• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Ko(Ve)llum Vennilavei - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Share your views about this epi..

  • Interesting

    Votes: 55 90.2%
  • Good

    Votes: 6 9.8%
  • Need Improvement

    Votes: 0 0.0%

  • Total voters
    61

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
3

ராஜின் அசையா பார்வையிலிருந்தே தான் யூகித்த இடத்திலிருந்து தான் இவனுக்கு அலை பேசி அலைப்பு வந்திருக்கிறது என்பதை எடுத்துரைக்க

“ராஜ், போன்ல யாரு..?” என்றான் கண்களில் அணிந்திருந்த கூலர்ஸை மேலே ஏற்றிவிட்டவாறு..

“சார்..கலெக்டர் நம்ம ஆபிஸ்ல உங்களுக்கு காத்திருக்கிறாராம்..”

“தெரியும் ராஜ்..இங்கயிருந்து நம்ம ஆபிஸ் போக எவ்வளவு நேரம் ஆகும்..?” தெரிந்தும் கேட்பவனிடம் எதிர்க் கேள்வி கேட்காமல்..

“சார் இங்க டிராபிக் இருந்தா இருபது நிமிஷத்துல போய்டலாம் இல்லைனா நாம போற ஸ்பீடுக்கு பத்து நிமிஷமே ஜாஸ்தி தான் சார்..” ராஜின் பதிலுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன்..

“அப்போ நாம வீட்டுக்கு போயிட்டு அதுக்கு அப்புறம் ஆபிஸ் போனா எவ்வளவு நேரம் ஆகும் ராஜ்..” ஒருவர் தனக்காக காத்திருக்கிறார் என்று சொன்ன பின்பும் இவன் இவ்வளவு சாதாரணமாய் பேசுகிறானே எனத் தோன்றினாலும்,

“அப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலயே ஆகும் சார்..” என்றான்.

“அப்போ வாங்க ராஜ்...நாம வீட்டுக்கு போயிட்டு அம்மா கையால ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்..லெட்ஸ் டேக் எ பிரேக் மேன்..” தலையை அழுந்தக் கோதி காரை கிளப்பிய பின்னும் ஆணி அடித்தால் போல நிற்கும் ராஜை பார்த்தவன் காரின் ஹாரனை ஓங்கி ஒலிக்க அதில் சுயம் பெற்று காரில் ஏறிக் கொண்டாலும் மனதில் அந்த கலெக்ட்டர் பற்றிய பயம் இல்லாமல் இல்லை..

காரின் அமைதியைக் கடந்து அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் கலெக்ட்டரின் உதவியாளரிடம் பத்து அழைப்புகள் வந்திருக்க, காரை விட்டு இறங்கி அந்தப் பங்களாவினுள் நுழையும் முன் நேரடியாக கலெக்ட்டரின் எண்ணிலிருந்தே அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.

இவ்வளவு நேரம் தட்டி கழித்தது போல் இவரின் அழைப்பை தட்டிக் கழிக்க முடியாமல் ராஜ் திணறி ஆதிக்கை திரும்பிப் பார்க்க, அவனோ இவனைக் கடந்து கூடத்தை அடைந்திருந்தான். இனி சமாளித்து தான் ஆக வேண்டும் என்ற நோக்குடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன்,

“சொல்லுங்க..யார் வேணும்..?” இயல்பாய் அவன் கேட்டதும்..

“ராஜ் சாரா..” பவ்யமாய் கேட்கும் கலெக்டரின் குரலில் ஒரு முறை தனது காதிலிருந்து போனை எடுத்து நம்பரை பார்த்தவனின் கண்கள் வியப்பில் விரிந்தது..நேற்று ராஜ் சந்திக்க சென்ற போது நான்கு மணி நேரம் காத்திருக்க வைத்து கீழிறக்கிப் பேசியது மட்டுமல்லாது சந்திக்க மறுத்தவரா இவர் என ஆச்சரியப்படுமளவிற்கு இருந்தது அவரது பவ்யம்..இவரை தெரியும் என்பதை காட்டி கொள்ளாமல்..

