ENE --- epi 2

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்கள்ஸ்,

வெள்ளி போடறது. ஞாயிறு ஆச்சு. மன்னிச்சு :)

எபி 2.

ENE CP.jpg
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அத்தியாயம் 2

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க !!!

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே

வழி வருக வழி நெடுக ஒளி நிறைக
வாழ்விலேகண் முன்னே நின்றவளை இமைக்க மறந்து பார்த்தான் விபாகர். மற்ற பெண்களை போல் இல்லாமல், வித்தியாசமாக இருந்தாள் அவள். எங்கேயோ பார்த்த முகம் மாதிரியே இருந்தது அவனுக்கு. ஒட்ட வெட்டிய தலை முடியில் முன்னுச்சியில் மட்டும் 5 சென்டிமீட்டர் அளவுக்கு முடியை வளர்த்து பச்சை டை அடித்திருந்தாள். பாலும் சந்தனமும் சேர்த்துக் குழைத்த வண்ணத்தில் இருந்த முகத்தில் அந்த பச்சை முடி கற்றை விழும் அழகே அலாதியாக இருந்தது. வலது காதில் பெரிய சில்வர் வளையமும், இடது காதில் நட்சத்திர வடிவ தோடும் போட்டிருந்தாள். விபாகரின் இதய துடிப்பைக் கூட்டியது , வலது கண் புருவத்தில் துளையிட்டு அவள் அணிந்திருந்த பச்சை வர்ண ஆபரணம்(பியர்சிங்). அவன் அறியாமலே கை நீண்டது அதைத் தொட்டு பார்க்க.

சட்டென்று பின்னடைந்தவள்,” அம்மா, எண்ணெய சூடு பண்ணிட்டிங்களா? சீக்கிரம் வாங்க. எனக்கு மணியாகுது. டேனி வந்துருவான். அப்படியே பிரபு அண்ணனையும் கூப்பிடுங்க” என்றவள் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு அங்கே ஒருவன் படுத்து இருப்பதையோ, தன்னையே கண் எடுக்காமல் பார்ப்பதையோ கண்டு கொள்ளவில்லை.

“இந்தாம்மா தானு, சூடு பண்ணிட்டேன். நான் போயி டேனியோட கேசரியை பேக் பண்ணுறேன்.” என்று நகர்ந்தவரை கைப்பிடித்து தடுத்தாள்.

“இங்கயே இரும்மா. நான் முடிச்சவுடன் போலாம்” என்றவள் எண்ணையை விபாகரின் காலில் இட்டு தேய்த்தாள்.

தன்னுடன் தனிமையில் இருக்க இவள் பிரியப்படவில்லை என கண்டு கொண்டான் விபாகர். என் கன்னத்தை தொட்டு துடைக்கும் போது இந்த பயம் எங்க போச்சு என மனதிலே அவளை கொஞ்சினான். ஆமாம், கொஞ்சல்தான். இதுவரை பரிவாய் ஒரு பார்வை பார்க்க கூட ஆளில்லாமல் இருந்தவனுக்கு, தன் கண்ணீரை துடைத்த அவளின் செய்கை ஆன்மாவை தீண்டியது. தங்களின் சுய லாபத்துக்காக மட்டுமே தன்னை நெருங்கும் பெண்களையே கண்டிருந்தவன், அதிசயமாக அவளை பார்த்தான்.

அப்பொழுது உள்ளே நுழைந்த பிரபுவை அழைத்து காலை அசையாமல் பற்றிக்கொள்ள சொன்னாள் தானு. “அண்ணா, இப்போ ரொம்ப வலிக்கும், உங்க ப்ரெண்ட பொறுத்துக்க சொல்லுங்க” என்றவள் பலம் கொண்ட மட்டும் கணுக்காலை ஒரு உறுவு உறுவினாள்.

வலி உயிர் போனாலும், முழு பலத்தையும் பிரயோகித்ததால் முகம் எல்லாம் சிவந்துபோய் மூச்சு வாங்கிய அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் விபாகர்.

