• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 34

மனோவின் வீட்டில் இருந்து வந்த சூர்யா – அனு இருவரையும் பார்த்தார்.. இருவரின் முகமும் தெளிவாக இல்லாததைக் கண்டவர், “கோமதி நம்ம ஊருக்குப் போகலாம்..” என்று சொல்ல அவரும் சரியென தலையசைக்க வீட்டின் உள்ளே வந்த மகனையும், மருமகளையும் பார்த்த கோமதி, “சூர்யா நாங்க ஊருக்குப் போகிறோம்..” என்று சொன்னதும் இருவருக்கும் அதிர்ச்சியானது..

அவர்கள் இருவரையும் பார்த்த சூர்யா, “அப்பா என்ன இப்படி சொல்றீங்க..?” என்று கேட்டதும், “இல்லப்பா நாங்க கிளம்புகிறோம்.. நீங்க இருவரும் அங்கே வந்து என்னை பாருங்க.. வரும் பொழுது சந்தோசமாக வரணும்..” என்று கூறியவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்..

அவர் சென்றதும் அணுவைப் பார்த்த சூர்யா, “ஸாரி அனு..” என்று சொல்லவும் சூர்யாவைப் பார்த்த அனு, “எனக்கு எதுக்கு ஸாரி..?” என்று கேட்டதும், “என்னால் தானே எல்லாம்..” என்று கூறிய சூர்யாவை அமைதியாகப் பார்த்தாள் அனு..

பிறகு, “மாமா நீங்க குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம்.. நீங்க மனோகிட்ட மன்னிப்பு கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோசம்.. இருந்தாலும் மனசில் கொஞ்சம் வலி இருக்கு.. அது மறையும்வரை கொஞ்சம் காத்திருங்கள்..” என்று கூறிய அனு தனது அறைக்குள் சென்றாள்.. அவளையே பார்த்த சூர்யாவும் தன்னுடைய அறைக்குள் சென்றான்..

இருவரும் உண்மையை அறிந்து கொள்வதை விட்டுவிட்டு தங்களின் வாழ்க்கையில் இருக்கும் மனவலியை மறக்க முயற்சி செய்தனர்.. அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை தாமரை இலையில் பனித்துளி போல செல்லலானது..

தென்றலின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற நினைத்த மனோவின் மனம் சந்தோசத்தில் மகிழ்ந்தது.. தன்னுடைய பதினேழு வருட தேடலுக்கும் ஒரு விடை கிடைத்து போலவே இருந்தது.. அவன் எப்பொழுதும் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவளை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்தான்..

அவளுக்குள் மறைந்த காதலுக்கு உயிர் கொடுக்க எண்ணிய மனோவின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.. அவள் இதுவரை தன்னிடம் ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டு இன்றோடு மாற போகிறது..

அவள் எடுத்துவைத்திருந்த பதினேழு டைரியையை எடுத்து டிக்கியில் வைத்துவிட்டுக்கு வீட்டின் உள்ளே வந்தான் மனோ.. அவள் சாமி ரூமில் இருந்து வெளியே வருவதைப் பார்த்தவன், “தென்றல் நாம் இருவரும் இன்னைக்கு வெளியே போகிறோம்..” என்று கூறினான்..

அப்பொழுது அவனை நிமிர்ந்துப் பார்த்த தென்றல், “பாவா என்னை ஏமாற்றாமல் இருங்க.. அப்புறம் உங்களை என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..” என்று மிரட்டியவளைப் பார்த்து புன்னகைத்த மனோ, “பொய் சொல்லல வா நாம் வெளியேதான் போகிறோம்..” என்று அவளைப் பார்த்த மனோவின் கண்களில் சந்தோசம் நிறைந்து இருப்பதைப் பார்த்தவள்,

“பாவா உன்னோட ஆட்டத்துக்கு நான் வரல.. நீ எங்கையோ என்னை நாடு கடத்துவது போலவே இருக்கு..” என்று சந்தேகமாகக் கூறிய தென்றலின் கையைப்பிடித்து சுண்டியிழுக்க அவனின் மார்பில் வந்து விழுந்த தென்றலைப் பார்த்தவன்,

“எனக்கு என்னோட புயலின் ஆசையை நிறைவேற்றி வைக்கணும்.. சோ தென்றல் மேடம் உங்களுக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் டைம்.. சீக்கிரம் கிளம்பி வா..” என்று சொல்ல அவனின் முகத்தைப் பார்த்தாள்..

