• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்:love::love:

நியூ இயர்ல வரேனு சொல்லிட்டு போனவ ஏர்லியா வந்துட்டாளேனு நீங்க எல்லாரும் ஷாக் ஆகுறது எனக்கு நல்லாவே தெரியுது இருந்தாலும் ரொம்ப நாள் ரெஸ்ட் எடுத்தா டச் விட்டு போயிடுமாம்னு ஒரு மகான் சொன்னார் அது யாருனு கேட்டுடாதீங்க பிகாஸ் எனக்கும் தெரியாது

சரி சரி ஓவரா மொக்க போடாம அப்டேட்டை போடுறேன் படிச்சுட்டு ஒரு லைக், கமெண்ட்ஸ் போட்டா இந்த பச்ச புள்ள ஹேப்பி ஆகிடுவேன்
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
DYDj3JnUQAAf6s4.jpg
nani300117_0048.jpgஅந்த பெரிய காம்பவுண்ட் சுவரைச் சூழ பத்திரிகை நிருபர்களும், மீடியாக்களும், ப்ரஸ் நிருபர்களுமாக நின்று கொண்டிருந்தனர்.


"சே.....என்ன எழவுடா இது?? சேனல் டீ.ஆர்.பிக்காக அடுத்தவங்க பேர்சனை எல்லாம் பேட்டி எடுக்கணும்னு நமக்கு விதிச்சுருக்கே.....இதுல எம்.டி வேற அப்டேட் சொல்லு...அப்டேட் சொல்லுனு நச்சரிக்குறான்....யாரு யாரை டைவர்ஸ் பண்ணா நமக்கு என்ன???
இந்த நியூஸ்க்காக காலையில் இருந்து பச்ச தண்ணீ கூட இல்லாம இவங்க வீட்டு வாசல்ல கிடையாக கிடக்குறோம்....அவங்க கண்டுக்காமலே உள்ள இருக்காங்க.....எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு...." என்று ஒரு டி.வி நிருபர் கூறி கொண்டிருக்க


அவரருகில் நின்று கொண்டிருந்த மற்றைய நிருபர்
"எல்லாம் விதிடா மச்சான்.....அவனுங்க கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறோமே....அதனால அவனுங்க சொல்ற படி எல்லா இடத்திற்கும் போக தான் வேண்டும்...." என்று சோகமாக கூறினான்.


இத்தனை சம்பவத்திற்கும் காரணமானவளோ கால் மேல் கால் போட்டு வாகாக அமர்ந்து கொண்டு டிவியில் ப்ளாஸ் நியூஸைப் பார்த்து கொண்டிருந்தாள்.


ப்ளாஸ் நியூஸ்.....

பிரபல வெள்ளித்திரை பாடகி வெண்ணிலா தனது திருமண வாழ்க்கையை முறித்து விட்டாரா????

நம்பர் வன் பிஸ்னஸ் மேன் சூர்யதேவனின் வாழ்க்கை அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டதா????

யார் இந்த வெண்ணிலா??? யார் இந்த சூர்யதேவன்???

விளம்பர இடைவேளைக்கு பின்னர் ஒரு விரிவான கண்ணோட்டம்......

உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ள எம்.எம் டிவியுடன் இணைந்து இருங்கள்.....


டிவியில் போய் கொண்டிருந்த செய்தியை உதட்டில் உறைந்திருந்த புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.


அலை பாயும் அழகிய விழிகள், கூர்மையான மூக்கு, எடுப்பான நாசி, இயல்பாகவே சிவந்து இருக்கும் இரு அழகிய கன்னங்கள், புன்னகை தவழும் உதடுகள் என பலமுறை திரும்ப பார்க்க வைக்கும் அழகு நிறைந்தவளே வெண்ணிலா.
ஆனால் தன் அத்தனை அழகையும் மறைத்து ஒரு வித கடுமையை தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டாள் வெண்ணிலா.


எதையோ சாதித்து விட்ட வெற்றி களிப்போடு அவள் கண்கள் பளபளத்துக் கொண்டிருக்க அவளது சந்தோஷத்தை கலைப்பது போல டிவியை ஆப் செய்தான் வெற்றிமாறன் வெண்ணிலாவின் பாசத்துக்குரிய அண்ணன்.


