• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale...!! Epi - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹ்லோ... மக்களே..!!!

எல்லாரும் எப்படி இருக்கீங்க... என்னை வேரோடு சாய்த்தவளே..!! எபி 23 போடுறேன், படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... இந்த கதைக்கு ஆதி முதல் அந்தம் வரை படித்து கமெண்ட்ஸ் சொன்ன உங்க எல்லாருக்கும் நன்றி..!! நன்றி ..!!! அடுத்த எபியோட கதை முடிந்து விடும்... படிக்காதவங்க சீக்கிரம் படிக்க ஆரம்பிச்சுகோங்க...!! முடிந்தால் நாளைக்கே எபி தாரேன்..( நம்புங்கப்பா.. இடையில் ரொம்ப உடம்பு சரியில்ல சோ விட்டுட்டேன்.. இப்போ ஆல் ரைட்.. சரி ஆகிட்டேன்.. சோ முன்னாடி மாதிரி ஓடி வந்துவிடுவேன்.. ;););).) நான் எதிர் பார்த்ததை விட உங்களின் ஆதரவு மிகவும் பெரியது... ரொம்ப நன்றி மக்கா :love::love::love:.....


வேர் – 23

விடியல் அற்புத அழகுடன் ரம்மியமாய் பூமியை ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தது...

நிலா அழகி கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் செவ்வானத்தில் பறவைகள் கூட்டை விட்டு இரையை தேடி வட்டம் வட்டமாக செல்ல,

இளம் காலை பனி வெள்ளி துளிகளாக தோட்டத்து செடிகளை மையம் கொண்டிருக்க, உறக்கம் கலைந்த இதழியோ அவளின் குட்டிமாமாவை மையம் கொண்டிருந்தாள்...

சக்தி அவளிடம் கூறிய காதலை அவளால் நம்பவே முடியவில்லை... நேற்றே இரு முறை கிள்ளி பார்த்து விட்டாள்... கிள்ளியதில் வந்த வலியில் தான் உண்மை என்று நம்பினாள்..

இப்பொழுதும் அவனை அப்படியே பார்த்திருந்தாள், மெதுவாக உறக்கம் கலைந்த சக்தி மெதுவாக அசைய, இத்தனை நேரம் அவனையே பார்திருந்தவள், அவன் எழவும் மீண்டும் படுத்துக் கொண்டாள்...

“ ஏய் கள்ளி இத்தனை நேரம் கண்ணெடுக்காம பார்த்திட்டு, நான் எழுந்ததும் படுத்துட்டா. எனக்கு தெரியாதா.? அதென்னடி எப்பவும் நான் பார்க்காத நேரம் அப்படியே அசையாம பார்க்க... பார்த்ததும் எதையும் செய்யாத மாதிரியே இருக்கியே எப்படி..? “ என கேட்டுக் கொண்டே அவளை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்..

“ விடுங்க குட்டிமாமா “ என அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்ய,

“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு லிப்ஸ் “ என கூறி மெதுவாக அவளின் இதழை வருட,

அவனின் கையை தட்டி விட்டவள் “ விடுங்க “ என மீண்டும் போராட,

“ நீ சொல்லு விடுறேன் “ என அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்,

“ உன்னை தான் சைட் அடிச்சேன்.. என்று எப்படி சொல்வதாம்..? “ அவளின் மனது மெதுவாக புலம்பிக் கொண்டது,

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் “ என்ன சைட் அடிச்சியா “ என மெதுவாக அவளை பார்த்து ஒற்றை கண்சிமிட்டி கேட்க,

“ அட விடுவீங்களா..? சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க ” என அவன் கையில் இருந்து நழுவ,

“ ம்ம்... பதில் சொல்லாமா இப்போ தப்பிச்சுட்ட.. விடமாட்டேன் “ கூறியவன், பின் நியாபகம் வந்தவனாக “ லிப்ஸ் சீக்கிரம் கிளம்பு லாயரை பார்த்துட்டு பேப்பர் குடுத்துட்டு வருவோம் “ கூறிக் கொண்டே அவளை விட்டு விலகி எழ,

அவனை யோசனையாக பார்த்தவள் “ எதுக்கு லாயரை பார்க்கணும் “ ஒன்றும் அறியாதவள் போல் அவள் கேட்க,

“ அது தான் சொன்னேனே லிப்ஸ். நேத்து உன்கிட்ட தந்த பேப்பரை அவகிட்ட கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணனும் “ அவளிடம் கூறிக் கொண்டு டவலை எடுத்து பாத்ரூமில் நுழைய,

அவனோடு அவளும் உள்ளே நுழைய, அவளை பார்த்து கள்ளசிரிப்பு சிரித்த சக்தி “ லிப்ஸ் நீயும் என்கூட குளிக்க வாரீயா..? “ சில்மிஷத்துடன் கேட்க,

அப்பொழுது தான் பேசும் ஆர்வத்தில் அங்கு நுழைந்ததை அறிந்து தன் தலையிலையே மெதுவாக தட்டியவள், அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்...

“ ஏய்.. குளிக்க விடுடி “ கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு சக்தி கூற,

“ ஆமு.. குளிக்கலாம் நீங்க.. முதலில் நான் சொல்வதை காதுக் கொடுத்து கேளுங்க “ சிறு கடுப்பாக கூறியவள்,

அங்கிருந்த அலமாரியை திறந்தவள், அதில் நேற்று சக்தி கொடுத்த பேப்பர் எடுத்து அவன் முன் கிழித்து போட,

“ ஏய் லிப்ஸ்.. என்னடி பண்ணுற “ பதறிய சக்தி அவள் அருகில் ஓடி வர,

அவளோ அசையாமல் அவனை பார்த்து கையை கட்டிக் கொண்டு நின்றாள்...

அவள் அப்படியே நிற்பதை கண்டவன் “ என்ன லிப்ஸ் என்னோட கிப்ட் உனக்கு பிடிக்கலியா..? ” முகம் கலங்கி கேட்டான்,

இத்தனை நாள் இல்லாத பெரும் சந்தோசத்தை நேற்று அவன் அவள் முகத்தில் கண்டான்... எதிலோ ஜெயித்த கர்வம் நேற்று அவள் முகத்தில் தெரிந்தது...

அது அவள் காதலை ஜெயித்த கர்வம் என்று அவன் உணராமல் போவானா என்ன..? உடனே அறிந்துக் கொண்டான்... ஆனால் இன்று அவளின் இந்த கோபம் அவனை விதிர்க்க செய்ய அவள் முகத்தை, அவள் பதிலை எதிர் நோக்கி நின்றான்...

