• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் நட்பூஸ்...

வந்துட்டேன்னு சொல்லு இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேன்னு சொல்லு....

ஹப்பா ஒருவழியா உங்க மதி ஆதிய கடத்திட்டு வந்துட்டேன்...

ரெண்டு நாளா சொன்ன அதே நன்றிய இன்னைக்கும் சொல்லுறேன்..

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்...

Happy Reading!

இப்படிக்கு,
உங்கள் குயந்த புள்ள
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~30~

அலைபேசியின் மெல்லிய சத்தத்தில் அவனது பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு எடுத்தவளுக்கு, பாஸ்வேர்ட் போடாத அவனது மொபைலை நோண்டுவதற்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை..

மெசேஜ், போன் கால் என ஒவ்வொன்றாய் நோண்டியவளுக்கு சில நிமிடத்திலே அலுப்புத் தட்டிவிட, அவனது கேலரியை ஓப்பன் செய்ததும் முதல் போட்டோவாய் லீனாவுடன் எடுத்த செல்ஃபி வந்து விழுந்தது..

இவனது போனில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் போலும், ஆனால் லீனா எடுத்திருக்க பின்னாடி சிரித்த முகமாய் ஆதிக்கும் அவனுடன் வெள்ளையும் கருப்புமாய் இரண்டு தடியன்களும் நின்றிருந்தனர்.. அடுத்த புகைப்படத்துக்கு தாவியவளுக்கு இதே போல ஒரு குரூப் போட்டோ தென்பட அதிலும் லீனாவே முன் நிற்க அடுத்தடுத்த போட்டோக்கள் பலவற்றில் ராஜ் இருந்தாலும் லீனா இருந்தது மதிக்கு வெறுப்பாய் இருந்தது..

போனை அவனது பக்கத்தில் வைத்தவள், ஆதிக்கை விடாமல் முறைக்க மெசேஜ் வந்ததற்கு அடையாளமாய் அவனது செல் ஒருமுறை மின்னி அணைய, இந்நேரத்தில் யாரென எடுத்து பார்த்தவளுக்கு

“நான் வீட்டுக்கு போய்ட்டேன்..நீங்க நிம்மதியா தூங்குங்க..” என ஆங்கிலத்தில் லீனா அனுப்பிய மெசேஜ் தவறாமல் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது.

அவனது பக்கத்தில் மொபைலைத் தூக்கி எறிந்தவள், “ஓஹ்…அந்த லூசு பேரு லீனாவா...பேர பாரேன் லீனா கோனா’ன்னு..” வாய்க்குள் முணுமுணுத்தவளுக்கு ஆதிக்கை அவள் அணைத்துப் பிடித்திருந்த விதம் நினைவுக்கு வர,

“எப்படி பிடிச்சிட்டு நிக்குறா..? அவளுக்கு தான் சென்ஸ் இல்லனா உனக்கு எங்க போச்சு..?” படுத்திருந்தவனின் பனியனை பிடித்திழுத்து கேட்க, பதில் சொல்லும் நிலையிலா ஆதிக் இருந்தான்..?

“நான் தொட்டா மட்டும் இவனுக்கு கசக்கும் அதுவே அந்த கோனா தொட்டா இனிக்கும்... பார்த்திடுவோம் நானா அந்த கோனாவா’ன்னு..?” கோபத்தில் மூக்கு விடைக்க முணுமுணுத்தவள், லீனாவை என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்க பாதியில் விட்டத் தூக்கம் வந்து கண்ணைக் கட்டியது,

“ச்சை..நமக்கு மட்டும் ஏன் தான் யோசிச்சாலே தூக்கம் வருதோ..” படுத்திருந்த ஆதிக்கை ஒரு பார்வை பார்த்தவள், ‘நானே உன்னைத் தொட்டது இல்ல அவா யாருடா?’ ஆதிக்கின் அருகே வாகாய் படுத்துக் கொண்டு கேள்வி கேட்டு வந்தத் தூக்கத்தை துரத்த மனமில்லாமல் தூக்கிப்போனாள் மதியழகி.

