ENE --- epi 3

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்களே,

இன்னிக்கு எபி 3.

இந்த கதையில பல குறைகள் இருக்கும். எழுத்துப் பிழை, தவறான வார்த்தை பிரயோகம் இப்படி நிறைய. எதையும் நான் மாத்தல. ஆரம்பகால வநிஷாவ அப்படியே ஏத்துக்குங்க ப்ளிஸ் :love::love::love:

ENE CP.jpg
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
அத்தியாயம் 3

முதல் பார்வையிலே என்னை

நீ கொள்ளை அடித்தாயே

என் உள்ளம் முழுவதிலும்

நீ வெள்ளை அடித்தாயே
KLCC மால் எப்பொழுதும் போல் இன்றும் வண்ணமயமாக காட்சி அளித்தது. பலதரப்பட்ட கடைகளும், உணவிடங்களும், சினிமா அரங்குகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கீழே சில மாடிகள் பொழுதுபோக்கு அம்சத்துக்காகவும், மேலே உள்ள மாடிகள் அலுவலக இடமாகவும் அமைக்கபட்டதே KLCC என அழைக்கபடும் இரட்டை கோபுரம்.

அங்கே இருந்த ஸ்தார்பக்ஸ்சில் தான் தான்யாஶ்ரீ பாரிஸ்தாவாக பார்ட் டைம் வேலை செய்கிறாள். அவளது வேலை மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு பதினொன்றுக்கு முடியும். கணக்கை முடித்து, சுத்தம் செய்து கிளம்ப 12 மணி ஆகிவிடும்.

மால் நுழைவாயிலில் இறக்கி விட்ட டேனியிடம் கையசைத்து விட்டு கபேயை நோக்கி சென்றாள் தானு.

கறுப்பு நிற ஏப்ரனை கட்டி கொண்டு கௌண்டர் பின்னால் வேலையை தொடங்கினாள் அவள். இந்த கபேயில் எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இன்றும் வருபவர்களை இன்முகமாக வணங்கி அவர்கள் கேட்ட பானங்களை தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தாள் தான்யா.

நான்கு பேர் வேலை செய்தும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். பத்து மணிக்கு மேல் தான் தான்யாவுக்கு ப்ரேக் எடுக்க நேரம் கிடைத்தது. ஒரு வெனிலா லாட்டேயுடன் சென்று பணியாளர்கள் ஓய்வு எடுக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டாள். பானத்தை அருந்திகொண்டே வீட்டிற்கு வந்திருந்த விபாவை முதன் முதலாக பார்த்த நாளை எண்ணி பயணப்பட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவனை பார்த்தாள் தானு. டேனியும் அவளும் லோட் 10 எனப்படும் ஒரு மாலில் உள்ள மெக்டோனல்ட் துரித உணவு கடையில் அமர்ந்திருந்தனர். பள்ளி முடிந்தவுடன் அங்கே தான் சந்திப்பார்கள். வீட்டு பாடங்களை டிஸ்கஸ் செய்து கொண்டே சாப்பிடுவார்கள். பாடங்களையும் ஒன்றாக செய்து முடிப்பார்கள்.

“டேனி, அம்மா ஐந்து வெள்ளிதான் குடுத்தாங்க. எனக்கு ஒரு பர்கர் மட்டும் போதும். இந்தா போய் ஒர்டர் பண்ணு” என பணத்தை நீட்டினாள்.

“டான்யா, பள்ளியிலும் நீ ஒன்னுமே சாப்பிடல. காண்டின்ல வெறும் தண்ணிதான் குடிச்ச. என் ஆண் நண்பர்களோட இருந்தாலும் உன்னை கவனிச்சு கிட்டே தான் இருந்தேன். உனக்கு கொஞ்சம் கூட உடல் நலத்துல அக்கறை இல்ல. திரும்பவும் கேஸ்ட்ரிக் வந்தா துடிச்சு போயிருவ. இரு,நான் போய் ஏடிஎம்ல பணம் எடுத்துட்டு வரேன். அப்புறம் நல்ல சாப்பாடா வாங்கி தரேன்” என நகர்ந்தான்.

பள்ளி நண்பர்கள் எல்லாம் அவளை டான்யா என்றே அழைப்பார்கள். தா வார்த்தை சட்டென்று அவர்கள் வாயில் வருவதில்லை.

