• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 36 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
ஹாய் கேடிஸ்...

நான் ஓடி வந்துட்டேன்..சாரி மக்காஸ் காலையில் இருந்து கொஞ்சம் வேலைகள்...அதான் இன்னைக்கு தாமதம் ஆகிட்டு..

படிச்சிட்டு வாங்க..இன்னும் ஒரே ஒரு அத்தியாயமே பாக்கி..அதுவும் epilogue தான்..இதைப் படித்து உங்களது விருப்பத்தை பொறுத்தே epilogue வைக்கவா வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும் டார்ஜிலிங்ஸ்...

அப்புறம் இதுநாள் வரையிலும் கருத்து தெரிவித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் ரொம்ப ரொம்பபபபப நன்றி மக்காஸ்..

இடையில் வந்த தாமதித்தில் இருந்து அனைத்து தடங்களுக்கும் உங்கள் வீட்டு குழந்தையாய் நினைத்து மன்னிக்கவும்...

என்னால் முடிந்த அளவிற்கு ஆதிக்கையும் மதியையும் உங்களுடன் பயணிக்க வைத்திருக்கிறேன்...உங்களுக்கு பிடித்திருந்தால் மகிழ்ச்சி..ஏதேனும் குறையிருந்தால் சொல்லவும் அடுத்தடுத்த எனது கதையில் திருத்திக் கொள்ள உதவியாய் இருக்கும் மக்களே...

வாழ்க்கையில் அனைத்தையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டையிட்டு வஞ்சம் தீர்த்து காதல் செய்வதால் எப்பயனும் இல்லை..தவறிழைக்காதவன் மனிதனே இல்லை...தவறின் வீரியம் குறைவு எனும் போது அதை மன்னிக்க பழகிக் கொண்டால் இல்வாழ்வு என்றுமே இனிமை தான்...இதை அடித்தளமாய் வைத்து மட்டுமே இந்தக் கதையை கொண்டு சென்றுள்ளேன்... என்னையறியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் மறக்காமல் சுட்டிக் காட்டுங்கள்..

epilogue வேண்டுமா வேண்டாமா எனச் சொல்லுங்கள்..

நன்றி மக்காஸ்..

இப்படிக்கு
உங்கள் குயந்தபுள்ள..

ஒவ்வொருத்தருக்குமான நன்றி மடல் தனியே வந்து சொல்கிறேன்...
 




Last edited:

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
~36~

ஹோட்டலில் இருந்து ஆதிக் காரைக் கிளப்பிய அடுத்த கணமே பேய் மழை பிடித்துக் கொண்டது…அதுவேறு காரைச் செலுத்த சிரமத்தைக் கொடுக்க, பக்கத்தில் இருந்த மதி நொடிக்கொரு தரம் கத்தியும் புலம்பியும் தனது தூக்கத்தை தொடர்ந்தாள்..

வீட்டின் வாயிலில் காரை ஒதுக்கியவன், மறுபக்கம் வந்து மதியைத் தட்டியெழுப்ப, “தூக்கம் வருது..” என்றாளே தவிர எழவில்லை… காரைவிட்டு கைதாங்கலாய் இறக்கியவன், தன்னிடம் இருந்த மாற்று சாவிக் கொண்டு வீட்டைத் திறக்க, “இது யார் வீடு ஆதிக்..?” எனச் சத்தமாய் கேட்டு அவனைத் திடுக்கிட வைத்தாள் மதியழகி..

அவளின் வாயில் கைவைத்து, அமைதியாய் இருக்குமாறு செய்கை செய்தவன் அவளின் தோள்மீது கைபோட்டு உள்ளே அழைத்துச் செல்ல, அவனைப் போலவே வாயில் கை வைத்தவள், “எங்க போறோம் ஆதிக்..?” என்றாள் கிசுகிசுக்கும் குரலில்..

அவளது கேள்விக்கு பதிலளிக்காதவன், அறைக்குள் வந்து அவளை தள்ளியப்பின், “போய் குளிச்சிட்டு வா மதி..” என்க

“இல்ல..எனக்கு ஃபீவர் நான் நாளைக்குக் குளிக்கிறேன்..” என்றவள் கட்டிலில் படுத்துவிட்டாள்..

