• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,144
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......
Gentleman Actor Nani _3_.jpg67be878c54e6aa908c076eb654a23895.jpg

வெண்ணிலா அதிர்ச்சியாக அக்ஸயாவையே பார்த்து கொண்டு நிற்க அவளருகில் வந்த மகாலட்சுமி
"என்னடா நிலா??? இப்படி திடீர்னு வந்து நிற்குறாங்க இவங்கனு யோசிக்குறியா???" என்று கேட்கவும் வெண்ணிலா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்த வண்ணம் நின்றாள்.


"அவளுக்கு இது ஸ்வீட் சர்ப்பரைஸ் மா.....நான் நிலாவை கூட்டிட்டு போய் ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்.....நீங்க உட்காருங்கம்மா....." என்று அபிநயா மகாலட்சுமியிடம் கூறி விட்டு வெண்ணிலாவை அழைத்து கொண்டு செல்ல கனவில் நடப்பது போல வெண்ணிலா அபிநயாவின் பின்னால் சென்றாள்.


சூர்யாவின் பார்வையோ வெண்ணிலாவின் அதிர்ந்த முகத்தையே அளவிட்டு கொண்டிருந்தது.


"இவ முகமே சரி இல்லை.....எதையோ யோசிச்சு அவளை அவளே குழப்பிட்டு இருக்கா.....அவளை பார்த்து எத்தனை நாளாச்சு??? ஆனா அந்த ஏக்கம், காதல் எதுவுமே அவ முகத்தில் இல்லையே.....கண்டிப்பாக நிலாகிட்ட நான் பேசியே ஆகணும்....." என்று சூர்யா மனதிற்குள் முடிவெடுத்து கொண்டான்.


மறுபுறம் தன்னறையில் வெண்ணிலா அபிநயா சொன்னதை எல்லாம் சாவி கொடுத்த பொம்மை போல செய்து கொண்டிருந்தாள்.


அங்கே என்ன நடக்கிறது என்பது அவள் மூளைக்கு சிறிதும் எட்டவில்லை.


எளிமையான நீல நிற பட்டு புடவையில் அபிநயாவின் கை வண்ணத்தில் சிறு ஒப்பனையோடு நடந்து வந்த வெண்ணிலாவைப் பார்த்து ஆண்டாள் சிறிது கண் கலங்கவே அவர் கைகளை மகாலட்சுமி ஆதரவாக பற்றி கொண்டார்.


அதன் பிறகு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட வெண்ணிலா - சூர்யதேவனின் நிச்சயதார்த்தம் தொடங்கியது.


அய்யர் நிச்சயப்பத்திரிகை வாசிக்க ஆண்டாள்- அழகர் மற்றும் பெருமாள் - மகாலட்சுமி தம்பதியினர் தாம்பூலம் மாற்றி கொண்டனர்.


அதன் பின்னர் சூர்யா வெண்ணிலாவிற்கு மோதிரம் மாட்டி விடுவதற்காக அவளருகில் வர வெண்ணிலாவோ இலக்கின்றி சுவரை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.


வெண்ணிலாவின் முகத்தை பார்த்து பெரியவர்கள் எல்லோரும் குழப்பமடைய அபிநயா வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் மீது கை வைத்தாள்.


அபிநயாவின் கை படவும் கனவில் இருந்து எழுந்து கொள்வது போல விழித்த வெண்ணிலா அப்போது தான் தன் எதிரில் நின்று கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.


பெரியவர்களின் குழப்பமான முகத்தை பார்த்து அவர்கள் அருகில் வந்த வெற்றி
"ஏன் எல்லோரும் த்ரீல் மூவி பார்க்குற ரேஞ்ச்ல இருக்குறீங்க??? நிலாவுக்கு இது சர்ப்பரைஸ்....ஷோ அவ ஷாக் ஆனா நியாயம் இருக்கு....நீங்க எல்லாரும் ஏன் ஷாக் ஆகுறிங்க???" என்று கேட்கவும்


ஆண்டாள் சிறிது தயக்கத்தோடு
"அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம் வெற்றி...." என்று கூறினார்.