அதிகாலை ஆறு மணிக்கு எப்போதும் போல, வாக்கிங் போகக் கிளம்பிய ராஜ், ஆதிக்கை எழுப்ப அவனது அறைக் கதவைத் தட்ட,

எப்போதையும் போல் கதவுத் தட்டும் ஓசையில் எழுந்தவனுக்கு அவன் மேல் பாதி உடலை சாய்த்து வலது காலை அவனது இடுப்பில் போட்டு வாக்காய் தூக்கிக் கொண்டிருக்கும் மதியின் அழுத்தத்தால் நகர முடியாமல் போனது.

வலது கைக்கு அருகே இருந்த மொபைலை எடுத்தவன், ராஜிற்கு அழைப்பு விடுக்க நினைத்து பின் மதியின் தூக்கம் கெடுமென,

“நீ போ ராஜ்..நான் பின்னாடியே வரேன்..” எனக் குறுசெய்தி அனுப்பியவன் மொபைலைக் கீழே வைத்துவிட்டு மதியைப் பார்க்க..

லேசாக வாயைத் திறந்து, முடி மொத்தமும் கலைந்திருக்க சுகமாய் தூங்கி கொண்டிருந்தாள்.. அவளை உச்சியில் இருந்து பார்வையால் வருடத் தொடங்கியவனுக்கு சிகப்பு நிற டீசர்ட் லேசாக விலகி கோதுமை நிற இடுப்பை எடுத்துக் காட்டியது..

இருப்பத்தி எட்டு வருடத்தில் முதன் முறையாய் உணர்ந்த பெண்ணின் ஸ்பரிசத்தை முழுதாய் உள்வாங்கியவனுக்கு, அவளது மறைவான அங்கம் கொடுத்த கிளர்ச்சியும் அழகான அவஸ்தையாய் இருந்தது..

தறிகெட்டு ஓடும் மனதை அடக்கும் வழி தெரியாமல் இடது கையால் அவளது இடுப்பைப் பிடித்தவனின் மனமோ, “டேய் தூங்குற பொண்ணுகிட்ட இதெல்லாம் தப்பு டா..” என இடிக்க, இதற்கு மேல் முடியாது என உணர்ந்தவன், “மதி எழுந்திரி..” என மாறி மாறி எழுப்ப

அவளோ, “அடிடேய் கோனா..பன்னி..எருமை...உன்னை அடிக்காம விடமாட்டேன்...இந்தா வாரேன்..ஜெசிபி வச்சி உன்னைத் தூக்காம விடமாட்டேன்..” ஒவ்வொரு முறை அவன் எழுப்பும் போதும் விதவிதமாய் லீனாவை அவள் திட்ட, அவனுக்கோ யாரைத் திட்டுகிறாள் எனப் புரியாததாலும், நேற்று அடித்த சரக்கின் வீரியத்தாலும் தலைப்பாரமாய் இருந்தது..

அவளை எழுப்பியதில் தனது சக்தி மொத்தமும் வடிய வலியின் வீரியத்தில் மறுபடியும் நித்திரையில் ஆழ்ந்தான் ஆதிக்..

விடிந்து சில மணி நேரம் சென்று எழுந்த மதிக்கு, எதிலோ மாட்டியிருப்பது போல இறுக்கமாய் இருக்க, ‘ஒருவேள லீனா வந்து நம்மல கட்டி வச்சிட்டு ஆதிக்க தூக்கிட்டு போயிருப்பாளோ’ கனவிலே யோசித்தவள், பயத்தில் ஒற்றை கண்ணை மட்டும் பிரித்து பார்க்க அங்கே மார்புக்கூடு மிதமாய் ஏறி இறங்க இடது கை அவளது இடுப்பை பற்றியிருக்க, வலது கை அவளது தோள்ப்பட்டையை பிடித்திருக்க நித்திரையில் ஆழ்ந்திருந்தான் ஆதிக் வர்மன்..

மெதுவாக அவன் உணராதவாறு இடுப்பில் இருந்து கையை விலக்கியவள், அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க, முன்னெற்றி கேசம் காற்றிலாட தூங்கியிருந்தவனின் நுனி மூக்கை தொட்டு விளையாடியவள்..

“நீ என் அளவுக்கு அழகா இல்லனாலும் ஏதோ கொஞ்சமா அழகா தான் இருக்க..ஆனா முறைக்கும் போது மட்டும் ரொம்ப அசிங்கமா இருக்க…” மறுபடியும் மூக்கு நுனியைத் தொட்டு தொட்டு விளையாட அவளது முதல் தொடுகையிலே விழித்து விட்டவன்..

