• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Epi 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
9

சித்ராவின் தந்தை சங்கருக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருந்தது, நல்ல குடும்பம்.ஆள் பார்க்கவும் தன் மகளுக்கு ஏற்றவன் தான் என்று முடிவு கட்டிவிட்டார். ஆனால் இந்தச் சக்தி அவர்கள் இருவரும் ஒரே கம்பெனி என்று சொல்லவும்,


‘ அதனால் தான் மாப்பிள்ளையின் அம்மா கம்பெனியின் பெயரைத் தெரியாதது போல் தங்களிடம் சொல்லாமல் விட்டார்களோ’ என்ற முதன்முதலாக ஒரு சந்தேகம்! என்னவானாலும் என்ன, தன் மகளுக்குத் தான் நினைத்த படி சமுதாய கோட்டுபாடுகளுக்கு ஏற்ப ஒரு வாழ்க்கை அமைந்து அவள் வருங்காலத்திலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்தால் போதும்!


வந்திருந்தவர்கள் மதுரை கிளம்பியதும், அவள் வரலாற்றில் முதல் முறையாக அமுதனின் கைபேசிக்கு மெசேஜ் செய்தாள் சித்ரா,


“திங்கள் கட்டாயம் ஆபிஸ் வரணுமா பாஸ்?”

என்ன சொல்லுவானோ!

“வரலைன்னா யூ வில் பி ஃபையர்ட்” என்று பதில் அனுப்பியவனை என்ன செய்ய! திட்டத்தின்படி அன்றிரவே கிளம்பியாயிற்று.


பெண் பார்க்கும் படலம் முடிந்து சென்னை வந்துவிட்டாள். ஈஷ்வரியை இன்னும் சமாதானம் செய்ய முடியவில்லை. ஊருக்க கிளம்பும் முன் வரை எல்லா விதமான முயற்சியும் செய்து பார்த்தாயிற்று.


சக்தியை ஒரு சமாதான புறாவாக எண்ணி அவளை வைத்துக் கூட ஒரு முறை போன் செய்தாள், ஆனால் ஈஷ்வரி அவளின் செல்லமான சக்தி சொல்லியும் அசரவில்லை.


இப்படியிருக்கையில் இப்போது நடந்து முடிந்திருந்த விஷயத்தைச் சொல்லாமல் விட்டால் வேறு வினையே வேண்டாம், அதோ கதி தான். வந்ததும் ஆபிஸுக்கு கிளம்பி கொண்டிருந்தவளிடம், ஊரிலிருந்து வாங்கி வந்திருந்த அல்வாவை ஒரு கிண்ணத்தில் போட்டு,


“ஈஷ்வரி, ஒரு குட் நியூஸ் சொல்லணும். நீ ஸ்வீட் சாப்பிட்டா தான் என்னால சொல்ல முடியும்” இவள் சொன்னதை கண்டுகொள்ளாமல் சென்ற ஈஷ்வரியை தன் புறம் திருப்ப. இவளின் கையைத் தட்டிவிட்டபடி அவள் மேற்கொண்டு செல்ல, அவளை மேலும் நகர விடாமல் பின்னாடியே சென்று சித்ரா, தோழிமீது சாய்ந்தபடி


“ப்ளீஸ் டீ என்னைப் படுத்தாதே. நான் செஞ்சது தப்பு தான், சாரி. அதுக்கு இப்படியெல்லாம், செய்யாதே. அழுகையா வருது”


