• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)..!!! Epi - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹலோ... மக்களே...!!
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி 14 கொண்டு வந்துட்டேன்.... இதுவரை தொடர்ந்து படித்து கமெண்ட்ஸ் சொல்லுற எல்லாருக்கும் நன்றி மக்களே.... படிக்குறவங்க லைக், கமமென்ட்ஸ் பண்ண மறந்திராதீங்கோ...

வேர் – 14

அடுத்த நாளில் இருந்து வேலைகள் அவனை சூழ்ந்துக் கொள்ள இதழியை மறந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்... அவளிடம் அவன் பேசவும் இல்ல., அவளை பார்க்கவும் இல்லை.. செங்கல் சூளையில் லோட் விஷயமாக அவன் அலைய அவளை மறந்து போனான்.

அதிலும் வெற்றி, இனியாளிடம் நின்று பேசுவதை கண்ட லக்ஷ்மி அவனிடம் வந்து “ டேய்.. வெற்றி என்னடா இப்படி வயசு பிள்ளைகிட்ட நின்னு இப்படி மணிகணக்கில் பேசுற“ என அவன் மேல் சாட..

“ ம்மா... ஏன்ம்மாஇப்போ உனக்கு... இவள் ஸ்கூல் முடிச்சுட்டா.. அடுத்து என்ன படிக்க போறான்னு தான் கேட்கிறேன் “ என கூற..

“ ஆமா.. இவளுகளை இவ்வளவு படிக்க வைத்ததே பெருசு.. இதுல இதுக்கு மேலையும் படிக்க வைக்கனுமாக்கும்… போடா உன் வேலையை பார்த்துட்டு “ என போகிற போக்கில் சொல்லி கொண்டு போக...
அவர் கூறியதை கேட்டு முகம் வாட நின்றவளை, சமாதானம் செய்து அனுப்பிய வெற்றி மனதில் “ இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க“ என்ற யோசனையே பலமாக ஓடியது..

காலேஜ் எல்லாம் திறக்க இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது.. இனியாள் நல்ல மார்க் எடுத்து பள்ளிப் படிப்பை முடித்து விட்டாள்.. இதழியோ எப்பொழுதும் போல் என்னால் முடிந்தது நான் பாஸ் ஆகிவிட்டேன் என்ற நிலையில் பள்ளிப் படிப்பை முடித்தாள்..

இனியாளுக்கு மேல் படிக்க ஆசை.. ஆனால் பாட்டி தன் நிலை, அதிலும் லக்ஷ்மி பற்றி அறிந்து “ வேண்டாம்டா.... இனி“ என கூறி விட்டார்..

நாராயணனிடம் கூறலாம் என்றால் அவர் வீட்டுக்கு வருவதே வெகு நேரம் கழித்து தான்... அதிலும்“ மாமா” என்று அழைத்தாலே லச்சுவின் ஒரு முறைப்பில் நடுங்கி விடுவாள்.... இப்பொழுதுஎல்லாம் “தன் படிப்பு அவ்வளவு தானா...? நானும் இவர்களைப் போல் பெரியாளாக முடியாதா..? எப்பொழுதும் இவர்களுக்கு வேலைகாரர்கள் தானா..?? “ என எண்ணம் பலவாறாக ஓடியது..

இதழியோமேல் படிப்பு பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் “ குட்டிமாமா தன்னை காதலிக்கவே இல்லையா..? இன்னும் என்னிடம் விளையாடி தான் பார்கிறாரா..? “ என பலவாறாக எண்ணி நேரத்தை கடத்தினாள்...
அன்று கண்ணுபாட்டியிடம் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருக்க... வீட்டுக்கு வந்த சக்தி இவர்களைப் பார்த்துக் கொண்டே தன் அறைக்கு சென்றவன்..

அடுத்த கொஞ்ச நேரத்தில் இவர்களை நோக்கி வந்தான்.. “ பாட்டி இதுல ரெண்டு பேரையும் சைன்பண்ண சொல்லுங்க “ என கூறி இரண்டு பார்ம் பாட்டி கையில் கொடுக்க..