“ஹேய்..இம்சை எந்திரிச்சு தொலை டி....” என்றதும் விசுக்கென எழுந்தவள் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

தலையைத் தாங்கி தரையில் அமர்ந்தவன், “மதி எனக்கு ஒன் கப் காபி கொண்டு வா ப்ளீஸ்..” அவனது தலைவலியின் காரணம் புரிந்தவள் அவனை முறைத்துக் கொண்டே முடியைச் சரி செய்துவிட்டுக் கீழிறங்கினாள்..

ஹாலில் அமர்ந்திருக்கும் மாமியார் மாமனாரைக் கடந்து கிட்சனுக்குள் புகுந்து, லெமன் ஜூஸ் போட்டு சின்னதாய் ஒரு ப்ளாஸ்க்கில் சமையல் காரப்பெண்மணி போட்டுக் கொடுத்த காபியையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்…

அறையின் கதவைத் தாளிட்டவள், லெமன் ஜூசை எடுத்து அவனிடம் கொடுக்க, “இதை குடிங்க அப்போ தான் இந்த தலைவலி சரியா போகும்..” அவள் சொன்னதும் சரியெனத் தலையசைத்தவன் அதைக் குடித்து முடித்த சில நிமிடங்களில் தலைக்கனத்து மொத்தமும் வாந்தி எடுத்து முடித்தான்..

குளியலறையின் வாயிலில் நின்றவள், “ஆதி, கதவைத் தொற…” எனக் கத்த, குளிர்ந்த நீரை முகத்தில் பாய்ச்சி அடித்தவனுக்கு இப்போது தலைவலி மட்டுப்பட்டிருந்தது..

குளியலறையின் கதவைத் திறந்து வெளியே வந்தவனைக் கலக்கத்துடன் நிற்கும் மதி வரவேற்க, “எதுக்கு இப்போ கத்தி ஊரைக் கூட்டுற..?” முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டே அவன் கேட்க,

“உனக்கு இப்போ பரவாயில்லையா..?”
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
“ம்ம்..தாங்க்ஸ் மதி..இப்போ ஐ அம் ஆல்ரைட்..” என்றவன் ப்ளாஸ்கில் இருந்து காபியை எடுத்து ஊற்ற,

“தாங்க்ஸா அதெல்லாம் நமக்குள்ள எதுக்கு..எனக்கு இப்படியானா நீங்க உதவ மாட்டிங்களா..?” என்றவளை கேள்வியாய் பார்த்தவனுக்கு மதியின் அதிரடி மிரட்டல்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை… அவனது பார்வைக்கு பதிலளிக்காமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க,

அவளது பார்வையை கண்டும் காணாதது போல் இருந்தவன், குளிக்கச் சென்றுவிட்டான்.. ஆதிக் விலகிய அடுத்த கணம் அறையின் வாயிலில் கேட்ட ராஜின் சத்தத்தில் வெளியே வந்த மதியழகியிடம்..

“அண்ணி..அண்ணா எங்க..?”

“குளிக்க போயிருக்காங்க ராஜ்…” என்றவள் ராஜ் வேறெதுவும் சொல்வானா என அவன் முகம் பார்த்து நிற்க, அவனோ “சரி அண்ணி நான் கீழ போறேன்..” என நகரப் போனவனை தடுத்த மதி

“ராஜ், உங்க அண்ணா எப்பவுமே குடிப்பாரா..?” எனத் தயக்கத்துடன் கேட்பவளுக்கு

“அவருக்கு தண்ணீ, தம் பழக்கம் கிடையாது அண்ணி..நேத்து தான் முதல் தடவை..”

“ம்ம்ம்...உங்க அண்ணன் இவ்ளோ குடிக்கிற அளவுக்கு நீங்க எதுக்கு விட்டிங்க ராஜ்..” என்றவளைக் குழப்பத்துடன் பார்த்தவன்,

“இல்லையே அண்ணி..அண்ணா ரெண்டு அவுன்ஸ் தான் குடிச்சாங்க அதுக்கப்புறம் குடிச்சது எல்லாமே கோக் தான்…”

“என்னது கோக்’ஆ..?” அவளது அதிர்ச்சியில் சிரித்தவன்

“ஏன் அண்ணி என்ன ஆச்சு..?”

