• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Ko(Ve)llum Vennilavei - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~9~

கோபமாய் வெளியேறும் மகன் சென்ற திசையைப் பார்த்து செழியனும் வேணியும் அசந்து போயினர். விகாஷைத் தொடர்புக் கொண்ட ராஜ், அங்கே நடந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல, “நான் பார்த்துக்கிறேன் ராஜ்” என்ற உறுதிமொழியுடன் ஆதிக்கை காண விரைந்தான் விகாஷ் ரகுவரன்.

போனை அணைத்து பையில் போட்டவன், “ஊப்ஸ்” என்று பெருமூச்சு விட்டபடியே செழியனையும் வேணியையும் பார்க்க, அவர்களும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேகமாய் வாசல் பக்கம் வந்தவன், வெளியே நோட்டம் விட்டு பால்கனியின் ஜன்னிலில் இருந்து பார்க்க ஆதிக் கோபமாய் கார் எடுத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்தது.

ஆதிக் இங்கு இல்லை என்பதை உறுதிப் படுத்திய பின், வேணியின் பக்கம் திரும்பி, ‘ஈ….’ என பல்லைக் காட்ட, அவனது கண்ணசைவிற்காகவே காத்திருந்தவரைப் போல மாஸ்க்கை எடுத்துத் தூர வைத்துவிட்டு,

“என்ன டா அவன் அப்படி கோபமா போறான்..?” என்றார் கவலைப் படிந்த குரலில்..

அவரின் கேள்வியைப் புறம் தள்ளியவன் அருகே இருந்த ஆப்பிளை எடுத்து சுவைக்கத் துவங்க,

‘தான் எவ்வளவு பதட்டமாக பேசுகிறோம் இவன் என்னடான்னா ஆப்பிள் திங்குறான்..’ மனதில் ராஜை திட்டியவர்

“டேய் எருமை உன்னைத் தான கேட்குறேன்..” என்றார் சத்தமாய்

“அம்மா..இப்படி சத்தமா பேசாதீங்க அப்புறம் உண்மையாவே நெஞ்சுவலி வந்திட போகுது” ராஜின் பதிலில் செழியன் வாயை மூடிச் சிரித்தார்..

செழியனை திரும்பி பார்த்து முறைத்த வேணி, “டேய் ராஜ்…” கோபத்தில் பல்லைக் கடித்து அழைக்க

“சொல்லுங்க மம்மி..” என்றான் ஹாயாக

“உன்கிட்ட தான கேட்குறேன்..”

“அதுக்கு தான விகாஷ் சார அனுப்பியிருக்கு..ஒண்ணும் ஆகாது..ஆமா, சரவண பவன்ல இருந்து காபி வாங்கிட்டு வரச் சொன்னிங்களே வந்துட்டா..?” ஆப்பிள் முடிந்து காபி கேட்கும் ராஜை முறைத்தாலும், அவருக்கும் காபியின் நினைவு வந்துவிட

“என்னங்க காபி வாங்கிட்டு வரச் சொன்னீங்களா இல்லையா..?” என்றார் அதட்டலாக

“ம்..சொல்லிருக்கேன் சொல்லிருக்கேன்..” பொறுப்பில்லாமல் செழியன் பதிலளிக்க

“என்ன முணைப்பு..?” என்றார் வேணி

“வேணி, ஆதி நேத்து ஒழுங்காவே சாப்பிடல..எதுக்கு இப்படி ரெண்டு பேரும் சேர்ந்துட்டு அவனைக் கஷ்டப்படுத்தனும்..அவன் அழுது தான் இதெல்லாம் நடக்கனுமா..?” தவமிருந்து பெற்ற மகனின் கண்ணீரைக் கண்டதும் செழியனின் மனம் சுனங்கி வார்த்தைகள் சூடாக வந்தது.

“குழந்தை அழும்னு மருந்து கொடுக்காமலோ ஊசி போடாமலோ இருக்கவா போறோம் அதே மாதிரி தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்க எனக்கு ஆசையிருக்க கூடாதா..ஏன்? அந்த ஆசை உங்களுக்கும் இருக்கு தான..அவனா சரியாகிடுவாம்னு இத்தனை வருஷம் விட்டு வைச்சா நிலைமை நம்ம கைமீறி போயிட்டு..? உங்களால அவன்கிட்ட பேசி சம்மதம் வாங்க முடியுதா..? ஒரு நாள் அழுது சாப்பிடாம இருந்தா உங்க பையன் ஒண்ணும் கரைஞ்சிட மாட்டான்..” உண்மை தானே ஆதிக்கின் வழியில் சென்று அவனுக்கு ஒரு நல்லது செய்யலாமென்று நினைத்தால் அதைச் செய்யவும் அவர்களால் முடியவில்லை..ஒற்றைப் பார்வையில் அன்னியப்படுத்திவிட்டோ, பேசியே சமாளித்தோ விடுகிறான்..

