• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love::love:

ஒரு முக்கியமான அறிவிப்பு
நாளையிலிருந்து நமக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுறதுனால இன்னும் ஒரு மாதத்திற்கு என்னால ud போட முடியாது:cry::cry:
அதனால தயவு கூர்ந்து இந்த பச்ச புள்ளையை மன்னிக்கணும்:giggle:

ஒரு மாதத்திற்கு அப்புறம் ரெகுலரா அப்டேட் போடுவேன் ஷோ ஸாரி பிரண்ட்ஸ்....
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
nani-ninnu-kori48.jpg0257abd1165ea4c0b69ed865f35014e6.jpg

கண்கள் இரண்டும் கலங்க கைகள் நடுங்க தன் கையில் இருந்த கவரை நழுவ விட்ட வெண்ணிலாவின் மனம் சொல்லிலடங்கா வேதனையில் தவித்தது.


அந்த கவர் நழுவி அவள் மடியில் விழ அதிலிருந்து பல புகைப்படங்கள் சிதறி விழுந்தது.


அதில் சூர்யா மற்றும் ஜனனி மிக மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர்.


"சூர்யா.......நீ இப்படி......சூர்யா.....என்னால நம்ப முடியல......சூர்யாவா இப்படி......" என பலமுறை தனக்குள் கேட்டுக் கொண்ட வெண்ணிலா மீண்டும் அந்த புகைப்படங்கள் அனைத்தையும் தன் கையில் எடுத்தாள்.


ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்

மெட்டிக்கொண்டு மெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்

காதல் என்னும் கைகுழந்தை
கதரி அழுகிரதே

மறுனால் நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்காக என் நெஞ்சு வெடிச்சிருச்சே

ஒரே ஒரு பார்வை புயலாய் எம்மேல் அடிச்சிருச்சே


கண்கள் இரண்டையும் கண்ணீர் சூழ்ந்து கொள்ள கோபம் தாளாமல் அந்த புகைப்படங்களை எல்லாம் வெண்ணிலா பின்புறமாக வீச அது எல்லாம் பறந்து சென்று காரின் பின்னால் கீழ் புறமாக சென்று விழுந்தது.


கண்ணீர் ஆறாகப் பெருக காரை ஸ்டார்ட் செய்த வெண்ணிலா தட்டுத்தடுமாறி ஒரு வழியாக வீட்டை வந்தடைந்தாள்.


அவள் வந்த நேரம் சூர்யா ஆபீஸ் சென்று இருந்ததனால் வெண்ணிலா வேகமாக தன்னறைக்குள் சென்று அடைந்து கொள்ள சமையலறைக்குள் வேலையாக இருந்த மகாலட்சுமி வெண்ணிலாவை கவனிக்கவில்லை.


அறைக்குள் வந்த வெண்ணிலா சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்து கோபமாக அதை சுவற்றில் இருந்து எடுக்க முயல அதில் இருந்த சிறு ஆணி அவள் கையை பதம் பார்த்தது.


"ஆஆஆஆஆஆஆஆஆ......" என்று அலறலோடு தன் கையை உதறிய வெண்ணிலா அதிலிருந்து சொட்டு சொட்டாக விழுந்த இரத்தத்தை துடைக்கவும் நினைவின்றி அந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.


'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது போல கோபத்தை மட்டுமே முதன்மையாக காணும் வெண்ணிலா அந்த புகைப்படங்களை பார்த்த அடுத்த நொடியே சூர்யா மேல் வைத்திருந்த நம்பிக்கையை துடைத்து எறிந்து விட்டாள்.


ஒரு நொடி அவள் நிதானமாக இருந்திருந்தால் எல்லாம் மாறி இருக்கும்.


ஆனால் விதி வலியது அல்லவா......


அப்போது வெண்ணிலாவின் தொலைபேசி அடிக்கவும் இரத்தம் சொட்ட சொட்ட அதே கையில் போனை எடுத்து அட்டன்ட் செய்து தன் காதில் வைத்தாள்.


