• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......nani-7591.jpgsai-pallavi-fidaa-hd-pics2.jpg

கல்லூரி ஆண்டு விழாவில் எல்லோரும் சந்தோஷமாக பங்கு கொண்டிருக்க வெண்ணிலாவும், சூர்யாவும் பார்வையினாலேயே வேறு ஒரு உலகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.


அருகில் நின்று கொண்டிருந்த தன் நண்பர்கள் அறியா வண்ணம் சூர்யா வெண்ணிலாவுடன் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தான்.


இந்த காதல் பார்வை பரிமாற்றத்தில் ஜனனி செய்து வைத்த வேலையை இருவரும் கவனிக்க தவறிவிட்டனர்.


அப்போது மேடையில் இருந்து
"வெண்ணிலா பி.காம் செகண்ட் இயர் பாஃர் சிங்கிங்....." என்று பெயர் அழைக்கப்படவும்


"என்ன????" என்று அதிர்ச்சியாக சூர்யா வெண்ணிலாவை பார்க்க அவளோ அதிர்ச்சியில் விழி இரண்டும் வெளியில் தெறித்து விடுவது போல உறைந்து நின்றாள்.


வேகமாக அவளருகில் வந்த சூர்யா
"என்ன நிலா இது??? நீ ஸ்டேஜ்ல ஏறி பாடப் போறியா???" என்று ஆச்சரியமாக கேட்கவும்


"ஐயோ!!! நீங்க வேற.....நான் என் பேரை கொடுக்கவே இல்லையே.....வேணும்னே யாரோ என்னை வம்புல மாட்டி விட இப்படி பண்ணிருக்காங்க......" என்று விட்டால் அழுது விடுவாள் என்ற நிலையில் பதில் சொல்ல சூர்யாவிற்கு குழப்பமாக இருந்தது.


"யாரு இப்படி பண்ணிருப்பா????" என்று சூர்யா யோசித்து கொண்டிருக்கையில்


வெண்ணிலாவின் பெயர் மறுபடியும் அழைக்கப்பட
"தேவ் ஏதாவது பண்ணுங்களேன்.....ப்ளீஸ்....." என்று கெஞ்சலாக கூறினாள் வெண்ணிலா.


"நான் போய் பேசி பார்க்கிறேன்...." என்று விட்டு சூர்யா செல்லப் போக சூழ நின்று கொண்டிருந்த மாணவர்கள் எல்லாம் வெண்ணிலாவின் பெயரைச் சொல்லி கூச்சலிட ஆரம்பத்தினர்.


வெண்ணிலாவின் அருகில் வந்த அவளது ஆசிரியர் ஒருவர்
"என்ன நிலா இது??? பேர் கொடுத்தா பார்டிஸிபேட் பண்ணணும்.....இல்லைனா பேர் கொடுக்க கூடாது....இன்னொருத்தங்களுக்கு போகுற வாய்ப்பை இப்படி நீ வீணாக்கலாமா??? உன்னை என் ஸ்டூடண்ட்னு சொல்லவே எனக்கு கவலையாக இருக்கு....என் ஸ்டூடண்ட் இப்படி பண்ணுவாளா....." என்று கோபமாக கூறவும் வெண்ணிலா விக்கித்துப் போய் நின்றாள்.


விழவா?? வேண்டாமா?? என்று அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க சூர்யா வேகமாக அங்கிருந்த நடுவர்களின் புறமாக செல்ல மாணவர்களின் கை தட்டல் கேட்டது.


"எதுக்கு கை தட்டுறாங்க???" என்றவாறு சூர்யா திரும்பி பார்க்க வெண்ணிலா மேடையில் வந்து நின்றாள்.


"இவ என்ன பண்ணுறா???" என்று சூர்யா பதட்டத்துடன் மேடையேற போக சூர்யாவை ஆழ்ந்து பார்த்து விட்டு வெண்ணிலா கண்களை மூடி
சூர்யாவின் பிம்பத்தை தன் கண் முன்னே கொண்டு வந்து பாடத் தொடங்கினாள்.


எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.....


என்று வெண்ணிலா பாடுவதை கேட்டு சூர்யா மெய் மறந்து போய் நிற்க முழு அரங்கமுமே அமைதியாக மாறியது.


ஜனனியோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்றாள்.


சூர்யாவுடனான தன் வாழ்க்கை பயணத்தை எண்ணி பார்த்த வெண்ணிலா அவனைப் பார்க்காமல் தவித்த அந்த நாட்களை எண்ணி மனம் வருந்த கண்கள் கலங்க அடுத்த வரிகளை பாடினாள்.


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.....

என்று பாடி முடிக்க அரங்கமே கை தட்டலால் நிறைந்து போனது.


மறுபுறம் சூர்யா தன் வெண்ணிலாவை அவள் குரலை ஆழ்ந்து ரசித்த வண்ணம் நின்றான்.


வெண்ணிலா வந்து சூர்யாவின் தோளில் தட்டவுமே நடப்புக்கு வந்த சூர்யா வெண்ணிலாவை ஆச்சரியமாக பார்த்தான்.


"ஹேய் நீ இவ்வளவு நல்லா பாடுவியா என்ன??? உனக்கு தான் ஸ்டேஜ்னாலே ஆகாதே அப்புறம் எப்படி இப்படி???" என்று சூர்யா கேட்கவும்


"அதெல்லாம் தானா வரும்...." என்று வெண்ணிலா தன் சட்டைக் காலரை தூக்கி விட அவளை முறைத்து பார்த்த சூர்யா அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு மேடைக்கு வெளியே அழைத்து சென்றான்.


"யாரும் பார்த்துடப் போறாங்க....கையை விடுங்க....." என்று வெண்ணிலா கூறவும்


அவளை நெருங்கி நின்ற சூர்யா
"உண்மையை சொன்னா நான் நல்ல பிள்ளையாக இருப்பேன்....இல்லேனா....." என்று விட்டு சூர்யா அவளை பார்க்க


முகம் சிவந்த வெண்ணிலா
"சரி சரி சொல்றேன்.....முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க...." என்று கூற சூர்யா வெண்ணிலாவின் கையை விட்டு சற்று தள்ளி நின்றான்.


"எனக்கும் முதல்ல என்ன பண்ணுறதுனு தெரியல....ஸார் வந்து கோபமாக பேசவும் என்னம்மோ மாதிரி ஆயிடுச்சு....நீங்க வேற அடிக்கடி ஒண்ணு சொல்லுவீங்க.....எதையும் தைரியமாக நின்னு செஞ்சு பார்க்கணும்....அப்போதான் நம்ம பவர் நமக்கே தெரியும்னு....அது தான் தைரியமாக இறங்கிட்டேன்.....உங்களை நினைச்சுட்டே பாடியும் முடிச்சுட்டேன்....." என்று கூறி சிரித்த வெண்ணிலாவை பார்த்து சூர்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


"என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா???" என்று சூர்யா கேட்கவும்
யோசிப்பது போல பாவனை செய்த வெண்ணிலா இல்லை என்று தலை அசைக்க


அவள் ஜடையைப் பிடித்து இழுத்த சூர்யா
"இப்படி அடிச்சுக்கிட்டு திரிஞ்சவங்க இப்போ எப்படி இருக்கோம்னு நினைச்சு பார்த்தா எல்லாம் கனவு மாதிரி இருக்கு....." என்று கூற
அவன் கையில் கிள்ளி வைத்தாள் வெண்ணிலா.


"ஆஆஆஆஆஆஆஆ.....அம்மா....." என்று சூர்யா அலறவும்


"கனவு இல்ல நிஜம் தான் பார்த்துக்கோங்க....." என்று விட்டு வெண்ணிலா ஓடி விட தன் மனம் கவர்ந்தவளது சேட்டையை எண்ணி சிரித்துக் கொண்டே அரங்கினுள் சென்றான் சூர்யா.


