• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 7

அவனிடம் அனுமதி கூட கேட்காமல் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவளின் முகத்தை பார்த்த வாட்ச்மேன் தாத்தா, “என்னடா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்ட..?!” என்று கேட்டதும், “நான் ஊருக்குப் போகிறேன் தாத்தா.. திரும்ப வர இருபது நாள் ஆகும்..” என்று புன்னகையுடன் சொல்ல, “நல்லபடியாக போய்ட்டு வாடா கண்ணா..” என்று புன்னகையுடன் சொன்னவர் அவரது வேலையை கவனிக்க அவளும் தனது வழியில் நடக்க ஆரமித்தாள்..

அவளின் மனதில் இருந்த கொதிப்பு மட்டும் அடங்க மறுத்தது.. அப்படியே நடந்தவளின் பார்வை எதிரே இருந்த பூங்காவை நோக்கிச் செல்ல அங்கே சென்று ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்தாள்..

அந்த இடம் அவளின் மனதிற்கு அமைதியைக் கொடுக்க, “என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.. அதுவும் என்னை பார்த்து..” என்று நினைத்தவள் கோபத்தில் மூச்சை இழுத்துவிட, அவளின் மனம் சமாதானம் அடைய மறுத்தது..

“அப்படி சொன்னால் யார் அந்த ராகுல், யார் அந்த பிரதாப் என்று என்னிடம் கேட்டிருந்தால் கூட பரவல்ல..” என்று நினைத்தவள் ஒரு நொடி, ‘இவனுக்கு ராகுல், சுனில், நிவாஸ் எல்லாம் யார் என்று தெரிந்தால் அவனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..?!’ என்று கண்ணை முடி அவன் முகம் போகும் போக்கை நினைத்துப் பார்த்தவள் தன்னையும் மீறி சிரிக்க ஆரமித்தாள்..

“ஹா.. ஹா.. ஹா.. இரும்பு மனிதா.. நீ சும்மாவே ஒரு சிடுமூஞ்சி.. இதில் உன்னோட முகத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்தால் ஐயோ அம்மா என்னால் முடியலடா ராமா..” என்று அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே கோபத்தின் மொத்த ரூபமாக நின்றிருந்தான் சுனில்..

அவனை அங்கே எதிர்பார்க்காத தென்றல், “டேய் நீ எப்போடா வந்தா..?!” என்று கேட்டதும், “உனக்கு பைத்தியம் முத்திவிட்டதா..?!” என்று அவன் கேட்ட கேள்வியில் அவள் திருதிருவென முழிக்க, “மூஞ்சியை பாரு தேவாங்கு..” என்று கூறிய சுனிலை முறைத்தாள் தென்றல்..

அவளின் முறைப்பை கண்ட சுனில் அவளின் அருகில் அமர்ந்து, “என்ன முறைக்கிற..?! தனியாக உட்கார்ந்து சிரிக்கும் உன்னைப் பார்த்தால் யாராக இருந்தாலும் உன்னைப் பைத்தியம் என்று தான் நினைப்பாங்க..” என்று சொல்ல, ‘அவன் சொல்வதும் உண்மைதான்..’ என்று நினைத்து அமைதியாக இருந்தாள் தென்றல்..

அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த சுனில், “இப்பொழுது சொல்லு நீ இப்படி தனியாக உட்கார்ந்து சிரிக்க யார் காரணம்..?!” என்று கேட்டதும் அவள் நொடியும் தாமதிக்காமல், “இரும்புமனிதன்..” என்று கூறினாள்..

“இரும்பு மனிதனா..?! அவன் என்ன பண்ணினான்..?” என்று அறிவான கேள்வியைக் கேட்டான் சுனில்.. அவன் கேட்ட கேள்வியில் அவளின் மனம் மீண்டும் நடந்தவற்றை நினைக்க, “அது பற்றி அப்புறம் சொல்கிறேன்.. எனக்கு எங்கே ஐஸ்க்ரீம்..?!” என்று கேட்டாள் தென்றல்..

