• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 6

அவனின் முகம் மாறுவதைக் கண்டவள் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டே அவனைப் பார்க்க அவன் பேசும் வரையில் அமைதியாக இருந்தவள் அவன் போனை வைத்ததும், “என்ன சார் டெண்டர் உங்களுக்கு கிடைத்துவிட்டாதா..?!” என்று நக்கலாகக் கேட்டாள் தென்றல்..

அவள் சொல்வது உண்மைதான் அந்த கவர்மெண்ட் டெண்டர் இவர்கள் நிறுவனத்திற்கு தான் கிடைத்துள்ளது என்றுதான் போனில் தெரிவிக்கப்பட்டது..

அவள் அப்படி கேட்டதும், “உன்னோட மனதில் என்னதான் நினைக்கிறாய்..?! நான் கொடுத்த கொட்டேஷனை கொடுக்காமல் உன்னோட இஸ்டத்திற்கு செய்கிறாய் என்று கோபத்தில் தான் கேட்டேன்..” என்று அவன் அவனின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை அவன் கூறினான்.. அவனின் குரல் கொஞ்சம் தாழ்ந்து தான் வந்தது..

“என்ன கேட்டீங்க நேரத்திற்கு நேரம் ஆள் மாத்திட்டு இருக்கேன் என்று கேட்டதையா சார் சொல்றீங்க..?!” என்று ஒன்றும் அறியாதவள் போல அவனின் கேள்வியை வைத்தே அவனை அடித்தாள்..

அவளின் கேள்வியை கேட்டு அவன் அதிர்ந்து நிற்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களின் மனதில் என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க..” என்று கேட்டதற்கு, “நான் சொன்ன டெண்டர் கொட்டேஷனை கொடுக்காமல் உன்னை யார் மாற்றிக் கொடுக்க சொன்னது..? அதற்கு முதலில் பதில் சொல்லு..” என்று அவன் அதிகரமாகச் சொல்ல,

“அந்த கேள்விக்கு நான் அப்புறம் பதில் சொல்றேன்.. முதலில் என்னோட கேள்விக்கு பதில் சொல்லுடா..” என்று மரியாதை இல்லாமல் பேசியதும் அவனுக்கு கோபம் வர, “உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னால் புரியாது.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிப் பழகு.. இல்ல அன்னைக்கு நான் கொடுத்தது உன்னோட நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்று அவன் அவளை அடித்தை நினைவு படுத்தவும்,

“உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடைகிறது..?! உன்னிடம் வேலை செய்கிறேன் என்பதற்காக நீ அடித்தால் கூட வாங்கிட்டு அமைதியாக கண்ணை கசக்கிட்டு போவேன் என்று மட்டும் நினைக்காதே..” என்று உச்சகட்ட கோபத்தில் பேசினாள் தென்றல்..

அவன் ஏதோ சொல்ல வரும் முன்பே அவனை கைநீட்டி தடுத்தவள், “உங்களின் விளக்கம் எனக்கு தேவை இல்ல.. நீங்க என்னை பார்த்து எப்படி அப்படி கேட்கலாம்..?! உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்னை அப்படி கேட்க..?! இல்ல என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?!” என்று கேள்விகளை தொடுத்தாள் தென்றல்..

அவளின் கேள்வி கணைகள் அவனை கூறுபோட அப்படியே சிலையென நின்றான் மனோ.. ‘உப்பு தின்றவன் தண்ணி குடித்தே தீர வேண்டும்.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்..’ அவன் அமைதியாக இருந்தான்..

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “நான் எவன்கூட போனதை நீ வந்து பார்த்தா..?!” என்று கேட்டதும் அந்த கேள்வி அவனை முகத்தில் அறைந்தது போல இருந்தது..

“உன்னை மரியாதை இல்லாமல் பேசியதற்கு உனக்கு இந்த அளவுக்கு கோபம் வருதே.. அன்னைக்கு நடுரோட்டில் வைத்து என்னை அடித்தாயே..?! அதுக்கு நான் உன்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் உனக்கு இந்த டெண்டரை கிடைக்க முடியாத அளவிற்கு செய்ய எனக்கு தெரியாதா..?!” என்று கேட்டதும் அவனுக்கு எதோ புரிவது போல இருக்க அவள் சொல்ல வருவதை கவனிக்க ஆரம்பித்தான் மனோ..