“ஆமா..நான் ராஜ் தான் பேசுறேன்..நீங்க..?” என்றான்

“சார்..நான் கலெக்டர் கருணாகரன் பேசுறேன்..”

“ஓ..நீங்களா..சொல்லுங்க சார்..” என்றான் எதார்த்தமாய்..

“சார் நாங்க உங்க ஹெட் ஆபிஸ்ல ஆதிக் சார மீட் பண்ணுறதுக்கு காத்துட்டு இருக்கோம்..சார் எப்போ வருவாருன்னு..?” இவருக்கு இப்படியும் பேசத் தெரியுமா ?என வியந்தவன் அதைத் தனது குரலில் காட்டாமல்..

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்..” என்றவன் தொடர்பை துண்டித்துவிட்டான்..

எடுபிடிகளிடம் எல்லாம் இறங்கிப் போக வேண்டிய தன் நிலையை நினைத்து நொந்த கருணாகரனுக்கு ராஜ் பட்டென்று போனை அணைத்தது எரிச்சலைத் தர தனக்கென்று ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையில் அமைதி காத்தார்..

செல்லை அணைத்துவிட்டு ஆதிக்கின் வீட்டினுள் நுழைந்த ராஜை வரவேற்பறையிலே எதிர் கொண்டனர் ஆதிக்கின் தாய் கிருஷ்ண வேணி மற்றும் தந்தை தர்மர்.

அவர்களைப் பார்த்ததும் சிரித்தவன், “அப்பா அம்மா எப்படி இருக்கீங்க..?” என்றவனை அமரச் சொன்னவர்கள்..

“ஏதோ இப்போ தான் பார்க்குற மாதிரி கேட்காத டா..நேத்து தான வந்துட்டு போன..” என்ற கிருஷ்ண வேணியை முறைத்த ராஜ்..

“உங்கள கேட்டது தப்பு தான்..சரி சொல்லுங்க..” என்றான் கிருஷ்ண வேணியை பற்றி அறிந்தவனாய்..

“அது ஒண்ணுமில்ல டா..நீ சாப்பிட்டியா..?” என்றவரை முறைத்தவன்

“அம்மா..இப்போ சார் வந்துடுவாறு சீக்கிரம் கேளுங்க..” என்றவனின் பார்வை அவனை மீறி படி கட்டின் மீள் தொட்டு மீள,

“ராஜா..இங்க பாரேன்..” அவனின் தாடையை பற்றி தன்னைப் பார்க்க செய்தவர்,

“டேய் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கலாமா டா..” அவரின் கேள்விக்கு மகிழ்ச்சியாய் தலையசைத்து..

“எங்க ஆதிக் சார பார்த்து என்னை மறந்துட்டிங்களோன்னு நான் கூட உங்கள தப்பா நினைத்துவிட்டேன் மா..இப்பவாச்சும் என் வாழ்க்கையில விளக்கேத்தி வைக்கனும்னு உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பு வந்துச்சே..பொண்ணு எந்த ஊரு..? எனக்கு ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டாம்..சரியா.. ” உணர்ச்சி பெருக்கில் பேசுபவனை விழி விரித்து என்னவென்பது போல் பார்த்தவர்..

“அட போடா..நான் கேட்டது ஆதிக்கு பொண்ணு பார்க்கலாமான்னு..அப்புறம் நீ என்ன சாதிச்சுட்டேன்னு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுற..?” கிருஷ்ண வேணியின் பதிலில் ராஜ் கோபமாய் முறைக்கத் தர்மரோ தனது சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டு சிரித்து கொண்டிருந்தார்..

கணவன் மனைவி இருவரையும் முறைத்தவன், “எனக்கு இருபத்தி ஏழு வயசு ஆகுது..உங்களுக்கு மறந்து போச்சா..?”

