• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 5

முதல் மாதம் சம்பளம் வாங்கியதும், பிரதாப், நிவாஸ், சுனில், ராகுல், ஷிவானி ஐந்து பேரும் பெரிய ஹோட்டலுக்கு சென்றனர்.. அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட ஆரமிக்க, நிவாஸ் தான் முதலில் தனது பேச்சை ஆரமித்தான்..

“தென்றல் நல்ல பொண்ணாக மாறி முதல் மாத சம்பளத்தை வாங்கிட்ட என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம் மா.. என்னோட அப்பாவிடம் நான் பெருமையாக சொன்னேன்..” என்று அவன் கர்வத்துடன் சொல்ல,

“டேய் நல்ல இருக்கும் என்னை ராச்சசியாக மர்ரிவிட்டாதே.. உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன்..?! அந்த இரும்பு மனிதனிடம் என்னை மாட்டிவிட்டு விட்டாயே..?!” என்று புலம்பிய தென்றலை பார்த்த ராகுல்,

“ஏன் தென்றல் இவன்தான் கையெழுத்து கேட்டான் என்றால் நீயும் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு இப்பொழுது வந்து புலம்பி என்ன ஆக போகிறது..?!” என்று சிரிப்புடன் கேட்டுவிட்டு சாப்பிட ஆரமித்தான்..

“அந்த கையெழுத்தை தான் தெரியாமல் போட்டுவிட்டேன்.. என்னோட தலை எழுத்தே மாறிவிட்டது.. யாரிடமும் தென்றல் இப்படி அமைதியாக வேலை செய்ததே இல்ல தெரியுமா..?!” என்றவள் சாப்பிட,

“உனக்கு இந்த வேலை வேண்டாம் என்று விட்டுவிட்டு வரவேண்டியது தானே..” என்று கேட்டான் சுனில்..

அதை கேட்ட தென்றல், “அதை செய்ய வழியில்லாமல் தான் முழிக்கிறேன்.. எனக்கு மட்டும் அந்த இரும்பு மனிதனிடம் வேலை செய்ய ஆசை பாரு..” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்ட தென்றலைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்..

“அதுதான் ஏன்..?!” என்று புரியாமல் கேட்டான் ஷிவானி.. “இவனிடம் இருக்கும் அக்ரிமெண்ட் படி நான் அந்த கம்பெனியில் ஒருவருடம் வேலை செய்ய வேண்டும்..” என்று சொல்ல

“இவன் ஒரு ஆள்.. இவனுடன் அக்ரிமெண்ட் போட்ட உன்னை நினைத்தால் எனக்கு அப்படியே பற்றிக்கொண்டு வருகிறது..” என்று திட்டினான் ராகுல்.. அவன் சொன்னதைக் கேட்டு தென்றலை முறைத்தான் நிவாஸ்..

அவன் முறைப்பதைப் பார்த்து, “டேய் நீ கொஞ்சம் வாயை வைத்து சும்மா இரு.. இவன் என்னை முறைக்கிறான்..” என்று புன்னகையுடன் கூறினாள் தென்றல்..

இவ்வாறு அனைவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட அந்த சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது.. அவள் ஒன்று சொல்ல அதற்கு அந்த வாண்டுகள் தன்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று அவளை கழுவி கழுவி ஊத்த நேரம் விரைந்து சென்றது..

அவர்களை பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்த தென்றல் தன்னுடைய அறைக்கு வரும் பொழுது இரவு மணி ஏழு. அப்படியே வந்து சோபாவில் படுத்தவள் நினைவுகள் அனைத்தும் மனோவை நோக்கி சென்றது..

அவளும் அந்த அலுவலகத்தில் ஒரு மாதமாக வேலை செய்கிறாள் தான் ஆனால் அவன் யாரிடமும் சிரித்து பேசியதோ.. இல்லை பார்மாலிட்டிக்காக கூட அவன் சிரிக்காதது அவளின் மனதில் ஆழமான கேள்வி ஒன்றை உருவாக்க எழுந்து அமர்ந்தாள்..

“இவனுக்கு என்ன குறையாக இருக்கும்..?! சொத்துகள் இன்னும் நாலு தலைமுறைக்கு வேண்டும் என்ற அளவுக்கு சம்பாரித்து வைத்திருக்கின்றனர்..” என்று தனக்கு தானே கேள்வி கேட்டவள்,

“இவனுக்கு சிரிப்பே வராதா..?! இவன் சிரித்தால் அந்த புயலில் பல அழகிய மங்கைகள் அந்த இரும்பு மனிதனின் புன்னகையில் சிக்கி சின்னாபின்னமாக மாறிவிடுவார்களே..?!” என்று சிரித்துக் கொண்டே யோசித்தாள்..

