• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி..... கதையில் ஏதாவது நிறை, குறை இருந்தால் தாராளமாக சொல்லிடுங்கோ பிரண்ட்ஸ்.......

bigg-boss-telugu-2-new-promo-photos-pictures-stills.jpgsai-pallavi-events-gallery-6.jpgகாரில் சென்று கொண்டிருந்த வெண்ணிலா எதிரில் சூர்யா ஷாப்பிங் காம்ப்ளக்சில் இருந்து வெளியேறி வருவதைக் காணவும் சட்டென்று தன் காரை நிறுத்தினாள்.


காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா சூர்யாவை நோக்கி நடை போட்டாள்.


சூர்யாவை நெருங்க நெருங்க அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.


"சே என்ன இது??? டீன் ஏஜ் பசங்க மாதிரி இப்படி பிஹேவ் பண்ணுறேன்.....ஏதோ பர்ஸ்ட் டைம் சூர்யாவோடு பேசப் போகிற மாதிரி....வெண்ணிலா காம் டவுன்....காம் டவுன்...." என்று ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு தன்னை சமன் செய்தவள் சூர்யாவின் அருகில் சென்றாள்.


அப்போது சூர்யாவிற்கு மறுபுறம் இருந்து ஒரு பெண் அவனோடு பேசி சிரித்து கொண்டு வரவும் ஆணியடித்தாற் போல அந்த இடத்திலேயே உறைந்து நின்றாள் வெண்ணிலா.


"ஜனனி....." என்று அவள் உதடுகள் முணுமுணுக்க கண்களில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்ற நிலையில் கண்ணீர் நிறைந்து இருந்தது.


அப்போது தான் அந்த பெண்ணை வெண்ணிலா நன்றாக கவனித்தாள்.


மேடிட்ட வயிற்றோடு சூர்யாவின் தோளை ஒரு கையால் பற்றி கொண்டு அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிரித்த வண்ணமாக கேட்டு கொண்டு வருபவளைப் பார்க்க வெண்ணிலாவிற்கு கோபம் எல்லையில்லாமல் பற்றி கொண்டு வந்தது.


"உன்னை போய் நம்பினேனே....." என்று மனதிற்குள் சூர்யாவை அர்ச்சித்த வெண்ணிலா கோபம் கட்டுக்கடங்காமல் அவர்களை நோக்கி சென்றாள்.


திடீரென்று தங்கள் முன்னால் வந்து நின்ற வெண்ணிலாவை சூர்யாவும், ஜனனியும் ஆச்சரியமாக பார்த்தனர்.


"நிலா...." என்று ஜனனி ஏதோ கூற வரவும் கை காட்டி அவளை நிறுத்துமாறு கூறியவள் சூர்யாவின் கண்களை நேருக்கு நேராக நோக்கினாள்.


வெண்ணிலாவின் பார்வையில் இருந்த வெறுப்பை பார்த்த சூர்யா ஒரு கணம் துணுக்குற்றான்.


"நிலா...நீ இப்போவும் தப்பாக தான் புரிஞ்சுட்டு இருக்க...." என்று சூர்யா கூறவும்


"ஓஹ்....நான் என்ன நினைக்கிறேனு கூட உங்களுக்கு தெரியுமா???" என்று வெண்ணிலா கேலியாக கேட்க அவளை முறைத்து பார்த்தான் சூர்யா.


"உங்களை நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வேலையா போயிடுச்சு இல்லே....." என்று வருத்தத்துடன் கூறிய வெண்ணிலா


கண்கள் கலங்க ஜனனியையும், அவள் கை பற்றி இருந்த சூர்யாவின் தோளையும் பார்த்தவள்
"இப்போ கூட நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு உங்க கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்.....ஆனா நான் தப்பு பண்ணலனு நீங்க நிரூபிச்சுட்டீங்க.....எப்போவும் என்னோட கணிப்பு தவறானதே இல்லை...." என்று கூற


மறுப்பாக தலை அசைத்த சூர்யா
"ஒரு சில நேரங்களில் தப்பாக மாறிடும் நிலா....." என்று கூறினான்.


"நீ எதையும் காது கொடுத்துக் கேட்க மாட்ட....எதையும் தீர விசாரிக்க மாட்ட....நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு இருப்ப....நான் என்ன சொன்னாலும் நீ இப்போ கேட்கப் போறதில்லை....உன் கிட்ட விளக்கம் சொல்லி உன்னை புரிந்து கொள்ள வைக்க இப்போ எனக்கு நேரமும் இல்லை....இந்த இடமும் இதற்கு சரியா இல்ல.....இப்போ எங்களுக்கு வழி விடு நாங்க போகணும்....." என்று கூறிய சூர்யா ஜனனியின் கை பற்றி அழைத்து செல்ல வெண்ணிலா மொத்தமாக உடைந்து போனாள்.


