• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu saithavale(ne)..!! epi - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்.... ஹலோ.. மக்களே..!!

என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! எபி 9 கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு கமண்ட்ஸ், ஒரு லைக் பண்ணுங்க.... இதுவரை படித்து கருத்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.... இந்த எபியை படிங்க... திங்கள் அடுத்த எபி கொண்டு வாரேன்... உங்கள் ஆதரவை கண்டு தான் சக்தி ஓடி வாரான்.. இன்னைக்கும் படிச்சு சொல்லுங்க அப்போ தான் திங்கள் செம எபி வரும் சொல்லிட்டேன்...;);)


வேர் – 9

“ ஏய் இதழி “ என தன் அறையில் இருந்து கூவிக் கொண்டு இருந்தான் சக்திவேல்..

“ என்ன ஒரு நாளும் இல்லாமல், குட்டிமாமா இன்னைக்கு கூப்டுறாங்க “ என எண்ணிக் கொண்டே “ டேய் வெற்றி உன் அண்ணன் கூப்டுறான். என்னனு கேட்டு வாரேன் “ என கூறிக் கொண்டு செஸ் கட்டத்தை வெற்றி கையில் திணித்து விட்டு மாடி ஏறினாள் இதழி...

“ என்ன குட்டிமாமா “ என அவன் முன் நின்றவளை நோக்கி...

“ யாரு.. குட்டி மாமா “ என முறைத்துக் கொண்டு நின்றவனை நோக்கி

“ குட்டிமாமாவுக்கு என்ன ஆச்சு... ஒரு வேளை எல்லாம் மறந்துட்டோ “ என யோசித்துக் கொண்டு இருந்தவளை..,

“ ஏய்.. இங்க பாரு தினமும் என் ரூம் நீ தான் கிளீன் பண்ணனும் “ என..

“ ஏன்.. நான் பண்ணனும் அது தான் வீட்டை கூட்ட ஆள் இருக்கங்களே... நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைகாரி இல்லை “ என பட்டென்று கூறியவளை உற்று நோக்கிய அவன்..,

“ அம்மா சொன்னது சரியா தான் இருக்கு.. திமிர் பிடித்தவளா இருப்பா போலவே “ என மனதில் எண்ணி .., “ இங்க பாரு நீ தான் என் ரூம் கிளீன் பண்ணனும்.... எனக்கு எல்லாம் நீ தான் செய்யணும்“ என கூறி அவளை முறைத்து விட்டு சென்றான்....

அவனை பார்த்து, அவன் முறைப்பை கண்டு பயந்து தினமும் அவன் அறையை கிளீன் பண்ண ஆரம்பித்தாள்...அதிலும் அவன் அழைக்கும் நேரம் எல்லாம் இதழி ஓடுவது கண்ணழகி மனதில் பெரும் சந்தோசம் உண்டாகியது... முறை வரும் உறவு தான்... இப்பொழுதே பழகினால் பின்னாளில் ஒரு நல்லது நடந்தால் சந்தோசம் தான் என எண்ணி அவள் செய்வதை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டார்..

லட்சுமிக்கு ஒரு வித சந்தோசம் “ தன் மகன் அவளுக்கான நிலையை, அவள் தரத்தை உணர்த்துகிறான் “ என எண்ணிக் கொண்டார்...

அன்றும் இப்படி தான் ஸ்கூல் கிளம்பாமல் அவன் புக் எடுத்து அடுக்கி கொண்டு இருந்தவளை கண்டு அருகில் வந்த நாராயணன் “ என்னம்மா நீ இன்னும் ஸ்கூல் கிளம்பாம.. இவன் புக் எடுத்துக் கிட்டு இருக்க.. போ ஸ்கூல் கிளம்பு “ என அவளை கிளப்ப..

“ மாமா.. அது..” என தயக்கத்துடன் ஆரம்பிக்க..