“இதுல மட்டும் தெளிவா இருக்கா..” இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தவன், அவளை இழுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்..

வெளியே பெய்த கனமழை சாரல் மழையாய் பால்கனியில் விழ, உள்ளே ஓடத் திரும்பிய மதியைக் கட்டாயப்படுத்தி அவளுடன் மழையில் நனையத் தொடங்கினான் ஆதிக்…

அரை மணி நேரமாய் தண்ணீரில் நனைந்தவளுக்குப் போதையின் தாக்கம் குறைய, அவளைப் பின்னோடு அணைத்து நின்றிருந்தவனுக்கு அவள் வேண்டும் என்ற தாகம் உச்சத்தில் இருந்தது… மேலும் கால் மணி நேரத்தை அங்கேயே செலவிட்டவர்களில், ஆதிக்கின் அழுத்தமான ஸ்பரிசத்தில் மதி வாயை கப்சிப்பென மூடிக் கொண்டு கண்கள் மூடி நிற்க, ஆதிக்கோ அவளது அங்கங்களின் வனப்பை கைகளால் உணர முயன்று கொண்டிருந்தான்..

ஆதியின் கரங்கள் அவளது இடையைத் தாண்டும் போது, இரு போதையில் இருந்தும் முற்றும் தெளிந்தவள் அவனது கைகளை தடுத்து அவன் முகம் பார்க்கத் திரும்பி நிற்க, அவளது விழிகளைக் கேள்வியாய் பார்த்தவன் அச்சமயம் தனது உணர்வுகளுக்கு கடிவாளமிட்டு அவளுடன் அறைக்குத் திரும்பினான்…

அரைகுறையாக ஆதிக் நனைந்திருக்க, ஈரம் சொட்ட சொட்ட நனைந்திருந்தாள் மதியழகி..

அவளது கைகளில் ஒரு பூத்துவாலையை திணித்தவன், அவளை அங்கிருக்கும் மர இருக்கை ஒன்றில் அமரச் சொல்ல,

“இரு ஆதிக்...ட்ரெஸ் மாத்திட்டு வரேன்..” என எழப் போனவளைக் கை நீட்டித் தடுத்தவன்,

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..அப்புறமா போ..” என்றவனது குரலில் கோபத்தில் நெடி கொஞ்சம் இருந்தது..

ஆதிக்கின் மனதில் அவள் மீது வருத்தமிருந்தாலும், சில நொடிகளுக்கு முன்பு வரை அவள் கொடுத்த இதமே வேண்டும் என மனம் ஏங்க..அவனால் கோபத்தைக் கூட முழுமையாய் காட்ட முடியவில்லை..

“ம்..சொல்லுங்க…” என்றவள் அவனது முகம் பார்க்காமல் தரை பார்க்க,

“ஏய் என் முகத்தை பாரு டி..” என்றவனுக்கு அவளது தலை குனிவைப் பார்க்க கஷ்டமாய் தான் இருந்தது..

அவனது பேச்சில் நிமிர்ந்து அவனது விழி பார்த்தவள், “ஆதிக், இதுவரை நான் பண்ணுன எந்த விஷயத்துக்கும் யார் கிட்டயும் சாரி கேட்டு நின்னது இல்ல...ஆனா உன்கிட்ட சாரி தவிர வேற எதையுமே என்னால கேட்க முடியலை...இப்பவும் என்னால உனக்கு கஷ்டம் தான்..” என்றவளின் கண்கள் லேசாய் சிவந்திருந்தது…

அவளது வார்த்தைகளை உன்னிப்பாய் கவனித்தவன், “மதி..உனக்கு என்னைப் பிடிக்குமா..?” எனக் கேட்க, அவனது கேள்விக்கு அவளது விழி ஆமென பதிலளித்தாலும்,

“உனக்கு என்னைப் பிடிக்குமா..?” என்ற எதிர் கேள்வியைக் கேட்டு இதழ் சண்டித்தனம் செய்தது..