ஆண்டாள் சொன்னதைக் கேட்டு வெற்றி மனதிற்குள்
"அவ ஆல்ரெடி வீட்டில் லவ் பண்ணுறத சொன்னா என்ன நினைப்பாங்கனு கன்பியுஸ்ல இருக்கா.....பிரண்ட்னு பழக விட்ட சூர்யாவை தப்பா நினைச்சிடுவாங்களோனு தான் மேடம் பீல் பண்ணுறாங்க....இதை நான் இப்போ உங்க கிட்ட சொல்ல முடியாதே...." என்று வெகு தப்பாக யோசித்தவன்


ஆண்டாளின் அருகில் வந்து
"நிலா எதுவும் சொல்லாம இருக்குறதுலயே புரியலயா??? அவளுக்கும் இதுல சம்மதம் தான்....பொண்ணு கொஞ்சம் ஷாக் ஆகிட்டா அவ்வளவு தான்...." என்று அவரை சமாதானப்படுத்திய வெற்றி அபிநயாவை திரும்பி பார்த்தான்.


அபிநயா வெண்ணிலாவின் கை பிடித்து எழுந்து நிற்க செய்ய எழுந்து நின்ற வெண்ணிலா சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.


"இல்ல....இல்ல....இந்த திருமணம் நடக்க கூடாது....சூர்யா என்ன ஏமாற்றிட்டு பொய்யா வேஷம் போடுறான்....அவனை நம்பவே கூடாது.....இந்த திருமணத்தை நான் நடக்க விடமாட்டேன்....." என்று வெண்ணிலா மனதிற்குள் நினைத்துக் கொண்டு அனைவரிடமும் இதைப் பற்றி கூறலாம் என்று வாய் திறக்கையில் சூர்யாவின் கைகள் அவள் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டிருந்தது.


வெண்ணிலா அதிர்ச்சியாக அவனைப் பார்க்க சூர்யா அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.


சூர்யாவின் சிரிப்பில் வெண்ணிலாவின் மனம் அவன் பால் ஈர்க்கப்பட்டாலும் முயன்று தன் மனதை கட்டி போட்டவள் சூர்யாவை கோபமாக பார்த்தாள்.


அதன் பிறகு பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் திருமணத் திகதி பற்றி பேச ஆரம்பித்து விட அபிநயா மற்றும் வெற்றி, வெண்ணிலா மற்றும் சூர்யாவிற்கு தனிமை கொடுத்து சென்றனர்.


"நிலா....." என்று சூர்யா அழைக்கவும்


கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா
"இப்போ என்ன டிராமா போடலாம்னு இருக்க????" என்று கேட்க


"டிராமாவா??????" என்று அவளை புரியாமல் பார்த்தான் சூர்யா.


"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை....நீங்களாகவே எல்லார்கிட்டயும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க....இல்லைனே நான் வேற ஏதாவது பண்ணிடுவேன்....." என்று விட்டு வெண்ணிலா சென்று விட


"என்னாச்சு இவளுக்கு????" என்று யோசித்த வண்ணம் நின்றான் சூர்யா.


"ஒரு வேளை நான் இவ்வளவு நாளா பேசலேனு கோபமாக இருக்கா போல....சரியான பச்சை மிளகாய் இவ.....
நான் அவ்வளவு சீக்கிரம் பின் வாங்க மாட்டேன் ஐசும்மா.....இந்த சின்ன ரீசன்காக கல்யாணத்தை நிறுத்துறதா???? நெவர்.....இந்த கல்யாணம் நடக்கும்....." என்று கோபமாக படியேறி சென்ற வெண்ணிலாவை பார்த்து தனக்குள் கூறி கொண்டவன் பெரியவர்கள் நால்வரின் அருகில் சென்றான்.


"நான் ஒரு விஷயம் சொல்லணும்...." என்றவாறு தங்கள் முன்னால் நின்ற சூர்யாவை பெரியவர்கள் நால்வரும் கேள்வியாக நோக்கினர்.


"அடுத்த வாரம் ஏதாவது நல்ல முஹூர்த்தம் இருந்தா அப்போவே கல்யாணத்தை வச்சிக்கலாமே....." என்று சூர்யா கூறவும்


"என்ன?????" என்று அனைவரும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தனர்.


"இல்ல....என் வயசு தானே வெற்றிக்கும் அபிக்கும்.....அவங்களுக்கே ஒரு பையன்....அதுவும் நாலு வயசு பையன்....." என்று பெருமூச்சு விட்டு கொள்ள பெரியவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.


"படவா.....பெரியவங்க கிட்ட என்ன பேசணும்னு தெரியாதா உனக்கு????" என்று மகாலட்சுமி சூர்யாவின் காதை பிடித்து செல்லமாக திருக


"என்ன உங்களுக்கு அடுத்த பேரக்குழந்தைங்கள பார்க்க ஆசை இருக்கும்னு நினைச்சு சொன்னேன்...." என்று சூர்யா கூற மகாலட்சுமி தன் தலையில் தட்டி கொண்டார்.


"உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லைடா...." என்று விட்டு மகாலட்சுமி சென்று ஆண்டாளின் அருகில் நின்று கொள்ள


சூர்யாவின் அருகில் வந்த அழகர்
"உன் நேரம் அடுத்த வாரம் நல்ல நாள் எதுவும் இல்லை டா கண்ணா...அதனால அதற்கு அடுத்த வாரம் தான் நல்ல நாள் வருது.....அப்போ தான் உன்னை நிலாகிட்ட நாங்க பணயமா அனுப்ப போறோம்....." என்று கூற


"ஏதோ ஜெயிலுக்கு அனுப்புற மாதிரி சொல்லுறீங்களே மாமா...." என்று சூர்யா கூறவும்


"மேரேஜ் ஒரு ஜெயில் தான்டா....." என்றவாறே அவர்கள் அருகில் வந்து நின்றான் வெற்றி.


"ஓஹ்.....அப்படியா????" என்றவாறு வந்த அபிநயாவைப் பார்த்து வெற்றி திருதிருவென்று விழிக்க இவர்கள் அனைவரது சம்பாஷணைகளையும் பார்த்து பெரியவர்கள் அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்.


ஆனால் வெண்ணிலாவோ தன் அறையில் சூர்யா அவள் கையில் போட்டு விட்ட மோதிரத்தை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.


"சீட்டர்......சீட்டர்......" என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தவள் கோபமாக தன் விரலில் இருந்து மோதிரத்தை கழட்டப் பார்க்க அந்த மோதிரமோ அவள் விரலை விட்டு அசையவே இல்லை.


விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள்
தழும்புதே

கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே

முத்தமிட்ட உதடுகள்
உளறுதே

நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்

விழியிலே என் விழியிலே
கனவுகள்
கலைந்ததே

உயிரிலே நினைவுகள்
தழும்புதே

இமைகளிலே கனவுகளை
விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்

உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை

இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள்
தழும்புதே

உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்‌தான் நாம் காதல்
விடை தெரியும்

காதல் சிறகானாது
இன்று சருகானாது
என் உள் நெஞ்சம் உடைகின்றது

உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது

ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி விளயாட
நாம் காதல் பொம்மையா

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தழும்புதே


மனக் குமுறல் தாளாமல் தேம்பி தேம்பி அழுத வெண்ணிலா அப்படியே உறங்கிப் போனாள்.


வெண்ணிலாவின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்வதற்கு முன்னர் சூர்யா வெண்ணிலாவிடம் பேசுவதற்காக அவளை தேடி பார்த்தான்.


சூர்யாவின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட வெற்றி அவனின் அருகில் வந்து
"என்ன தேடல் ரொம்ப பலமாக இருக்கு???" என்று கேட்கவும்

திரும்பி அவனைப் பார்த்த சூர்யா
"அது தான் தெரியுதுலே....அப்புறம் எதுக்கு ஒரு கேள்வி...." என்று கேட்டான்.


"நிலா அவ ரூம்ல இருப்பா.....அவளுக்கு இது ஒரு ஷாக் தானே.....அதுவும் அவ லவ் பண்ணத அவ சொல்லாமல் நாங்க தெரிஞ்சுகிட்டோம்னு கில்டியா இருக்குறா போல...." என்று வெற்றி கூறவும்


சூர்யாவின் உள் மனதோ "இல்லை....வெண்ணிலாவின் மனதில் வேறு ஏதோ குழப்பம் இருக்கு...." என்று நினைத்து கொண்டது.


சிறிது நேரத்தில் சூர்யாவின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்று விட வெற்றி வெண்ணிலாவை தேடி அவளது அறையை நோக்கி சென்றான்.


அறைக் கதவை தட்டி விட்டு வெற்றி காத்து நிற்க கதவு தட்டும் ஓசை கேட்டு கண் விழித்த வெண்ணிலா எழுந்து சென்று கதவை திறந்தாள்.


வெண்ணிலாவின் கலங்கிய முகத்தை பார்த்து பதற்றம் கொண்ட வெற்றி
"நிலா என்னடா ஆச்சு????" என்று கேட்டான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,144
Age
26
Location
Sri Lanka
Sai-Pallavi-marriage-saree-Kanam-movie-1.jpg
9a4b3ea6db4512330196c0b9cc37eca2.jpg
IMG_20190211_184451.jpg"நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...." என்று வெண்ணிலா கூறவும்


"எனக்கு தெரியும்...." என்று கூறினான் வெற்றி.