“ ஏய்... இன்னும் இங்க என்ன பண்ணுற... எல்லாம் கிளீன் பண்ணிட்டியா “ என கேட்டுக் கொண்டே அவன் அறைக்குள் வர.., உள் நின்ற தன் தந்தையை கண்டு ஒருநிமிடம் தயங்கி நின்ற சக்தி...

“ இதழி சீக்கிரம் எடுத்து வச்சுட்டு ஸ்கூல் கிளம்பு.. உனக்கும் நேராகுதுல“ என கூறி கொண்டு அவன் காலேஜ் பேக் எடுத்துக் கொண்டு, பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு ஒன்றும் தெரியாததுப் போல் வெளியில் சென்றான் அவன்...

அவனை யோசனையாக பார்த்த நாராயணன் அவளின் தலையை பாசமாக வருடி ‘ நீ கிளம்பும்மா “ என கூறி மனதில் “ சக்தியை கண்டிக்க வேண்டும் “ எனஎண்ணி அவளைப் பார்க்க..

அவளின் தயக்கத்தை கண்டு “ என்னம்மா போ“ என கூற..

“ இல்ல மாமா.... புக்“ என தடுமாற..

“ நீ போமா.. அவனை நான் பார்த்துகிறேன் “ என கூற, தயக்கத்துடன் வெளியில் சென்றாள் அவள்....

மாலையில் வீட்டுக்கு வந்த சக்தி, அவளும், வெற்றியும் விளையாடிக் கொண்டு இருப்பதை கண்டவன். அமைதியாக தன் அறைக்கு வந்தான்... அங்கு புக் எல்லாம் அப்படியே இருப்பதை கண்ட அவன் “ இதழி“ என அழைக்க..

“ என்ன குட்டிமாமா “ என அவன் முன் வந்து நிற்க...

“ குட்டிமாமாவா..? உனக்குஇப்படி யார் சொல்லி தந்தா “ என ஒரு முறைப்புடனே கேட்க..

“ அது... கண்ணு பாட்டி “ என தயக்கமாக கூற...

“ அப்படியா “ என.., மெதுவாக தலையை கோதிய அவன் முகத்தில் புன்னகை பரவியது.. அதை அவளுக்கு காட்டாமல் “ இங்க வா “ என அழைக்க....

அவனை விட்டு வெகுவாக பின்னாடி தள்ளி நின்றுக் கொண்டு “ மாட்டேன்“ என தலையசைக்க..

“ அட.. வாமா“ என அவள் கையை பிடித்து இழுக்க...

“ கையை விடுங்க“ என அவன் கையை தட்டி விட்டுக் கொண்டு அவனை முறைக்க..

“ அட என்னம்மா...!! பாசமா குட்டிமாமா சொல்லுற...? கைய பிடிச்சா முறைக்குற இது என்ன நியாயம்..! “ என குறும்பு குரலில் அந்த வளர்ந்த அறிவு கொழுந்து, சிறு குழந்தையை சீண்ட...

அவனைபார்த்து “ ங்கே ” என முழித்தாள் அவள்..

அவளை முழியை கண்டு தலையை கோதி சிரித்துக் கொண்டே “ மாமான்னா..!! கட்டிக்க போறவங்களை தான் அப்படி அழைக்கணும்.. அப்போ நீ என்னை கட்டிக்க போறியா..? “ என கேட்டுக் கொண்டே தாடையை தடவிய அவன் சிறு யோசனைக்கு பின் அவளை பார்த்து “ நீ இனி என்ன பண்ணுறன்னா.... இந்த மாமாவை தான் கட்டிக்கணும்... சரியா....“ என சிரிப்புடன் கூற..

அவனின் சிரிப்பை அதிசயமாக பார்த்த அவள் தலை தானாக “ சரி குட்டி மாமா “ என கூற...

மீண்டும் மலர்ந்து சிரித்த அவன் “ சரி.. டெய்லி காலையில் என்னை பார்க்கும் நேரம் எல்லாம் உங்களை தான் கட்டிப்பேன்... என்று என் கிட்ட நீ சொல்லணும் சரியா “ என வினவ...

“ ம்ம்... சரி “ என கூறிய அவள் அவன் அறையை விட்டு வெளியில் ஓட..