“ என்னடா குட்டியப்பா “

“ பாட்டி இனியும், இதழியும் ஸ்கூல் முடிச்சுடாங்கல்ல அது தான் காலேஜ் பார்ம்.. ரெண்டு பேரையும் சைன் பண்ண சொல்லு... எனக்கும் வேலை பிஸியில் மறந்துட்டேன்... வெற்றிகிட்டயும் சொல்ல மறந்துட்டேன்.. டைம் வேற இல்ல “ என கூறி இதழியை பார்க்க..

அவளோ முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள.. அவளை யோசனையாக பார்க்க... இனியாளோ சந்தோசமாக பாட்டி கையில் இருந்த பார்ம் பார்த்துக் கொண்டு இருந்தாள்..

அவள் கையில் பார்ம் கொடுக்க... அதை வாங்கிய இனி, தன் தங்கை இதழியையும் அழைத்துக் கொண்டு அவுட்ஹவுஸ் நோக்கி சென்றாள்...

வெளியில் வர, வெற்றி அவளை கண்டு சந்தோசத்துடன் அவளை நோக்கி வர.., அவனை காணாமலே அவனை இடித்து விட்டு சென்றாள் அவள்..

“ அட.. மாமா வரதை கூட கவனிக்காம டார்லிங் போகுதே..?? என்னவா இருக்கும்“ என யோசித்துக் கொண்டே வெற்றி பாட்டி அறைக்குள் நுழைய..

“ குட்டியப்பா .. எனக்கு பிறகும் நீ தான் என் பேத்தியை கவனிக்கணும்... எங்க அவங்களை கட்டிக் கொடுத்தாலும் நீ தான் அவங்களுக்கு எல்லாமுமா இருந்து பார்க்கணும் “ என அவனின்கையை பிடித்து கெஞ்ச...

“ என்ன பாட்டி நீ இப்படி சொல்லுற.. அவங்களை பாத்துகிறது என் கடமை “ என்று அன்னைக்கே சொல்லிட்டேனே.. நீங்க கவலையே படாதீங்க..இப்போ கூட இனி நல்லா படிப்பா அது தான் அவளுக்கு கம்ப்யூட்டர் சைன்ஸ் கோர்ஸ் எடுத்திருக்கேன்...இதழி படிப்பு ரொம்ப மோசம்.. அது தான் நாளைக்கு நம்ம ஆபிஸ்ல கூட என் கூட துணைக்கு அவளை அழைச்சுக்கிடலாம்ன்னு அவளுக்கு அக்கௌன்ட் கோர்ஸ் எடுத்திருக்கேன்... இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம் பாட்டி.. நான் பார்த்துகிறேன்.. நீங்க அவங்களை பத்தி நினைக்காம ரெஸ்ட் எடுங்க " என கூறி எழ...

கதவை நோக்கி திரும்பிய சக்தி அதிர்ந்துவிட்டான்….. கைகளை கட்டி அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வெற்றி... “ ஆக.. இரண்டு பேரும் ருக்கு அத்தை பொண்ணுங்க..!! “ என கேட்க..

அமைதியாகநின்றிருந்தார் கண்ணுபாட்டி... சக்தியை விட ருக்ஸ் பற்றி நன்கு அறிந்தவன் வெற்றி... காரணம் அவன் தான் அதிகம் பாட்டிக் கூடவே இருந்தவன்... வெற்றிக்கு பாட்டியை எந்த அளவு பிடிக்குமோ.. அதை விட பலமடங்கு சக்திக்கு பாட்டியை பிடிக்கும்...

வெற்றி ஆர்ப்பாட்டமாக பாசத்தை காட்டுபவன், ஆனால் சக்தியோ சத்தம் இல்லாமல் செயலில் பாசத்தை காட்டுபவன்.. அது தான் லக்ஷ்மி இருவரையும் வெறுத்து ஒதுக்கினாலும், பாட்டிக்காக இருவரையும் நன்குப் பார்த்து, இதழியை சத்தம் இல்லாமல் காதல் செய்பவன்... அதிலும் “ ஒரு வேளை இவன் மனதில் இதழி இருக்கிறாள் என்றோ இல்லை இருவரும் இந்த வீட்டின் வாரிசு என அறிந்தால் லக்ஷ்மி எப்படி மாறுவார் “ என்று யாராலும் கணிக்க முடியாது..... அது தான் அவளின் காதல் அறிந்தும் அமைதியாக அவளை ரசித்து செல்கிறான்...