“இவரு கூப்பிட்டதும் நாங்க கிளம்பி வரணுமோ..?” என்று கேட்டதும், “என்னோட புயல் கிளம்பி வந்தே ஆகணும்..” என்று கூறிய மனோவைப் பார்த்த தென்றல், ‘பாவா என்னடி இப்படி ஆப்பு அடிக்கிறார்..?’ ஏறனு யோசித்தவள் தயாராகி கீழே வந்தாள்..

அவளின் முகத்தை புன்னகையோடு பார்த்த மனோ, ‘வாடிமகளே வா.. என்னிடம் உண்மையைச் சொல்லாமல் எத்தனை நாள் மறச்சிருப்ப..?! இப்போ நீயே வசமாக மாட்டினாயா..?’ என்று நினைத்த மனோ சென்று காரின் டிரைவிங் சீட்டில் அமர்ந்தான்..

அவனோடு காரில் ஏறிய தென்றல், “பாவா உங்களுக்கு இப்பொழுது பிடிவாதமும் அதிகமாகிட்டே போகுது..” என்று சொல்ல, “உன்னிடம் தானே பிடிவாதம் பிடிக்கிறேன்..” என்று கூறிய மனோ காரை எடுத்தான்..

அவன் காரை எடுத்தும் யோசனையில் ஆழ்ந்த தென்றலைப் பார்த்த மனோ, “தென்றல் ரொம்ப யோசனை செய்யாதே.. உன்னோட கேள்விக்கு எல்லாம் உன்னிடம் தான் பதில் இருக்கு..” என்று அவன் சொல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த தென்றல்,

“பாவா உங்களோட விளையாட்டை கொஞ்சம் நிறுத்துங்க..” என்றவள் சொல்ல, “இத்தனை நாள் நீ விளையாடிய பொழுது நல்ல இருந்ததா..?!” என்று கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் தென்றல்..

“என்னோட புருசனிடம் நான் விளையாடினேன்.. உன்னிடம் விளையாடாம நான் யாரிடம் விளையாட முடியும் பாவா..” என்று தலையை சரித்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள் தென்றல்..

அவளின் முகத்தைப் பார்த்த மனோ, “நீ என்னை பார்த்ததே இல்லையா தென்றல்..?” என்று கேட்டவன் காரை சீரான வேகத்தில் செலுத்த, “இல்லையே..” என்று கூறினாள்..

அவள் சிரிப்புடன் கூறிய மறுநொடியே அவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த மனோ, “உனக்கும் எனக்கும் சூர்யாவின் பிரச்சனைக்கும் விடை உன்னிடம் தான் இருக்கிறது..” என்று கூறிய மனோ காரை செலுத்த யோசிக்க ஆரம்பித்தாள் தென்றல்..

கொஞ்சநேரம் யோசித்த தென்றல், “அது எப்படியோ போகட்டும் பாவா நாம் இப்போ ஊட்டிதானே போகிறோம்..” என்று கேட்டதும் இல்லையென தலையசைத்த மனோவைப் பார்த்த தென்றல், “பாவா அப்போ நம்ம எங்கே போறோம்..?” என்று கேட்டதும், “தேனிக்கு போகிறோம்..” என்று சொல்லவும், “அங்கே எதுக்கு பாவா..?” என்று கேட்டாள்..

