• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் மக்களே..

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கு நிறைய நன்றி அதைவிட நிறைய அன்பு..

கருத்து தெரிவிக்காம லைக் கூட பண்ணாம போனவங்களுக்கு கொஞ்சமா நன்றி அதைவிட கொஞ்சம் கூட அன்பு..

உங்களோட கருத்துக்கு இந்தக் கதை முடிஞ்சதும் மொத்தமா உட்கார்ந்து ரிப்ளை கொடுக்கிறேன் மக்காஸ்...உங்களோட கருத்து எல்லாமே அல்டா சூப்பரூ...

Banumathi, chitrasaraswathi, sridevi, pradeep, deepivijay, kaniskavarna, premi, maha, lakshmi, geetha, saroja, riha, nadarajan, stella, saranya, ugina, sony, snehasree, banupriya, nishrdha, padma, sanshiv, thadsa எல்லா சகோ'க்களுக்கும் நன்றிகள் பல..

யார் பெயராச்சும் விட்டிருந்தா மன்னிச்சு..

உங்களோட ஆதிக் மதி வந்தாச்சு...

Happy Reading!!

இப்படிக்கு உங்கள் குயந்த புள்ள...
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~29~

மதி வண்டியில் ஏறி வீடு போகும் வழியெங்கும் வாய் ஓயாமல் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர, வேணிக்குப் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்த பின்னும் கோபத்தை இழுத்துப் பிடித்து..

“மதி, நீ எதுக்குத் திரும்பி வந்த..?” என்ற கேள்வியை முன்வைத்து அவளது முகம் பார்த்தார் வேணி.

மனைவியின் கேள்வியில் திடுக்கிட்டுப் பார்த்த தர்மர், மதி அறியா வண்ணம் வேணியின் கரங்களுக்கு அழுத்தம் கொடுத்து, வேண்டாமென கண் ஜாடை செய்ய,

“நீங்க வண்டியைக் கொஞ்சம் ஓரங்கெட்டுங்க..” தர்மரைப் பார்த்து சொல்ல, மதியோ அம்மாவும் பிள்ளையும் கேட்கும் ஒரே கேள்விக்கான அர்த்தம் புரியாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்..

வண்டி ஓரமாய் நின்றதும் சுற்றம் கவனித்தவள், “அப்போ நான் இங்க வரக் கூடாதுன்னு சொல்லுறீங்களா அத்தை..?” குரல் லேசாக உடைந்திருந்ததோ? எனத் தர்மர் மதியின் புறம் திரும்பி அமர, அவளது முகத்தில் எவ்விதமான உணர்வுகளையும் காட்டாமல் பார்த்திருந்தாள் மதியழகி..

“இங்க வரக் கூடாதுன்னு சொல்லல மதி...இவ்வளவு நாள் இங்க வராம இப்போ வந்ததுக்கான காரணம் என்னன்னு தான் கேட்குறேன்..?” வேணியின் கேள்விக்கு விகாஷின் வருகையை மதி காரணமாய் சொல்ல,

“அப்போ என்னைப் பார்க்கத் தான் இங்க வந்த அப்படித் தானே மதி..?” வேணியின் கேள்விக்கு ஆம் இல்லையென இருபுறமாய் தலையசைத்தவளிடம்

“எதுக்கு இங்க இருந்து போன மதி..?” என்ற அடுத்தக் கேள்வியைத் தொடுக்க,

அவரது கேள்விக்கு பதிலளிக்கத் தயங்கியவள், “வேலை இருந்தது அதான்..” அவளது பதிலுக்கு ‘நான் உன்னை நம்பவில்லை’ என்ற பார்வையை விடையாய் கொடுத்தவர்

“மதி, வாழ்க்கையில நாம நினைச்சது மட்டும் தான் நடக்கனும்னு எந்தக் கட்டாயமும் இல்லை... உன்னோட முடிவை நீ எடுக்குறது தப்பில்லை ஆனா மத்தவங்களோட முடிவு இதுவா மட்டும் தான் இருக்க முடியும்னு நீ நினைக்கிறது தான் தப்பு..” சாலையில் கவனத்தை வைத்து பேசிய வேணியின் பேச்சு மதிக்கு புரியவில்லை..