“ மாமா எனக்கு ஆபிஸ் பொறுப்பு எதுவும் வேண்டாம்.. நான் ஆசை பட்ட எல்லாம் செய்யுற உங்களுக்கு நான் இது கூட செய்யலன்னா எப்படி குட்டிமாமா..? நீங்க எப்பவும் போல இருக்க.. இதை என்னோட குட்டிமாவுக்கு நான் ஆசையா தாறதா வச்சுகோங்க மாமா “ என கூறி அவன் நெஞ்சில் சாய,

அவளை மெதுவாக அணைத்தவன் “ இல்ல இதழி, நாளைக்கு ஏதாவது பிரச்சனை, அம்மா முன்னாடி பேசுனமாதிரி வேற யாருமே பேச கூடாதுடா... இந்த சக்தியோட மனைவி நீ..!! அந்த மரியாதையை உனக்கு எல்லாரும் தரணும் இதழி...

முன்னாடி மாதிரி நடக்காதுன்னு என்ன நிச்சயமா சொல்ல முடியும்...? யார் வாயில இருந்தும் இன்னொரு முறை, நீங்க ஒன்றும் இல்லாதவங்க என்றோ.? யாரும் இல்லாதவங்க என்றோ..? சொல்லவே கூடாது இதழி.. அதுக்கு தான் நான் உனக்கு அப்படி ஒரு அந்தஸ்து தந்தேன்...

உன்னை பற்றி எல்லாம் தெரிந்த அம்மாவே உங்களை பேசும் பொழுது, எதுவும் தெரியாதவங்க பேச எவ்வளவு நேரம் ஆகும் இதழி “ என கோபமாக கூற,

“ மாமா அது தான் எல்லாம் சரியா போச்சே, அத்தை தான் இப்போ எங்களை நல்லா பாத்துகுறாங்களே, அப்புறம் என்ன மாமா “ என கேட்க,

“ இப்போ எல்லாம் நல்லா தான் இருக்கு லிப்ஸ், நாளைக்கு எதுவும் ஆக கூடாதுல்ல “ என கூற,

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா, நீங்க எப்பவும் போல ஆபிஸ் எம்.டி.யா இருங்க, நா.. நான் தனியா ஏதாவது ஆரம்பிக்கவா.? “ என மெதுவாக தனது நிறைய நாள் ஆசையாகிய கனவை கூற,

அவள் முகத்தை ஆவலாக பார்த்தவன் “ என்ன சொல்லுற இதழி... நீ ஏதாவது ஆரம்பிக்க போறியா..? ஏதாவது ஐடியா வச்சுருக்கியா என்ன..? “ என ஆவலாக, சந்தோசமாக கேட்க,

“ அது மாமா... நான் எப்பவும் போல என்னோட ஆசையை செய்றேன் மாமா, எனக்கு பிடிச்சதை நான் செய்யுறேன்... ட்ராயிங், பெயிண்ட் பண்ணுறேன் மாமா, கூடவே ஹோம் டிசைன்னும் பண்ணுறேன்...

நம்ம ஆபிஸ்க்கு வரும் ஆர்டர் ஏதாவது ஹோம் டிசைன் வந்தா அதை எனக்கு வேலையா தாங்க... அதுக்கான அமௌன்ட் தனியா தாங்க, நான் என் சொந்த முயற்சியில் முன்னேறி வாரேன் மாமா, எனக்கு அந்த பெரிய பதவி எதுவும் வேண்டாம், நான் என் முயற்சியில் வளர்ந்து வாரேன். எனக்கு துணையா வருவீங்க தானே..?” என அவன் முகம் நோக்கி கேள்வியாய் நிறுத்த,

அவளை சந்தோசமாக அணைத்துக் கொண்டான் சக்தி “ உனக்கு நான் எப்பவும் துணையா இருப்பேன் லிப்ஸ் “ என அவளை அணைத்துக் கொண்டான்... இனி அவனுக்கு கவலை இல்ல.. அவளிடம் இருக்கும் திறமை அவன் அறிந்ததே, அவளின் திறமையால் மேலும் மேலும் உயர வளர்ந்து வருவாள் என்று தன் மனைவி மீது முழுமையாக நம்பிக்கை வைத்தான்..

அடுத்த நாளில் இருந்து அந்த மாடி அறை அவளின் கூடமானது.... அவளின் கனவின் வாசல் அந்த ஒற்றை மாடி அறை, அதன் வழிகாட்டி அவளின் குட்டிமாமா, அதன் திறமையாளர் யார் என்று அந்த அறையும், காலமும் தான் கூறும்.. அவளுக்கான பாதையை அவன் காட்டி விட்டான்... அதை நேராக பற்றி செல்லவும் அவன் வழி விட்டுவிட்டான்... அவள் தூரிகையே இனி அவளின் வளர்ச்சி..!!

அதன் பிறகு அவளின் பெயரில் “ தூரிகை உலகம் “ என்று ஆன்லைனில் ஒரு பேஜ் ஆரம்பித்து அதில் அவளின் கைவண்ணத்தை காட்டினாள்...

இன்ஸ்டாகிராம் உலகில் அவளும் ஒரு புள்ளியாக தன் காலெடுத்து வைத்து. அதில் அவளுகென்று பல மக்களை தன் திறமையால் கட்டி இழுத்தாள், அவளின் பல ஓவியம் பல மக்களின் மனதில் இடம் பிடித்து வீட்டின் சுவற்றில் இடம் பிடித்தது....

அவ்வபோது ஓவியர்களுக்கான சிறு சிறு போட்டிகள் வைத்து மேலும் வளர்ந்தாள்... பல போட்டிகளில் இவளும் கலந்துக் கொண்டு மேலும் மேலும் தன் திறமையை வளர்த்தாள்... இதை எல்லாம் அவள் செய்ய கிட்ட தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது... அந்த ஒருவருடமும் அவளுக்காக எல்லாமுமாக சக்தி இருந்து பார்த்துக் கொண்டான்...

பல மக்களின் மனதில் அவளின் ஓவியம் இடம் பிடிக்க அவளின் ஒரு வருட தீராத உழைப்பு தேவைப்பட்டது... அதுக்கெதுக்கு ஒரு வருடம் என நாம் எண்ணலாம்.. அந்த கலையும் மிகவும் கடினமானதே...