“ஷப்பா, இவன் அன்புடத்தொல்லை தாங்க முடியலடா சாமி” என முனகிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

டேனி ஏடிஎமில் பணம் எடுக்க சென்றிருந்த வேளையில், அவர்கள் மேசைக்கு அருகே ஒரு தமிழ் ஜோடி அமர்ந்தனர். அந்த பெண்ணை மட்டும் தான்யாவால் தெளிவாக பார்க்க முடிந்தது. அவ்வளவு அழகாக இருந்தாள். நேர்த்தியாக சுடிதார் அணிந்திருந்தாள். தானுவுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. ஆனால் பேசுவது நன்றாக கேட்டது.

"விபா, போன தடவை வந்தபோதே கேட்டேனே.என்ன முடிவு எடுத்திருக்க?" என்றாள் அவள்.

"அனு, என் முடிவை அப்பொழுதே சொல்லியிருப்பேன். மூட் ஸ்பொய்ல் பண்ணவேணாமேன்னு பேசாம இருந்துட்டேன். எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை. அப்படி செஞ்சுக்கிட்டாலும் உன்ன போல ஒரு ஆள பண்ணிக்க மாட்டேன். பிஷ்னஸ் டென்ஷன்ல கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிக்க தான் எஜேன்சி மூலமா கொம்பனியனா உன்னை தேர்ந்தெடுத்தேன். அழகாவும் அறிவாவும் இருக்கியே , நமக்கு நல்லா பொழுது போகும்னு நெனச்சேன். கல்யாணத்தைப் பத்தி பேசினினா அடுத்த தடவை ஆள மாத்திருவேன்" என அமைதியான குரலில் எச்சரித்தான் அந்த விபா.

தானுவுக்கு அந்த பெண் முகம் போன போக்கை பார்த்து பாவமாக இருந்தது.

"நான் தான் வேணாம். சரி விடு. உனக்கு எப்படி பட்ட மனைவி வேணும்? அதையாவது சொல்லேன் கேக்கலாம்" என்றாள் அவள்.

" என் மனைவி எப்படி இருக்கனும்னு ஒரு லிஷ்ட்டே வெச்சிருக்கேன் அனு. இந்த விபாவோட பெட்டர் ஹால்ப்னா சும்மாவா. பொண்ணு கண்டிப்பா எங்க நாட்டுக்காரியா தான் இருக்கணும். கவிஞர்கள் வர்ணிக்கும் அத்தனை லட்சணங்களும் அவளுக்கு இருக்கனும். இடுப்பை தொடும் அளவுக்கு முடியிருக்கனும். கொஞ்சம் குறைந்தாலும் ரிஜேக்ட் தான். கொஞ்சம் சதைபிடிப்போட இருக்கனும். ஒல்லி பெல்லி எல்லாம் எனக்கு செட் ஆகாதும்மா. முக்கியமா கேரியர் மைன்ட்டா இருக்க கூடாது. வீட்டிலிருந்து என்னையும் பிள்ளைகளையும் கவனிச்சுக்கனும். யெஸ், எனக்கு நிறைய பிள்ளைகள் வேணும். அதுக்கு அவ ஒத்துக்கணும். நான் களைச்சி வீட்டுக்கு வரும் போது சிரிச்ச முகமா ஹாய் சொல்லி கால் பிடிச்சி விடனும். வெளியே கிளம்பி போகும் போது பாய் சொல்லி கைய ஆட்டனும் " என அடுக்கிகொண்டே போனான்.

கேட்டுக் கொண்டிருந்த தானுவுக்கே, அவன் மண்டையிலே நங்கு நங்கு என கொட்டனும் என்று இருந்தது. இவனுக்கு எதுக்கு பொண்டாட்டி? பிள்ளை பெத்து போட்டு கால பிடிச்சி விடறதுக்கா? மடையன். அவனை தவிர வேற யாரயும் நெனச்சு பார்க்க மாட்டான் போலவே.

அந்த அனுவின் முகம் அதுக்கு மேலே பேயடித்தது போல இருந்தது. அவளை பார்த்த தானுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"சரி விபா, இதை பற்றி இனி பேச மாட்டேன். சாப்பிட்டவுடன் ஷாரா புத்திக் போலாமா? புது வகையான கவுன் வந்திருக்காம். வாங்கி குடுக்கிறயா?” என கொஞ்சினாள் அனு.

“திருமணத்தை தவிர வேறு எது கேட்டாலும் குடுப்பேன் பேபிமா” என அவனும் கொஞ்சினான்.