"என்ன வெற்றி!!!! எவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா நியூஸ் பார்த்துட்டு இருந்தேன்....இப்படி பண்ணிட்ட...." என்று வெண்ணிலா அலுத்துக் கொள்ள அவளை சுட்டெரித்து விடும் அளவுக்கு முறைத்து பார்த்தான் வெற்றிமாறன்.


வெற்றியின் முறைப்பை கண்டு கொள்ளாது எழுந்து சென்ற வெண்ணிலா வெளியில் செல்வதற்காக தன் பேக்கை எடுத்துக் கொள்ள அவள் முன்னால் வந்து நின்றான் வெற்றி.


"உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நிலா?? யாரைக் கேட்டு இப்படி எல்லாம் பண்ணுண? இது ஒண்ணும் விளையாட்டு இல்லை உன் வாழ்க்கை...." என்று வெற்றி கோபமாக கூறவும்


வாய் விட்டு சிரித்த வெண்ணிலா
"வாழ்க்கையா??? எனக்கு வாழ்க்கைனு ஒண்ணு இருக்குன்னு உனக்கு இப்போதான் தெரிஞ்சுதா வெற்றி??? அன்னைக்கு நான் சொல்றத நீங்க கேட்டு இருந்தா இன்னைக்கு இந்த நியூஸ் வந்திருக்காது....என்ன கேட்ட?? யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணுணனா??? யாரைக் கேட்கணும் வெற்றி?? பிடிக்காத ஒருத்தன் கூட ஒரு வருஷமா என்னையும் ஏமாற்றி எல்லோரையும் ஏமாற்றி வாழுறதை விட இப்படி இருக்குறது எவ்வளவோ மேல்....அன்ட் வன் மோர் திங்....பிரஸ் அன்ட் மீடியாக்கு இன்பார்ம் பண்ணுணது யாருனு மும்முரமாக தேடுற போல??? உன் டைம் தான் இதனால வேஸ்ட் ஆகும்...பிகாஸ் இந்த நியூஸை லீக் பண்ணுணதே நான் தான்...." என்று விட்டு படியிறங்கி சென்ற வெண்ணிலாவை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நின்றான் வெற்றி.


படியிறங்கி வந்த வெண்ணிலா ஹாலில் ஒரு புறம் அமர்ந்து அழுது கொண்டிருந்த அவளது அன்னை ஆண்டாளின் அருகில் சென்றாள்.


வெண்ணிலாவைக் கண்டதும் ஆண்டாள் தன் முகத்தை திருப்பிக் கொள்ள முகம் சிறிது வாடிப் போன வெண்ணிலா தன் முகத்தை சரி செய்து விட்டு அவர் முன்னால் சென்று முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள்.


ஆண்டாள் வெண்ணிலாவைப் பார்க்காமல் இருக்கவும் அவர் முகத்தை வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பிய வெண்ணிலா
"இப்போ என்ன ஆச்சுன்னு உர்ருன்னு இருக்க ஆண்டாள்?? நான் எது பண்ணாலும் அதுல ஒரு நன்மை இருக்கும்னு நீ தானே சொல்லுவ...இப்போ இந்த விஷயத்தை மட்டும் ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக்குற?? நீ இப்படி முகத்தை தூக்கி வைச்சுகிட்டு இருந்தா அப்புறம் நான் உங்க யார் கூடவும் பேச மாட்டேன்...சாப்பிடவும் மாட்டேன்....வீட்டுக்கும் வரமாட்டேன்...." என்று கூற


"அய்யோ!!!! அப்படி எல்லாம் பண்ணிடாதே நிலா...." என்று பதட்டத்துடன் கூறினார் ஆண்டாள்.


தன் திட்டம் வெற்றி கண்டதில் உள்ளூர சிரித்துக் கொண்ட வெண்ணிலா
"சரி சரி சீக்கிரமாக டிபன் எடுத்து வைம்மா....சூட்க்கு டைம் ஆச்சு...." என்று கூறவும்


"இதோ அஞ்சு நிமிஷம் டா கண்ணம்மா...." என்றவாறு எழுந்து சென்றார் ஆண்டாள்.