"எப்படி????" என்று வெண்ணிலா புரியாமல் கேட்கவும்


"நீ எதை பத்தியும் யோசிச்சு உன் மனசை போட்டு குழப்பிக்காம நல்லா ரெஸ்ட் எடு.....இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணத்தை வச்சுகிட்டு இப்படி டல்லா இருந்
நல்லா இருக்குமா சொல்லு....ஷோ ஹேப்பியா இரு...." என்று வெற்றி கூறவும்


"இரண்டு வாரமா????" என்று மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் வெண்ணிலா.


"நிலா....நிலா...." என்று வெற்றியின் அழைப்பில் தன்னை மீட்டு கொண்டவள்


"நான் சொல்ல வர்றத முதல்ல கேளு வெற்றி....." என்று கூறவும்


"நீ எதுவும் சொல்ல வேணாம்.....நீ சொல்றத என் காது இப்போதைக்கு கேட்காது......" என்றவாறு வெற்றி திரும்பி சென்று விட


"யாரும் என் பேச்சை கேட்குறாங்க இல்லையே.....எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.....வேண்டாம்....." என்று வெண்ணிலா புலம்பிக் கொண்டே
சரிந்து அமர்ந்தாள்.


இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வெண்ணிலாவிற்கு சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க தற்காலிகமாக இந்த திருமணம் பற்றிய எண்ணங்கள் அவளை விட்டு விலகி போனது.


திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் வெண்ணிலா வழக்கம் போல சூட்டிங் செல்ல தயாராக அவள் முன்னால் வந்த ஆண்டாள்
"என்ன நிலா.....கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.....நீ பாட்டுக்கு வெளியில் போயிட்டு வந்துட்டே இருக்க...." என்று கேட்கவும் அப்போது தான் வெண்ணிலாவிற்கு திருமணம் பற்றிய எண்ணம் நினைவு வந்தது.


"இதை நான் எப்படி மறந்து போனேன்????" என்று யோசித்த வெண்ணிலா


"அம்மா கிட்ட இது பத்தி பேசியே ஆகணும்...." என்று நினைத்து கொண்டு


"அம்மா...நான் ஒண்ணு சொல்லணும்....." என்று கூறினாள்.


"என்னடா சொல்லு....." என்று ஆண்டாள் கூறவும்
நிமிர்ந்து அவரை பார்த்த வெண்ணிலாவின் கண்கள் இரண்டும் கலங்கி போயின.


உடனே தன் பார்வையை கீழே செலுத்தி தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட வெண்ணிலா
"இன்னைக்கு மட்டும் தான் மா....போயிட்டு வந்துடவா???" என்று கேட்கவும்


"இதை கேட்க தான் இவ்வளவு தயக்கமா???? பார்த்து பத்திரமாக போயிட்டு வா....." என்று விட்டு செல்ல வெண்ணிலா தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.


சூட்டிங் செல்ல மனமின்றி எதிரில் தெரிந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸினுள் தன் காரை செலுத்திய வெண்ணிலா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸினுள் நுழைந்து கொண்டாள்.


அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் சென்று அமர்ந்து கொண்ட வெண்ணிலாவின் பல்வேறு சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தது.


"அம்மா கிட்ட சொல்ல எனக்கு ஏன் தைரியம் வரல??? அவங்க முகம் அவ்வளவு சந்தோஷமாக இருந்ததே.....எப்படி போய் நான் சொல்லுறது??? என் சம்மதத்தை கேட்க யாருக்குமே தோணலயா????" என்று யோசித்த வெண்ணிலாவின் பார்வையில் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சூர்யா மற்றும் ஜனனி பட்டனர்.


"சூர்யா......." என்று அதிர்ச்சியாக எழுந்த வெண்ணிலா வேகமாக அவனருகில் செல்லப்போக அவள் முன்னால் புதியவன் ஒருவன் வந்து நின்றான்.


வெண்ணிலா கேள்வியாக அவனை நோக்க அவளை பார்த்து சிரித்துக் கொண்டவன்
"ஹலோ நிலா.....எப்படி இருக்கீங்க???" என்று கேட்கவும்


"நீங்க?????" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.


"ஞாபகம் இல்லையா???? நான் தான் வில்லியம்.....சூர்யாவோட காலேஜ் மேட்...." என்று கூறினான்.