“யாரோ செஞ்ச தவறுக்கு நான் இவனிடம் வாங்கிக் கட்டிக்க வேண்டும் என்று என்னோட தலையில் எழுதி இருக்கிறது..” என்று வாய்விட்டுக் கூறியவள், “நான் டெண்டர் கொட்டேஷனை மாற்றி அனுப்பவில்லை என்றால் உன்னோட ட்ரீம் டெண்டர் உனக்கு அடுத்து இருக்கும் ஆர்.கே.கன்ஸ்ட்ரக்ஷனுக்கு போயிருக்கும்..” என்று அவள் கோபத்தில் கூறியதும்,

‘என்னோட ட்ரீம் டெண்டர் என்ற உண்மை இவளுக்கு எப்படி தெரியும்..?’ என்று அதிர்ந்தான் மனோ. அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்த தென்றல், “உன்னோட ட்ரீம் டெண்டர் எனக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறாயா..?! தெரியும் நல்லாவே தெரியும்.. டெண்டர் கொட்டேஷன் பேப்பர் சைன் வாங்க வந்த பொழுது நீ போனில் பேசியதைக் கேட்டேன்..” என்று சொல்ல அவனுக்கு புதிர்கள் அதிகம் ஆகியதே தவிர குறையவே இல்லை..

“அதை கேட்ட பிறகும் என்னோட மனசு என்ன நினைத்து தெரியுமா..?! இவனுக்கு இந்த டெண்டர் கிடைத்தால் இவன் முகத்தில் புன்னகை மலருமா..?! என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது.. யார் என்ன நினைக்கிறாங்க..? என்று உனக்கெப்படி தெரியும்.. பாசம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதா உன்னிடம் பேசுவது எல்லாம் செவுடன் காதில் சங்கு ஊதுவது போல தான்..” என்று கூறியவளின் குரலில் ஆதங்கம் மட்டுமே வெளிப்பட்டது.. அவள் பேச பேச அவனின் மனம் அவளின் பால் சாய ஆரமித்தது..

“நீங்க கொடுத்த கொட்டேஷன் உங்கள் மேனேஜர் மதன் மூலம் உங்களுக்கு எதிர் ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷனுக்கு தகவல் போய்விட்டது..” என்று அவள் சொல்லவும், அவனால் அவள் சொல்வதை நம்பவே முடியவில்லை..

மதன் இங்கே பல வருடமாக வேலை செய்யும் ஒரு நேர்மையான மனிதர்.. அவரை எப்படி சந்தேகப்பட அவனால் முடியும்..? அவன் அவளை நம்பாமல் சந்தேகமாகப் பார்க்க, அவனின் பார்வை கண்ட தென்றல், “என்ன நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா..?!” என்று கேட்டவள்,

“உங்களுக்கு நம்பிக்கை இருக்காது.. ஏன்னென்றால் நான் வாய் பேச மட்டும் தான் லாய்க் என்று என்னை பற்றி உங்களின் மனதில் இருக்கும் கருத்து எனக்கு தெரியும் சார்..” என்று சாரில் நன்றாக அழுத்தம் கொடுக்க அவனின் முகம் சிவக்க ஆரமித்தது..

“உங்கள் கம்பெனி முழுக்க முழுக்க கேமரா இருக்கும் இல்ல அதில் பாருங்க..” என்று சொல்ல அவனும் போய் அந்த போட்டேஜை எடுத்து பார்க்க, அதில் மதன் பேசிய அனைத்தும் இருக்க, அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் மனோ..

“என்ன ஸார் நான் சொன்னது உண்மையா..?!” என்று கேட்டவள், “இந்த நிறுவனத்தில் நான் நேர்மையுடன் வேலை செய்யும் ஒரே காரணத்திற்காகத்தான் நானே கொட்டேஷன் கொடுத்தேன்..” என்று சொல்ல அவனுக்கு ஒன்றும் புரியவே இல்லை..