“என்ன டா சொல்லுற உனக்கு இருபத்தி ஏழு வயசாகிட்டா..? இன்னும் என் கண்ணுக்கு குழந்தையா தான் தெரியுற..” தலையை வருடும் அவரது கையை தட்டிவிட்டவன்..

“தெரியும்..தெரியும்..உங்க கூடயும் சார் கூடயும் மல்லு கட்டுறதுக்கே எனக்கு நீங்க பத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்..அப்படி தான அப்பா..?” எங்கு சுத்தினாலும் அவனது திருமணத்தில் வந்து நிற்கும் ராஜை நினைத்து அடக்க மாட்டாமல் சிரித்தவர்..

“ஆமா டா ஆமா..” என்றார் அவனுக்கு ஆதரவாய்..

“அப்படி சொல்லுங்க அப்பா..ஏதாச்சும் சாதிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணனும்னா உங்க புருஷர் Mr.தர்மருக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகிருக்காது...எனக்கும் ஒரு கஷ்டம் குறைந்திருக்கும்..” முதலில் சத்தமாய் பேசியவன் இறுதியாக முணுமுணுக்க..இவ்வளவு நேரம் சிரித்து கொண்டிருந்த தர்மர் அவனை முறைக்க ஆரம்பிக்க எதிர் வாதம் செய்து கொண்டிருந்த கிருஷ்ண வேணியோ,

“டேய்..” முப்பத்திரண்டு பல்லை காட்டி அவர் ஆரம்பிக்கும் முன்னே..

படியிலிருந்து வேகமாய் இறங்கி வந்தான் ஆதிக்..அவனது சூவின் ஓசையிலே கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்ட மூவரும் பவ்யமாய் அமர்ந்து கொள்ள, தர்மர் ஒரு படி மேலே சென்று அங்கிருந்த டைம்ஸ் இந்தியா பத்திரிக்கையில் தனது தலையை நுழைத்துக் கொண்டார்..

மூவரின் அமைதியைக் கண்டு கொள்ளாதவன், “அம்மா காபி கொண்டு வாங்க..” என்றான் அவர்கள் அமர்ந்திருந்த எதிர் சோபாவில் அமர்ந்தவாறு..பத்து நாள் கழித்து இன்று தான் வீட்டிற்கு வந்திருக்கிறான் இன்னும் தங்களை பற்றிய நலன் விசாரிக்காமல் காபி கேட்ட மகனை முறைத்தவர்,காது கேட்காதது போல் அமர்ந்து கொள்ள, மனைவியின் கோபம் புரிந்து தர்மரும் அமைதியாய் கடை கண்ணில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்..

தான் காபி கேட்டும் தாய் அசையாமல் அமர்ந்திருப்பதைக் கண்டவன், தனது பார்வையை அவரின் புறம் திருப்பி “அம்மா..” என்றான் அழைப்பாய்..

“என்ன டா அம்மா நொம்மான்னு..பத்து நாள் கழிச்சு இன்னைக்கு தான் வந்திருக்க..ஒரு வார்த்தை எப்படி இருக்கோம்னு கேட்டியா..வந்ததும் கொட்டிக்கனும்..உன்னை பெத்ததுக்கு ஒரு கல்ல பெத்திருக்கலாம்..எப்பா ராசா உனக்கெல்லாம் வடிச்சு கொட்ட முடியாது..பேசாம நீ கல்யாணம் பண்ணிக்கோ..என்னால இதுக்கு மேல முடியாது பா..”

ஒரு காபி கேட்டதற்காக ஏன் இப்படி திட்டுகிறார்கள்..? என யோசித்தவன்

“அம்மா நான் என்ன பண்ணுனேன்..காபி தான கேட்டேன்..” நயமாய் பேசும் தனது மகனை முறைத்தவர்..

