• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவனின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த தென்றல், ‘இவனுக்கு கடுவன்பூனை என்ற பெயர் செட்டே ஆகலையே..?! இவனை நானும் மூன்று முறையாக பார்க்கிறேன்.. ஆனால் இவன் சிரிக்கவே மாட்டானா..?! இவன் சிரித்தே நான் பார்த்ததே இல்ல.. சோ இவனுக்கு இரும்புமனிதன்..’ என்று தென்றல் தன்னுடைய சின்ன மூளையைக் கசக்கி அவனுக்கு நிக் நேம் வைத்தாள்..

அவனின் முன்னாடியே நின்று அவனுக்கே பெயர் வைக்கும் உன்னோட தைரியம் எனக்கு வாராது தென்றல்.. அவள் மெளனமாக இருப்பதை பார்த்த மனோ, “என்ன பேசாமல் நிற்கிறாய்..?! நீ மெளனமாக இருக்க மாட்டாயே என்ன விஷயம்.. என்ன இந்த வேலையை விட்டு போகலாம் என்று யோசிக்கிறாயா..?!” என்று கேட்டதும்,

“இல்ல சார்! நீங்க மரியாதை என்ன என்று கிளாஸ் எடுக்கிறேன் என்று சொன்னீங்க இல்ல.. அதுக்கு நீங்க பீஸ் கேட்பீங்களா..? இல்ல ப்ரீயா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல, அவனுக்கு கோபம் வந்தது..

“உன்னையெல்லாம் என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியல..” என்று அவன் கோபத்தில் சொல்ல, “அதுதான் தெரியல என்று நீங்களே சொல்லிட்டீங்க இல்ல.. வாராததை கட்டி இருக்க கூடாது சார்.. ப்ரீயாக அதோட வழியில் விட்டுவிட வேண்டும்..” என்று சொல்ல,

அவன் அவளை எரிப்பது போல பார்க்க, “சார் இந்த அனல் என்னை ஒண்ணுமே பண்ணது யென்ன நீங்க கோபத்தால் கொந்தளிப்பதால் மட்டும் நீங்க சிவபெருமான் ஆகவே முடியாது.. என்னோட பாலிசி கூட நக்கீரர் பாலிசி தான்..” என்று சொல்ல, “என்ன நக்கீரர் பாலிசி..” என்று கேட்டான் நம்ம மனோ..

“அதுதான் சார் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று அவள் சிரிக்காமல் சொல்ல அவனுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது.. அவள் சொல்வதைக் கேட்டு அவன் அவனாகவே இல்லை..

ஆனால் அவற்றை கவனிக்கும் நிலையில் அவன் இப்பொழுது இல்லை.. அவளை எப்படியாவது பழிவாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனதில் இருப்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான்..

அவனுக்கு எப்பொழுதும் தன்னிடம் நேருக்கு நேர் மோதுபவர்கள் பலவீனம் என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பான்.. அதேபோல தென்றலின் பலவீனம் என்ன என்பதையும் அறிந்து வைத்திருந்தான்.. என்ன என்று தானே யோசிக்கிறீங்க..?! அவள் ‘யாரும் இல்லாத ஒரு அநாதை..’ என்பதை அறிந்து வைத்திருந்தவன்,

“இத்தனை வாய் பேசுகிறாயே தென்றலுக்கு நிலையான உறைவிடம் கிடையாது என்று தெரிந்து தான் உனக்கு தென்றல் என்று பெயர் வைத்தார்களா..?!” என்று கேட்டதும் அவளின் மனம் வலித்தது..

அவனை ஒரு நொடி நிதானமாகப் பார்த்தவள், “தென்றலுக்கு உறைவிடம் இல்லை என்று தானே சொன்னாங்க.. அமையாது என்று யாரும் சொல்லவில்லையே.. நான் எங்கும் செல்லும் தென்றல் என்ற பெயர் வைத்திருந்தாலும், எனக்கு என்ற சில கட்டுபாடுகள் இருக்கிறது சார்..” என்று புன்னகையோடு கூறியவள்,

“நீங்களும் என்னை எப்படி எப்படியோ மடக்க பார்க்கிறீங்க.. ஓகே இங்கே வேலை செய்வது எனக்கு சாவலான ஒரு விஷயம் போல தெரிகிறது.. உங்களின் கணிப்புபடி நான் எத்தனை நாள் இங்கே தாக்குபிடிக்கிறேன் என்பதை நானே பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலையில் சேர்ந்தாள் தென்றல்..

மனோவிற்கு அவளின் மீது துளியும் நம்பிக்கை இல்லை.. வாய் பேசுபவர்கள் எல்லாம் வெட்டி வீரர்கள் என்பது அவன் நன்றாக அறிந்த விஷயம் என்பதால் இவளும் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று அவளிடம் வேலையை ஒப்படைத்தான்..

காலையில் அவளின் கேபினில் வந்து அமர்ந்தவள் அருகில் அமர்ந்திருந்த அனுவின் பக்கம் திரும்பி, “ஹாய் அனும்மா..” என்று சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்த அனு அவளின் முகத்தை ஆராய்ந்தாள்..

தென்றல் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த அனு, “கடுவன்பூனை உன்னை மட்டும் எப்படி கடிக்காமல் விட்டான்..” என்று கேட்டதும் அவளைப் பார்த்து சிரித்த தென்றல்,

“என்னடி கடுவன்பூனை என்று ஓல்ட் மாடல் பெயர் சொல்கிறாய்..?” என்று கேட்ட தென்றலைப் புரியாமல் பார்த்தாள் அனு..