“மனோரஞ்சன் பேருக்கு ஏற்ற ஏதாவது அவனிடம் இருக்கிறதா..?! எப்பொழுது பார்த்தாலும் மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு ரேஞ்சில் வைத்திருக்கிறது அந்த தேவாங்கு..” என்று தனக்கு தெரிந்த நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை திட்ட ஆரமித்தவள்,

“இவனுக்கு என்று யாருமே இல்லையா..?! இல்ல இந்த கதைகளில் வருவது போல முதல் லவ் பெயிலியரோ..?!” என்று யோசிக்க அவளின் மனம் இடம் தரவில்லை..

“இல்ல இவனின் முகத்தில் இருக்கும் கடுப்பைக் கண்டு பொண்ணுங்க பத்தடி தள்ளியே நிற்ப்பார்கள்..” என்று அவளுக்கு அவளே சொல்லி அவளின் மனதை தேற்றிக்கொண்டாள்..

இப்படியே அவனின் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு சேர்ந்து ஆறுமாதம் ஆகிவிட்டது.. அவள் செய்யும் சேட்டையில் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறான் மனோ..

அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக முதல் ஆளாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்த தென்றலைப் பார்த்த மனோ, தனது கையிலிருந்த வாட்சைப் பார்த்தவன், “இவள் சீக்கிரம் வர ஆளே கிடையாதே..?!” என்று தனக்கு தானே யோசிக்க ஆரமித்தான்..

இந்த ஆறு மாதத்தில் அவளின் அன்றாட செயல்கள் அனைத்தும் அவனுக்கு அத்துபடியானது.. அவள் காலையில் வந்ததும் அவன் சொல்லும் மெயிலை சரிபார்த்து அதற்கு ஏற்றது போல அவன் சொல்லும் கொட்டேஷனை குறித்து லெட்டர் டைப் பண்ணி அனுப்ப வேண்டிய கம்பெனிக்கு அனுப்புவது, அடுத்து அவன் செல்லும் மீட்டிங் பற்றியும் அவன் செல்ல வேண்டிய நேரம் மற்றும் அதற்கு தேவைப்படும் குறிப்புகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பாள்..
அவளை மற்றவர்கள் குறை சொல்லும் அளவிற்கு அவள் நடப்பதே இல்ல.. இதெல்லாம் யோசித்தவன் அவளை சந்தேகமாகப் பார்க்க அனுவின் கேள்விக்கு புன்னகையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் தென்றல்..

காலையில் வந்தததும் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை செய்தவளை அறையின் உள்ளே இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் மனோ.. அவனுக்கு அவளின் இந்த விஷயம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது..

அவன் அடிக்கடி சைட்டைப் பார்க்க வெளியே செல்லும் நேரங்களில் அவள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைகள் அனைத்தும் அவனுக்கு தெரியும் இருந்தாலும் கூட, அவன் அமைதியாக இருக்க காரணம் அவள் எந்த வேலையும் செய்யாமல் லூட்டி அடிப்பது கிடையாது.. அவள் அளவில் அவள் சரியாக இருந்தாள் அதுதான் அவனுக்கும் வேண்டும்..

அவள் தனது வேலையை மும்பரமாக தொடர, அவளை ஆராய்ச்சியுடன் பார்த்த வண்ணம் உள்ளே வந்த அனு, “என்னடா காரணமே இல்லாமல் வெளியே மலை பொழிகிறதே என்று நினைத்தேன்.. இப்பொழுது தான் தெரிகிறது இந்த புயல் இங்கே மையம் கொண்டிருக்கிறது..” என்று அவள் கிண்டலாக சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்த தென்றல்,

“ஹாய் அனு.. குட் மார்னிங் மா..” என்று சொல்லிவிட்டு தன்னோட வேலையை செய்ய அவளை புரியாத பார்வைப் பார்த்தாள் அனு.. ‘இவள் இப்படி எப்பொழுது செய்யவே மாட்டாள்..’ என்று யோசித்த அனு,

“ஸ்கூட்டி ரிப்பேர் என்று சொன்னாய்..?! இப்பொழுது எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கிறாய்..?!” என்று கேட்டதும், “என்னை பிரதாப் கொண்டு வந்து விட்டான் அனு..” என்று அவள் கண்ணடித்த வண்ணம் சொல்லிவிட்டு, அவள் தன்னோட வேலையை செய்ய, அவள் சொன்னதைக்கேட்டு மனோவிற்கு கோபம் வந்தது..