அவனுமே தராதரம் பார்த்து பழகும் ராகம் தான்... சிறுவயது முதலே தன் தாயின் கட்டுபாட்டில் வளர்ந்தவன்... அவர் ஊட்டி வளர்த்த அந்த தகுதி இன்னும் அவன் மனதின் ஓரத்தில் இருக்கிறது.. அதுவும் இதழியின் மேல் உள்ள காதலை கூறாமல் இருக்க காரணமாகவும் இருக்கலாம்..?

அது தான் அவர்களையும் தங்களை போல் உயர்த்தி.. தன்னை போல் ஒரு தொழிலை எடுத்து நடத்தும் திறமையை வளர்க்க வேண்டும்.. அப்பொழுது தான் தன் தாயும் அவளை ஏதும் கூறமாட்டார், தன் ஆசைக்கும் தடை விதிக்க மாட்டார் “ என்பது தான் அவன் எண்ணம்..ஆனால் காலம் எண்ணமோ..??

இப்பொழுது வெற்றியின் கேள்விக்கு “ ஆம்“ என கூறியவனின் மனதிலோ இதழியின் பாராமுகம் வந்துப் போக..,
நேராக அவுட்ஹவுஸ் நோக்கி சென்றான்... அங்கு சென்ற பிறகு தான் இனி அவுட்ஹௌசில் இருக்கிறாள் என்ற நியாபகம் வர.., தன் நடையை நிறுத்திய அவன் தோட்டத்தில் புகுந்துக் கொண்டான்...

அவன் மனது பலவாறாக தவித்து கொண்டு இருந்தது.. ஒரு மனதோ தன் தாயை எண்ணி கலங்கியது, இன்னொரு மனதோ இதழி என ஓயாமல் கூறியது.. தன் அம்மா தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கலைப்பதா..? இதழி தன் மேல் வைத்திருக்கும் காதலை கலைப்பதா..?? ரெண்டுக்கும் நடுவில் தடுமாறிப்போனான்...

இப்பொழுது என்ன என்றால் இதழி முகத்தை திருப்பி செல்கிறாள்.... “ நான் என்ன தான் செய்வது “ என எண்ணி தலையை கோதிய சக்தி அப்படியே நின்று விட்டான்... “ என்ன ஆனாலும் சரி இதழி படிப்பை முடித்த பிறகு அவளிடம் தன் ஆசையை கூறுவோம் அதுவரை அவளை அம்மாவுக்கு பிடிப்பதுப் போல மாற்றுவோம் “ என முடிவெடுத்த சக்தி நீச்சல் குளம் நோக்கி சென்றான்...

அதே நேரம் பார்ம் நிரப்பிய இனியாள் அரண்மனையை நோக்கி செல்வதைக் கண்ட சக்தி நேராக அவுட்ஹவுஸ் நோக்கி சென்றான்...

அங்கு இதழி மட்டும் தனியாக அமர்ந்து சோப்பு கட்டியில் ஊஞ்சல் செய்வதைக் கண்ட சக்தி “ இதழி“ என அழைக்க..

அவனை கண்ட அவள் எழுந்து அவனை தாண்டி விலகி செல்ல “ இதழி நில்லு “ என அவள் கையை அழுந்தப் பிடிக்க..

அவனின் பிடி அவளுக்கு கை வலியையும் கூடவே நடுக்கத்தையும் கொடுக்க “ கு.. குட்டிமாமா“ கையை விடுங்க என அவன் முகம் பாராமல் தடுமாற்றமாக கூற..

அவன் முகம் பார்க்காமல் கையை விடுவிப்பதில் அவள் குறியாக இருப்பதை கண்ட அவன் அவளை ஒரே இழுப்பில் தன் பக்கமாக திருப்ப.. பிடிவாதமாக அவன் முகம் நோக்காமல் இருந்தாள்...