அவளைத் தன்னிடமிருந்து விளக்கிவிட்ட ஈஷ்வரி,


“ஆமா டீ நீ அழுதிட்டா நீ பண்ணினது தப்பே இல்லை, அப்படிதானே? நான் இதுவரைக்கும் எந்த விஷயமாவது உன் கிட்ட மறைச்சியிருக்கேனா. டீம் மேட் சாக்லேட் குடுத்தான்ற வரைக்கும் எல்லா சின்ன சின்ன விஷயத்தையும் சொல்லியிருக்கேன். நானும் உன்னை மாதிரி அமுக்குனியா இருந்திருந்தா உனக்கு என் வலி தெரிஞ்சியிருக்கும்! அமுதன் அவன் காதலை என் முன்னாடி தானே உன்கிட்ட சொன்னான், அவன் கூட ஒளிவு மறைவு வச்சிக்கலையே. நீ தான் பிரண்டுன்னு சொல்லிகிட்டு, என் கூடவே இருந்து கழுத்தறுத்திட்ட! என் கிட்ட ஏன் டீ மறைச்ச?!”


அதைக் கேட்டதும் சித்ரா தேக்கி வைத்திருந்த மடையை திறக்க,


“திங்கட்கிழமை ஏன் டா வருதுன்னு நானே நொந்து போய்க் கிளம்பிகிட்டிருக்கேன், என் மூடை கூடக் கொஞ்சம் கெடுக்காதே!” போய்விட்டாள். சித்ராவுக்கு அழுகை தாங்கமுடியவில்லை. ஆபிஸ் போக வேண்டும் என்ற அவசரம் இருந்தாலும் அழுகையை நிறுத்த முயன்று அது நடக்காமல், அழுதபடியே கிளம்பினாள். தலை சீவுகையில் கண்ணாடியில் பார்க்கக் கண் எல்லாம் வீங்கிப் போயிருந்தது. அந்த கோலத்தைப் பார்த்ததும் தான், இது என்ன பள்ளி சிறுமிபோல் அழுது தொலைத்து, இப்போ எப்படி சரி செய்வது? நாலு தடவை முகத்தைக் கழுவி பின் எக்ஸ்ட்ரா பவுடர் எல்லாம் போட்டு ஏதோ ஒருவழியாய் ஒப்பேத்திவிட்டாள். மன பாரத்தை எப்படி இதுபோல் சரியாக்க என்று தெரியவில்லை!


வாசல் கதவைப் பூட்டிவிட்டு படியிறங்க ஈஷ்வரி மேலே வந்துகொண்டிருந்தாள். சரி எப்படியும் தன்னிடம் பேசவா போகிறாள் என்று அவளைத் தாண்டி போக,


“சித்ரா, ஏதோ குட் நியூஸ்னு சொல்ல வந்தியே, அதைக் கேட்காம என்னென்னவோ பேசிட்டேன் “ ஈஷ்வரி அவளின் கைபற்றிக் கூற,


அவ்வளவு நேரமும் சிந்திய அழுகை போக மீண்டும் பொங்கியது.தோழியை அணைத்தபடி மன்னிப்பு கேட்டவளை,


“சரி பரவாயில்லை விடு, விஷயத்தைச் சொல்லு “என்று ஈஷ்வரி சமாதானப் படுத்த


“நீ ஸ்வீட்டை சாப்பிட்டா தான் சொல்லுவேன்” என்று வீட்டினுள் மறுபடி சென்று அவளுக்கு அதை ஊட்டிவிட்டாள்.


“ஏற்கனவே அல்வா குடுத்திட்டியே, இப்போ என்ன தனியா கிண்ணத்தில தர?” தோழிக்கு உரைக்க வேண்டும் என்று சொன்னாலும், அல்வாவை சாப்பிடுவதில் மும்முரமாய் இருந்தாள் ஈஷ்வரி.


“எங்க வீட்டில் எனக்குக் கல்யாணம் பேசிட்டாங்க, மாப்பிள்ளை அமுதன் “ மற்ற எல்லா சமையங்களை போல இப்போதும், பட்டென்று சொல்லிவிட்டாள்.


“இதுதான் விஷயம் மீதியை சாயந்திரம் சொல்றேன், மீட்டிங் இருக்கு, லேட்டா போனா அந்த ஹிட்லர் திட்டும்” சிரித்தபடி ஓடியவளை பிடித்து நிறுத்த இக்கணம் ஈஷவரிக்கு மூளை வேலை செய்யவில்லை. இவ உண்மையைத் தான் சொல்கிறாளா? என்று அவள் சொன்ன வாக்கியத்திலேயே கணன்று கொண்டிருந்தது.