வேணியின் பதிலிருக்கும் உண்மை புரிந்து செழியன் அமைதியாய் சேரில் அமர, “மம்மி இதுக்கு தான் அப்பாவுக்கு நெஞ்சு வலி வர வச்சிடலாம்னு சொன்னேன் கேட்டிங்களா..?”செழியனை நக்கலாய் பார்த்து கொண்டே ராஜ் சொல்ல,

“ஆமா டா நானும் அத தான் நினைச்சேன்..ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு..சரி நாமலே மெயின் ஆக்ட்டிங் போடுவோம் இவர சைடு ஆக்டரா வச்சுக்கலாம்னு நினைச்சா..அதைக் கூட ஒழுங்கா பண்ண மாட்டிக்காரு டா..” மூக்கை உறிஞ்சி ராஜின் தோளில் சாய்ந்தார் வேணி.

“ஆமா மம்மி..பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு கண்ணீர் சிந்தி அழாம அமைதியா உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறாரு..” செழியனைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்தவன் அடுத்ததாக ஆரஞ்சு பழத்தை உரிக்க

“டேய் நீ அடங்கு டா...நானாவது அமைதியா இருந்தேன்..இவன் அழுதே ஓவர் ஆக்டிங் பண்ணி நம்மல காட்டிக் கொடுத்திருப்பான் ரஸ்கல்..” தன்னைப் பற்றி குறை சொன்னதில் செழியன் ராஜைப் பற்றிப் புகார் வாசிக்க

“மம்மி அதெல்லாம் வுடுங்க...பொண்டாட்டிக்கு சீரியஸ் கண்டிஷன்னு டாக்டர் சொல்லிட்டு போனதும் ஒரு நல்ல புருஷன் என்ன மம்மி பண்ணனும்..?” ராஜின் கேள்வியிக்கு செழியன் முறைக்க..

“இவர் என்ன டா பண்ணுனாரு..?” என்ற வேணியின் கேள்வியில் கருனையின் அளவு குறைந்திருந்தது.

“ராஜ்..உன்கிட்ட இப்போ யாராவது கேட்டாங்களா..?” சொல்லாதே என்ற கண்ணசைவுடன் செழியன் பார்க்க

அதைக் கண்டு கொள்ளாதவன் புகார் வாசிக்கத் துவங்கும் முன், “வேணி மா நானாச்சும் பசிக்குது சாப்பிட போகலாமான்னு தான் கேட்டேன் ஆனா இவன் இருக்கானே அங்க போய் சிக்கன் ஆர்டர் பண்ணட்டுமான்னு கேட்டான்..” என்றார் செழியன்.

இருவரையும் முறைத்த வேணி, “அடப்பாவிகளா..நான் இங்க உடம்பு சரியில்லாம படுத்திருக்கேன்…” பாதியிலே தனது பேச்சை நிறுத்தியவர்..

“ஒருவேளை ஆதி நம்மல கண்டுபிடிச்சிருப்பானோ..?” என்றார் பயக் குரலில்

“ச்ச...அதுக்குலாம் சான்ஸே இல்லை அய்யாவோட பெர்ஃபாமென்ஸ் அப்படி..” சட்டைக் காலரை தூக்கிவிட்டு ராஜ் பெருமை பீற்றிக் கொள்ளவும்

“எப்படி டா இன்னைக்கு என் தோளுல படுத்து தூங்குனியே அப்படியா..?” சிரிக்காமல் சந்தேகம் கேட்டும் தாயை ராஜ் முறைக்க

அவனது பாவனையில் செழியனும் வேணியும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

‘கல்யாணமாம் கல்யாணம்..யார்கிட்ட கேட்டாங்க கல்யாணத்தைப் பத்தி..’ மனத்தில் கனன்று கொண்டிருக்கும் கோபத்தோடு பெசென்ட் பீச்சில் நடந்து கொண்டிருந்தான் ஆதிக். (அது என்னப்பா எல்லோரும் கோபம் வந்தா பீச்சுக்கு இல்லனா பாருக்கே போறீங்க?!)

