்கம் தனக்கு யார் மீதாவது அதிக கோபம் இருந்தால் அந்த கோபத்திலே அவர்கள் முகத்தை வரைவான்.. அதில் அவர்கள் முகம் அச்சில் வார்த்தது போல அப்படியே வரைவான்..

அவன் வரைந்து முடிக்கும் நொடி அவனின் கோபம் முழுவதும் விலகி அதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றுவதைக் கண்டு அடுத்தடுத்த வேளைகளில் ஈடுபடுவான்..

இப்பொழுது அவனின் கோபத்தில் அவனின் புன்னகை முகம் அவனின் கைவண்ணத்தில் உயிர் பெற அவளின் முகத்தை அழகாக வரைந்து முடித்தவன், “இவளின் முகத்தில் இருக்கும் புன்னகை ரொம்ப அழகாக இருக்கிறது..” என்று தன்னை மறந்து கூறியவன் அவனின் மனம் வெளிபடுத்திய செய்தியைக் கவனிக்க மறந்து,

“உன்னோட உதட்டில் இந்த புன்னகை எப்படி நிலையாக நிற்கிறது என்று நானும் பார்க்கிறேன் புயல்..” என்று கோபத்தில் அந்த ஓவியத்தின் முன்னாடி நின்று பேசிக் கொண்டிருந்தான்..

‘புயல்..’ தென்றலுக்கு அவன் வைத்த செல்ல பெயர்.. ஆம் அவனின் வாழ்க்கையில் புயல் போல நுழைந்துவிட்டாள்.. அந்த புயல் அவனின் வாழ்க்கையில் புயலாக மாறுவாளா..?! இல்லை பூந்தென்றலாக மாறுவாளா..? இது இனி நடப்பதை பொறுத்தே இருக்கிறது..
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
தென்றல் அம்மிணி என்ன இப்படி அந்த மனோவை டார் டாராக கிழிச்சு ரிவென்ச் எடுக்கிறிங்க உடைச்ச கண்ணாடிக்கு பணம் வேற நீலாம்பரி மாதிரி ஆக்சன் காட்டிட்டு அடுத்த செகண்டே ஜெனிலியா மாதிரி ஆகிட்டிங்க

அடிக்கிற கைதான் அணைக்கும் மனோ பிரதர் டோன்ட் ஒரிWrite your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top