இப்பொழுது சிங்கப்பூரில் வைத்த ஓவிய போட்டியில் இரண்டாம் இடத்தை இதழி தன் கடும் உழைப்பால் பிடித்து, சிங்கபூர் செல்ல இருக்கிறாள்.... இதுவரை தன் ஊரை விட்டு எங்கும் செல்லாத இதழி முதல் முறையாக கடல் கடந்து செல்கிறாள்.... ( பெரிய பிஸினெஸ் மேன் மட்டும் தான் அவார்ட் வாங்கணுமா என்ன..? ஓவிய மக்களும் வாங்கட்டுமே... )

( நடிகர் பொன்வண்ணன்... ( சரண்யா கணவர் ), அவரும் ஓவியர் தான். நாம் பலர் அறிந்திருப்போமா என்று தெரியவில்லை... அவர் பலவருடமாக பல ஓவியங்களை வரைந்து வருகிறார்.., ஓவிய கண்காட்சியில் தன் ஓவியம் இடம் பெற வேண்டும் என்று இப்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் )

(இதழி சிங்கப்பூர் கிளம்புவதற்குள் நாம் வெற்றியை பார்த்து விடுவோம் )

பிறந்த நாள் முடிந்த கையோடு வெற்றி இனியாளை ஆபிஸ் அழைத்து சென்றுவிட்டான்... அவள் இல்லாமல் அவன் எங்கும் அசையவே மாட்டான்... அப்படி அன்யோன்யமாக வாழ்ந்தனர் இருவரும்...

அன்று ஆருஷ் முதல் பிறந்த நாள் மிகவும் ஆர்ப்பாட்டமாக சக்தி ஏற்பாடு செய்திருந்தான்.... நாராயணன் – லக்ஷ்மி இருவரும் அங்கும் இங்கும் சுற்ற அரண்மனையே பிஸியாக இருந்தது, அந்த அரண்மனையின் முதல் வாரிசான குட்டி சக்திவேல், அதாவது ஆருஷன் பிறந்த நாள்...

களைகட்டாமல் இருக்குமா என்ன..? இரு ஆபிஸ் ஊழியர்கள், சூளையில் வேலை செய்பவர்கள் என்று எல்லாரும் அவனின் பிறந்த நாளை சந்தோசமாக மாற்றிக் கொண்டு இருந்தனர்...

குட்டி சக்தி அவனுக்கு ஏக குஷி, அங்கிருந்த எல்லார் மனதையும் கொள்ள கொண்டான் அவன், முளைத்திருக்கும் சிறு பற்களையும் காட்டி எல்லாரையும் பார்த்து சிரித்தவனை அத்தனை பேரும் தூக்கி கொஞ்சிக் கொண்டனர்...

“ சக்தி சார் மாதிரி சிடுமூஞ்சியாக இல்லாமல், மேடம் மாதிரி அழகான சிரித்த முகம் “ என்று குழந்தையை கொஞ்ச, சக்திக்கோ சந்தோசம் பிடிபடவில்லை...

அதிலும் குட்டி சக்தியோ தலை கால் புரியாமல், கையை தட்டிக் கொண்டு நடக்கிறேன் என்று அங்கும், இங்கும் மோதி விழுந்து எழுந்து சிரித்துக் கொண்டு இருக்க, விழா சந்தோசமாக, மகிழ்ச்சியாக இனிதாக முடிந்தது...

அடுத்த நாள் காலையில் ஆபிஸ் கிளம்ப முடியாமல் இனியாள் அப்படியே படுத்திருக்க, அவள் அருகில் பதறி வந்த வெற்றி “ என்னாச்சு ஜில்லு “ என அவளின் அருகில் அமர்ந்து நெற்றியில் கைவத்து பார்க்க,

“ ஒன்னும் இல்லை மாமா, நேத்து வீட்டுல பங்க்ஷன் என்று அலைந்தது ஒரு மாதிரி தலை சுத்துது... ஒரு காபி குடிச்சா சரியா போகும் “ என
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கூறி அவள் முடிப்பதற்குள் வெற்றி சமையல் அறையில் நின்றிருந்தான்... ( எள் என்று கூறும் முன் எண்ணையாக இருகிறான்ப்பா.. )

அடுத்த சில நொடிகளில் அவள் முன் காபி கப்புடன் வெற்றி நிற்க, “ இனி இந்தா எழும்பு “ என அவளை எழ செய்தவன் அவள் கையில் கப்பை கொடுக்க, ஒரு வாய் வைத்தவளுக்கு வாமிட் வர குளியலறை நோக்கி சென்றாள்...

பதறிய வெற்றி அவள் பின்னே சென்றவன் அவளை மெதுவாக தாங்கி பிடிக்க, விலகி வந்த அவள் கட்டிலில் அமர, அவள் அருகில் வந்த வெற்றி “ கொஞ்சம் வெயிட் பண்ணு ஜில்லு அம்மாவை அழைச்சுட்டு வாரேன் “ என ஓடி சென்று லக்ஷ்மியை அழைத்து வந்தான்..

வந்தவர் அவளிடம் ஏதோ கேட்க, யோசித்த அவள் கண்கள் மின்ன தன் கையை வயிற்றில் வைத்து மெதுவாக வருட,

அவளின் நிலையை கண்ட லக்ஷ்மி சந்தோசத்துடன் வெற்றியை அணைக்க, அவனோ “ ம்மா இனிக்கு என்ன ஆச்சு... நீங்க அதுபாட்டுக்கு வந்து என்னை கட்டிபிடிக்கிறீங்க.. “ என கோபத்துடன் அவரை விலக்கி விட்டுக் கொண்டே கேட்க,

அவனை கண்ட அவர் மெதுவாக சிரித்துக் கொண்டே வெளியில் செல்ல,

டென்சன் ஆனா வெற்றி “ ம்மா.. இனிக்கு என்ன ஆச்சு சொல்லிட்டு போங்க “ என கோபத்துடன் கேட்டுக் கொண்டே அவர் பின் செல்ல எத்தனிக்க,

அவனை தாவி அணைத்த இனி “ மாமா “ என கட்டிபிடித்து கண்ணீர் வடிக்க,

“ என்னா ஆச்சு.. இனி ரொம்ப முடியலியா.. ஹாஸ்பிடல் போகலாம்டா வா ஜில்லு “ என அவளை அணைத்துக் கொண்டே கூற,