“காபி கேட்க தெரியுது எங்கள நல்லா இருக்கீங்களான்னு கேட்க தெரியல…”

“ஓ...சாரி மா..சொல்லுங்க எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா..?சரி எனக்கும் அப்படியே ராஜுக்கும் காபி கொண்டு வாங்க..” ஆதிக்கின் பேச்சில் இன்னும் நன்றாக முறைத்தவர், கணவனின் புறம் திரும்பி..”என்னங்க கல்யாணத்துக்கு சீக்கிரம் பொண்ணு பாருங்க..என்னால இங்க இருக்கிற யாருக்கும் வடிச்சு கொட்ட முடியாது..” அன்னை சுற்றி சுற்றி திருமணத்திலே வந்து நிற்பது அவனுக்கு எரிச்சலை தர ஆனாலும் அதை அவரிடம் காட்ட பிடிக்காமல்..

“ராஜ்..வாழ்த்துக்கள்..கல்யாணத்துக்கு பொண்ணெல்லாம் பார்க்குறாங்க போல..” தன்னை எதுக்கு வாழ்த்துகிறான் எனப் புரியாமல் பார்த்தவனுக்கு இறுதியாய் அவன் முடித்த வார்த்தைகள் வெட்கத்தை கொடுக்க..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
“ச்சூ..போங்க சார்...” என்றவன் அழகாய் வெட்கப்பட்டதைப் பார்த்து ஆதிக் வாய் விட்டுச் சிரித்தானென்றால் கிருஷ்ண வேணிக்கோ எந்தச் சுவரில் முட்டிக் கொள்ளலாம் என்ற நிலை..

“டேய் ராஜா..” வேணி பல்லை கடித்து அழைத்ததில் சுயம் பெற்றவன்..

“அய்யோ ஆதிக் சார் கல்யாணம் எனக்கு இல்லை உங்களுக்கு..” ராஜின் பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்தவன்…

“ஓகே மா..நீங்க ஏதோ டென்ஷன்ல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..டைம் ஆகிட்டு நான் கிளம்புறேன்..எனக்கு நைட் டின்னர் வேண்டாம்..” என்றவன் அன்னையிடம் விடைபெற்று தந்தையை நோக்க, அவர் புத்தகத்திலிருந்து பார்வையை அகற்றுவதாய் தெரியவில்லை என்றதும், நிதானித்து ஒரு முறை பார்த்தவன்,

அவர் கைகளில் தலைகீழாயிருந்த புத்தகத்தை வாங்கி நேராய் வைத்து அவரது கைகளில் திணித்தவன், அதே வேகத்தில் வெளியேறி விட்டான்.. கணவன் வாங்கிய பல்பை நினைத்து கிருஷ்ண வேணி சிரிக்க, ராஜோ நக்கலாய் சிரித்துவிட்டு ஆதிக்கிடம் விரைந்தான்..

தங்களது வளர்ப்பு மகனான ராஜின் நக்கலிலும், மனைவியின் சிரிப்பிலும், சிறிது நேரம்..’ங்கே’ என விழித்தவர், பின் அவரும் அலுவலகத்திற்குச் சென்றார்..

காரை அமைதியாய் ஓட்டியவனிடம் அந்த கலெக்டர் போன் செய்த விசயத்தை சொல்ல அமைதியாய் அதைக் கேட்டு கொண்டவன்..

“ராஜ் அவர் நம்ம ஆபிஸ் வந்து எவ்வள்வு நேரமாகியிருக்கும்..?” என்றான் சாலையில் தனது கவனத்தை பதித்து..

“சார்..கிட்ட தட்ட இரண்டு மணி நேரமாகியிருக்கும்..”

“ஓ..சரி இப்போ நாம இந்த வழியில் போனா ஆபிஸ்க்கு எவ்வளவு நேரமாகும் ராஜ்..?”

“சார் குறைந்தது அரை மணி நேரமாகும்..”

“அப்போ நாம வடபழனி போயிட்டு அப்புறம் ஆபிஸ் போனா..?”

