• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Epi 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
10


இரண்டு மணிநேர பயணத்துக்குப் பிறகு அவர்கள் வந்தது செங்கல்பட்டு அருகே ஆத்தூர் என்னும் ஊரில் ஒரு விவசாய நிலத்தின் முன். இவர்கள் கூடவே அங்கு ஒரு பெரிய படையே வந்திறங்கியது. எல்லாரும் மாடர்ன் மக்கள், ஆனால் இங்குக் களப்பணி செய்வது போல் வந்திருந்தனர்.


அவர்கள் கையில் வைத்திருந்த மண்வெட்டி இத்தியாதிகளை வைத்து அவளே நினைத்துக் கொண்டாள். அங்குப் போனதும் அந்த மகளிர் குழுவிடம்,


“என் ஃபிரண்டு சித்ரா. இங்கே புதுசா வந்திருக்கா. சோ கொஞ்சம் ஈசியான வேலையா கொடுங்க”


மொழிந்துவிட்டு போனவன் தான், அவள் புறம் திரும்பவே இல்லை. எதற்கு அவளிடம் இந்த அதிரடி என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அன்று ஏதேதோ பணிகள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அமுதனுக்கும் கெளரி சங்கருக்கும் ஏற்கனவே பழக்கமிருந்தது போலும், வேலையில் ஐக்கியம் ஆகிவிட்டனர்.


சித்ராவுக்கு, வெயிலில் நோகாமல் வீட்டில் பூந்தொட்டியில் செடி வைத்துத் தான் பழக்கம். வந்து இந்தப் பத்து நிமிடத்தில் போட்டிருந்த உடையெல்லாம் வேர்வையில் நனைந்து விட்டிருந்தது.


சித்ராவின் மனசாட்சி அவளைக் குடைந்தெடுத்தது.


“ஏன் டீ உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படியா வந்து மாட்டிட்டு முழிப்பே! ஹிட்லர் கிட்ட எங்க போறோம்னு தெளிவா கேட்டியா? கேட்கத் தான் இல்லை, இங்கையாவது எனக்கு இது எல்லாம் தெரியாதுன்னு சொல்லலாமில்ல? பேசாம ஓரமா போய் உட்காரு, பூச்சி எதுவும் கடிக்க போகுது! சும்மா அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகாதே, நோக போறே!”


அவளுக்கு அப்படி தான் தோன்றியது,


‘இவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்?’


ஆனாலும் முடியாது என்று சொல்வதை அமுதனுக்கு பயந்து ஒத்திவைத்தாள்.


இவளுக்கு இன்னும் சில பெண்களுடன் சேர்ந்து, காய் பறிக்கும் பணி, செம்மண் நிரப்பக் கொஞ்சம் மண் எடுக்க உதவுவது போன்ற சின்ன வேலைகள் தான். ஆனால் இந்த வெயிலில் அது கூடச் சிரமமாய்.


கூட உள்ள பெண் இவள் உடையை பார்த்துத் தாங்கமாட்டாமல்,


“இன்னிக்கி நீங்கச் சிம்பிளா டிரஸ் பண்ணிருக்கலாமே? பாருங்க இப்பவே உங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு”


அந்த அக்கறை கூடச் சித்ராவை கடுப்பாக்க தான் செய்தது...


‘பேசாம போறியா இல்லை வாய்ல கத்திய விட்டுச் சுத்தவா’ என்று எண்ணிக் கொண்டாலும், முறுவலித்தபடி அவளிடம்


“இங்க வரப் போறேன்னு தெரியாது, அதான் இப்படி”


அதன் பின் அமைதியாய் தன் பணியைத் தொடர்ந்தாள்.


இடையிடையே இளநீர், மோர் என்று ஏதோ உள்ளே சென்றதால் தாக்கு பிடிக்க முடிந்தது. இல்லையேல் மயக்கம் போட்டிருக்கும் வாய்ப்பு அதிகமே!


இதோ இப்போது முடிந்து விடும், இன்னும் கொஞ்ச நேரம் தான், என்று அவள் எண்ணியது எதுவும் நடவாமல், அந்தி சாயும் வரை வேலை இருந்தது.


வேகாத வெயிலில் வெந்து போய்விட்டாள். அவன் முதல் தடவை வெளியில் அழைத்துப் போகிறான் என்று ஆசையாய் புது சுடிதார் போட்டு வந்தது எவ்வளவு தப்பு, மண்ணில் அது நாசமாய் போனது! ஈஷ்வரி இதை பார்த்துச் சிரிக்க போகிறாள்!