தூரத்திலே ஆதிக்கை கண்டு கொண்ட விகாஷ், “ஆதி” என்று உரக்க அழைக்க, விகாஷின் குரல் வந்த திசையைப் பார்த்தவன்.

“வா..” என்றான் சுரத்தில்லாமல்.

“என்ன டா அலுத்துக்கிற..?”

“நான் செம கோபத்துல இருக்கேன்..போயிடு..” ஆதிக் விகாஷை நோக்கி ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க

“உண்மையாவே கோபத்துல தான் இருக்க போல மச்சி..சரி அத வுடு..அம்மாவுக்கு என்ன ஆச்சு..” என்றான் காரின் முன் பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டு.

அம்மாவைப் பற்றிக் கேட்டதும் நேற்றிலிருந்து நடந்தவற்றை ஆதிக் சொல்லி முடிக்க, “சரி..அதுக்கு நீ என்ன சொன்ன..?” என்றான் ஆர்வமானக் குரலில்

“டேய் கல்யாணமா நான் எப்படி டா..?” என்றவனை முறைத்த விகாஷ்

“என்ன நீ எப்படி டா..? என்னவோ காதலிச்சு ஏமாந்தவன் மாதிரியே பேசுற..?ஆமா, எதுக்கு டா உனக்கு பொண்ணுங்கனாலே பிடிக்கல..?” விகாஷ் பேச ஆரம்பித்ததில் இருந்து முறைத்தவன், இப்போது

“பொண்ணுங்கள பிடிக்கும் பிடிக்காது இல்ல..எனக்கு கல்யாணம் பிடிக்காது அவ்வளவு தான்..”

“இது என்னடா பதில்..?”

“என்னது என்னடா பதிலு..?” கேள்வி கேட்டவனையேத் திருப்பி கேள்வி கேட்கும் ஆதிக்கை முறைத்தவன்,

“பொண்ணுங்களத் தான் உனக்குப் பிடிக்குமே அப்புறம் என்னடா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..?”

“பொண்ணுங்கள பிடிக்கும்னு நான் எப்போ டா சொன்னேன்..?”

“அடப்பாவி..! இப்போ தானடா சொன்ன..”

“எனக்குத் தான் கல்யாணம் பிடிக்காதே..” என்றவனை தினுசாய் பார்த்த விகாஷ்,

“ஆதி, லிவ்விங் டூகெதர்ல எதுவும்..?” தாடையை தடவி விகாஷ் கேட்கவும்

“என்ன எதுவும்..” வந்ததில் இருந்து ஒட்டாமல் பதிலளிக்கும் ஆதிக்கை முறைத்த விகாஷ்

“சரி உனக்கு உன் விருப்பம் தான முக்கியம்..வேணியம்மா இருந்தா உனக்கென்ன செத்தா உனக்கென்ன..?” அசால்ட்டாய் உரைத்து, “சரி வாடா அதி சாப்பிட போகலாம் பசிக்குது..” என்றான் அவனது தோளைத் தட்டி..

அவனது வார்த்தைகளில் தலையைப்பிடித்தவன், “அய்யோ கடவுளே இப்போ என்னை என்ன தான் பண்ண சொல்லுற..?”

“எனக்கு அது தெரியாது எல்லாம் உன் இஷ்டம்..” ஆதிக்கிடம் பட்டும்படாமல் சொல்லிவிட்டு, தனது டிரைவரிடம் திரும்பி,

“காரை வீட்டுக்கு எடுத்திட்டு போங்க..” என்றவன் ஆதிக்கின் காரைத் திறந்து அதில் அமர்ந்து கொண்டான்..

விகாஷையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தவன் தலையில் அடித்துக் கொண்டு, “கல்யாணம் பண்ணித் தொலையுறேன்..” என்றான் வேண்டா வெறுப்பாக..

****
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
****

“டாக் சார்..என்னை விட்டிருங்க..ப்ளீஸ்..” தனது முதுகை இறுக்கமாய் பற்றிக் கொண்டு சத்தமிட்டவளையும் நாயையும் மாறி மாறி பார்த்த அந்நெடியவன்.

அவளின் கைகளை விலக்க நினைக்க அதுவோ உடும்பு பிடியாய் இருந்தது.

ஒரு ஆணின் மீது ஏறி அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு அவளுக்குச் சுத்தமாய் இல்லை, அவளது உலகில் நாயும் அவளுமே மிஞ்சிவிடச் சுற்றம் மறந்து..

