• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Ko(Ve)llum Vennilavei - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இந்த அத்தியாயம் எப்படி இருக்கிறது மக்களே..?

  • அருமை

    Votes: 43 86.0%
  • நன்று

    Votes: 7 14.0%
  • மோசம்

    Votes: 0 0.0%

  • Total voters
    50

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
~6~

கணவனும் மகளுமாய் சண்டைப் போட்டுக் கொண்டு தன்னை முறைத்துப் போகிறார்களே என்ற கடுப்பில் வாசலைப் பார்த்து முணுமுணுக்கும் போதே போன வேகத்தில் திரும்பி வந்த செழியன்..

“என்னடி முணுமுணுக்கிற..?” என்றார்.

“ம்க்கும்...முணுமுணுத்துட்டாலும்..ஆமா ரெண்டு பேரும் என்ன பேசுனீங்க..?” என்றாள் தனது காரியத்தில் கண்ணாய்.

“அது உனக்கு எதுக்கு..? இன்னும் மூணு நாளுல நாம இந்தியா போறோம்..டிரெஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி வை..” என்றவரை விழி விரியப் பார்த்தவருக்கு உப்புமா தொண்டையில் சிக்கிக் கொள்ள, தலையைத் தட்டி தண்ணீர் புகட்டும் கணவனை நம்பாத பார்வை பார்த்தவர்.

“உண்மையாவாங்க..? எப்படி மதி இதுக்கு சரி சொன்னா..?” பதினெட்டு வருடமாய் சம்பளத்தின் பின்னே ஓடியவர், இங்கிருந்து இந்தியா பக்கமே வரமாட்டேன் எனச் சொல்லிய மகள் எல்லாம் திடீரென்று மாறுவதை நம்புவது சிரமம் தானே,

“உண்மையா தான்..மதி நம்ம கூட வருவான்னு நான் சொன்னேனா..நாம் ரெண்டு பேரும் தான் போறோம்..அவ தனியா வருவா..”

“மதிய தனியா விட்டுட்டு நாம எப்படிங்க போக முடியும்..முதல்ல பொண்ணு இல்லாம யாருக்கு மாப்பிள்ளை பார்க்க போறீங்க..” குழலியின் கத்தலுக்கு லேசாகத் தலையசைத்த செழியன்.

“நாம போய் மாப்பிள்ளை பார்க்கலாம்..மதி இந்தியா வருவா..”

“இது விளையாட்டு காரியம்னு நினைச்சிங்களா..?உங்க பொண்ண பத்தி தெரிந்தும் எதுக்கு இந்த விசப் பரீட்சை..இவள நம்பி நாம மாப்பிள்ளை பார்க்கிறதும் மண் குதிரைய நம்பி ஆத்துல இறங்குறதும் ஒண்ணு தான்..” மனைவியின் சொல்வதும் உண்மை தானே என மனம் முரண்டினாலும்.

“அவள பத்தி எனக்குத் தெரியும்..நீ உன் வாய மூடிக்கிட்டு எல்லாத்தையும் எடுத்து வை..அப்படியே நம்ம வீட்டு வேலை செய்யுற அந்த மேரியை மதி கூட வீட்டுலயே தங்கச் சொல்லு..” இது தான் முடிவு என்பதைப் போல் பேசிய செழியன், தனது கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தவர் அலுவலகத்திற்கு விரைந்துவிட்டார்.

கணவன் அலுவலகம் கிளம்பி போனது கூடத் தெரியாமல் அமர்ந்தவருக்கு, “மகள் என்ன செய்யப் போகிறாளோ..?” என்ற பயம் பிடித்துக் கொண்டது.

காரில் சென்று கொண்டிருந்த மதிக்கும், தந்தையுடன் நடந்த விவாதமே கண் முன்னே வந்து நின்றது..

குழலியிடம் எதிர்த்துப் பேசும் மதியை கண்டனத்துடன் பார்த்தவர், “லேட் நைட் வீடுக்கு வந்ததும் இல்லாம குடிச்சிட்டு வேற வருவியா நீ..” என்றார்..தனது கேள்விக்கு அவள் கூனிக் குறுகி போய் நிற்பாள் என்றெல்லாம் நினைக்க வில்லை என்றாலும் அவளது பதிலில் சோர்ந்து தான் போனார்..