அவளது குழப்பமான முகத்தைக் கண்டவர், “இன்னைக்கு நான் உனக்குச் சொன்னது ஒரு நாள் உனக்குப் புரியும்..” என்றவரிடம் தயங்கித் தயங்கி தனது மன்னிப்பை வேண்ட

“மதி, உங்க மாமாவுக்கு உன்மேல கோபம் கிடையாது..” என்பதை மட்டும் சொன்னவர் திரும்பி அமர்ந்து கொள்ள, மதியின் மனமோ ‘ஏதோ கொலைப் பண்ணிட்டு ஓடிப் போன மாதிரியே குடும்பம் மொத்தமும் வரிஞ்சி கட்டிகிட்டு நம்ம உயிர வாங்குது..ச்சை’ என மானசீகமாய் அர்ச்சிக்கும் போதே

மதியைப் பார்த்து இதமாய் சிரித்த தர்மர், வேணியிடம் திரும்பி, “சின்னப் புள்ள தான வேணி, விடு போகப் போக புரிஞ்சிப்பா..” என்றவரைத் தொடர்ந்து

“ஆமா அத்தை..மாமா சொல்ற மாதிரி நான் போகப் போக புரிஞ்சுப்பேன்..” உதடு சுழித்து பாவமாய் சொல்லும் மதியை நம்பா பார்வை பார்த்தவர்

“ஏங்க..அவளுக்கு இப்பவும் நாம என்னச் சொல்ல வரோம்னு புரியல..இப்போதைக்கு அவளைப் பொறுத்த வரைக்கும் நாம என்னத் தப்பு பண்ணிட்டோம்னு இதுங்க இந்தா வரத்து வருதுன்னு தான் யோசிச்சிட்டு இருப்பா..” என்றதும் தனது முழியைப் பதிலாய் கொடுத்தவளின் மனமோ, “பெருசு கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்…” என ஆஜராகத் தவறவில்லை..

அவளது முகப்பாவங்களில் வந்த சிரிப்பை அடக்கிய தர்மர், “நேரமாகிட்டு வேணி..கிளம்பலாம்..” என்றவர் வண்டியைக் கிளப்ப,

“அத்தை நீங்களும் என் மேல கோபமா இருக்கீங்களா..?” என்க

“கோபமா இல்ல ஆனா கொலவெறில இருக்கேன்..” அவரது வார்த்தையில் சோக கீதம் வாசித்தவள், தன் மாமனாரிடம் திரும்பி

“மாமா எனக்கு அன்னைக்கு வாங்கி கொடுத்த மாதிரி கேசரி வாங்கி தாங்களேன்..” வேணியிடம் நாக்கைத் துருத்தியவள் தர்மரிடம் சேர்ந்து கொள்ள, வேணிக்கு சிரிப்பும் தவிப்பும் சரி பாதியாய் வந்தது..

கோவிலில் இருந்து அலுவலகத்திற்கு வந்தவனை வாயிலிலே பிடித்துக் கொண்ட ராஜ், “அண்ணா..எதுக்கு காலையிலயே பீச் ரோட்ல தலைதெறிக்க ஓடிருக்க..?” என்றதும், இதை யாரு இவன் கிட்ட சொல்லிருப்பா என்ற தடுமாற்றத்துடன்

“உனக்கு யாருடா சொன்னா..?” மெல்லமாய் கேட்கும் ஆதிக்கிடம்

“நம்ம ஆபிஸ் மானேஜர் வீடு அங்க தான் இருக்கு அவர் தான் பார்த்துட்டு என்கிட்ட இப்போ கேட்டாரு..” ‘இம்சை..மானத்தை வாங்கிட்டாளே..’ என்பதில் சமாளிப்பாய் சிரித்தவன்

“அது ஒண்ணுமில்லராஜ்...காலையில வாக்கிங் போகலையா அதான்…”