"இரண்டு விக்கெட் ஓகே....இப்போ அடுத்த விக்கெட்டையும் கரெக்ட் பண்ண வேண்டியது தான்...." என்று நினைத்து கொண்டே எழுந்த வெண்ணிலா படியின் அருகே நின்று தன்னையே பார்த்து கொண்டு நின்ற வெற்றியை பார்த்து சமாளிப்பது போல சிரித்து கொண்டு அவனை கடந்து சென்றாள்.


"அழகர்...வேர் ஆர் யூ???" என்றவாறே சென்ற வெண்ணிலா எதிரில் விறைப்பாக நின்று கொண்டிருந்த அவளது தந்தையை பார்த்து தலை குனிந்து கொண்டாள்.


"என்ன காரியம் பண்ணிட்ட வெண்ணிலா??? இத்தனை நாள் உன்னை நாங்க பாசமாக வளர்த்தது எல்லாமே வேஸ்ட்னு நினைக்குற அளவுக்கு பண்ணிட்டியே நிலா....எங்க இருந்து உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது??? பெரியவங்க பேச்சை மதிக்கவே கூடாதுனு முடிவு எடுத்துட்டியா??? உன்னை எல்லாம்...." என்று கோபமாக அழகர் சத்தமிட்டு கொண்டிருக்க


மெல்ல நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா
"ஏ.சி.பி அழகர் சார்....உங்க பெர்பார்மன்ஸ் போதாது....ஐ வான்ட் மோர் எமோசன்..." என்று சிரித்துக் கொண்டே கூறவும் அவளை முறைத்து பார்த்தார் அழகர்.


"வை டாடி வை??? காலங்கார்த்தாலேயே இவ்வளவு டென்ஷன்.....கூல்...." என்று அழகரின் தலை முடியை வெண்ணிலா கலைத்து விடவும்


அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்ட அழகர்
"நிலாம்மா....நீ...." என்று கூற வர


அவசரமாக வேண்டாம் என்பது போல தலை அசைத்த வெண்ணிலா
"பாஸ்ட் இஸ் அ பாஸ்ட்....ஒழுங்காக வந்து சாப்பிட்டு ஸ்டேஷன்க்கு கிளம்ப பாருங்க..." என்று அழகரை அழைத்து கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள் வெண்ணிலா.


ஆண்டாள் மற்றும் வெற்றியின் மனைவி அபிநயா டைனிங் டேபிளில் சாப்பாட்டை வைத்து ஒழுங்கு படுத்தி கொண்டிருக்க வெண்ணிலா, அழகர் மற்றும் வெற்றி வந்து அமர்ந்து கொண்டனர்.


வெண்ணிலா தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டு மும்முரமாக யாரையோ தேடி கொண்டிருக்க அவளைப் பார்த்து அபிநயா
"யாரை தேடுற நிலா???" என்று கேட்டாள்.


"உங்க சீமந்த புத்திரன் அறுந்த வாலு வைபவைத் தான் தேடுறேன்...." என்று வெண்ணிலா கூறவும்


"அத்தை...." என்றவாறு வைபவ் ஓடி வந்து அவர்களின் முன்னால் நிற்கவும் சரியாக இருந்தது.


"ஹே....வைபவ் ஸ்கூல் போக ரெடி ஆகிட்டியா.....ஓடி வா சாப்பிட்டு சீக்கிரமாக ஸ்கூல் போகலாம்...." என்று வெற்றி வைபவை தன் அருகில் அமர்த்தி கொண்டு அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விட வெண்ணிலா சைகையால் வைபவோடு பேசிக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தாள்.


"டாடி நம்ம வீட்டுக்கு முன்னால நிறைய கார், வேன்....அப்புறம் நிறைய நிறைய ஆளுங்க நிற்குறாங்களே....வை டாடி???" என்று வைபவ் கேட்கவும் சாப்பிட்டு கொண்டிருந்த சாப்பாடு புரையேற அவனை நிமிர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.