“கடுவன்பூனை எனக்கு பிடிக்கல.. சோ நானே அவனுக்கு ஒரு நல்ல பெயர் வைத்துவிட்டேன்..” என்று சொல்ல, “என்னடி பெயர்..?!” என்று ஆர்வத்தில் கேட்டாள் அனு..

“இரும்புமனிதன் டோட்டடோயின்...” என்று கூறியவளைப் பார்த்து சிரிக்க ஆரமித்தாள் அனு.. அவள் சிரிக்கும் பொழுது வெளியே வந்த மனோ, “இங்கே என்ன காமெடி சோவா நடக்கிறது அனு..?!” என்று கேட்டான் மனோ..

அவனின் கேள்வி கேட்டதும், “ஸாரி சார்.. நான்தான் அவளை சிரிக்க வைத்தேன்.. இனிமேல் இந்த தப்பு நடக்காது சார்..” என்று நக்கலாக மன்னிப்பு கேட்டதும், “நான் அவங்களிடம் பேசிட்டு இருக்கிறேன் தென்றல்.. நீங்க இதில் குறுக்கே வர வேண்டாம்..” என்று கடுப்புடன் கூறினான் மனோ..

அவன் அப்படி கூறியதும், “சார் நான்தான் தவறு செய்தேன்.. அப்பொழுது நான் தானே ஸாரி கேட்கவேண்டும்..?! அதுதானே மரியாதை..” என்று அவந உள்ளே பேசியதற்கு வெளியே வந்து அனைவர் முன்னிலையிலும் பதிலடி கொடுத்தாள் தென்றல்..

அவளை பார்த்தவன், “தப்பு உன்னோடது என்றாலும் நான் ஒருவரிடம் பேசும் பொழுது நீ வந்து தலையிட கூடாது அது மரியாதை கிடையாது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் தென்றல்..” என்று கூறியதும்,

‘அவள் ஸாரி கேட்பாள்..’ என்று அனைவரும் எதிர்பார்க்க, “நாம் தெரியாமல் தவறு செய்தால் ஸாரி கேட்பதில் அர்த்தம் இருக்கிறது.. ஆனால் நான் தெரிந்தேதான் செய்தேன் சோ நான் ஸாரி சொல்ல மாட்டேன்..” என்று அவள் வீராப்பாக கூறினாள்..

அவள் வீராப்பாக பேசுவதைப் பார்த்த பிரபா, ‘இவள் நல்ல கடுவன்பூனைகிட்ட மாட்டினாள்..’ என்று நினைக்க, “இங்கே நான் முதலாளி மிஸ்.தென்றல்.. சோ நீங்க செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டுதான் ஆகவேண்டும்..” என்று அவன் அதிகாரமாக சொல்ல, அவனை முறைக்க ஆரமித்தாள் தென்றல்..

‘என்னடி பார்வை பார்க்கிறாய் ஸாரி கேளு..’ என்று அவன் மனதில் நினைத்தவண்ணம் அவளையே பார்க்க, ‘இவனிடம் நான் ஸாரி கேட்பதால் நான் ஒன்றும் தாழ்ந்து போக போவதில்லையே..?! ஆனால் இங்கே இருக்கும் ஒவ்வொரு நாளும் இவனுக்கு நான் டார்சர் கொடுக்க வேண்டும்..’ என்ற முடிவுடன் நிமிர்ந்தவள், “ஸாரி சார்..” என்று சொல்ல, அவன் தலையசைத்துவிட்டு வெளியே சென்றான்..

அடுத்து வந்த நாட்களில் அனைத்து வேலைகளையும் அவளிடம் ஒப்படைக்க அவள் தன்னால் எந்த அளவிற்கு சரியாக செய்ய முடியுமோ அந்த அளவிற்கு மிகுந்த கவனத்துடன் அதே அளவு வேகத்துடன் செய்தாள்..

அவள் செய்யும் வேலைகளை அவன் தப்பு கண்டுபிடித்து திட்ட வழியில்லாத அளவிற்கு அவள் அழகாக வேலை செய்ய அவளின் வேலையைக் கண்டு அவன், ‘புயல் என்ற பெயர் இவளுக்கு சரியாக அமைத்திருக்கிறது..’ என்று நினைப்பான்.. அவள் அங்கே வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஒரு மாதம் நன்றாக முடிந்துவிட்டது..

அவளின் விளையாட்டுத்தனம் மட்டும் இன்னும் குறையாமல் இருந்தது.. அதற்கு காரணம் இந்த ஒரு மாதத்தில் அவன் தன்னிடம் சொல்லும் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்தாலும் அதை சரியான நேரத்திற்கு ஒப்படைக்காமல் அவனின் கோபத்தை அதிகபடுத்தி அதில் சிரிக்க ஆரமித்தாள் தென்றல்..

அவனின் புயல் புயலாகவும், பூந்தேன்றாலாகவும் வலம்வர மனோ தான் அவளால் அதிகம் கடுப்பாவது.. இருவரும் சண்டை மட்டும் மற்றவர் பார்வைக்கு விருந்தாக மாறாத அளவிற்கு இருந்தது..

அடுத்து என்ன என்ன நடக்குமோ..? நீயா..? நானா..? என்ற போட்டியில் நாம் என்று எப்படி உணர போகிறார்களோ இருவரும் தெரியவில்லை.. நாம் கொஞ்சம் பொறுமையாக இருப்போம்..
????? sema interesting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top