அவளின் இந்த பிடிவாதம் அவனுக்கு புதிதாக இருக்க “ இதழி“ என அழுந்தி அழைக்க..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவனின் அழைப்பை எல்லாம் அலட்சியம் செய்த அவள், அவனை விட்டு விலகுவதில் குறியாகஇருக்க, எதையும் யோசிக்காத அவன் அவளின்இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுக்க..,

அவனின் செயலில் கூச்சம் வர, “ விடுங்க “ என நெளிய, அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ள கூட முடியாமல் நின்றாள் அவள்...

அவனுக்கு எந்த கூச்சமும் இல்லாததுப் போல் அவளிடம் டீல் பேச ஆரம்பித்தான் “ சரி விடுறேன்.. நெளியாத.. ஆனா ஓடிட கூடாது.. நான் பேசி முடிக்கும் வரை எங்கையும் போக கூடாது... அப்படின்னா சொல்லு உன்னை விடுறேன் ” என கூற

“ சரி“ என தலையாட்டி அவனிடம் இருந்து விடை பெற்றான் அவள்..

அவனோ அவளை ரசனையாக பார்த்துக் கொண்டும், அவனின் கையை பார்ப்பதுமாக இருக்க, அவனை எட்டி பார்த்த அவள் “ என்ன“ என முறைப்பாக கேட்க..

“ அம்மணி எதுக்கு முகத்தை இப்படி ஒரு முழத்துக்கு தூக்கி வச்சிருகீங்களாம் “ என கேலியாக வினவ..
அவள் பதில் கூறாமல் அமைதியாக நிற்க..


அவளின் முக திருப்பலுக்கான காரணம் அவனுக்கு தான் நன்கு தெரியுமே... அதனால் சமாதானத்துக்கு தாவிய சக்தி “ சரி... பதில் சொல்ல வேண்டாம்.. அது என்ன எப்போ பார்த்தாலும்...குட்டிமாமா... குட்டிமாமானு சொல்லுற.. யார் உனக்கு இப்படி சொல்லி தந்தா “ என யோசனையாக கேட்க

மீண்டும் அவள் அமைதியாக நிற்க..

“ சொல்லு இதழி “ என அதட்ட

“ அது கண்ணு பாட்டி உங்களை குட்டியப்பா சொல்லுவாங்களா.? நான் நாராயணன் மாமாவை மாமா சொல்லுவனா.. நீங்க வேற முறைசுட்டே இருந்தீங்களா..? மாமா சொன்னா அத்தை திட்டுவாங்க... நீங்களும் திட்டுவீங்களோன்னு பயந்து அது தான் கண்ணு பாட்டி சொல்லுறது போல குட்டிமாமா சொன்னேன்.. “என மெதுவாக தயக்கமாககூற..

“ ம்ம்ம்... சரி... “ என யோசித்த அவன் “ காலேஜ் அடுத்த மாசம் ஓபன் ஆகுது.. அதுலையாவது ஒழுங்கா படி... மனசை சும்மா அலைபாய விடாத “ என கண்டிப்புடன் கூற..

அவனை அடிபட்டபார்வை பார்த்த அவள் “ உங்களை மனசுல நினைக்குறது தான் மனசை அலைபாய விடுறதா குட்டிமாமா “ என கண்களில் வலியுடன் கேட்க...

" என்ன சொன்னா.. என்ன நினைக்குறா இவா... இவளை " என மனதில் எண்ணி " இவள் முதலில் ஒழுங்கா படிக்குறது தான் நல்லது "என எண்ணிய அவன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு “ யார்.. யாரை மனசுல நினைக்கணும் என்று ஒரு தகுதி இருக்கணும் இதழினி... முதலில் ஒழுங்கா படி “ என கூறி அவள் முகம் பார்க்காமல் அப்படியே விலகி சென்றான் அவன்..

அவள் முகம் பார்த்தால் அவளின் வேதனையை தன்னால் கண்டிப்பாக தாங்க முடியாது என்று எண்ணியே அவன் அவளை விட்டு விலகி சென்றான்...

ஆனால் அவளோ “ மாமாவை மனசுல நினைக்க எனக்கு தகுதி இல்லையா “ என எண்ணியே போகும்அவனை கண்களில் நீர் வழிய அப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்...

