• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!!!

tru.jpgNani-will-kick-start-Vikram-Kumars-film.jpg
ஆபிஸ் வந்து சேர்ந்த சூர்யாவிற்கு தன் மன எண்ணங்களை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.


காலையில் வெண்ணிலாவைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்த மனது அவளை காணவில்லை என்று தெரிந்ததும் பதட்டம் அடைந்தது ஏன்?? என்ற கேள்வி அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.


"எல்லாவற்றுக்கும் நிலாவுடனான உன் காதல் தான் காரணம்..." என்று மனம் பதிலளிக்க


"நோ....அந்த காதல் மனம் கொண்ட சூர்யா செத்து பல நாள் ஆச்சு...." என்று சத்தமிட்டவன் தான் இருக்கும் இடம் உணர்ந்து தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.


அதன் பின் சூர்யாவை வேலைகள் சூழ்ந்து கொள்ள தன் வேலையில் முழுமையாக அவன் மூழ்கி போனான்.


கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்த சூர்யா கதவின் அருகில் நின்று கொண்டிருந்த ராபர்டை கேள்வியாக நோக்கினான்.


"சார் டைம் பத்தி மணி ஆச்சு...." என்று தயக்கத்துடன் ராபர்ட் கூறவும்


கையில் இருந்த தன் வாட்சை திருப்பி பார்த்த சூர்யா
"ஓஹ் காட் பத்து மணி ஆச்சா??? டைம் போனதே தெரியல...." என்றவாறே பைல்களை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டவன்


"ஓகே ராபர்ட்....மார்னிங் மீட் பண்ணலாம்....என்னால உங்களுக்கும் லேட் ஆயிடுச்சு....ஸாரி..." என்று கூறவும்


"ஸார் ஸாரி எல்லாம் எதுக்கு??? இதுவும் என்னோட வேலை தானே...." என்று ராபர்ட் கூற சிரித்துக் கொண்டே அவன் தோளில் தட்டி விட்டு லிப்ட் நோக்கி சென்றான் சூர்யா.


பார்க்கிங்கிற்கு வந்து தன் காரை எடுத்துக்கொண்டு சூர்யா சென்று விட ராபர்ட் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு புறப்பட்டான்.


காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த சூர்யா டைனிங் டேபிளில் தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமி அருகில் வந்து நின்றான்.


ஆள் அரவம் கேட்டு கண் விழித்த மகாலட்சுமி
"வந்துட்டியா சூர்யா??? கை, கால் கழுவிட்டு வா.....சாப்பாடு எடுத்து வைக்குறேன்...." என்றவாறு எழுந்து கொள்ள


அவர் கை பிடித்து அமரச் செய்த சூர்யா
"ஏன்மா இவ்வளவு லேட் நைட்ல முழிச்சுட்டு இருக்கீங்க??? நான் என்ன சின்ன பையனா??? எனக்கு போட்டு சாப்பிட தெரியாதா என்ன??" என்று கேட்கவும்


அவனைப் பார்த்து புன்னகத்த மகாலட்சுமி
"நம்ம குழந்தைங்களுக்காக காத்துட்டு இருக்குறதும் ஒரு வகை சந்தோஷம் தான் கண்ணா...." என்று கூற சிரித்துக் கொண்டே கை கழுவி விட்டு சாப்பிட வந்தமர்ந்தான் சூர்யா.


ஓரக் கண்ணால் மகாலட்சுமியின் முகத்தை கவனித்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த சூர்யாவிற்கு அவரது மன எண்ணங்கள் புரியாமல் இல்லை.


"எல்லாம் சரியாகிவிடும்...." என்று நினைத்து கொண்டே சாப்பிட்டு முடித்தவன் மகாலட்சுமிக்கு சுத்தம் செய்வதில் உதவி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.


அது வரை இருந்த மனநிலை முற்றிலும் மாற அந்த அறையை போன்றே அவன் மனதையும் வெறுமை சூழ்ந்து கொண்டது.


வெண்ணிலாவின் வீட்டில் மாட்டப்பட்டிருந்ததைப் போன்ற அதே புகைப்படம் அவனது அறையிலும் மாட்டப்பட்டிருந்தது.


கண்கள் கலங்க மெல்ல அந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்த சூர்யா
"ஏன்டீ இப்படி பண்ணுண??? உன்னை காதலிச்சது தப்பா?? நான் எங்கே போனாலும் என் பின்னாலேயே நிழல் மாதிரியே வந்தியே....எல்லோரோட சந்தோஷத்தையும் ஒரே நாள்ல அழிச்சுட்டியே....ஏன்???? ஏன்???? ஐசும்மா....என் கிட்ட திரும்பி வந்துடு...." என்று புலம்பிக் கொண்டே கட்டிலில் வந்து இருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.