இதை எல்லாவற்றையும் பார்த்து கண்டிப்பாக ஒருவர் வயிறு எரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லவா???
அது தான் ஜனனி.


"எப்படி நான் திட்டம் போட்டாலும் இவ தப்பிச்சுடுறா!!! வசமாக ஒரு நாள் இல்லை ஒரு நாள் நான் உன்னை தோற்கடிப்பேன் நிலா....இந்த ஜனனி எதையும் ஆசைப்படமாட்டா.....அப்படி ஆசைப்பட்டா அதை அடைய என்ன வேண்டுமானாலும் பண்ணுவா.....இனிமேல் தான் உனக்கு பிரச்சினை ஆரம்பிக்கும்......" என்று மனதிற்குள் வஞ்சம் வளர்த்துக் கொண்ட ஜனனி அடுத்த கட்ட தன் சதி வேலைகளில் மூழ்கி போனாள்.


அன்று வெண்ணிலா பாடிய பிறகு கிடைத்த வரவேற்பை பார்த்து சூர்யா அவளை பாராட்ட ஜனனி உள்ளுக்குள் எரிமலையாக குமுறிக் கொண்டிருந்தாள்.


வெளியில் சிரித்து கொண்டிருப்பது போல ஜனனி முகத்தை வைத்துக் கொண்டு இருந்தாலும் வெண்ணிலா அவள் முகத்தை பார்த்தே
"இவ முகமே சரி இல்லை.....ஏதாவது வில்லங்கம் பண்ண யோசிக்குறாளோ????" என்று யோசித்தவள்


"எதுக்கும் இவ மேல ஒரு கண்ண வைச்சுக்கணும்...." என்று முடிவெடுத்து கொண்டாள்.


அதன் பிறகு சிறு சிறு போட்டிகளில் வெண்ணிலா பங்கு கொள்ள ஆரம்பிக்க அவளது குரல் வளத்தை பார்த்து அனைவரும் பாராட்ட தொடங்கினர்.


சூர்யாவும் அவனது படிப்பை முடித்து விட்டு தன் தந்தையின் கம்பெனிகள் அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள ஜனனி வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து கொண்டாள்.


காரணம் சூர்யாவின் கம்பெனியில் வேலை காலியாக இருக்கவில்லை.


வெண்ணிலா இதைக் கேட்டு சந்தோஷம் கொண்டாலும் ஜனனியோ சூர்யாவின் கம்பெனியில் ஏதாவது ஒன்றில் வேலை கிடைத்து விடாதா என்று ஏங்கி கொண்டிருந்தாள்.


சூர்யா கம்பெனி பொறுப்பை எடுத்து விட அபிநயாவிற்கு வரன் பார்க்க தொடங்கினார் பெருமாள்.


ஒரு நாள் அழகரோடு பேசிக் கொண்டிருக்கையில் அபிநயாவின் திருமணம் பற்றி பேச்சு வரவும் அழகர் பெருமாளிடம்
"ஏன்பா பெருமாள் அபிநயாவிற்கு எங்கெங்கெங்கேயோ மாப்பிள்ளை தேடுற...உனக்கு கண் முன்னாடி இருக்குற என் பையனைப் பற்றி ஞாபகம் வரலயா????" என்று கேட்கவும்


"நான் முதல்ல யோசிச்சது வெற்றியைப் பத்தி தான்....நீ என்ன நினைப்பியோனு தயங்கிட்டு இருந்தேன்....நீயே சொல்லிட்ட இனி எதுக்கு தாமதம் அடுத்த முஹூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணிடுவோம்...." என்று பெருமாள் கூற


"ஏன்பா இந்த அவசரம்??? முதல்ல பசங்க கிட்ட பேசுவோம்....அப்புறம் நாள் குறிப்போம்.....சரியா????" என்று கேட்டார் அழகர்.