ஆனால் இதழிக்கு நன்கு தெரியும் “ குட்டிமாமா தன்னை விரும்புகிறார்.. ஆனால் ஏன் இப்படி விலகி போகிறார் “ என அறியாமல் குழம்பவும் செய்தாள்.. அவனின் செயல்கள் எல்லாம் அவளை பிடிபதாக காட்ட... அவனின் பேச்சோ அவளை வெறுப்பதாக காட்டியது...அதன் பிறகு மீண்டும் அவனை பார்க்கவோ, பேசவோ அவள் எண்ணவில்லை.. “ அவர் மனதில் நான் இருந்தால் என்னை தேடி அவர் வருவார் “ என்ற எண்ணமே அவள் மனதில் இருந்தது...

இப்படியாக நாட்கள் கழிய... சக்திக்கு மனதே கேட்கவில்லை வீணாக சிறு பெண்ணை காயபடுத்தி விட்டுவிட்டோமே என்று... அவளிடம் பேச எத்தனையோ முயற்சிகள் எடுத்தான்.. ஆனால் அவளோ அத்தனையும் வெற்றிகரமாக முறியடித்தாள்... வீட்டில் இருக்கும் நேரம் எப்பொழுது அவளின் அக்காவையே அருகில் வைத்துக் கொண்டாள்...

கடைசியில் அவளிடம் பேசாமலே மும்பை கிளம்பி சென்றான் அவன்... சக்தி – நாராயணன் இருவரும் தொழில் விசயமாக மும்பை சென்றனர்... வர எப்படியும் ஒரு வருடமோ, ஆறு மாதமோ ஆகும்.. அவனுக்கும் இந்த பிரிவு அவசியம் என்றே தோணியது... அவள் இனிமேலாவது அவளின் படிப்பை பார்ப்பாள் என எண்ணிக் கொண்டு மனதை கல்லாக்கி அங்கயே இருந்துக் கொண்டான்... நாராயணன் மட்டும் மாதம் ஒரு முறை இங்கு வந்தார்...

லக்ஷ்மி எப்பொழுதும் இவர்களை முறைக்க தவறவில்லை... அதிலும் மணியம்மாள் இங்கு வராத நாட்கள் இருவரையும் சமையல் கட்டில் நிறுத்திக் கொள்வார்...

கண்ணழகி ஏதாவது கேட்டால் “ என்ன அத்தை... இது கூட அவங்க எனக்கு செய்ய கூடாதா “ என்று ஒரு கேள்வி மட்டுமே கேட்பார்... அதற்கு என்ன பதில் கூறுவார் அவர் அமைதியாக சென்று விடுவார்...

ஆனால் இருவரிடமும் கூறுவார் கண்ணுபாட்டி“ அத்தை ஏதாவது சொன்னால் செய்துக் கொடுங்க.. அப்பொழுது தான் அவங்களுக்கும் உங்களை பிடிக்கும் “ என கூறுவதால் இருவரும் தலையை ஆட்டிக் கொள்வார்கள்...

அதிலும் இனி ஒரு படி மேலே போய் அவர் லக்ஷ்மி என்ன கூறினாலும் கண்டுக் கொள்ளாமல் அவருக்காக எதையும் செய்வாள்... இதழியோ முறைத்துக் கொண்டு செய்வாள்..

அதிலும்சில நேரம் “ வேலைகாரிகள் தகுதி அறிந்து நடந்தா நல்லா தான் இருக்கு “ என அவர்கள் செய்யும் வேலையையும், அவர்களின் நிலையையும் கூறுவார்.. அப்பொழுது தான் இதழினி முழுதாக அறிந்துக் கொண்டாள் இவர் மனதில் நாம் இன்னும் தரம் தாழ்ந்து தான் இருக்கிறோம் என... ஆனாலும் உண்மை தானே என எண்ணி அமைதியாக செல்வாள் அவள்...

லக்ஷ்மி கூறுவதை கேட்கும் நேரம் எல்லாம் “ இந்த வீட்டின் வாரிசுகள் தான் இவர்கள் “ என கூற எண்ணுவார் கண்ணழகி ஆனால் அதன் பின் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.. அதனால் அமைதியாக கடந்து விடுவார்...