“பிரபு அண்ணா முடிஞ்சது. அம்மா இஞ்சி சோடா கொண்டு வந்து கொடுப்பாங்க. குடித்தவுடன் கிளம்பலாம். அப்புறம், இந்த வேலையெல்லாம் இலவசமா செய்ய கூடாதுன்னு பாட்டி சொல்லுவாங்க. ஹால்லே குபேரன் சிலை இருக்கு. அங்கே முடிஞ்ச தட்சணைய வெச்சிட்டு போங்க. நாளைக்கு ஒரு நாள் மட்டும் திரும்பவும் வந்து உருவிக்க சொல்லுங்க” என்றவாரே எழுந்தாள்.

“இன்னிக்கி நைட் ப்ளைட் மா இவனுக்கு. கெளம்பிருவான்” என சொல்லி முடிக்கும் முன்னே விபா அவன் கையை பிடித்து அழுத்தினான்.

திரும்பி நண்பனை ஆழ பார்த்த பிரபு,” சரி பாப்பா நாளைக்கு வரோம்” என முடித்தான்.

தன் வேலை முடிந்தது என்பது போல அம்மா என அழைத்து கொண்டே வெளியேறியவளின் கையை எட்டி பிடித்தான் விபாகர். அவள் கையை உதறவும் இல்லை அவனை திரும்பி பார்க்கவும் இல்லை. அப்படியே நின்றாள்.

“தேங்க்ஸ்டா, எல்லாத்துக்கும் “என்றான் அந்த எல்லாத்துக்கும் என்ற வார்த்தயை அழுத்தி. அந்நோடி அவள் கை நடுங்கியதை துள்ளியமாக உணர முடிந்தது அவனால். மற்றொரு கரம் கொண்டு அவனது கையை பிரித்தெடுத்து விட்டு விடுவிடுவென வெளியேறினாள் தானு.

கற்பகம் கிச்சனுக்கு சென்ற கேப்பில் நடந்த இந்த காட்சியை வாயை பிளந்து பார்த்த பிரபு,

“என்னடா நடக்குது இங்கே? வேணாடா விபா இந்த விபரீத விளையாட்டு. இவள மாதிரி ஒரு அராத்த எங்கேயும் பார்த்திருக்க மாட்டே. கண்ண திறந்து கிட்டே குழியில போயி விழாதே. நீ வாழ வேண்டிய பையன். வாழ்க்கையிலே யுத்தம் வரலாம், ஆனா யுத்தக்களத்திலே வாழ்க்கை நடத்தமுடியாதுடா” என புலம்பினான்.

சமயலறையிலிருந்து பேச்சு குரல் கேட்கவும், பிரபுவை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான் விபாகர்.

“ம்மா, அவன்கிட்ட முந்நூறு வெள்ளி வாங்கி வைக்க சொன்னேனே. கேட்டிங்களா?” என வாயில் எதையோ அடைத்துக் கொண்டே கேட்டாள் தானு.

“என்னடி அவன் இவன்னுக்கிட்டு. அண்ணன் மேலே கொஞ்சம் கூட மரியாதையே இல்ல”

‘மரியாதை எல்லாம் தானா வரணும். இப்படி நீங்க கேட்டு வாங்கி குடுக்க கூடாது மம்மி சாயாங்(செல்லம்). இன்னும் பினாங்கு ட்ரிப்கு ஒரு வாரம் தான் இருக்கு. டேனி என்னோட எல்லா செலவும் பாத்துகிறேன்னு சொல்லிட்டான். இருந்தாலும் மற்ற நண்பர்களெல்லாம் என்னை செரிட்டி கேஸ் மாதிரி பார்க்கறது எனக்கு பிடிக்கல. என்னோட பார்ட் டைம் வேலை சம்பளம் லேட்டாதான் கிடைக்கும். இல்லாட்டி நான் ஏன் அவன கெஞ்ச போறேன்.”