அவள் ஐஸ் என்று சொன்னதும் சுதாரித்த சுனில், “எதுக்கு உனக்கு ஐஸ்..?!” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் அவள் மீண்டும் கடுப்பாக, “டேய் நேற்று என்னிடம் என்ன சொல்லிட்டுப் போனா..?” என்றதும், “என்ன சொல்லிட்டு போனேன்..?!” என்று அவன் யோசிக்க, “டேய் நீயும் என்னை வாதிக்காதே.. எனக்கு ஐஸ் வாங்கித்தரேன் என்று சொல்லிட்டு தானே போனா..?!” என்று அவள் அழுகாத குறையாக கேட்டதும் அவனுக்கு சிரிப்பு வைத்தது..

“நாங்கெல்லாம் அரசியல்வாதிங்க.. கொடுத்த வாக்கை கொடுத்த இடத்திலேயே மறந்துவிடுவோம்..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, “நான் யார் என்று உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்..” என்று அவள் அவனை மிரட்டினாள்..

அவள் மிரட்டியதும், “இங்கே பாரு தென்றல் என்னிடம் பாக்கெட் மணி இல்ல.. நீ தான் எனக்கு ஐஸ் வாங்கித் தரவேண்டும்..” என்று அவன் சொல்ல, அவளும் யோசிக்க ஆரமித்தாள்..

‘இப்பொழுது இருக்கும் கடுப்புக்கு ஜில்லுனு ஒரு ஐஸ் சாப்பிட்டால் சும்மா சூப்பராக இருக்குமே..’ என்று நினைத்தவள், “சரிடா சுனில் வா நாம் ஐஸ்க்ரீம் பார்லர் போகலாம்..” என்று அழைத்துச் சென்றாள்..

அவளுக்கு எல்லாம் மறந்து போனது என்று சொல்ல முடியாது.. ஆனால் இப்பொழுது அந்த விஷயத்தை மறந்துவிட்டாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்..

அவளும் சுனிலும் பேசிய வண்ணம் ஐஸ்க்ரீம் பார்லர் சென்று இருவரும் அமரவும், பிரதாப், ராகுல், நிவாஸ், ஷிவானி நால்வரும் வரவும் சரியாக இருந்தது..

அவள் வருவதைக் கவனித்த சுனில், “தென்றல் நம்ம பட்டாளம் வந்துவிட்டது..” என்று குஷியாக சொல்ல, ‘அவன் யாரைச் சொல்வான்..’ என்று தெரிந்து வைத்திருந்த தென்றல்,

“வரட்டும் சுனில் இந்த நிவாஸ் தான் என்னை மாட்டவே வைத்தான்.. இருக்குடா இன்னைக்கு அவனுக்கு தனி கச்சேரி..” என்று பல்லைக் கடித்த தென்றலைப் பார்த்த சுனில், “உனக்கு இன்னைக்கு என்னடி ஆச்சு..?!” என்று கேட்டதும், “என்னோட வாயைக் கிளறி வாங்கிக் கட்டிகாதே சுனில்..” என்று எச்சரிக்கை செய்தாள் தென்றல்.. அவள் எப்பொழுது இப்படிதான் என்பதால் சுனில் அதிகம் அவளைக் கண்டுக் கொள்ளவே இல்லை..

அவர்கள் நால்வரும் வந்து அமர, தென்றலோ மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்துக் கொண்டே அமர்ந்தவர்கள் சுனிலிடம் கேட்டதும், ‘அவள் செம கோபத்தில் இருக்க.. என்ன என்று கேட்டால் பதில் பேச மாட்டேன் என்கிறாள்..’ என்று அவன் சைகையில் சொல்ல அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

அவளின் முகத்தைப் பார்த்த பிரதாப், “எதுக்கு இப்படி மூஞ்சியை முனி அடித்து போல வைத்திருக்கிறாய்..?” என்று கேட்டதும், “எனக்கு இன்னைக்கு முனி அடித்துவிட்டது..” என்று தென்றல் சொல்லவும், “நீ திருப்பி அடிக்காமல் வந்திருக்க மாட்டாயே..?!” என்று நக்கலாகக் கேட்டான் ஷிவானி..