அவனின் புரியாத பார்வையைக் கண்ட தென்றல், “அன்னைக்கு நீங்க கொடுத்த கொட்டேஷனை குறிக்கும் பொழுது மதன் என்னை நோட் பண்ணுவதை கவனித்தேன்.. அதுதான் அவனின் முன்னாடி நீங்க கொடுத்த டெண்டர் கொட்டேஷன் கொடுத்து லெட்டர் டைப் பண்ணி வைத்துவிட்டு அதை கவனிக்க மறந்தது போல எழுந்து சென்றதும் அவர் வந்து அந்த லெட்டரை எடுத்துப் பார்த்ததை நான் மறைந்து நின்று பார்த்தேன்.. அதுதான் கொட்டேஷன் அமௌன்ட் மாற்றி கோட் பண்ணினேன் அனுப்பினேன்...” என்று கூறியவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோ..

‘அவள் தங்கள் நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் செய்த காரியத்தை நாம் தான் தவறாக நினைத்துவிட்டோம்’ என்று அவனின் மனம் வருந்தினான்.. அந்த நினைவு மனதில் வந்த மறுநொடியே, “சாரி தென்றல்! நான் தான் புரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன்..” என்று அவன் மன்னிப்பு கேட்க, கைகள் இரண்டையும் தட்ட ஆரம்பித்தாள் தென்றல்..

“சூப்பர் ஸார் சான்சே இல்ல.. உங்களின் நிறுவனத்திற்கு நல்லது நினைத்த எனக்கு நீங்க கொடுத்த பட்டம் நடத்தை கேட்டவள்.. அதை அப்படியே சர்டிபிகேட் போட்டு சைன் பண்ணி கொடுத்தீங்க என்றால் நான் வேறு இடங்களுக்கு வேலைக்கு சொல்லும் பொழுது ரொம்ப உதவும்..” என்று அவள் சிரித்தவண்ணம் சொல்ல, “இப்பொழுது எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறாய்..?!” என்று கேட்டவனின் குரலில் பிசிர் தட்டியது..

அவனையே பார்த்தவள், “நான் ராகுல் கூட பல்சரில் வந்தேன், சாயந்திரம் சுனில் கூட பார்க் போகிறேன் என்று சொன்னது எல்லாம் உண்மைதான்.. இல்லை என்று நான் மறுக்கவும் மாட்டேன்.. அவங்க எல்லாம் என்னோட பிரிண்ட்ஸ்..” சொல்ல மனோவின் மனம் ஏன்னென்றே அறியாமல் நிம்மதியாக ஒரு பெருமூச்சை வெளியிட்டது.. அதற்கு காரணம் அறியாமல் நின்றிருந்தான் மனோ..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“நான் நல்லவளாக இருக்கிறேனா.. இல்லையா.. என்பது எனக்கு தெரியும்.. அதைப்பற்றி பேச உங்களுக்கு நான் உரிமை கொடுக்கல..” என்று கூறியவள் அவனை எரிப்பது போல பார்த்தாள்.. அவளின் கோபம் கண்டு அவனுக்குள் ஏதேதோ மாற்றம் நிகழ்ந்தது..

அவள் சொன்னதைக் கேட்டு அவனின் மனம், ‘எனக்கு இவளின் மேல் உரிமை இல்லையா..?! நான் இவளைக் கண்டிக்க கூடாதா..?’ என்று அவனின் மனம் எண்ணியது..

அவனையே பார்த்து முறைத்தபடியே, “தென்றலுக்கு உறைவிடம் மட்டும் தான் இல்லை சார்.. ஆனால் ஒழுக்கம் அதிகமாகவே இருக்கிறது.. எனக்கு ஒழுக்கம் பற்றி நீங்க ஒன்றும் கற்றுக் கொடுக்க வேண்டாம்..” என்று கூறியவளின் குரலில் ஒருவகை வெறுப்பு ஓடியதை உணர்ந்தும் அமைதியாக அவளையே பார்த்தான்..