“ ஏய்.. சொன்னது நினைவிருக்கட்டும் “ என இங்கிருந்து கத்தினான் அவன்....

அவள் செல்லவும் மலர்ந்து சிரித்த அவன் தன் ப்ரொஜெக்ட் செய்ய கணிணி முன் அமர்ந்தான்.... சிறு பெண்ணின் மனதை கலைக்கிறோமே என அறியாமலேதன் விளையாட்டை ஆரம்பித்தான் சக்திவேல்...

மணியம்மாளுக்கு, லட்சுமி அத்தை கொடுக்கும் பரிவு, மரியாதை எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை... எப்பொழுதும் வேலைகாரர்கள் அவர்கள் நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்... அதனால் தான் கோபம் எல்லாம் இந்த சிறுமி மேல் பாய்ந்தது... அதை அறியாத அவளோ எப்பொழுதும் போல் வந்துப் போனாள்...

அது கூட லட்சுமி மனதுக்கு உறுத்தியதோ என்னவோ..? அன்று கண்ணழகி, மணியம்மாளை அழைத்துக் கொண்டு, லட்சுமியிடம் வந்து நின்று “ பத்து நாள் கழித்து தான் வருவோம்.. குழந்தைகளை பாத்துக்கோ “ என்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றார்... இருவரையும் நாராயணன் - லட்சுமி பொறுப்பில் விட்டு சென்றார்...

ஆனால் நாராயணனுக்கோ எதிர் பாராத பாரின் ஆர்டர் வர, அவசரமாக அவர் பாரின் கிளம்பி சென்றார்... அதிலும் லக்ஷ்மியிடம் “ இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள் “ என கூறி சென்றார்...

“ பெத்த பிள்ளைகளை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லாமல் வேலைகாரிகளை பாத்துக்க சொல்கிறார் “ எனமீண்டும் கோபம் இருவர் மேல் திரும்பியது...

அன்று இருவரும் பள்ளி கிளம்பி சென்றவர்களை, வீட்டு வாசலில் நின்ற லட்சுமி “ இதழி, இனியா ரெண்டு பெரும் கொஞ்சம் இங்க வாங்க “ என அழைக்க..

“ அக்கா... நீ ஸ்கூல் போ... அத்தை கூப்டுறாங்க.. நான் என்னன்னு கேட்டு வாறேன் “ என்றுகூறிக் கொண்டு தன் அத்தையை நோக்கி நடந்தாள் இதழி..

இவள் மட்டும் தனியாக வருவதை கண்ட அவர் “ ஏய்.. என்ன நீ மட்டும் வார..?? அவளையும் கூப்டு..? “ என முறைப்புடனே கேட்க

“ அக்கா ஸ்கூல் போகட்டும், என்ன செய்யணும் என்கிட்ட சொல்லுங்க“ என அவரை பார்த்து முறைத்துக் கொண்டே கூற......

லக்ஷ்மிக்கு வேலையே இது தான் இவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரம் அழைத்து ஏதாவது செய்ய கூறுவார்.. “ வேலைக்கார இவளுகளுக்கு என்ன படிப்பு வேண்டி இருக்கு... இந்த14 வயசுலையே என்னை மதிக்காம இருக்கா. இதுல நிறைய படித்தா... சுத்தம் “ என்று எண்ணி தான் இப்படி எல்லாம் செய்வது..

கண்ணழகி தடுத்தால் “ எனக்கு அவசரமா தேவை அத்தை “ என்று அவரிடம் பவ்யமாக கூறுவாள்.. அதற்கு மேல் அவரும் ஓன்று கூறமாட்டார் ஒரே ஒரு மருமகள் அவளிடம் ஏன் முகத்தை திருப்புவானேன் என்று அமைதியாக சென்று விடுவார்....

இதழியிடம் “ வீட்டுக்கு இன்னைக்கு என் பிரண்ட்ஸ் வாராங்க... நீங்க ஸ்கூல் போகவேண்டாம்.. வீட்டுல உன் பாட்டியும் இல்ல... சோ நீங்க இங்க இருங்க “ என முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கூற..

