• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய் ஹலோ பிரண்ட்ஸ்.......
முதல்ல எல்லோருக்கும் ஒரு பெரிய நன்றி......
ஒரு வாரமாக அப்டேட் போடாம விட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சுடுங்கோபா.......
அடுத்த அப்டேட் இதோ....
images.jpeg052d54a31c1d6adac7d3b9d8800fd8fe.jpg
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து சூர்யா ஆபிஸில் இருக்கும் போது ராபர்ட் சூர்யாவைத் தேடி வேகமாக வந்தான்.


“எக்ஸ்கியுஸ் மீ ஸார்..” என்ற ராபர்ட்டின் அழைப்பில்


நிமிர்ந்து பார்த்த சூர்யா
“வா ராபர்ட்…” என்று அழைத்தான்.


“ஸார் உங்களுக்கு ஒரு லெட்டர் வந்துச்சு….நேத்தே தர இருந்தேன்…நீங்க இம்பார்ட்டண்ட் மீட்டிங்கில் இருந்ததால தர முடியாமல் போச்சு…” என்று தயக்கமாக ராபர்ட் கூறவும்


“இட்ஸ் ஓகே…” என்றவாறு அவன் கையில் இருந்த லெட்டரை வாங்கி பிரித்துப் பார்த்தான் சூர்யா.


பிரித்துப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியை தேக்கி நின்றன.


“சொன்ன மாதிரியே பண்ணிட்டா ராட்சசி…..எவ்வளவு திமிரு அவளுக்கு…அவளை….” என்று கோபமாக எழுந்தவன்


“நான் தானே அவ இஷ்டப்படி பண்ணட்டும்னு விட்டேன்….இப்போ போய் பேசி என்ன ஆகப் போகுது??? நாளைக்கு கோட்ல போயே பார்த்துக்கலாம்….” என்று நினைத்துக் கொண்டே மறுபடியும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


மறுபுறம் வெண்ணிலா அவளது அறைக்கு வெளியே சிறு தோட்டம் போல அமைக்கப்பட்டிருந்த அவளது பால்கனியில் ஒரு ஓரமாக நின்று வானத்தையே வெறித்துக் கொண்டு நின்றாள்.


பால்கனி முழுவதும் வித விதமான ரோஜாப் பூக்கள் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க நடுவில் ஒரு சிறிய தடாகம் போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.


அதில் பலவிதமான தாமரை பூக்கள் மலர்ந்திருக்க அந்த தடாகத்தின் அருகில் சோகமே மறு உருவமாக வந்து அமர்ந்து கொண்டாள் வெண்ணிலா.


“ஏன் இந்த சோகம்???” என்றவாறு வந்த அபிநயாவைப் பார்த்து புன்னகைத்த வெண்ணிலாவின் முகத்தில் துளியளவேனும் சந்தோஷம் இல்லை.


“சொல்லுமா என்ன யோசனை???” என்று அபிநயா கேட்கவும்


“வீட்டிலேயே இருக்க போரா இருக்கு அபி…சூட்டிங்கும் வன் வீக்கிற்கு இல்ல….என்ன பண்ணுறதுனே தெரியல…” என்று வெண்ணிலா கூறவும்


“அது தான் நாளைக்கு கோர்ட்டுக்கு போகனுமே மறந்துட்டியா??” என்று அபிநயா கேட்க இல்லை என்பது போல தலை அசைத்தாள் வெண்ணிலா.


“நாளைக்கு நீ கோர்ட்டுக்குப் போயிட்டு வந்த அப்புறமாக உனக்கு பெரிய சர்ப்பரைஸ் இருக்கு….ஸோ நீ இனிமே போரிங்கா பீல் பண்ணமாட்ட…” என்று அபிநயா கூற


“சர்ப்பரைஸா??? என்ன அது???? “ என்று விழி விரித்துக் கேட்டாள் வெண்ணிலா.


“நாளைக்கு தெரிய வரும்….அது வரைக்கும் என்ன அந்த சர்ப்பரைஸ்னு யோசிச்சுட்டே இரு போரடிக்காது…” என்று விட்டு அபிநயா சென்று விட


“சும்மா இருந்த சங்கை ஊதி விட்டுட்டு போயிட்டாங்கலே….ஐயோ….இனி அதையே யோசிச்சுட்டு இருப்பேனே…” என்று தலையில் கை வைத்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.