மறுபுறம் சத்தமிட்டு ஒருவர் சிரிக்கவும் குழப்பமாக போனை எடுத்து பார்த்த வெண்ணிலா கோபமாக
"ஏய்......யாரு இது????? போன் பண்ணிட்டு லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்கீங்க???? ஆர் யூ மேட்????" என்று சத்தமிட
மறுமுனையில்


"என்ன நிலா மேடம்???? அதுக்குள்ள இந்த வில்லியமை மறந்தாச்சா???" என்று கேட்கவும்


"வில்லியம்....." என்று யோசித்து பார்த்தாள் வெண்ணிலா.


அப்போது தான் அன்றொரு நாள் மாலில் சூர்யா, ஜனனியை ஒன்றாக பார்க்கும் போது தன்னோடு வந்து பேசிய வில்லியம் பற்றி நினைவு வரவும் வெண்ணிலா சலிப்புடன் போனை பார்த்து விட்டு
"என்ன விஷயம் சொல்லுங்க????" என்று கேட்டாள்.


"போட்டோ எல்லாம் பார்த்து சந்தோஷமா இருக்குறீங்க போல???" என்று வில்லியம் கேட்கவும்


அதிர்ச்சியான வெண்ணிலா
"என்....என்ன...எந்த....போட்டோ????" என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.


"என்ன மேடம்???? சும்மா நடிக்காதீங்க....அது தான் உங்க ஆபிஸ்ல கொடுத்தாங்கலே ஒரு கவர்....பார்த்துட்டு செம ஷாக் ஆகிட்டீங்க போல...." என்று வில்லியம் நக்கலாக சிரிக்க


கோபம் கொண்ட வெண்ணிலா
"இன்னொரு வாட்டி இப்படி தேவை இல்லாமல் பேசிட்டு போன் பண்ணா நடக்குறதே வேற சொல்லிட்டன்.....இடியட்...." என்று விட்டு போனை கட் செய்த வெண்ணிலா அதே கோப மனநிலையோடு அவனது நம்பரை பிளாக் செய்தாள்.


போனை பெட்டில் தூக்கி போட்டவள் தலையை இரு கைகளாலும் பிடித்து கொண்டு அப்படியே தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள்.


"இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்??? ஒரு வேளை இவன் ஜனனி அனுப்பின ஆளாக இருக்குமோ???? இது எல்லாம் ஜனனி பண்ணி இருப்பாளா??? நான் எங்கேயும் எதையும் போட்டு குழப்பிக்குறேனா????" என்று யோசித்து பார்த்தவள் எந்த பதிலும் கிடைக்காமல் போகவே சோர்வாக எழுந்து பால்கனியில் சென்று நின்றாள்.


கீழே தோட்டத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்ற வெண்ணிலா வெயில் அவள் பாதங்களை சூடாக்க தன் சுய உணர்வை அடைந்தாள்.


மனதின் வெம்மை போக ஒரு குளியல் போட்டவள் கீழே ஹாலுக்கு இறங்கி செல்ல படியிறங்கி வரும் வெண்ணிலாவை அதிசயமாக பார்த்த மகாலட்சுமி
"நிலா எப்போமா வந்த???" என்று கேட்கவும்


அவரை பார்த்து சமாளிப்பாக புன்னகத்து கொண்டவள்
"ஸாரி அத்தை....நீங்க கிச்சன்ல இருக்கவும் ரூம்க்கு போய் பிரஸ்ஸாகிட்டு வரலாம்னு அப்படியே ரூம்க்கு போயிட்டேன்.....ஸாரி....." என்று கூற


அவள் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்த மகாலட்சுமி
"இதுக்கு எதுக்கு டா மா ஸாரி???? சரி சரி வா வந்து முதல்ல சாப்பிடு...." என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றார்.


அவரின் அக்கறையான பேச்சிலும், அக்ஸயாவின் கலகலப்பான பேச்சிலும் தற்காலிகமாக அன்றைய பிரச்சினைகளை தற்காலிகமாக மறந்து இருந்த வெண்ணிலா சூர்யாவை கண்ட அடுத்த நொடி முகம் வாடிப் போனாள்.


வழக்கம் போல சூர்யாவிற்கு இரவுணவை எடுத்து வைத்து விட்டு வெண்ணிலா சென்று விட "நேற்று பேசாமல் இருந்ததற்கு தான் இந்த கோபம் போல...." என்று எண்ணி கொண்டு சூர்யாவும் அமைதியாக இருந்து கொண்டான்.