இனி மனதோ “ மக்கு மாமா... சந்தோசத்துல கண்ணீர் வர கூடாதா என்ன..? “ என எண்ணி அவனிடம் இருந்து மெதுவாக பிரிந்து, அவனின் கையை பிடித்து வயிற்றில் வைக்க,

அவனோ தவித்துக் கொண்டு “ என்னாச்சு இனி வயிறு வலிக்குதா “ என கலங்கி கேட்க,

“ மக்கு.. மக்கு “ என அவனை திட்டியவள் அவன் நடு மண்டையில் ஒரு கொட்டு வைத்து “ நீ அப்பா ஆக போறடா மக்கு..!! “ என கூறி அவனை அணைக்க,

அடுத்த நிமிடம் இனி கால் தரையில் படவில்லை.. அப்படியே அவளை அணைத்து சுற்ற, “ டேய் மாமா தலை சுத்துதுடா “ என இனி முனக,

அவளை இறக்கி விட்டவன் “ தேங்க்ஸ்டா ஜில்லு “ என அவளை அணைத்தான்,

வெளியில் சென்ற லக்ஷ்மியோ வாய்க்குள் சிரித்துக் கொண்டு சென்றார்... மனமோ அத்தனை சந்தோசமாக இருந்தது... உடனே வீட்டில் எல்லாரிடமும் கூற, நாராயணனும், லக்ஷ்மியும் பூஜை அறைக்கு சென்று அந்த இறைவனுக்கு நன்றியை கூறி, இதழி, சக்தியை அழைத்துக் கொண்டு வெற்றி அறைக்கு வந்தனர்...

வெற்றி அவளை அணைத்துக் கொண்டு நிற்க, கதவை தட்டாமல் திறந்துக் கொண்டு இதழி ஓடி வர, இருவரும் அவசரமாக பிரிந்தனர்..

இதழியை தொடர்ந்து சக்தி, லக்ஷ்மி, ஆருஷை தூக்கிக் கொண்டு நாராயணன் என்று எல்லாரும் வந்தனர்...

ஓடிவந்த இதழி அவளின் அக்காவை அணைத்து கன்னத்தில் முத்தமிட வெற்றியின் மனதோ “ எப்பவும் எங்களை பிரிக்கிறதே இந்த குரங்குக்கு வேலையா இருக்கு “ என எப்பொழுதும் போல் இதழியை மனத்தால் திட்ட,

மெதுவாக இருமிய இதழி “ வெற்றி மாமாவோவ்... கொஞ்சம் மெதுவா திட்டுங்கோ.. இங்க வர புகையுது “ என குரல் கொடுத்து தன் கழுத்தை மெதுவாக வருடிக் கொண்டாள்,

அவள் கூறுவதை கேட்டு சிரித்த சக்தி மனதோ “ வாலு “ என மெதுவாக முனக,

அவன் அருகில் நின்ற வெற்றியோ “ உன் பொண்டாட்டி எது பண்ணுனாலும் சிரிச்சுட்டே இருக்கியேடா அண்ணா.. எப்படியாவது அவளை அழைச்சுட்டு வெளிய போண்ணா “ எண்ணி சக்தியை பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்தவன்,

“ வாங்க, நாம போகலாம்... வெற்றி அவளை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்லட்டும் “ என கூறிய சக்தி குறிப்பால் இதழியை கண்ணால் அழைக்க,

சக்தி கூறியதை கேட்டு சந்தோசமான வெற்றி, உடனே சக்திக்கு மனதில் ஒரு கோவிலை கட்டி பூஜைகள் ஆரம்பித்து விட்டான், ஆனால் அதை உடனே கலைத்தாள் சக்தியின் அருமை மனைவி,

“ வெற்றி மாமா, ரொம்ப கற்பனையை பறக்க விடாதீங்க... ஆருஷ் பிறக்கும் பொழுது அக்கா என்னை எப்படி பாத்துகிட்டாளோ, அதே போல நானும் அக்காவை முழு நேரமும் அவங்க பக்கத்திலையே இருந்து பார்ப்பேன் “ என அவன் தலையில் குண்டை இறக்க,

சக்தியோ “ பாவம் இதழி, வெற்றி அவனை விட்டுரு “ என கண்ணால் மட்டுமே வேண்ட முடிந்தது,

உடனே நாராயணனும் “ ஆமா, வெற்றி இதழி சொல்லுறது தான் சரி, நீ ஆபிஸ் போயிருவ, நானும் கிளம்பிருவேன், அம்மாக்கு ஆருஷை பார்க்கவே நேரம் சரியா இருக்கும்... இதழி தான் இனியை நல்லா கவனிப்பா “ என அவரும் கூற,

வெற்றியை பார்த்த இதழி நமட்டு சிரிப்பு சிரிக்க, “ எல்லாரும் சேர்ந்து என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிக்கவே பார்க்குதுங்க.. வெற்றி உஷாரா இரு “ என தனக்கு தானே கூறியவன் “ இனி கிளம்பு எதுக்கும் நாமா டாக்டர் பார்த்துட்டு வருவோம் “ என அதி புத்திசாலியாக ஒரு ஐடியாவை கூற,

அவன் கூறுவது எல்லாருக்கும் சரியாக பட “ சரி வெற்றி பாத்து பத்திரமா போயிட்டு வாங்க “ என கூறிய லக்ஷ்மி எல்லாரையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார்..

ஹாஸ்பிட்டலில் அவளின் கர்ப்பம் உறுதி பட, அடுத்து வந்த சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும் அத்தனை சந்தோசமாக சென்றது இருவர் வாழ்கையும்...

இப்படி சந்தோசமாக செல்லும் என்று இருவருமே எண்ணவில்லை... சக்தியோ ஒவ்வொரு நொடியும் உணர்த்துவான் “ உங்களுக்கு நான்... எனக்கு நீங்கள் “ என்று...