"அதுவும் சரிதான்.....ஆனா வெற்றி மாதிரி ஒரு பையனை எந்த பொண்ணும் பிடிக்கலனு சொல்லமாட்டா...." என்று பெருமாள் கூறவும் தன் மகனை எண்ணி பெருமிதம் கொண்டார் அழகர்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அபிநயா மற்றும் வெற்றியிடம் இந்த திருமண விடயம் பற்றி பேச இருவரும் தங்கள் சம்மதத்தை தெரிவிக்க பெரியவர்கள் அனைவரும் சந்தோஷம் கொண்டனர்.


திருமண விடயம் கேள்விப்பட்ட வெண்ணிலா அபிநயாவிற்கு வாழ்த்து தெரிவித்து விட்டு அவளை வைத்து ஒரு வழி செய்து விட மறுபுறம் வெற்றி சூர்யாவிடம் சிக்கி தவித்துப் போனான்.


"அக்ஸயா பர்த்டே பங்சன் அப்போ நீ வாயை பிளந்து நிற்கும் போதே தெரியும்டா இப்படி ஏதாவது ஆகும்ணு.....ஆனா பலே கில்லாடி டா நீ....வீட்டில் பேசி கல்யாணம் பண்ணுற மாதிரி எல்லாம் பண்ணிட்டியே....." என்று சூர்யா வெற்றியை வைத்து வாங்க


வெற்றியோ
"ஏன்டா ஏன் உனக்கு???? சத்தியமா அப்பா வந்து கேட்கவும் தான் அபிநயா பத்தி நான் யோசிச்சே பார்த்தேன் டா.....அதுக்கு முதல் நான் அப்படி ஒரு தடவை கூட அவளை யோசிச்சதே இல்ல....." என்று பாவமாக கூற


அவனை பார்த்து சிரித்த சூர்யா
"அதெல்லாம் சரி....என் சிஸ்டரை கல்யாணம் பண்ணிக்கப் போற....அவ என்ன இருந்தாலும் எனக்கு இரண்டு நிமிஷத்துக்கு அக்கா....அதனால என் மாமா ஆகப்போற உன்னை ஒரு கெத்தாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு.....என் மாமாவுக்குனு ஒரு தனி ரேஞ்ச் வேண்டாமா????" என்று கூறினான்.


"அடேங்கப்பா....சரிங்க ஸார்....என்ன பண்ணணும்னு சொல்லுங்க ஸார்...." என்று வெற்றி கூற


அவனை தோளோடு அணைத்துக் கொண்ட சூர்யா
"அபியை கண் கலங்காம பார்த்துக்க அது போதும்...." என்று கூறவும்


"நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அபிநயா இனி என் பொறுப்பு....." என்று கூறினான் வெற்றி.


அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் மளமளவென்று நடந்தேறியது.


திருமண வேலைகளில் சூர்யா மூழ்கிப் போனதால் அவனால் வெண்ணிலாவோடு போதிய நேரத்தை செலவிட முடியவில்லை.


வெண்ணிலா தன்னை புரிந்து கொள்வாள் என்று சூர்யா நினைத்து இருக்க வெண்ணிலாவோ சூர்யா தன்னை இப்போது எல்லாம் கவனிப்பதே இல்லையே என்று வருந்தி கொண்டிருந்தாள்.


வெற்றி - அபிநயாவின் திருமணம் இனிதாக நடந்தேறிய பின்பே சூர்யாவிற்கு நிம்மதியாக உணர முடிந்தது.


திருமணத்தன்று மாலையே ரிசப்சன் வைத்திருந்ததனால் அந்த வேலைகளும் சூர்யாவை சூழ்ந்து கொள்ள வெண்ணிலாவை சூர்யா முழுமையாக மறந்தே போனான்.


எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்த சூர்யா
"நிலா இங்கே வா......" என்ற ஆண்டாளின் குரலில் தான் வெண்ணிலாவைப் பற்றி நினைவு கொண்டான்.


"ஐயோ ஐசு....மறந்தே போயிட்டேனே....." என்று தலையில் கை வைத்து கொண்டு திரும்பிய சூர்யா வெண்ணிலாவை பார்த்து அசந்து போனான்.