“ஹனிமூன் போறோம் போதுமா..?” என்று கேட்ட மனோவைப் பார்த்த தென்றல், “பாவா பாவா ப்ளீஸ் சொல்லுடா அங்கே எதுக்கு போகிறோம்..?” என்று கேட்டாள் தென்றல். அவன் பதில் சொல்லாமல் இருக்க, “சரிதான் போடா ரொம்பவே சஸ்பென்ஸ் கொடுக்கற..” என்று கூறியதும் அவன் எதுவும் பேசாமல் காரை செலுத்தினான்..

அன்று மதியம் இரண்டு மணிக்கு மேகமலையில் உள்ள தனது தேயிலை எஸ்டேட் உள்ளே நுழைந்தது கார்.. அது எஸ்டேட்டின் உள்ளே செல்ல செல்ல தென்றலின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.. அவளின் கண்களில் சந்தோசத்தைக் கண்ட மனோ, “இந்த இடத்திற்கு நீ முன்னாடியே வந்திருக்கிறாயா தென்றல்..” என்று கேட்டான்..

அவனின் முகத்தைப் பார்த்த தென்றல், “வந்திருக்கேன் பாவா எனக்கு எனக்கு ஏழு வயசு இருக்கும் பொழுது வந்திருக்கிறேன் ஷீலாம்மா கூட..” என்று கூறியவள் அந்த இடத்தை சுற்றிலும் பார்வையை சுழற்ற கண்ணுக்கு எட்டிய தூரம் முழுக்க பச்சை பசேல் என்று காட்சியளித்தது தேயிலை தோட்டங்கள்..

அந்த இடத்தில் முதல்முதலாக தென்றலை சந்தித்தான் மனோ.. அதுவும் அவனின் பத்தாம் ஆண்டு பிறந்தநாள் அன்று.. அன்று அவனின் அருகில் வந்து அமர்ந்து குழந்தை முகத்தோடு சிரித்த தென்றல், “நீ ஏன் அழுகிற..” என்று கேட்டதும், “இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்.. என்னோட அப்பா, அம்மா இருவரும் பிரிஞ்சிட்டாங்க.. எனக்கு யாருமே இல்ல..” என்று கூறிய மனோவைப் பார்த்தவள், “எனக்கும் தான் இல்ல நான் என்ன உன்னைப் போல அழுகவா செய்றேன்..” என்று கேட்டதும் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் பத்துவயது மனோ..

“உன்னோட பெயர் எனக்கு தெரியல.. என்னோட பெயர் இளந்தென்றல்.. ஆனா நீ அழதே.. உனக்கு புன்னகையின் முகவரியை நான்தான் தருவேன்.. என்னோட ஸ்மைல் எப்பொழுதும் உனக்காகத்தான்..” என்று கூறியவள்,

ஷீலாம்மா கூப்பிட்டதும் எழுந்தவள், “உனக்கு நான் டைரி அனுப்பிறேன்.. உன்னோட சோகத்தை எல்லாம் அதில் எழுது..” என்று கூறியவள் அவளின் கையில் இருந்த புது டைரியை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றாள்..

அடுத்து பத்து வருடத்திற்கு பிறகு ஊட்டியில் அவன் எப்பொழுதும் செல்லும் அந்த ஓடையின் அருகே ஒருநாள் அமர்ந்திருக்க அந்த இடத்திற்கு வந்த தென்றல், “ஹலோ சாரே என்ன இங்கே இருக்கீங்க..?” என்று கேட்டவள், “இப்படி தனியாக உட்காந்திருக்கீங்களே என்ன விஷயம்..?” என்று கேட்டாள்..