அதன் பிறகு இரண்டு, மூன்று நாட்கள் இதே நிலை தான் நீடித்தது.


அன்று வைபவின் பிறந்தநாள் நிகழ்வுக்காக எல்லோரும் தயாராகி கொண்டிருக்க வெண்ணிலாவும் மனதில் இருந்த பிரச்சினை எல்லாம் மறந்து சந்தோஷமாக தயாராகி கொண்டிருந்தாள்.


சூர்யாவின் பார்வை நொடிக்கு ஒரு தடவை வெண்ணிலாவை தழுவி சென்றாலும் வெண்ணிலா இதை கண்டும் காணாதது போல இருந்து கொண்டாள்.


ஹோட்டலில் வந்து இறங்கிய வெண்ணிலா ஆண்டாளை காணவும் ஓடி சென்று அவரை கட்டி கொள்ள தன் மகளை கண்கள் கலங்க அணைத்துக் கொண்டார் ஆண்டாள்.


அப்போது தான் வெண்ணிலாவின் பின்னால் நின்ற பெருமாள், மகாலட்சுமியைப் பார்த்த ஆண்டாள் வெண்ணிலாவின் காதில்
"உன் மாமனார், மாமியார் எல்லாம் இப்படி தான் அம்போனு விட்டுட்டு வருவியா???" என்று கேட்கவும்


"என் மம்மி, டாடிய நான் கூட்டிட்டு போவேனாம்....அதே மாதிரி அபி அவங்க மம்மி, டாடிய கூட்டிட்டு வருவாங்களாம்....." என்று கூறி கொண்டு அபிநயாவைப் பார்த்து கண்ணடித்த வெண்ணிலா ஆண்டாளோடு கதை பேசிக் கொண்டே உள்ளே சென்று விட அவளை பார்த்து சிரித்துக் கொண்டே அபிநயா வந்து தன் குடும்பத்தினரை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.


பிறந்தநாள் வைபவம் ஆரம்பித்து விட வைபவ் கேக் வெட்ட சுற்றி நின்று அனைவரும் கை தட்டி அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க வைபவ் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து கொண்டே அன்றைய நாளை மகிழ்ச்சியாக கழித்தான்.


ஆனால் வெண்ணிலாவின் மனதோ ஏதோ ஒரு தடுமாற்றத்தில் தத்தளித்த வண்ணம் இருக்க சிறு மன சஞ்சலத்தோடு சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.


அப்போது அங்கே ஹோட்டலுக்குள் ஜனனி நுழைவதை பார்த்த வெண்ணிலா அதிர்ச்சி பாதி, பயம் பாதியாக உறைந்து நிற்க ஜனனியோ புன்னகையோடு வைபவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு நின்றாள்.


"ஜனனி இங்க எப்படி???" என்று வெண்ணிலா தனக்குள் கேட்பதாக எண்ணி சத்தமாக கேட்டு விட


அவளை கடந்து சென்ற வெற்றி
"நாங்க தான் இன்வைட் பண்ணோம்....." என்று கூற


"என்ன????" என்று ஆச்சரியமாக கேட்டாள் வெண்ணிலா.


"ஜனனியை யாரு இன்வைட் பண்ணேணு கேட்டியே....அதுக்கு தான் பதில் சொன்னேன்....ஜனனி எங்க பெட்ச் மேட் தானே.....உங்க வெடிங்லதான் நாங்க எல்லாரும் நல்ல க்ளோஸ் ஆனோம்......சூர்யா கிட்டயும் கேட்டு தான் ஜனனியை இன்வைட் பண்ணோம்.....சூர்யா சொல்லலயா????" என்று வெற்றி வியப்பாக கேட்க


அவனை பார்த்து புன்னகத்த வெண்ணிலா
"ஆஹ்....அது...அது...சூர்யா சொன்னான் தான்...நான் தான் மறந்துட்டேன்...." என்று கூறவும்


"நல்ல பொண்ணு போ...." என்று விட்டு சென்றான் வெற்றி.


வெற்றி சென்று விட வெண்ணிலாவின் முகத்தில் இருந்த புன்னகை முழுமையாக மறைந்தது.


ஜனனி சூர்யாவுடன் பேசி சிரிப்பதை பார்த்து வெண்ணிலாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் எகிறியது.


