• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)...!!! Epi - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்.. ஹலோ.. மக்களே.... !!

என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு லைக். அப்படியே ஒரு கமெண்ட். போட்டுட்டு போனால் நான் மகிழ்வேன்... இதுவரை படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... இனி அடுத்த எபி திங்கள் அன்று வரும்... :love::love::love:

வேர் – 5

அன்று முழுவதும் அவள் கோபம் தொடருவதாய்.. சக்தி தான் அவளுக்கு என்ன கோபம் என அறியாமல் திண்டாடிப் போனான்... இன்னும் நாான்கு நாளிில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா வைக்க வேண்டும் என்று ஜோசியர் நாள் குறித்துப் போனார்... ஆனால் அதை அறிந்தும், அறியாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறாள் இதழினி....

அவள் அறையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க.., குழந்தையை தூக்கிக் கொண்டு அவளுக்கு முன்னே உள்ள சோபாவில் அமர்ந்தான் சக்திவேல்...

தீடிரென்று அவன் ஆழ்ந்த குரல் அவளை கலைப்பதாய்...

“ குட்டி செல்லம்..!!! நீங்க யார் மாதிரி..? அம்மா மாதிரியா..? அப்பா மாதிரியா..?.. நீங்க அப்பா மாதிரி இருங்க.. அம்மா மாதிரி வேண்டாம்டா செல்லம்..!!! அப்பா மாதிரி இரு..!! அப்போ தான் நம்ம பொண்டாட்டி என்று பாசமா இருப்ப செல்லம் ..”

“ அம்மா மாதிரி இருந்த, எப்போவும் எரிந்து விழுந்துக் கொண்டும், சண்டை போடுறதும், எதுகெடுத்தாலும்தப்பு கண்டுப் பிடிக்குற உன் அம்மாவை பாலோ பண்ணாத என்ன...”

என உறங்கும் குழந்தையிடம் பேசுவதுப் போல் அவளை சீண்டிக் கொண்டு இருந்தான் சக்திவேல்...

அவனின் சீண்டலில் உறங்கிக் கொண்டு இருந்த குழந்தை அரைகுறை உறக்கத்தில் “ ங்கா.. ங்கா “ என சிறு சத்தம் எழுப்பியது..

உடனே சுள்ளென்று கோபம் பொங்க சீறிவிட்டாள் இதழினி.. “ குழந்தை கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? அவனுக்கு என்ன புரியும்னு அவன்கிட்ட பேசுறீங்க... “ என சீற..

“ குழந்தைக்கு புரியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!! ஆனா புரியவங்களுக்கு புரியவேண்டுமே...!! அம்மாக்கு கேட்கட்டுமேன்னு தான்அப்பா சத்தமா சொன்னேன் என்னடா..” என குழந்தையை கொஞ்சுவதுப் போல் கேட்க..

“ ஹூம்.. எல்லாம் நடிப்பு.. ரொம்ப ஆசை கணவன் மாதிரி எல்லார் முன்னாடியும் நடிக்குறது, ஆரம்பத்தில இருந்து எல்லாமே நடிப்பாவே இருக்கு “ என அவளின் கோபத்தை இப்படி ஏளனமாக முடிக்க..

அவளின் ஏளனமான குரலில் கண்கள் சிவக்க சட்டென்று பொங்கி விட்டான் சக்திவேல்.. “ ஏய்..!! அடிச்சேன்னா பல்லு கழண்டுரும்.., என்ன நினைச்சுட்டு இருக்க நீ..?ஆரம்பத்தில இருந்து இது நடிப்பு..... நடிப்புன்னு மனசுல நினைச்சுட்டே இருக்க.. அந்த நினைப்பை முதலில் விடு.. அதை விட்டுட்டு சும்மா. அதையே பேசி மனுஷனை டென்ஷன் பண்ணிக்கிட்டு.. இப்போ சொல்லு உண்மையான ஒரு மனைவியா ஒரு நொடி நீ நினைச்சிருந்தா... என்னை விட்டு, குடும்பத்தை விட்டு, என் குழந்தை பிறப்பை மறைசிருப்பியா..?சும்மா.. என்னை குத்தம் சொல்லாதே..? “ என அடிக்குரலில் பெரும் கோபத்தை காட்டுவது எப்படி என்று காட்டி விட்டு அழும் குழந்தையை தொட்டிலில் விட்டு வெளியில் சென்றான் அவன்...