அவளின் முகத்தைப் பார்த்த மனோ, “உன்னிடம் சொன்னால் பிரச்சனை தீந்திருமா..?” என்று கேட்டதும் சிரித்த தென்றல், “தென்றலுக்கு கூடத்தான் உறைவிடம் இல்லை என்று சொல்றாங்க.. என்னோட பெயர் கூட தென்றல் தான் எனக்கு இன்னைக்கு உறைவிடம் இல்லைஎன்றாலும் ஒருநாள் எனக்கு ஒரு உறைவிடம் கிடைக்காமல் போய்விடுமா..?” என்று கூறியவள், “பிரச்சனையைச் சொல்லுங்க முடிந்தால் தீர்வு சொல்றேன்..” என்று சொல் அவன் அனைத்தும் சொல்ல,

“உங்க அப்பாவுக்கு ஒரு குடும்பம் தேவை.. அதுதான் அவர் ஒரு விதவை பெண்ணை திருமணம் செஞ்சிருக்கார்.. என்னைப் பொறுத்தவரை அந்த அம்மா இனிமேல் மகனுக்காகத்தான் உங்க அப்பா கூட வாழுவாங்க.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல்.. சோ உங்க அப்பா நல்லவர்.. ஆனால் அந்த குடும்பத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..” என்று கூறியவள், “நான் சொன்னதை கொஞ்சம் யோசிங்க பாஸ்..” என்று புன்னகையுடன் கூறியவள் அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றாள்..

மனோவின் மனதும் தென்றலின் மனதும் ஒரே நேரத்தில் கடந்த காலத்துக்கு சென்று திரும்பியது...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அதை கார் கடந்து செல்ல அந்த மலைகளின் மீது மிதந்து சென்ற மேகங்களைப் பார்த்த தென்றல் அந்த இடத்தில் உள்ள எழில் அழகுகளை ரசித்தவள் அந்த வீட்டை கண்டதும், “பாவா இந்த வீட்டில் ஒரு குட்டிப்பையன் மட்டும் இருந்தனே அவன் இப்போ எங்கே இருப்பான்..” என்று குறும்புடன் வேகமாகக் கேட்டாள்..

அவளின் அந்த கேள்வியில் அவளை நிமிர்ந்துப் பார்த்த மனோ, “அவனை எதற்கு தென்றல் கேட்கற..?” என்று கேட்டதும், “பாவம் பாவா அவன்.. அவனுக்கு அப்பா, அம்மா இருவரும் இல்ல.. அவனை இங்கே இருக்கும் ஒரு பெரிய மரத்துக்கு பக்கத்தில் தான் பார்த்தேன்..” என்று குறும்புடன் கூறியவள் கார் நின்றதும் காரைவிட்டு வேகமாக இறங்கியவள் அந்த இடத்தை தேடிசென்றாள்..

அவள் முன்னே செல்வதைப் பார்த்த மனோ, “ஏய் தென்றல் அவனை நீ மீண்டும் பார்க்க முடியுமா..?” என்று கேட்துக்கொண்டே காரைவிட்டு இறங்கினான் மனோ..

அவனின் கேள்வியில் நின்று அவனை திரும்பிப் பார்த்த தென்றல், “ஏன் முடியாது அவன் இங்கேதான் இருப்பான்.. என்னால் அவனைப் பார்க்க முடியும் பாவா..” என்று கூறிய தென்றலை பின்தொடர்ந்து அந்த இடத்துக்கு இருவரும் சென்றனர்.. அந்த வீட்டின் பின்னோடு செல்லும் சின்ன பாதையில் வேகமாக சென்ற தென்றலை புன்னகையோடு பின்தொடர்ந்தான் மனோ..

அவள் அந்த இடத்தை அடைய அந்த இடத்தில் இருந்த ஒரு சின்ன பாறையைப் பார்த்த தென்றல் பின்னோடு வந்த மனோவைப் பார்த்து, “இதுதான் அவன் நின்ற இடம் பாவா..” என்று கூறியவள் கண்களில் மகிழ்ச்சி போங்க மனோவின் கையைப்பிடித்து இழுத்து அந்த இடத்தில் நிறுத்தினாள்..