"ஓஹ்.....ஸாரி நான் மறந்துட்டேன்....." என்று வெண்ணிலா கூறவும்


"இட்ஸ் ஓகே.....என்ன இந்த பக்கம்???" என்று கேட்டான் வில்லியம்.


வெண்ணிலாவின் பார்வை அப்போதும் சூர்யாவின் பக்கமே இருக்க அந்த பக்கமாக திரும்பி பார்த்த வில்லியம்
"ஹேய்....அது சூர்யா அன்ட் ஜனனி தானே....காலேஜ்ல இருந்து ரொம்ப க்ளோஸ் தான்லே அவங்க????" என்று கேட்கவும் வெண்ணிலா எதுவும் பேசாமல் நின்றாள்.


"மேட் பார் ஈச் அதர்னா சூர்யா அன்ட் ஜனனி தான்....." என்று வில்லியம் கூறவும் வெண்ணிலாவிற்கு நெருப்பு மேல் நிற்பது போல இருந்தது.


"அவங்க கல்யாணம் பண்ணிட்டாங்க போல இருக்கு இல்லையா நிலா???? ஜனனியோட பேஸ் எக்ஸ்பிரஸன்ஸ் அன்ட் சூர்யாவோட அந்த என்ஜாய்மண்ட் பார்த்தா லவ்லி கப்பள் போல இருக்கு....பட் ஜனனி ரகசியமாக வெடிங் பண்ணிட்டானு ஒரு கதை போகுது....." என்று வில்லியம் கூறவும் வெண்ணிலாவிற்கு அதிர்ச்சியில் பேசுவதற்கு நா எழவில்லை.


"வாங்க நிலா....போய் ஒரு விஷ் பண்ணிட்டு வந்துடலாம்....." என்று வில்லியம் அழைக்கவும்


"எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கு...." என்று விட்டு வெண்ணிலா சென்று விட வில்லியம் புன்னகையோடு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி செல்லும் வெண்ணிலாவை பார்த்து கொண்டு நின்றான்.


வீட்டிற்கு வந்த வெண்ணிலா சூர்யாவை பற்றியே நினைத்து கொண்டு நின்றாள்.
"சூர்யா அப்படி பண்ணி இருக்க மாட்டான்.....அவன் அப்படி பண்ணவே மாட்டான்...." என்று தனக்குத்தானே கூறி கொண்ட
வெண்ணிலா சூர்யா தன்னிடம் கூறிய வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நினைத்து பார்த்தாள்.


"ஜனனியும் எனக்கு முக்கியம்....." என்று சூர்யா கூறிய ஒரு வார்த்தை வெண்ணிலாவை முற்றிலும் கலங்க செய்தது.


சந்தேகம் என்ற ஒரு சிறு விதை வெண்ணிலாவின் மனதில் விழுந்து இன்று ஒரு பெரு விருட்சமாக நின்று அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.


ஆனால் இது எதையும் அறியாமல் சூர்யா வெண்ணிலாவுடனான தன் வாழ்க்கையை எண்ணி கனவில் மிதந்து கொண்டிருந்தான்.


திருமணத்திற்கான நாள் இனிதாக விடிந்தது.


பட்டு வேஷ்டி, சட்டையில் சூர்யா கம்பீரமாக மணமேடையில் அமர்ந்து அய்யர் சொன்ன மந்திரங்களை சொல்லி கொண்டிருக்க வெண்ணிலாவை அவளது அறையில் அலங்கரித்து கொண்டிருந்தனர்.


பட்டு சேலை அணிந்து, அவள் அழகையே மிதமிஞ்சி போகும் வகையில் ஆபரணங்கள் அணிந்து வானுலக தேவதை போல நடந்து வந்த தன் மனம் கவர்ந்தவளை பார்த்து சூர்யா சொக்கிப் போனான்.


வெண்ணிலா தன்னருகில் வந்து அமர்ந்து கொள்ளவும் சூர்யாவின் பார்வை வெண்ணிலாவின் முகத்தையே கேள்வியாக நோக்கியது.


"உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அப்படி தானே????" என்று சூர்யா கேட்கவும்


சட்டென்று நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா
"ஆமா...." என்று கூறினாள்.


"இதுக்கு மட்டும் பேசுவியே...." என்று முணுமுணுத்துக் கொண்ட சூர்யா அய்யர் நீட்டிய தட்டில் இருந்த தாலியை எடுத்து வெண்ணிலாவின் கழுத்தில் கட்டினான்.


