• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ENUN - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vinorohith

புதிய முகம்
Joined
Feb 9, 2019
Messages
15
Reaction score
43
Location
Tindivanam
அங்கயற்கண்ணியின் புலம்பல் அடங்கியது. வராத கண்ணீரை புடைவை முந்தானையால் துடைத்துக்கொண்டவர், “நம்மூரு பொண்ணா? அவ யாருடி அவ, எம்புள்ளய மயக்குனவ?” சிண்டு பிடிக்கும் தோரணையிலேயே கேட்டார் அங்கயற்கண்ணி.

அம்மாவிடம் எதையும் மறைக்கும் பழக்கமில்லை மாறனுக்கு. தவறே செய்திருந்தாலும் அவரிடம் கூறி நான்கு திட்டுக்களையாவது வாங்கிக்கொள்வான், ஆனால் எதையும் மறக்க மாட்டான், அதில் அங்கயற்கண்ணிக்கும் நெஞ்சு கொள்ளாத பெருமையே. “அது, நம்ம கயலு கூட படிக்குற புள்ள, முல்லை இருக்குல்ல, அவதாம்மா...” என்றான் தயங்கியபடி.

“முல்லையா...” யோசனையில் ஆழ்ந்தார் அங்கயற்கண்ணி. சிறிது நேரத்திற்கு எதுவுமே பேசவில்லை அவர். “என்னம்மா, ஏதாவது சொல்லும்மா?” அம்மாவின் முகத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.

“நல்ல புள்ளதான் தம்பி, குடும்பமும் நல்ல குடும்பம்தேன், நம்ம ஆளுங்கதேன்...ஆனா...” குழப்பத்துடன் மகனின் முகத்தைப் பார்த்தார்.

மறுபடியும் புன்னகையுடன் அம்மாவின் மடியில் தலையை வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான். எல்லாம் தெரிந்துதான் மாறன் முல்லையை விரும்புகிறான் என்று புரிந்துபோனது அங்கயற்கண்ணிக்கு.

“எலே, மாறா, புரிஞ்சுதான் பேசுறியா, பதினெட்டு வயசாயிருச்சு அந்த புள்ளைக்கி, இன்னும் பெரிய மனுசி ஆகல,” என்றார்.

“அதெல்லாம் பாத்துக்கலாம்மா, நீ அந்தப் புள்ள நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா, உனக்கேத்த மருமகளா இருப்பளான்னு யோசிச்சுக்கோ...” என்றான் மாறன்.

“என்ன ராசா, விவரம் புரிஞ்சுதான் பேசுறியா, வம்ச விருத்தி ஆகவேண்டாமா?” என்று கவலையாக கூறிய அம்மாவைப் பார்த்து புன்னகைத்தவன், “அம்மா, சைன்ஸ் எவ்வளவோ முன்னேறிருச்சும்மா, அதெல்லாம் சரி பண்ணிடலாம், பொண்ணு உனக்கு புடிச்சுருக்கான்னு மட்டும் சொல்லு...” என்றவனின் காதைத் திருகி, “ரொம்பவே தைரியம்தாண்டா உனக்கு, என்கிட்டே வந்து உன் காதல் கதைக்கி முடிவு கேக்குறியா?” கோபாமாக இருக்க முயன்றாலும் சிரிப்பு வந்துவிட்டது அங்கயற்கண்ணிக்கு.

“உன்கிட்ட கேக்காம நான் எதுவுமே செஞ்சதில்லைம்மா, அதுதான் காதலையும் உன்கிட்ட கேட்டுக்கிட்டே செஞ்சுடலாம்னு, எதிர்காலத்துல மாமியாருக்கும் மருமகளுக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழிக்கறதுல இருந்து தப்பிக்கலாமே...” என்றான் மாறன்.

“வெவரம்தாண்டா, எதுக்கும் நான் கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்றேன்” என்றபடி எழுந்துகொண்டார் அங்கயற்கண்ணி.

“சரிதான், மாமியார் முறுக்கை காமிக்கிறேங்கலாக்கும், நடத்துங்க, நடத்துங்க...” என்று எழுந்து அம்மாவுடன் வீட்டிற்குள் நுழைய...

பின்னங்கால் பிடரியில் படுமளவிற்கு தலைதெறிக்க வீட்டிற்குள் ஓடிவந்த கயல்விழி, மூச்சு வாங்கியபடியே... “அம்மா, நம்ம முல்லை...முல்லை...” என்று திணறினாள்...

கயலின் திணறல் மாறனின் நெஞ்சுக்குள் தீயை மூட்டியது...உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சுவாங்க நின்றிருந்த தங்கையை மாறன் வெளிறிய முகத்துடன் பார்த்தபடி நின்றிருக்க...

“என்னாச்சு, கயலு, முல்லைக்கி என்னாச்சு?” என்று அங்கயற்கண்ணியும் படபடத்தார்...

“முல்லை...நம்ம முல்லை...வயசுக்கு வந்துருச்சும்மா...நலங்கு வெச்சு பந்தக்கால் நடுறதுக்கு அவுங்கம்மா உன்னை கூட்டியாரச் சொன்னாங்க...” திக்கித் திணறியபடி சொல்லி முடித்தாள் கயல்விழி.
Next epi eppothan poduvinga sis corrects one year agiduchu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top