கடும் ஊதா நிற லெஹங்கா அணிந்து அக்ஸயாவோடு பேசியபடி நடந்து வந்தவளை பார்வையினாலேயே சூர்யா தன் மனதிற்குள் நிரப்பி கொண்டான்.


வெண்ணிலா அவனைக் கடந்து செல்கையில் அவனை முறைத்து பார்த்து கொண்டே செல்ல சூர்யாவிற்கு உள்ளே குளிர் பரவியது.


"ஆஹா...மேடம் செம்ம சூடா இருக்கா போல....இவளை மலை இறக்கணுமே இப்போ....கடவுளே என்னை காப்பாத்திடுப்பா....." என்று வேண்டிக் கொண்டவன் வெண்ணிலாவை பின் தொடர்ந்து சென்றான்.


அவளோ இவனுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருக்க ஜனனி இதை கண்டு கொண்டாள்.


வெண்ணிலாவின் கண்களில் சூர்யா தன்னோடு பேச மாட்டானா என்று எதிர்பார்ப்பு இருப்பதை கண்டு கொண்ட ஜனனி சூர்யாவின் அருகில் வந்து அவனோடு பேசிக் கொண்டு இருக்க வெண்ணிலாவின் கோபம் எல்லை கடந்து சென்றது.


சூர்யாவோ ஜனனியை தவிர்த்து கொள்ளவும் முடியாமல் வெண்ணிலாவோடு பேசவும் முடியாமல் இரு தலை கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தான்.


வெண்ணிலா ஜனனி வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டு மனதினுள் அவளை தாறுமாறாக வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.


"ஒரு வார்த்தை வந்து பேசுறானா பாரு....இனிமேல் நீயா வந்து பேசுனா தான் நான் பேசுவேன்....தேவாங்கு....தேவாங்கு...." என்று சூர்யாவையும் விட்டு வைக்காமல் அவள் அர்ச்சித்துக் கொண்டாள்.


எல்லோரும் கிளம்பி சென்று விட ஜனனியையும் கிளம்ப செய்து விட்டு வேகமாக வெண்ணிலாவைத் தேடி வந்த சூர்யா அவளை காணாமல் தவித்தான்.


வெண்ணிலாவோ அபிநயா, வெற்றி அழைத்து செல்லும் காரில் ஏறி அமர்ந்து கொண்டு சூர்யாவின் தவிப்பை கண்டு மனம் வருந்தினாலும்
"அந்த குள்ளக்கத்திரிக்காய் கூட பேசிட்டு என்ன டீல்ல விட்டலே...நல்லா தேடு.....உன் கூட டூ...." என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே கார் ஜன்னலினூடாக அவனை பார்த்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா.


கார் புறப்பட்டு செல்லும் போது தான் வெண்ணிலாவை சூர்யா கண்டு கொண்டான்.


எல்லோரும் சுற்றி இருந்ததனால் சூர்யாவால் வெண்ணிலாவோடு பேச முடியவில்லை இருந்தாலும் சிறிது நேரம் காத்திருந்து அவளுக்கு அழைப்பு மேற்கொண்டான் சூர்யா.


வெண்ணிலா கோபமாக போனை ஆஃப் செய்து விட சூர்யா என்ன செய்வது என்று புரியாமல் தவியாய் தவித்தான்.


அவளாக பேசட்டும் என்று சூர்யாவும், அவனாக பேசட்டும் என்று வெண்ணிலாவும் இருந்து விட அவர்களிடையே விழுந்த பிரிவு நீண்டு கொண்டே போனது.


வெண்ணிலா ஒரு நாள் காலேஜில் இருந்து வீடு திரும்பும் போது அவளது வீட்டின் முன்னால் ஒரு அம்பாஸிடர் நின்று கொண்டிருந்தது.


யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே உள்ளே சென்ற வெண்ணிலா அங்கே இருந்த அந்த புதியவர்களை ஆச்சரியமாக பார்த்தாள்.