அப்போது ஜனனி ஸ்டோர் ரூம் பக்கமாக இருந்த ரெஸ்ட் ரூம் புறமாக செல்ல ஜனனியோடு அந்த புகைப்படங்கள் பற்றி பேசி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வெண்ணிலா அவளை பின் தொடர்ந்து சென்றாள்.


அங்கே ஜனனி தலையில் கை வைத்து கொண்டு நிற்பதைப் பார்த்து அவளருகில் வந்த வெண்ணிலா அவள் தோள் தொடவும் ஜனனி திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள்.


வெண்ணிலாவை அங்கு எதிர்பார்க்காத ஜனனி விழித்து கொண்டு நிற்க ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட வெண்ணிலா
"ஜனனி ஆர் யூ ஓகே????" என்று கேட்கவும்
கண்கள் கலங்க இல்லை என்பது போல தலை அசைத்தாள் ஜனனி.


"என்ன விஷயம் தயங்காமல் சொல்லுங்க??" என்று வெண்ணிலா சிறிது பதட்டத்துடன் கேட்கவும்


"நான் சொல்லப் போறத யார்கிட்டயும் சொல்லிடாத நிலா.....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல.....அது தான் உன் கிட்ட சொல்லுறேன்...." என்று கூற வெண்ணிலா புரியாமல் அவளைப் பார்த்தாள்.


"என்ன விஷயம் முதல்ல அதை சொல்லுங்க....." என்று வெண்ணிலா கூறவும்


சுற்றிலும் திரும்பி பார்த்த ஜனனி மெல்லிய குரலில்
"ஐ யம் பிரக்னன்ட்....." என்று கூறி கொண்டு தன் தலையில் கை வைத்து கொள்ள வெண்ணிலாவோ அவள் சொன்ன வார்த்தைகளை யூகித்துக் கொள்ள முடியாமல் நின்றாள்.


ஏற்கனவே மனக்குழப்பத்தில் இருந்த வெண்ணிலா எல்லாவற்றையும் தப்பாக புரிந்து கொண்டு
"அப்போ சூர்யா என்னை ஏமாத்திட்டானா?????" என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து வெளியேறி செல்ல
ஜனனியோ வெண்ணிலா சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் பேச நா எழாமல் விக்கித்துப் போய் நின்றாள்.


உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு
"நிலா தப்பாக புரிஞ்சுகிட்டாளே......நான் இப்போ என்ன பண்ணுவேன்???" என்று தன் கையை பிசைந்து கொண்டு நின்ற ஜனனி வெண்ணிலாவிடம் பேசி விட வேண்டும் என்று அவளை தேடி வந்தாள்.


அதற்குள் எல்லோரும் கிளம்பி சென்று விட ஜனனி என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.


அப்போது அங்கு வந்த சூர்யா
"ஜனனி நீ இன்னும் கிளம்பலயா???" என்று கேட்கவும்
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அவனை திரும்பி பார்த்த ஜனனி
"சூர்யா கிட்ட நிலா பத்தி கேட்கலாம்....." என்று எண்ணி கொண்டு வாய் திறக்க போக அவளது போனும் அடித்தது.


"ஒரு நிமிஷம்...." என்று விட்டு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த ஜனனி மறுமுனையில் சொன்ன செய்தி கேட்டு தடுமாறி விழப் போக சூர்யா அவளை தாங்கிப் பிடித்தான்.


"ஜனனி என்ன ஆச்சு????" என்று சூர்யா கேட்கவும் கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் அவன் மேல் சாய்ந்து கதறி அழ சூர்யா என்ன என்று புரியாமல் அவள் கையில் இருந்த போனை வாங்கி தன் காதில் வைத்தான்.


"ஹலோ யாரு பேசுறீங்க????" என்று சூர்யா கேட்கவும்


மறுமுனையில் ஒரு பெண்மணி
"ஜனனி அம்மா எங்கே????" என்று பதட்டத்துடன் கேட்டார்.


"நான் ஜனனியோட பிரண்ட் தான் பேசறேன்.....ஏதாவது பிரச்சனையா???" என்று சூர்யா கேட்க


மறுமுனையில்
"ஜனனி அம்மாவோட அப்பாவும், அம்மாவும் வந்த காய் ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சாம்னு ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்ததுங்க.....அது தான் அம்மாவுக்கு கால் பண்ணுனேன்....." என்று கூறவும்


"ஓஹ் காட்....எந்த ஹாஸ்பிடல்????" என்று கேட்டான் சூர்யா.