ரொம்ப நேரம் ஆகியும் பதில் இல்லாமல் போக அவள் பக்கம் திரும்பிய லட்சுமி, அவள் இல்லாமல் போக கண்களை எங்கும் சுழல விட்டார்.. அவளோ தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு இருந்தாள்...

அவளிடம் ஓடிய அவர்“ ஏஏய்.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன். நீ என்ன செய்ற “ என கேட்டு அவளை அடிக்க வர..,

அவர் அடியில் இருந்த வாகாக திரும்பிய அவள் " நீங்க சுவத்துக்கிட்ட தான சொன்னீங்க..? அதுவே உங்களுக்கு செய்யும் நான் ஏன் செய்யணும் " என அவரை பார்த்து பதில் கேள்விக் கேட்டவளை..

" இந்த வயசுல வாயை பாரு... ஒண்ணும் இல்லாமல் இருக்கும் போதே இப்படி பேசுறா.. கொஞ்சம் வசதியா இருந்தாளோ? எல்லாரையும் ஏறி மிதிப்பா இவா.." என மனதில் எண்ணி " சரி... சரி... வா... இன்னைக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" என தாழ்மையாக அழைக்க...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
" ம்ம்... அது " என அவரின் பின் சென்றாள் அவள்....

அவருக்கு சின்ன சின்ன உதவிகள் செய்ததில் பள்ளி செல்லும் நேரம் தாண்டிவிட்டது... அவளுக்கு தான் படிப்பு என்றால் வேப்பம் காயாக கசக்குமே. அதனால் அவளும் அதை கண்டுக் கொள்ளவில்லை.... அங்கு சமயல் செய்த பாட்டி அவளிடம் " பாப்பா ஸ்கூல் போங்க.. அக்கா (மணியம்மாள் ) வந்தா உன்னை தான் திட்டுவாங்க.. இங்க நான் பாத்துக்கிறேன் " என கூற..

அதை கேட்டுக் கொண்டே வந்த லட்சுமி " இவா படிச்சு என்ன பண்ண போறா.. சமையலாச்சும் காத்துக்கிடட்டும் நாளைக்கு அவளுக்கு உதவும் " என அவர் பாட்டுக்கு கூறிக் கொண்டே செல்ல...

அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றாள்... அவள் மனதில் " ஏன்.. நாங்க படிக்க கூடாதாமா ?.. இதுக்காவது படிக்கணுமே " என வீம்பாக எண்ணிக் கொண்டாள்...

அடுத்த சிறிது நேரத்தில் லக்ஷ்மியின் நண்பர்கள் வர., தோட்டத்தில் நின்று செடிகளோடு செடிகளாக மாறி நின்றவளை " ஏய்... பொண்ணே.. இங்க வா " என அழைக்க....

" ஓகோ..தோழிகளின் முன்னே கெத்து காட்டுறாங்களா? வாரேன்.. வாரேன் " என மனதில் எண்ணி " சொல்லுங்க அத்தை " என அவர் முன் துள்ளி குதித்து நின்றவளை கண்டு..

" ஏய்.. யாருக்கு யாரு அத்தை.. மரியாதையா மேடம் சொல்லு “ என மிரட்ட..

" சரிங்க.. மேடம் சொல்லுங்க “ என அவர் முன் பவ்யமாக நின்றவள் மனதில் குறும்பு கூத்தாடியது...

" அங்க ஜூஸ் போட்டு வச்சுருக்கேன்.. போ போய் எடுத்துட்டு வா. " என கூற..

" சரிங்க மேடம் " என கூறி வீட்டை நோக்கி ஓடி சென்றாள் அவள்...

" யார்... லச்சு இது... எங்க இருந்துஇவளை பிடிச்ச.. எனக்கு இப்படி ஒரு சர்வெண்ட் வேணுமே " என அவரின் தோழி கேட்க..