வேலையை முடித்ததும் கிளம்ப ஆயுத்தமான அந்த கூட்டத்தை பார்க்கச் சித்ராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. சொந்த காசில் சூனியம் வைக்கும் ஆட்களா இவர்கள்? இதில் அமுதனும் ஒரு பங்காளியா? அவள் மனம் அழ அதைத் தேற்ற வழி இல்லை.


ஆனால் விவசாயம் எவ்வளவு உன்னதமான பணி! நம் நாட்டின் முதுகெழும்பு என்பதையெல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் தற்போது இல்லை. அவள் மட்டுமல்ல நம்மில் எண்பது சதவிததினர் அவளை போலத் தான்.


வேண்டாத வேலை என்று தப்பாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம் தாத்தனும் முப்பாட்டணும் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த காலம் போய் நாம் இப்போது அதைக் கேவலமாக நினைக்கும் காலம் வந்துவிட்டது!


கிளம்பும் முன் அமுதனை தனியே தள்ளிக் கொண்டு போன கெளரி சங்கர்,


“ஆனாலும் உனக்கு ரொம்ப தான் தைரியம் அமுதன், முன்னே மாதிரி அவளை அதிகாரம் பண்ணலாம்னு நினைச்சியா? சித்ரா முகமே சரி இல்லை. உனக்கு இன்னிக்கி மண்டகப்படி தான் தம்பி” வாழ்த்தி அனுப்பியவனின், வாய் முகூர்த்தம் இந்த முறையும் அப்படியே பலித்தது.


சென்னை திரும்பும்போது அமுதனுடன் காரில் ஒரு வார்த்தை பேசவில்லை அவள். அவனுக்கு அவள் ஆதங்கம் புரிந்தது தான் என்றாலும், இப்போதைக்கு சமாதானப் படுத்த முனையவில்லை. கெளரி சங்கர் இவர்களுக்குத் தனிமை தர எண்ணி மற்றவர்களுடன் திரும்பிகொள்வதாகச் சொல்லிவிட்டான்.


போகிற வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தியவன், சாப்பிட போகலாம் என்று அவளை அழைக்க, அவனை முறைக்கும் படி பார்த்தாள். ஒன்றும் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால் என்னவென்று தோன்றியதை ஒதுக்கி,


“என் டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு! நான் உள்ளே வரலை, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்!”


உறுதியாய் சொன்னவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகினான்.


‘ஆமா இவரு பார்த்தா நாங்க அப்படியே நடுங்கிடுவோம். ‘


இந்த முறைக்கிறதெல்லாம் இனி என் கிட்ட நடக்காது, அவனை மனதில் திட்டிக் கொள்ள...


‘என்னவெல்லாம் எண்ணிக் கொண்டு கிளம்பினேன்! எல்லாம் வீண்! தடியன், அவுட்டிங் கூப்பிட்டு வர லட்சணத்தை பாரு!’


அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் டிபன் வகையராக்களை ஆர்டர் செய்தவன், அதற்காகக் காத்திருக்கையில் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டான்.


‘அவளுக்குக் கோபம் போல, கோபத்துலயும் சும்மா மயக்குற டீ!’ ஒரு பக்க மனம் துள்ளிக் கொள்ள,


‘ஆமா பின்ன நீ செஞ்ச விஷயத்துக்கு உன்னைக் கொஞ்சுவாங்களா?’ அவனையே கேள்வி கேட்டது.


‘சரி இப்ப என்ன கொஞ்சிட்டா போச்சு!’


முடிவெடுத்த பின் அதை அடக்கியவன். பார்சலுடன் காருக்குத் திரும்ப அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை...


மறுபடியும் பயணம் தொடர, தீவிரமாய் வேலை பார்த்த அசதியில் சித்ரா தூங்கிவிட்டாள். தூங்கும் தன் காதலியை ரசிக்கவென்று அவன் இரண்டு முறை வண்டியை நிறுத்தியதை அவள் அறியாள்.


வண்டியின் மூச்சை நிறுத்திய அமுதன் அவளைத் தட்டி எழுப்பவும், விழித்தவள், தான் எங்கிருக்கிறோம் என்பது புலப்படாமல் பேந்த முழித்தாள்.


புது இடமாய் தெரிந்தது.


