• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
வணக்கம்
வந்தனம்
நமஸ்தே
நமஸ்காரம்"
"இன்னைக்கு +2 ரிசல்ட் வெளி வர இருக்கு. எக்ஸாம் எழுதுன எல்லாரு பயத்துல ஃப்ரிஸ்
ஆகியிருப்பிங்க.அவங்க பேரண்டஸ் எல்லாரு அதுக்கு ஒருபடி மேல போய்"என்ன காலேஜ்ல
சேர்த்தலாம்? எந்த துறைல போட்டா என் குழந்தை ஷைன் ஆகும்? நம்ம படிக்க முடியாதத
நம்ம குழந்தையாச்சு படிக்கணும்!"அப்படினு பலவித யோசனைல இருப்பீங்க.அப்படி இருக்க
எல்லாருக்கு நான் சொல்ல நினைக்கிறது என்னென்னா மார்க் ஒண்ணு மட்டும்
வாழ்க்கையை தீர்மானிக்கறது இல்ல.அதனால வந்த மார்க்க சந்தோஷமா ஏத்துக்கிட்டு
உங்களுக்கு பிடித்த துறையில போங்க.பெற்றோர்கள் நீங்க படிக்க நினைத்தத அவங்க
மேல தினிக்காம அவங்களுக்கு விருப்பப்பட்டத படிக்க வைங்க.நீங்க நினைச்சதவிட
அவங்க கம்மியான மார்க் வாங்கிருந்தா கூட அவங்கள திட்டாதீங்க அன்பா பாராட்டுங்க.
விடாமுயற்சியும் கடினமான உழைப்பும் இருந்தா கண்டிப்பா எல்லாரும் சாதிக்க முடியும்.
பயத்துல இருக்க எல்லாரு ரிலாக்ஸ் ஆக ஒரு பாட்டு வருது.கேளுங்க கேளுங்க
கேட்டுக்ககிட்டே இருங்க இது உங்க எஃஎம்".

கேட்டுக்கொண்டிருந்த விநாயக்கின் மனம் ஏழு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றன.

அந்த நாள் பசுமரத்தாணி போல் அவன் மனதில் பதிந்திருந்தது.அவர்கள்
மாளிகையும் அன்று பரபரப்பாக இருந்தது.அவர்கள் வீட்டின் செல்ல இளவரசி யாழினி
நகத்தைக் கடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தால்.

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே வந்த ராதை,"எக்ஸாம் தான் நல்லா
பண்ணிருக்கில்ல.அப்புறம் ஏன் செல்லம் பயப்படுற?நீ சூப்பர் மார்க் எடுத்து கலக்குவ பாரு"
என்று அவள் தலையில் பாசமுடன் முத்தமிட்டார்.


அவரை உரிமையுடன் அணைத்துக் கொண்ட யாழினி, "எனக்கு ரொம்ப பயமா
இருக்கு அத்தை" என்றாள்.

அப்பொழுது அங்கே வந்த விநாயக்கோ,"எக்ஸாம்லா ரொம்ப நல்லா எழுதிருக்கனு
சீன் போட்ட.இப்ப படபடப்பா இருக்குனு சொல்ற.ரிசல்ட் வந்தா தெரியும் நீ எப்டி எக்ஸாம்
எழுதிருக்கேனு" என்று சீண்டினான்.

யாழினி,"நீ உன் வேலைய பாத்துட்டு போடா.நான் எவ்ளோ மார்க் வாங்கினா உனக்கு
என்ன?"என்று கேட்க அவனோ,"ஏதோ அத்தை பொண்ணு ஆச்சே நல்ல மார்க் வாங்குனா
நல்ல காலேஜ் கிடைக்குமேனு அக்கறைல சொன்ன.நீ என்ன மார்க் வாங்குனா எனக்கு
என்ன?" என்று தோளைக் குலுக்கினான்.