அன்று இதழியை தேடி வந்த வெற்றி “ இதழி சிங்கப்பூர்ல ஒரு ஓவிய காம்பெட்டிஷன் இருக்கு... அதுல நீ கலந்துகிறியா..? அது உனக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கும் “ என யோசனையாக அவளிடம் கேட்க,

“ சிங்கபூர்லையா..!! “ என வாயைபிளந்த இதழி “ வேண்டாம் மாமா... அங்க எல்லாம் கலந்துக்க நிறைய திறமை வேணும்... நான் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வாரேன் “ என கூற,

அந்த நேரம் அறைக்கு வந்த சக்தி “ என்னடா. வெற்றி “ என கேட்க,

தான் வந்த விசயத்தை கூறி, இதழி தயக்கத்தையும் கூற, இதழியை பார்த்த சக்தி “ என்ன இதழி, வாய்ப்பு எல்லாருக்கும் வராது.. வரும் நேரம் கெட்டியா பிடிச்சுக்கணும் “ என கூறியவன் “ எதுக்கு பயப்படுற இதழி, உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா... அப்படி நம்பிக்கை இல்லாதவள் தான் நான் ஆபிஸ் பொறுப்பை தரும் பொழுது வேண்டாம்ன்னு சொன்னியா, உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லன்னா எப்படி... இந்த முறை கலந்துக்கோ இதழி.. அப்புறம் பாரு நீ எப்படி வளர்கிறாய்... உனக்கே உன்னை நினைத்து பெருமையா இருக்கும்... “ என அவளிடம் காதலாக கூறி, காதலாக அணைக்க,

“ இல்ல குட்டிமாமா, அங்க எல்லாம் வேண்டாம் “ என பெரும் தயக்கமாக கூற,

அவளை முறைத்த அவன், வெற்றியை நோக்கி “ நீ சொல்லுடா வெற்றி, இவா கண்டிப்பா கலந்துப்பா. என்ன எல்லாம் செய்யணும் சொல்லு “ என கேட்க,

“ ஒண்ணும் செய்ய வேண்டாம் அண்ணா.. நான் அந்த நியூஸ் இதழிக்கு அனுப்பிட்டேன்.. அவள் தான் ஆன்லைன் பக்கம் வரலியே... இனி கூடவே சுத்துறா “ என சிறு கடுப்பாக கூற,

அவனை பார்த்து சிரித்த சக்தி “ சரிடா இனிமேல் உன் பொண்டாட்டியை நீயே பார்த்துக்க... இவளுக்கு நிறைய வேலை இருக்கு “ என கூற,

“ யப்பா.. வந்த வேலை முடிந்தது “ என்ற மனநிலையுடன் தன் மனைவியை காண சென்றான் வெற்றி.... இனியாளோ இரு கருவை சுமக்கிறாள் என்று இதழி அவள் அருகிலையே அமர்ந்துக் கொண்டாள்... வெற்றி வந்தாலே “ மாமா அவ கிட்ட போகாதீங்க, நைட் அவள் என்கிட்ட தூங்கட்டும், நீங்க கால் போடுவீங்க அது, இது என்று அவனை மிகவும் சோதனை படுத்திவிட்டாள் இதழி.. வெற்றி பாவமாக இனியை பார்க்கும் நேரம் எல்லாம் அவளோ “ இப்பொழுது தான் இதழியை முதல் முதலாக பார்ப்பதுப் அவனை கண்டுக் கொள்ளாமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள்... அது தான் தேடி, தேடி இதழிக்கு ஒரு பெரும் வேலையை கண்டுபிடித்து ஒப்படைத்து விட்டான்...

வெற்றி அனுப்பிய நியூஸ் பார்த்த இதழிக்கு பெரும் யோசனை, சக்தியிடம் கேட்டதற்கு “ உன் தனிப்பட்ட உழைப்பு தான் போட்டிக்கு தேவை இதழி “ என்று ஒரே வரியில் அவன் முடித்து விட்டான்..

“ எப்படி வரைவது, அவர்கள் எதிர் பார்ப்பதை தன்னால் நிறைவேற்ற முடியுமா..? “ என்பது தான் அவளின் பெரும் யோசனையாக இருந்தது...

அவர்கள் எதிர் பார்ப்பது “ ஓவியத்தை பார்ப்பவர் மனது, அவர்களையும் அறியாமல் “ அய்யோ “ என்ற வார்த்தையை உதிர்க்க வேண்டும் “ அப்படி வலி நிறைந்த ஓவியம் ஒன்றை வரைய வேண்டும் அது தான் அந்த சிங்கபூர் டீம் எதிர் பார்ப்பது...

அன்றைய அரசன் ஷாஜகான் நிலையில் இருந்தது சிங்கப்பூர் டீம்... இதழியோ அன்றைய கொத்தனார் நிலையில் இருந்தாள்...

முன்னொரு காலத்தில் ஷாஜகான் அவரின் காதலிக்கு, நினைவு சின்னம் கட்ட உத்தரவு பிறப்பித்த சமயம், அவர் முன் எல்லார் கொத்தனாரும் அவர் முன் குழுமி இருக்க,

எல்லாரையும் பார்த்த ஷாஜகான் “ நினைவு சின்னம் என் காதலியின் மறைவுக்கு கட்டுவது, அதை பார்க்கும் எல்லார் மனதிலும் அந்த சோகம் பிரதிபலிக்கும் படியாக கட்ட வேண்டும்.. அப்படி இல்லையென்றால் அவர்களின் தலை எடுக்கப்படும் “ என்றும் ஆணை பிறப்பிதிருப்பார்...

அவரின் ஆணையை கேட்ட எல்லா கொத்தனார் ( அந்த காலத்தில் இன்ஜினியரை எப்படி சொல்லுங்கன்னு தெரியலை..பாட்டிமார்கள் கொத்தனார் தான் சொல்லுவாங்க.. சோ நானும் அப்படியே சொல்லிட்டேன்... சரியான வார்த்தை தெரிஞ்சா சொல்லுங்க.. நான் தெரிந்துக் கொள்கிறேன்... ) மனதிலும் ஒரே எண்ணம் “ அவர் நினைப்பது தாங்களால் முடியுமா.? “ என்ற வினா மட்டுமே..,

ஆனால் அங்கிருந்த ஒரே ஒருவன் மட்டும் “ உங்களின் எண்ணத்தை நான் நிறைவேற்றுவேன் “ என்று தைரியமாக முன் வருவான்...

அவனின் தைரியத்தை எல்லாரும் பாராட்ட, அவன் வேலையை ஆரம்பிக்க அவனுக்கு வெகுமதியும் அளித்து, அரண்மனையில் பெரிய வீடும் ஏற்பாடானது..

அதில் முக்கியமான ஓன்று அவனுக்கு இன்னும் திருமணம் முடியாத வாலிபன் அவன், யாரும் இல்லாதவன் அவன், அதனால் தான் தலை போனாலும் பரவாகயில்லை என்று தைரியமாக வாக்கு கொடுத்து விட்டான்...