அவர்கள் இப்போது இருந்தது சென்னையில் அமுதன் பிளாட்டின் கார் பார்கிங்,


“எங்கே இருக்கோம் அமுதன்” இவனிடம் இனி செல்லும் இடம் கேட்காமல் ஏறக் கூடாது என்று மறுபடியும் தனக்கே நினைவு படுத்திக் கொண்டுவிட்டு


“என்னை வீட்டில் விட்டிருங்களேன், ரொம்ப லேட் ஆயிடிச்சு” கெஞ்சுவதை போல் அவள் கேட்க.


“நம்ம வீட்டை வந்து பார்த்திட்டு போயேன், ஒரு மணிநேரம் கழிச்சு நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன், சரியா?”


சில்மிஷமாக ஒரு மணிநேரத்தை அவன் அழுத்திச் சொல்ல, சித்ராவுக்கு குளிர் எடுத்தது.


“இல்லை வேண்டாம், இப்பவே கிளம்பிடுறேன், ப்ளீஸ் “அவள் அடம் பண்ண ஆரம்பித்தாள். நீண்ட நேரம் அமைதியாய் சொல்லிப் பார்த்தவன், அவள் காது கொடுத்துக் கேளாததால்,


“டூ வாட் ஐ சே” என்றுவிட்டு அவள் கைபற்றிக் காரிலிருந்து வெளியில் இழுத்தவனிடமிருந்து தப்பிக்க இயலவில்லை.


அவன் குடியிருந்த அந்த அபார்ட்மெண்ட், சற்று பெரிய இடமாகவே இருந்தது. சொந்த வீடு என்பது தெரியும் ஆனால் இவ்வளவு பிரமாதமாய் இருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வெளி தோற்றத்திலேயே அசந்து போனாள்.


நிறைய பிளாக்குகள் இருக்க, ஒவ்வொன்றிலும் நான்கு தளங்கள், அதற்கு ஒரு மின்தூக்கி வேறு. அவர்கள் வந்து சேர்ந்த எட்டு மணிகெல்லாம் நிறைய பேர் வெளியில் இல்லை. அங்கிங்கு ஒரு சிலர் நடை பயின்று கொண்டிருந்தனர்!


அவன் தன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்துப் போக, அவன் வீட்டில் வாசலில் மட்டும் அவ்வளவு பூந்தொட்டிகள். பசுமை விரும்பி என்பது அவன் வாசலைப் பார்த்தாலே தெரிந்து விடும். வாசலலிருந்து, நுழைவாயில் கதவுவரை செடிகளை நிரப்பி வைத்திருந்தான். ஒவ்வொரு வீட்டிற்கும் தனிதனியே மினி கேட் கூட இருந்தது.


தன்னவனின் வீடு, தான் வாழப் போகும் இடம் என்பதாலோ என்னவோ பார்த்தவுடன் அதில் இருந்த எல்லா அம்சமும் பிடித்திருந்தது சித்ராவுக்கு.


வீட்டிற்குள் நுழையும் சமயம்,


“ஆரத்தி எல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம், வலது காலை எடுத்து வச்சி வா” அவன் சொல்லும் முன்பே இவள் அதைத் தான் செய்திருந்தாள்!


அவள் செய்கையைப் பார்த்து முறுவலித்தவன்,


“வேலையில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இதை எல்லாம் நல்லா பண்றே சித்ரா” என்றுவிட்டு முதுகில் ஒரு செல்ல அடியை வாங்கிகொண்டான்.


வீடு முழுவதும் விளைக்கை போட்டுத் தன் வசந்த மாளிகையை அவளுக்குப் பெருமையாய் காட்ட, சித்ரா ரசித்தபடியிருந்தாள், அவனை இல்லை வீட்டைத் தான்.


படு சுத்தமாக இருந்ததை பார்த்து அவளுக்கே ஆச்சரியம். சாமான் எல்லாம் அதிகமில்லை, தேவையானது மட்டுமே. அவளைச் சோபாவில் அமரச் சொன்னவன், அவளை உபசரிப்பதை போல் தண்ணிரும், இனிப்பும் கொண்டு வந்து தந்தான். முறுவலித்தபடி


வாங்கி கொண்டு அவனை நோட்டமிட,


“கோபம் போயிடிச்சா?” அவன் வினவனும் தான்,


தூக்கத்தில் அது காணாமல் போன விஷயமே அவளுக்கு உரைத்தது.


“ம்ம்” என்றவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவன்.