“ரெண்டே ரெண்டு அவுன்ஸ்க்கு தான் அவ்ளோ அலப்பறையா..?” நம்பமாட்டாமல் கேட்பவளிடம்

“அண்ணாக்கு இது புது பழக்கம் இல்லையா அதான் ஒத்துக்கல போல..உடம்புக்கு ஏதும் ப்ராப்ளம் இல்லையே..?” என்றவனிடம் இல்லையென தலையசைத்தவள்..

“ராஜ்..எதுக்கு உங்க அண்ணா குடிச்சாங்க..?” மெதுவாய் அவள் கேட்க, தோலைக் குலுக்கி தெரியல எனச் செய்கை செய்தவனை அலைபேசி அழைத்துக் கொண்டது..

ராஜ் அங்கிருந்து நகர்ந்த பின் அவளுக்கு லீனாவின் நினைவு வர, சட்டையை மாட்டிக் கொண்டிருந்த ஆதிக்கின் முன்னால் வந்தவள்,

“ஆதிக்..உன்னை நான் எதுக்கு தொடக் கூடாது..?” என்க

இரவு முழுவதும் தன் மேல் உறங்கிவிட்டு, இப்போது இக்கேள்வி கேட்கும் அவளை முறைத்தவன், “எதுக்கு கேட்குற..?” என்றான்

“உனக்கு நான் தொட்டா மட்டும் பிடிக்காது அவா தொட்டா பிடிக்குமா..?”

“என்ன உளறுத..? போய் குளிச்சிட்டு சாப்பிடு..” என்றவன் சிதறி கிடந்த வாட்சையும், பர்ஸையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்..

‘என்னது நான் உளருதேனா..?’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டு கட்டிலில் ஏறி அமர்ந்தவளை, வேணி அழைப்பதாய் வேலைக்கார பெண் வந்து அழைக்க

“வருகிறேன்..” என்றவள் உடைமாற்றிக் கொண்டு வேணியைக் காண விரைந்தாள்..

தொலைக்காட்சி பெட்டியின் முன் வேணி அமர்ந்திருக்க, ரேகா உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள்..

“குட் மார்னிங் ரேக்ஸ்..” என்றவள்

“குட் மார்னிங் அத்தை..” விடிந்து பல மணி நேரம் கழித்து காலை வணக்கம் சொல்லும் மருமகளை முறைத்தவர்,

“இது தான் எழுந்து வரும் நேரமா..?” அதிகாரமாய் கேட்டவரைப் புரியாமல் மதி பார்க்க..

“மதி, தினமும் ஆறு மணிக்கு முன்ன எந்திரிச்சு குளிச்சு ஆறு மணிக்கெல்லாம் விளக்கேத்தனும் புரிஞ்சுதா..? ஆதி ஆறு மணிக்கு ஜாக்கிங் எல்லாம் போயிட்டு எட்டு மணிக்கு வருவான்..அவனுக்கும் ராஜுக்கும் சத்துமாவு கஞ்சி கொடுக்கனும்..அப்புறம் சமையல் கார அம்மாகிட்ட மெனு சொல்லி அவங்க சரியா வேலை பார்க்காங்களான்னு பாரு..புரிஞ்சுதா..?” அக்மார்க் மாமியாராய் வேணி மிரட்ட

அமெரிக்காவில் சுமதி மற்றும் அன்னைச் செய்யும் வேலைகளைக் கவனித்தவளுக்கு தானும் இதேப் போல வேலை செய்ய வேண்டும் என எண்ணம் இருந்ததால், வேணி சொன்ன அனைத்திற்கும் தலையாட்டி வைக்க, அவளது பவ்யத்தில் ரேகாவே வாயடைத்து நின்றுவிட்டாள்..

“எல்லாம் ஓகே அத்தை..ஆனா அந்த மிட்நைட் ஆறு மணிக்கு மட்டும்…?” அவளின் இழுவையில் ரேகா சிரித்துவிட,

மதிக்கு கொஞ்சமும் சலிக்காத வேணி, “வாசல் தெளிச்சு கோலமும் போட்டிரு..” என்றவர் பேச்சு முடிந்தது என்பது போல டிவியின் ஆழ்ந்து விட்டார்..