“சார் அது ஒரு மணி நேரத்துக்கு மேலயே ஆகுமே..” என்றவனை சிரிப்புடன் எதிர் நோக்கியவன்

“ஓ..சூப்பர் ராஜ்..அப்போ நாம அந்த வழியிலயே போகலாம்..” சொன்னவன் அதோடு நில்லாமல் காரை திருப்பி சாலையில் வலது பக்கத்தில் செலுத்த, இவனது செயலைக் கண்டு ராஜ் தான் குழம்பிவிட்டான்..ஒரு கடை நிலை ஊழியனை கூட தனக்காக காத்திருக்க விரும்பாதவன் இன்று கலெக்ட்டர் சந்திக்க வேண்டும் என்று சொல்லியும் இப்படி செய்கிறானே..? என்ற நினைவில் உழன்றவனுக்கு அலுவலகத்தில் வண்டி நின்றதும், ஆதிக் இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றதும் கருத்தில் பதியாமல் போய்விட்டது.

எப்போதையும் போல் நிமிர்ந்த வேக நடையுடன் உள்ளே சென்றவனின் அறை வாயிலில் ஒரு புறம் கலெக்ட்டரும் மறுபுறம் அமைச்சரும் அமர்ந்திருக்க, இருவரையும் கவனியாதது போல் விறுவிறுவென உள்ளே சென்றவன்..சிறிது நிமிடங்களில் ராஜை கூப்பிட்டு கலெக்டரை அழைத்து வரச் சொன்னான்.

ஆதிக்கின் அறைக்குள் நுழைந்த வரை வாயெல்லாம் பல்லாய், “வாங்க கலெக்ட்டர் சார்..” என்றவன் இருக்கையை காண்பித்து அமரச் சொல்ல, சட்டமாய் அமர்ந்திருந்தவரின் பார்வையில் இவ்வளவு நேரம் காத்திருந்த எரிச்சல் மற்றும் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.

“சொல்லுங்க சார்..நான் உங்களுக்கு என்ன செய்யனும்..?” என்றவனை முறைக்கவும் முடியாமல் பதில் சொல்லவும் முடியாமல் ஒரு நிமிடம் இருந்தவர்..பின்,

“ஆதிக்...திஸ் இஸ் யுவர் லிமிட்..” என்றார் கோபமாய்.

“சபாஷ் கருணா...நான் கூட உங்களுக்கு தைரியம் குறைவு தான்னு தப்பா நினைச்சுட்டேன்..பட் இப்போ புரிஞ்சுகிட்டேன்..”

“ஆதிக்..ஒழுங்கா கடத்தி வைச்சிருக்க என் மகனை என் கிட்ட கொடுத்திருங்க..”

“அய்யோ கருணா..என்னது உங்க பையனை கடத்திட்டாங்களா...போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ணிட்டிங்களா.. இல்லனா சொல்லுங்க வெளில அமைச்சர் உட்கார்ந்திருக்கார் அவர் கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லுறேன்..” என்றவனை முறைத்தவர்

“ஆதிக்..டோன்ட் ப்ளே வித் மி..ஐ வான்ட் மை சன்..”

“கருணா..அல்ரெடி நான் சொன்னது தான்..ஸ்டே ஆர்டர வாப்பஸ் வாங்கிட்டு வாங்க...அதுவரைக்கும் உங்க பையன் பத்திரமா என்கிட்ட இருக்கட்டும்..” பேச்சு முடிந்தது என்பதை போல் கோப்புகளில் தனது பார்வையை பதித்துவிட,

தன் இயலாமையை நினைத்து அங்கே நின்றவரும் பின் விறுவிறுவென வெளியே செல்ல எத்தனித்தவரை சொடக்கிட்டு அழைத்தான் ஆதிக்.

அவனது அழைப்பில் பல்லை கடித்துத் திரும்பி என்னவென்பது போல் பார்க்க,

“கருணா..அன்ட் ஒன் மோர் திங்..நீங்க ராஜ் கிட்ட மன்னிப்பு இன்னும் கேட்கல..” என்றான் சாதாரணமாய்

இவ்வளவு நேரம் நடந்தவற்றை விழி விரிய பார்த்து கொண்டிருந்த ராஜ், இது எதற்கு என்பதை போல் ஆதிக்கை பார்க்க, ஆதிக்கோ மிக மும்முரமாய் கலெக்ட்டரைப் பார்த்து கொண்டிருந்தான்.