போகும் வழி நெடுகிலும் ஈஷ்வரியின் அன்பை நினைத்து முகமும் மனமும் மலர்ந்திருந்தது சித்ராவுக்கு. ஆபிஸ் வந்து அரக்க பரக்க தன் இருக்கைக்குச் செல்ல, உடனே அடித்தது இண்டர்காம்.


“ஏன் லேட், அந்தப் பிரசண்டேஷன் ரெடியா? எனக்கு மெயில் பண்ணிடு “ என்றுவிட்டு வைத்தான்.


‘இவனைப் பெத்தாங்களா, செஞ்சாங்களான்னே தெரியலையே. எப்பவும் அதிகாரம் தான். அதுவும் இன்னமும் என்கிட்ட ‘ நொந்தபடி தன் வேலையில் மூழ்க நேரம் பறந்தது!


அவன் சொன்னதை எல்லாம் அனுப்பிய பிறகே, ஹேமாவுக்கு


“அல்வா ரெடி, உன் இடத்தில் “ என்று மெசேஜ் செய்ய, சற்று நேரத்திற்கெல்லாம் எங்கேயோ இருந்து ஆவலாய் ஓடி வந்த ஹேமாவை பார்த்ததும், தன்னை காண தான் இவ்வளவு ஆவலா என்று ஒரு சிறு சந்தேகம்.


அது எல்லாம் ஒன்றும் இல்லை, என்பது ஹேமா இனிப்பைப் பிரித்து உண்ண ஆரம்பித்ததும் புரிந்து கொண்டாள்.


“என்ன வேணா சொல்லு உங்க ஊரு அல்வாவை அடிச்சிக்க முடியாது டீ. என்ன ருசி?”


தனக்கு சாதாரணமாய் தெரியும் ஒன்றை தன் தோழி எவ்வளவு ரசிக்கிறாள். எதுவும் எளிதாய் கிடைத்தால் அருமை தெரியாது தானே!


நெல்லையின் பிரபலமான அல்வா கடை உரிமையாளர்கள், சென்னையிலும் ஒரு கிளையைத் திறக்க முடிவெடுத்தனர்... அதன் படி கட்டத்திலிருந்து, ஆட்கள் வர அனைத்தையும் சரி செய்து அல்வாவை தயாரித்தால், ஊரில் செய்வதை போல் வரவில்லை. என்ன தான் தப்பு என்று ஏகப்பட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் கண்டுகொண்டது என்னவெனில்,


அந்த நெல்லை மண்ணின் காற்றுக்கும், தாமிரபரணியின் தண்ணிருக்கும் மட்டுமே அந்த அக்மார்க் திருநெல்வேலி அல்வாவை தயாரிக்க முடியும் என்ற நிதர்சனத்தை!


சென்னைக்கு வரும் நெல்லை பேருந்துகளில் அல்வாவுக்கென்று ஒரு தனியிடம் எப்போதும் எல்லாராலும் ஒதுக்கப் பட்டிருக்கும். சித்ராவும் அப்படி தான் சுமந்து கொண்டு வந்திருக்கிறாள்.

அமுதனுக்கும் சேர்த்து தான்!


அமுதன் இனிமேலாவது தன்னிடம் ஆசையாய் பேசுவான் என்று எண்ணி வந்ததெல்லாம் வீணானது சித்ராவுக்கு. கடமை கண்ணியம் கட்டுபாடு என்று அவன் விஷயத்தில் மூழியிருக்க, இவளால் மட்டும் முடியவில்லை.


ஒரு பார்வை, ஒரு சின்ன சிரிப்புக்குப் பஞ்சமா என்ன? முசுடு! இவனுக்கு அது எல்லாம் வராது என்றும் சொல்ல முடியாது! தனியாய் தன் வீட்டில் என்னவெல்லாம் செய்தான்?!