ஜனனி வெண்ணிலாவை கடந்து செல்லும் போது ஒரு கணம் தயங்கி நிற்க அவளை கேள்வியாக நோக்கினான் சூர்யா.


"சூர்யா....நிலா என்ன சொல்ல வரானு கொஞ்சம் கேட்கலாமே...." என்று ஜனனி கூற


வெண்ணிலாவை திரும்பி பார்த்த சூர்யா
"அடுத்தவங்க பேசுறதை கேட்கும் அளவுக்கு அவங்களுக்கு பொறுமை இல்லை ஜனனி....வீணாக நம்ம நேரம் தான் செலவாகும்....ரொம்ப நேரம் நீ இப்படி வெளியில் அலைந்து திரியுறது உன் ஹெல்த்க்கு நல்லது இல்லை....வா போகலாம்...." என்று விட்டு முன்னே செல்ல


தவிப்போடு வெண்ணிலாவைப் பார்த்த ஜனனி
"இல்ல சூர்யா...." எனவும்


"ஜனனி....." என்று சூர்யாவின் உறுமலில் ஜனனி மட்டுமின்றி வெண்ணிலாவும் துணுக்குற்றாள்.


"ஒழுங்காக வந்து காரில் ஏறு...." என்று சூர்யா கூறவும்


மறுத்து பேசாமல் காரில் சென்று ஜனனி ஏறி கொள்ள


வெண்ணிலாவின் அருகில் வந்த சூர்யா
"ஆள் வளர்ந்த அளவுக்கு உன் அறிவு வளரல ஐசு.....முதல்ல உன் அறிவை வளர்த்துக்கோ.....அப்புறம் அடுத்தவங்களைப் பற்றி குறை சொல்லலாம்.....உன்னை நான் அப்புறம் மீட் பண்ணுறேன் ஐசு...." என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு செல்ல கோபமும், ஆற்றாமையும் ஒன்று சேர புழுதியை கிளப்பி கொண்டு சென்ற சூர்யாவின் காரையே வெறித்த வண்ணம் நின்றாள் வெண்ணிலா.


"மேடம் நீங்க சிங்கர் வெண்ணிலா தானே...." என்று தன் அருகில் கேட்ட குரலில் சுய நினைவுக்கு வந்த அவளைச் சுற்றி பல நபர்கள் ஒன்று கூடுவதை பார்த்து அவசரமாக தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றாள்.


ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலை ஓரத்தில் தன் காரை நிறுத்திய வெண்ணிலாவின் மனம் முழுவதும் உலைக் களமாக கொதித்து கொண்டிருந்தது.


"அந்த ஜனனி முன்னாடி என்னை அவமானப்படுத்திட்டேலே சூர்யா....இதற்கும் சேர்த்து உன்னை பழி வாங்குறேன்...." என்று கருவி கொண்ட வெண்ணிலா தன் போனை எடுத்து வெற்றிக்கு அழைப்பை மேற்கொண்டாள்.


"ஹலோ நிலா....என்னடா இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க??? ஏதாவது பிரச்சனையா???" என்று வெற்றி கேட்கவும்


அவனது கவனிப்பில் மனம் உருகி போன வெண்ணிலா தன் குரலை சரி செய்து கொண்டு
"எங்கே இருக்க வெற்றி???" என்று கேட்டாள்.


அவளது பேச்சிலேயே ஏதோ இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட வெற்றி
"ஆபீசில் இருக்கேன் மா....ஏதாவது உதவி வேண்டுமா???" என்று கேட்கவும்


"நீ அங்கேயே இரு....நேர்ல வந்து பேசுறேன்....எங்கேயும் போயிடாத...." என்று வெண்ணிலா கூற சரியென்று விட்டு போனை வைத்த வெற்றிக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.


வெண்ணிலா சந்தோஷமாக வீட்டில் இருந்து சென்றவுடன் அபிநயா வெற்றிக்கு போன் செய்து வெண்ணிலாவின் நடவடிக்கைகளை பற்றி கூற மனதிற்குள் ஆயிரம் கனவுகளை எழுப்பி கொண்ட வெற்றி வெண்ணிலாவின் அழைப்பை பார்த்ததும் எல்லாம் சரியாக போகிறது என்று சந்தோஷம் கொண்டான்.


ஆனால் நடந்ததோ வேறு என்பதை அவன் அறிந்தால் என்ன ஆகும்?????