அவளின் முகம் தொங்கிவிட ராதையோ, "ஏன்டா அவளே பயத்துல பேசறா.நீ வேற
அவள சீண்டற?"என்று கூற அவள் தன்னறைக்குச் சென்றாள்.விநாயக் சிரித்துக் கொண்டே,
"அவ இப்ப நா பேசினத நினைச்சிட்டு என்கிட்ட எப்டி சண்டை போடலானு யோசிச்சிட்டு
இருப்பா.அதனால ரிசல்ட் பத்தி கொஞ்ச நேரம் யோசிக்காம இருப்பா."என்று கூறிய மகனை
பார்த்துச் சிரித்தார்.

தன் அறைக்கு வந்தவளோ,"அவன் எப்டி என்னை பத்தி அப்டி சொல்லலாம்.ரிசல்ட்
வரட்டும் அப்றம் இருக்கு அவனுக்கு", என்று வெடித்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது
உள்ளே வந்த விநாயக்கோ அவள் முகத்தை பார்த்ததும், "இவ்ளோ கோபமா இருக்கா எப்டி
சமாளிக்க போறனோ"என்று மனதில் நினைத்துக்கொண்டு,"ஏய் குள்ளச்சி ! என்னடி
யோசிச்சுட்டு இருக்க?" என்றான்.ஏற்கனவே கோபமாக இருந்தவள் அவன் குள்ளச்சி என்று
கூப்பிட மலையேறி விட்டாள்.

அவன் மீது தலையணையை வீசியவள் "என்ன குள்ளச்சினு கூப்டாதனு எத்தன டைம்
சொல்லிருக்க.எதுக்குடா திரும்ப அப்டி கூப்பிட்ற?" என்று பொரிந்தாள்.அவன் கூலாக
"குள்ளச்சிய குள்ளச்சினு கூப்பிடாம நெட்டச்சினா கூப்ட முடியும்?"என்றான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் கூறியதை கேட்டவுடன் இன்னும் கோபம்
அதிகமாக அவனை டமார் டமார் என்று இரண்டு அடி வைத்தால்.

அவன்,"ஆ. ராட்சசி! வலிக்குதுடி "என்று அலற "அந்த பயம் இருக்கட்டும்" என்று
மிரட்டினாள்."உன்னை மாமா கூப்டாரு"என்று அவன் கூற இருவரும் கீழே சென்றனர்.

அவள் முகத்தைப் பார்த்த ரகுராம்,"ஏன் குட்டி பயமாயிருக்கா?" என்று கேட்க "ஐ எம்
பிலிங்க் எ லிட்டில் நேர்வஸ் டாட்"என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சந்தானலட்சுமி யாழினி அமைதியாக தந்தையின் தோளில்
சாய்ந்து படுத்திருப்பதைப் பார்த்து,"என்ன யாழி குட்டி! இவ்ளோ அமைதியா இருக்க?சூப்பர்
மார்க் தா குட்டி வரும்" என்று அவர் கூற தலையாட்டினாள்.

சந்தானலட்சுமி அவளிடம் ஜூஸை குடிக்கச் சொல்ல அவளோ வேண்டாம் என்று
மறுத்தால்."என்ன யாழி இது.காலைல இருந்து எதுவுமே சாப்டல.இப்ப இந்த ஜூஸை கூட
குடிக்க மாட்டேங்கிற?" என்று கூற ,"ப்ளீஸ் மா!எனக்கு ஒன்னும் வேண்டாம் "என்றாள்.

அனைவரும் அவளை சாப்பிட வற்புறுத்திய போதும் அவள் சாப்பிட மறுத்துவிட்டாள்.
விநாயக்,"இப்ப சாப்பிடாம இருந்த என்ன பத்து மார்க் உனக்கு எக்ஸ்ட்ரா
போட்டிருவாங்களா?சும்மா சீன் போட்டுட்டு இருக்க"என்று கூற அவள் "நான் ஒன்னும் சீன்
போடல"என்றாள்.