இப்போது என்னவோ சரியில்லை போல! இவனை இப்படியே விடக் கூடாது, பழகிடுவான் என்றெண்ணி, அவனுக்குப் போனில் ஒரு எஸ். எம். எஸ் அனுப்பினாள்.


பதில் இல்லை. ஆத்திரமாய் வந்தது சித்ராவுக்கு!


ஹேமாவுக்கு இவன் தான் மாப்பிள்ளை என்று இன்றே அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்ததெல்லாம் நடக்கவில்லை. அவளுக்கு இன்னும் விஷயம் தெரியாது.


அன்று மாலை வீடு வரும் வழியெல்லாம் அவனிடம் பேசினால் என்னவென்று ஒரே சிந்தனை!


ஈஷ்வரி சொன்னது போல் இப்போதையதை விடப் பெரிய நிறுவனங்களில் தனக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு வந்த போதெல்லாம், அவனை விட்டு விலகிச் செல்ல மனம் இல்லாமல் தட்டிக் கழித்தாள். நினைக்காத விஷயங்களே நம் வாழ்க்கையில் நடக்கும். அவன் தன்னிடம் நடந்து கொண்டதை வைத்து, இவன் ஒரு நாளும் தனக்கில்லை, தன் காதலை உணர்ந்து கொள்ள போவதில்லை என்று முடிவெடுத்திருந்த சமயம், இப்படி திருமணம்வரை கொண்டு வந்துவிட்டான்...


ஐந்து வருட காதல் என்றானே? எப்படி மனதில் காதலை வைத்துக் கொண்டு எரிந்து விழ முடியும்? அவள் நினைக்க, அவள் மனசாட்சியோ, ஏன் கல்யாணம் பண்ணிகிட்டவங்க சண்டை போடாமலா இருக்காங்க?!


அவனை நினைத்தபடி வீட்டை அடைந்தாள். ஈஷ்வரி இன்று வரத் தாமதமாகும் என்று தகவல் அனுப்பியிருக்க, தன் வேலைகளை முடிக்க எத்தனித்து, மட மடவென்று எல்லாம் முடித்தாள். உறங்கச் செல்லும் முன் தொலைகாட்சியை உயிர்பிக்க, வீட்டின் அழைப்பு மணியடித்தது.


இவள் ஏன் மணியடிக்கிறாள், சாவி என்னவாயிற்று என்று எண்ணியபடி போய் கதவைத் திறக்க, அங்கு நின்றது அமுதன்.


ஐய்யோ மறுபடியும் அவன் முன் நைட்டியில்! வாங்க என்று சொல்ல, உள்ளே வந்தவன் அவள் கதவைத் தாழ் போடும் வரை அவள் பக்கமே நின்றான்.


“உட்காருங்க அமுதன்” உபசரித்தவளை,


“இல்லை நான் உடனே கிளம்பணும்” என்றபடி அவள் பக்கமே நின்றவனிடம் மேலும் என்ன கேட்க, சித்ராவுக்கு தெரியவில்லை!


அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம்


“ஆபிஸ்ல என்னால உன்கிட்ட சாதாரணமா இருக்க முடியலை சித்ரா. அப்படியே பழகிட்டேன். இனிமேலும் அப்படிதான், புரிஞ்சிக்கோ சரியா!” நெருங்கி அவள் கைபற்றிச் சொன்னவனிடம் சண்டை எப்படி போட? கோபமெல்லாம் போயே போயிந்தி!