வெளியேறிய அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது..” எப்படி பேசுனாலும், அதை அவள் விடவே மாட்டாளா?? இனி என்ன செய்து தான் அவளை மாற்றுவது “ அவனுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது....

உள்ளே இருந்தவளோ அழும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு மடியில் வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள், மனமோ “ ஏன் குழந்தையை என் கையில் கொடுத்தா என்னவாம்..” என சிணுங்கிக் கொண்டு இருந்தது...

அவள் மனது என்ன எதிர் பார்க்கிறது என்று அவளுக்கு தெரியவே இல்ல... மனதில் ஏதோ வெற்றிடம் பெருகுவதாய்... நெருங்கி வந்தால் விலகுவதாகவும், விலகி போனால் நெருங்க ஆசை கொள்கிறது மனது.... மனம் ஒரு விசித்திரமானது....

அவனிடம் இருக்க ஆசையும் கொள்கிறது. அதே மனது அவன் அருகில் நெருங்கினால் வெறுக்கவும் சொல்கிறது... அவள் நிலையையே அவளால் கணிக்க முடியவில்லை.. அப்படி இருக்கையில் சக்தியால் என்ன செய்துவிட முடியும்...?

அன்று இரவு சக்தி வீட்டுக்கு வரவே இல்லை... அடுத்த நாளும் வரவில்லை.... வீட்டுக்கு போகவே அவனுக்கு மனதில்லை... அவளிடம் நின்று பேசவும் முடியவில்லை... கோபத்தில் ஏதாவது செய்து விடுவோம் என எண்ணியே செங்கல் சூளையில் தன் நேரத்தை கழித்து கொள்வான். குழந்தையை பார்க்க கூட வரவில்லை அவன்... அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு... " அவள் மனதிலே.. என்ன இருக்குன்னு தெரியல " என்று இங்கு புலம்பிக் கொண்டு இருந்தான்.... அவளோ தன் மனம் என்ன நினைக்கிறது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்..

மாலையில் வீட்டுக்கு வந்த இனியாள் ஆசையாக அவளின் மாமாவுக்காக காத்திருக்க.. அவனோ அன்று வெகு நேரம் கழித்தே வந்தான்... அவன் வந்த நேரம் இனியாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க..

அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவள் கன்னத்தில், பட்டும் படாமலும் மெலிதாக முத்தம் வைத்து அவள் அருகில் சரிந்துக் கொண்டான்....

அன்று சண்டே எல்லாருக்கும் விடுமுறை ஆதலால் எப்பொழுதும் போல் வீட்டின் பின் உள்ள நீச்சல் குளத்துக்கு செல்லலாம் என வெற்றி ஐடியா கொடுக்க.., சக்தியும் தன் மனைவியின் கோபத்தை கொஞ்சம் குறைக்கலாம் என சந்தோசத்துடன் சம்மதம் கூறினான்...

அவனுக்கு நன்கு தெரியும் “ சிறு வயதில் இருந்தே இதழிக்கு நீச்சல் ரொம்ப பிடிக்கும் “ என

அறைக்கு வந்து ” இதழி.. எல்லாரும் நீச்சல் குளம் போவமா.. நீயும் அங்க வந்து ரொம்ப நாள் ஆகுதே... வாரியா “ என அழைக்க..

அந்த நேரம் அவளுக்கும் சிறு மாற்றம் தேவையாய் இருக்க.., அவன் அழைக்கவுமே “ சரி “ என கூறியவள் “ தம்பி “ என இழுக்க..

“ அவனை அம்மா கிட்ட கொடுத்துட்டு போவோம்.. ஒரு ஒன் ஹவர் தான்.. நான் உன்னை டச் கூட பண்ணமாட்டேன் “ என கெஞ்சலாக கூற..