" எனக்கு தெரியாது நிம்மி.. யாரும் இல்லாத அனாதைகள் போல.. என்னோட மாமி தான் பெரிய தியாக செம்மல் மாதிரி இதுகளை அழைச்சுட்டு வந்திருக்காங்க..இவள், அவள் அக்கா, அவள் பாட்டி என்று 3 தெண்டம் இருக்குது.. இவள் சரியான பொண்ணு... ஒன்னும் பேசமுடியாது எதிர்த்து எதிர்த்து பேசும்.. இவளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். என்னமோ உரிமையான வீடு மாதிரி எப்பவும் வருது போகுது... வீட்டுல ரெண்டு வயசு பசங்க இருக்காங்களே கொஞ்சம் அடக்கமா இருக்கோம்னு இருக்குதா... ஒன்னும் கிடையாது.. இவா அக்கா அப்படி இல்லன்னு நினைக்கேன்...அது அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருக்கும். அதுவும் சில நேரம் திறந்த வீட்டுல நாய் நுழையுற மாதிரி.. என்னமோ சொந்த மாமா, பாட்டி மாதிரி பேசிகிட்டு இருக்குதுங்க... வீட்டுல இருக்கவங்களை முதலில் சொல்லணும்... அவங்களும் இப்படி தான் இதுக கிட்ட பேசிகிட்டு இருக்கு.. எல்லாம் என் நேரம். என்னை இதுகளை எதுவும் சொல்ல விடமாட்டுகிறாங்க.. அது தான் இதுகளை எல்லாம் யாரும் இல்லாதநேரம் பார்த்து என் கோவத்தை ஆத்திட்டு இருக்கேன்“என கோபத்துடன் கொந்தளித்துக் கொண்டு இருந்தார் அவர்...

அந்த நேரம் அவர்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்திருந்த இதழி இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதாய் கேட்டு விட்டாள்....பயங்கர கோபம் வந்தது.. “ எங்களை கண்டால் இதுக்கு நாய் மாதிரி தெரிகிறோமா..? மாமாவுக்காக பார்க்கிறேன் இல்லன்னா...எப்பொழுதே இந்த குண்டு பூசணியை ஒரு வழி பண்ணிருப்பேன் " என எண்ணி தான் கொண்டு வந்த ஜூஸை மீண்டும் வீட்டின் உள் எடுத்து சென்றாள்..

உள் சென்றவள் மீண்டும் வந்து அவர்கள் முன் நின்று " மேடம் இந்தாங்க ஜூஸ் " என ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க... ஒரு சிரிப்புடன் அனைவரும் வாங்க. அவர்கள் முன் " ஈஈஈ " என இளித்து " மேடம் இந்தாங்க " என்று லட்சுமியிடம் ஒரு கிளாஸை கொடுத்து அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னே மறைந்துக் கொண்டாள்.....

எல்லாரும் ஜூஸ் குடிக்க.. லட்சுமியும் ஒரு வாய் வைக்க.. அப்படியே அவரின் கண்கள் ரெண்டும் மேல் நோக்கி சொருகிக் கொண்டது... ஆனாலும் தன் தோழிகளுக்காய் இளித்துக் கொண்டு இருந்தார்... மனதில் “குட்டி பிசாசே..!! என் வீட்டுலையே இருந்துட்டு எனக்கு உப்பு ஜூஸ் குடுக்குறியா..? வாரேண்டி உன்னை நான் ஜூஸ் போட்டு குடிக்கிறேன்“ என திட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்... அவரின் நிலையை கண்ட அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...

இப்படியாக நாட்கள் கழிய அவள் தன் ஒன்பதாம் வகுப்பை முடித்துக் கொண்டாள்...எப்பொழுதும், இவளுக்கும் லட்சுமிக்கும் முட்டிக் கொண்டு தான் இருக்கும்... இதழி ஒவ்வொரு முறையும் அவரை வம்பிழுக்கும் பொழுது எல்லாம் குறும்பாக தான் செய்வாள்... அவரும் தன்னிடம் விளையாடுகிறார் என்று தான் எண்ணுவாள்... ஆனால் அடுத்து வந்த நாட்களில் அவள் எண்ணத்தையை மொத்தமாக மாற்றியமைத்தார் லட்சுமி....