“ம்ம்...பிடிக்கும்..எல்லோரையும் பிடிக்கும்…” என்றவனிடம்

“எல்லோரும் நானும் ஒண்ணா..?” அவளது கேள்விக்கு மறுப்பாய் தலையசைத்தவன்,

“டூ யூ லவ் மீ மதியழகி..?” என நேரடியாய் கேட்க

அவனது நேரடிக் கேள்வியை எதிர்பாரதவள் ஆமென்றும் ஆமோதிக்காமல் இல்லை என்றும் அவனைச் சோதிக்காமல், “டூ யூ லவ் மீ ஆதிக் வர்மன்..?” என எதிர்கேள்வி கேட்டு அவனது விழியைத் தீர்க்கமாய் பார்த்திருந்தாள்..

அவளது கேள்விக்கு சற்றும் தாமதியாமல் அவளை அருகே இழுத்து அவள் என்னவென உணரும் முன் இதழைச் சுவைத்தவன், அவள் அதை அனுபவிக்கும் முன் விடுத்து, “பொண்டாட்டியை எவனாச்சும் லவ் பண்ணாம இருப்பானா..?” எனக் கேள்வி கேட்டவனுக்கு அவள் திருதிருத்து நின்றது சிரிப்பாய் இருந்தது..

அவளது கன்னம் தட்டி அதிர்ச்சியில் இருந்து மீட்டவன், “ஹேய் அழகி..என்ன டி..?” என்க

ஆவென வாய்பிளந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள், “உண்மையாவா…?” என்று கேட்க

“மதி, எஸ் ஐ அம் இன் லவ் வித் யூ..உன்னைப் பார்த்த அப்போவே எனக்குப் பிடிக்கும்...பட் எனக்கு இதெல்லாம் எப்படி எக்ஸ்போஸ் பண்ணனும்னு தெரியல...எனக்கு லேடீஸ் ப்ரெண்ட்ஸ் கம்மி..லவ்’னாலே பிடிக்காது...”

“இப்பவுமா..?” அவனை இடைபுகுந்தவள் கேட்டு வைக்க

“இப்போ உன்னைப் பிடிக்கும் அதனால லவ்வையும் பிடிக்கும்…” என்றவன் இப்போது அந்த மர இருக்கையில் அமர்ந்து அவளை மடியில் அமர்த்தியிருந்தான்…

“மதி..எனக்கு எப்படி சொல்லனும்னு தெரில சோ எனக்குத் தெரிஞ்ச மாதிரி சொல்லிட்டேன்..இனி நீங்க சொல்லனும் இந்தப் பையன் உங்களுக்கு ஓகேவானு…” இடையில் விரலால் கோலமிட்டுக் கொண்டே கேட்கும் ஆதிக்கை செல்லமாய் முறைத்தவள், கோலமிட்டுக் கொண்டிருந்த ஆதியின் கரங்களுக்கு சப்பென ஓரடி வைக்க

“ஷ் ஆ...எதுக்கு டி அடிக்குற..” என்றவனின் கைபிடித்து ஒவ்வொரு விரலாய் வருடியவள்

“ஆதிக் என்மேல உனக்குக் கோபம் இல்லையா..?” அவளது கேள்விக்கு ஆழமூச்செடுத்துவிட்டவன்..

“மதி..எனக்கு உன்மேல கோபம் இருந்தது உண்மை...என்னவிட்டு போனது, நான் கட்டுன தாலிய கழத்தி வச்சது எல்லாமே...ஒரு போன் கூட நீ பண்ணல மதி...ரொம்ப கோபத்துல தான் அன்னைக்கு உன்னை பிக்அப் பண்ண வந்தேன்…”

“ஆனா கோபப்பட்டு சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா நீ பண்ணுன தப்பும் நான் இழந்த நாட்களும் திரும்ப வந்துடுமா...இப்பவும் என்னைத் தேடி நீயா தான வந்த…?” என்றவனின் கை வருடல்களை நிறுத்தியவள்

“நீ ஏன் என்னைத் தேடி வரல..?” என்றவளின் கேள்விக்கு

“யார் சொன்னா நான் வரலன்னு..?” அவனது எதிர்க் கேள்வியில் வியப்பாய் அவனது முகம் பார்த்தவள்

“அப்போ நீ வந்தியா..?” என ஆர்வமாய் கேட்க

“ம்..” என அமோதிப்பாய் தலையசைத்தவன்

“மூணு தடவை உன்னைப் பார்க்க வந்தேன்..ஆனா உன்கிட்ட பேசல..” என்றவனிடம் ஏன் என புருவம் உயர்த்தி அவள் கேட்க