அவன் முகத்தில் இருந்த ஆசையை பார்த்து.., குழந்தையை கொண்டு நாராயணன் கையில் கொடுத்து விட்டு வந்தாள்...

வெற்றி குளத்தில் “ பட்டர்பிளை ஸ்ட்ரோக் “ செய்து கொண்டிருக்க... அவனை நோக்கி நீச்சல் உடையில் வந்தாள் அவனின் தேவதை...

அவளை பார்த்த அவன், தன்னை மறந்து ஒரு நிமிடம் ஸ்ட்ரோக்கை நிறுத்த.., அப்படியே நீரில் ஆழ.., “ ஏய்.. மாமா “ என அழைத்துக் கொண்டே குளத்தில் குதிக்க....

அவள் குதிக்கவும், தன் நிலை உணர.., “ ஹனி “ என அழைத்து அவளை அணைக்க...

“ டேய் வெற்றி.. என்னடா பயங்கர மழை பெய்யுதுப் போல “ என இங்கிருந்தே சக்தி கத்திக் கேட்க...

கடுப்புடன் அவளை விடுவித்துக் கொண்டே “ ஆமாடா...அண்ணா. பயங்கர மழை தான் “ என கடுப்புடன் கூற..

“ ம்ம். ஜமாய்டா “ என சக்தி கலாய்த்து விட்டு செல்ல....

“ ம்ம்,,,ம்ம்ம் “ என சந்தானம் போல் தலையை அங்கும், இங்கும் ஆட்ட.. அவன் நிலை இனியாளுக்கு புன்னகை வருவதாய்...

அவளை முறைத்துக் கொண்டே “ மனுசனை ஒரு எட்டு எடுத்து வைக்க விடமாட்டானுங்களே.... அவன் மட்டும் ஒரு எட்டு இல்ல பல எட்டு எடுத்து மேல போய்ட்டான், நான் இன்னும் ஒரு எட்டு கூட எடுத்து வைக்கல... டேய்.. வெற்றி இதுக்கு எல்லாம் ஒரு மச்சம் வேணும்டா மச்சம் “ என தன் நிலையை நொந்துக் கொள்ள..

அதற்குள் சக்தி வந்துவிட.. “ இனி எங்க “ என மெதுவாக சலித்துக் கொண்டான் வெற்றி...

சக்தி வந்த கொஞ்ச நேரத்தில் இதழி வந்தாள்.. அவளைக் கண்டு மூச்சை நிறுத்தி விட்டான் சக்தி...

உடலை கவ்வி பிடித்திருந்த அந்த ஆடை, அவள் வளைவுகளை மேலும் அழகாக்கிக் காட்ட.., ஒரு கணம் நிலைகுலைந்துப் போனான் சக்தி...

அவன் விழுங்கும் பார்வையை கண்டு, கூச்சத்துடன் மெதுவாக குளத்தில் இறங்க, அவனால் தன்னை கட்டுபடுத்தவே முடியாமல் போனது...

பழைய நினைவுகள் அலையாய் பரவி, அவளுடைய கூந்தல் மணமும், மலரை போன்ற மென்மையான அந்த மேனியின் தீண்டலும், அவனுள் பெரும் போராட்டத்தை விதைக்க.. “ அடேய் சக்தி.. உனக்கு வந்த சோதனையா... பக்கத்துல போனாலே கடிப்பாளே..? “ என மனதில் அலற...

அவளோ எதையும் கவனிக்காமல் தன் அக்காளுடன் ஆட்டம் போட.... வெற்றியை அப்பொழுது தான் கண்டான் சக்தி... கண்டவன் “ பக்கென “ சிரித்து விட..

அவன் சிரிப்பில் அவனை நோக்கி திரும்பிய வெற்றி “ அண்ணே வா... இன்னைக்கு நம்ம வேலை ரெண்டு பேரையும் தூரத்தில் இருந்து சைட் அடிக்குறது தான் “ என கன்னத்தில் கை வைத்து சோகமாக கூற... சக்தியும் அவன் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டான்...