“டாக் சார்..நான் குளிக்கவே மாட்டேன் சோ என்னை மட்டும் நீங்க விட்டிடுங்க ப்ளீஸ்..” இறுக்கமாய் கண்ணை மூடிக் கொண்டு

“நான் வேணும்னா உங்க கிட்ட என்கிட்ட இருக்கிற மணி, ஸ்நாக்ஸ் எல்லத்தையும்… நோ… நோ... மணி மட்டும் தரேன்..ப்ளீஸ் சார் என்னை மன்னிச்சு விட்டிருங்க..”

அவளின் பேச்சு வார்த்தையில் நாய் இப்போது சன்னமாய் குழைக்கத் துவங்க

“ஓகே ஓகே..டென்ஷன் ஆகாதீங்க..ஸ்நாக்ஸும் தரேன்..ப்ளீஸ் என்னை மட்டும் விட்டிருங்க..” என்றாள் பாவமாய்..

அவளின் தோளைத் தட்டி அழைத்தால் கூட நிமிராமல் புலம்ப, நாயைப் பார்த்து பயத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்..

அவளைத் தன்னிடம் இருந்து கொஞ்சமாய் பிரித்து, நாயை நோக்கி சொடக்கிட அதுவும் வாலை ஆட்டிக் கொண்டு வந்த வழியே சென்று மறைந்தது.

நாய் ஓடியப்பின்னும் மதி விடாமல், “டாக் சார் ப்ளீஸ் சார்..” எனக் கெஞ்சிக் கொண்டேயிருக்க, இது கதைக்கு ஆகாது என்று தெரிந்தவன்.

“ஹலோ..” இடுப்பைக் கட்டியிருக்கும் அவளது கரங்களை விடுவித்தவாறே குரல் கொடுத்தான்.

“டாக் போயிடுச்சு நீ என்னைப் போக விடுறீயா..” சுள்ளென விழும் அவனது பேச்சில் அரைக் கண் திறந்து அவனின் முகம் பார்த்தவள், இப்போது கண்களை அகலமாய் திறந்து அவனது முகம் காண, அவனும் அவளைத் தான் விடாமல் பார்த்து கொண்டிருந்தான்.

அவனிடம் இருந்து முகத்தை மட்டுமே விலக்கிப் பார்த்தவளின் கரங்கள் இன்னும் அவனை அணைவாய் பிடித்திருக்க, “என்ன..?” என்றான் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, அவனது செய்கையில் நடப்புக்கு வந்த மதி..

சட்டென்று அவனிடம் பிரிந்து, “ஹலோ மிஸ்டர் இப்படி தான் பொண்ணுங்கள பிடிச்சி வச்சிக்கிறதா..?” அவளின் வார்த்தையில் மட்டும் தான் கடினம் இருந்தது, முகமோ அதற்கு நேரெதிராய் செம்மையேறி இருந்தது.

“என்னது நான் உன்னை பிடிச்சி வச்சிருந்தேனா..?” மற்றவன் உண்மையான கோபத்துடன் கேட்க

“ஆமா நீ தான் என்னைப் பிடிச்சி வச்சிருந்த..உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்..இந்த மதியலகி கிட்டயே வா..” ஆள்காட்டி விரலை தன் முன் ஆட்டி ஆட்டி பேசுபவளின் விரலை பிடித்தவன், (பயபுள்ளைக்கு ‘ழ’ கூடஒழுங்கா வரல இதுலாம் பேசுற பேச்ச பாருங்க மக்களே..)

“கை நீட்டி பேசாத..” உறுமலாய் அவன் சொல்லும் போதே

“ஹாங்..நான் அப்படி தான் பேசுவேன்..என்ன பண்ணுவ..?” வலது கையை அவன் பிடித்திருக்க, இப்போது இடது கையில் இருக்கும் விரலை அவனது முகத்துக்கு நேர் நீட்டினாள்..

சொல்ல சொல்ல கேட்காமல் செய்யும் மதியின் இரு கரங்களை வளைத்து பின்னோக்கிப் பிடித்தவன்

“எங்க இப்போ கை நீட்டி பேசு..” என்றான் நக்கலாய்

இறுக்கமாய் அவன் பிடித்ததில் வலியெடுக்க, “விடுடா ஸ்டுபீட்..எருமை..இந்த மதியலகி கிட்டயே உன் ரெளடித் தனத்தைக் காட்டுறீயா..” என்றவளின் முகத்தை இப்போது பின்னிருந்து எக்கிப் பார்த்து,

“உன் பெயரை ஒழுங்கா சொல்லு கையை விடுறேன்..” என்றவனை முறைத்தவள்

“ஆர் யூ மேட்..என் நேம் எனக்குத் தெரியாதா..இடியட்..”