“அதுக்கு எதுக்கு தலைதெறிக்க ஓடனும்..” என்றவனிடம் பேச்சை வளர்க்காமல்

“ராஜ், நான் ஓடுனது தான் இப்போ ரொம்ப முக்கியமா...இன்னைக்கு ஒரு இம்பார்டென்ட் மீட்டிங் இருக்கு அதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணியாச்சா..?” ராஜிடம் வரிசையாய் வேலைப் பிறப்பித்தவன் தனது அறைக்குச் சென்றுவிட, அடுத்தடுத்த வரிசைக் கட்டிய வேலை அவனையுமே மதியின் நினைவுகளை தற்காலிகமாக மறக்கடித்தது..

மாலை ஆறு மணிக்கு மேல் ஆதிக்கைத் தேடி வந்த ராஜ், இன்றைய ப்ராஜெக்ட்டின் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு ஐடிசி சோலாவில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியைப் பற்றி சொன்னதும், “சரி ராஜ், நீ முதல்ல போய் அங்க வேலையைப் பாரு, நான் ஒரு ஏழு மணி கிட்ட வரேன்..லீனாவை வெய்ட் பண்ணச் சொல்லு..” என்றவன் வேலையில் மூழ்கிவிட

அவன் ‘லீனாவை இருக்கச் சொல்’ என்றதும் கேள்வியாய் பார்த்து நின்ற ராஜின் மனதில், “இது என்ன புதுசா இருக்கு” என்பதே தலைதூக்கி நின்றது..

லீனா வேறு யாருமில்லை ஆதிக்கின் உதவியாளர்களுள் ஒருத்தி தான்..லீனாவின் திறமைக்காக மட்டுமே அவளை வேலைக்கு வைத்திருந்த ஆதிக்கு அவளின் பார்வையும் பேச்சும் முகச்சுளிப்பைக் கொடுத்ததால் எப்போது ஓரடித் தள்ளியே வைத்திருப்பான்.. இவை அனைத்திற்கும் மேலாக ஒருமுறை தைரியமாக ஆதிக்கிடமே வந்து திருமணத்தைப் பற்றி பேசியிருக்கிறாள்..உடையில் தொடங்கி அனைத்திலும் ஆணுக்கு நிகராய் இருப்பாள், ஆனால் வேலையில் அசுர வேகத்துடன் கூடிய கெட்டிக்காரி..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
லீனாவிடம் சென்ற ராஜ், ஆதிக் சொன்னதைச் சொல்லிவிட்டு பார்ட்டிக்கு சென்றுவிட, லீனாவிற்கே ஆதிக்கின் இச்செய்கை விசித்திரமாக இருந்தது..

ஏழு மணி போல லீனாவை அழைத்துக் கொண்டு ஐடிசியை அடைந்து, மலேசியா தொழிலதிபர்களிடம் மற்றொரு தொழில் முறை ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டவனுக்கு, அந்த ஒப்பந்தம் லீனாவின் சாதுரியத்தால் மட்டுமே என்பது தெளிவாய் புரிந்தது..

தொழில் முறை விருந்தில் எப்போதும் மதுவை புறக்கணிப்பவன், இன்று கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக் குடிக்க, புதிதாய் கற்று கொண்ட பழக்கம்.. அதனால், ஐந்து க்ளாஸை கூட அவனால் கடக்க முடியவில்லை..

அண்ணன் இரண்டாவது டம்பளரை எடுத்துக் குடிப்பதை தூரத்தில் இருந்தே கண்டிருந்தவன், அங்கிருந்த சிப்பந்தியை அழைத்து ஆதியை கை காண்பித்து அவருக்கு கோலாவைத் தவிர இனி எதுவும் கொடுக்க கூடாது எனப் பணித்து நகர, அதற்குப் பிறகு கொடுக்கப்பட்ட மூன்று க்ளாஸுமே கோலா தான்..