இது எப்பொழுதும் வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான்.. ஒருநாள் லேட்டாக வந்ததும் அவளிடம், ‘ஏன் லேட்டாக வந்தாய்..?!’ என்று கேட்டால், “சிவாசுதன் கூட பேசிட்டே வந்ததில் டைமை கவனிக்க மறந்துவிட்டேன்..” என்று சொல்லி அவனை கடுப்பேற்றும் வகையில் சிரித்துவிட்டு செல்வாள்..

மாலை பர்மிஷன் கேட்டு வந்து நிற்கும் தென்றலிடம், “இப்பொழுது எதற்கு பர்மிஷன்..?!” என்று அவன் தலையை நிமிர்த்தாமல் கேட்டால், “சுனில் எனக்காக பார்க்கில் வெய்ட் பண்ணுவான் சார்..” என்று கூறுவாள்..

அவன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “ம்ம் சரி போங்க.. காலையில் வேலை இருக்கிறது.. சீக்கிரம் வாங்க..” என்று சொல்லி அனுப்பி வைத்தால் மறுநாள் காலையில் லேட்டாக வந்து நின்று அவனின் பிரஷரை ஏற்றுவாள்.. அதுதான் அவன் காலையிலேயே கடுப்பாகக் காரணம்..

இதெல்லாம் அவள் சொல்ல ஒரே காரணம் தன்னுடைய பாதுக்காப்பிற்கு என்பது அவளும் அனுவும் மட்டுமே அறிந்த விஷயம்.. அவள் ராகுல், நிவாஸ், சுனில் என்று சொல்வது எல்லாம் பதில் இருந்து பதினைந்து வயதை உடைய பொடுசுகள், வாண்டுகள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை..

‘ஆனால் மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கின்றனர்..?!’ என்பதை பற்றி அவர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.. அவள் அப்படி சொல்லும் பொழுது பிரபா காதுகளில் இருந்து வரும் புகை அனுவிற்கு பிடிக்கும் என்றால் மனோ அவளை கொலைவெறியுடன் பார்ப்பது தென்றலுக்கு பிடிக்கும்..

அவள் அமைதியாக வேலை செய்ய காரணமே, ‘அப்படியாவது அவனின் முகத்தில் ஒரு புன்னகை அழகாக மலராத என்று தான்.. அவள் இங்கே இருக்க போவது இன்னும் ஆறுமாதம் என்றாலும் அவனை சிரிக்க வைக்க வேண்டும்..’ என்று முயற்சியை கைவிடாமல் இருந்தாள் தென்றல்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஆனால் அவள் தினமும் ஒரு பெயர் சொல்வதைப் பார்த்து அவன் மனதில் அவளை பற்றிய தவறான எண்ணம் வளர்வதை அவள் அறிய வாய்ப்பில்லாமல் போனது என்னமோ கால கொடுமைதான்..

அவன் மனதில் நினைப்பதை ஒருநாள் சொல்ல போகிறான் அன்று தென்றல் என்ன செய்ய போகிறாள் என்று அவளுக்கே தெரியாது..

அவள் தன் முன்னே புன்னகையுடன் வந்து நிற்பதை அவனின் மனம் விரும்பும்.. ஆனால் அதற்கு உண்டான காரணத்தை அவன் இன்னமும் அறியவே இல்லை..

அன்றும் அது போலவே அனுவுடன் வாயாடிவிட்டு அவனின் அறைக்கு அனுமதி கேட்டு நுழைந்தவள், “ஸார் என்னோட வேலைகள் எல்லாம் முடிந்தது.. இன்னும் ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்..” என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்த மனோ,

“இங்கே நான் முதலாளியா..?! இல்ல நீங்க முதலாளியா..?!” என்று விரைப்பாக கேட்டவனைப் பார்த்தவள், “நான் ஒன்று கேட்டால் தப்பாகவே நினைக்க மாட்டிங்களே..?!” என்று அவனுக்கு பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்டவளைப் புரியாமல் பார்த்தான் மனோ..