அவன் அரண்மனையில் குடியேறிய நேரம் நல்ல நேரமோ, இல்லை அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்ததோ, எதுவோ ஒன்றில் அவன் அரண்மனைக்கு வந்த ஒரே மாதத்தில், அவனுக்கும் காதல் வந்து, அவளை கைபிடித்தான்...

திருமணம் முடிந்த இரண்டு மாதம் அவன் வேலையை ஆரம்பிக்கவே இல்ல.. காதல் மனைவியுடன் நேரம் கழிக்கவே அவனுக்கு ஒரு நாள் பத்தவில்லையாம்..

இதற்கிடையில் ஷாஜகானும் “ எப்பொழுது வேலையை ஆரம்பிக்க போகிறாய்.?’ என கேட்டு ஆள் அனுப்ப ஆரம்பித்து விட்டார்...

அவரின் மனைவியும், அரசனுக்கு பயந்து “ வேலைக்கு செல்லுங்கள் “ என கட்டாயபடுத்த தன் மனைவிக்காக வேலையை ஆரம்பிக்க சென்றான்...

ஆனால் அவனால், அரசர் கூறியதுப் போல் “ சோக சித்தரமாக “ கட்ட தோணவே இல்லையாம்...

இதே போல் ஒரு மாதமாக அங்கு செல்வதும், வேலை ஆரம்பித்து முடியாமல் சென்றதாம்..

அவன் மனம் முழுவதும், சந்தோசமும், தன் காதல் மனைவியின் சிரித்த முகமே மனதில் வர, அவனால் சோக சித்திரம் வரைய முடியவில்லை... மனம் மகிழ்ச்சியில் இருக்க எப்படி சோக சித்திரம் வரைவது.. இதே நிலையில் தான் இதழியும் இருந்தாள்...

இப்படியாக மூன்று மாதம் செல்ல, அரசன் மிகவும் கோபமாகி விட்டானாம்... “ சீக்கிரம் வேலையை ஆரம்பிக்காவிட்டால், அரசவையை ஏமாற்றியதற்காக உன் தலை துண்டிக்க படும் “ என காவலாளி வந்து கூறினாராம்,
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
தன் காதலை பிரிந்து தன் மனைவி இருப்பாளா..? அவளால் முடியுமா./ கண்டிப்பாக முடியாது என எண்ணிய கொத்தனார், அடுத்த இரண்டு நாள் அவரின் மனைவியிடம் பேசாமல் இருந்து விட்டு வேலைக்கு சென்றாராம்..

அன்றும் அவர் மனதில் சோகம் வரவே இல்லையாம். “ அன்றும் மனது சந்தோசமாக இருந்ததாம்... இன்னொரு மனதோ இன்னைக்கு அவளிடம் பேசவில்லை என்றால் அவளிடம் நாளைக்கு பேசி கொள் என கூறி அவளிடம் சந்தோசமாக இருந்த நாள் மனதை விட்டு மறையாமல் அவனை இம்சை பண்ண “ அன்றும் வேலை நடக்கவில்லையாம்...

இதில் கோபமான அரசனே வந்து வீட்டில் எச்சரிக்க, அவன் வீட்டுக்கு வந்ததும், அவனின் மனைவி “ கட்டிடத்தை கட்ட முடியாமல் உங்களை எது தடுக்கிறது “ என கேட்டாளாம்..

அதற்க்கு அவர் கூறினாராம் “ நீ தான், உன் காதல் தான் என்னை தடுக்கிறது.. உன்னுடன் இருந்த சந்தோசமான நொடிகள் தான் என்னை தடை செய்கிறது “ என்றானாம்..

கூடவே “ இத்தனை சந்தோசமாக இருக்கும் என்னை எப்படி சோகமாக கட்டிடம் கட்ட முடியும்..? “ என அவளிடமே கேள்வியும் கேட்டாராம்...

அதற்கு அவள் கூறினாளாம் “ நீங்கள் அதை கட்ட வில்லை என்றால் அவர் உங்கள் உயிரை எடுப்பார், நீங்கள் இல்லை என்றால் என்னால் வாழமுடியாது, நான் இருந்தால் உங்களால் சோகமாக கட்ட முடியாது... நீங்கள் அரசர் எண்ணத்தை நிறை வேற்ற வேண்டும் அதற்கு நான் இல்லாமல் போக வேண்டும் “ என சிரித்துக் கொண்டே கூறியவள்,

அவள் கூறுவதை அவர் உள்வாங்கும் முன் அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து அவள் தன் உயிரை விட்டாளாம்....

கொத்தனார் என்ன நடக்கிறது என்று அறியும் முன்னே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.. அரசர் அழைப்பும் அதிகரிக்க,

தன் மனைவியின் மறைவை மறக்க முடியாமல், அவளின் உயிர் போன சோகத்தில், தாஜ்மஹாலை கட்டிய ஒவ்வொரு பொருளிலும் அவரின் சோகம் ஒளிந்து இருந்ததாம்...

அவரின் மனைவிக்காக, அவளின் சோகத்தை மறைக்க கட்டியது தான் “ ஷாஜகான் தன் காதலிக்காக கட்டிய தாஜ்மாஹல் “....

தாஜ்மஹாலை கண்ட பாரதியார் கூட கூறி இருப்பார் “ கன்னங்களில் வடியும் கண்ணீர் துளி போல் உள்ளது “ என்று கூறியிருப்பார் ...

அந்த கொத்தனார் நிலையில் இருக்கும் இதழி எங்கு செல்வாள் “ அய்யோ “ என்ற வார்த்தைக்கு...

இப்படியாக அவள் பல நாள் யோசிக்க, ஒரு நாள் சக்தியை அழைத்துக் கொண்டு ஷாபிங்க் செல்ல,

அங்கு ஒரு கர்ப்பிணி தன் கணவருடன் நடந்து செல்ல, அவளையே பார்வையால் தொடர்ந்தாள் இதழி, அந்த நொடி அங்கிருந்த ஏதோ ஒரு பொருள் தட்ட அவள் தடுமாறி பின்னால் வேகமாக விழ போக சுற்றி இருந்த எல்லார் வாய்களும் தானாக “ அய்யோ “ என்ற வார்த்தையை உச்சரித்து அவளை பிடிக்க வர, அதற்குள் அவள் கணவன் “ பார்த்து நடக்க மாட்டியா “ என சிறு கண்டிப்புடன் அவளை தாங்கி பிடித்து அழைத்து சென்றான்...