“டேட், நான் ஒண்ணும் மொடக் குடிகாரி இல்ல, பட் பார்ட்டியில நான் மட்டும் குடிக்காம இருந்தா எல்லோரும் என்ன நினைப்பாங்க..அன்ட் ஆல்சோ இங்க இருக்கிற கல்ச்சர்ல இதுலாம் சாதாரணம்..” வளர்ந்து ஒரு நிலையில் நிற்பவளுக்கு அறிவுரைக் கூற மனம் ஒப்பாமல், அவளருகே இருந்து சேரில் அமர்ந்தவர்..

“உங்க அம்மாவும் இத்தனை வருஷமா இங்க இருந்தும் வராத பழக்கம் உனக்கு மட்டும் எப்படி மதி..?”

“ஐ டோண்ட் நோ..பட் இதுலாம் இங்க சகஜம்..இதயே சும்மா பேசி பெரிய இஸ்யூ ஆக்காதீங்க டாட்...அன்ட் ஆல்சோ உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பிகேவியர எதிர் பார்க்கல..” சூடாய் பதில் கொடுக்கும் மகளை அடித்து விடலாமா எனப் பரபரத்த கைகளை அடக்கியவர்..

“ஸ்டாப் இட் நான்சென்ஸ்..உனக்கு மேரேஜ்க்கு அலையன்ஸ் பார்க்க அடுத்த வாரம் நாம இந்தியா போறோம் கெட் ரெடி..” மகள் முன்னே அதிர்ந்து பேசியிராதவர் இன்று கத்திய கத்தலில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்த மதி

“டேட்..எனக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல..அப்புறம் இந்த ஸ்டூபிட் கமிட்மென்ட்ஸ்லாம் எனக்கு செட் ஆகாது டாடி...இன்னும் எனக்கு யார் மேலையும் லவ் வரல, அப்படியே லவ் வந்தாலும் ஃபர்ஸ் லிவ்-இன்-டுகெதர் அதுல பிடிச்சிருந்தா தான் மேரேஜ்..” என்றவளை இப்போது கன்னம் கன்னமாய் அறையத் தான் நினைத்தார் செழியன், ஆனாலும் மகளின் குணம் தெரிந்து நிதானத்தை விடாமல்,

“மதி, திஸ் இஸ் லாஸ்ட்..என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை..லீவ் எடுத்துட்டு இந்தியா வரும் வழிய பாரு..இல்லை வர வேண்டாம்னு நினைச்சா..? உனக்கு என்னைப் பத்தி தெரியும்..இனி உன்னோட இஷ்டம்..” கறாராய் அவர் பேசி முடிக்கும் முன் கோபமாய் வெளியேறியிருந்தாள் மதி.

சற்று முன் நடந்த அனைத்தையும் நினைத்த மதியின் விழிகளில் கோபம் கொப்பளிக்க, தந்தையிடம் காட்ட முடியாத கோபத்தை தனது வண்டியில் காட்டியவளின் நிதானமில்லா வேகம் என்றும் ஆபத்து தானே.

இங்கே குழலியின் நிலையோ அதைவிட மோசமாகவிருந்தது, கணவன் எடுத்தது நல்ல முடிவு எனத் தெரிந்தாலும், மகளைத் தனியாக விட்டுச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை..தான் இறங்கிப் போய் மகளிடம் கெஞ்சி மிஞ்சிக் கேட்டால் கூட மகள் வர மாட்டாள் என்பது ஸ்திரம்.

நினைவுகளைத் தூர ஒதுக்கியவருக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நிலையான எண்ணத்துடன் தங்களது உடைமைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினார்.

இன்னும் கிளம்புவதற்கு ஒரு வாரமே மீதமிருக்க, எடுத்த வைத்தவற்றைச் சரி பார்த்தவருக்கு மதியின் பாரா முகம் வருத்தத்தை வாரி இறைத்தது.