இந்த இடைப்பட்ட மாதத்தில் சக்தி தன் படிப்பை முடித்து விட்டு தூத்துக்குடி கிளையை தன் கையில் எடுத்துக் கொண்டான்.. மிகவும் திறமையானவன்... தன்படிப்பை முடித்த அடுத்த ஒரு மாதத்தில் ஆபிஸ் கிளம்பி சென்று விட்டான்... நாராயணன் இரண்டு ஆபிஸிலும் செல்வார். கூடவே ஊரில் இருக்கும் செங்கல் சூளை, சுண்ணாம்பு சூளையையும் பார்த்துக் கொண்டார்....

வெற்றி அப்பொழுது தான் இன்ஜினியரிங் கடைசி வருடத்தில் இருந்தான்... இதழியும், இனியாளும்1௦ வகுப்பில் காலெடுத்து வைத்தனர்....

வெற்றியும், இதழியும் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது... அவர்கள் இருவரும் சில நேரம் ஆங்கிரி பார்ட்ஸ் போல் முறைத்துக் கொள்வதை பார்க்கும் பொழுது கண்ணழிகிக்கு தன் மகள் சத்தமில்லாமல் வீட்டை விட்டு சென்றது தான் நினைவு வரும்... ஆனாலும் அந்த துக்கத்தை தன் பேத்தியை கண்டு ஆற்றிக் கொள்வார்...

சக்தி " உங்களை தான் குட்டிமாமா நான் கட்டிப்பேன் " என்று இதழி, இதழில் இருந்து வார்த்தையை கேட்காமல் அவன் வெளியில் சென்ற நாளே கிடையாது..

அதற்கும் ஒரு நாள் ஆப்பு வைத்தார் லட்சுமி.. தினமும் காலையில் எழுந்ததும் இதழி சக்தி அறைக்கு செல்வதை கண்ட லட்சுமி சத்தம் செய்யாமல் அவள் பின் செல்ல..,

காலையில் எழுந்து தண்டால் எடுத்துக் கொண்டு இருந்த சக்தி அருகில் சென்று நின்று “ குட்டிமாமா நான் உங்களை தான் கட்டிப்பேன் “ என எப்பொழுதும் போல் கூறி வெளியில் செல்ல...

ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார் லட்சுமி “ அனாதை கழுதைக்கு வந்திருக்கும் ஆசையை பாரு, ஒண்ணும் இல்லாத இவளுக்கு என் பையன கட்டிக்கணுமா..? டேய் சக்தி என்னடா இதெல்லாம் “ என மெதுவாக மூக்கை உறிஞ்சிக் கொண்டே கேட்க...

“ அம்மா. அவா சின்ன பிள்ளை... சும்மா ஏதோ சொல்லிட்டு போறா... நீங்க வேற “ என மெதுவாக சலித்துக் கொள்ள..

“ டேய்.. உன் பாட்டியை பத்தி உனக்கு தெரியாதுடா... அவங்க இவங்களுக்கு குடுக்கும் பாசமும், அரவணைப்பும் எனக்கு சந்தேகமா இருக்குடா.... இந்த வயசுல இப்படி சொல்லிட்டு போறா.. எல்லாம் அவ பாட்டி சொல்லிக் கொடுக்குறதா இருக்கும்டா... இவளுகளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில வைக்கணும் சக்தி.. ஏற்கனவே உன் அத்தைக்காரி வீட்டில் வேலை செய்த வேலைக்காரனை கட்டிக்கிட்டு எங்கையோ போய்ட்டாளாம்.. இப்போ இவளுக நடத்தையே சரி இல்ல... இவங்க கிட்ட எல்லாம் எட்டியே இருக்கணும்டா " என கூறிய அவர் எண்ணமே வேற..,