வெண்ணிலாவின் விழிகள் இரண்டும் கண்ணீர் வடிக்க தன் கையில் இருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.


சூர்யாவோடு மிக மிக நெருக்கமாக ஒரு பெண் அணைத்தபடி நின்றிருக்க சூர்யாவின் கரங்களோ அவளை முழுமையாக வளைத்து பிடித்திருந்தது.


அவ்வாறான பல புகைப்படங்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்க அறை முழுவதும் அந்த புகைப்படங்கள் சிதறி கிடந்தன.


அந்த அறையின் நிசப்தத்தை கலைக்கும் வகையில் அவள் போன் அடிக்கவும் சலிப்பாக போனை எடுத்து காதில் வைத்தவள் மறுமுனையில் யாரோ பேசப் பேச போனை தூர எறிந்துவிட்டு
கண்கள் சிவக்க தன் கையில் இருந்த புகைப்படத்தை விட்டெறிந்தவள் தன் கையில் முகத்தை புதைத்து கொண்டு தேற்றுவார் யாரும் இன்றி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.


காலை பொழுதில் நிலவை மறைத்து கொண்டு சூரியனின் வெளிச்சம் சுற்றிலும் பரவ மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா.


இரவு முழுவதும் அழுததால் என்னவோ தலை வலி தாளாமல் வெண்ணிலா இரு கைகளாலும் தன் தலையை தாங்கிக் கொண்டாள்.


மெல்ல எழுந்து நின்றவள் தட்டுத் தடுமாறி குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.


குளித்து முடித்து வெளியே வந்த வெண்ணிலாவிற்கு தலை வலி குறைந்து இருந்தாலும் மனதில் இருந்த வலி குறையவில்லை.


சாதாரண காட்டன் சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு படியிறங்கி ஹாலுக்கு வந்த வெண்ணிலாவை முழுக் குடும்பமுமே ஆச்சரியமாக பார்த்தது.


வெற்றியின் அருகில் வந்த அபிநயா
"என்ன வெற்றி அதிசயமாக உங்க தங்கச்சி காலங்கார்த்தாலேயே அதுவும் எட்டு மணிக்கு எல்லாம் எழுந்து வந்துட்டா...." என்று கூறவும்


அவளை முறைத்து பார்த்தவன்
"எட்டு மணி உனக்கு காலங்கார்த்தாலேயேவா??" என்று கேட்க


"இல்ல சூட்டிங்கே இருந்தாலும் நிலா இவ்வளவு ஏர்லியா வரமாட்டாளேனு கேட்டேன்.." என்று சமாளிப்பது போல சிரித்து கொண்டு கூறவும் அவளது தலையில் செல்லமாக தட்டினான் வெற்றி.


"அவ சின்ன வயதிலிருந்தே ஏர்லியா எழும்பிடுவா.....உனக்கு தெரியாதா என்ன??? இப்போ கொஞ்ச நாளாகதானே இப்படி எழுந்திருக்கா......அது உனக்கு பொறுக்காதே...." என்று வெற்றி கூறவும்


"ஆமா உங்க தங்கச்சியை நீங்க விட்டு கொடுத்துட்டாலும்...." என்று நொடித்துக் கொண்ட அபிநயா சமையலறைக்குள் சென்று விட புன்னகையோடு வெற்றி வெண்ணிலாவின் அருகில் சென்றான்.


"என்ன நிலா உடம்புக்கு எதுவும் சரி இல்லையா??? முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு???" என்று வெற்றி வெண்ணிலாவின் தலையை வாஞ்சையோடு வருடிய வண்ணம் கேட்கவும்


கலங்கிய தன் கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள்
"இல்ல வெற்றி லைட்டா தலை வலி அவ்வளவு தான்....காபி சாப்பிட்டா சரியாகிவிடும்..." என்று விட்டு செல்ல வெற்றியின் பார்வை வெண்ணிலாவையே பின் தொடர்ந்தது.


வெண்ணிலாவின் வெற்றி என்ற அழைப்பே அவள் மனதளவில் குழப்பமாக இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.


வெண்ணிலாவிற்கு சிறு வயதில் இருந்தே வெற்றியிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாலோ, அதீத சந்தோஷம் ஏற்பட்டாலோ அல்லது அவளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே தான் அவனை வெற்றி என்று அழைப்பாள்.


இன்றைய வெண்ணிலாவின் வெற்றி என்ற அழைப்புக்கான காரணத்தை வெற்றி அறிந்திருந்தாலும் வெண்ணிலாவாக முன் வந்து அவள் மனதில் உள்ளவற்றை கூறட்டும் என்று விட்டு வெற்றி தன் வேலைகளை கவனிக்க சென்றான்.