அவன்,"நான் ஒன்னு சீன் போடல" என்று கோபத்தில் கத்த அவனோ கூலாக,"சாப்படாம
இருந்து முகத்த பாவமா வச்சுக்கிட்டா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்னு சொல்லித்தான
முகத்த இப்டி வெச்சிருக்க" என்று அவளை உசுப்பேற்ற அவள் தன் தாயிடம் சென்று ஜுஸை
வாங்கிக் குடித்தாள்.

அனைவரும் விநாயக்யைப் பார்த்துச் சிரித்தனர்.எப்பொழுதும் அவன் இப்படித்தான்
அவள் செய்ய வேண்டிய வேலையை உசுப்பேற்றி செய்ய வைத்துவிடுவான்.

ரிசல்ட் வருவதற்கு அரை மணி நேரம் இருந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த
சந்தானகிருஷ்ணன் வீட்டிற்கு வர விநாயக், "அப்பா! வாட் எ ஸர்ப்ரைஸ்.நாளைக்கு வரனு
சொல்லிட்டு இன்னைக்கு வந்துட்டிங்க" என்று கேட்க அவர் சிரித்துக் கொண்டே
யாழினியைப் பார்த்து, "ரிசல்ட் நினைச்சு பயமா இருக்கா குட்டி?" என்று கேட்க அவள் "இல்ல
மாமா ஐ அம் வெரி கான்பிடன்ட் அபௌட் மை ரிசல்ட்ஸ்" என்று கூறி விநாயக்யை ஒரு
ஏளன பார்வை பார்த்தால்."தட்ஸ் மை கேர்ள்"என்று அவர் தட்டிக்கொடுத்தார்.

விநாயக் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ரில்டைப் பார்க்க அனைவரும் அவனை
சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். ரிசல்ட் வர ஐந்து நிமிடங்கள் இருந்த
போது அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.யாழினியோ கூலாக "எல்லாரு ஏன் இவ்ளோ
டென்ஷனா இருக்ககீங்க?பீ கூல்" என்று கூற அனைவரும் இது விநாயக்கின்
செயலால் தான் என்று நினைத்தனர்.

இப்பொழுது விநாயக் தான் பயத்துடன் இருந்தான்.அவன் மனமோ, "ஏன்டா அவள
பயப்பட வேண்டானு சொல்லிட்டு நீ பயப்படுற?"என்று அவனை கேள்வி கேட்க "நா ஒன்னு
பயப்படல.கொஞ்சம் எக்ஸைடட்டா இருக்கு"என்று சாமதனமும் சொன்னது.

தீடீரென்று விநாயக், "ஹுரே!"என்று கத்திக்கொண்டே எழுந்து அவளைத் தூக்கிச்
சுற்றி "1184 மார்க் எடுத்துருக்க டி" என்றான்.அவள் துள்ளிக் குதிக்க ரகுராம் அவளை
அணைத்துக் கொண்டார்.சந்தானலட்சுமி ஆனந்தத்தில் கண்ணீர்விட்டார்.

யாழினி தன் தாயை முத்தமிட்டு அணைத்துக்கொண்டாள்.ராதை அவளுக்கு
இனிப்பை ஊட்டினார்.

சந்தானகிருஷ்ணன் தான் அவளுக்காக முன்பே வாங்கியிருந்த வாட்ச்சைக் குடுக்க, "
தேங்க்யூ சோ மச் மாமா" என்றாள்.

ரகுராம் லேப்டாப்பை பரிசாக அளித்தார்.ராதை - சந்தானலட்சுமி இருவரும் அழகிய
நெக்லஸ் ஒன்றை அளித்தனர்.

"எல்லோரு ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே எனக்கு கிப்ட் வாங்கி வெச்சிட்டிங்களே
சப்போஸ் நா கம்மி மார்க் வாங்கிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?" என்று கேட்க "நீ என்ன
மார்க் வாங்கிருந்தாலு எங்களுக்கு அது நல்ல மார்க் தா" என்று ராதை கூற யாழினி அவரை
அணைத்துக் கொண்டாள்.