வெண்ணிலா கலங்கிய கண்களோடு சூர்யாவை நிமிர்ந்து பார்க்க அவளை திரும்பி பார்த்த சூர்யா
"இனி நீ உரிமையா என் கூட எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை போடலாம்....இப்போதாவது கொஞ்சம் சிரி...." என்று கூற வெண்ணிலாவோ முன் இருந்ததை விட இன்னும் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள்.


அதன் பிறகு எல்லாவிதமான சம்பிரதாயங்களும் முடிந்து மாலை ரிசப்சனுக்காக அனைவரும் தயாராகி கொண்டிருந்தனர்.


வெண்ணிலா சந்தன நிற லெஹங்கா அணிந்து நிற்க அவளருகில் சூர்யா நிற்க அங்கிருந்த அனைவரது பார்வையும் இவர்கள் மேலேயே இருந்தது.


உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரும் வந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்க வெண்ணிலா முயன்று தன் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.


அப்போது ஜனனி மேடையேறி வருவதைப் பார்த்து வெண்ணிலாவின் முகம் இருளடர்ந்து போனது.


இருந்தாலும் தன் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் வெண்ணிலா நின்று கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்த ஜனனி பொதுவாக இருவருக்கும் வாழ்த்து கூறி விட்டு சென்றாள்.


மேடையில் இருந்து இறங்கி செல்லும் போது ஜனனி பார்த்த பார்வையில் அத்தனை வஞ்சம் நிறைந்து இருக்க அதை பார்த்த வெண்ணிலா முற்றிலும் நடுங்கி போனாள்.


எல்லாம் முடிந்து வெண்ணிலா சூர்யாவோடு புறப்பட்டு செல்ல நிற்கையில் அவளருகில் வந்த ஜனனி
"கல்யாணம் ஆயிடுச்சேனு ரொம்ப சந்தோஷப்படாதே.....நீ எப்போவும் செகண்ட் ஆப்ஷன் தான்.....எல்லாத்துலேயும்...." என்று விட்டு செல்ல வெண்ணிலா விக்கித்துப் போய் நின்றாள்.


வெண்ணிலாவை வழி அனுப்பி வைக்க அழகர் மற்றும் ஆண்டாள் வரவும் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சோகம், ஆற்றாமை, அச்சம் எல்லாம் ஒன்று சேர ஆண்டாளின் தோள் சாய்ந்து வெண்ணிலா கண்ணீர் வடித்தாள்.


சூர்யா ஆறுதலாக அவள் தலை கோதி விட விருட்டென்று தன் தலையை தூக்கியவள் தன் கண்களை துடைத்து கொண்டு அழுத்தமாக நின்றாள்.


வெற்றி மற்றும் அழகர் கனத்த மனதோடு வெண்ணிலாவை வழி அனுப்ப இருவரிடமும் கூறி விட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்ட வெண்ணிலா தன் பார்வையில் இருந்து அவர்கள் மறையும் வரை அவர்களையே பார்த்த வண்ணம் இருந்தாள்.


சூர்யாவின் வீடு வரும் வரை ஒரு வித சோக உணர்வில் தவித்துக் கொண்டிருந்த வெண்ணிலா சூர்யாவின்
"நிலா வீடு வந்தாச்சு.....இறங்கு....." என்ற அழைப்பில் கடினத்தன்மையை தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் வீட்டினுள் சென்று நுழைந்தாள்.


வெண்ணிலாவின் மன எண்ணங்கள் புரியாமல் சூர்யா அவளை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றான்.


"இனி என் வாழ்க்கை அவ்வளவு தானா????" என்று யோசித்து பார்த்த வெண்ணிலாவிற்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.


காலையில் இருந்து நடந்த சடங்குகள், ரிசப்சனில் நின்ற வண்ணம் இருந்தது எல்லாம் சேர்ந்து அவள் உடம்பை சோர்ந்து போக செய்து இருக்க ஏற்கனவே இருந்த மன உளைச்சலும் சேர்ந்து கொள்ள வெண்ணிலா அப்படியே அசந்து தூங்கி போனாள்.


வெண்ணிலாவோடு பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு அறைக்குள் நுழைந்த சூர்யா அங்கு சோர்ந்து போய் தூங்கி கொண்டிருந்த தன் காதல் மனைவியை பார்த்து அமைதியாக நின்றான்.


"நாளைக்கு பேசிக்கலாம்....." என்று நினைத்து கொண்டு கட்டிலின் மறுபுறம் சென்று சூர்யா படுத்து தூங்கி விட அடுத்த நாள் விடியல் சூர்யாவை சுழற்றி அடிக்க காத்திருந்தது......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top