"அதை உன் அத்தை கிட்ட கேளு கண்ணா....எல்லாத்துக்கும் இன்ஸ்டன்டா ஆன்சர் சொல்லுவேலே....இப்போ இதுக்கும் நீயே சொல்லு...." என்று விட்டு வெற்றி எழுந்து சென்று விட


வைபவைப் பார்த்து புன்னகத்து கொண்ட வெண்ணிலா
"அவங்க எல்லாரும் என்னோட பிரண்ட்ஸ்....என் கூட பேச வந்திருக்காங்க....இப்போ நான் போய் அவங்க கிட்ட பேசுனா உடனே போயிடுவாங்க....நீங்க சமத்தா சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகணும் சரியா???" என்று கேட்க
வைபவும் வேகமாக தலை ஆட்டி விட்டு வெற்றியிடம் ஓடி சென்றான்.


"நிலா வெளியில் போய் கண்டிப்பாக நீ பேசணுமா???" என்று அழகர் கேட்கவும்


"அழகர்...." என்று வெண்ணிலா இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்து பார்க்க


"சரிமா சரி உன் இஷ்டம்...." என்று விட்டு அழகர் தலையை குனிந்து கொள்ள


"வெளியே தான் பெரிய ஏ.சி.பி னு பேரு....வீட்டுக்குள்ள பசங்களை அதட்டி பேச பயம்...இந்த லட்சணத்துல ரவுடிகளும், மற்ற போலீஸ் காரர்களும் இவரைக் கண்டு பயப்படுறாங்களாம்....எல்லாம் தலை எழுத்து....இதுல அவார்டு வேற...." என்று ஆண்டாள் சற்று சத்தமாகவே புலம்ப
அபிநயா களுக்கென்று சிரித்துக் கொண்டாள்.


ஆண்டாள் அபிநயாவைத் திரும்பி பார்க்க சட்டென்று வேலைகளை கவனிப்பது போல தன் தட்டில் வைத்த சாப்பிட்டை மீண்டும் ஹாட் பாக்சில் அவள் எடுத்து வைக்கவும் ஆண்டாளுக்கும் சிறு புன்னகை மலரவே செய்தது.


வெற்றி வைபவை அழைத்து கொண்டு சென்று விட அழகரும் தயாராகி வந்து தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல வெண்ணிலா கண்களை மூடி தன் மனதை திடப்படுத்திக் கொண்டு நின்றாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
கண் மூடி நின்ற வெண்ணிலாவின் அருகில் வந்த அபிநயா அவள் தோள் தொட தன் கண்களை திறந்து கொண்ட வெண்ணிலா அவளைக் கேள்வியாக நோக்கினாள்.


"இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை நீயே வருத்திக்கிறியே நிலா.....இப்போ கூட டைம் இருக்கு....நீ ப்ரஸ் முன்னாடி போய் சொல்லப் போற இந்த நியூஸைத் தான் எல்லோரும் நம்புவாங்க....இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல....அந்த டிவோர்ஸ் நியூஸ் பொய்னு சொல்லிடுடா நிலா...." என்று அபிநயா கூறவும்


அவளை பார்த்து விரக்தியாக சிரித்த வெண்ணிலா
"இரண்டு மனமும் ஒத்துப் போய் வாழுறது தான் வாழ்க்கை.....இங்க மனசுக்கே இடம் இல்லாதப்போ ஒத்துப் போறதும் சாத்தியம் இல்லை....வாழ்க்கைக்கும் இடம் இல்லை....எல்லாம் முடிஞ்சுடுச்சு அண்ணி நான் வரேன்...." என்று விட்டு செல்ல


"என்ன சொல்லி இவளை மாற்றுவது???" எனப் புரியாமல் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள் அபிநயா.


"அம்மா....ஆண்டாள் அம்மா....டெய்லி உன் ரச சாதத்தை சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு....ரச சாதம்னு வெறும் தண்ணீரை அள்ளி போடுற....
இன்னைக்காவது சிக்கன், மட்டனு நாக்குக்கு ருசியா சமைச்சுப் போடப்பாருமா...." என்று வெண்ணிலா கூறவும்


"அடி கழுதை....உனக்கு வாய் ரொம்ப நீண்டிடுச்சு....மத்தியானம் வருவேலே...அப்போ உனக்கு இருக்கு...." என்று ஆண்டாள் கூறவும் சிரித்துக் கொண்டே வெளியேறி சென்றாள் வெண்ணிலா.


வெண்ணிலா ஆண்டாள்- அழகரின் மகள்.