கண்ணழகியின் இவர்கள் மேல் உள்ள பாசம் எல்லாம் லக்ஷ்மிக்கு சிறு சந்தேகத்தை விதைத்திருந்தது.... " வீட்டில் ஒரே வாரிசு சொத்து எங்கும் செல்லாது என்ற ஒரே காரணத்துக்காக தான் இவளை இங்கு மணமுடித்து வைத்தனர் அவள் பெற்றோர்... ஆனால் இங்கு நடப்பதை பார்த்தால் சொத்தை இந்த அனாதைகளுக்கு எழுதி வைத்து விடுவார்கள், விட்டால் தன் இரண்டு மகன்களுக்கும் இந்த இரண்டு பேரையும் திருமணம் செய்து வைத்திடுவார் என எண்ணியே அவர்களிடம் இருந்து எட்டி இருக்க கூறுகிறார் லட்சுமி.... லட்சுமி பணத்தை மதிக்கும் ரகம்.... கண்ணழகியோ மனத்தை ரசிக்கும் ரகம்...

அவனை யோசனையாக பார்த்து “ சக்தி நீ அம்மா சொல்லை தானே கேட்ப “ என கேட்க...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“ என்னம்மா நீ.. உன் சொல்லை கேட்காமல் வேற யார் சொல்லை கேட்க போறேன் “ என கூற...

“ சரி அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடு... நான் சொல்லுற பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் “ என கூறி கையை நீட்ட..

“ ம்மீ.. உனக்குஇருந்தாலும் இந்த பயம் ஆகாதும்மா “ என செல்லமாக சலித்துக் கொண்டு “ சத்தியமா நீ சொல்லுற பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணுவேன்... போதுமா “ என லட்சுமி கையில் சத்தியம் செய்ய...

புன்னகையுடன்அவன் தலையை மெதுவாக கலைத்து விட்டு அவர் வெளியில் செல்ல... “ பாவம் அம்மா.... இனி அம்மாவுக்கு பிடிக்காத எதையும் செய்ய கூடாது.. இதழிகிட்ட பேசுறதை நிறுத்தணும் “ என மனதில் எண்ணிக் கொண்டான் சக்தி...

அதில் இருந்து அப்படியே மாறினான் சக்தி... தன் பாட்டியை ரொம்ப பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவர்களிடம் தன் முகத்தை காட்டாமல் இருக்கிறான்..

இப்பொழுது எல்லாம் சக்தி எப்பொழுதும் இறுக்கமாக இருப்பதுப் போலவே கண்ணழகிக்கு தெரிந்தது... அதிலும் மணியம்மாள், இதழி, இனியாள் இந்த மூன்று பேரில் யாராவது ஒருவர் வீட்டில் இருந்தால் அவனின் பார்வையும், பேச்சும் அப்படியே மாறிப் போகும்...

இது எல்லாம் தன் மருமகளின் கைகாரியம் என்றும் நன்கு தெரியும் அவருக்கு... அவளுக்கு வேலைகாரர்களிடம் பழகுவது அறவே பிடிக்காது. அப்படி தான் இவனையும் மாற்றிவிட்டாள், இவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்... இப்படி ஒவ்வொருவரும் தனி தனி எண்ணத்தில் இருந்தனர்..

அன்று “ பாட்டி“ என துள்ளி குதித்து ஓடி வந்தாள் இதழி...

அந்த நேரம் தான் ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்த சக்தி வேக நடையுடன் வீட்டின் உள் வர... “ ஒய் குட்டிமாமா “ என அவனை ஓங்கி குரல் கொடுத்து அழைத்தாள்...

“ அட குட்டி பாப்பா... வாண்டடா.. வண்டியில் ஏறுதே “ என அவளை பார்த்து நின்றான் வெற்றி...

அவள் குரலில் ஒரு நொடி நின்ற சக்தி மீண்டும் வேகமாக படி ஏறி அவன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்... தன் அம்மாவுக்காக அவர்களை ஒதுக்கி வைத்தான் சக்தி...