சிறிது நேரத்தில் அவர்கள் கரைக்கு வந்து, தூரத்தில் இருந்த தனி தனியான உடைமாற்றும் அறைக்கு செல்ல.. குளத்தின் கரையில் இருந்த இருவர் முகத்திலும் பளிச் என பல்ப் எரிய...

இருவரும் ஒரே நேரத்தில் குளத்தில் குதித்து.., விட்ட குளியலை தொடங்க... இருவரும் ஒரே போல் காக்காவை போல் தலையை மட்டும் நனைத்து விட்டு தங்களின் துணை சென்ற அறை நோக்கி செல்ல..,

திடீரென அவள் பின்புறம் கழுத்துக்கும், முதுகுக்கும் இடையே இருந்த மேனியில் சில்லென்ற நீர்த்துளிகள் பரவ..,

சட்டென தேகம் கூசி சிலிர்க்க பதறிப் போய் திரும்பிய போது, தலையில் நீர் சொட்ட குறுகுறு பார்வையுடன் இதழி அருகில் நின்றிருந்தான் சக்திவேல்...
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவள் புரியாமல் அவனைப் பார்க்க,, உடனே வேகமாக தலையை சிலுப்ப நீர்த்துளிகள் பன்னீராய் அவள் முகத்தில் சிதறின...

உடனே கோபத்தில் சிவந்த முகத்தை கண்டவன்..” உன்னை நான் தான் டச் பணமாட்டேன்னு சொன்னேன்.. என் மேல இருந்து சொட்டுற நீ என்னம்மா பண்ணிச்சு “ என மிருதுவாக கேட்க....

அந்த குரலே அவள் இதயத்தை வருடி, அதை ரசிக்கவும் முடியாமல், வெறுக்கவும் மனமின்றி நெஞ்சம் தத்தளிக்க... விலகவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் ஒரு வித உணர்வு நெஞ்சை நிறைக்க..

அவளிடமே பார்வையை பதிருந்த சக்தியின் மனதில் “ எவ்வளவு மென்மை நிறைந்தவள் இவள்.., தன்னுள் இருக்கின்ற மென்மையான உணர்வுகளை இறுக்கி பிடிக்கின்றாள் “ என எண்ணி பெருமூச்சு விட

அவனின் பெருமூச்சை கண்ட அவள் வேகமாக வெளியில் சென்றுவிட்டாள்.....

“ ஏய்..!! ஜுஜூலிப்பா “ என அழைத்துக் கொண்டே இனியாள் அறைக்குள் வெற்றி நுழைய...

திடுக்கிட்டு திரும்பிய இனியாள் முகத்தில் பெரும் தவிப்பு...! சட்டென்று அவள் உடலும், மனமும் சிலிர்க்க..

அவள் முகத்தையை இமைக்காமல் நோக்கிய வெற்றியின் முகத்தில் ஒரு குரறுஞ்சிரிப்பின் தடம்..,சுகமாய் மனதில் ஒரு சாரல் தூர.. மெதுவாக அவளை நெருங்கினான்..

அவன் அருகில் நெருங்க.. நெருங்க அவள் மனதில் பெரும் புயல் மையம் கொள்ள.., இதயத்துக்கும், உணர்வுக்கும் இடையில் பெரும் முரசொலி...

சட்டென்று அவளை அணைத்து.., மென்மையாக கன்னத்தில் இதழ் இதழ் பதித்து விட்டு “ இது தான் கிராமத்து கிஸ் ‘ என மெதுவாக கிசுகிசுக்க..

அவளுள் அவனின் முதல் உணர்வு கிராமத்து முத்தம் ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்தி விட., அழையா விருந்தாளியாய் முகத்தில் வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள...

அவள் முகத்தை கண்டவனுக்குள் ஒரு “ பிரஞ்ச் முத்தம் “ கற்பனையில் வளர.. அவள் கனத்தை பிடித்து இதழ் நோக்கி குனியும் நேரம் “ அக்கா “ என கதவை தட்டிய இதழியின் குரல் கலைப்பதாய்....

பதறிய விலகிய இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அதற்குள் மீண்டும் இதழி அழைக்க அவனை விட்டு விலகி ஓடினாள் இனியாள்...