"விஜயா ஹாஸ்பிடல்....." என்று அவர் கூறவும்
சரியென்று விட்டு போனை வைத்த சூர்யா ஜனனியை அருகில் இருந்த கதிரையில் அமரச் செய்து விட்டு கார் பார்க்கிங்கை நோக்கி சென்றான்.


"என்ன சூர்யா போகலாமா???" என்று பெருமாள் கேட்கவும்


அவரருகில் வந்த சூர்யா
"அப்பா....ஜனனியோட பேரண்ட்ஸ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்.....நான் ஜனனி கூட போய் என்ன ஏதுனு பார்த்துட்டு வரேன்.....நீங்க இப்போ வீட்டுக்கு போங்கபா......" என்று கூறவும்


"அச்சச்சோ.....நான் வேணா கூட வரவா???" என்று கேட்டார் மகாலட்சுமி.


"இல்ல மா நான் பார்த்துக்குறேன்.....நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க.....நான் எதுவும் தேவைனா கால் பண்ணுறேன்......" என்று கூறவும் சரியென்று விட்டு பெருமாள் காரை எடுத்துக்கொண்டு புறப்பட வெண்ணிலாவோ ஜனனி சொன்ன வார்த்தைகளையே திரும்ப திரும்ப நினைத்து கொண்டு இருந்தாள்.


உள்ளே வந்த சூர்யா ஜனனியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் ஏறி ஹாஸ்பிடலை நோக்கி சென்றான்.


ஹாஸ்பிடல் செல்லும் வழி நெடுகிலும் ஜனனி சூர்யாவின் கையை பிடித்து கொண்டு
"அம்மா....அப்பா....என்னை விட்டு போயிடாதீங்க....." என்று புலம்பிக் கொண்டே வர சூர்யாவிற்கு அவளை பார்க்கவே கவலையாக இருந்தது.


ஹாஸ்பிடலில் சென்று இறங்கியதும் ஜனனி வேகமாக ரிசப்சனில் விசாரித்து விட்டு தன் தாய், தந்தை இருந்த ஐ.சி.யூ வை நோக்கி சென்றாள்.


அவளைப் பின் தொடர்ந்து வந்த சூர்யா ஜனனியை பார்த்து கவலையுடன் நின்று கொண்டிருக்க ஐ.சி.யூ வில் இருந்து டாக்டர் வெளியேறி வந்தார்.


ஜனனியையும், சூர்யாவையும் கேள்வியாக டாக்டர் பார்க்கவும் அவரருகில் வந்த சூர்யா
"இது அவங்க டாட்டர்....நான் அவங்க பிரண்ட்...." என்று கூறவும்


"ஸாரி ஸார்....அவங்க அப்பாவை எங்களால காப்பாற்ற முடியல.....அவங்க அம்மா ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்காங்க....." என்று டாக்டர் கூற


"அப்பா......." என்று கதறி அழுது கொண்டே மயங்கி சரிந்தாள் ஜனனி.


அவசரமாக ஜனனியை தூக்கி ஸ்ட்ரெச்சரில் சூர்யா வைக்க அவளை அடுத்த பக்கமாக பரிசோதிக்க கொண்டு சென்றனர்.


அவளைப் பரிசோதனை செய்து பார்த்து விட்டு வெளியே வந்த டாக்டர்
"இந்த மாதிரி டைம்ல அவங்களை கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கணும் மிஸ்டர்...." என்று கூறவும்


அவரை குழப்பமாக பார்த்த சூர்யா
"ஜனனிக்கு என்ன ஆச்சு டாக்டர்???" என்று கேட்டான்.


"சீ இஸ் பிரக்னென்ட்....." என்று டாக்டர் கூற


"வாட்????????" என்று அதிர்ந்து போய் நின்றான் சூர்யா.


அப்போது ஒரு நர்ஸ் அவசரமாக ஓடி வந்து
"டாக்டர் அந்த பேஷண்ட்டோட பல்ஸ் ரேட் லோ ஆகிட்டே இருக்கு....." என்று கூற
மறுபடியும் இன்னொரு அதிர்ச்சியா என்று திண்டாடிப் போனான் சூர்யா.


