• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennaruge nee irunthaal #1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அத்தியாயம்-1

இரவு மணி 11.57.

உலகமே அமைதியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த இருவிழிகள் உறங்காமல் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த எழில் விழிகளுக்கு சொந்தகாரி கயல்விழி.

இன்னும் மூன்றே நிமிடங்கள்.

அவளுக்கு நிமிடங்கள் எல்லாம் வருடங்களாக மாற ஆரம்பித்து விட்டதால் எண்ணத் தொடங்கி விட்டாள்.

மூன்று... இரண்டு... ஒன்று என்று உதடுகள் உச்சரிக்கும் வேளையில் மதி மாமா காலிங் என்று செல்போன் திரையில் தோன்றியது.

அவள் காத்திருந்த அந்த கால் வந்துவிட எடுத்து "ஹலோ மாமா" என்றாள்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயல் செல்லம்" என்ற மாமா மதியழகனின் குரல் தேனாக பாய்ந்தது.

"தாங்க் யூ மாமா! தாங்க் யூ! தாங்க் யூ! தாங்க் யூ சோமச் மாமா!" என்ற அவளின் குரலில் உற்சாகம் துள்ளியது.

"சரிடா... கயல் செல்லம்... என்ன சந்தோஷமா? மாமா சொன்னமாதிரி போன் பன்னிட்டேனா?"

"மாமான்னா மாமாதான்!. ஐ லவ் யூ சோ மச் மாமா!" என்று அவள் உற்சாக மிகுதியால் தன்னையும் மீறி சொல்லி விட்டாள்.

"சரிடா... நீ இப்ப தூங்கு. மாமா காலையில வந்து பார்க்கிறேன். இப்ப போனை வைக்கிறேன்" என்றான் மதியழகன்.

"சரி மாமா" என்று அவள் வார்த்தைகள் உதிர்க்க போன் கட் ஆகியது.

அவள் செல்போனுக்கு மெசேஜ் வர திறந்து பார்த்தாள்.

"ஹேப்பி பர்த்டே கயல்விழி செல்லம்" என்ற மாமாவின் வாழ்த்து மெசேஜ் வந்திருந்தது.

வாட்ஸ்அப்பில் நுழைந்து அவள் தேட அதிலும் மாமா அனுப்பிய விதவிதமான மெசேஜ்கள் பார்த்து அவள் ஒன்று விடாமல எல்லாவற்றையும் பார்த்து ஆனந்தமாகி விட்டாள் கயல்விழி.

கயல்விழி சந்தோஷமானதுடன் இன்றே தன் காதலை சொல்லி சம்மதம் பெற்று விட வேண்டும் என்று திட்டமிட்டாள்.

ஆம். நம் கயல்விழிக்கு தன் மாமா மகன் மீது அளவிட முடியாத காதல்.

காதலர் தினமான பிப்ரவரி 14ல் பிறந்ததால் என்னவோ அவள் தாவணிக்கு மாறிய வேளை முதல் மதியழகனை காதல் கணவனாகவே காண்கிறாள் கயல்விழி.

பத்தாம் வகுப்பு முடித்தவுடனே காதல் படம் தந்த ஊக்கத்தால் கல்லூரி இறுதியாண்டு படித்த மதியழகனிடம் "ஐ லவ் யூ" என்று அப்பொழுதே சொல்லி அதிர வைத்தாள் கயல்விழி.

பள்ளி இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும் அவளின் காதல் இன்றுவரை கூடியதே தவிர குறையவே இல்லை.

கயல்விழிக்கு ஒருபுறம் ஆனந்தம் மறுபுறம் தவிப்பு என கலவையாய் அவள் மனம்.

அவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளே அறியவில்லை.

"கயல்! பிறந்ததாள் அதுவுமாக இன்னும் தூங்கிட்டிருக்காயா? என்ற அம்மா அன்னலட்சுமியின் குரல் கேட்டு விழித்தாள் கயல்விழி.

"மணி என்னம்மா ஆச்சு?" என்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கண்களை திறக்காமல் கேட்டாள்.