அவனின் முகத்தைப் பார்த்து, “உங்களுக்கு சிரிப்பே வராதா ஸார்..?! எப்பொழுதும் இப்படி சிரிக்காமல் இருந்தால் பரலோகத்திற்கு ப்ரீ டிக்கெட் கிடைக்கும் என்று செத்துப் போன என்னோட பாட்டி அடிகடி சொல்லும் சார்..” என்று சொல்ல,

அதற்கும் அவன் சிரிக்காமல் அமர்ந்திருக்க, ‘இது எல்லாம் திருந்தாத கேஸ் தென்றல்..’ என்று மனதில் நினைத்தவள், “நீங்கள் தான் சார் முதலாளி..” என்று அவள் சொல்ல,

“அப்புறம் எதற்கு நீ என்னை அதிகாரம் பண்ணுகிறாய்..?!” என்று கேட்டதும், ‘எனக்கு ஆசை பாரு உன்னை அதிகாரம் பண்ணனும்..’ என்று உதட்டை சுளித்த தென்றல்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மனோ, “உன்னால் ஒரு நாள் கூட பேசாமல் இருக்கவே முடியாது.. எப்பொழுது பார்த்தாலும் தொனத்தொன என்று பேசிட்டே இருக்கிறாய்..” என்று கடுப்பில் கேட்டதும்,

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..” என்று மனதில் சொல்வதாக நினைத்து வாய்விட்டு கூறி அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டாள் தென்றல்..

அவள் கழுதை என்று கூறியதைக் கேட்டவன், “என்னடி யாரைப் பார்த்து நீ கழுதை என்று சொல்கிறாய்..?!” என்று கோபத்தோடு கேட்டதும் தனது நாக்கைக் கடித்துக் கொண்ட,

“ஸாரி சார் நான் உங்களை சொல்லவே இல்லை.. சும்மா என்னோட தோழி அணுவை திட்டுட்டு இருந்ததில் நீங்க சொன்னதை நான் கவனிக்கவே இல்லங்க சார்..” என்று சொல்லி அசடு வழிய சிரித்த தென்றலை முறைத்தான் மனோ..

“உன்னை எத்தனை முறை திட்டினாலும் நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்..” என்று அவன் மீண்டும் திட்ட அவன் திட்டுவதைக் காதில் வாங்காமல் வெளியே பொழியும் மழையை வேடிக்கை பார்த்த வண்ணம் நின்ற தென்றலைப் பார்த்த மனோ,

“இந்த இந்த கொட்டேஷனில் இருக்கும் அமௌண்ட் கொட்டேஷனாக கொடுத்து கவர்மெண்ட் டெண்டர் லெட்டர் டைப் பண்ணி எடுத்துவா..” என்று அவன் லெட்டரை சொல்ல சொல்ல குறிப்பெடுத்தவள் மிகுந்த கவனத்துடன் அந்த லெட்டரை தயார் செய்து கொண்டு வந்து அவனின் முன்னே வைத்தாள்..

அவன் சைன் பண்ணிக் கொடுக்க, அதை வாங்கிச் சென்றவள் மனதில் ஒரு நெருடல் தோன்ற தன்னை சுற்றியும் பார்வையை சுழட்டினாள்.. அதில் மதனின் பார்வையில் இருந்த மாற்றம் அவளின் கண்ணில் பட, அவளின் மனதில் இருந்த சந்தேகம் நெருடலாக மாறவே அமைதியாக தனது சீட்டில் அமர்ந்தவள்,

அந்த லேட்டரைப் போஸ்ட் பண்ணாமல் வைத்துவிட்டு தனது வேலைகளை கவனிக்க ஆரமித்தவள்.. அதன்பிறகு அந்த லெட்டரை மறந்தே போனாள்.. அந்த லெட்டர் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தும் அவள் செய்த காரியம் அங்கே வினையாக மாறி போனது..

“அவன் அந்த லெட்டரை போஸ்ட் பண்ணிட்டியா..?” என்று அவன் கேட்டதற்கு, “அதெல்லாம் பண்ணவே இல்ல சார்..” என்று சொல்லி அவனிடம் நாலு வாங்கிக் கட்டிக் கொண்டாள்..