அடுத்த நாள் காலை வெண்ணிலா எதிர் பார்த்துக் காத்திருந்த அந்த நாள்.


வெண்ணிலாவைத் தவிர அந்த வீட்டில் அனைவருமே மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க வெண்ணிலா குழப்பமாக
“இவர்கள் என்ன செய்கிறார்கள்???” என்று யோசித்த வண்ணம் படியிறங்கி வந்தாள்.


டைனிங் டேபிளில் வந்து வெண்ணிலா அமர்ந்து கொள்ள ஆண்டாள் அவசர அவசரமாக வெண்ணிலாவிற்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு சென்று விட வெண்ணிலா அதிசயமாக அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


“என்ன ஆச்சு இவங்களுக்கு?? இன்னைக்கு நான் கோர்ட்டுக்கு போகப் போறேன்….ஆனா இவங்க அதைப் பத்தி கண்டுக்கவே இல்லையே!!! என்ன தான் நடக்குது இங்க???” என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவளது தொலைபேசி சிணுங்கியது.


வக்கீலிடமிருந்து அழைப்பு வரவும் தன் சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சாப்பிட்டு விட்டு வெளியேறிச் சென்றாள் வெண்ணிலா.


வெண்ணிலா வெளியேறிச் செல்லும் வரை பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த ஆண்டாள் அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார்.


உள்ளே செல்லலாம் என்று திரும்புகையில் அவரின் தோள் மேல் யாரோ கை வைக்கவும் “அய்ய்யோ….நிலா வந்துட்டாளோ….இப்போ எதுவும் என்கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்??? இதுக்காக தானே நான் அவசர அவசரமாக சாப்பாட்டை வைச்சுட்டு நிக்காம ஓடினேன்…..இப்போ எப்படி சமாளிக்க போறேன்னோ தெரியலயே….” என்று புலம்பிக் கொண்டே மெல்ல தயங்கியவாறே திரும்பிப் பார்க்க அவரின் பின்னால் நின்று அபிநயாவும், வெற்றியும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றனர்.


“ஐயோ….அம்மா….சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது…உங்க பொண்ணப் பார்த்தா உங்களுக்கு இவ்வளவு பயமா??? ஆனாலும் நீங்க கொடுத்த ரியாக்ஷன் இருக்கே…சான்ஸே இல்ல போங்க….அப்படியே காஞ்சரிங் மூவில வர்ற பேயைப் பார்த்த மாதிரி…” என்று விட்டு வெற்றி மீண்டும் சிரிக்க அவனை முறைத்துப் பார்த்தார் ஆண்டாள்.


“ஏன்டா என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு காமெடியாவா இருக்கு…நானே இன்னைக்கு என்ன ஆகப் போகுதோனு பயத்துல இருக்கேன் நீ என்னடான்னா லூசாட்டம் சிரிச்சுட்ட நிற்குற…இப்போவே நல்லா சிரிச்சுக்க…ஈவ்னிங் நிலா வந்து இங்க நடக்குறது எல்லாம் பார்த்துட்டு சாமி ஆடுவா அப்போ இதெல்லாம் பண்ணது நீதான்னு
அவகிட்ட கோர்த்து விடுறேன் பாரு…” என்று ஆண்டாள் கூறவும்


“ஐயோ….என்னைப் பெற்ற தெய்வமே…..அப்பிடி எதுவும் பண்ணிடாதீங்க….இப்போ கோர்ட்டுக்கு போறவ கண்டிப்பாக வாயை வைச்சுட்டு சும்மா இருக்காம சூர்யா கிட்ட ஏதாவது வம்பு பண்ணி ஏழரையைக் கூட்டிட்டு தான் வருவா….இதுல நீங்க வேற ஏதாவது சொல்லி அநியாயமாக உங்க பையனோட கொலைக்கு தூபம் போட்டுடாதீங்க…” என்று வெற்றி கூற


“பரவாயில்ல ஒரு நல்லது நடக்கனும்னா சிலதை இழக்கத் தானே வேணும்….இல்லையா அத்தை…” என்ற கூறிய அபிநயாவை


“அட கிராதகி…..” என்றவாறு பார்த்தான் வெற்றி.