"வாம்மா உனக்காக தான் காத்துட்டு இருக்கோம்....." என்று கூறியவர்களை குழப்பமாக பார்த்தவள்


சற்று தள்ளி நின்ற அபிநயாவைப் பார்த்து ஜாடையில்
"யாரு இது???" என்று கேட்க
அவளோ தெரியாதே என்பது போல சைகை செய்தாள்.


அங்கே இருந்தவர்களில் ஒருவர் வெண்ணிலாவிடம் வந்து
"நான் தான் புரொடியூசர் வேதாசலம்....இவர் மியூசிக் டிரெக்டர் சம்பத்....உங்க காலேஜ் பங்சன்ல நீங்க பாடுன பாட்டோட ஆடியோ கேட்டோம்....ரொம்ப நல்லா இருந்தது.....அதனால எங்களோட அடுத்த படத்தில உங்கள பாட வைக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம்....அது பத்தி பேசலாம்னு தான் இங்க வந்துருக்கோம்..." என்று கூற வெண்ணிலா ஆச்சரியமாக அவர்களை பார்த்து கொண்டு நின்றாள்.


"நான் மூவில பாடுறதா???" என்று வெண்ணிலா தயக்கத்துடன் கேட்கவும்


"எதையும் தைரியமாக பேஸ் பண்ணணும்மா....உங்களுக்கு சப்போர்ட்டா நாங்க இருக்கோம்...." என்று வேதாசலம் கூற
வெண்ணிலா ஒரு கணம் சூர்யாவை யோசித்தாள்.


அவன் அடிக்கடி கூறும் அதே வார்த்தைகள் என்று எண்ணிக் கொண்டே வெண்ணிலா அழகரின் முகத்தை பார்த்தாள்.


அவர் வெண்ணிலாவின் அருகில் வந்து
"உன் மனசுக்கு என்ன தோணுதோ பண்ணு....மனசுக்கு பிடிச்சத பண்ணு...." என்று கூற வெண்ணிலா சினிமாவில் பாடுவதற்கு சம்மதம் தெரிவித்தாள்.


ஆனால் இறுதி வரை அந்த பாடலை எப்படி அவர்கள் கேட்டார்கள் என்பது வெண்ணிலாவிற்கு புரியாத புதிராகவே இருந்தது.


அதன் பிறகு வெண்ணிலா படிப்பு, பாடல் என்று மூழ்கி விட சூர்யா தன் பிஸ்னஸில் கவனமெடுத்து ஈடுபட்டு கொண்டிருந்தான்.


அபிநயாவிற்கு ஒரு வருடத்தில் வைபவ் கிடைத்து விட வெண்ணிலா இன்னும் அதீத சந்தோஷம் கொண்டாள்.


ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வைபவ் உடனே எப்போதும் வெண்ணிலா இருப்பாள்.


சூர்யா நேரம் கிடைக்கும் போதெல்லாம் வைபவை வந்து பார்த்து சென்றாலும் வெண்ணிலா அவனை நேரில் பார்ப்பதை தவிர்த்து வந்தாள்.


சூர்யாவும் இத்தனை நாள் பொறுமையாக இருந்தது போதும் என்று எண்ணி அன்று வெண்ணிலாவைப் பார்த்து விடலாம் என்று முடிவோடு அவளது அறையை நோக்கி சென்றான்.


சூர்யா வந்து போகும் வரை தன் அறைக்குள்ளேயே அடைந்து இருக்கும் வெண்ணிலா அன்றும் அப்படியே சென்று தன்னறைக்குள் அடைந்து கொண்டாள்.


"என்னை அன்று அவன் தவிக்க விட்டான் தானே......என் கூட இவ்வளவு நாளா பேசல....என்னைப் பத்தி நினைச்சு கூட பார்க்கலலே அவன்....அவனை ஒரு வழி பண்ணுறேன்....கொஞ்ச நாள் போகட்டும்......" என்று அவள் சூர்யாவோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க விதியோ வேறு ஒரு ஆட்டத்தை நடத்தக் காத்திருந்தது.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top