“உங்களை பொறுத்தவரையில் உங்களின் வேலைகளை நான் நன்றாக செய்துக் கொடுக்கிறேனா..?! என்று மட்டும் தான் நீங்க யோசிக்கணும்.. நான் யாரோட பழகுகனும் என்று நீங்க சொல்ல வேண்டாம்.. அது எனக்கே தெரியும்..” என்று கூறியவள்

அவன் அமைதியாக நிற்பதைப் பார்த்து, “உங்களுக்கு மட்டும் இல்ல.. எல்லோருக்கும் வார்த்தையை விடுவது மிகவும் ஈஸியாக இருக்கும் போல..” என்றவள் அவனைப் பார்க்க அவனோ அவள் பேசுவதை மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்..

அவன் அமைதியாக நிற்பதைப் பார்த்த தென்றல், “என்ன சார் ரொம்ப அமைதியாக இருக்கீங்க..?! இன்னும் என்ன என்ன சொல்லலாம் என்று நிதானமாக யோசிப்பீங்க போல..?!” என்று கேட்டதும்,

“தென்றல் நான்தான் தவறாக நினைத்து ஒரு வார்த்தை விட்டுவிட்டேன் என்னை மன்னித்துவிடு தென்றல்..” என்று சொல்ல, அவனையே மெளனமாக பார்த்த தென்றல் கசந்த புன்னகை ஒன்றை வெளியிட அது அவனின் மனதை மிகவும் பாதித்தது..

அவளின் புன்னகையைப் பார்த்த மனோ, “எதுக்குடி இப்பொழுது சிரிக்கிறாய்..?!” என்று கேட்டவனின் முகத்தில் வெறுப்பு கிடையாது.. கோபம் கிடையாது.. சிரிப்பும் கிடையாது.. ஆனால் அவன் அவளின் புன்னகையால் பாதிக்கப்பட்டிருந்தான்..

“எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க..” என்று அவள் சொல்ல, ‘என்ன..?’ என்று இடது புருவத்தை உயர்த்தினான் மனோ..

அவனின் புருவம் உயர்வதைக் கண்டு, “ ‘கத்தி முனையைவிட பேனாவின் முனை மிகவும் கூர்மையானது..’ என்று சொல்வாங்க.. என்னை கேட்டால் பேனாவின் முனையைவிடவும் கூர்மையானது அடுத்தவர்கள் வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் ஒரு உயிரை எடுக்க கூட தயங்காது அந்த வார்த்தைகள் என்று நான் சொல்வேன்..” என்று கூறியவள் தொடர்ந்தாள்..

“தென்றலுக்கு உறைவிடம் இல்லை என்று மட்டும் தான் எல்லோரும் சொல்றாங்க.. தென்றலுக்கு தன்மானம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.. தென்றல் காற்று அது மெதுவாக வீசினால் தென்றல் என்று சொல்வாங்க.. அதுவே வேகமாக வீசினால் புயல் என்று சொல்வாங்க.. நான் தென்றலாகவே இருக்க ஆசை படுகிறேன் என்னை புயலாக மாத்திராதீங்க..” என்றவள் அவனை நிமிர்ந்து ஒரு நொடி மட்டுமே பார்த்தாள்.. அதன்பிறகு எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள்..

அவள் சென்றதும் அந்த அறை புயலடித்து ஓய்ந்தது போல அமைதியாக இருந்தது.. ‘புயலுக்கு பின் வரும் அமைதி..’ இதுதான் என்று அவனுக்கு எடுத்துரைத்தது அந்த அறையில் நிலவிய அமைதி.. அந்த அமைதியை அவனின் மனம் மிகவும் வெறுத்தது..

அவள் வெளியே சென்றதும் மதனுக்கு அழைத்தான் மனோ.. அவரும் அவனின் அறையின் கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வர, “மதன் உங்களுக்கு இனிமேல் இங்கே வேலை கிடையாது.. நீங்கள் போகலாம்..” என்று அவன் கோபத்தோடு சொல்ல,

“ஏன் சார் நான் என்ன தவறு செய்தேன்..?!” என்று கேட்டதும், “நான் டெண்டருக்கு கொடுத்த கொட்டேஷனை ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷனுக்கு நீங்க சொன்னதுக்குதான் உங்களை வேலையை விட்டு நீக்குகிறேன்..” என்று சொல்ல அவருக்கு பதில் சொல்ல முடியாமல் போகவே, “ஸாரி சார்..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்..