ஒரு பெரிய வீட்டின் முன்னால் சூர்யா காரை நிறுத்த ஜனனி காரில் இருந்து இறங்கி கொண்டாள்.


"ஓகே ஜனனி டேக் கேர்....ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு....நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் பாய்...." என்று விட்டு சூர்யா செல்ல போக


"ஒரு நிமிஷம் சூர்யா..." என்று அவனை தடுத்தாள் ஜனனி.


"ப்ளீஸ் ஜனனி....நீ என்ன சொல்ல வரேனு தெரியும்....இப்போ நான் யாரோட அட்வைசையும் கேட்குற மனநிலையில் இல்லை...நீ போய் ரெஸ்ட் எடு....உன் வீட்டில் தங்கி இருக்குற கமலம் ஆன்டி வர்றாங்க அவங்களோட போய் பத்திரமாக இருந்துக்கோ..." என்று விட்டு ஜனனியின் முகத்தையும் திரும்பி பார்க்காமல் சூர்யா சென்று விட முகம் வாட கவலையுடன் நின்று கொண்டிருந்தாள் ஜனனி.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"உள்ளே போகலாமா கண்ணு???" என்று கமலம் கேட்கவும்
அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட ஜனனி மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்தாள்.


வீட்டினுள் நுழைந்ததும் ஷோபாவில் அமர்ந்து கொண்ட ஜனனியின் மனதோ சற்று முன் நடந்த சம்பவங்களையே அசை போட்டு கொண்டிருந்தது.


தலை வலிப்பது போல இருக்கவும்
"கமலம்மா சூடாக ஒரு காபி தர்றீங்களா???" என்று ஜனனி கேட்க


"இதோ கொண்டு வரேன் கண்ணு..." என்று விட்டு கமலம் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள அமர்ந்திருந்தவாறே தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள் ஜனனி.


"ஐ யம் ஸாரி சூர்யா....ஐ யம் ஸாரி....உன்னோட லைப் இப்படியே ஆக நான் தான் காரணம்னு உனக்கு தெரிஞ்சா என்னை ஆயுசுக்கும் நீ மன்னிக்கவே மாட்ட...." என்று தன் மனதிற்குள் மருகி கொண்டிருந்த ஜனனியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது.


வெற்றியின் ஆபீஸின் முன்னால் காரை பார்க் செய்துவிட்டு வெண்ணிலா வெற்றியின் அறையை நோக்கி சென்றாள்.


கலங்கிய கண்களோடு, முகம் வாட வந்து நின்ற வெண்ணிலாவை அதிர்ச்சியாக பார்த்த வெற்றி
"என்னாச்சு நிலா???" என்று பதட்டத்துடன் கேட்க அத்தனை நேரமும் மனதிற்குள் புழுங்கி கொண்டிருந்த வெண்ணிலா வெற்றியின் மேல் சாய்ந்து அழத் தொடங்கினாள்.


"எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் இங்கே வேறு ஏதோ நடந்திருக்கிறது போலவே...." என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட வெற்றி


"என்னடா ஆச்சு???" என்று கேட்கவும்


"சூர்யா....சூர்யா...." என்று விசும்பிக் கொண்டு நின்றாள் வெண்ணிலா.


"சூர்யாவிற்கு என்ன???" என்று வெற்றி பதட்டத்துடன் கேட்க


"அவருக்கு ஒண்ணும் இல்லை....அந்த ஜனனியும், சூர்யாவும்....." என்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் வெண்ணிலா கூறி முடிக்க தன் தலையில் அடித்துக் கொண்டான் வெற்றி.


"நீ எப்போ தான் வளரப் போற நிலா??? இன்னும் நீ மாறவே இல்லையா???" என்று வெற்றி கேட்கவும்


கோபமாக அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா
"ஆளாளுக்கு என்னையே குறை சொல்லுங்க....தப்பு பண்ணுறது யாரோ தண்டனை எனக்கா??? நான் பண்ணுற எல்லாமே தப்பு அப்படி தானே....." என்று சத்தம் போட


"உஸ்ஸ்ஸஸ்ஸ்ஸ்....நிலா இது ஆபிஸ்...." என்று அவளை அமைதியாக்க போராடிக் கொண்டிருந்தான் வெற்றி.