அந்த மரத்தின் மீது சாய்ந்து நின்ற மனோவின் மார்போடு சாய்ந்த தென்றல், “டேய் பிராடு இங்கே அழைத்துவர உனக்கு இத்தனை நாள் ஆச்சா..?” என்று சிரிப்புடன் கேட்டதும், “எனக்கு உன்னை தெரியாதுடி.. தெரிஞ்ச இத்தனை நாள் உன்னை நான் காயப்படுத்தி இருப்பேனா..?” என்று புன்னகை முகத்துடன் கேட்டான் மனோ.. அவளின் மனதிற்குள் புதைந்த காதல் மெல்ல மெல்ல மலர்ந்தது அவளின் இதயத்தின் அடி ஆழத்தில்..

“டேய் என்னை கண்டுபிடிக்க உனக்கு இத்தனை நாள் ஆச்சு இல்ல.. வருஷ வருஷம் எனது புன்னகையின் முகவரி என்று உனக்கு டைரி அனுப்பும் என்னை கண்டுபிடிக்க உனக்கு இத்தனை ஆனது..?” என்று கேட்டவளுக்கு, “நான்தான் இளந்தென்றல் என்று எப்படிடா கண்டுபிடிச்சே..” என்று கேட்டாள்..

அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்த மனோ, “நீ சொன்ன ஒரு வார்த்தை தாண்டி உன்னை எனக்கு அடையாளம் காட்டுச்சு ஆனால் ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது....” என்று சொல்ல, “என்ன வார்த்தை..?” என்று ஆவலுடன் கேட்டாள் தென்றல்

அவளின் கன்னத்தில் தனது விரலால் கோலமிட்ட மனோ, “தென்றலுக்கு உறைவிடம் இல்லை என்று தானே சொன்னாங்க.. அமையாது என்று யாரும் சொல்லலையே..” என்று அவள் போலவே சொல்லிக்காட்டிய மனோ,

“எனக்கு நீதான் தென்றலா என்ற சந்தேகம் இருந்தது.. அதுதான் உன்னிடம் அடிகடி சொல்வேன் இல்ல காதலை உன்னை போல மறைத்துவைக்க முடியாது என்று சொன்னேன்.. அடுத்து உன்னிடம் நிறைய பேசணும் தென்றல் என்று சொன்னதும் இதைதான்.. அடுத்து நீ எனக்கு முத்தம் கொடுத்தப்ப நீயும் என்னைப் போல தனிமையை உணர்ந்திருக்க என்று சொன்னதும் உன்னை கண்டுபிடிக்க சொன்னதுதான்..” என்று கூறினான்..

“பாவா அது நான் முதல்நாள் வேலைக்கு சேர்ந்த பொழுது பேசியது..” என்று கூறியபடியே அவனின் முகத்தைப் பார்த்த, “வேண்டும் என்றே சிரிக்காமல் இருந்ததும் என்னை திருமணம் செய்யத்தான் இல்ல..?” என்று கேட்டவள், “எனக்கு உன்னோட பெயர் தெரியாது பாவா.. உன்னோட புன்னகை இல்லாத முகம் என்னை பாதுச்சிது.. அதுதான் எனக்குள் காதல் வர வச்சது..” என்று கூறியவள்,

“நான்தான் சொன்னேனே நான் ஏதாவது சொல்லி நீ கிளம்பிப் போய்ட்ட நான் எப்படி உன்னை கண்டுபிடிக்க..?” என்று கேட்டான்.. அவனின் குரலில் அவ்வளவு சந்தோசம்.. தென்றலுக்கு மனதில் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது..

அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த தென்றல், “பாவா அப்போ நீ தானே ஊட்டியில் அந்த ஓடை அருகில் தனிமையில் அமர்ந்திருந்தது.. அப்போதானே நீ என்னை மறுபடியும் பார்த்தாய் அப்பொழுது நான் சொன்ன தீர்வு தான் நீ இதுவரை கடைபிடிக்கிறாயா..?!” என்று கேட்டதும் அவன் அமைதியாக அவளைப் பார்த்து புன்னகைக்க, “அந்த சந்திப்பில் நீ யார் என்றே எனக்கு தெரியாது பாவா..” என்று உண்மையைக் கூறியவள் தொடர்ந்தாள்..