முகர்ந்து பார்த்தாலே மட்டையாகிவிடும் க்ரூப்பை சேர்ந்தவனுக்கு, இரண்டு க்ளாஸ் மிக்ஸிங் சரக்கே உச்சக் கட்ட போதைக்கு இழுத்துச் செல்ல, கண்கள் சொரூக இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான் ஆதிக்..

ஆதிக்கு அருகே அமர்ந்திருந்த லீனாவிற்கு அவனது குடியும் அதைத் தொடர்ந்த மயக்கமும் புதிதாய் இருக்க, கண்களைச் சுழற்றி ராஜை தேடியவள், அவன் இல்லையென்றதும் அங்குள்ள பாதுகாவலரை அழைத்துத் தானே அவனது டிரைவருடன் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்..

லீனா ஆதிக்கை அழைத்துச் சென்ற சில நிமிடங்களில் பாதுகாவலர் ராஜை அழைத்து நடந்ததைச் சொல்ல, லீனாவிற்கு அழைத்தவன், “எங்க இருக்கீங்க லீனா..?” அதட்டலான கேள்வி தான்..

“நம்ம வீட்டுக்கு தான் ராஜ்..அதுவும் நம்ம காருல தான் போயிட்டு இருக்கோம்..” எனத் திமிராய் பதிலளித்தவள் மட்டும் இந்நேரம் எதிரில் நின்றிருந்தால் சப்பென ஒன்று வைத்திருப்பான்..

“லீனா உன் மரியாதைய நீயே கெடுத்துக்காத..போனை டிரைவர் கிட்ட கொடு..”

“ஹே ராஜ் டென்ஷன் ஆகாதீங்க..வெய்ட்..” இயல்பாய் உரைத்தவள் டிரைவரிடம் போனைக் கொடுக்க

“முருகா, அந்த மேடத்தை வீட்டுல இறக்கிவிட்டுட்டு நம்ம வீட்டுக்கு போ..” என ராஜ் சொன்னதும்

“சார்...ஆதிக் சார் காருல வாந்தி எடுத்துட்டாரு..நம்ம வீடு தான் பக்கத்துல இருக்கு..” டிரைவரின் பதிலுக்கு “சரி” என்றவன் அழைப்பைத் துண்டித்து அடுத்த அழைப்பை மதியழகிக்கு விடுத்தான்..

“அண்ணி..வீட்டுல எல்லாம் தூங்கியாச்சா..?” தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி அவன் கேட்டதும்

“ராஜ்...எல்லோரும் மட்டும் இல்ல நான் கூட தூங்கிட்டு தான் இருக்கேன்..” என அரைத் தூக்கத்தில் சொன்னதும்

“சரி அண்ணி..கொஞ்சம் எந்திரிச்சு வாசலுக்கு போய் அண்ணாவை ரூமுக்கு கூட்டிட்டு போங்க..”

“ஏன் ராஜ்? உங்க அண்ணனுக்கு வழி மறந்து போச்சா..?” ஒருபக்கம் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டே மறுபக்கம் பேசும் மதியை மானசீகமாக முறைத்தவன்

“ஆமா, வாசல்ல இருந்து ரூமுக்கு எப்படி வரணும்னு மறந்து போச்சாம்..நீங்க போய் கூட்டிட்டு வாங்க..” என்றவனிடம்

“ராஜ், ப்ளீஸ் நீயே அட்ரெஸ் கொடுத்து அனுப்பி வை..நான் கொஞ்சம் தூங்குறேன்..” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்..

அவளது செய்கையில் தனது தலையில் அடித்துக் கொண்டவன் மறுபடியும் அவளது எண்ணுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டேயிருக்க ஒருகட்டத்தில் அழைப்பை எடுத்து, “இப்போ என்ன ராஜ் நான் வாசலுக்கு போகணும் அவ்ளோ தானே..போறேன்..” அவனது பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தவள், இரவு உடைக்கு மேலே ஒரு கோட்டை அணிந்து கொண்டு வெளி வாசலில் போடப்பட்ட இருக்கையில் சாய்ந்தவள் தூங்கத் துவங்கிய சில நொடிகளிலே ஆதிக்கின் கார் போர்ட்டிக்கோவில் நின்றது..