“ஃபிரெஷ் அப் பண்ணிகோயேன் சித்ரா” எனவும்


“இல்லை பரவாயில்லை” என்றவளை, அமைதியாய் யோசித்தபடி பார்த்திருந்தவன்


“நாளைக்கு சன்டே தானே, இங்க தங்கிட்டு காலையில் வீட்டுக்குப் போயேன் “ குரலைத் தணித்து அவள் மறுக்காதவண்ணம் அவன் கூற சித்ராவுக்கு படபடப்பாகி போனது.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
“இல்லை அது எல்லாம் முடியாது, நீங்க விட்டிடுறேன்னு சொன்னதால் தான் வந்தேன்!” என்று சோபாவை விட்டு எழுந்தேவிட்டாள். அவள் கைபற்றிப் பழையபடி அமரவைத்து


“சரி சரி பதறாதே, பட்டிக்காடு” என்று கேலி செய்ய, அவள் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை.


அவன் இப்படி கேட்டது அவளுக்கு என்னவோ போலிருந்தது.


‘இன்று எனக்கு நேரமே சரியில்லை, காலையிலிருந்து எல்லாம் கோணல் மாணலாய் நடக்குது’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

மறுபடியும்


“சரி தங்க வேணாம், ஃபிரஷ் அப் பண்ணிகோ சித்ரா, டிரஸ் எல்லாம் அழுக்கா போயிட்டது பாரு!” என்றவனை முறைத்தவள்.


“பரவாயில்லை” ஒற்றை சொல்லில் மறுபடி முடிக்கவும்.


“மாமா சொன்னா கேட்டுக்கணும் எதிர்த்துப் பேசக் கூடாது என்ன?” தயங்கியவளின் கைபற்றி ஒரு அறைக்கு இழுத்து கொண்டு போனான்.


இவன் என்ன எண்ணத்தில் இருக்கிறான் என்றே தெரியவில்லை!

கையை உருவிபார்த்தாள் முடியவும் இல்லை!


‘டேய் ஹிட்லர் என் கையை விடுறா’, மனம் கதறினாலும் அவன்பின் செல்ல வேண்டியதாய் இருந்தது, கையைப் பற்றியிருக்கிறானே!


அந்த அறையினுள் சென்றதும் அவன் பிடியை விட்டவன் ஒரு பெரிய வார்ட்ரோபை திறந்து காட்டினான், சித்ராவின் கண் தெறித்து வெளிவந்துவிடும் என்ற நிலை.


அந்தக் கப்போர்ட் முழுவதும் விதவிதமான உடைகள். சுடிதார், ஒரு பக்கம் புடவை. மேட்சிங்கான அணிகலன்கள் கூட


அவனை இவள் கேள்வியாய் பார்க்க


“எல்லாம் உனக்காக வாங்கினது தான், இப்ப இதுல ஒண்ணு போட்டுகோயேன்!”

நீ அணிந்து கொண்டால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி என்பதை போல் அவன் சொல்ல, மறுக்கும் எண்ணம் காணாமல் போனது அவளுக்கு.


“என்ன அமுதன். இது எல்லாம் எனக்கா? எப்போ வாங்குனீங்க?”


“ என் பொண்டாட்டிக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்கலாம்னு இருந்தேன் “ அவளைப் பார்த்த படி அவன் சொல்லச் சித்ராவின் கண் எல்லாம் பளபளத்தது.


“சரி நீ ரெடியாயிட்டு சீக்கிரம் வா, சாப்பிடலாம், பசிக்கிது” என்று விட்டு அந்த அறையின் கதவை அடைத்துக் கொண்டு வெளியேறி விட்டான். உள்பக்கம் கதவை லாக் செய்தபின், அவற்றையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.


என்ன மாதிரி உணர்வு என்று தெரியவில்லை...


தன்னவன் தனக்காக எவ்வளவு மெனக்கிட்டிருக்கிறான் என்பதே ஒரு சந்தோஷத்தை உண்டு செய்தது. அந்த அறையில் ஒட்டியுள்ள குளியலறையில் ஒரு மினி குளியல் போட்டவள், அந்தத் துணி கூட்டத்திலிருந்து ஒரு இளம் பச்சை சுடிதாரை அணிந்து கொண்டாள், அதற்கு மேட்சான கம்மல் வளையல் இத்தியாதிகளையும். அமுதனின் தேர்வு பிரமாதமாயிருந்தது! அவளும் அவனின் தேர்வு தானே!


சூப்பர் மாமா!