தந்தையுடன் நடந்த சண்டைக்கு பின் வீட்டில் அமைதியைத் தனது ஆயுதமாய் கையில் எடுத்தாள் மதி. தான் மது அருந்ததியது தவறு என மனம் உரைத்தாலும், முழுக்க முழுக்க ஈகோவை சுமந்து நிற்கும் புத்தி அதை ஒத்துக் கொள்ள மறுத்தது.

‘கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறாங்களாமே பார்க்கட்டும் பார்க்கட்டும்...அவன் எப்படி என் கூட இருக்காம்னு பார்த்திடுதேன்..மேரேஜ் முடிந்த அடுத்த நாளே டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண சைன் வாங்கிடனும்” இதை மனதில் ஆயிரம் முறையாய் நினைத்து அல்ல பதிய வைத்துக் கொண்டவளுக்கு இது நடக்கும் வாய்ப்பும் கிட்டவே கிட்டாது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

செழியனுக்கு அன்றே மகள் மீதிருந்த கோபம் வடிந்துவிட, வருத்தம் மட்டுமே மிச்சமிருந்தது..இப்போது நாம் இறங்கிப் போனால் இவள் மேலேறி விடுவாள் என்பதை அறிந்தவர், கோபம் என்னும் முகமூடியை அணிந்து கொண்டார்.

அப்படி இப்படியென்று இந்தியா திரும்பும் நாளும் வந்துவிட்டது, தங்களது பூர்வீகம் மதுரையில் யாருமில்லாததால்,காஞ்சிபுரத்திலிருக்கும் செழியனின் சித்தப்பா வீட்டிற்கு செல்வது என முடிவு செய்யப்பட்டு அவரிடமே மாப்பிள்ளை பார்க்கும் வேலையையும் ஓப்படைவிட்டார் செழியன்.

இன்னும் ஃப்ளைட் ஏற 2 மணி நேரமே மீதமிருக்க, மூன்று தினங்களாய் நடந்த பிரச்சனைகளின் தாக்கத்தில் தன்னைக் கண்டு கொள்ளாது தனது பேச்சை மீறி இந்தியா செல்லும் பெற்றவர்களைத் தடுக்கும் வழியறியாது முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது இறுகிப் போயிருந்தாள் மதி. இவளுக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் அல்ல என்பதைப் போல் அமர்ந்திருந்தார் செழியன், ஆனால் அன்னையால் அப்படி இருக்க இயலாதே, அழுதே ஓய்ந்துவிட்டவரை விமான நிலையத்தில் அனைவரும் பார்த்து சென்றனர்.

அவரின் அழுகை சிறிதும் தன்னைப் பாதிக்கவில்லை என்பதைப் போல் இறுகிப்போய் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள் மதி..விமானத்திற்கான அழைப்பும் வந்துவிட, செழியன் தான் குழலியைத் தேற்றி அழைத்துச் சென்றாரே தவிர, மதி அப்போதும் வாயைத் திறக்கவில்லை...செழியனே ஒரு நிமிடம் மகளின் பிடிவாதம் மற்றும் அழுத்தத்தில் சோர்வடைந்து தான் போனார்.

‘அவசரப் படுகிறோமோ..?’ என மனம் எழுப்பிய கேள்விக்கு

‘வருவது வரட்டும்..” எனப் புத்தி பதிலளிக்க, கல்யாணம் வாழ்க்கை என்பது வியாபாரம் அல்ல என்பதை அச்சமயம் மறந்து தான் போனார் அத்தொழிலதிபன்,

மகளைப் பிரிந்து தம்பதி சகிதமாய் விமான நிலையத்தினுள் பிரவேசிக்கும் செழியனின் விழிகள் கலங்கியிருக்க, வீம்பாய் நின்ற மதியின் விழிகளிலும் நீர் நிறைந்திருந்தது.

******************
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
தங்களைப் பின் தொடர்ந்து வந்த பைக்கை வைத்தே அது யார் எனத் தெரிந்து கொண்ட ஆதிக்கின் உதட்டில் புன்சிரிப்பு குடியிருக்க, இதற்கு நேரெதிராய் பயத்துடன் அமர்ந்திருந்தான் ராஜ்.