“மதி..நீயா என்னைவிட்டு போன...சோ என்னோட வாழ நீயா தான் வரணும்னு எனக்குள்ள ஒரு எண்ணம் அவ்ளோ தான்...அப்புறம் உன் பார்வை பேச்சு எல்லாம் வச்சும் கொஞ்சம் புரிஞ்சது உனக்கு தாலிய பத்தி தெரிஞ்சா நீ கழத்திருக்க மாட்டன்னு..எனக்கும் உன்னைத் தாலி இல்லாம பார்க்க என்னவோ மாதிரி இருந்தது..” என்றவனின் கரம் மெல்லமாய் அவள் கழுத்தை வருடியது..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
அதில் கூசி சிலிர்த்தவள், “சாரி..” எனக் கண்கள் மூடிக் கேட்க

குனிந்து அவளது இமைக்கு முத்தமிட்டவன், “போதும் சாரி..கோபம் ஈகோ இருக்க வேண்டியது தான்..ஆனா நம்ம வாழ்க்கைய வீணாக்குற கோபம் ஈகோ தேவையில்ல மதி...சரி அதெல்லாம் விடு..டூ யூ லவ் மீ ஆர் நாட்..?” என்றவனின் கண்கள் சிரித்து இதழ் அவளது விரல்களை வருடிக் கொண்டிருந்தது..

அதில் கிளர்ந்தவள், தலையசைக்க, “வாயைத் திறந்து சொல்லு டி..” என்றவனைவிட்டு எழுந்தவள், அவன் முன் மண்டியிட்டு

“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ஆதிக்...எங்க அப்பா அம்மாவிட நீ என்னை நல்லா சமாளிப்பே அப்புறம் என்னைப் பார்த்துக்குவன்னு நம்பிக்கையிருக்கு...என் அம்மா அப்பா என்னை வச்சிக்க முடியாததால உன்கிட்ட கொடுக்கல உன்னால மட்டும் தான் சமாளிக்க முடியும்னு கொடுத்திருக்காங்க..நீ சொன்ன மாதிரி என் ஈகோ எல்லாம் விட்டு சொல்றேன் ஆதிக், ஐ அம் இன் லவ் வித் யூ மேட்லி..” என்றவள் வியப்பாய் நோக்கும் அவனது பார்வையைப் பொருட்படுத்தாமல் கன்னம் தீண்டி இதழில் முத்தம் பதித்திருந்தாள்…

அவளது மெல்லிய இதழொற்றலைத் தடுத்தவன் வன்மையாய் மாற்றிக் கொண்டேயிருக்க, ஒருக் கட்டத்தில் மூச்சு வாங்கப் பிரிந்த மதியழகியை தூக்கியவன் கட்டிலை நோக்கித் தனது நடையை எட்டிப் போட்டிருந்தான்..

அவனது கழுத்தில் கரம் கோர்த்து மாலையிட்டவள், “ஆதிக் ட்ரெஸ் ஈரமா இருக்கு..” என்றவளின் ஹஸ்கி வாய்சில் நடையை நிறுத்தியவன் கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்து

“ஆமா ஈரமா இருக்குல்ல…?” என்றக் கேள்வியுடன் விடிவிளக்கைப் போட்டு, மற்ற விளக்குகளை அணைக்க அவனது கள்ளத்தனம் அறியாதவளும்

“ஆமா ஆதிக்…” என அவனுக்கு ஒத்து ஊத

அறை பாதி இருளில் மங்கிய மறு நொடியே அவளது ஆடைக் கலைந்து நெருக்கமாகியிருந்தான் ஆதிக் வர்மன்..

அவனது செய்கையின் குலைந்தவள், வாய்மொழியாய் அவனைத் தடுக்க முயல, அவளது இதழ் சுவைத்து மறுப்புகளை பொய்யாக்கியவனைக் கட்டிலில் தள்ளியவள், அங்கிருந்த போர்வைக்குள் புகுந்திருந்தாள்..