அறையை விட்டு அவள் வெளிவர, அவனும் வேறு உடையில் இருந்தான். குளித்திருப்பான் போல. நெற்றியில் திருநீற்று கீட்டு, பார்க்கவே ஜம்மென்று இருந்தவனை, சற்று நேரம் கூட நேராய் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள். இது என்ன, வெட்கமா? ஏன் திடீரென்று, அவனிடம்!

இவளை நெருங்கியவன்,


“சித்ரா உனக்கு இந்த டிரஸ் ரொம்ப அழகாயிருக்கு” கூறியபடி மெது மெதுவாய் அவள் இடையை பற்ற, அவள் சொல்ல வந்த நன்றி என்ற வார்த்தை பாதி தான் அவளுக்கே கேட்டது.


“என்ன சொன்ன” அவள் முகத்தை நோக்கிக் குனிந்தவன், அவளும் எதிர்பார்த்திருந்ததை போல் ஒரு முத்தம் வைத்தான்.


“இன்னிக்கி ரொம்ப அழகா இருக்கே டீ சித்ரா”, என்றவன் அவள் முகத்தைக் கையில் ஏந்திய படி, மேலும் தொடர அவள் சம்மதம் வேண்டும் என்பது போல் கேள்வியாய் தலையசைக்க, அவள் வேண்டாம் என்பதாக இடமும் வலமுமாய் தலையை ஆட்டினாள். அவன் லேசில் விடும் ஆளில்லையே, அவன் நினைத்ததை அவளிடம் நடத்தி முடித்தபின்,


“சாப்பிட வா, இதுக்கு மேல நீ இங்க இருக்கிறது எனக்குச் சரி படாது”!


வாங்கி வந்திருந்த உணவை இருவரும் சேர்ந்து சுவாகா செய்துவிட்டு, கிளம்பினர்.


அவனை அவள் அபார்ட்மெண்டில் இறக்கி விட்ட சமயம் நடு ஜாமம். இவ்வளவு தாமதமாய் அவள் ஒரு நாளும் வந்தது கிடையாது. காரிலிருந்தபடியே அவனை அனுப்பியவள் அவள் வீட்டு வாசல் வந்து சேரும் வரை ஏதோ பெரிய குற்றம் செய்ததை போல் ஒரு உணர்வு.

உள்ளே நுழைந்தவளை தொலைகாட்சியில் மூழ்கியிருந்த ஈஷ்வரி வினோதமாய் பார்க்க.


அவள் கண்களைச் சந்திப்பதை தவிர்த்து அறைக்குள் நுழைத்துகொண்டாள்.


தூங்கலாம் என்று முடிவெடுத்தால் யாரும் தொந்திரவு செய்வார்கள் என்பது இயற்கையின் அமைப்பு. அதன்படி ஈஷ்வரி அவள் பக்கம் வந்து


“மணி என்ன? உனக்குக் கொஞ்சமாவது பயம் இருக்கா? ஊர் சுத்திட்டு மெதுவா வர? இந்நேரம் வரை எந்த மால் திறந்திருந்த்தது? சக்தியும் அம்மாவும் எவ்வளவு தடவை போன் செஞ்சி என்னைக் கேட்டாங்க தெரியுமா? போனை ஏன் டீ விட்டுட்டு போன?”


தன்னிடம் பொரிந்தவளிடம் தான் அன்று பட்ட அல்லோல்களை சொல்லி


“சாரி டீ, அவர் வீட்டுக்குப் போனது தான் ரொம்ப லேட் ஆயிடிச்சு. நான் நாளைக்கு அம்மா கிட்ட பேசிகிறேன், இப்ப தூக்கம் வருது”

என்று படுத்தபடி போர்வையை கழுத்து வரை போர்த்தி கொண்டாள்


“நல்ல வேளை அவர் அங்கேயே இருக்க சொன்னாருன்னு எனக்குப் போன் பண்ணாம இருந்தியே, அதுவரைக்கும் சந்தோஷம்!”


ஈஷ்வரி சொல்லவும், சித்ரா சிரித்து தொலைத்தாள்...

“என்ன சிரிக்கிற? அப்படி நடந்ததா என்ன?” ஈஷ்வரி ஆவலாய் கேட்க

ஆமாம் என்பது போல் தலையசைத்தாள் சித்ரா...


“வேணாம் சித்ரா, நீ பாட்டுக்குக் காதல் மயக்கத்துல எதுவும் பிரச்சனையில் மாட்டிகாதே டீ. கல்யாணத்துக்கு முன்னாடி, வந்து... பேபி எல்லாம், நோ நோ!” சித்ராவின் கைபற்றிச் சீரியஸாக சொன்னவளை, இரண்டு அடி போட்டவள்.


