• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennaruge nee irunthaal #1(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மருதமலை கோயிலின் மேல்வரை பைக்கில் சென்றபின் கயல்விழியும், மதியழகனும் படிக்கட்டு வழியாக மருதமலை முருகனை தரிசனம் செய்தபின் பிராகாரத்தில் இருந்த மற்ற கடவுள்களை வழிபட்டபின் பாம்பாட்டி சித்தரை வழிபட்டு விட்டு வந்து கோயிலில் அமர்ந்தார்கள்.

மதியழகன் அவளுக்கு பிரசாத ஐட்டங்களை வாங்கிதர இருவரும் சாப்பிட்டனர்.

"கயல்... நேரமாச்சு. வீட்டுக்கு கிளம்பலாமா? என்று அவளிடம் மதியழகன் கேட்க "சரி மாமா" என்றாள் கயல்விழி.

மருதமலையிலிருந்து கீழே இறங்கும்போது நடுவழியில் "மாமா பைக்கை ஸ்டாப் பன்னுங்க" என்றாள் கயல்விழி.

கயல்விழி சொல்லியதும் ஏதோ அவசரம் என்று நினைத்தவனாய் வண்டியை நிறுத்தியபின்,
"கயல்... ஏன் வண்டியை நிறுத்த சொன்னாய்?" என்றான்.

கயல்விழி பைக்கைவிட்டு இறங்கி நின்று கொண்டு,
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மாமா" என்றாள்.

கயல்விழி பைக்கை நிறுத்திய இடத்தில் பசுமையான மரங்கள் இருந்ததால் பைக்கை அங்கே நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.

"மாமா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நான் நேரடியாக சொல்லிடறேன். "ஐ லவ் யூ மாமா" என்றாள் கயல்விழி.

மதியழகனோ அவள் ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.

"இதை சொல்லதான் பைக்கை நிறுத்த சொன்னியா நீ?" என்று அலட்சியமாக கேட்டபடி சிரித்தான் மதியழகன்.

"மாமா! சிரிக்காதீங்க நீங்க. நான் உங்ககிட்ட சீரியஸாகதான் சொல்றேன். ஐ... லவ்... யூ... நான் உங்களை காதலிக்கிறேன். அது உங்களுக்கு புரிஞ்சா சரி" என்று அழுத்தமாக கயல்விழி சொல்ல மதியழகன் கோபத்தில் அறைந்துவிட்டான்.

கயல்விழியை இதுவரை யாரும் அடித்ததில்லை. அவனுக்கோ அவள் மீது கொள்ளை பிரியம் என்பதால் கயல்விழி என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவனுக்கு கோபமே வராது.

அத்தை அன்னலட்சுமி அவளை அதட்டினாலே "திட்டாதீங்க அத்தை. கயல் நல்ல பொண்ணு சொன்னா புரிஞ்சுக்குவா" என்று பரிந்து பேசுவான் அவன்.

கயல்விழி அடிவாங்கியதும் வலிதாங்க முடியாமல் தன் கன்னங்களில் கைவைத்து விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

கயல்விழி அழுவதை பார்த்த மதியழகன் அவளிடம் வந்து "சாரிடா! மாமா உன்னை கோபத்தில் அடிச்சிட்டேன். சாரிடா! சாரி! ரொம்ப வலிக்குதா?" என்று கேட்க ஆரம்பித்துவிட்டான்.

"சொல்லுங்க மாமா... என் காதலை நீங்க ஏத்துகிறிங்களா? இல்லையா?" என்றாள் கயல்விழி.

Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"கயல்... " என்று அவன் அதட்ட, "மாமா... நீங்க என்ன சொல்ல போறிங்க? இது காதலிக்கற வயசு இல்லை. நீ நல்லா படிக்க வேண்டிய வயசு. நல்லா படின்னு சொல்ல போறிங்க அவ்வளவுதானே" என்றாள் கயல்விழி.

ஆம் என்பது போல் அவன் தலையசைக்க "மாமா... என்னால் படிக்க முடியலை. டிவி பார்த்தால், புக் படிச்சால், பாட்டு கேட்டால், நின்றால், நடந்தால், படுத்தால் என்று என்ன செஞ்சாலும் உங்க மேல் இருக்கற காதல் வளருதே தவிர குறையலை" என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் மதியழகன்.

"மாமா... நான் உங்களை எட்டாவது படிக்கும் போதே காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். பத்தாவது முடிச்சப்பவே சொன்னேன். நீங்க அதை சீரியசா எடுத்துக்கலை. அப்பவும் இப்படித்தான் சிரிச்சிங்க. இந்த ரெண்டு வருசத்துல் என் காதல் வளர்ந்து மரமா நிக்குது. எந்த ஆணை பார்த்தாலும் உங்க முகம்தான் தெரியுது" என்ற கயல்விழியின் வார்த்தைகள் அவனை அதிர வைத்தன.

"மாமா! என் காதலையும், என் நிலையையும் நான் உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க என் காதலை ஏத்துகலைன்னாலும் சரி ஆனா என்னை விட்டு விலகவோ இல்லை என்னை படிப்புங்கற பேரில் விலக்கி வைக்க முயற்சி பன்னாதீங்க. என்னை நீங்க அப்புறம் உயிரோடு பார்க்கமுடியாது" என்று பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை என்பதை உணர்ந்தான் மதியழகன்.

அவனுக்கு கயலின் நிலை தெளிவாக புரிந்துவிட்டது.

அவள் வழியில் சென்றால்தான் இனி அவளை தேற்றமுடியும் என புரிந்தவனாய் கயலை பார்த்தான் மதியழகன்.