"ஏழு மணி ஆச்சு. எந்திரிச்சு பல்லு விளக்கிட்டு வா. காபி தர்றேன்" என்றாள் தாய்.

"சரிம்மா" என்று நைட்டியுடன் பாத்ரூம் சென்று பல் விளக்கி விட்டு அம்மாவிடம் வந்தாள்.

"இந்தா காபியை குடிச்சிட்டு வென்னீர் போட்டு வைக்கிறேன். சீக்கீரம் குளிச்சி கோயிலுக்கு போக ரெடியாகு" என்று அதட்ட சரி என்று மறுபேச்சின்றி காபியை குடித்துவிட்டு தற் அறைக்கு சென்றாள்.

கயல்விழி கடந்தவாரத்திலே தன் மாமவுடன் சென்று பிறந்த நாள் ஆடையை வாங்கி தைத்து வைத்துவிட்டாள்.

கயல்விழி அறைக்கு சென்று பீரோவில் இருந்த பிறந்தாள் டிரஸ்ஸை எடுத்து கட்டிலில் வைத்துவிட்டு குளியலறைக்கு சென்றாள்.

Message…
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
சில நிமிட குளியலுக்குபின் வந்த கயல் அந்த இளம்பச்சை வண்ண சுடிதாரை அதே கலரில் இருந்த துப்பட்டாவுடன் அணிந்து கொண்டாள்.

கயல்விழி தன் கூந்தலையும் நேர்த்தியாக சீராக வாரி லூசாக பின்னி பச்சை நிற ரப்பர் பேன்ட் இட்டு விட்டு, சுடிதார் நிறத்தில் வளையலும், பொட்டும் அணிந்து , ஜிமிக்கி கம்மல், கண்ணாடி வளையல்களை அதே பச்சை நிறத்தில் அணிந்து விட்டு கண்ணாடியில் தன் அழகை ரசித்து விட்டு வந்தாள்.

நீள் வட்டமான முகம், செதுக்கபட்ட புருவங்கள், சிறிய கண்கள், அளவான நாசி, மெல்லிய காதுகள், குறுநகை புரியும் இரு இதழ்கள், அழகான குண்டான சிரித்தால் குழி விழும் கன்னங்கள், இடை தொடும் கூந்தல், அளவான எடையில் குண்டான தேகம், நல்ல சிவப்பு நிறம்.

கயலை எப்படி பார்த்தாலும் மோகம் கொள்ள வைக்கும் இருபது வயது கல்லூரி பெண் போல் தோற்றமுடைய பதினாறு வயது தேவதை.

கயல் நீ அழகுதாண்டி என்று தனக்குதானே பாராட்டிவிட்டு அறையிலிருந்து பச்சை தேவதையாய் சிரித்தபடி வெளியே வந்தாள்.

"அத்தை!" என்றழைத்தபடி பரிசு பொருட்களுடன் உள்ளே வந்தான் மதியழகன்.

"மாமா! மணி என்ன ஆச்சு? இதுதான் உங்களுக்கு வர்ற டைமா?" என்று கயல்விழி வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

"சாரிடா! நேத்து கொஞ்சம் கம்பெனில வேலை அதிகம். நான் முடிச்சிட்டு வந்து தூங்க மணி பன்னிரெண்டு ஆயிடுச்சி"

"வாப்பா! மருமகனே! இப்பதான் வந்தியா?" என்றபடி வந்தாள் அத்தை அன்னலட்சுமி.

"ஆமா அத்தை. இப்பதான் வந்தேன் அப்படியே கயல்கிட்ட பேசிட்டு இருந்தேன்" என்றான் மதியழகன்.

"ஏய் வாயாடி! மாமாவுக்கு குடிக்க தண்ணி தராம என்ன வம்பளக்கிற நீ. நல்ல ஜில்லுன்னு பானை தண்ணி கொண்டு வா" என்று அதட்டிய அம்மாவை முறைத்தபடி சென்றாள்.

சில நிமிடங்களில் தண்ணீர் செம்புடன் வந்து "இந்தாங்க மாமா" என்றாள்.