“ச்சீ... சீ... கண்டதையும் யோசிக்காம தூங்கு போ. குட்நைட்” என்று முடித்துக் கொண்டாள் சித்ரா.

அந்த விவாதம் அன்றோடு முடிந்திருக்கவில்லை.


பூரி தேய்த்து கொண்டிருந்த சித்ராவை ஈஷ்வரி மறுபடியும் சீண்டவென்று,

காலையிலேயே தொடங்கிவிட்டாள், சித்ரா கொடுத்திருந்த வாய்ப்பு அப்படி, சும்மாயிருப்பாளா ஈஷ்?


“சித்ரா உனக்கு மண்டையில் மசாலா இருக்கா?”

உங்க டூத்பேஸ்டில் உப்பு இருக்கா என்பது போல் கேட்க, சித்ரா சிரித்தபடி


“இவ்வளவு நேரம் இருந்தது, இப்ப தான் கொஞ்சம் எடுத்துச் சென்னா மசாலாவில் போட்டேன்!” என்று காரியமே கண்ணாகப் பூரியை உருட்டிக்கொண்டிருந்தாள்!


“எவ்வளவு வருஷமா அவனை லவ் பண்ற? ஆனா அது எல்லாம் உன் துரைக்கு கண்ணுக்குத் தெரியலை... இவ பிரிவைத் தெரிஞ்சிகிட்டாராம், இரண்டும் ஒண்ணாம் உடனே மனசு மாறிட்டாராம், இவளும் ஒத்துகிட்டாளாம். எனக்கு இதை எல்லாம் கேட்டுகிட்டு சும்மா இருக்க முடியலை! என்ன அநியாயம் டீ இதெல்லாம்?” தன் மனதில் அரித்து கொண்டிருந்த விஷயத்தைக் கேட்டுவிட்டாள்.


சித்ராவுக்கு இது தோன்றியது என்றாலும் தன் காதல் விஷயம் நிறைவேறவும் இதுபோல் விஷயங்களை அவள் பெரிது படுத்தவில்லை, இப்போதும் அதை மெய்பிப்பது போல்


“அதனால என்ன? பெரியவங்க பார்த்து வைக்கிற கல்யாணத்துல எல்லாம், இதுபோல் எல்லாத்தையும் பார்க்கத் தானே செய்றாங்க, அதே மாதிரி தானே இதுவும்! சும்மா நீ அவரை எதுவும் சொல்லாதே!” அமுதனை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்தாள்.


“இது என்ன சினிமாவா, ஏதும் பிரச்சனை வந்தா சமாளிச்சு வாழ்ந்தாங்கன்னு காட்டுறதுக்கு? அதுவுமில்லாம அவரும் என்னை மறக்க முடியாம இருந்திருக்கார். எவ்ளோ முயற்சி செஞ்சி கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிருக்காரு! எனக்கு அவர் பண்ணது எதுவும் தப்பா தெரியலை, நீ வாயைக் காட்டாம பூரியை போடுறீ!”


நேத்து வந்தவனுக்காக என்ன பேச்சு பேசுகிறாள்? நொந்தபடி


“அவர் பண்றாரோ இல்லையோ நீ நல்லா பண்றே டீ!” ஈஷ்வரி அந்த மூக்கறுப்பையும் கலகலப்பாக மாற்ற, நேரம் பறந்தது!


மதியம் 2 மணியளவில் போன் செய்தவன்


“ சித்ரா, எனக்கு இன்னிக்கி பிறந்தநாள் டீ! இதை கூடத் தெரிஞ்சிக்காம லவ் பண்றாளாம், அதுவும் வருஷ கணக்கா” என்றான்.


சித்ராவுக்கு இது புது விஷயம், “ஹாப்பி பெர்த்டே அமுதன் “ என்று இவள் வாழ்த்த


“அதுக்கு தான் என்கூட நேத்து இங்க இருன்னு சொன்னேன்! பயந்துட்டியா?”


“விளையாடாதீங்க, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருக்கிறதாம்? லேட்டா வந்ததுக்கே ஈஷ்வரி சக்தின்னு என்னை திட்டித் தீர்த்துட்டாங்க தெரியுமா?”
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Chitrama enna idhu unnaku vandha sodhanai
Kalai paripathum, kai kani paripathumnu:D..
Unmaiyil idhu oru nalla visayam than ani ma..
Uzhavin arumai innum palar ariyadhadhu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top