பைக்கில் இருந்த ஆசாமிகள் இருவரையும் ஆதிக் கவனித்து கொண்டு இருக்கும் போதே வேட்டை குழந்தையை தூக்கிக் கொண்டு காரை நெருங்கி இருந்தான்.

குழந்தையைக் கண்டதும் பைக்கில் இருந்த இருவரும் வண்டியைத் திருப்பி இவர்களது காரை நெருங்க, எப்போதையும் போல் பைக்கை ஓட்டு வந்தவனை ரசித்து காரை விட்டு இறங்கி நின்றான் ஆதிக்.

‘பத்து நாள் கழிச்சு வரேன்னு சொன்னவர் இப்படி வந்து நிற்கிறாரே..இன்னும் நான் பண்ணி வச்சிருக்க வேலைக்கு என்னென்ன ஆகப் போவுதோ..?’ மனதிற்குள் ராஜ் குமைந்து முடிக்கும் முன்னே அவனது நினைப்பை அறிந்தது போல் ஹெல்மெட்டை கழிற்றி அட்டகாசமாய் சிரித்த விகாஷ் ரகுவரனிற்கு பின்னே வெள்ளை வேட்டி சட்டையில் அவனது தந்தை மூர்த்தி இறங்கினார்.

இறங்கிய இருவருக்கும் பொதுவாய் வணக்கம் வைத்த ராஜ், ஆதிக்கின் பின்னே நின்று கொள்ள, அவன் எதற்காக பம்முகிறான் எனப் புரிந்த ஆதிக்கினால் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை..வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, மூர்த்தியைப் பார்த்து வரவேற்பாய் புன்னகைத்தவன், விகாஷிடம் திரும்பி, “குட் ஈவ்னிங் சார்..” என்றான் பளீச் புன்னகையுடன்.

பதிலுக்குப் புன்னகைத்த விகாஷ், வேட்டையின் கரங்களிலிருந்த குழந்தையை வருட அன்னியன் ஒருவன் தொடுவதைக் கூட உணராமல் பார்த்து கொண்டிருந்தான் அச்சிறுவன்.

“இவன் தான் கலெக்டர் மகனா..?” வினாவாய் விகாஷ் கேட்டாலும் அவனது கண்களில் அதையும் மீறிய சிறு வருத்தம் இருக்கத் தான் செய்தது. அவனும் ஒரு குழந்தைக்கு தகப்பன் தானே!

“ஆமா சார்! இவன் தான்” தீடீரென வேட்டையின் கனீர் குரலில் அரண்டு சின்னவன் விழிக்க, “டேய் இவனே..எத்தனை தடவ சொல்லுறது குழந்தைய கையில வச்சிட்டு இப்படி கத்தாதன்னு..” ஆதிக் கோபமாய் கேட்க..

“சார்..என் பேச்சே இப்படி தான்..” தலையை சொறிந்து வேட்டையின் சொல்ல, அதற்கும் சின்னவனின் உடல் அதிர்ந்து அடங்கியது. குழந்தையை வேட்டையின் கரங்களில் இருந்து வாங்கியவன் காரில் உட்கார வைக்க, அவனது கன்னம் தட்டி விகாஷ் சாக்லேட்களை பிரித்து கொடுத்து கதவைச் சாற்றினான்.

“ஆதிக்...கோடி கோடியா லஞ்சம் வாங்கி புள்ளைய எதுக்கு இப்படி வச்சிருக்கான்..” காரில் அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்து மூர்த்தி கேட்க..

“எல்லாம் பாவப்பட்ட காசு மூர்த்தி அப்பா...பெத்தவங்க பாவம் பிள்ளைக்குன்னு சும்மாவா சொன்னாங்க..எத்தனை பேர் வைத்தெறிச்சலோ..பாவம் பா இந்த பையன்..” ஆதிக் வெறுப்பாய் சொல்லி முடிக்கவும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் மாற்றுத் திறனாளியான அச்சிறுவனைத் தான் தொட்டு மீண்டது.