“நீ சொல்வதும் சரிதான் ஷிவானி.. முனிக்கே பேய் ஓட்டிட்டுதான் வந்தேன்..” என்று சொல்ல, அப்புறம் அவர்கள் அடுத்தடுத்து பேச்சு கொடுக்க அவள் மற்றதை மறந்து சிரிக்க ஆரமித்தாள் தென்றல்..

அவள் சென்றதும் அறைக்குள் சென்றவனின் போன் அடிக்க அதை எடுக்க மனம் இல்லாமல் அமர்ந்திருந்தான் மனோ.. அதுவிடாமல் அடித்துக்கொண்தே இருக்க எரிச்சலுடன் போனை எடுத்து காதில் வைத்தும்,

“ஹாய் மனோ.. நான் சாரு..” என்று சொல்ல, ‘சாரு..?!’ என்று யோசித்த மனோ, “ஹே சாரு..! எப்பொழுது இந்தியா வந்த..?! என்ன திடீரென்று கனடா இருந்து வந்திருக்கிறாய்..?!” என்று அவன் சந்தோஷத்தில் கேட்டதும்,

“டேய் என்னை எல்லாம் இன்னும் நினைவில் தான் வைத்திருக்கிறாயா..?! எங்கே இருக்கிறாய் அட்ரஸ் சொல்லு..” என்று கேட்டதும், “நீ எங்கே இருக்கிறாய் அதை முதலில் சொல்லு சாரு..” என்று சந்தோசமாகக் கேட்டான் மனோ..

“இங்கே உன்னோட கன்ஸ்ட்ரக்ஷன் பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் இருக்கிறேன் டா..” என்று அவள் சொன்னதும், “நீ அங்கேயே இரு சாரு நான் இதோ இப்பொழுது வருகிறேன்..” என்று கூறியவன் வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு சென்றான்..

அவன் காரை பார்லர் முன்னாடி நிறுத்த அவன் இறங்கியதும் அவனைப் பார்த்த சாரு, “ஹாய் மனோ..” என்று சொல்லி காரை விட்டு அவள் இறங்க, “என்னோ திடீரென்று வந்து நின்று பெரிய ஷாக் எல்லாம் கொடுக்கிறாய்..” என்று அவன் கேட்டதும் அவனைப் பார்த்து சிரித்த சாருலதா மனோவின் அன்புதோழி..

‘இவனுக்கு தோழியா..?! என்று யோசிக்கிறீங்களா..?! ஏன் மனோவிற்கு தோழி இருக்க கூடாதா என்ன..?!

இவள் அவனை சின்ன வயதில் இருந்து பார்க்கிறாள்.. அதனால் இவனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்.. இப்பொழுது திருமணம் முடிந்து கனடாவில் இருக்கிறாள்..

“என்ன பண்றது மனோ..?! உனக்கு ஷாக் கொடுக்க நான் இப்படியெல்லாம் அதிரடியாக வந்து இறங்க வேண்டி இருக்கிறது..?! அப்படி வந்தால் தானே உன்னோட குரலில் சந்தோசத்தைப் பார்க்க முடிகிறது..” என்று கேட்டதும்,

“அம்மா தாயே நான் வாயே திறக்கவில்லை.. வா உள்ளே போய் உட்கார்ந்து பேசலாம்..” என்று அவன் அழைக்க, “நீ முதலில் போ..” என்று சொல்ல அவன் முன்னே செல்ல அவனின் பின்னோடு வந்தாள் சாரு..