பதிலுக்கும் சரியென்று தலையசைத்தவளின் கையெல்லாம் சில்லிட்டிருந்தது. அதை உணர்ந்தானோ என்னவோ, அதற்கு மாற்றுமருந்தாக அவளை நெருங்கி, அவளின் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு முடிகற்றுகளை அவள் காதோரம் ஒதுக்கிவிட,


‘டேய் என்ன டா பண்ணபோறே’ என்று அவள் நெஞ்சு அடித்துக் கொண்டது.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அவள் கன்னங்களைப் பற்றியவன், அவளின் பதட்டத்தை உணர்ந்து அவள் கண் இமைகளில் தன் முதல் முத்தத்தை ஆரம்பித்தான். மீசை குறுகுறுக்க அவன் தந்ததை ஏற்றுகொண்டவள் கண்களை மூடியபடியிருக்க, அதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளின் உதடுகளைச் சிறைசெய்தான்.


எவ்வளவு நேரம் போனதோ?


அவள் மனமெல்லாம் ஐ லவ் யூ அமுதன் என்று திரும்பத் திரும்ப ஜெபித்தபடியிருந்தது... அவன் அவளை விட்டு நிமிர்கையில் சித்ராவுக்கு மூச்சு காற்று தேவைபட்டது!


நிதானிக்கும் வரை அவளைப் பற்றியிருந்தவன்,


“இனிமேல் எஸ். எம். எஸ் அனுப்பினா, இப்படி வந்திடுறேன், என்ன?!” அவள் கன்னத்தில் தட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.


அவன் வாகனத்தை நோக்கிச் செல்வதை தன் வீட்டு திரைசீலை மறைவிலிருந்து பார்க்க. அவனும் திரும்பிப் பார்த்து கையசைத்தான்... முதல் முத்தம் தந்த இனிமையை அனுபவித்தபடி அன்று நித்திராதேவியை தழுவிக் கொண்டாள் சித்ரா.


வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் இருப்பது குட்டையில் உள்ள நீர் போல, ஒரே இடத்தில் தேங்கிவிடும்... நதிபோல் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமானால், காடு மலை எல்லாம் தாண்டிப் பாய வேண்டும். தண்ணிருக்கு இவை எல்லாம் என்றாலும், மனிதன் தாண்ட வேண்டியது பல தரபட்ட மனிதர்களை, அமுதன் கம்பெனியின் சதுரங்க விளையாட்டில் அவனை வீழ்த்துவதற்கு சில உத்திகளை ஆரம்பித்துவிட்டனர்.


ஹேமாவிடம் அமுதன் விஷயத்தைச் சொல்ல வேண்டும்,

‘ அடி வாங்காமல் உண்மையைச் சொல்வது எப்படி?’ அதற்கு உட்கார்ந்து பிளான் போட்டாள், ஒன்றும் பிடிபடவில்லை... நடப்பது நடக்கட்டும் என்று அவளை ஒரு நாள் தன் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச் செல்கையில்,


“என்ன சித்ரா, என்ன விசேஷம்னு இங்க வந்திருக்கோம்? என் வீட்டுக்காரர் வேற சூப்பரா ஒரு காளான் பிரியாணி செஞ்சியிருந்தாரு, நீ சொன்னதால இன்னிக்கி லன்ச் எடுக்காம வந்துட்டேன். மகளே என்னை நல்ல கவனிச்சிடு”


“ சரி, உனக்கு இல்லாததா? போன வாரம் ஊருக்கு அவசரமா போனேனே, என்னனு நீ கேட்கவே இல்லையே? அல்வா கிடைச்சா போதும்... ம்ம்”


“ஹேய் சாரி மா, கேட்கணும்னு நினைச்சேன், இவ்ளோ நாளும் மறந்தாச்சு, என்ன விஷயம் சொல்லு”

அதற்குள் சித்ராவின் போன் அடிக்க அதில் பேசியவள், “ வந்துடீங்களா, முதல் மாடி ஏசி ஹால் வாங்க” என்றுவிட்டு வைத்தாள்.


“யாரு வரா இங்க?” சுற்றிமுற்றி பார்த்தபடி ஹேமா கேட்கச் சித்ரா பதிலளிக்கவில்லை,

அதற்குள் அமுதன் அவர்கள் டேபில் அருகில் வந்தான்.