"இதோ பார் வெற்றி....எனக்கு டிவோர்ஸ் உன்னால வாங்கி தர முடியுமா???முடியாதா??? அதை மட்டும் சொல்லு..." என்று வெண்ணிலா கேட்க


அதிர்ச்சியாக அவளைப் பார்த்த வெற்றி
"என்ன பேசுற நிலா??? இது என் தங்கச்சியோட வாழ்க்கை....அவ வாழ்க்கையை நானே அழிப்பேனா....சத்தியமாக முடியாது....நீ என்ன வேணா பண்ணு....எங்கே வேண்டுமானாலும் போ....ஆனா உன் வாழ்க்கை அதாவது என் தங்கச்சியோட வாழ்க்கையை பாழாக நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்..." என்று கூற


"ஓகே பைஃன்....பைஃன்...." என்று கூறிய வெண்ணிலா


"எப்படி இதை ஹேண்டல் பண்ணணும்னு எனக்குத் தெரியும்..." என்று விட்டு கோபமாக சென்று விட கையாலாகாத தனத்தோடு வெளியில் செல்லும் வெண்ணிலாவையே பார்த்து கொண்டு நின்றான் வெற்றி.


கோபமாக வெளியேறி வந்த வெண்ணிலா வெற்றியின் ஆபீசில் நின்று கொண்டே பல பேரிடம் போனின் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தி தான் நினைத்த காரியம் நடக்க போகிறது என்ற சந்தோஷத்தோடு வெற்றியின் அறை இருந்த பக்கம் பார்க்க அங்கு வெற்றி வெண்ணிலாவையே பார்த்து கொண்டு நின்றான்.


சிரித்த முகத்துடன் கட்டை விரலை உயர்த்தி 'சக்ஸஸ்' என்று வெண்ணிலா கூறவும் வெற்றியை அச்சம் தொற்றிக் கொண்டது.


வெற்றி அவசரமாக தன் போனை எடுத்து சூர்யாவிற்கு அழைத்தான்.


சூர்யா அழைப்பை எடுக்காமல் இருக்கவும் தவிப்போடு நின்ற வெற்றி வெண்ணிலாவின் இந்த விபரீத நடவடிக்கைகளை பற்றி ஒரு குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தான்.


பிஸ்னஸ் மீட்டிங் ஒன்றை முடித்து விட்டு தன் கேபினுக்குள் நுழைந்த சூர்யா மேஜை மீது இருந்த அவனுடைய போனை எடுத்து பார்த்தான்.


பிஸ்னஸ் டீலிங் ஒன்று கிடைத்து விட்டது என்று சந்தோஷமாக வந்து தன் போனை பார்த்த சூர்யா அதில் இருந்த குறுஞ் செய்தியை பார்த்து கொதித்துப் போனான்.


"ராபர்ட்....." என்ற சூர்யாவின் சத்தத்தில்


பதட்டத்துடன் அவனது கேபினுக்குள் நுழைந்த ராபர்ட்டிடம்
"நான் அவசரமாக வெளியே போறேன்....வேலை எல்லாம் முடிஞ்சதும் நீ கிளம்பி போ....எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்....." என்று விட்டு சூர்யா கோபமாக செல்லவும்


"எப்போ இவர் என்ன மனநிலையில் இருக்காருனே தெரியலையே....அந்நியனோட சொந்தக் காரரா இருப்பாரோ....சட்டு சட்டுனு மாறிடுராரே...." என்று புலம்பிக் கொண்டே ராபர்ட் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.


மெசேஜ் வந்த நேரத்தைப் பார்த்த சூர்யா
"வெற்றி ஆபீஸ் இருக்குற ஏரியாவுல தான் அவ இருப்பா..." என்று யோசித்து கொண்ட வேகமாக அவன் காரை செலுத்தினான்.


வெற்றியின் ஆபீஸ் செல்லும் வழியில் ஒரு பார்க்கின் ஓரமாக வெண்ணிலாவின் கார் நிற்பதைப் பார்த்து தன் காரை நிறுத்தி விட்டு புயலென அந்த பார்க்கை நோக்கி சென்றான் சூர்யா.


"இப்போ எதுக்கு நான் கோபமாக அவகிட்ட போகணும்???" என்று ஒரு கணம் யோசித்த சூர்யா


"இப்படியே விட்டால் இவளை மாற்ற முடியாது....போனா போகுதுனு விட்டா இவ என்னையே ஒரு வழி பண்ணிடுவா....நமக்கு என்டர்டெயின்மண்ட்னு விட்டு வைச்சா நம்மளையே ஜோக்கரா மாத்திடுவா போல இருக்கு.....இதுக்கு மேலயும் பொறுமையாக போக முடியாது....இவளை ஏதாவது பண்ணியே ஆகணும்...." என்று முடிவெடுத்தவனாக வெண்ணிலாவை தேடினான்.


அங்கே ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற வெண்ணிலாவை காணவும் வேகமாக அவளருகில் சென்ற சூர்யா அவள் தோள் தொட்டு திருப்பி அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை அறைந்தான்.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top