உதட்டை பிதுக்கி பாவம் போல நின்ற மதியிடம், “இங்க எதுக்கு இப்போ மசமசன்னு நிக்கிற மதி..போய் சாப்பிடு..” என வேணி அதட்ட

ஒற்றைக் காலை தரையில் உதைத்து, “ஹி ஹி இந்தா போறேன் அத்தை போறேன்..” என்றவள் சமையல் அறைப் பக்கம் நகர்ந்ததும்

“அத்தை பாவம் அவங்கள எதுக்கு அதட்டுறீங்க..?” என ரேகா வேணியிடம் கேட்க

“ரேகா...அவளுக்கு நம்ம வீடு நம்ம குடும்பம்னு நினைப்பு வரணும்..அவளை அவள் இஷ்டத்துக்கு விட்டா வீடு லாட்ஜ் மாதிரி தான் அவளுக்கு இருக்கும்…போகப் போக புரியும்…” என்றவர் மதி என்னச் செய்கிறாள்? என்பதைப் பார்க்க அவளது பின்னோடு சென்றார்.

அலுவலகத்திற்கு வந்த ஆதிக், ராஜிடம் இன்றைய வேலைகளைக் கேட்டு தெரிந்து கொண்டு வேலையில் மூழ்க, சிறிது நேரத்தில் அறையின் கதவைத் தட்டிவிட்டு அறைக்குள் பிரவேசித்தாள் லீனா..

நிமிர்ந்து யாரெனப் பார்த்தவன், “சொல்லுங்க மிஸ்.லீனா..” வார்த்தை அவளிடமும் பார்வை கணினியிலுமாய் இருக்க

“சார்...ஹவ் ஆர் யூ நவ்..?”என்றவளை புரியாமல் ஏறிட்டான் ஆதிக்..

“பர்டன்..”

“இல்ல சார்..நேத்து நான் தான் உங்களை வீட்டுல விட்டேன்..” என்றதும் நிதானமாய் பார்த்தவனுக்கு காலையில் மதி கேட்ட கேள்வி நினைவுக்கு வர

“நீங்க எதுக்கு என்னை ட்ராப் பண்ணனும்..? நான் உங்க கிட்ட கேட்டனா..?” என்றான் கணினியில் ஏதோ டைப் செய்தபடி…

“இல்ல சார்..நீங்க அங்கேயே மயங்கிட்டிங்க அதான்..”

“யார் மயங்குனாலும் இப்படி தான் வீட்டுல ட்ராப் பண்ணுவீங்களா…?” கேள்வியைக் கேட்டவன் மொபைலின் மெசேஜ் டோனில் அதில் பார்வையைப் பதிக்க, லீனாவிடம் இருந்து வந்த மெசேஜையும் அப்போது தான் பார்த்தான்..

அவளிடம் வந்திருந்த மெசேஜ் வாசிக்கப்பட்டதில் இருந்து மதி படித்திருக்கிறாள் எனத் தெரிந்து கொண்டவன்..

“சொல்லுங்க மிஸ். லீனா..” என்க

“இல்ல சார் அதுவந்து…?”

“லிஸன் மிஸ். லீனா..உங்க வேலை எதுவோ இனி அதை மட்டும் பாருங்க..இந்தக் கரிசனம் உதவியெல்லாம் வேற யாருக்காச்சும் பண்ணுங்க..காட் இட்..” என்றவன் வாயிலை நோக்கி கை காண்பித்துபின், “ஒன் மினிட்..” என்றவனின் குரலில் நின்று திரும்பி பார்த்தவளிடம்

“மிஸ். லீனா..தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்..உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா ராஜ் மூலமா சொல்லுங்க..” என்னிடம் நேரடியாக வரும் வேலையை இனி வைத்து கொள்ளாதே என மறைமுகமாகச் சொன்னவன் வேலையில் மூழ்கிவிட்டான்..

ஆதிக்கின் அறைக்கு வேலை நின்று போன் பேசிக் கொண்டிருந்த ராஜிக்கு, லீனா ஆதிக்கின் அறையில் இருந்து வருவது தெரிய,

“என்ன அண்ணா..? இது என்ன புதுசா இருக்கு..?” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே ஆதிக்கின் அறைக்குள் நுழைந்தான் கோபத்தோடு..

ஆதி வருவான்…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top