“சரி சரி, உடனே மூஞ்சிய தூக்கி வச்சுக்காதே. அவன் கிளம்புற அவசரத்துல கேக்க வேணாமேனு தான் விட்டுட்டேன். அவன் வரட்டும் சொல்லி பாக்குறேன். சீக்கிரம் கோப்பிய குடி. உன் கோப்பி ஆத்துற வேலக்கு நேரமாச்சு. நான் அந்த தம்பிக்கு சோடா குடுத்துட்டு வரேன்.”

“அம்மா!!!! எத்தனை தடவை சொல்றது. அந்த வேலைக்கு பேரு பாரிஸ்தா. நான் ஸ்டார்பக்ஸ்ல கோப்பி ஆத்துறனு ஊரே சொல்லி வச்சிருக்கீங்க. என் மானமே போகுது” என அழகாய் சிணுங்கினாள்.

அவர்கள் சம்பாஷணையை கேட்டு கொண்டிருந்த விபாகருக்கு, அவன் சம்பாதித்ததையும் இனிமேல் சம்பாதிக்க போவதையும் அப்படியே அவள் காலடியில் கொட்ட மனம் விழைந்தது. தனது வாலட்டை திறந்து 500 வெள்ளியை எடுத்தவன் பிரபுவிடம் கொடுத்தான்.

“அவ சொன்ன சிலைக்கிட்டே வைடா”

“டேய், ஐநூறு எல்லாம் ஓவரு. உனக்கு அவள பத்தி இன்னும் தெரியல. இப்பத்தான் என் மண்டைய காய வச்சா. உன் மண்ட பத்திரம்”

“போடா எல்லாம் நான் பாத்துக்குவேன்” என அசால்ட்டாய் சொன்னான் விபா.

கற்பகம் வரும் அரவம் கேட்டு, பிரபு பணத்தை வைக்க வெளியேறினான்.

“இந்தாங்க தம்பி குடிங்க” என பானத்தை நீட்டினார்.

“ரெண்டு நாளைக்கு ரொம்ப நடக்காதிங்க. என் மக ரொம்ப கைராசிக்காரி. அவ கைப்பட்டாலே குணமாயிரும். எங்க மாமியார் ட்ரைனிங். அவங்களுக்கு பிறகு இந்த கைவைத்தியம் எல்லாம் அழிஞ்சிட கூடாதுனு இவங்க ரெண்டுபேருக்கும் சொல்லி கொடுத்துருக்காங்க. இப்போ மாமி இல்லைனாலும் இவங்க தொடர்ந்துகிட்டு இருக்காங்க. பந்து விளையாட்டுல காலு சுளுக்கினவங்க, விபத்துல நரம்பு பிசககினவங்க இப்படி யாராச்சும் வந்துகிட்டே தான் இருப்பாங்க. அவங்களுக்கு ஒதுக்கனுதுதான் இந்த சின்ன ரூம்” என பேசிக்கொண்டே போனார்.

தன்னை தவிர மற்ற ஆடவர் மீது அவள் கை படுவது போல் ஏற்பட்ட பிம்பத்தில், விபாகரின் உடல் இறுகியது.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
“ஆனா இவ ஆம்பள பசங்களுக்கு செய்ய மாட்டா தம்பி. இப்போ உங்களுக்கு கேட்ட போது கூட முடியாதுன்னு சொல்ல தான் ரூமுக்கு வந்தா. அப்புறம் மனசு மாறிட்டா போல.” என்றார்.

அதை கேட்டவுடன் தான், உடல் இறுக்கம் தளர்ந்து, கற்பகத்தை பார்த்து புன்னகைத்தான்.

அறையினுள் நுழைந்த தானுவின் கையில் அந்த 500 வெள்ளி இருந்தது. அவர்களின் கண் முன்னே 50 வெள்ளியை எடுத்து அவள் ஜீன்ஸ் பாக்கேட்டில் வைத்தவள், மீதி பணத்தை மடித்து விபாகரின் கையில் திணித்தாள்.