அழகர் அசிஸ்டன்ட் கமிஷனர், ஊரே அவரை பார்த்து நடுங்கும்.
ஆனால் வீட்டில் முற்றிலும் நேர்மாறாக இவர் அனைவருக்கும் பயந்து நடுங்குவார்.


முக்கியமாக வெண்ணிலாவிடம்.
ஆண்டாள் பொறுப்பான குடும்பத்தலைவி.


ஆண்டாள் மற்றும் அழகரின் மூத்த புதல்வன் வெற்றிமாறன்.


பிரபலமான வழக்கறிஞர்.
அவனது மனைவி அபிநயா சிறந்த குடும்பத் தலைவி, அவர்களுக்கு ஒரே செல்ல மகன் வைபவ்.


ஐந்து வயது நிரம்பிய வைபவ் தான்அந்த வீட்டுக்கே செல்லப்பிள்ளை.


அடுத்ததாக வெண்ணிலா, பெயருக்கு ஏற்றாற்போல் நிலவைப் போன்று சாந்தமானவள் அல்ல.
அமைதிக்கும் அவளுக்கும் வெகு தூரம்.


பி.காம் படித்து கொண்டு இருக்கும் போதே சிறு சிறு பாடல் போட்டிகளில் தன் பாடல் திறமையை வெளிக் காட்டி கொண்டிருந்த வேளை அவள் குரல் வளத்தை கேட்டு எதிர்பாராமல் அவளுக்கு கிடைத்த வாய்ப்பே இந்த பாடகி எனும் வாய்ப்பு.


இது நாள் வரை எவ்வாறு தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று வெண்ணிலாவுக்கு தெரியாது.


படிப்பிலும் தன் பாடல் திறமையிலும் சரி சமமாக தன் கவனத்தை செலுத்தினாள் வெண்ணிலா.


ஆனால் அதன் பின் நடந்தவை எல்லாமே ஒரு கனவு போன்றது.


தொடர்ந்து வாய்ப்புகள் அவளை தேடி வந்து கொண்டே இருக்க மூன்று வருடங்களுக்குள் அவள் முண்ணனி பாடகிகளில் ஒருவளாகி விட்டாள்.


மூன்று வருடங்களில் எத்தனை மாற்றங்கள் என நினைத்து கொண்ட வெண்ணிலாவிற்கு மனதின் ஓரம் சிறு வலி.


கடைசி ஒரு வருட நினைவுகளை தன் வாழ்வில் இருந்து நீக்கி விட்டால் இந்த உலகத்தில் தன்னை போன்ற அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்று எண்ணி கொண்ட வெண்ணிலா கேட்டின் அருகில் தயங்கி நின்றாள்.


"இனிமேல் தான் நீ தைரியமாக இருக்க வேண்டும் வெண்ணிலா..." என்று தனக்குத்தானே தைரியம் கூறி கொண்டவள் காவலாளியைப் பார்க்க அவன் ஓடி வந்து கேட்டை திறந்து விட்டான்.


மீடியாக்களும், ப்ரஸ் நிருபர்களும் அவளை சூழ்ந்து கொள்ள காவலாளிகள் இரண்டு, மூன்று பேர் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தனர்.


"வெயிட் வெயிட்.....இப்படி நீங்க வந்து நின்னா என்னால சரியாக பேச முடியாது...ஷோ ப்ளீஸ் கொஞ்சம் கன்ட்ரோல்டா நில்லுங்க....அப்போதானே சீக்கிரமாக நீங்களும் உங்க வேலைக்கு போக முடியும்...." என்று வெண்ணிலா கூறவும் சிறிது சிறிதாக கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது.


"சரி இப்போ நான் பர்ஸ்ட் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடுறேன்...அப்புறம் உங்க கேள்விகளைக் கேளுங்க ஓகே...." என்று கேட்ட வெண்ணிலா தன் கைகளை இறுக மூடிக் கொண்டு பேசத் தொடங்கினாள்.


