• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

கதையின் போக்கு

  • Good

    Votes: 31 88.6%
  • Average

    Votes: 4 11.4%
  • Not ok

    Votes: 0 0.0%

  • Total voters
    35

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஹுஸ்னா டியர்
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
“என்னவோ ஸ்கூல்க்கு போற சின்னப் பாப்பா மாதிரி இப்படி சொல்ற?? அதெல்லாம் பயப்படாம போ….யாரும் வம்பு பண்ணா நானும், வெற்றியும் வந்து பட்டையைக் கிளப்பிடுவோம்…அதோட பொண்ணுங்களைத் தான் பசங்க அதிகமா வம்பிழுப்பாங்க….நீ பயப்படாம போகலாம்….” என்று சூர்யா கூறவும் தன் கையில் இருந்த நோட் புக்கினால் அவன் முதுகில் அடி ஒன்று வைத்தாள்.


சிறு வயது முதலே சூர்யா மற்றும் வெற்றியோடு அபிநயா எப்போதும் சுற்றி வந்ததனால் அவள் ஆண் பிள்ளைகளைப் போலவே தெரிவாள்.


இப்போது கூட ஆண்களைப் போல ஜீன்சும், சேர்ட்டும் அணிந்து ஸ்போர்ட் சூவோடு நின்றவளைப் பார்த்தே வேண்டும் என்று சூர்யா அவ்வாறு கூறினான்.


தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்ட அபிநயா
“நான் என்னடா பண்ணுவேன்??? சின்ன வயசுல இருந்து உங்க கூடவே சுத்துனதால எனக்கு இப்படியே பழகிடுச்சே…” என்று கூறவும்


அவள் தோளில் தட்டிய சூர்யா “மேடம் உங்க முகத்துக்கு இந்த எமோசனல் செட் ஆகல…” என்று கூற


“போடா எருமை…" என்று விட்டு காலேஜினுள் அபிநயா சென்று விட சூர்யா தன் பைக்கை எடுத்துக் கொண்டு அவனது காலேஜை நோக்கிப் புறப்பட்டான்.


பைக்கை பார்க் பண்ணி விட்டு திரும்பியவன் தூரத்தில் நான்கு, ஐந்து பேர் ஒரு பெண்ணிடம் வம்பிழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து
“இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல போல….ஊருப்பக்கம் கூட்டம் கூட்டமாக திரியற மாடுங்க மாதிரி கூட்டம் போட்டுட்டு....” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன் அவர்களைக் கடந்து செல்கையில் அந்த பெண்ணைப் பார்த்தான்.


வெகுவாகப் பயந்து போய் நடுங்கிக் கொண்டிருந்தவளைப் பார்க்கையில் அக்ஸயாவைப் பார்ப்பது போல இருந்தது.


சிறு வயது அபிநயாவிற்கு நேர் எதிர் மாறமனவள் அக்ஸயா.


வெகுவாகப் பயந்த சுபாவம் கொண்டவள் அவள்.


தன் சிறு தங்கை ஞாபகம் வரவே அதற்கு மேல் அவளைத் தனியே விட்டுச் செல்ல மனமின்றி அவர்கள் அருகில் சென்றான் சூர்யா.


சூர்யா அந்த வயதினருக்குரியர்வகளை விட சற்று வளர்ச்சி கூடியவன் என்பதனால் அந்த மாணவர்கள் இவன் அருகில் வரவும் எழுந்து நின்றனர்.


“என்ன பண்ணுறீங்க???” என்று சூர்யா சற்று மிரட்டலாக கேட்க


பயந்து போனவர்கள் தங்கள் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
“நீங்க யாரு??” என்று கேட்டனர்.


“ஐ யம் புரொபசர் மார்க்…” என்று உறுமியவன் தன் ஐடியை எடுத்துக் காட்ட


அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் “அய்யய்யோ….சங்கத்தைக் கலைங்கடா…” என்று விட்டு தலை தெறிக்க ஓடினர்.