அவனது கண்களை நேராக பார்த்து "நாங்க பேசியதை கேட்டிங்களா ? நீங்க யாரு எனக்கு பணம் குடுக்க ? மைண்ட் யுவர் ஓவ்ன் பிஸ்னஸ், வில் யூ?" என்றவள் பிரபுவை திரும்பி பார்த்து "கிளம்புங்க" என வார்த்தையை கடித்து துப்பினாள்.

"தான்யா ஶ்ரீ, பெரியவங்ககிட்ட இப்படி தான் நடந்துகிறதா? இது தான் நீ படிச்ச மேனர்ஸ்சா" என கற்பகம் கடிந்து கொண்டார்.

"மன்னிச்சுக்கோங்க தம்பி. இவளுக்கு எங்க இருந்துதான் இவ்வளவு கோபம் வருமோ தெரியலே. பத்து இருபது வெள்ளி தான் சாங்கியத்துக்கு குடுப்பாங்க தம்பி. நீங்க இங்க புதுசுனால உங்களுக்கு தெரியல. பிரபு, தம்பிய மெதுவா கூட்டி போ பா" என கூறியவர் மகளை கண் ஜாடையிலே வெளியேற சொன்னார்.

தோளை ஸ்டைலாக குலுக்கியவள் “வாட் எவெர்” என்றவாரே வெளியேறினாள்.

“போகும்போதே நம்பள ஒரு மாதிரியா பாக்குறாளே. கொஞ்ச நாளைக்கு காரை கேட் உள்ள தான் பார்க் பண்ணனும். எதிர் வீட்டு அங்கிளோட கார் கண்ணாடிய உடைச்ச மாதிரி , நம்பளையும் செஞ்சிர போறா" என புலம்பியவாறே விபாகரை கை கொடுத்து தூக்கினான் பிரபு.

அவர்கள் மெதுவாக வெளியே வரவும், வீட்டின் முன் ஒரு பைக் நிற்கவும் சரியாக இருந்தது.

"ஆன்ட்டி கற், டான்யா சாயாங்" என கத்தியவாறே பைக்கை முறுக்கினான் அவன்.

"வந்துட்டாண்டா உறிச்ச கோழி" என முணுமுணுத்தான் பிரபு. " நல்லா பாத்துக்கோ விபா. இவந்தான் உனக்கு வில்லன். சாதாரண வில்லன் இல்ல வில்லாதி வில்லன்" என கிசுகிசுத்தான் பிரபு.

தலை கவசத்தை கழட்டி விட்டு, பைக் கண்ணாடியை பார்த்து தலையை கோதினான் டேனி ஓங். சைனீஷ் அப்பாவுக்கும், அஸ்திரேலியன் அம்மாவுக்கும் பிறந்தவன் அவன். வாட் அ வெள்ளை என பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் அவன் நிறம். முடியை ஸ்பைக் செய்து பச்சை டை அடித்திருந்தான். அவ கூட்டாளி தானே வேற எப்படி இருப்பான். இது ஜிம் பாடிடா என பார்ப்பவரை நினைக்க வைக்கும் உடற்கட்டு. அரைக்கால் பேண்ட் போட்டிருந்ததால், கணுக்காலில் இருந்து தொடை வரை குத்தியிருந்த ட்ராகன் டாட்டூ கண்களுக்கு காட்சி தந்து மிரட்சியை கொடுத்தது.

விபாகருக்கு பக்கென்று இருந்தது. என் வெனிலாவும் பச்சை(டாட்டூ) குத்தியிருப்பாளா? அவள் காலில் இருந்து பச்சை பாம்பு படம் எடுத்தாடுவது போல் ஒரு பிம்பம் தோன்றி வயிற்றை பிரட்டியது.