அவர் சென்றதும், இந்த காரணம் என்று சொல்ல முடியாத அளவில் நெஞ்சம் கனக்க அமைதியாக சோபாவில் அமர்ந்தான்.. அப்படி அமர்ந்திருந்தவன் மனம், ‘எனக்கு என்று யாரும் இல்லை.. அதனால் நான் எனக்கு என்று ஒரு வட்டம் இட்டு நிற்கிறேன்.. நீயேன் புயல் என்னோட மனதின் அமைதியை கலைக்கிறாய்..!’ என்று கேட்டான்.. இன்று அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது..

‘தென்றல் விளையாட்டு குழந்தையை போல இருந்தாலும் அவளின் குறும்புத்தனம் அனைவரையும் சிரிக்கவே வைத்திருக்கிறது.. யாரையும் காயப்படுத்தியது கிடையாது.. அப்படியிருக்க அவள் தன்னுடைய சொற்கள் மூலம் அதிகமே காயப்பட்டு இருக்கிறாள்.. ஆனால் என் முன்னே அவள் வந்து நின்றது என்னோட புன்னகையைக் காண மட்டுமே..’ என்று அறிந்தவன் மனது வலித்தது.. அவனின் மனதை அவள் உணர ஆரம்பித்தான்..

கடைசியாக அவள் சொன்ன வாக்கியம் அவனின் மனதில் வந்தது.. அதை நினைத்தவன், “இப்பொழுது மட்டும் தென்றலாக இருக்கிறாய்..?! இப்பொழுது புயல் போலவே தான் இருக்கிறாய்..?! இதுல இவளை நான் புயலாக மாற்றுகிறேன் என்று சொல்லிட்டு வேற போகிறாள்..’ என்று நினைத்தவன்,

‘உன்னை பற்றி எதுவும் தெரியாமல் நான் உன்னை பேசியது தப்புதான் புயல்.. என்னை மன்னித்துவிடு..’ என்று அவனின் மனதில் இருக்கும் புயலிடம் அவன் மன்னிப்பு கேட்டதும் அவனின் மனம் நிம்மதியடைய அவன் யோசிக்க ஆரமித்தான்..

‘அவளை முதல் நாள் சந்தித்த அன்று அவனின் மனம் எதற்கு அதிர்ந்தது..?! இப்பொழுது அவளின் கசந்த புன்னகை என்னை ஏன் பாதித்து என்ற கேள்விக்கு அவனின் மனம் சொன்னேன் ஒரே பதில் காதல்..!’

காதல் என்று உணர்ந்தவன் மனம், ‘புயல் என்று பெயர் வைத்த அன்றே எனக்கு தெரியாமல் போனது தென்றல் நீ என்னை தாக்க வந்த புயல் என்று..! உன்னோட ஒவ்வொரு செய்கையும் நான் ரசிக்க காரணம் என்னோட காயப்பட மனதிற்கு உன்னோட புன்னகை ஒரு மருந்து..’ என்று நினைத்தவனின் இமைகள் மூடியதும் அவளின் கசந்த புன்னகை அவனின் மனகண்ணில் வந்தவளின் புன்னகையை முகத்தை தனது மனதில் பதியவைத்தான்..

தென்றல் அவனின் அறையை விட்டு வெளியே வந்ததும் அவளின் முகத்தைப் பார்த்த அனுவிடம், “ஹய்யோ ஜாலி அனு..” என்று அவள் சொல்லும் பாணியில் அவளை நிமிர்ந்து பார்த்த அனு, ‘இவள் இந்த வேலையையும் விட்டுவிட்டாளோ..?!’ என்று யோசிக்க அவளோ வேறு கூறினாள்..