மதி செம்பை வாங்கி தண்ணீர் குடித்துவிட்டு பின்,
"கயல்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தா உன் கிப்ட்" என்று விலையுயர்ந்த ஹீரோ பேனா பேக்கை நீட்டினான்.

"தாங்கஸ் மாமா" என்றபடி சந்தோஷமாக வாங்கி கையில் வைத்துக் கொண்டு புன்னகை சிந்தினாள் கயல்விழி.

"இந்தா உன் பர்த்டே கேக்" என்று நான்கு பச்சை வண்ண கேக்கள் அடங்கிய கேக் பாக்சை மதியழகன் பிரிக்க, "டிபனுக்கு அப்புறம் சாப்பிடலாமே" என்றாள் கயலின் தாய்.

"சரி அத்தே" என்று அவன் மூடிவிட்டு எழ கயல்விழியும் அவர்களுடன் சென்று இட்லி சாம்பாரையும், இனிப்பு கேசரியையும் விழுங்கி விட்டு வந்தாள்.

கயலின் விழிகள் கேக் பாக்சை வட்டமிட அன்னலட்சுமி மகள் மனமறிந்தவளாய் பாக்சை திறந்து கேக்கை ஊட்ட "தாங்க்ஸ்மா" என்று வாங்கிக் கொண்டு மீதி கேக்கை தாய்க்கு ஊட்டினாள்.

"இந்தாங்க மாமா" என்று மாமாவிடம் கேக்கை நீட்ட அவனும் வாங்கிக் கொண்டான்.

அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, கறைபடாத உதடுகள், அளவாக வெட்டபட்ட தலைமுடி, கத்தரிக்கபட்ட மீசை, அகன்ற தோள்கள், விரிந்த மார்பு, நல்ல உயரம், அளவான எடை மாநிறம் கொண்ட இருபத்திரெண்டு வயது இளைஞன்.

பி.இ முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் நவீன இளைஞன்.

"மதி! கயலுக்கு மருதமலை போகனுமாம்" என்றாள் அத்தை.

"அதுக்கென்ன போயிட்டா போச்சு. வாங்க போலாம்" என்றான் மதியழகன்.

"என்னால் வரமுடியாதுப்பா. இங்க ரெண்டு முக்கியமான பங்க்ஷன் இருக்கு. நீ மட்டும் அவளை கூட்டிட்டு போயிட்டு வந்துடு" என்றாள் அத்தை.

"சரிங்க அத்தே" என்று அவன் தலையசைக்க அவள் திட்டம் நிறைவேறியதால் சந்தோஷம் அடைந்தாள் கயல்விழி.

"மாமா பைக்ல போலாம்" என்று அவள் கேட்க மதியழகன் அத்தையை பார்த்தான்.

"அவ ஆசைப்படறா இல்லை கூட்டிட்டு போப்பா. இங்க பக்கம்தானே" என்றாள் அன்னலட்சுமி.

"தாங்கஸ்மா" என்ற கயல்விழி உடனே " அதான் அம்மாவே சொல்லிட்டாங்களே மாமா" என்றாள்.

"சரிங்க அத்தை" என்ற மதியழகன் கிளம்ப அவள் பின்னே சென்றாள் கயல்விழி.

பஜாஜ் பல்சரை சாவி போட்டு அவன் ஸ்டார்ட் செய்து கிளப்ப எறி அவன் பின்னே அமர்ந்தாள் கயல்விழி

"நான் போயிட்டு வர்றேன் அம்மா" என்று கயல் சொல்ல,
"பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. மெல்ல டிரைவ் பன்னு மதி" என்றாள் அத்தை.

"சரிங்க அத்தை" என்று மதியழகன் வண்டியை கிளப்ப அம்மாவுக்கு டாட்டா காண்பித்தாள் மகள் கயல்விழி.

வடவள்ளியிலிருந்து அவர்கள் பயணம் மருதமலையை நோக்கி செல்ல அந்த பயணம் சிறிது என்றாலும் அவள் மகிழ்ந்தாள்.

கயல்விழி மருதமலையில் தர இருக்கும் பெரிய அதிர்ச்சியை அறியாமல் மதியழகன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
Write your reply...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top