அவளுடன் அப்போர்வைக்குள் முன்னேறியவன் காமன் கோட்டையில் ஒவ்வொரு பாடமாய் அவளுக்கு சொல்லிக் கொடுக்க முயல அவனுடன் இணைந்து கற்றவளின் மென்மை கொஞ்சமும் நோகாமல் கையாண்டவனுக்கு இன்னும் இன்னும் அவள் வேண்டுமென்ற தேவை மட்டும் நீண்டு கொண்டேயிருந்தது..

அவன் அயர்ந்து விலகும் நேரம் அவள் பாடத்தை தொடங்கி வைக்க, அவள் விலகும் சமயம் அவன் அவளுள் மூழ்கி அவளையும் மூழ்க வைத்திருந்தான்…

ஒவ்வொரு தொடுகைகளுக்கும் அவளது மறுப்புகளுக்கும் உச்சங்களுக்கும் இடையில் அழகியென கொஞ்சி கெஞ்சி தடைகளை உடைத்தெறிந்தவனின் முத்தங்கள் மட்டும் நாபியின் அருகேயிருந்த மச்சத்துக்குச் சொந்தமாகியது..

தொட்டபின் விட்டுவிட முடியாத ஆழி சுழலில் சிக்கிய இருவருக்குமே மீளவும் தெரியாமல், மீண்டு வரவும் பிடிக்காமல் தான் போனது...இருவருமே ஒரு கட்டத்தில் அயர்ந்து விலக, அவனது கைச்சிறைக்குள் அடைக்கலம் புகுந்தவளுக்கு நாணமென்னும் அணிகலன் அழகாய் அவளிடம் தஞ்சமடைந்திருந்தது..

அவளது தலைமுடிக் கோதி நெற்றியில் இதழ் பதித்து, “அழகி..” எனக் கிறக்கமாய் அழைக்க, அவனது மொழியின் வழியே தேவையறிந்தவள் அவனது மார்போடு புதைத்திருந்த முகத்தை அசைக்க அவளது செய்கையில் கிளந்தவன் அடுத்தப் பாடத்தை தொடங்கியிருந்தான்…

எப்போதும் அதிகாலையில் கதவைத் தட்டும் வேணியின் குரல் எங்கோ ஒரு மூலையில் கேட்க, அதில் விழித்த ஆதிக் மதியின் தூக்கத்தை தொடரவிட்டு, கதவைத் திறக்க அங்கே நின்ற வேணியின் முகம் பார்க்க அவனுக்கு வெட்கமாய் இருந்தது..

பெண்களின் வெட்கம் அழகு என்றால், ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் பேரழகு தானே..மகனது முகத்தில் எரிந்த பல்பைக் கண்டே அவனது மனம் புரிந்து கொண்டவர், வேறெதுவும் கேள்வி கேளாமல்,

“நீ போய் தூங்கு டா..” என்று மட்டும் சொல்லிச் சென்றுவிட்டார்…

அன்னைப் போனபின் ராஜ் அலைபேசியில் அழைப்புவிடுக்க, அப்போது மணியைப் பார்த்தவன், ராஜின் அழைப்பைத் துண்டித்து தலை கோதி அன்னையின் அறைக்குச் சென்றான்..

தாயிடமும் தந்தையிடமும் முறையாய் மதியை ஊட்டி அழைத்துச் செல்வதைச் சொன்னவன், அவர்களிடம் அனுமதி கேட்க, தோள் மேல் வளர்ந்து தொழிலதிபன் ஆன பின்பும் தங்களிடம் அனுமதி கேட்கும் பிள்ளையின் குணத்தில் நிறைந்தவர்கள் சந்தோஷமாய் சம்மதித்தனர்..

அவர்களைத் தொடர்ந்த ரேகாவின் கிண்டல்களைக் காதில் வாங்காதது போல் அவ்விடம்விட்டு அகன்று மதியை எழுப்பினான்…

“மதி..மதி..” என அழைத்தவனின் அழைப்பில் அவனது முகம் பார்க்க வெட்கியவள் தூங்குவது போல நடிக்க,

அவளது நடிப்பை அறிந்தவன்,”ஹே குடிகாரி எந்திரி டி..” என்றான் அவளுக்கு முன் அமர்ந்து..