ஐந்து ரூபாயிலிருந்து கோடி ரூபாய் வரை லஞ்சமென தலைவிரித்து தான் ஆடுகிறது. நாம் கொடுத்து பழகிவிட்டோம் அவன் வாங்கிப் பழகிவிட்டான் என்பது தானே சரி..தவறைக் கூட நெஞ்சை நிமிர்த்தி அடித்து வாங்குகிறான் என்றால் தவற்றின் நுணி நாம் தானே..டிப்ஸில் தொடங்கி கொஞ்சம் பைசா கொடுத்தா வேலை சீக்கிரம் முடிந்துவிடும் என்பதில் முடிகிறது. மற்றவனைத் திருந்துவானா எனக் கேட்கும் முன் திருந்த வேண்டியது நாம் தானே..

ஒரு தகப்பனாய் அஜ்வியின் அப்பாவாய் விகாஷிற்கு மனம் கனத்திட, தன்னை சமன் படுத்திக் கொள்ள ராஜை சீண்டத் தொடங்கினான்.

“என்ன ராஜ்..? இந்த டுவென்ட்டி டேஸ்ல கம்பெனி செம பீக்ல இருக்காமே..” விகாஷின் நக்கல் பேச்சில் அடிமனதில் பயம் கவ்வ

“ஆதி..உன் பிஏ அன்ட் ஆல்சோ யுவர் ப்ரதெர் ராஜை நினைச்சா எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா..?” ஆதிக்கிடமும் அதே நக்கல் பேச்சை விகாஷ் தொடங்க..

“சார்..எனக்கு கூட என் தம்பிய நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு..” குனிந்து நின்ற ராஜின் தோளில் கைப்போட்ட ஆதிக் விகாஷை நிமிர்ந்து பார்த்து கூற..

“ம்...ஆமா ஆதி..பத்து நாளுல நாற்பது கோடி லாஸ் பண்ண வச்சது பெருமையா தான் இருக்கும்..” விகாஷ் மறுபடியும் தனது நக்கலை தொடங்க

“எஸ் சார்..யு ஆர் கரெக்ட்...என்ன ஆனாலும் நியாயத்தை விட்டு கொடுக்காமல்..ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காம இவ்வளவு தூரம் டாக்குமென்ட்ஸ் ரெடி பண்ணி லீகெல்லா மூவ் பண்ணயிருக்க என் தம்பியை நினைச்சா பெருமையா இல்லாம இருக்குமா..” ஒற்றைப்புருவத்தை ஏற்றி இறக்கி கேட்கும் ஆதிக்கைப் பார்த்து தாராளமாய் சிரித்த மற்றவர்களில் விகாஷ் மட்டும் தொண்டையைச் செருமி..

“இப்போவே நல்லா பேசிக்கோ டா ஆதி..இனி இப்படிலாம் ஆட முடியாது..” என்றான் மூர்த்தியை அர்த்தமாய் பார்த்து.

விகாஷின் பேச்சில் குழப்பமாய் ஆதிக் பார்க்க, “ஆதி இன்னும் ஒரு மாசத்துல நீ குடும்பஸ்த்தன் ஆக போற..” என்றவனை முறைத்து மறுமொழி கூறும் முன், அவனது மொபைலுக்கு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பினான் விகாஷ்.

விகாஷின் பேச்சைத் தொடர்ந்து வேட்டை ராஜ் மூர்த்தி என அனைவரும் வாழ்த்த, முறைக்கவும் முடியாமல் சந்தோசிக்கவும் முடியாமல் அமைதியாய் தலையசைத்தான் ஆதிக்.

வேட்டையிடம் சொல்லி குழந்தையை அழைத்துச் சென்று விடச் சொல்லியவன், உடன் ராஜையும் மூர்த்தியையும் போகச் சொல்லிவிட்டு ஆதிக்கை உடன் அழைத்துக் கொண்டு பைக்கை நெருங்கினான் விகாஷ்.

கார் கிளம்பியதும், ஆதிக்கை திரும்பி பார்த்த விகாஷ், “என்ன ஆதி முறை பிள்ளைய பார்க்குற மாதிரி முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருக்க..?” என்றான்.