“ டேய்.. வெற்றி உனக்கு எதுவுமே அளக்கல டா... உனக்கு அதிஷ்டமே இல்ல... பொண்டாட்டியும், புருசனும் எதுல ஒத்துமையா இருக்காங்களோ இல்லை.. என்னை கிஸ் அடிகிறதை தடுகிறதுல மட்டும் ஒத்தா இருக்காங்க “ என புலம்பிக் கொண்டே வெளியில் சென்றான் வெற்றி...

##################

தினமும் காலையில் அவளை கொண்டு விடுபவன் மாலையில் அழைக்க வருவான்.. ஆனால் அன்றோ காலையில் அவசர வேலை இருந்ததால்... அவளை காலேஜ் செல்ல கூறி விட்டு அவன் ஆபிஸ்க்கு முன்னாடியே சென்று விட்டான்..

காலையில் தான் அவளை கொண்டு விடவில்லை.. மாலையில் அழைக்க செல்வோம் என எண்ணி அங்கு சென்றால்.., எல்லாரும் சென்ற பின்னும் அவளைக் காணவில்லை...

யோசித்த வெற்றி தன் மனைவிக்கு அழைப்பெடுத்தான்... ஆனால் அவள் போன் அணைத்து வைத்திருப்பதாககூற...

வீட்டுக்கு அழைத்து “ இனியாள் வந்து விட்டாளா? “ என கேட்டான்......

அழைப்பை எடுத்த இதழினி “ இன்னும் அக்கா வரலை மாமா“ என கூற “ சரிம்மா... நான் அவ கூட தான் இருக்கேன்… அழைச்சுட்டு வாறேன் “ என கூறி அழைப்பை நிறுத்தியவனுக்குள் பெரும் பயம் வருவதாய்......

“ எங்கே சென்றிருப்பாள்... ஒரு போன் பண்ணிருந்தால் நானே அழைத்து சென்றிருப்பேனே..? இப்போ அவளை எங்கு போய் தேட “ என..

காரை எடுத்துக் கொண்டு அவர்கள் தினமும் வரும் பாதை என எங்கும் சென்று பார்த்து வந்தான் எங்கும் அவளைக் காணும்... அவள் செல்லும் கடை... அவளை காலேஜில் இருந்து அழைத்து வரும் பொழுது சில நேரம் பாணி பூரி, ஐஸ் கடை என செல்லும் இடம் எங்கும் தேடி விட்டான்.... கிட்டத்தட்ட 1 மணி நேரம் அவளை தேடி அலைந்து களைத்து போய் வீட்டுக்கு வந்தான் அவன்...

வீட்டுக்குவரவும் அவனை எதிர்க் கொண்ட லட்சுமி “ என்ன வெற்றி.., அவளை அழைச்சுட்டு வாறேன்னுசொன்ன... அவளை தனியா முன்னாடியே அனுப்பி வச்சுட்டு.. நீ இப்போ தான் வார..? ரொம்ப வேலையாடா “ என கேட்க..

மனதில் “ என்ன இனி வந்துட்டாளா? ” என திகைத்து “ ஆமாம்மா.. ஆபிஸ்ல கொஞ்சம் வேலை.., அது தான் அவளை முன்னாடியே அனுப்பிட்டேன் “ என கூறி சமாளித்து தன் அறைக்கு விரைந்தான்....

அவளோஅறையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து, கண்களை மூடி, காதில் ஹெட்போனை மாட்டி...,

“மனசு தடுமாறும் அதுநெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் “ என இனிமையான குரலில் ஆழ்ந்துப் போய் மெதுவாக ஹம் செய்துக் கொண்டு இருந்தாள்...


“ இங்க வந்து தான் சேரணும் “ என்றகோப குரலில் அதிர்ந்துப் போய் கண்களை திறந்து பார்த்தாள் இனியாள்...

கைகளைக் கட்டி, கதவு நிலையில் சாய்ந்து அவளை ஆழ்ந்துப் பார்க்க...