அதே காட்சி இதழி மனதில் அப்படியே பதிய, அதையே தனது ஓவியமாக வரைந்து விட்டாள்.... ஒரு கர்ப்பிணி பின்னால் விழ சாய்வது போல், அவளின் பின்னால் ஒரு பெரிய கல் இருப்பது போல் 3Dயாக வரைந்திருந்தாள்...

அதை பார்க்கும் எல்லாரும் ஒருநிமிடம் தங்களையே மறந்து, அது ஒரு ஓவியம் என்பதையும் மறந்து “ அய்யோ ‘ என்ற வார்த்தையை கண்டிப்பாக கூறுவார்கள் என கூறி வரைந்து அனுப்பினாள்...

இதழி சக்தி கூறியதற்காக மட்டுமே போட்டியில் கலந்துக் கொண்டாள்.. ஆனால் நன்றாக தான் வரைந்தாள்... ஆனாலும் மனதில் ஒரு ஓரத்தில் எப்படியாவது சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது... ரிசல்ட் மூன்று மாதத்தில் அறிவிக்கபடும் என்று கூறி விட்டார்கள்...

மிக பெரிய போட்டி அது... அதற்குள் இனிக்கும் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் நல்ல படியாக முடிந்தது... வெற்றி அவளை உள்ளம் கையில் தங்கினான்... வீட்டில் எல்லாரும் அவளை அப்படி பார்த்துக் கொண்டனர்... இதற்கிடையில் சக்தி இதழிக்கு மீண்டும் ஒரு வேலையை கொடுத்தான்.. ஏதாவது வேலை கொடுத்து அவளின் திறமையை வெளி கொண்டு வருவது தான் சக்தியின் முழு நேர வேலை.. அவளும் ஆர்வமாக செய்வாள்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் என மருத்துவர்கள் கூற, வெற்றியோ மிகவும் பயத்துடன் இருந்தான்... அன்று அப்படி அவளை அணைத்துக் கொண்டு நிற்க,

சக்தியோ, இதழி திறமையால் மீண்டும் ஒரு பெரிய ஆர்டர் அவனுக்கு கிடைத்ததில் சந்தோசமாக கட்டியணைத்துக் கொண்டு நிற்க, அதே நேரம் கதவை திறந்து கொண்டு மெதுவாக ஆருஷ் உள்ளே நுழைந்தவன் இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை பார்த்து சத்தமில்லாமல் வெளியில் வந்தவன்,

வெற்றி அறைக்கு சென்றான். அங்கு வெற்றியும், இனியும் அணைத்து நிற்பதை பார்த்தவன் அவர்கள் முன் வந்து நின்று " சித்தா " என ஓங்கி குரல் கொடுத்து வாய் பொத்தி சிரிக்க, வெற்றிக்கு தான் மிகவும் வெட்கமாக போய் விட்டது...

" பிரிக்க குடும்பமாவே சுத்துறீங்களேடா " என கேலியாக கூறி அவனை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான் வெற்றி...

ஆருஷ் வெற்றியை " சித்தா " என்றும், இனியை " இம்மா " என்றும் அழைப்பான்... இருவரும் மேலும் அப்படி பாசமாக இருப்பான்...

வெற்றி ஆருஷுடன் " உனக்கு தம்பியும், தங்கையும் வர போறாங்க " என கூறி குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள்....

இப்படியாக நாட்கள் செல்ல அன்று ஓவிய ரிசல்ட் வர, அதை யாருமே கவனிக்கவே இல்லை.. அடுத்த ஒரே வாரத்தில் இதழிக்கான சிங்கப்பூர் செல்வதற்கான பிளைட் டிக்கெட் வீடு தேடி வர, அப்படியே திக்கு முக்காடி போனாள் அவள்..

எதிர் பார்க்காத வெற்றி... இரண்டாம் இடம் என இன்வெட்டேஷனுடன் அவளுக்கு டிக்கெட் சேர்த்து வந்திருந்தது... சந்தோஷத்தில் அப்படியே சக்தியை அணைத்துக் கொண்டாள்... பின்னே அவன் தானே அவளை கட்டாய படுத்தி அனுப்பி அவளின் திறமையை அவளுக்கு எடுத்து கூறியது....

வெற்றி தான் " அண்ணே .. சிங்கப்பூர் போயிட்டு, அப்படியே உங்க ஹனிமூன் முடிச்சுட்டு வாங்க " என கண்ணடித்துக் கூற,

சக்தி கேள்வியாக இதழியை பார்க்க, அவள் அவனை பார்த்தால் தானே..?

அப்புறம் என்ன நல்ல படியாக சக்தி குடும்பம் மூன்று பேரும் அங்கு செல்வது முடிவாகி விட்டது...

அங்கு செல்ல இரண்டு வாரம் இருக்கும் முன் இனிக்கு வலி வர அவளை மருத்துவமனையில் சேர்க்க, டாக்டர் இது பிரசவ வலி தான் என கூற, வெற்றி பயத்துடன் சக்தியை பிடித்துக் கொண்டான்..

வெற்றி கை நடுங்கி கொண்டிருக்க, அவனின் இந்த அவஸ்தை புதிதாக இருந்தது சக்திக்கு... அதே நேரம் ஒரு மனது தானும் இதே அவஸ்த்தையை அனுபவிக்க ஆசைக் கொண்டது... அப்படியே அவன் இதழியை பார்க்க, அவளோ ஆர்வமாக இனி இருக்கும் அறையை பார்த்துக் கொண்டு இருந்தாள்..

அடுத்த பல மணி நேரத்தில் இரண்டு நர்ஸ் வந்து “ வாழ்த்துக்கள் சார், உங்களுக்கு பையனும், பொண்ணும் பிறந்திருக்கு.. குளிக்க வைச்சுட்டு இருக்காங்க " என கூறி செல்ல,

கண்களில் துளிர்த்த சிறு கண்ணீர் துளியுடன் சக்தியை அணைத்துக் கொண்டான்... அடுத்த கொஞ்ச நேரத்தில் கைகளில் குழந்தையை பஞ்சு பொதியென ஏந்தி இரண்டு நர்ஸ் அவர்கள் அருகில் வர,

அதை கண்ட வெற்றி " அண்ணா குழந்தையை நீ வாங்கு " என கூற,கண்களில் துளிர்த்த கண்ணீர் துளியுடன் மெதுவாக ஒரு குழந்தையை சக்தி வாங்க,

மனதோ தன் குழந்தையை தான் இப்படி தூக்க வில்லையே என்ற ஏக்கம் வருவதாய்.., இனி குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்டு இதழி இரவு சக்தியிடம் கூறும் பொழுது அவனுக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்...