சாப்பிடுகிறேன் என்ற பெயரில் தட்டில் வைத்த ஒரு இட்லியை ஒரு மணி நேரமாகியும் சாப்பிட்ட வண்ணம் இருந்தாள் வெண்ணிலா.


வைபவ் வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் கையை பிடித்து இழுக்கவும் அவனைத் திரும்பி பார்த்தாள்.


"வாட் ஹேப்பன்ட் த்ரீ???" என்று வைபவ் கேட்கவும்


"த்ரீயா???" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.


"ஆமா நிலாவுக்கு இங்கிலீஷ்ல மூன்....மூன்னா த்ரீ தானே...." என்று வைபவ் கேட்க


"அடப்பாவி....." என்று தன் வாயின் மேல் கை வைத்த வெண்ணிலா


"ஆனாலும் இந்த காலத்து பசங்க ரொம்ப விவரம் தான்...." என்று கூறவும்


"ஆனால் சிலருக்கு விவரம் பத்தலயே...." என்றவாறு அவர்கள் அருகில் வந்து நின்றாள் அபிநயா.


"வைபவ் அப்பா கூட போய் ஸ்கூல் போக ரெடி ஆகு...." என்று அபிநயா வைபவை வெற்றியிடம் அனுப்பி வைத்து விட்டு வெண்ணிலாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அபிநயா தன் அருகில் வந்து அமர்ந்து கொள்ளவும் வெண்ணிலா எதுவும் பேசாமல் அமைதியாக தன் முன்னால் இருந்த உணவை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.


"நிலா...." என்று அபிநயா வெண்ணிலாவின் தோள் தொடவும் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.


"நான் சொல்லப் போறது சூர்யாவிற்கு ஆதரவாகவோ உன்னை ஹேர்ட் பண்ணணுமோனு இல்லை.....நீ எனக்கு ஒரு நல்ல பிரண்ட்....சின்ன வயதிலிருந்தே நம்ம ஒண்ணா பழகிருக்கோம்....ஒரு பொண்ணா உன்னோட வாழ்க்கை பாழாகுறத பார்த்துட்டு என்னால பேசாமல் இருக்க முடியாது நிலா....உங்க வாழ்க்கையில் என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியல.....ஆனா எங்கேயோ ஒரு இடத்தில் தப்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கு. அது எனக்கு நல்லாவே தெரியும்.....நீயும், சூர்யாவும் காதலிச்சது எனக்கு தெரியும்..." என்று அபிநயா கூறவும் திடுக்கிட்டு போய் அவளைப் பார்த்தாள் வெண்ணிலா.


"நீ சொல்லலேனா எனக்கு தெரியாதுனு நினைச்சியா??? உங்களுக்கு நடந்தது அரேன்ஜ் மேரேஜ்னு தான் எல்லோரும் நினைச்சுருப்பாங்க....ஆனா இந்த மேரேஜ்க்காக இரண்டு பக்கமும் பேசி சம்மதிக்க வைத்தது உங்க அண்ணன் தான்னு உனக்கு தெரியுமா??" என்று அபிநயா கேட்கவும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் வெண்ணிலா.


"உங்க இரண்டு பேரோட வாழ்க்கை நல்லா அமையணும்னு தான் இத்தனை தூரம் நாங்க முயற்சி செஞ்சோம்....இந்த மேரேஜ்க்கு உன் கிட்ட சம்மதம் கேட்கலனு நீ கோபப்பட்டுருப்ப இல்லையா??? ஏன்னா உங்க அண்ணன் உன்னோட காதலை நம்பினாரு...ஆனா நீ அன்னைக்கு நடுராத்திரியில் வந்து வீட்டுக்கு முன்னாடி நிற்கும் போது வெற்றி எவ்வளவு உடைஞ்சு போயிட்டாரு தெரியுமா??? என் தங்கச்சியோட வாழ்க்கையை நான் அவசரப்பட்டு கெடுத்துட்டேனோனு இன்னைக்கு வரைக்கும் அவர் மனசுக்குள்ள கஷ்டப்பட்டுட்டு இருக்காரு.....


சூர்யாவை மீட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டதுக்கு அவனும் சொல்லல....இது எனக்கும் என்னோட மனைவிக்குமான பிரச்சினை....அவ சின்ன பொண்ணு....நிலா அவ பேமிலியை மிஸ் பண்ணுறா போல. கொஞ்ச நாள் பேமிலியோட டைம் செபன்ட் பண்ணிட்டு திரும்பி வந்துடுவா....நீ கவலைப்பட வேண்டாம்னு சொல்லி எங்களை அனுப்பி வைச்சுட்டான்....எல்லாம் சரியாகிவிடும்னு தான் இருந்தோம்....ஆனா நேற்று நடந்ததை பார்த்தா எனக்கு என்னவோ சரியா படல நிலா....நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்....அமைதியாக இருந்து நடந்ததை எல்லாம் யோசித்து பாரு....யார் மேல எங்க தப்பு நடந்துருக்குனு தெரியும்..." என்று விட்டு அபிநயா சென்று விட வெண்ணிலா முழுமையாக குழம்பி போனாள்.