‘சரிதான், எங்க பாட்டி சொல்லுற மாதிரி ரெண்டும் ரெண்டு ஆப்பை, ரெண்டும் கழண்ட ஆப்பை தான். ரொம்ப பொருத்தம்’ என எண்ணி சிரித்துக் கொண்டாள் தானு.

அந்த விபா சடாரென திரும்பி இவளை பார்த்தான். அந்த லேசர் கண்கள் அவளை ஊடுருவி பார்க்க முனைந்தது. பட்டென்று கீழே இருந்த கேமிஸ்ட்ரி புத்தகத்தை முகத்துக்கு நேரே தூக்கி பிடித்துகொண்டாள் தானு.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
”அய்யோ நாம சிரிச்சது கேட்டுருச்சோ? இப்படி பார்க்கிறானே. டேய் டேனி சீக்கிரம் வந்து தொலைடா. இவன் பார்க்கிற லேசர் பார்வையிலே என் புத்தகமே ஓட்டை ஆயிரும் போல இருக்கே” என பயந்துகொண்டே உட்கார்ந்திருந்தாள்.

அதற்குள் அந்த கடையில் திடீர் பரபரப்பு. ஒரு 4 வயது மதிக்கதக்க பெண் குழந்தை ஒன்று கவுன்டரில் அழுதுகொண்டே ஐஸ்க்ரிம் கேட்டு கொண்டிருந்தது. அங்கே வேலை செய்யும் பெண், குழந்தையின் பெற்றோர் எங்கே என விசாரித்துக் கொண்டிருந்தாள். பிள்ளையோ கை நீட்டி ஐஸ்க்ரிமையே காட்டி காட்டி அழுதாள். என்ன செய்பவது என எல்லோரும் முழிக்கையில், இந்த விபாதான் எழுந்து சென்று குழந்தையின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.

தான்யாவால் இப்பொழுது அவனை நன்றாக கவனிக்க முடிந்தது. ‘ஆணழகன்தான்டா நீ. இப்போதான் தெரியுது இந்த அனு ஏன் இப்படி வழியறான்னு.’ என மனதினில் சொல்லி கொண்டாள். நல்ல உயரமாகவும், நான்கு பேர் வந்தாலும் அடித்து வீழ்த்தும் தேக அமைப்போடும் இருந்தான். நிறம் கொஞ்சம் கருப்புதான். ஆனாலும் களையான முக வடிவம் நிறத்தை ஈடு செய்தது. அந்த கண்கள்தான் லேசர் பீம் பொருத்தியது போல் ஒளி வீசியது. குழந்தையுடன் பேசும் போது அவன் முகத்தில் அவ்வளவு கனிவு.

ஐஸ்க்ரிமும், குழந்தைகள் உண்ணும் உணவு வகைகளையும் அவன் வாங்குவதை ஓர கண்ணால் பார்த்தாள் தானு. யாராவது தேடி வந்தால் அவர்கள் மேசைக்கு வர சொல்லி விட்டு, பூப்போல குழந்தையை ஏந்திகொண்டு வந்தான். அவன் பார்வை மீண்டும் தன்னிடம் வருவதை கண்டு புத்தகத்தை இன்னும் தூக்கி முகத்தை மறைத்து பிடித்தாள். ‘அவன் என்னைப் பார்த்து கண்களால் சிரித்த மாதிரி இருந்ததே. பிரம்மையோ’ என எண்ணி கொண்டாள்.

புத்தகத்தை லேசாக விலக்கி அந்த மேசையில் நடப்பதை கவனித்தாள். குழந்தையை அவனுக்கு இடப்புறமாக உட்கார வைத்து உணவை ஊட்டி கொண்டிருந்தான். சிரித்தபடியே அதுவும் வாயை திறந்து வாங்கி கொண்டது. ஐஸ்க்ரிம் சாப்பிடும்போது , அந்த வாண்டு வாய், மூக்கு எல்லாம் பூசிகொண்டது. அவன்தான் நாப்கின் கொண்டு மெதுவாக துடைத்துவிட்டான்.

இத்தனைக்கும் அது ஒரு மலாய் குழந்தை. குட்டி பேசும் மலாய் வார்த்தைகள் அவனுக்கு புரியவில்லை, அவன் பேசும் ஆங்கில வார்த்தைகள் குழந்தைக்கு புரியவில்லை. அவர்கள் பேசும் சைகை மொழியை கண் இமைக்காது பார்த்து கொண்டிருந்தாள் தானு. அவன் குழந்தையுடன் பழகுவதைப் பார்க்கவே கவிதை போல் இருந்தது.