எல்லோரிடமும் பேசியபடி திரும்பியா தென்றலின் பார்வை விழுந்தனர் மனோவும், சாருவும்.. அவர்கள் இருவரையும் பார்த்த தென்றல், “என்னோட கண்ணாடிக்கு பவர் போயிடுச்சோ..?” என்று அவள் ஏழாவது அறிவை தட்டி யோசிக்க அதை கேட்டு சிரிக்க ஆரமித்தனர் சிறுவர்கள்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“என்ன தென்றல் உனக்கு கண்ணில் இருக்கும் பவர் போனதால் தான் கண்ணாடி போட்டு விட்டாங்க.. இதில் உன்னோட கண்ணாடி பவரும் போயிட்டே இருக்க..?” என்று நக்கலாக கேட்டான் நிவாஸ்..

அவள் யாருக்கும் பதில் சொல்லாமல் இருக்க அவளை கேள்வியாக பார்த்தவர்கள் உதட்டைப் பிதுக்கிவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட அவளோ அவர்களை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்..

இருவரையும் பார்த்த தென்றலின் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை குழந்தைகள் கவனிக்கவே இல்லை.. இருவரும் வந்து டேபிளில் அமர அவர்களையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் தென்றல்..

இருவரையும் ஒன்றாக பார்த்தவளின் மனதில் கோபம் வேகமாக படர்ந்தது.. அது ஏன் என்று அவள் ஆராயும் முன்னரே, அவர்கள் இருவரும் பேச ஆரமித்தனர்..

“டேய் மனோ.. உன்னை நேரில் பார்த்து எத்தனை நாள் ஆச்சு..?! எப்படிடா இருக்கிறாய்..?!” என்று கேட்டதும், “நான் நல்ல இருக்கேன் சாரு.. நீ எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டான்..

அதைப் பார்த்து கொண்டிருந்த தென்றல், ‘இப்பொழுது நல விசாரிப்பு ரொம்ப அவசியமா..?!’ என்று நினைத்தாள்.. தன்னுடைய மனம் ஏன் இப்படி நினைக்கிறது என்று ஒரு முறை அவளின் மனதை அவள் கேட்டிருந்தால் அவளின் மனதில் இருக்கும் காதலை அவள் அறிய வாய்ப்புகள் இருந்திருக்கும்..

அவளோ இருவரின் பேச்சிலும் கவனம் செலுத்த, “என்னால் இன்னுமே மறக்கவே முடியல சாரு அந்த ஒரு விஷயத்தை மட்டும்.. என்னை எப்படி தூக்கி எறிஞ்சிட்டு போனாங்க தெரியுமா..?! இப்பொழுது நினைத்தாலும் வாழ்க்கையே வெறுத்துவிடும் சாரு..” என்று அவன் சொல்ல அதை அருகில் இருந்து கேட்ட தென்றலுக்கு மனம் வலித்தது..

இதற்கு மேல் கேட்கலாம் என்று அவளின் மனம் நினைத்தாலும் கூட அவளால் அங்கே இருக்க முடியவில்லை.. குழந்தைகளைப் பார்த்து, “நீங்க சாப்பிட்டுவிட்டு வாங்க நான் பில் பே பண்ணிட்டு நிற்கிறோம்..” என்று அவள் சொல்ல, “சரி தென்றல்..” என்று அவர்கள் கோரசாகச் சொல்ல, அந்த குழந்தைகளின் கோரஸ் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தனர் மனோவும், சாருலதாவும்!

அங்கே சென்றுக் கொண்டிருந்த தென்றலைப் பார்த்த சாரு, “தென்றல் நேம் ரொம்ப நல்ல இருக்கிறது இல்ல மனோ..?!” என்று அவள் அனுபவித்து சொல்ல செல்லும் அந்த பெண்ணைப் பார்த்தவன் மனம்,

‘தென்றல் நீ இங்கே தான் இருந்தாயா..?!’ என்று நினைத்தவன் சாரு கூறியதைக் கேட்டு, “ரொம்ப நல்ல பெயர் தான் சாரு..” என்று சொல்லவே அவனின் குரலில் மாற்றதை உணர்ந்த சாரு,

“என்னடா தென்றல் என்ற பெயருக்கும் உனக்கும் ரொம்ப சம்மந்தம் போல..” என்று கிண்டலாகக் கேட்டதும், “எப்படி சாரு சரியாக சொல்கிறாய்..?!” என்று அவளின் முகத்தைப் பார்த்து கேட்ட மனோ அவளுக்கே புதிது..