“ என்னம்மா சில்வண்டு... அண்ணனை பெரிய ஆள் மாதிரி ஒய்ன்னு கூப்டுற... அண்ணா இன்னைக்கு ஏதோ நல்ல மூடுல இருக்கார்... அதனால பேசாம போறார். இல்லன்னா அவர் முறைக்கும் ஒரு முறைப்பிலையே நீ காலி ஆகிருப்படி ” எனஅவளை கிண்டலடிக்க...

“ போடா.... டேய்“ என கூறிக் கொண்டு தன் பின்னே மறைத்து வைத்திருந்த கையை அவன் முன் நீட்டி“ டொட்டோடொயிங் “ என காட்ட...

“ ஏஏய் இதழி அழகா இருக்குடா... யார் பண்ணினா இது “ என ஆச்சரியமாக வாயை பிளந்து வெற்றி கேட்க..

சிறிது நேரம் அவனிடம் அவள் கெத்து காட்ட..

“ ரொம்ப பண்ணாத இதழி.. யார் செஞ்சா அது “ என அவள் கையில் வைத்திருந்த அழகான பேப்பர் வீட்டைக் காட்டி கேட்க..

“ நான் தான் செஞ்சேன் வெற்றி மாமா... அன்னைக்கு தோட்டத்துல நானும், தோட்டகார தாத்தாவும் விளையாடிட்டு இருந்தோமா.? அப்போ பந்து குட்டி மாமா ரூம் குள்ள போயிட்டு.... அத எடுக்க போனேனா..? அப்போ குட்டிமாமா இப்படி ஒரு வீட்டை அவங்க சிஸ்டம்ல சும்மா ட்ரா பண்ணி வச்சுருந்தாங்க. அது தான் ஈசியா செய்யலாமே..? மாமா ஏன் அதை இப்படி கஷ்டப்பட்டு சிஸ்டம்ல வரையணும்னு தான் நானே செஞ்சு அவருக்கு குடுக்கலாம்னு பார்த்தா.. பார்க்காம போறார்.. இத நீயே வச்சுகோடா... குட்டிமாமாவுக்கு குடுக்காத “ என இதழை சுழித்துக் கொண்டு பல நாள் கஷ்ட பட்டு அவளின் குட்டிமாமாவுக்காக செய்ததை வெற்றியிடம் கொடுத்துவிட்டாள் இதழி...

அதற்குள் மணியம்மாள் பஜ்ஜி செய்துக் கொண்டு வர.. அதை வாங்கி சோபாவில் அமர்ந்து வெட்டிக் கொண்டு இருந்தாள் அவள்.. அவளின் அருகில் அமைதியாக அமர்ந்து தன் கையில் பாட்டி தந்த பஜ்ஜியை சாப்ட்டுக் கொண்டு இருந்தாள் இனியாள்... அவளை அமைதியாக பார்த்துக் கொண்டு வந்த வெற்றி, இதழியிடம் சென்று அவள் கையில் இருந்த தட்டை பறித்துக் கொண்டு அவன் மாடிக்கு ஓட..

“ டேய் தாடா “ என அவனை விரட்டிக் கொண்டு ஓடினாள் இதழி...

வெற்றி ஓட,,, இவள் விரட்ட என்று சக்தி அறையை தாண்டி வெற்றி ஓடினான்... அவனை முறைத்துக் கொண்டே இதழி ஓட.., அப்பொழுது தான் தன் அறையை திறந்துக் கொண்டு வெளியில் வந்த சக்தி மேல் மேதிய அவள்.. “ ஆஆ.. அம்மா“ என்ற அலறலுடன் தன் வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்....

அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிய.. முதல் முறையாக அவளை ஊன்றிப் பார்த்தான் சக்தி... அவளை எப்பொழுதும் சிரித்த முகமாகவே பார்த்து விட்டு இன்று அவள் முகம் வேதனையை காட்டவும் ஊன்றிகவனித்தாலும்... கவனித்திருக்கலாம்.... ஏதோ ஓன்று அவளை ஊன்றி கவனிக்க வைத்தது...



வேர் மெல்ல சாயும்...:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top