அவளை அறியாமலே ஒரு பெருமூச்சு வந்தது. ‘இல்லை, நினைக்க கூடாது. இப்போ அந்த ஆள பற்றி நினக்க கூடாது’ என தலையை குலுக்கி கொண்டாள் . அவளையும் மீறி கண்களில் நீர் கசிந்தது.

அடி மனதில் அழுத்தி வைத்திருந்த நினைவுகள் எல்லாம் மடை திறந்து வெளி வருவது போல் இருந்தது அவளுக்கு. இனி ஒரு நிமிடமும் இங்கே இருக்க கூடாது என எழுந்து விட்டாள். விறு விறுவென தங்கள் இருவரது புத்தகப்பையையும் எடுத்து கொண்டு வெளியேறினாள். அவனது பார்வை முதுகை துளைப்பது போன்ற உணர்வில் திரும்பி பார்த்தாள் தானு. இருவரது பார்வையும் சில கணங்கள் மோதி கொண்டு நின்றன. அவனது பார்வை அவள் கண்களை தாண்டி இதயத்துக்குள் நுழையும் முன், பார்வையை விலக்கி ஒட்டம் பிடித்தாள் தானு.

அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த மாலுக்கு போவதையே நிறுத்திவிட்டாள். மறுபடியும் எங்கே அவனை பார்த்து விடுவோமோ என்கிற பயம்தான். முன்னே பின்னே தெரியாத குழந்தையையே இவ்வளவு மென்மையாக கையாளுகிறானே, சொந்த குழந்தையை எப்படி பார்த்து கொள்வான் என அடிக்கடி நினைத்து கொள்வாள். தனக்கு மட்டும் ஏன் இந்த விபாவை போல் ஒரு தந்தை அமையவில்லை என எண்ணி எண்ணி மறுகுவாள்.

“அப்பா, அப்பா ஏன்பா இப்படி செஞ்சீங்க? என் மேல் துளி பாசம் கூட இல்லையா? நான் நீங்க பெத்த பொண்ணுதானே? என்னை எப்படி வெறுத்து ஒதுக்க மனசு வந்துச்சு” என உள்ளுக்குள்ளே குமுறுவாள்.

அதற்கு பிறகு இன்று தான் விபாவை பார்க்கிறாள். கண் மூடி அவன் அமர்திருந்ததை பார்த்த நிமிடம், அவளின் சிறு உலகம் மீண்டும் வண்ணமயமாக ஆனது. அவனது கண்ணீர் துளி அவள் உயிரையே உடைத்துப்போட்டது. அவள் உணரும் முன்னே கை நீண்டு விட்டது கண்ணீரை துடைக்க.

அதை நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது தானுவுக்கு. “ என்னை பற்றி என்ன நினைத்திருப்பான். அவனோடு சுற்றும் அந்த அனுவின் வரிசையில் என்னையும் சேர்த்திருப்பானோ. அவன் பார்த்த பார்வையும், கையை பிடித்த விதமும் அப்படி தான் என நினக்க வைத்தது. பணத்தை அள்ளி வைத்தது தான் அவளுக்கு உச்சகட்ட அவமானமாக இருந்தது. பெண் என்பதை தவிர, அவன் அடுக்கிய மனைவியின் கிரிடேரியா எதுவுமே அவளுக்கு பொருந்தாது. பிறகு அவன் பணம் குடுத்ததுக்கு கேவலமான உள்நோக்கத்தை தவிர வேறு என்ன காரணம் இருக்க கூடும்.

அந்த கோபத்தில் தான் கடுமையாக பேசிவிட்டாள். திமிர் பிடித்தவள் என்று நினைத்திருப்பான். நினைக்கட்டுமே. என்னை சுற்றி உள்ளவங்களே என்னை புரிந்து கொள்ளாத போது, இவன் என்னை எப்படி நினைத்தால் தான் என்ன. இனிமே அவன் முகத்திலேயே விழிக்க கூடாது என சபதம் எடுத்து கொண்டாள் அவள்.

தனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்குதோ என விதியை நொந்த படியே வேலையை தொடர சென்றாள் தான்யாஸ்ரீ.
 

Advertisements

Top