அவள் அவனை அதிசயமாகப் பார்க்க அவளின் பார்வையை உணர்ந்த மனோ, “என்னம்மா ரொம்ப ஷாக் கொடுக்கிறேனா..?!” என்று கேட்டான் மனோ.. அவனின் குரலில் கேலி இருந்ததே தவிர அவனின் முகம் இறுகிய பாறை போலவே இருந்தது..

“இதுக்கு பெயர் தான் மனோ ஷாக்.. நீயும் ஒரு பெண்ணை ஒரு பெண்ணை விரும்புகிறாயா..?! யாருடா அந்த அதிசய புயல்..?!” என்று சந்தோசமாக கேட்டான் சாரு..

“உன்னிடம் சொல்கிறேன் சாரு.. ஆனால் இப்பொழுது இல்ல..” என்று சொல்ல, “ஏன் இப்பொழுது சொன்னால் நான் என்ன அவளை கடத்திட்ட போக போகிறேன்..?!” என்று அவள் விளையாடாக கேட்டதும், “நீ அவளை கடத்துகிறாயா..?! அவள் உன்னை கடத்தாமல் இருந்தால் சரிதான்..” என்று சொல்ல அவனைப் பார்த்த சாருவின் மனம்,

‘நீ இந்த அளவுக்கு ஒரு பொண்ணை விரும்புகிறாயா மனோ..?! உன்னோட மனதில் இருக்கும் காயங்களுக்கு அவள் மருந்தாக இருந்தால் அதுவே எனக்கு போதும்..’ என்று நினைத்தவள்,

“உன்னோட மனதில் இருக்கும் பெண்ணையே நீ கரம் பிடிக்க என்னோட வாழ்த்துகள் மனோ.. தாத்தா எப்படி இருக்கிறார்..?! இப்பொழுது எங்கே இருக்கிறார்..?! என்று கேட்டதும்,

“தாத்தா ஊட்டியில் இருக்கும் எஸ்டேட்டில் இருக்கிறார் சாரு.. எனக்கு அவர் அடிக்கடி போன் பண்ணுவார்.. என்ன எனக்குதான் பேசவே நேரம் இருக்காது..” என்று அவன் சொல்ல அவனை புரிந்துக் கொண்ட சாரு,

“டைம் கிடைக்கும் என்று பார்த்தால் உறவுகள் நிலைக்காது மனோ.. உன்னோட தாத்தா உன்னை ஒரு மனிதனாக மாற்றி இருக்கிறார் அதற்காக அவரிடம் கொஞ்சம் பேசுடா..” என்று சொல்ல, சரியென்றான்..

பிறகு அவளைப் பார்த்த மனோ, “நீ எதற்கு இங்கே வந்திருக்கிறாய்..?!” என்று கேட்டதும், “இது என்னடா கேள்வி உன்னைப் பார்க்க நான் வந்தாலும் அதுக்கும் என்னிடம் கேள்வி கேட்கிறாய்..?” என்று அவள் கோவித்துக் கொள்ள, “சரிடி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்ளாதே பார்க்க சகிக்காது..” என்று அவப் சொல்ல, “டேய் உனக்கு இந்த அளவுக்கு வாய் பேச கற்றுக் கொடுத்த அம்மாயி யாருடா..?!” என்று கேட்டாள்..