டேனி இவர்களை பார்த்து” ஹாய் காய்ஸ்” என கை அசைத்தான். பிரபு அவன் அக்மார்க் அசட்டு சிரிப்பை உதிர்க்க, விபாகர் அவனை கண்டுகொள்ளவே இல்லை.

"பை மா. எனக்கு வேய்ட் பண்ணாதிங்க. எப்போதும் போல ராத்திரி 12 ஆயிரும். என்னோட கீ நான் எடுத்துகிட்டேன். " என்றவாறே வெளியே வந்தாள் தான்யா.

இவர்களது ஆங்கில உரையாடல் தமிழில் தரப்பட்டுள்ளது.

"பேப், இன்னிக்கி பைக் தான். டாடிக்கு என் மேலே செம்ம கோபம். கார் கீய புடுங்கி வச்சிகிட்டாரு. ஆஸ்திரேலியா போக ஓகே சொல்ற வரை இனிமே இப்படிதான். ஐ டோண்ட் கிவ் அ டேம்ன்." என்றவாரே அவளுக்கு என எடுத்து வந்த தலை கவசத்தை அணிவித்தான்.

" இந்தா டேனி, கேசரி. அம்மா குடுத்தாங்க" என கூறியவாறே அவனது தோளை பற்றி பின்னால் ஏறினாள் தானு.

" வாவ்.. எனக்கு பிடிச்ச டிஷ். எங்கே என் சாயாங் ஆன்ட்டி? " என கேட்டவாறே ஹாரனை அமுக்கினான் டேனி.

" வரேன், வரேன் " என்றாவாறே வந்தார் கற்பகம்.

"தேங்க்ஸ் ஸ்வீட்டி ப்போர் த ஸ்வீட்" என்றவாறே அவர் கன்னத்தில் முத்தமிட்டான் டேனி.

"டேய் வாலு, கன்னத்தை எச்சி பண்ணுறதே உனக்கு வேலையா போச்சி. கிளம்புங்க. லேட் ஆச்சி "

இதையெல்லாம் பிரபுவின் வீட்டின் அருகே நின்றபடியே பார்த்துக்கொண்டு இருந்தான் விபாகர்.

‘குழந்தைக்கு செய்வதை போல் ஹேல்மட்டை மாட்டி விடுறான், அவ அம்மாக்கு முத்தம் வைக்கிறான். இவன் ப்ரெண்டா பாய்ப்ரெண்டா’ என பட்டிமன்றம் நடந்தது அவனுள்ளே.

‘யாரா இருந்தாலும் இனிமே அவன், அவளோட கடந்த காலம். இனி நான் மட்டும் தான் அவளின் எதிர்காலம்’ என்ற முடிவை எடுத்தான் விபாகர். ‘கூடிய சீக்கிரம் உங்க எல்லார்கிட்டயும் இருந்து அவள பிரிச்சு என் கூடவே வச்சிக்குவேன். எனக்கு உரிமையானத யாரிடமும் பங்கு போட்டுக்க மாட்டேன். அது அவ அம்மாவா இருந்தாலும் சரி’,என எண்ணியவன் , தன் எண்ணம் செல்லும் போக்கை கண்டு திகிலடைந்தான்.

யாரிவள்? பார்த்த நொடியிலிருந்து என் இயல்பையே மாற்றுகிறாள்? கன்னத்தை துடைத்த போது அவள் கண்ணில் தோன்றிய காருண்யம் ஏன் என்னை கட்டி போடுகிறது? இனி இவள்தான் என் உலகம் என ஏன் எண்ண வைக்கிறது? அவனுக்கு கால் வலி போய், தலை வலி வந்தது.

டேனியின் தோளை அணைத்தவாறே பைக்கில் செல்லும் அவளை விழி இமைக்காமல் பார்த்தான் விபாகர்.

“ஏஞ்சல், சூன் யூ வில் பி மைன் ” என தன்னை சமாதானம் செய்து கொண்டான் வேணு விபாகர்.

எட்டி நில்லு...
 

Advertisements

Top