• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Ennullae ennullae 1

Jaa sha

Author
Author
Messages
324
Likes
1,164
Points
116
Location
Karaikudi
#1
குட்டி கதையில குட்டுவாங்கி எழுத்து பழக வந்திருக்கேன் ...
எப்டி இருந்தாலும் சொல்லுங்க..
கொஞ்சம் கொஞ்சமா கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்...

என்னுள்ளே என்னுள்ளே...

சமயல் பாத்திரங்களுடன் சண்டையிட்டு சமாதானமாய் தோசை வார்த்து கொண்டிருந்தாள் சரிகா...

சராசரி உயரம்.. சற்றே நிறமுடன்..முழியும் அதன் கீழ் மூக்கும் திருத்தமாய் கொண்ட அழகு பெண்...

சந்தியா சரிகா ... சகோதரிகளாய் காட்டிக்கொள்ளும் ஒத்த ஜாடையிலும் சரிகாவின் பொலிவு சற்றே அதிகமான வார்ப்பில்....

சகாமா..." இன்னும் ஒன்னு மட்டும் போதும்மா ...நீயும் அக்காவும் சாப்பிடுங்க "என்று மாலை நிகழ்வுகளோடு நினைவை பதித்து கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்டு எழுந்தார் வெங்கடேஷ்...

வாட்ச் ரிப்பேர் செய்வதுடன் ரீசார்ஜ் செய்யும் கடை ஒன்று
வைத்திருக்கிறார்...மனைவி இறந்து 5 வருடங்கள்... இரண்டு மகள்களின் பாசமிகு தந்தை...

"எனக்கு பசி இல்ல நீ முதல்ல சாப்பிடு சகா..நான் உனக்கு தோசை சுட்டு தர்ரேன்" என்று கட்டி இருந்த புடவையை மாற்றி நைட்டியுடன் வந்தாள் சந்தியா....

சரிகா எதுவும் பேசாமலே சாப்பிட்டு கொண்டே சிந்தனையாய் இருந்தாள்....
இன்றைய நிகழ்வு அப்படி...மாலையில் சந்தியாவை பெண் பார்த்து சென்றவர்கள் செய்த வேலை அப்படி....

மூத்த பெண் சந்தியாவை பார்க்க வந்தவர்கள் இவளையும் அவர்கள் அடுத்த பையனுக்கு கட்டி தரும்படி கேட்டு சென்றிருக்க.... அப்பா என்ன பதில் சொல்வாரோ என்று கலக்கமான மன நிலையில் இருந்தாள்...சரிகா...

சந்தியா சரிகா..இரண்டு வருடமே இடைவெளியில் பிறந்தவர்கள்...சந்தியா படிப்பை முடித்து ரெண்டு வருடம் சரிகா முடித்து 6 மாதம் ஆகிறது...

நடுதர குடும்ப சூழலுக்கு ஏற்ற ஒரு டிகிரி படிப்போடு இருவரும் நிறுத்திக்கொண்டனர்..அப்பாவின் கைகளுக்குள் 5 வருடம் அடங்கி நிற்கும் பெண்களாய்..

வெங்கடேஷின் உயிர் நட்பான சேதுராமன் கொண்டு வந்த சம்பந்தமே இன்று பெண் பார்த்து சென்றவர்கள்...

இரண்டு பெண்களுக்கும் ஒரே இடத்தில் கேட்பது முற்றிலும் எதிர்பாரதா ஒன்று...அவர் சூழ்நிலை ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் முடிக்க சாத்தியமும் இல்லை...

இப்படியான சிந்தனைகளோடு சேதுராமனை போனில் அழைத்து பகிர்ந்து கொள்ள .."என் கிட்ட சொன்னாங்க வெங்கி நம்ம சரிகாவை அவங்களுக்கு பிடிச்சி போச்சாம் .. அவங்க ரெண்டாவது பையனுக்கும் அடுத்து பார்க்க இருக்கதால, உடனே சட்டுனு கேட்டுடாங்களாம்..நீ பெரிசா. எதுவும் செய்யனும்னு இல்லனு சொல்றாங்க..."