இது நடந்து ஒருமாதம் சென்றபிறகு ஒருநாள் தன்னுடைய அறைக்கு தென்றலை அழைத்தான் மனோ.. அவளும் எப்பொழுதும் போல அவனை சென்று பார்க்க, “அன்னைக்கு ஒரு கொட்டேஷனை கொடுத்து கவர்மெண்ட் ஆடார் டைப் பண்ண சொல்லி போஸ்ட் பண்ண கொட்டேஷன் லெட்டர் நீ போஸ்ட் பண்ணினாயா..?!” என்று ருத்திரமூர்த்தியாக மாறியவண்ணம் கேட்டான் மனோ..

அவனின் இந்த முகம் அவள் இதுவரை அறியாத ஒன்று.. அவனின் கோபம் கண்டு அவளுக்கு அடிவயிற்றில் சில்லென்றது.. அவள் முதல் முறையாக அவனை பயத்துடன் பார்த்து, “நான் அந்த லெட்டரை போஸ்ட் பண்ணவே இல்ல சார்..” என்று சொல்ல,

அவனுக்கு வந்ததே கோபம், “நீயெல்லாம் எதுக்கு வேலைக்கு வருகிறாய்..?! காலையில் ராகுல், மதியம் சுனில், சயந்திரம் பிரதாப் என்று நேரத்திற்கு நேரம் ஆளை மாற்றும் உனக்கு எல்லாம் எதுக்கு இந்த வேலை..?” என்று தனது மொத்த கோபத்தையும் தன்னுடைய வார்த்தைகளில் விட அவனை அதிர்ச்சியுடன் பார்த்தவளின் கண்கள் சிவந்தது..

“இப்பொழுது எதற்கு இந்த குதி குதிக்கிறீங்க சார்..?!” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக கேட்டாள் தென்றல்..

“நான் குதிக்கிறேனா..?! நீ செய்த காரியத்திற்கு எனக்கு வரும் கோபத்திற்கு அப்படியே வைத்து பளார் பளார் என்று நாலு விடலாமா என்று வருகிறது..” என்று கத்த ஆரமித்தான் மனோ..

அவன் இந்த அளவிற்கு காத்த காரணம் இவன் கொடுத்த டெண்டர் கொட்டேஷன் ரொம்ப கம்மியாக இருக்கிறது என்று டெண்டர் கைமாற போவதாக அவனுக்கு தகவல் சொல்லப்படவும் அவனுக்கு கோபம் வந்தது.. அந்த கோபம் அனைத்தும் அவளின் மீது திரும்பியது..

அவன் சொன்ன கொட்டேஷனை அனுப்பாமல் அவள் வேறொரு கொட்டேஷன் கொடுத்து டெண்டர் லெட்டரை அனுப்பியது தான் இப்பொழுது வினையாக மாறியது..

இவனின் ரூமில் இருக்கும் கண்ணாடிகள் வழியாக இவன் வெளியே வேலை செய்யும் நபர்களை இவன் பார்க்க முடியும் ஆனால் அவர்கள் என்ன முயற்சி செய்தாலும் இவன் என்ன செய்கிறான் என்று அறையின் வெளியே இருப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அந்த அறையை வடிவமைதிருந்தான் மனோ...

அதுக்குதான் அவன் அவளை அந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டுவிட, “எங்கே கை வைங்க நானும் பார்க்கிறேன்..” என்று அவள் எகிற அவனுக்கு பயப்படாமல் எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள் தென்றல்.

அவளுக்கு பதில் சொல்லும் முன்னர், அவனுக்கு போன் வர, “ஹலோ மனோரஞ்சன் ஸ்பீக்கிங்..” என்று சொல்ல அதில் வந்த செய்தியில் அவனின் முகம் மாறியது..
அந்த டெண்டர் இவன் கன்ஸ்ட்ரக்ஷனுக்கே கிடைத்துவிட்டது என்ற செய்திதான் என்பதை அவளும் அறிந்து தான் வைத்திருந்தாள்..

இனிமேல் தான் என்ன நடக்க போகிறது என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டாம் புயல் என்ன செய்கிறாள் என்று பாப்போம்..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi sis தென்றல் யார் கூட பேசுனா இவனுக்கு என்னவாம்.தென்றலினால் தான் இந்த டெண்டர் கிடைத்து இருக்கு இனி மனோ புயலுக்கு என்ன பதில் சொல்லப்போறான்..இன்டெரெஸ்டிங்
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஸோ ஸேடு மனோ.....அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டியே.. புயல் உன்னை சுருட்டி வீசப்போகுது....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top