ஹேமாவுக்கு குழப்பமாக இருந்தது. இவனா பேசினான் சித்ராவிடம் போனில்? அவனோ சாதாரணமாய் சித்ராவின் பக்கத்தில் அவளை ஒட்டியபடி அமர்ந்து இவளிடம்


“ஹாய் ஹேமா, என்ன அதிர்ச்சியாயிடீங்க?”


தோழி தனக்கு எதிரில் அமர்ந்திருந்ததால், அவளைத் தனியே கேட்க வாய்ப்பில்லை. அமுதனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்திருந்த ஹேமாவை மேலும் சோதிக்காமல்

அமுதனே


“நான் தான் சித்ராவின் வருங்கால கணவன். போன வாரம் தான் இரண்டு பேரு வீட்டிலயும் பேசி முடிச்சாங்க”

என்று சிரித்தான்.


ஹேமா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்


“வாவ் கங்கிராட்ஸ், இந்தப் பொண்ணு என் கிட்ட எதுவுமே சொல்லலை. நீங்க இரண்டு பேரும் சேர்ந்ததில் என்னை விடச் சந்தோஷ படுறவங்க இந்த உலகத்தில் யாரும் இல்லை, அந்த அளவுக்கு என்னை இவ பாடு படுத்தியிருக்கா”


உண்மையான நட்பின் அடையாளம், ஹேமாவின் மூலம் கிடைத்தது, இப்போது அவள் முகமும் அதையே பிரதிபலித்தது. தோழிகள் விஷயத்தில் சித்ரா கொடுத்து வைத்தவள். நல்ல நட்புகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்!


“எப்பவும் உங்களைப் பத்தி பேசிகிட்டே இருப்பா... நீங்கத் திட்டிடீங்கன்ன, நான் ஒரு வாரத்துக்கு லீவ் போடலாமான்னு யோசிப்பேன்ன பார்த்துகோங்களேன், எல்லாம் இவ புலம்பலுக்குப் பயந்து”


அவள் சொன்ன ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அமுதன் திரும்பி சித்ராவை ஒரு காதல் பார்வை பார்த்து வைத்தான்.


“அந்த ஃபைலில் ஜாதகத்தை வச்சது நான் தான். நீங்க இரண்டு பேரும் எனக்குக் கடமை பட்டிருக்கீங்க” அவனிடம் நேரிடையாக ஹேமா சொல்ல, அவன்


“ஆமாங்க உண்மை தான், அது என் கையில் கிடைச்சதும் தான் இந்த அஞ்சு வருஷ தயக்கம் போச்சு!”


அஞ்சு வருஷம் என்பதை கேட்டு ஹேமா புரியாமல் விழிக்க, சித்ரா அவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தது தெரியும் என்பதை மேலோட்டமாகச் சொன்னாள்.


அந்தச் சந்தர்ப்பத்தில் அமுதன் சித்ராவின் பார்வை ஜாலத்தை பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை ஹேமாவுக்கு. அவ்வளவு அன்னியோன்மையாய் தோன்றியது அவர்களின் செயல்கள். இதே போல் மேலும் ஒரு நல்ல நாளில் கெளரி சங்கருக்கும் அவர்களின் திருமண விஷயத்தைச் சொல்லியாயிற்று.


காதல் பறவைகள் சிறகில்லாமலே பறக்க ஆரம்பித்து விட்டனர்.


காதலன் என்ற பதவி கிடைத்ததும், அமுதன் சித்ராவிடம் மனதளவில் மிகவும் நெருங்கினான். ஆபிஸில் எப்போதும் போலிருந்தாலும், அதைச் சரிகட்டும் வித்தைகள் அவன் கைவசம்!


அமுதன் அந்த வாரக் கடைசியில் அவனுடன் சித்ராவையும் அந்த விவசாயக் குழுவுடன் வயல் வேலை பொருட்டு அழைத்துச் செல்ல எத்தனித்து,


“வீக்கென்ட் வெளிய போகலாம், வரியா?”