“இவ்வளவு இறுக்கமா கையை வளைச்சு பிடிச்சும் உனக்கு வலிக்கலையா..?” அழுவாள் என அவன் நினைக்க அவளோ வாய் குறையாமல் பேசிக் கொண்டிருந்தாள்

“வலிக்கும்னு உனக்குத் தெரிஞ்சும் எதுக்கு இப்படி பிடிச்சிருக்க, விடு..” அவளின் பதிலில் சின்னதாய் ஒரு சிரிப்பு அவனின் இதழில் தவழ்ந்தாலும், பிடியின் இறுக்கத்தை குறைக்காமல்

“இவ்வளவு நேரம் நீ பேசுனதுக்கு சாரி சொல்லு நான் உன்னை மன்னிச்சு விடுறேன்..”

‘சாரி’ சொல்லவேண்டும் என்பதில் அவளது முகம் கோபத்தை தத்தெடுக்க

“முடியாது போடா..நான் எதுக்கு உனக்கு சாரி சொல்லனும்..” என்றாள் திமிராய்

வந்ததில் இருந்து மரியாதையில்லாமல் பேசுவதும் இல்லாமல், இப்போது டா வேறு போடுகிறாளே என்பதில் கோபம் தலைக்கேற

“ஹே..ஒழுங்கா சாரி சொல்லுறியா இல்ல கையை உடைக்கவா..?” அவள் பெண் என்பதையும் மறந்து அவன் சண்டைக்கு நின்றான்..

“நீ கையை உடைக்கும் வரைக்கும் சும்மா இருப்பேன்னு நினைச்சியா..உன்னை..” அவனிடமிருந்து திமிறி வெளிவர நினைத்து, கையை விடாமல் அசைக்க, அவனது பொறுமை காற்றில் பறந்தது.

“பொம்பளையாச்சேன்னு அமைதியா இருந்தா…” என்றவனின் பேச்சில் குறுக்கே வந்தவள்

“இல்லனா என்ன டா பண்ணிருப்ப..” துள்ளனான அவளின் பேச்சில் பிடித்திருந்த கையைவிட்டு, அடிக்க கை ஓங்க இழுத்துத் திருப்பியதில் கால் தவறி அவன் மீதே சரிந்து விழுந்தாள் மதியழகி..

ஆதியும் மதியும் வருவார்கள்…

 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi aadhi mam
Appo yellame acting ah. Naan kuda unmainnu ninachu konjam feel panni aadhi ya thittiten. ???oru valiya sir marriage ku ok sollitaaru. Mathi fight with aadhi thaana??? Because konjam doubt ah irukku innum name sollalaye??next update seekarama podunga. Intha epi super ah irunthuchu
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
Hi aadhi mam
Appo yellame acting ah. Naan kuda unmainnu ninachu konjam feel panni aadhi ya thittiten. ???oru valiya sir marriage ku ok sollitaaru. Mathi fight with aadhi thaana??? Because konjam doubt ah irukku innum name sollalaye??next update seekarama podunga. Intha epi super ah irunthuchu
Epd nadichrukanga bad pellowss..Sekramei varein sago
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
“ஆமா டா நானும் அத தான் நினைச்சேன்..ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு..சரி நாமலே மெயின் ஆக்ட்டிங் போடுவோம் இவர சைடு ஆக்டரா வச்சுக்கலாம்னு நினைச்சா..அதைக் கூட ஒழுங்கா பண்ண மாட்டிக்காரு டா..” மூக்கை உறிஞ்சி ராஜின் தோளில் சாய்ந்தார் வேணி.
:D:D:D:Dappo ellam actinga sis.:):):)innum dog sir kitta irunthu kappatanavaru name sollave illaye:unsure::unsure::unsure::unsure:athi than naa avan mathi veetil enna seikiran:unsure::unsure::unsure::unsure:nice ud sis:love::love::love::love:
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
:D:D:D:Dappo ellam actinga sis.:):):)innum dog sir kitta irunthu kappatanavaru name sollave illaye:unsure::unsure::unsure::unsure:athi than naa avan mathi veetil enna seikiran:unsure::unsure::unsure::unsure:nice ud sis:love::love::love::love:
Ha ha..Overa act pannitangala...? Thanks ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top