அவனது அழைப்பில் சண்டைக் கோழியாய் சிலிர்த்தவள், “ஆதிக்...வேணாம்..” என ஒற்றைவிரல் நீட்டி எச்சரிக்க, அவளது விரல் மடக்கியவன்

“நைட்லாம் மாமா மாமான்னு உருகிட்டு இப்போ ஆதிக்கா..” சினம் போலும் கேட்டவனின் வார்த்தையில் வெட்கம் கொண்டவள்..

“ச்சீஈ...வாயை மூடு..” என்க

“என்ன டி ச்சீ..ஒழுங்கா சர்ட்டகொடு..” என்றவன் அவள் அணிந்திருந்த அவனது சட்டையின் காலரைத் தன்னோக்கி பிடித்திழுத்தான்..

அவனது செய்கையைத் தடுத்தவள் கொஞ்சம் பின் சென்று, “எதுக்கு எழுப்புனீங்க மாமா..?” என்று கேட்டு வைக்க

“யம்மா...தாயே நீ ஆதிக்னே கூப்பிடு..மாமா கூப்பிட்டு வந்த வேலையை மறக்க வைக்காத..” என்றவன் அவளைக் குளித்து கிளம்ப வைத்து கீழே இறங்கும் போது நண்பகலைத் தொட்டது..

தன்னைப் பார்த்து சிரிக்கும் வேணியையும் ரேகாவையும் கண்டு வெட்கம் கொண்டவள், ஆதியினோடே ஒன்றி நடக்க,

“ஆதிக் நீ போய் காரை ரிவர்ஸ் எடு..மதி வருவா..” என்ற வேணி, மதியை பிடித்து வைத்துக் கொண்டார்..

ஆதி அவ்விடம் விட்டு அகன்றதும், மதியின் கன்னம் தடவி திருஷ்டி கழித்தவர், அவளது அன்னைக்கு அழைப்பு விடுத்துக் கொடுக்க, வேணியின் மனம் கண்டு சிலாகித்துப் போனாள் மதியழகி..

குழலியிடம் தாங்கள் தேனிலவு போவதைச் சொல்லி வைக்க, குழலிக்கும் செழியனுக்கும் மனம் நிறைந்தது..

ரேகாவின் கேலிகளில் கன்னம் சிவந்தவள்..தூரமாய் நின்ற ராஜை சத்தமாய் அழைத்து, “ராஜ்..நீ ரேகாவை ஒழுங்காவே கவனிக்க மாட்டியாமே அப்படியா..” எனக் கேட்க, அதில் ரேகாவின் அருகே அவன் வந்து அவளிடம் என்னவென விசாரித்தான்…

ரேகா வாயை மூடியதும், சிரித்த முகமாய் நின்ற வேணியிடம் திரும்பியவள், “நல்லா சாப்பிட்டு ரெடியா இருங்க அத்தை...உங்களுக்கு அடுத்தடுத்த வேலையிருக்கு..” எனக் கண்ணைச் சிமிட்டி சொல்ல, அதில் திருப்தியானவர்

“உன்னையே சமாளிச்சிட்டோம் உன் பிள்ளைய சமாளிக்க மாட்டோமா..?” என்று விழி மலர்த்தி கேட்க

“என்னை மாதிரி ஒரு பிள்ளைனா சமாளிக்கலாம்..ஒரே நேரத்துல என்னை மாதிரி ரெண்டு புள்ள வந்துட்டா என்ன பண்ணுவீங்க..?”எனக் குறும்பாய் கேட்டவள் ஆதிக்கை நோக்கி வேகமெடுக்க, அவளது ஓட்டத்தில் சிரித்தனர் வேணியும் தர்மரும்…

காரில் அவளுக்காய் காத்திருந்த ஆதிக்கு அவள் ஒவ்வொரு முறை ஓடிவரும் போதும், தவறாமல் அவர்களது முதல் நாள் சந்திப்பு நினைவுக்கு வந்து மென்னகையை அவனது இதழில் இருத்திச் சென்றது..

குறுநகையும் குறுகுறு பார்வையுமாய் தன்னைப் பார்க்கும் ஆதியைக் கண்ணடித்து கலைத்தவள், “மாமா..ஐ வான்னா கிஸ் யூ..” என்று கேட்டு அவன் முகம் பார்க்க,

சம்சாரம் அது மின்சாரம் என அறிந்தவனின் கரத்தில் கார் வேகமெடுத்தது..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top