விநாயக், "நீங்க என்னோட அம்மா வா இல்ல அவளோட அம்மாவா?எப்பப் பார்த்தாலும்
அவள கட்டிப் பிடிச்சிக்கிரிங்க" என்று செல்லமாக கோபித்துக் கொள்ள யாழினியோ,"
அத்தை உன்னோட அம்மாவா இருந்தா கூட அவங்களுக்கு அவங்க தம்பி பொண்ணாண
என்னத்தா பிடிக்கு" என்று அவனுக்குப் பழிப்புக் காட்ட ,"உன் அத்தைக்கு உன்ன புடிக்குற
மாறி எனக்கு என் அண்ணன் மகனைப் பிடிக்கும்" என்று சந்தானலட்சுமி கூற "என் அத்தை
னா அத்தைதா"என்றான்.

"உன் அத்தைகிட்ட நீ அப்புறம் பேசிக்கோ.முதல்ல நீ எனக்கு குடுக்க வேண்டிய கிப்ட்ட
குடு" என்று கேட்க, "நீ என்னமோ பெரிய சாதனை செஞ்ச மாறி கிப்ட் கேக்குற. அதெல்லாம்
குடுக்க முடியாது.போடி"என்றான்.

அவள் முகம் வாடிவிட, "போடா!நீயும் வேண்டாம் உன் கிப்டும் வேண்டாம்.என் கூட
பேசாத" என்று கூறி தன்அறைக்குச் சென்றாள்.

ராதை,"ஏன்டா! புள்ள அவ்ளோ நல்ல மார்க் வாங்கிருக்கு. உன்னால ஒரு கிப்ட் கூட
வாங்கிக் குடுக்க முடியாதா?கிப்ட் வாங்கலினா கூட பரவாயில்ல உனக்கு என்ன வேனும்
வாங்கி தரனு சொல்லிருக்குலாம்ல?இப்டி புள்ளய கஷ்டப்படுத்திட்டியே"என்று
ஆதங்கப்பட்டார்.

தீடீரென்று யாழினி படியிலிருந்து ஓடி வர ராதை, "யாழி குட்டி!என்னாச்சு இப்டி ஓடி
வர?" என்று கேட்க "அத்தை! இந்த இடியட் எனக்கு ஐபோன் வாங்கி என் ரூம்ல வச்சிருந்தா"
என்று கூற ராதை தன் மகனை மெச்சும் பார்வை பார்த்தார்.
"ஏன் இடியட் நான் கேட்டப்ப சொல்லவே இல்ல? ஐ ஜஸட் லவ் இட்" என்று கூறி அதை
முத்தமிட்டாள்.அவன் புன்னகைக்க இவள் அவனை அணைத்து, "தேங்க்யூ சோ மச் வினு"
என்றாள்.

வினு என்று யாழினி அவனை அழைத்தாள் அவள் அன்று மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறாள் என்று அர்த்தம்.

ராதை சாப்பிட அழைக்க அனைவரும் சாப்பிடச் சென்றனர்.யாழினிக்குப் பிடித்த உணவு
வகைகள் அனைத்தும் சாப்பாட்டு மேசையில் இருந்ததைப் பார்த்த யாழினி, "சூப்பர்! எல்லா
எனக்கு பிடிச்சதா இருக்கு.இன்னைக்கு ஒரு கை பிடிச்சிற வேண்டியதுதா" என்றாள்.