“சரி சரி….ஈவினிங் நிலா வந்ததும் என்ன பேசணும்னு நல்லா இரண்டு பேரும் பிரிபயார் ஆகிக்குங்க…அப்புறம் சொதப்பிடுவீங்க…” என்று விட்டு ஆண்டாள் சென்று விட


அபிநயாவின் அருகில் வந்த வெற்றி
“என்னைப் போட்டுத் தள்ள பிளான் பண்றலே இரு இரு உன்னைக் கவனிச்சுக்குறேன்…” என்று கூறவும்


“அதையும் பார்த்துடலாம்…: என்று விட்டுச் சென்றாள் அபிநயா.


மறுபுறம் கோர்ட்டில் வெற்றி சொன்ன வார்த்தையை பொய்யாக்காமல் வெண்ணிலா சூர்யாவை முறைத்துக் கொண்டு நிற்க சூர்யாவோ கைகைளைக் கட்டிக் கொண்டு வெண்ணிலாவையே பார்த்துக் கொண்டு நின்றான்.


“என்ன ரொம்ப நல்லவன் மாதிரி ஆக்ட் பண்ணா அப்படியே நான் உன்னை நம்பிடுவேனு நினைச்சியா என்ன???” என்று வெண்ணிலா கேட்கவும்


“நான் உன்னை என்னை நம்ப சொல்லவே இல்லையே…” என்று தன் தோளைக் குலுக்கினான் சூர்யா.


“உன்னை…” கோபமாக ஏதோ கூற வந்தவள் அவளது வக்கீல் வருவதைக் காணவும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே கோர்ட்டினுள் நுழைந்தாள்.


சூர்யாவும், வெண்ணிலாவும் ஒரு மனதாக விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.


தான் நினைத்ததை சாதித்துக் காட்டி விட்டேன் என்று வெற்றிக் களிப்போடு வெண்ணிலா சூர்யாவைப் பார்க்க அவனோ அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இலலை என்பதைப் போல தன் போனில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான்.


“என்ன ஆச்சு இவனுக்கு??? வந்ததில் இருந்து இவ்வளவு சைலண்டா இருக்கான்??? இவன் கேரக்டரே இது இல்லையே….” என்று வெண்ணிலா யோசித்துக் கொண்டிருக்கையில் தான் வந்த வேலை முடிவடைந்தது என்பதைப் போல சூர்யா எழுந்து கொள்ள அவசரமாக அவனருகில் வந்தாள் வெண்ணிலா.


“என்ன மிஸ்டர் சூர்யதேவன் நான் சொன்ன படி நடத்திக் காட்டிட்டேனா???”என்று வெண்ணிலா கேட்கவும்


அவளைப் பார்த்து புன்னகைத்தக் கொண்ட சூர்யா
“ஆமா ஆமா நீங்க யாரு??? தி கிரெட் சிங்கர் வெண்ணிலா சூர்யதேவன் ஸாரி ஸாரி மிஸ். வெண்ணிலா அழகர் ஆச்சே…” என்று அந்த மிஸ் என்ற வார்த்தையை அழுத்திக் கூறவும் முகம் சிவக்க அவனைப் பார்த்தாள் வெண்ணிலா.


“ஓகே மேடம் நீங்க சொன்னதை செஞ்சு காட்டிட்டீங்க…வேற ஏதாவது சொல்ல இருக்கா???” என்று சூர்யா கேட்கவும்


“ஆமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கே….இப்போ தான் உங்களுக்கு டிவோர்ஸ் கிடைச்சுடுச்சே…..ஸோ இனிமே ஈஸியா நீங்க ஜனனியை மேரேஜ் பண்ணிக்கலாம்லே….” என்று கூறும் போதே வெண்ணிலாவின் குரல் கம்மியது.