“அப்படியா, எங்கே போறோம்?” ஆவலாய் சித்ரா கேட்க...


“ஈசிஆர். “ அவன் சொல்லி முடிக்கும் முன்னே.


“ஐய்யயோ நான் அங்கெல்லாம் வரமாட்டேன், எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்”


முந்திரிக்கொட்டையாய் பதிலலித்தவளின் பேச்சை கேட்டுச் சிரிப்பு தான் வந்தது, அமுதனுக்கு


“ஆமா உன்னை அப்படியா கடத்திட்டு போய், வேணாம் நான் ஏதாவது சொல்லிருவேன், சும்மாயிரு”


ஒருவழியாய் அவளைச் சரிகட்டி தான் செல்ல வேண்டிய இடத்துக்கு அவளையும் உடன் அழைத்துச் சென்றான். அவள் வந்தாள் என்று தன் காரிலேயே பயணம் ஆரம்பித்தது. கெளரி உடனிருந்ததால் அமுதன் காரை ஓட்டக் கெளரி பொழுபோகாமல் இவர்களை ஓட்ட ஆரம்பித்தான்...


“நந்தன் “ என்று ஆரம்பித்தவனை.


“அமுதன்னு கூப்பிடுன்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன் கெளரி “ அமுதன் இடைபுகுந்து சொல்ல.


“நான் கூடத் தான் என் முழு பேரை சொல்லிக் கூப்பிடு, பொண்ணு பேரைச் சொல்லாதெயேன்னு சொல்றேன், நீ கேட்குறியா?” கெளரி சங்கரும் விடவில்லை...


“இனிமேல் அப்படியே கூப்பிடுறேன், தயவுசெய்து எங்க அப்பா பேரை ஏலம் போடாதே இனி” அமுதன் சரண்டர் ஆனான்...


“ஓகே டன்” என்ற கெளரி


“வருங்கால மனைவியைக் கூப்பிட்டு போக இடமா இல்லை இந்தத் திருநாட்டில்? இப்படி எல்லாம் கூப்பிட்டு வரணும்னு உனக்கு எப்படி பா தோணுது?” பின் சீட்டில் அமர்ந்திருந்தவன் நண்பனிடம் பொடி வத்து பேச.


சித்ரா தனக்கு ஆதரவாக ஆள் கிடைத்ததும்


“ஆமாங்க, சென்னையில் எவ்ளோ இடம் இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு ஏதோ கிராமத்துக்குப் போகலாம்னு சொல்லிக் கூப்பிட்டு வந்துட்டாங்க”


அவள் பதிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்த அமுதனின் முதுகில் தட்டியவன்,


“அட அட என்ன ஒரு மரியாதை, வாங்க போங்கன்னு! இப்ப எப்படி எல்லாம் யாரு பா கூப்பிடுறா?”


அவளை பற்றிப் புகழ்ந்துவிட்டு அமுதனிடம் மெதுவாய், “எங்க போறோம்னு அவ கிட்ட சொல்லவே இல்லையா ப்ரோ?” கெளரி சங்கர் கேட்க, அவனிடம்


“அவ அதை நேர்ல பார்த்துப்பா” என்றுவிட்டு,


“மாமன் எங்க கூப்பிட்டாலும் கூட வருவே தானே தங்கம்” தன் மீசையை தடவியபடி அவளிடம் கேட்க


அவளுக்கு அவனின் இந்தப் புதிய விதமான கேள்வியில் வில்லங்கமாய் என்னவோ புரிந்தது போலிருந்தாலும், பலி ஆடுபோல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.


தான் வெந்து நொந்து போகப் போகிறோம் என்பது தெரியாமல்!
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Amudhan kadhal mannana o_O .. ipadi kallukuraan..
ECR nu sonna vudanae chithu reaction sema :ROFLMAO:..
Ponnu parthu fox annalum boss ennama kadamai veerana irukaan;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top