“என்னாது அம்மாயா..?!” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்க, “தெலுங்குல அம்மாயி என்றால் பொண்ணு என்று அர்த்தம் டா.. அவரோட பேசி பேசியே எனக்கு தெலுங்கு தான் வருது நான் என்ன பண்ண..?!” என்று கேட்டதும்,

“என்னடி இப்படியெல்லாம் எனக்கு ஷாக் கொடுக்கற..?!” என்று இவன் இங்கே பேசிக் கொண்டிருக்க தூரத்தில் இருந்து அவர்களைப் பார்த்த தென்றல் மனம் பரிதவித்தது..

‘என்னோட மனம் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது..?! அவன் சிரிக்க வேண்டும் என்று நான் ஏன் எதிர்பார்க்கிறேன்..?! எனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்..?!’ அவள் மனதிற்குள் கேள்விகளைத் தொடுக்க அவள் மனம் அமைதியாக இருத்தது..

“இப்பொழுது நீ பதில் பேசியே ஆகணும்..?!” என்று அவள் மனதுடன் பேசுவதாக நினைத்து வெளியே வார்த்தைகளைவிட, “உனக்கு யார் பதில் சொல்ல வேண்டும் தென்றல்..” என்று கேட்டான் நிவாஸ்..

அதற்குள் மாலை ஆறு ஆக, “நீங்க எல்லாம் போ ட்ரஸ் மாத்திட்டு வாங்கடா.. நாம் எல்லாம் இன்னைக்கு சர்ச்சிற்கு போகலாம்..” என்று அவள் சொன்னதும், “ஹைய்யா ஜாலி..” என்று கத்திய ஐந்து பெரும் அவரவர்கள் வீட்டிற்கு செல்ல அவள் அந்த சாலையில் மீண்டும் நடக்க ஆரமித்தாள்..

தன்னுடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்கு விடைதேடி நடந்தவளின் மனம் மட்டும் அவளிடம் இல்லை என்பதை உணர்தே அமைதியாக அவள் செல்ல அவளோடு கைகோர்த்து இயற்கையாக வீசும் தென்றல் காற்று..

தென்றலை காற்றை ரசித்த வண்ணம் நடந்தவளின் மனதில் தோன்றிய பாடல் வரிகளை முணுமுணுத்துக் கோடி நடந்தாள்..

கால் போகும் போக்கில்.. மனம் போகும் நாளில்..

கிடையாது தடைபோட முள்வேலிதான்..

நான் போகும் பாதை.. நிழல் போல கூட..

வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்..

நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ..

நீரில்லாம் வாடும் எந்தன் ஊரை தேடுதோ..

நானும் என்னை கேள்வி கேட்டும் நாள் இது..

திருநாள் இது..” என்று பாடிய வண்ணம் தேவனின் ஆலயம் நோக்கி நடக்க ஆரமித்தாள் தென்றல்.. அவளின் அந்த மாலை பொழுது அவளுக்கு ஒரு அழகிய பரிசை தேவனின் ஆலையத்தில் வைத்திருந்தார் இறைவன்..
 




Last edited:

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Nice episode dear.... So Mano vukku காதல் Thendral Mel....????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அவனை அங்கே எதிர்பார்க்காத தென்றல், “டேய் நீ எப்போடா வந்தா..?!” என்று கேட்டதும், “உனக்கு கிளம்பிவிட்டதா..?”

இந்த வரி புரியவில்லை... உனக்கு கிழண்டுவிட்டதா...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அவள் மிரட்டியதும், “இங்கே பாரு தென்றல் என்னிடம் பாக்கெட் மணி இல்ல.. நீ தான் எனக்கு ஐஸ் வாங்கித் தரவேண்டும்..” என்று அவள் சொல்ல, அவளும் யோசிக்க ஆரமித்தாள்..

அவன் சொல்ல .... change pannu da
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
தென்றல் நீ இங்கே தான் இருந்தாயா..?!’ என்று நினைத்தவன் சாரு கூறியதைக் கேட்டு, “ரொம்ப நல்ல பெயர் தான் சாரு..” என்று சொல்லவே அவனின் குரலில் மற்றதை உணர்ந்த சாரு,

மாற்றத்தை..... change pannu da
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top