அப்போது அவன் தோள் மேல் கை வைக்கவும் திரும்பி பார்த்த சூர்யா ஜனனியை காணவும்
"ஜனனி....டாக்டர்....." என்று தடுமாற்றத்துடன் கூற


"அம்மா....." என்று கண் கலங்கினாள் ஜனனி.


ஜனனியை கைத்தாங்கலாக ஐ.சி.யூ வின் புறமாக சூர்யா அழைத்துச் செல்ல அவர்கள் அருகில் வந்த டாக்டர்
"ஸாரி ஸார்....அவங்கள இனி எங்களால காப்பாற்ற முடியாது....கடைசியாக ஏதாவது பேசணும்னா பேசிக்கோங்க...." என்று விட்டு சென்று விட


"அம்மா......" என்று கத்தி கொண்டே தட்டுத் தடுமாறி ஐ.சி.யூ வினுள் சென்றாள் ஜனனி.


ஜனனியை காணவும் அவளது அம்மா அவளின் புறமாக கை நீட்ட அவரது கைகளை பற்றி கொண்ட ஜனனி
"அம்மா என்ன விட்டு போயிடாதேமா.....நீ இல்லாமல் நான் எப்படிமா இருப்பேன்??? நீயும் போயிட்டா நான் எங்கேமா போவேன்???? ப்ளீஸ் மா என்ன விட்டு போகாதேமா...." என்று கண்ணீர் வடிக்க சூர்யாவோ வேதனையாக அவளை பார்த்து கொண்டு நின்றான்.


அப்போது ஜனனியின் அம்மா சூர்யாவை பார்க்க ஜனனி தன் அம்மாவிடம்
"இது தான் சூர்யா...." என்று கூறவும் அவர் அவனை அருகில் வருமாறு சைகை செய்தார்.


சூர்யா அவர் அருகில் வரவும் ஜனனியின் கையை எடுத்து அவனது கையில் வைத்தவர்
"நான் போயிட்டா....என்....பொண்ண.....பார்த்து....பார்த்துக்கோபா......" என்று கூற


"உங்களுக்கு எதுவும் ஆகாது மா.....ஜனனி எனக்கு கூடப் பிறக்காத தங்கை மாதிரி.....நான் அவளை பார்த்துபேன்......" என்று சூர்யா கூறவும் அவனை பார்த்து புன்னகத்து கொண்டே அவர் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்து சென்றது.


"அம்மா........" என்று ஜனனி கதறி அழ சூர்யா அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.


வெண்ணிலாவிற்கு சூர்யா அழைப்பு மேற்கொள்ள அதுவோ ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது.


அதன் பிறகு பெருமாளிற்கு அழைத்து சூர்யா நடந்தவற்றை சொல்ல நடு இரவு என்று கூட பார்க்காமல் அவர்கள் அனைவரும் ஜனனிக்கு உதவி புரிய வந்தனர்.


வெண்ணிலா இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து போய் பழைய பிரச்சினை எல்லாம் மறந்து ஜனனிக்கு துணையாக நின்றாள்.


ஜனனியோ இதை எல்லாம் பார்த்து குற்ற உணர்வில் துடி துடித்து போனாள்.


சூர்யா, வெண்ணிலா இருவரது ஒட்டுமொத்த குடும்பமும் தனக்கு செய்த உதவியை பார்த்து ஜனனி தான் செய்த தவறை எல்லாம் உணர்ந்து வருந்த அங்கே எல்லாம் கை மீறி சென்றதை அவள் அறிந்திருக்கவில்லை.


எல்லா கடமைகளும் முடிந்து இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வெண்ணிலா மற்றும் சூர்யா அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


அது நாள் வரை மனதில் மூலையில் முடங்கி கிடந்த பிரச்சினை எல்லாம் வெண்ணிலாவின் முன் பூதாகரமாக வந்து நின்றது.


இன்று சூர்யாவிடம் ஜனனி பற்றி பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு வெண்ணிலா காத்து நிற்க சூர்யா வந்து சேர்ந்தான்.