அவனின் கஷ்டத்தை அவள் அறிந்தாளோ என்னவோ அதன் பிறகு அவள் எதையும் அவனிடம் கூறுவதில்லை.. ஆனால் இன்று அவனுக்கு அந்த அனுபவம், அந்த உணர்வு, அந்த வலி எல்லாம் வேண்டும் போல்...

இன்னொரு குழந்தையை நாராயணன் வாங்கிக் கொண்டார்... வெற்றி ஆவலாக இனி இருக்கும் அறையை பார்க்க, அடுத்த அரைமணி நேரத்தில் அவளை ரூம் மாற்ற ஆவலாக ஓடி சென்றான் வெற்றி...

அடுத்த ஒரு வாரத்தில் இனியையும், குழந்தையும் ஆலம் சுற்றி வீட்டில் அழைத்து வந்தனர்...அவர்கள் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து ஆருஷ் இருப்பிடம் குழந்தைகள் அருகில் தான் இருந்தது...

அன்று ஆருஷை தூக்கிய சக்தி " கண்ணா உனக்கு தம்பி வேணுமா.? பாப்பா வேணுமா.? " என கேட்க

வேகமாக தலையை ஆட்டிய ஆருஷ் " நானா ப்பா... நோ டம்பி, நோ பாப்பு.. சித்தா பாப்பா நானு போதும் " என தலையை ஆட்டி ஆட்டி கூறி அவனை விட்டு இறங்கி வெளியில் ஓடி சென்றான் அவன்.. அவனுக்கு வெற்றியின் இரு குழந்தைகளும் தம்பி, தங்கையாக போதும் என கூறினான்...
ஆருஷ்
கூறிய பதிலை கேட்டு சக்தி தலை தொங்கி போக, இதழியோ வாய் விட்டு சிரித்தாள், மனமோ எல்லாம் வெற்றி மாமா வேலையா இருக்கும் என சிரித்துக் கொண்டாள்.......

அதன் பிறகு சக்தி ஒரு வித யோசனையாக சுற்ற அன்று இரவு அவனை தடுத்த இதழி,

“ மாமா என்ன ஆச்சு உங்களுக்கு நானும் ரெண்டு நாளா உங்களை பாக்குறேன் ரொம்ப பீலிங்ஆ சுத்துறீங்க.. ஏதாவது பிரச்சனையா... சிங்கபூர் போறதை பத்தி யோசிகுறீங்களா..? “ என அவனின் கையை பிடித்து கேட்க,

“ பச்.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல இதழி “ என அவளின் கையை தள்ளி விட்டு கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்...

அவன் அருகில் வந்த அவள், அவனை தன் பக்கமாக திருப்பி, “ சொல்லுங்க மாமா.. என்ன ஆச்சு “ என சிறு கோபம் காட்டி கேட்க,

அவளையே ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சக்தி, எரிச்சலாக, கோபமாக, ஆவேசமாக “ எனக்கு இன்னொரு குழந்தை வேணும், அந்த குழந்தையோட அசைவு, ஆதி முதல் அந்தம் வரை நான் உணரனும், அன்னைக்கு வெற்றி அழுதான் பார்த்தியா அதே போல நானும் அழணும், குழந்தையை முதல் முதலா நான் தான் என் கையில் ஏந்தணும், உன்னை அந்த நேரம் அப்படி பாத்துக்கணும்.. இப்படி நிறைய ஆசை இருக்கு.. உன்னால உடனே இதை நிறை வேற்ற முடியுமா...? “ கோபமாக கேட்டு அவளை ஆவேசமாக பிடித்து உலுக்க,

அவனை நிதானமாக பார்த்தவள் “ நானா இதை எல்லாம் செய்ய வேண்டாம்னு உங்களை தடுத்தேன்... நீங்க தான் சின்ன முத்தம், சின்னதா ஒரு கட்டிபிடித்தல் இதுவே போதும்ன்னு சுத்துறீங்க.., பொண்டாட்டிக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும்னு நீங்க தான் சொல்லிட்டு சுத்துறீங்க.. இதுல என் மேல கோபப்படுறதை பாரேன் “ என மெதுவாக முணுமுணுத்துக் கொண்டு இதழை சுழித்த அவள் அவனின் மறுபக்கமாக திரும்பி படுத்துக் கொள்ள,

வேகமாக எழுந்த சக்தி, அவளை தன் புறமாக திருப்பி “ என்ன சொன்ன “ என,

“ எல்லாம் சரியா தான் கேட்டுச்சு “ என மீண்டும் திரும்பி படுக்க,

“ உனக்கு ஓகேவா./ என் மேல கோபம் இல்லையே.. ஆருஷ் உண்டான நேரம் உன்கிட்ட நான் இல்ல.. அதை நினைச்சு தான் நா.. நான் விலகி இருந்தேன் “ என தடுமாற்றமாக கூற,

“ அதுக்கு தான் நீங்க இப்போ எங்களை நல்லா பாத்துக்கிறீங்களே... அப்புறம் என்ன குட்டிமாமா, பழசை எல்லாம் மறந்து விடுங்க மாமா.., ஆனா ஒண்ணு இந்த லிப்ஸ்ஷை மட்டும் மறக்காதீங்க “ என சிறு கேலியுடன் கூற,

“ ஆஹான்... அப்படியா லிப்சை மறக்க கூடாதா.? “ என கேள்வியாக கேட்டவன், அவளையும், அவளுடனான அந்த நினைவையும் நான் இன்னும் மறக்கவில்லை என்று அவளுக்கு விளக்க ஆரம்பித்தான்...

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக்கொள்ளவோ..?

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல உன்னோடு கட்டிக் கொள்ளவோ..?

உன்னை தேடி மண்ணில் வந்தேன் என்னைத்தேடி நீயும் வந்தாய் உன்னை நானும் என்னை நீயும் கண்டுக் கொண்டோம்...

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும் போது, பூமி வாழப் புதிய காதல் கொண்டு வந்தோம்...

பனியோ பனியின் துளியோ உன் இதழ் மேல் என்ன பனியோ தேனோ நான் சுவைத்தால் என்ன..?

வேர் காதலால் கசிந்துருகி சாய்ந்தது...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top