“ஹ்ம்ம்ம்..உன்னைப் பார்க்கனும்னு வேண்டுதல்..” காரமான ஆதிக்கின் பதிலுக்கு

“பொண்ணு நல்லா இருக்கா டா..உனக்கு பொருத்தமா இருப்பா..நல்லா படிச்சிருக்கா..நம்ம ஸ்டேட்டஸ்க்கு சூட் ஆகும்..பார்க்க ரொம்ப நல்லா பொண்ணாவும் தெரியுறா டா..இது எல்லாத்துக்கும் மேல பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தியிருக்கு டா..” தனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டே போகும் நண்பனான விகாஷை முறைத்தவன்..

“ப்ளீஸ்..ஷட் அப் விகா..எனக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல..” என்றான் தெளிவாய்.

“மச்சி...அப்பா அம்மாவ பத்தி யோசிக்கவே மாட்டியா..நீ ஓகே சொல்லுவன்னு அம்மா ரொம்ப எதிர்பார்க்கிறாங்க டா..” என்றான் விகாஷ்.

“விகா, உனக்கு புரியலையா டா..எனக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல..” என்றவன் முழுதாய் முடிக்கும் முன் அலைபேசியின் வழியாய் கேட்ட செய்தியில் விகாஷ் திகைத்து நிற்க, ஆதிக் வர்மனோ நிலைகுலைந்து போனான்..

காதல் தொடரும்.

 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice ud sis(y)(y)mathiyum adamanta irukka, avanga appavum...... mathiku marriagela interest illa, aval india varuvala:unsure::unsure::unsure::unsure:matru thiranaliya collectorin baby:(:(:(thanthai seida pavam pillai thalaiyilla so sad:(:(:(vikas vanthachu:):):)phoneil vantha news enna itis about vikas's sistera:unsure::unsure::unsure: waiting eagerly
 




Kayal muthu

மண்டலாதிபதி
Joined
Feb 6, 2018
Messages
219
Reaction score
263
Location
Thanjavur city
Phone la appati enna news,,,,,hero and heroine eppati renduperukkum love varum romba kaztam pola ,,,very nice id sis
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nice update.. Mathi enna ma ipadi panriye ma.. Vikas entry unexpected.. Mathi and adhi rendu perukkum marriage la ishtam illa epadi iruka pogudhu avanga marriage life.. collector in paiyan maatruthiranaliya so sad..enna seithi athu?
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi sister,
Good episode. Intha updateku romba naala wait panninen. Next update seekarama podunga. Plssss☺☺☺☺☺
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

அப்பாவை பற்றி தெரியும்தானே என்று மதியை மிரட்டுகின்றார்,மதியும் விவாதம் செய்தாலும் முகத்தை தூக்கிவைத்தாலும் ஒத்துக்கொண்டு சரியென்று விட்டார்,விகாஸ் ஆதியிடம் காட்டிய நிழற்ப்படம் மதியுடையதா,ஆதி அம்மாவும் மதி அப்பாவும் சகோதர்ர்களா,அதனால்தான் மதி அப்பா அவ்வளவு தைரியமாக இந்தியா கிளம்புகின்றாரா ,தன்மகளுக்கு தன் சகோதரியின் மகனை மாப்பிள்ளை பார்க்க,மாதா பிதா சேர்த்து வைப்பது சொத்தாக இருந்தாலும் பாவமாக இருந்தாலும் அது மக்கட்கே,அதற்கு உதாரணம் கலெக்டர் பிள்ளை,ஆனால் அக்குழந்தை குற்றமே செய்யாமல் வாழ்நாள் முழுதும் தண்டனை அனுபவிக்கப்போகின்றது,ரேக்காவுக்கு ஏதும் பிரச்சனையா அதைப்பற்றித்தான் தொலைபேசியில் தகவல் வந்ததா.

நன்றி
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Nice ud rendu perum rendu pakkam morachutu irrukanga ethula eppadi Sera poranga waiting eagerly for next ud pa seekiram vanga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top