இருந்தாலும் சூர்யாவின் முன்னால் தன் பலவீனத்தைக் காட்டி விடக்கூடாது என்பதற்காக முயன்று தன்னை தைரியமாகக் காட்டிக் கொண்டாள் வெண்ணிலா.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெண்ணிலாவின் வார்த்தைகள் சூர்யாவின் கோபத்தை தூண்டினாலும் ஒன்றும் பேசாமல் அவளை கூர்மையாகப் பார்த்தவன்
“தாங்க்ஸ் பார் தி ஐடியா மிஸ். வெண்ணிலா….நான் கூட இதைப் பத்தி யோசிக்கவே இல்ல….கண்டிப்பாக ஜனனியோட வெடிங் இன்விடேஷனை எடுத்துட்டு உங்களைத் தேடி வருவேன்….
நீங்களும் கட்டாயமாக கல்யாணத்துக்கு வந்து முதல் பந்தியில உட்கார்ந்து நல்லா வயிறு முட்ட சாப்பிடணும் சரியா? உங்க பேவரிட் ரசகுல்லா தான் அன்னைக்கு மெயின் ஸ்வீட்டே….என்ன ஓகேவா???” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டிக் கேட்டான்.


“என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?” என்று வெண்ணிலா கோபமாக கேட்கவும்


“இங்கப் பாரு ஐசு….செவனேனு போயிட்டு இருந்தவன் முன்னாடி வந்து வம்பு பண்ணது நீ….இப்போ என்கூட சண்டைக்கு வர்ற…ஆக்சுவலி உன் பிராப்ளமே இது தான்….என்னைப் பார்க்காம என் கூட பேசாம உன்னால இருக்க முடியாது….நீ இல்லைனு சொன்னாலும் இது தான் நிஜம்….பட் இனி என்ன பண்ணுறது….” என்று சோகமாக இடை நிறுத்திய சூர்யா


“வேணா அகைன் மேரேஜ் பண்ணிக்கலாமா???” என்று கேட்கவும் வாய் பிளந்து நின்றாள் வெண்ணிலா.


"ஹலோ மிஸ் என்ன ஆச்சு???” என்று சூர்யா கேட்கவும்
நடப்பிங்கு வந்தவள்


“சும்மா வம்பு பண்ண வந்தா இவன் நம்மளையே கன்பியுஸ் பண்ணிடுறான்….இங்கே நிற்குறது நமக்கு ஷேஃப் இல்ல….” என்று நினைத்துக் கொண்ட வெண்ணிலா சூர்யாவைத் திரும்பியும் பார்க்காமல் சென்று தன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட சூர்யா புன்னகையோடு வெண்ணிலாவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.


“ரொம்ப கெத்தா வீட்டக்குப் போறா…..அங்கே இதை விடப் பெரிய ஆப்பு காத்துட்டு இருக்கே….என்ன பண்ணப் போறாளோ???? பாவம் நம்ம ஐசு…” என்று எண்ணிக் கொண்டவன் தன் ஆபிஸை நோக்கிச் சென்றான்.


வீட்டிற்கு வந்த வெண்ணிலா வாசலில் இருந்த தோரணங்களைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.


காரைப் பார்க் செய்து விட்டு வேகமாக வீட்டினுள் நுழைந்தவள் நேராக ஆண்டாளிடம் சென்று நின்றாள்.


வெண்ணிலாவைப் பார்த்து புன்னகைத்த ஆண்டாள் “வந்துட்டியாமா??? இந்தா டிரஸ் போய் குளிச்சுட்டு மாத்திட்டு சீக்கிரமா வா…” என்று கூறவும்


“அம்மா என்ன நடக்குது இங்க??? காலையில் இருந்து எல்லாத்தையுமே கவனிச்சுட்டு தான் வரேன்….இப்போவாது சொல்லுமா…” என்று கெஞ்சலாக கேட்டாள் வெண்ணிலா.


“இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்ல நிலா….எல்லோரும் வந்துடுவாங்க சீக்கிரமாக ரெடியாகிட்டு வா….” என்ற ஆண்டாள்


அவளை படி இருந்த பக்கம் வரை இழுத்துக் கொண்டு வந்து விட்டு சென்று விட
“என்ன தான்பா நடக்குது யாராச்சும் சொல்லுங்களேன்…..” என்று புலம்பியவாறே தன் அறையை நோக்கிச் சென்றாள் வெண்ணிலா.


ஆபிஸ் வந்த சூர்யா வழக்கம் போல அவனது வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்க அக்ஸயாவிடமிருந்து அவனுக்கு போன் வந்தது.


“என்ன அண்ணா…நீ இன்னும் வரலயா???” என்று அக்ஸயா கேட்கவும்


“இல்லடா அச்சு….நீங்க எல்லாரும் முன்னாடி போங்க…நான் வேலையை முடிச்சுட்டு டைம் இருந்தா வந்து ஜாயின் பண்ணுறேன்…” என்று சூர்யா கூற


“ஓகேண்ணா….” என்று விட்டு போனை வைத்தாள் அக்ஸயா.