“ அய்யோ... பாட்டை கேட்டுட்டானே... பதில் வேற குடுத்து முறைச்சு பாக்குறானே “ என தயக்கத்துடன் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க...

“ காலேஜ்ல இருந்தது எப்போ வந்த “ என கோபமாக கேட்டு அவளை நோக்கி எட்டு எடுத்து வர..

“ இன்னைக்கு காலேஜ் நான் போகவே இல்ல " என சிறு தயக்கத்துடன் கூற...

" என்ன..!! போகலையா..?? " என அதிர்ச்சியாக கேட்க

" ஆமா இன்னைக்கு என் கிளாஸ் பொண்ணுக்கு என்கேஜ்மெண்ட் .. எல்லாரும் கிளாஸ் மாஸ் கட் அடிச்சுட்டோம் " என கூற

அவளை முறைத்த அவன் “ ஏன்... அதை எனக்கு போன் பண்ணி சொல்ல முடியாதா..? “ எனமுறைத்துக் கொண்டே பாசமாக வினவ..

“ பிரண்ட்ஸ் கூட இருந்து நிறைய செல்ஃபி எடுத்தோம் மாமா.. அதுல செல்லுல சார்ஜ் போயிட்டு ” என மெதுவாக முனக...

" ஓ.. செல்லை சார்ஜ் போட்டு ஒரு வார்த்தை உன்னால சொல்லமுடியாதா " என வினவ..

" அது மாமா.. பிரண்ட்ஸ் ரொம்ப கிண்டல் பண்ணிட்டாங்க " என கூற..

" நாளையில் இருந்து அந்த பிரண்ட்ஸ் எல்லாரையும் கட் பண்ணு.. உனக்கு நான் மட்டும் தான் இனி பிரண்ட் சரியா " என மெலிதாக மிரட்ட...

" ம்ம். " என தலையாட்டியவளைக் கண்டு

" சரி அப்போ வீட்டுக்கு வந்து சொல்லிருக்கலாமே " என கேட்க

“ அப்புறம் வீட்டுக்கு வந்து போடலாம்னு இருந்தேன், வீட்டுக்கு வந்து செல்லை சார்ஜ் போட்டேன்..

அப்போ தான் அத்தை வந்தாங்க...சற்று முன் நடந்த உரையாடலை கூற ஆரம்பித்தாள்...

“ என்னம்மா இனியா. நீ தனியா வந்திருக்க வெற்றி எங்க... உன்னை அவன் அழைச்சுட்டு வாறேன் என்று தான வெற்றி கூறினான் “ என..

ஓ.. மாமா என்னை தேடி அங்க போயிருக்காங்க போல என மனதில் எண்ணி “ ஆமா. அத்தை அவங்களுக்கு அவசர வேலை வந்துட்டு.. நான் ஆட்டோல வந்துட்டேன்... அவங்க வருவாங்க “ என கூறி... சீக்கிரம் மாமாக்கு போன் போடணும் என மனதில் நினைக்க..

“ சரி இந்தா காபி குடி “ என கொடுத்து அவர் விலக...

அடுத்து கொஞ்ச நேரத்தில் இதழி குழந்தையை தூக்கிக் கொண்டு வர அவன் கூட சிறிது நேரம் செலவழித்து ரூம் செல்வதற்குள் வெற்றிக்கு போன் பண்ணுவதை மறந்து விட்டாள் இனியாள்...

அதற்குள் செல் சார்ஜ் பாதி ஏறி இருக்க பாடலைக் கேட்டுக் கொண்டு அமர்ந்து விட்டாள்... அதற்குள் வெற்றியும் வந்துவிட்டான்... இதை எல்லாம் கூறி முடிக்க அவளை பார்த்த அவன்...

“ என்கிட்ட உனக்கு சொல்லனும்ன்னு தோணவே இல்லை.., உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன் என்பதும் உனக்கு தெரியவில்லை... நான் காலேஜ் சென்று நீ இல்லை என்றதும் எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா? உன்னை காணும் என்று ரோடு.. ரோடா அலைஞ்சிருக்கேன்.... எப்படி பயந்துப் போனேன் தெரியுமா ..? எனகலங்கி கூற..