தற்பொழுது காதலை ஏற்றுக் கொள்வதாக அவளிடம் சொன்னால் தன்னை பத்திரமாக அழைத்து செல்ல அப்படி சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்வாள்

அவள் காதலை மறுத்தால் அதன்பின் அவள் நிலை என்ன என்பது கேள்விக்குறியான விஷயமாகிவிடும்.

சிறுபெண்ணான அவளை பொய்யாக காதலிக்கவும் கூட அவனால் இயலாது. அவளின் இந்த குழப்பமான நிலை பற்றி யாரிடம் சொன்னாலும் அவளுக்குதான் சிக்கல் அதிகமாகும்.

"கயல்! உன் காதலை என்னால் இப்பவும் ஏத்துக்க முடியாது ஆனால் எப்பவும் முடியாதுன்னு சொல்லலை." என்று சொல்ல "மாமா" என்றாள்.

Write your reply...
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"கயல்! நான் உன்னை விட்டு விலகி போகவோ இல்லை விலக்கி விடவோ முயற்சி செய்ய மாட்டேன்" என்றதும் அவள் மனம் சற்று தெளிய ஆரம்பித்ததை அவள் முகம் காட்டியது.

"கயல்! நீ காதலை மறந்து விடு என்று சொல்லலை." என்று மதியழகன் சொன்னதும் "தாங்க்ஸ் மாமா" என்றாள் கயல்விழி.

"கயல்! நீ படிப்பில் முழு கவனம் செலுத்தனும். இந்த பிளஸ்டூ எக்சாமில் நிறைய மார்க் எடுத்து பாஸ் ஆகனும். நீ ஏதாவது ஒரு டிகிரி படிச்சு உன் சொந்த காலில் நிற்கிற அளவுக்கு உயரனும். நான் சொல்ற இதை எல்லாம் செஞ்சுமுடி கண்டிப்பா உன் காதலை ஏத்துகிடறேன். என்ன முடியுமா?" என்றான் மதியழகன்.

"சரி மாமா நான் ஏத்துகிறேன். நீங்க சொல்றதை எல்லாம் செய்யறேன். என் காதல் அப்பவும் மாறாது" என்றாள் கயல்விழி.

"சரி கயல். நான் அதுவரை இந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன்." என்றான் மதியழகன்.

"அதுதான் எனக்கே தெரியுமே. நீங்க என்மேல் காட்டின அதே பாசத்தையும் நெருக்கத்தையும் இனிமேலும் நீங்க காட்டனும். நீங்க என்னை விலக்கினா எனக்கு குற்ற உணர்ச்சி வந்திடும் அப்புறமாக என்னால் எதையும் செய்ய முடியாது. என்ன சரியா மாமா?" என்றாள் கயல்விழி.

"சரி கயல். எனக்கு இந்த டீல் ஒகே" என்று மதியழகன் சொல்ல "எனக்கும் ஒகே" என்று சிரித்தாள் கயல்விழி.

"சரி போகலாமா?" என்று மதி கேட்க "இனி போலாம் ரைட்" என்று சொன்ன கயல்விழி பைக்கில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

பைக் மலை அடிவாரம் இறங்கி சாலையில் செல்லும்போது "மாமா! கரும்பு ஜூஸ்" என்றாள் கயல்விழி.

மதியழகன் பைக்கை நிறுத்தி கரும்பு ஜுஸ் வாங்கி தர குடித்தபின் அவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

கயல்விழியின் வீட்டிற்கு வந்த அவர்களுக்கு முன்னால் அத்தை அன்னலட்சுமி வந்திருந்தார்கள்.

"என்னம்மா நல்லபடியா சாமி கும்பிட்டியா? சாமிகிட்ட நல்லா வேண்டிட்டியா?" என்றாள் அவள் அம்மா.

"நல்லா வேண்டிட்டேன். சாமி எனக்கு வரம் தரதா சொல்லி விட்டதும்மா. என்ன மாமா அப்படித்தானே?" என்று மாமாவை பார்த்தபடி சொன்னாள் கயல்விழி.

அவன் ஆம் என்று சொல்ல "நீ நல்லா இருக்கனும். எனக்கு அது போதும்" என்று அவள் பேச்சின் அர்த்தம் புரியாமல் அத்தை சொன்னாள்.

"சரி அத்தை... நான் அப்படியே வீட்டுக்கு கிளம்பறேன்" என்று மதியழகன் கிளம்பினான்.

"இப்ப சமைச்சிடறேன். மதியம் சாப்பிட்டு போயேன்" என்றாள் அத்தை.

"இல்லை அத்தை நான் இப்ப கிளம்பறேன். கயல் பர்த்டே பார்ட்டிக்கு ஈவினிங் வர்றேன்"

"சரிப்பா" என்று அத்தை சொல்ல "மாமா! நான் சொன்னதை மறந்துடாதீங்க" என்றாள் கயல்விழி.

அன்னலட்சுமி புரியாமல் விழிக்க "அவ கேக்கை சொல்ற அத்தை" என்று சமாளித்தான் மதியழகன்.

"உன் மாமா ஒருதடவை சொன்னா செஞ்சிடுவான்" என்று அத்தை அதட்ட "அதையும் பார்க்கிறேன்" என்றாள்.

மதியழகனுக்கு அவள் பேச்சின் அர்த்தம் புரிந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று குழம்பியவனாய் சென்றான்.
Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
:D :p :D
நான்தான் First,
சக்திப்ரியா டியர்
நன்றி பானுமதி அம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top