சந்தன நிறத்தில் நீல நிற கற்கள் பதித்த பாவாடை, தாவணி அணிந்து அழகு மிளிர நடந்து வந்த வெண்ணிலாவைப் பார்த்து மனம் குளிர்ந்து போனார் ஆண்டாள்.


வீட்டைச் சுற்றிலும் ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்க நடப்பது எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.


சூர்யாவைத் தேடி வந்த ராபர்ட் “ஸார் அந்த ஜேர்மன் டீல் சக்ஸஸ் ஆகிடுச்சு….” என்று கூறவும்


“சூப்பர் ராபர்ட்….வெரிகுட்…எப்போ எங்கே மீட்டிங்???” என்று சூர்யா கேட்கவும்


சிறிது தயங்கிய ராபர்ட்
“ஸார் அது வந்து அவங்க இந்த டீலிங் சம்பந்தமான எல்லா டிஸ்கஸனையும் ஜேர்மன்ல தான் நடத்தனும்னு சொல்றாங்க…” என்று கூற


சிறிது நேரம் யோசித்த சூர்யா “எத்தனை டேஸ் ஆகும்???” என்று கேட்டான்.


“எப்படியும் குறைஞ்சது டூ வீக்ஸ் ஆச்சும் போகும் ஸார்….” என்று ராபர்ட் கூறவும்


“ஓகே டூ வீக்ஸ் தானே போயிட்டு வந்துடலாம்….இப்போ இருக்குற மைண்ட் செட்ல கொஞ்சம் தூரமாகப் போறதும் நல்லது தான்….ராபர்ட் நீங்க அங்க போறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுங்க..” என்று சூர்யா கூற


“ஓகே ஸார்…” என்று விட்டு சென்றான் ராபர்ட்.


“நான் இங்க இருந்தா நிலா கண்டிப்பாக ஏதாவது எடக்கு முடக்கா பண்ணுவா….ஸோ நான் கொஞ்ச நாள் அங்க போறது தான் சரி…” என்று தனக்குள் கூறிக் கொண்டவன் மீண்டும் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.


ஹாலுக்கு வந்த வெண்ணிலா அங்கே கூடியிருந்த அவளது ஒட்டு மொத்த குடும்பத்தையும் பார்த்து வியந்து போனாள்.


“எதுக்கு இத்தனை பேரு இங்க வந்துருக்காங்க??? ஏதாவது விசேஷமோ???” என்று யோசித்துப் பார்த்த வெண்ணிலா அப்போது தான் அன்றைய திகதியை கவனித்தாள்.


“அட இன்னைக்கு அம்மா, அப்பாவோட வேடிங் டே….மறந்தே போயிட்டேனே….” என்று தன் தலையில் தட்டிக் கொண்டவள் ஆண்டாள் மற்றும் அழகரைத் தேடிச் செல்ல அவர்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கம்பீரமாக வீற்றிருந்தனர்.


முகம் நிறைந்த புன்னகையோடு அவர்கள் அருகில் சென்றவள் “ஹேப்பி வெடிங் டே ஆண்டாள் அன்ட் அழகர்….” என்று கூற இருவரும் புன்னகையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


“எங்கே அந்த அபி???” என்றவாறு அபியின் அருகில் சென்ற வெண்ணிலா


“நேத்து சர்ப்பரைஸ் அது, இதுனு சொல்லவும் நானும் என்னவோ ஏதோனு பயந்தா இதை தான் அப்படி சொன்னீங்களா???” என்று கேட்கவும்


இல்லை என்பது போல தலை அசைத்த அபிநயா
“நான் சொன்ன சர்ப்பரைஸ் அதோ அங்க இருக்கு….” என்று கை காட்டவும் திரும்பி பார்த்தாள் வெண்ணிலா.


“அதோ அந்த புளு சர்ட் போட்ட பையன் உன் அண்ணா கூட பேசிட்டு இருக்கான்லே….உன்னைப் பொண்ணு பார்க்க வந்துருக்காங்க…” என்று கூறவும்


“என்ன??????” என்று அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள் வெண்ணிலா……
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top