“ரவிச்சந்திரன் அங்கிள் உன்னோட அப்பா.. ஆனால் அவருக்கு பிறந்த மகன் சூர்யா இல்ல.. சூர்யாவோட அப்பா கேசவன்.. நான் சொல்வது சரிதானே..?! அதனால் தான் உனக்கு அப்பா மேல கோபம் இல்ல..” என்று கேட்டாள்..

அவளின் முகத்தைப் பார்த்த மனோ, “எப்படி புயல் இப்படி எல்லாம் கலக்கற..?! ஆர் – ரவிசந்திரன். கே – கேசவன் கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி. சூர்யா. கோமதியம்மா ஒரு விடோ. அவங்களைத்தான் என்னோட அப்பா மறுமணம் செஞ்சாரு.. கேசவன் – கோமதி தம்பதிக்கு பிறந்து ரவிச்சந்திரன் – கோமதி தம்பதியினருக்கு மகனாக வளர்ந்தவன்.. அவனுக்கும் எனக்கும் மூன்று வருஷம் வித்தியாசம் போதுமா..?” என்று கேட்டவன் அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்..

அவளும் அவனின் அணைப்பில் மயங்கி நிற்க, “உனக்கு எப்போ உண்மை தெரியும் தென்றல்..” என்று கேட்டதும், “உன்னைப் பற்றி எனக்கு தெரியாது பாவா.. ஆனால் அன்னைக்கு உன்னோட அப்பா, அம்மா பற்றி சொன்ன பொழுது என்னை மறந்து நான் அழுதது உன்னை நான் கண்டுபிடிச்சிடேன் என்ற சந்தோசத்தில் தான்..” என்று கூறிய தென்றல்,

“நான் அனுப்பிய டைரியில் ஒரு பக்கம் கூட எழுதாமல் வச்சிருக்க அது என்னடா பண்ணுச்சு உன்ன..?” என்று கேட்டதும் மனம் விட்டு சிரித்த மனோ, “என்னோட செல்ல புயலே.. அது எல்லாம் ஒரே அட்ரஸ் இருந்து வரல.. ஆனால் உன்னோட ஒவ்வொரு டைரியும் எனக்கு டிசம்பர் 31ம் தேதி கிடைத்துவிடும்..” என்று கூறினான் மனோ..

அவன் கூறியதைக் கேட்டு சிரித்த தென்றல், “அது எல்லாம் ஷீலாம்மா அனுப்புவாங்க.. அவங்க வெளியூர் போகும் போது அவங்களிடம் கொடுத்து உங்க தாத்தா அட்ரஸ்க்கு அனுப்புவேன்.. ஆனால் பாவா உன்னையும், உன்னோட தாத்தாவையும் எனக்கு தெரியாது.. அப்புறம் நீ சொன்னதும் தான் எல்லாம் புரிஞ்சது..” என்று கூறினாள்..

தென்றலின் முகத்தைப் பார்த்து, “ ‘எனது புன்னகையின் முகவரி..’ என்று வரும் டைரியில் நான் என்ன எழுதுவது..? அப்படி எழுத என்னோட வாழ்க்கையில் என்ன நிகழ்வுகள் நடந்தது..? ஆனால் இனிமேல் உன்னோட டைரி முழுக்க எழுதிவிடுவேன்..” என்று கூறிய மனோ,

“இத்தனை நாளும் உண்மை சொல்லாமல் மறச்சு வச்சிருந்த இல்ல..” என்று கேட்டவன் அதற்கு தண்டனை வேண்டாமா..?” என்று கேட்டவன் தென்றலின் இதழை சிறை செய்தான்.. அவனின் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் தென்றல்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top