தொழிலையும், சூளையையும் பார்த்துக் கொண்டு வெற்றி பம்பரமாக் சுற்றிக் கொண்டு இருக்க.. தூத்துக்குடி கிளையை கவனித்துக் கொள்ள நம்பகமான ஆளை தேட கிடைத்தவன் தான் சூர்யா... அவன் தூத்துக்குடி ஆபிஸ் பார்த்துக் கொள்ள வெற்றி திருநெல்வேலி ஆபிஸ் கவனித்துக் கொண்டான்..

இதற்கிடையில்இனியாள் – இதழினி இருவரும் ஒரு செமஸ்டர் முடித்துவிட்டனர்... அவர்களுக்கு என்ன தேவையோ அதை கவனித்துக் கொள்ள சக்தி தினமும் நூறுமுறையாவது வெற்றிக்குநினைவுபடுத்துவான்...

சும்மாவே வெற்றி இவர்களுக்காக எதையும் செய்பவன்.. இப்பொழுது அத்தை பெண்கள் என தெரிந்து விட்டது அதில் இருந்து அவன் பாசமும் அதிகரித்து விட்டது... லக்ஷ்மியும் இதை பெரிதாக எடுக்கவில்லை.. இருவரும் வீட்டில் வேலை செய்கின்றனர் அதனால் வெற்றி உதவி செய்கிறான் என்றே எண்ணினார்.. அந்த நாள் வரும் வரை..

அன்று இனி – இதழி இருவரும் காலேஜ் விட்டு வர.., அப்பொழுது தான் ஏதோ ஒரு பைல் எடுக்க வீட்டுக்கு வந்த வெற்றி இனியாளை நோக்கி கண்ணசைவில் " வீட்டுக்கு வா " என அழைக்க..,

அவளும் தன் புத்தக பையை வீட்டில் வைத்து விட்டு அரண்மனையை நோக்கி எப்பொழுதும் போல் வந்தாள்...

அவள் வரவும் வீட்டு மாடி படியில் இருந்து அங்கு வீட்டில் இருந்த போனை அலறவிட்டான் வெற்றி..

போன் அடிக்கவே அதை எடுக்காமல் அப்படியே பார்த்து நிற்க... “ ஒய் “ என வெற்றி அழைத்து அதை எடுக்க கூறவும்..,

மெதுவாக அதன் அருகில் வந்த அவள் ரிசீவரை எடுத்து காதில் வைக்க “ ஒய்.. பொண்டாட்டி“ என அழைக்க விதிர்த்துப் போனாள் அவள்...

அப்படியே அதிர்ந்து மெதுவாக மாடி பக்கம் தன் பார்வையை திருப்ப..

அவளை நோக்கி கண்சிமிட்டிய அவன் “ என்ன பார்வை பொண்டாட்டி.. கொஞ்சநாளா பார்க்கமாலே சுத்துற... பயம் விட்டு போச்சு என்ன.. “ என கூறி தலையை கோதிய அவன் “ ஒரு கப் காபி என் அறைக்கு எடுத்துட்டு வா “ என கூறி " மேலே வா " கண்ணசைத்து அவன் அறைக்கு செல்ல..

அப்படியே அவள் போனை காதில் வைத்துக் கொண்டே மாடியை பார்க்க “ ஒய்..பொண்டாட்டி..!! என்ன யோசனை “ என கேட்க..

“ ஒ.. ஒண்ணும் இல்ல “ எனதடுமாற்றத்துடன் கூடிய வெட்கத்துடன் இனியாள் கூற..

“ சரி மேல வா பொண்டாட்டி..!!” என வெற்றி குறும்பாக கூற..

அடுத்த நிமிடம் “ பளார் “ என்ற குரல் கேட்டு தன் அறையை விட்டு வெளியில் பதறியடித்து வெற்றி வெளியில் வர..

ரிசீவரைகையில் வைத்திருந்த லக்ஷ்மி ருத்ரமூர்த்தியாக இனியாளை முறைத்து நின்றார்...

வேர் கவலையில் இருக்கிறது.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top