“எனக்கு ஒரு பத்து நாள் லீவ் தெரியுமா..?! எங்கேயாவது போகலாம் என்று யோசித்து இரும்பு மனிதனிடம் லீவ் கேட்டேன்.. அவனும் பத்து நாள் கண்ணை மூடிட்டு லீவ் கொடுத்துவிட்டான்.. அப்புறம் சாயந்திரம் சர்சில் மீட்டிங் இருக்கு நீ காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் சர்சிற்கு வந்துவிடு ஓகே நான் கிளம்புகிறேன்..” என்று சந்தோசமாக கூறியவளைப் பார்த்த அனுவின் மனம் நிம்மதியடைந்தது..

“எப்படியோ கடுவன்பூனை கிட்ட பேசி லீவ் வாங்கிட்டா.. இந்த விஷயத்தை முதலில் பிரதாப், ராகுல், ஷிவானி, சுனில், நிவாஸ் எல்லோரிடமும் சொல்லு..” என்று சொல்ல சரியென்று சொல்லிவிட்டு எழுந்து சென்ற தென்றலைப் பார்த்த அனுவின் பார்வையில் சந்தேகம் ஏற்பட்டது..

‘அவளின் முகத்தில் இருந்த சந்தோசம் அவளின் கண்களில் இல்லையே ஏன்..?’ என்று யோசித்துக் கொண்டே அவள் சென்ற திசையைப் பார்த்து கொண்டிருந்த அனுவின் கவனத்தைக் கலைத்தது மனோவின் குரல்..

அவனின் குரல் கேட்ட அனு, “ஸார்..?” என்ற கேள்வியுடன் எழுந்து நிற்க அவனோ, “அனுபமா தென்றல் எங்கே..?!” என்று கேட்டதும், “இப்பொழுது தான் சார் வெளியே போகிறாள்.. உங்களிடம் அவள் எதுவுமே சொல்லவே இல்லையா..?!” என்று அவள் கேட்டதும், உண்மையை மறைத்த மனோ,

“நான் ஒரு வேலை சொன்னேன் அதை செய்துவிட்டு சென்றாளா என்று தெரியவில்லை.. அதுதான் கேட்டேன்..” என்று சொல்ல, “அவள் ஒண்ணும் செய்யவே இல்ல சார்.. உங்களின் அறையில் இருந்து வந்தவள், ‘எனக்கு இன்னைக்கு லீவ் அனு.. நான் கிளம்புகிறேன் என்று சொன்னாள்.. அடுத்த நொடியே கிளம்பிப் போய்விட்டாள்..” என்று கூறினாள் அனுபமா..

“சரி அனு நீங்க வேலையைப் பாருங்கள்..” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றான் மனோ.. இந்த லீவு அவனாக அவளுக்கு கொடுக்கவில்லையே..?! அவள் சந்தோசமாக சென்றுவிட்டாள்.. அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ..?! அவள் மீண்டும் வருவாளா..?! இல்லை இதுதான் அவள் அந்த நிறுவனத்தில் வேலை செய்த கடைசி நாளா..?!
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மறைந்து நின்று பார்த்தேன் டா.... spelling mistake correct pannu da
நன்றி பிரேமா அக்கா சரி செய்துவிட்டேன்..:):):)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Sema d thendral...puyal ah ila sooravali ya mari athiradiya avana thakita...pavam paiyan ipo kathal sulal la matitu thathalikuran....sema epi...keep rockinggg dr.....
நன்றி கீர்த்திமா.. பையன் காதல் சுழலில் மாட்டிக்கிட்டான்.. இனிமேலாவது அவளை சரியாக புரிந்து கொள்வானா..?!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Excellent update Sandhiya. Thendral’s comeback to Mano is superb. There is a saying that words uttered in the heat of the moment cannot be taken back and the world’s most dangerous weapon is the human tongue.
நன்றி விஜயா அக்கா.. உண்மைதான்.. ஒருவர் வார்த்தையை விடும் பொழுது யோசிப்பதே இல்லை.. அதுதான் ரொம்ப டேஞ்சர் ஆன ஆயுதம்.. இதை அனைவரும் உணரவேண்டும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top