விநாயக்," அப்படியே நிறைய சாப்டிட்டாலும்! எப்டி இருந்தாலு நாலு வாய் சாப்டிட்டு போதும்
வயிறு ஃபுல்னு சொல்ல போற" என்க "நா இன்னைக்கு கண்டிப்பா நிறைய சாப்பிடுவ. நீ
வேணா பாரு" என்றாள்."நானு பாக்க தான போற நீ என்ன பண்றேனு" என்றவன் கூற.
ரகுராம்,"இரண்டு பேரும் கம்மினு சாப்டுங்க" என்று கூற இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

அவளுக்குப் பிடித்த கேரட் அல்வா, காளான் பிரியாணி,உருளை வறுவல்,புலாவ்,ரைத்தா
என அனைத்தையும் கொஞ்சம் சாப்பிட்டவுடன் அவள் வயிறு நிறைந்தது."எனக்குப் போதும்
வயிறு ஃபுல்" என்றவள் எழப்போக விநாயக்கோ நான் சொன்னதுதா நடந்துச்சுப் பார்
என்பதைப் போல் ஒரு பார்வை பார்க்க அவள் வாயை சுழித்துக்காட்டி கை கழுவச்
சென்றாள்.

தன் அறைக்குச் சென்றவள் புது ஐபோனை நோண்ட ஆரம்பித்தாள்.தன் பழைய போனின்
சிம் கார்டை கழட்டி ஐபோனில் போட்டவள் விநாயக்கின் அறைக்குச் சென்று தூங்கிக்
கொண்டிருந்தவனைஅடித்து,"டேய் தடியா! கும்பகர்ணன் மாறி தூங்கிட்டு இருக்க.
எழுந்திருடா " என்று எழுப்ப "ராட்சசி! ஏன்டி அடிக்கிற?" என்று கண்ணைத் திறக்காமலேயே
கேட்க "நீ முதல்ல எந்திரி " என்று கூறி நான்கு சாத்து சாத்த " ஏன்டி நேத்து நைட் தா
இன்னைக்கு ரிசல்ட் வருதுனு தூங்க விடல. இப்பையும் ஏன்டி தூங்க விட மாட்டேங்கிற?"
என்று புலம்ப "இப்ப மட்டும் நீ எழுந்திருக்கலேனா நான் தண்ணிய கொண்டு வந்து
ஊத்திறுவ" என்று கூற உடனே எழுந்தமர்ந்தான்.

"ஏன்னடி வேணும் உனக்கு?" கோபத்தில் கத்த ,"போன்ல பர்ஸ்ட் போட்டோ நாம ஒட்டிக்கா
எடுக்கலானு உன்ன எழுப்புன" என்க அவன் புன்னகைத்துக் கொண்டே, "சரி எடு" என்க "
இல்ல நீயே எடு" என்று மொபைலை அவனிடம் கொடுத்தாள்.

அவள் டங் அவுட் (நாக்கை வெளியே நீட்டிதல்) பண்ணி அவன் மேல் சாயந்த படி போஸ்
கொடுக்க அவன் சிரித்துக் கொண்டே முதல் செல்பியை கிளிக் செய்தான்.

தீடீரென்று தன் மொபைல் அடிக்க நினைவுலகத்துக்கு மீண்ட விநாயக் போனை அட்டண்ட்
செய்தான்."இன்னும் டென் மினிட்ஸ்ல வந்திருவ மா" என்றான்..

வீட்டிற்குச் சென்றவன் தன் தாய் கொடுத்த டீயை குடித்துவிட்டு தன் அறைக்குச் சென்று
ரெஸ்ட் எடுப்பதாக கூற அவரோ, "கண்ணு! பொண்ணு போட்டோ அப்பா உனக்கு மெயில்
பண்ணிருக்காங்களாமா....உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்" என்றார்.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமை மத்தவங்க மேல இருக்கற பாசத்தை மறைமுகமாக காட்டறது விநாயக் மாதிரி ஆளுக பாலிசி யாழினியின் செல்ல கோபம் விநாயக்கின் சீண்டல் மத்தவங்க பாசம் அருமை
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அருமை மத்தவங்க மேல இருக்கற பாசத்தை மறைமுகமாக காட்டறது விநாயக் மாதிரி ஆளுக பாலிசி யாழினியின் செல்ல கோபம் விநாயக்கின் சீண்டல் மத்தவங்க பாசம் அருமை
நன்றி?
 




paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
தன்னம்பிக்கையுடன் துவங்கிய விதம் வியப்பு. வாழ்த்துகள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top