"எல்லோரும் நியூஸ் கேள்வி பட்டிருப்பீங்க.....நான் என்னோட ஹஸ்பன்ட் சூர்யா....ஸாரி சூர்யதேவன் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்க போறது உண்மை தான்....எங்க இரண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போகல ஷோ நாங்க பிரியப் போறோம்....அன்ட் எனக்காக இந்த கேஸ்ல வாதாடப் போறது என்னோட அண்ணன் வெற்றி...." என்று கூற


"வாட்?????" என்று ஒட்டுமொத்த கூட்டமுமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க


வெண்ணிலா சிரித்துக் கொண்டே
"எனி குவெசன்ஸ்???" என்று கேட்கவும்
அனைவரும் மறுப்பாக தலை அசைக்க வெண்ணிலா தன் காரில் ஏறி புறப்பட்டு சென்றாள்.


வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியோடு தங்கள் வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்று விட ஐந்து நிமிடங்களில் அந்த தெருவே வெறிச்சோடிப் போனது.


டிவியில் இந்த செய்தியை பார்த்து கொண்டிருந்த வெற்றி ஷாக் அடித்தாற் போல எழுந்து நிற்க அவன் தோளை ஆதரவாக தொட்டது வேறு ஒரு கரம்.


அதிர்ச்சியாக வெற்றி திரும்பி பார்க்க அவன் பின்னால் நின்று கொண்டிருந்தான் சூர்யதேவன்.


காற்றில் அலை பாயும் கேசம், கூர்மையாக எதிரில் உள்ளவரை அளவிடும் கண்கள், அழுத்தமான உதடுகள், அதில் உறைந்து இருந்த புன்னகை என ஆண் மகனுக்குரிய சர்வ லட்சணங்களோடு இருந்தான் சூர்யதேவன்.


"சூர்யா....இது எனக்கு தெரியாது....நிலா வேணும்னே இப்படி பண்ணுறா!!!!" என்று வேதனையாக வெற்றி கூறவும்


அவனை பார்த்து புன்னகத்த சூர்யா
"நிலாவை பற்றி உனக்கு சரியா தெரியல வெற்றி.....நிலா வேணும்னு இப்படி பண்ணல...நான் வேண்டாம்னு இப்படி பண்ணுறா....." என்று உள் வாங்கிய குரலில் கூற தவிப்போடு அவனைப் பார்த்தான் வெற்றி.


"விடு வெற்றி....அவளுக்கு அது தான் சந்தோஷம்னா எனக்கு இது தான் சந்தோஷம்....நீ புறப்படு வெற்றி...நீ இங்க இன்னைக்கு வந்தது உன் அருமை தங்கச்சி கிட்ட சொல்லிடாதே....அப்புறம் தையா தக்கானு குதிப்பா....." என்று சூர்யா கூறவும்


அவனை முறைத்து பார்த்த வெற்றி
"ஹலோ மிஸ்டர். சூர்யா....அவ பிறக்குறதுக்கு முன்னாடி இருந்தே நாம பிரண்ட்ஸ்...அதை மறந்துடாதே....அவளை எனக்கு இருபத்தைந்து வருஷமாக தெரியும்னா உன்னை எனக்கு முப்பது வருஷமாக தெரியும்....பை த வே நான் உன்னோட மாமா அதையும் ஞாபகம் வைச்சுக்கோ....உங்க பிரச்சினைக்காக என் பிரண்ட்ஸிப்பை நான் விடணுமா என்ன???" கேட்கவும்
ஒரு புன்சிரிப்பை பதிலாக கொடுத்தான் சூர்யா.


"சரி சூர்யா அப்புறம் மீட் பண்ணலாம்...." என்று விட்டு வெற்றி சென்று விட முகத்தில் இருந்த புன்னகை மறைய டிவியில் தெரிந்த வெண்ணிலாவின் முகத்தை வெறித்துப் பார்த்தான் சூர்யா.


" வாழ்க்கையில் தோல்வியே சந்திக்காதவன்....முதன் முறையாக தோற்று போய் நிற்குறேன்....நிலா இதற்கெல்லாம் நீ கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணும்....." என்று சூர்யா வெண்ணிலாவின் நிழலுருவத்தைப் பார்த்து கூறிக் கொண்டு இருக்க
வெண்ணிலா தன் காரின் உள்ளே பாடல் ஒன்றை கேட்டு ரசித்தவளாக புன்னகையோடு காரை ஓட்டி கொண்டிருந்தாள்.....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''எங்கே எனது
கவிதை''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஹுஸ்னா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top