“ராஜ்...ஐ அம் சாரி..” கோபத்தில் சிவந்த முகத்துடன் கருணாகரன் மன்னிப்பு கேட்டதற்கு ராஜ் சரியென்பது போல் தலையசைக்க,

“கருணா..அது என்ன ராஜ்…? இவன் என்ன உங்களுக்கு அல்லக்கையா..? பெயர் சொல்லி கூப்பிடுறீங்க..இன்னைக்கு நீங்க மூன்று மணி நேரம் உட்கார்ந்திருந்தது அப்புறம் உங்களது அழைப்பை தட்டிக் கழிச்சது எல்லாமே எதுக்குன்னு உங்களுக்கு புரிஞ்சதா..? இன்னொரு முறை இவனைக் காக்க வைப்பது மரியாதை இல்லாம பேசுவது அப்படி ஏதாச்சும் கேள்வி பட்டேன்..” அமைதியாய் பேசியவன் இறுதியாய்

“வாங்குற சம்பளத்துக்கு வேலைப் பாருங்க..நீங்க எச்சத் தனம் பண்ணி பிச்சை எடுத்ததுக்கு வேலை பார்த்தா இந்த நிலை தான் வரும்..கெட் லாஸ்ட்..” என்றான் கர்ஜனையாய்..

கோபத்தை நொடியில் சமாளித்தவன், தன்னையே பார்த்து கொண்டிருந்த ராஜை அப்போது தான் நிமிர்ந்து என்னவென்பது போல் பார்க்க...அந்நேரத்தில் கதவை திறந்து ஆதிக்கின் பெயரை ஏலம் விட்டு தென்றலாய் நுழைந்தாள் அந்தச் சித்திர பாவை.

***

மாலை நான்கு மணிக்கு வீட்டில் இருந்து சென்ற மதியழகி, மணி 1 ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்றதில் கோபமும் பயமும் சேர்ந்தே தாக்க அமைதியாய் ஹாலில் அமர்ந்திருந்தார் குழலி..

பெண் பற்றிய பயம் சிறிதும் இல்லாமல், தனது அருகில் அமர்ந்த வாக்கிலே சயனிக்கும் கணவனை பிடித்து உலுக்கி எழுப்ப..

“என்ன மா..மதி வந்துட்டாளா..?” என்றவரை முடிந்த மட்டிலும் முறைத்தவர்

“இன்னும் வந்து சேரல…வீட்டுல நாம இருக்கோம்னு கொஞ்சம் கூட பயமோ கவலையோ இல்லாம இப்படி ஊர் சுத்துனா எப்படிங்க..? போன் பண்ணுனா கூட எடுக்கிறது இல்ல..”

“கோபப்படாத மா..இப்போ வந்திடுவா..” என்றவருக்கும் இப்போதெல்லாம் மகளின் மீது வருத்தம் எழுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை..

“உங்க வேலையெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஒத்தி வையுங்க...நாம உடனே நம்ம ஊருக்கு போய் இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்..அப்படியாச்சும் இவளுக்கு பொறுப்பு வருதான்னு பார்க்கலாம்..” என்றவர் பேசி முடிக்கும் முன்பே மகள் வீட்டினுள் நுழைய..

மகள் வந்துவிட்டாள் என்பதில் பயம் நீங்கி கோபம் மட்டுமே மிச்சமாய் குழலி முறைத்திருக்க, நெடுஞ்செழியனுக்கோ மகளின் நடையில் இருந்த தள்ளாட்டத்தில் நெஞ்சம் ஒரு முறை நின்று துடித்தது..

காதல் தொடரும்…
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
super pavi, raj veni ma comedy super..waiting next
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
very nice.. aadhik gethu kaatraan.... :love::love:
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Aadhik super kethu ma.. mathi enna kudichuttu vandhu irukala.. waiting for next ud..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top