அறைக்குள் வந்த நொடியில் இருந்து சூர்யா ஜனனியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க வெண்ணிலாவோ கோபத்தை கட்டுப்படுத்த பிரயத்தனப் பட்டு கொண்டிருந்தாள்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வெண்ணிலா
"ஸ்டாப் இட் சூர்யா...." என்று கத்த சூர்யா அதிர்ச்சியாக அவளை பார்த்தான்.


"ஜனனி.....ஜனனி.....ஜனனி....எப்போ பாரு ஜனனி....அப்படி என்ன தான் வசியம் பண்ணுணாளோ தெரியல அவ....." என்று வெண்ணிலா கூறவும்


"என்ன பேசுற நிலா நீ?????" என்று அதிர்ச்சியாக கேட்டான் சூர்யா.


"நான் என்ன பேசுறேனு உங்களுக்கு தெரியாதா??? உங்களுக்கு அந்த ஜனனி தானே முக்கியம்....அது தான் இத்தனை நாளா அவ கூடவே இருந்திங்கலே....இப்போவும் அவ மேல இருந்த ஆசை போகலயா???" என்று கேட்ட வெண்ணிலா அடுத்த நொடி சூர்யாவின் அறையில் சுருண்டு கீழே விழுந்து கிடந்தாள்.


வெண்ணிலா அதிர்ச்சியாக சூர்யாவை பார்க்க அவனோ ஆக்ரோஷமாக அவள் முடியை பற்றி தூக்கி
"என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல???? இத்தனை நாள் உன் பேச்சை கேட்கமாட்டோமானு ஏங்கிட்டு இருந்தேன்.....ஆனா இப்போ.....சே....நீயும் சராசரி பொண்ணுங்க மாதிரி உன் புத்தியை காட்டிட்டியேடி....உன்னை எல்லாம்....." என்று மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியவன்


"சே...." என்றவாறு அவள் மீதிருந்த கையை உதற மறுபடியும் வெண்ணிலா கீழே விழுந்தாள்.


அப்போதுதான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய
"என்ன காரியம் பண்ணிட்ட சூர்யா???" என்று தனக்குத்தானே கூறி கொண்டவன்
வெண்ணிலாவைப் பார்க்க அவளோ அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள்.


சூர்யா அவளருகில் வரப்போக வெண்ணிலாவோ வேகமாக எழுந்து பெட்டி ஒன்றில் தன் உடைகளை எல்லாம் அள்ளி போட்டு கொண்டு நிற்க சூர்யா அவளருகில் வந்து அவள் கைகளை பிடித்தான்.


"மரியாதையா என் மேல இருந்து கையை எடுங்க.....இல்லேனா மரியாதை கெட்டுடும்...." என்று வெண்ணிலா சத்தமிட


"நிலா ஐ யம் ஸாரி....நான் ஏதோ கோபத்துல..." என்று சூர்யா கூறவும்


அவனை முறைத்து பார்த்தவள்
"நான் சராசரி பொண்ணு தான் சூர்யா...என்னோட புருஷன் எனக்கு தான்னு நினைச்சு வாழுற சராசரி பொண்ணு.....வேற எந்த பொண்ணு கூட என் புருஷன் பேசுனாலும் அதை தாங்கிக்க முடியாத சராசரி பொண்ணு...என் ஒட்டுமொத்த காதலும் என்னோட புருஷனுக்கு மட்டும் தான்னு வாழுற சராசரி பொண்ணு தான்.....ஆனா அதற்காக நீங்க பண்ண துரோகத்தை மறப்பேனு நினைக்காதீங்க சூர்யா.....என்னோட வாழ்க்கையை மொத்தமாக அழிச்சுட்டீங்களே....கண்டிப்பாக உங்களுக்கு இதுக்கு தண்டனை கொடுப்பேன் மிஸ்டர். சூர்யதேவன்...." என்று விட்டு கோபமாக வெண்ணிலா வீட்டை விட்டு வெளியேறி செல்ல சூர்யா திக்பிரமை பிடித்தாற் போல உறைந்து நின்றான்......
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
ஜனனி ஆரம்பிச்சு வச்சத
வில்லியம்ஸ் தொடர் கதை ஆக்கிட்டான்
வெண்ணிலா விசாரிக்காம முடிவு எடுத்து விட்டாள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top