இப்படி வெங்கி சேது பேசி கொண்டிருக்க சரிகாவோ நிழற்படமாய் கைகளில் தவளும் போனில் சிரித்து கொண்டிருப்பவன் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்...


வாட்ஸப் ஸ்டேடஸுடன் சண்டையிட்டு படி... சாகசம் பண்ணி போட்டோ போடுறேனு சாவடிக்கிறான்...

உன்னலாம் யாரும் போட்டோ கிராஃபர்னு ஒத்துக்க முடியாது போடா போலி போட்டோகிராஃபர்...மனதில் தோன்றியதை அப்படியே டைப்பாக தட்டியும் விட்டிருந்தாள்...

உன்ன பொண்ணாவே ஒத்துக்க முடியாது போடினு ...பதில் அனுப்பி இருந்தான்...
அதான் நீயே அப்படி என்ன பார்க்கலயே அப்பறம் என்ன மனதில் ஏற்பட்ட கலக்கம் மறைத்து... டூர் எப்டி எஞ்சாய் பண்றியானு கேட்டிருந்தாள்...

"கண்ணுக்கு குளிர்ச்சியா அட்டகாசமா எஞ்சாய் பண்றேன்..."

சகா.." சந்தியா பொண்ணு பார்த்தவங்க என்ன சொன்னாங்க."..நியாபகம் வந்தவனாய்..விசாரித்தான்...

அதுபத்திஉங்க அப்பாட்ட கேளு...அவர் ஏற்பாடுதான...என்று மனதில் ஒட்டாத பதில் ஒன்று சொல்லி போனை கட் செய்துவிட்டாள் ....

அந்த போலி போட்டோகிராஃபர் வேறு யாருமல்ல சேதுராமனின் மகன் நிவோதிஸ்...

சேதுராமனின் இரண்டு மகன்களில் இரண்டாமவன்..மூத்தவன் விமலன்...இரண்டுவயசு பெரியவன்...அவன் குணத்தில் அம்மா மீனாட்சியை கொண்டு நிவோ அப்பாவை கொண்டு இளகிய நட்பு பாராட்டும் குணமுடன்...

சரிகாவின் நண்பனாய் மற்றவர் பார்வையிலும்..சரிகாவின் மனதில் மட்டும் 2 வருடமாய் காதலாய் வளம் வருபவன்... சின்னவயதிலே நட்பால் இணைந்தவன்... அவன் வரையில் இவள் காதல் கடத்தபடாதவன்....
வெங்கியும்.. சேதுவும் சின்ன வயதிலிருந்து அக்கம் பக்கத்து வீடுகளில் ஒன்றாய் வளர்ந்து அகம் உணர்ந்த நட்பான நண்பர்கள்....

அவர்கள் வளரும் போதே சேதுவின் பொருளாதாரமும் ஒரு வளர்ச்சி கண்ட நிலையில்....

வெங்கி மட்டும் சற்று பின் தங்கிவிட அவர்கள் நட்பு சேதுவின் குடும்பமளவில் விரிந்து பரவாது... இருந்துவிட இதோ இவளும் அவனும் ஒரு அழகியல் நட்பாய்... அடுத்த கட்டம் நகர்ந்த அவள் காதல் நிவோ வேலை காரணமான இரண்டு வருட பிரிவில் அவளுள் அவளே அறியாது நடந்த நிகழ்வு...

சேதுவின் வீட்டை பொறுத்த மட்டில் . வெங்கி சேதுவின் நட்பு அளவுகள் கொண்டது ஒட்டுதலும் அவ்வளவே... நிவோதிஸ் வெங்கி என்றால் தந்தையை கொண்டு பாசமுடன் உறவாய் வளர்ந்தவன். ...

சின்னஞ்சிறு வயதில் சின்ன சின்ன சண்டைகளுடன் சிறைபிடித்த நட்புக்கரம்..அவள் அன்னை இழப்பில் இன்னும் பலப்பட்ட நட்பானது...


இந்த நிலையில் இவள் திருமண பேச்சு ஆரம்பித்துவிட ... மனதை வெளிபடுத்தாத அவள் காதல் மேகங்கள் கலைந்து தான் போகுமா...
 
Last edited:

Advertisements

Advertisement

Latest Episodes

Top