கார் நின்ற சத்தம் கேட்டு மதி வர, காரில் இருந்து ஆதிக்கை கை தாங்கலாய் பிடித்து நின்றாள் லீனா...அவள் பிடித்திருந்த விதமும் ஆதிக் சாய்ந்திருந்த விதத்தையும் பார்க்க இருவரும் கட்டிப் பிடித்து நிற்பது போல் இருக்க, வேகமாய் லீனாவின் அருகே சென்று ஆதிக்கை தன்பக்கம் இழுத்துக் கொண்டாள்..

மதியின் செய்கை ‘இது என் பொம்மை’ எனப் பிடித்திழுக்கும் குழந்தையின் செய்கையைப் போல் இருக்க, காரின் டிரைவருக்கு கூட லேசாக இதழ் வளைந்தது..

“நீங்க..?” ‘நீங்க யாரு?’ எனக் கேள்வியாய் கேட்க வந்தவள் மதியின் முறைப்பில் அக்கேள்வியை விடுத்து

“நீதான் மேடம பார்த்துக்க வந்த நர்ஸா..ஓகே..சார் லேசா ட்ரிங்க் பண்ணிருக்காரு வாமிட் வேற பண்ணிட்டாரு..சோ டேக் கேர்..” என்றவளுக்கு மதி உரிமையாய் ஆதிக்கை பிடித்து இழுத்தது புலப்படவில்லை..

அவளுக்குப் பதிலளிக்காத மதி, டிரைவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆதிக்கை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள்..

ஏதும் பேசாமல் அமைதியாய் சென்ற மதியை, ‘பாவம் ஊமை போல’ என நினைத்துக் கொண்ட லீனாவை வேறொரு காரில் முருகன் அழைத்துச் சென்றான்..

எப்படியோ படி வரை அழைத்து வந்துவிட்டவளால் அறைக்கு கூட்டிச் செல்ல தெம்பில்லாமல் போய்விட, ஆதிக்கை படியில் அமர்த்தி பின்னோடு கைக் கொடுத்து ஒவ்வொரு படியாய் தூக்கி வந்தவளுக்கு பத்து படிக்கு மேல் தூக்க முடியவில்லை..

“ஓஹ் மை கார்ட்…” இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டு, அடுத்த ஒரு மணி நேரம் முயன்று அறைக்கு இழுத்துச் சென்றுவிட்டாள்..

அங்கிருந்த துண்டை தண்ணீரில் நனைத்தவள், அவனது முகம் முழுவதும் துடைத்துவிட்டு சட்டையைக் கழற்ற, உண்ட உணவு செரித்திருந்தது..

அவன் மீது வந்த நாற்றம் வேறு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர, கொஞ்சம் பினாயிலும் டெட்டாயிலும் கலந்த தண்ணீரை டவல் கொண்டு அவனது உடல் முழுவதும் துடைத்துவிட்டு, ரூம் ஸ்பிரே, பாடி ஸ்பிரே என அனைத்தையும் அடித்து முடித்து மூச்சு விட்டவளுக்கு இப்போது தான் சுவாசிக்கச் சுலபமாய் இருந்தது..

அவனது சட்டையை அழுக்கு கூடையில் போட்டுவிட்டு அவனுக்கு அருகே அமர்ந்தவளுக்குச் சன்னமாய் ஒலித்த அவனது அலைபேசியில் கவனம் போக, பேண்டினுள் கைவிட்டு அலைபேசியை எடுத்து நோண்டத் துவங்கியவளுக்கு கோபம் உச்ச டெஸிபியை தொட்டது..

மதி குளிர்வாள்…
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Wow:love:ini thinamum varuvanga la adhi Nd Madhi:love:veni oda vasanathuku mathiyin reaction paathu dharmar siripa adakura scene Nerla paatha maari irunthuchu sis:D(y)madhi than ultimate:love:raj kitta adhi ku veetuku vali theriyalayanu thookathula panra comedy:LOL:(y)(y)apdi ennatha paatha phnla:unsure:waitingg:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top