தலையை குனிந்துக் கொண்டு ஹெட்போனை கையில் சுற்றுவதும், கழட்டுவதுமாகஎன்று தவிப்புடன் நின்றவளை கண்டு.... அவள் கை பிடித்து தன் அருகிலிழுத்தான்...

இதுவரை திட்டிக் கொண்டு இருந்தவன், திடீரென கையை பிடித்து இழுக்கவும், எதிர் பார்க்காத அவள், அவனை நோக்க சட்டென தன் மார்போடு அணைத்துக் கொண்டான் வெற்றி..,
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவனின் அணைப்பில் முதலில் திகைத்து, அவனின் இறுகிய அணைப்பில் ஒன்றிப் போக “ எனக்கு ஒரு போன் பண்ணிசொல்ல உனக்கு தோணலியா இனி..? “ எனஆதங்கமாக வினவ..

“உகூம்” அவனின் அணைப்பை முழுதாக அனுபவித்துக் கொண்டு இருந்த இனியாளுக்கு அவனை ஆதங்கம் புரியவே இல்லை...அவளிடம் பதில் இல்லாமல் போக “ இனி“ என அழுந்தி அழைக்க..

“ இனி.. எங்க போனாலும் உங்க கிட்ட சொல்லிட்டு தான் போவேன்... சா..சாரி..” என

அவள் கூறுவதைக் கேட்ட அவன் மேலும் அவளை இறுக்கி அணைக்க... சுற்று புறம் மறந்து, காலம், நேரம் மறந்து, காதல் உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்... நேரம்செல்ல செல்ல அவளை தன்னுள் மூழ்கடிப்பவன் போல் இறுக்கி அணைக்க..

“ அக்கா” என்ற இதழி அணைப்பில் இருவரும் பதறி விலகினர்... அவன் முகம் பார்க்காமல்.., முகத்தில்வெட்க புன்னகை பூக்க அறையை விட்டு ஓடினாள் இனியாள்...

“ என்னை பிரிக்கிறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு.. சீக்கிரம் இவங்களை வீடு கடத்தணும் “ என எண்ணிய வெற்றி இனியாளின் சிவந்த முகத்தை கண்ணில் கொண்டு வந்து தலையை அழுந்த கோதிய அவன் கட்டிலில் விழுந்தான்....

அவன் மனதில் மீண்டும் அவளை அணைத்த நினைவே ஓட அதே நினைவுடன் கண்ணயர்ந்தான் வெற்றி....

அவனை விட்டு வெளியில் வந்த இனியாள் மனதில் வெற்றியே நிறைந்திருக்க.. புன்னகை முகத்துடன் வலம் வந்தாள்...

நேற்று பிறகு சக்தி இதழியை அதிகம் பார்க்கவே இல்லை.. தான் அருகில் நெருங்கினாலே அவள் உணர்வுகளை இறுக்கி பிடிப்பதை உணர்ந்த அவன்.. மெதுவாக அவளை விட்டு விலகி பின் அவளை நெருங்க வேண்டும் என எண்ணிக் வீட்டுக்கு வரவே இல்லை...

இதை அறியாத இதழியோ அவன் தன் மேல் கோபமாக சென்று விட்டான் என தன் வாழ்வை எண்ணிக் குமிரிக் கொண்டு இருந்தாள்.... அவர்களின் வாழ்வு ஏறுவதும், சறுக்குவதுமாக இருக்கிறது... அவளும் என்ன செய்வாள் பாவம்.. அவன் ஆசையாக பேச வரும் பொழுது அவளும் அவனில் மூழ்க தான் ஆசை கொள்கிறாள்.. ஆனால் அவள் அனுபவித்த வலியும்,வேதனையும் வார்த்தையாக வெளி வருகையில் அவளும் என்ன செய்வாள்... அவனை காயபடுத்தி விடுகிறாள்...

அதே யோசனையுடன் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு சக்தி வருகைக்காய் காத்திருந்தாள்...


வேர் யோசித்து சாயும்...:unsure::unsure::unsure:


 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top