"நான் தான் எதையும் தப்பாக புரிஞ்சுட்டு இருக்கேனா....அபி அண்ணி சொல்லுற மாதிரி எதையாவது நான் மிஸ் பண்ணிட்டேனா???" என்று யோசித்து கொண்டிருந்த வெண்ணிலாவிற்கு சட்டென்று ஏதோ பொறி தட்டியது.


அவசரமாக எழுந்து தன் கைகளை கழுவி கொண்டு அவள் அறையை நோக்கி ஓடி சென்றாள்.


வெண்ணிலாவையே பார்த்து கொண்டு நின்ற அபிநயா அவளது நடவடிக்கைகளை பார்த்து சிரித்துக் கொண்டே தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்.


வெற்றி வைபவை அழைத்து கொண்டு சென்று விட ஆண்டாள் மற்றும் அபிநயா மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினர்.


அறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த வெண்ணிலா தன் தலையணைக்கு கீழே இருந்த ஒரு பெரிய கவரை வெளியே எடுத்தாள்.


அதில் இருந்து பல புகைப்படங்கள் வெளியே வந்து விழுவும் அதில் ஒரு புகைப்படத்தில் அவளது பார்வை நிலை குத்தி நின்றது.


நடுங்கும் கரங்களோடு அந்த புகைப்படத்தை எடுத்தவள் கூர்மையாக அந்த புகைப்படத்தை உற்று பார்த்தாள்.


கண்கள் கலங்க அந்த புகைப்படத்தை பார்த்தவள் முகமெங்கும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.


எல்லா புகைப்படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்ததும் வெண்ணிலாவின் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது.


சட்டென்று அந்த புன்னகை மறைய எழுந்து நின்றவள் கோபமாக தன் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்று நின்றாள்.


முகமெல்லாம் சிவக்க கடுமையாக யாருடனோ பேசி விட்டு போனை வைத்தவள் தன் அறைக்குள் மீண்டும் ஓடி வந்து அவர்களது திருமண புகைப்படத்தின் முன்னால் நின்றாள்.


"நீங்க சொல்றது ரொம்ப சரி தேவ்....நான் எதையும் யோசித்து பார்க்குறதே இல்ல...சரியான அவசரகுடுக்கை....." என்று தன் தலையில் தட்டி கொண்டவள்


"அண்ணி........." என்று சந்தோஷமாக கத்தி கொண்டே அபிநயாவைத் தேடி சென்றாள்.


வெண்ணிலாவின் குரல் கேட்கவும் சமையலறையில் இருந்து வெளியே வந்த அபிநயாவை வெண்ணிலா ஓடி வந்து கட்டி கொண்டாள்.


"ஹேய்....நிலா...." என்று அபிநயா ஆச்சரியமாக பார்க்க அவளின் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்ட வெண்ணிலா அவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்து கொண்டு நின்ற ஆண்டாளின் அருகில் சென்றாள்.


ஆண்டாளின் கை பற்றி இழுத்து நடனமாடிய வெண்ணிலா அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்பே அவரது கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு வேகமாக வாயிலை நோக்கி ஓடினாள்.


"ஏய்....நிலா என்னடி ஆச்சு உனக்கு??? எங்க இரண்டு பேரோட கன்னத்தையும் எச்சை பண்ணிட்டு போற??? என்னதான் பண்ணுற நீ???" என்று ஆண்டாள் கேட்கவும்


திரும்பி அவரை பார்த்து புன்னகத்த நிலா
"வந்து சொல்றேன் மை டியர் ஆண்டாள்.....பாய்....." என்று விட்டு தன் காரை எடுத்துக்கொண்டு சென்று விட அபிநயாவும், ஆண்டாளும் வெண்ணிலாவின் இந்த நடவடிக்கைகளை அதிசயமாக பார்த்து கொண்டு நின்றனர்.


சந்தோஷச் சாரல் மனமெங்கும் வீச காரில் சென்று கொண்டிருந்த வெண்ணிலா பிளேயரை ஆன் செய்ய அதில் ஒலித்த பாட்டு அவள் மன சந்தோஷத்தை மேலும் அதிகரித்தது.



எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை

சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்

கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லால் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்


இன்னும் சற்று நேரத்தில் தன் மொத்த சந்தோஷமும் ஒன்றும் இல்லாமல் ஆகப்போகிறது என்பதை அறியாமல் வெண்ணிலா மனம் நிறைந்த சந்தோஷத்தோடு தன் காரில் பயணித்து கொண்டிருந்தாள்.........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top