சூர்யா அதைப் பார்த்து வாய்விட்டு சிரிக்க
அவனருகில் நின்று கொண்டிருந்தவள்
“ரொம்ப தாங்க்ஸ் ஸார்….” என்று கூறவும்


“ஸாரா???” என்று வாயைப் பிளந்த சூர்யா


“எக்ஸ்கியுஸ் மீ மிஸ்….நானும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் தான்…அவங்க கிட்ட இருந்து எஸ் ஆக சும்மா பீலா விட்டேன்…” என்ற கூற


“அப்படியா???” என்று அதிசயத்தைப் பார்ப்பது போல அவனைப் பார்த்தாள் அவள்.


“பை த வே ஐ யம் சூர்ய தேவன்…” என்று அவளிடம் கை கொடுக்க


அவன் கையைப் பற்றி புன்னகைத்துக் கொண்டவள்
“ஐ யம் ஜனனி…” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.


“அந்த பசங்க அகைன் நீங்க புரபொசர் இல்லனு தெரிஞ்சு வந்து சண்டை போட்டாங்கன்னா…” என்று ஜனனி கேட்கவும்


“அது வரும் போது பார்த்துக்கலாம் டேக் இட் ஈஸி…..” என்று கூறினான் சூர்யா.


ஜனனியும், அவனும் ஒரே பிரிவில் கற்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதில் ஜனனி எல்லையில்லா ஆனந்தம் கொண்டாள்.


சூர்யாவின் குறும்புத்தனம், துடுக்கான பேச்சு என அனைத்திலும் அவன் பால் முதல் பார்வையிலேயே மொத்தமாக சாய்ந்தாள் ஜனனி.


ஆனால் சூர்யாவோ வழக்கம் போல தன் பேச்சில் மூழ்கிப் போக ஜனனியைக் கவனிக்கவில்லை.


ஒரு வேளை கவனித்திருந்தால் பின்னாளில் வந்த பல பிரச்சினைகளைத் தடுத்திருக்கலாமோ என்னவோ???


காலேஜ் முடிந்து நேராக அபிநாயவைத் தேடி சென்ற சூர்யா அங்கே தனக்கு முன்னால் வந்து அபிநயாவிடம் பேசிக் கொண்டிருந்த வெற்றியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.


சூர்யாவைக் கண்டதும் வெற்றி “வாடா பிஸ்னஸ் மேன்…எப்படி போச்சு பர்ஸ் டே???” என்று கேட்கவும்


“அதெல்லாம் சிறப்பாக போச்சு….உங்க இரண்டு பேருக்கும் எப்படி போச்சு???" என்று கேட்டான்.


"பரவாயில்ல நாட் பேட்…” என்று கூறிய அபிநயாவைப் பார்த்து சிரித்த சூர்யா


“நீ எத்தனை பேரை தலை தெறிக்க ஓட விட்ட??” என்று கேட்கவும்


“டேய் கொன்னுடுவேன் உன்னை….” என்று விட்டு அவனுக்கு தாரானமாக ஐந்து, ஆறு அடிகளைப் பரிசாக கொடுத்தாள்.


வெற்றி புரியாமல் அவர்களைப் பார்க்கவும் காலையில் நடந்த நிகழ்வுகளை அவனுக்கு கூற அபிநயாவைக் கேலி செய்யும் வேலையில் வெற்றியும் இணைந்து கொண்டான்.


அப்போது தான் சூர்யாவிற்கு காலேஜ் முடிந்ததும் ஜனனியைக் காத்திருக்க சொன்னது ஞாபகம் வர
“அச்சச்சோ….” என்று தன் தலையில் தட்டிக் கொண்டான்.


“என்னடா???” என்று வெற்றியும், அபிநயாவும் கேட்கவும்


காலையில் காலேஜில் நடந்தவற்றைக் கூறியவன்
"ஜனனிகிட்ட உங்களை இன்ட்ரோ தரேன் வெயிட் பண்ணுனு சொன்னேன்….என்ன ஆச்சோ தெரியல….” என்று கூறவும்


“பொண்ணு எப்படிடா???” என்று கேட்டான் வெற்றி.


“ஏய்…..” என்று அபிநயா அதட்டலாக கூறவும்


“சும்மாடா….லுலுலாய்க்கு….” என்று கூறிய வெற்றியைப் பார்த்து சிரித்துக் கொண்டான் சூர்யா.


“சரி அந்த பொண்ணு வெயிட் பண்ணிட்டு இருப்பா….வாங்க போகலாம்…” என்று அபிநயா கூறவும் தங்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு சூர்யாவின் காலேஜை நோக்கி மூவரும் பயணித்தனர்.


அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த ஜனனியைப் பார்த்து சூர்யாவிற்கு என்னவோ போல் ஆனது.


“நாம சொன்னோம்னு இந்த பொண்ணு இவ்வளவு நேரம் நின்னு இருக்கே….பாவம்…” என்று மனதினுள் சிறு வருத்தம் ஏற்பட


அவளருகில் வந்த சூர்யா
“ஸாரி ஜனனி….நான் இவங்க கூட இருந்தா எல்லாமே மறந்துடுவேன்…ஸாரி….” என்று கூறவும்


“பரவாயில்ல சூர்யா…” என்று புன்னகைத்தாள் ஜனனி.


“டேய்…இன்ட்ரோ…இன்ட்ரோ…” என்று வெற்றி சூர்யாவின் பின்னால் நின்று அவன் காதைக் கடிக்க தலையில் அடித்துக் கொண்டாள் அபிநயா.


“ஜனனி இது வெற்றி…மை குளோஸ் பிரண்ட்…இது அபி..அபிநயா…மை சிஸ்டர்…” என்று கூறவும் இருவரையும் பார்த்து பன்னகைத்தாள் ஜனனி.


“ஆமா உனக்கு பிரண்ட்ஸ் இல்லையா???” என்று சூர்யா கேட்கவும்


இல்லை என்பது போல தலை அசைத்த ஜனனி
“என் அப்பாவுக்கு பிஸ்னஸ் தான் எல்லாம்….வாரத்துக்கு ஒரு பாரின் கன்ட்ரி….அம்மாவுக்கு கிளப்லயே டைம் போயிடும்…ஸ்கூல்லயும் யார் கூடவும் பேச மாட்டேன்…உங்க எல்லாரையும் பார்த்த அப்புறம் தான் நான் எவ்வளவு ஃபன்ன மிஸ் பண்ணிட்டேனு தெரியுது…” என்று கூறவும் அவர்கள் இடையில் கனத்த அமைவி நிலவியது.


“சரி பிரண்ட்ஸ் நாளைக்குப் பார்க்கலாம் பாய்….” என்று விட்டு ஜனனி சென்று விட வெற்றி அவனது வீட்டுக்கும் சூர்யா, அபிநயாவை அழைத்துக் கொண்டும் சென்றனர்.


வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக வெற்றி ஆண்டாளிடம் அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒப்பிவித்துக் கொண்டிருக்க தனது அறைக்குள் இருந்து அவர்கள் பேசுவதைக் காது தீட்டிக் கேட்டாள் வெண்ணிலா.


வெற்றி பேசி முடியம் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள் மெதுவாக எட்டி நடை போட்டு வந்து மேஜை மேல் இருந்த அழகரின் தொலைபேசியை எடுத்துக் கொண்டு மீண்டும் தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.


தன் புத்தகத்தில் இருந்த எண்ணைப் பார்த்து அதில் அழுத்தியவள் மறுமுனையில் ரிங்க் போகவே அமைதியாக நின்றாள்.


மறுமுனையில் அட்டன்ட் செய்தது தான் தாமதம் படபடவென பட்டாசு போல பொரியத் தொடங்கினாள்.


“ஏன்டீ உங்க அண்ணா என்ன கூமுட்டையா?? அந்த தேவாங்கு மூஞ்சைப் போய் ஸார்னு நம்பி ஓடிருக்கான்…நான் உனக்கு எல்லாம் சொல்லித்தானே தந்தேன்??? அந்த தேவாங்கை நல்லா லெஃப்ட் அன்ட ரைட் வாங்க சொல்லி……இப்படி சொதப்பிட்டியேடி…போ உனக்கு நாளைக்கு நான் நோட் எழுதி தர மாட்டேன்….” என்று விட்டு போனை வைத்த வெண்ணிலா


“அந்த தேவாங்கு இன்னைக்கு மிஸ் ஆகிட்டான்…இன்னொரு நாள் மாட்டுவான்….” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டவள் போனை பழைய படி போல மேஜையின் மீது வைத்துவிட்டு திரும்புகையில் அவள் முன்னே கையை குறுக்கே கட்டிக் கொண்டு நின்றான் சூர்யா……..


Adi pavi nila epudilam plan pandra
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top