• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~11௦

தன் தாயை பிரிந்த நாள் முதலே அவனின் நிலை அதுவாகவே இருந்தது..காவ்யா அவனுட சிறு வயது முதல் இருந்தாலும் அவளாலே ஏதும் செய்ய முடியவில்லை ...

தாய்மையின் பலம் அது.. தாய்க்கு நிகர் இந்த உலகில் ஏதும் இல்லை என்பதற்கு சான்று அவனே..பன்னிரண்டு ஆண்டுகளே தான் தன் தாயோடு வாழ்ந்தாலும் திரும்பும் இடமெல்லாம் லட்சுமியே இருந்தாள் துருவிர்க்கு..

லட்சுமியின் நினைவு நாள் முழுவதும் அங்கேயே இருந்து இரவு தான் வீடு திரும்பினர்.. வீட்டிற்க்கு சென்ற பின்னும் அவன் அமைதியை மட்டுமே அனைவருக்கும் பதிலாய் கொடுத்தான்..

காவ்யா செயலற்று இருந்தாள் முடிந்தவரை அவனை சமாதனம் செய்தாலும் அவன் மனதில் ஏதும் ஏறவில்லை ...

தூங்க நினைத்தவன் கண்கள் நீரால் மட்டுமே நிறைந்திரந்தது...கண்ணீர் திரையாய் மூட அதை கிழித்து எரிந்தது..சாஷினியின் நினைவுகள்..

இதே நாள் ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்..

அன்று அவன் பள்ளிக்கும் வரவில்லை... காதலை ஏற்றுக்கொண்டு இரண்டு வாரம் தான் ஆனது.. பார்க்காமல் பேசாமல் இருக்க முடியவில்லை சாஷினிக்கு...

நாள் முழுவதும் அவனின் நினைப்பில் கரைந்தது...இரவு வீட்டிற்க்கு சென்றும் கூட அப்டியே இருந்தாள்..

“பாப்பா.. சாப்பாடு மேல கை தான் இருக்கு தவிர கவனம் இங்க இல்ல.. எத்தன டைம் திட்டு வாங்கிருக்க.. ஆனாலும் அந்த பழக்கம் ..”முரைக்கும் தந்தைக்கு பதில் இல்லை..அமைதியாய் சாப்பிட்டு தன் அறைக்குள் சென்றாள்..

ஏதோ பிரச்சனை சரி ஆகிவிடுவாள் என நினைத்து அவள் பெற்றோரும் தூங்கினர்..

தூங்கா இரவாக இருந்தது..கண்கள் முழுவதும் அவன்தான் இருந்தான்..அவனின் ஒவ்வொரு அசைவுகளும் அவள் கண்முன் தோன்றியது.. அவளுக்காக அவன் பாடிய பாடல்கள் நினைவிற்கு வந்தது...

பள்ளி கல்சுரல்ஸ்;

“லவ் ஓகே அனைத்துல இருந்து அவன் கண்டுக்கவே இல்ல டி.. பசங்களே இப்டி தான் போல...”

லவ் என்றாலே பொய் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் இப்படி புலம்புவதை கேட்டவளுக்கு உள்ளுக்குள் ஆனந்தமாய் இருந்தது..
“என்ன டி ..நான் புலம்புறேன் நீ அமைதியா இருக்க?...”


“உன் ஆளோட அல்லக்கை வருது பாரு..”

“அடியே அண்ணாவ அப்டிலாம் சொல்லாதா..”விஷமமாய் அவள்

“சாஷினி.. துருவ பார்த்தியா..ரொம்ப நேரமா கான்டீன்ல வெயிட் பண்றேன்..வரேன்னு சொன்னவன் தான் .. ரெண்டு மணி நேரம் ஆச்சு..”

“உன் கூடையும் இல்லையா அவன்..?”இது கேள்வியா இல்லை பதிலா என்று தெரியவில்லை...

“ரெப் தான் இருந்தாலும் வேலை செய்றதுல ஒரு நியாயம் தர்மம் வேணாமா மா..”சஞ்சனா தன் தரப்பு வாதத்தை தொடங்கினாள்...

ஸ்டேஜ்ஜிர்க்கு அருகில் இருந்த ஒரு ரூமில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்...

சோலோ சிங்கிங் நடந்துக்கொண்டிருந்தது.. அந்த சத்தம் சாஷினிக்கு வெறுப்பையே கொடுத்தது..

“டேய்..இவனலாம் பாட சொல்லி யாருகேட்டா... காது வலிக்கிது.கடுப்பாகுது சஞ்சு..”அவள் காதை மூடி கத்தினாள்..இருவருக்கும் சிரிப்பாக இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை...

அங்கு அன்கரிங் செய்துக்கொண்டிருந்த ஜோதி அடுத்து பேசினார்..”ஹியர் கம்ஸ் அவர் ஸ்பெஷல் பெர்போர்மன்ஸ்..”

துருவ் மேடையேறினான்..நல்ல இனிமையான வசீகரமான குரல் ..

எல்லாமுறையும் பாடுவது அவனின் கெத்துக்காக தான் இருக்கும்... ஆனால் இந்த முறை தான் காதல் மலர்ந்துவிட்டதே... அவன் பாட போகும் பாடல் சாஷினிகானது...

ஆரவாரம் அடங்க ஸ்டேஜில் ஏறினான்....தொன்டையை சரி செய்துக்கொண்டவன் பட தொடங்கினான்..

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லமா

நீ தானே என் சந்தோசம் பூவெல்லாம் உன்வாசம்

நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்

..உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி

நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி...."


காதை மூடி கொண்டவள் தன்னையும் மீறி பாய்ந்த கொண்டிருந்தவள் ஓடோடி வந்தாள்..

இருவர் கண்களும் சந்தித்தது ..........மைக்கை பிடித்தவன் பாடினான் காதலோடு கண்கள் இனைய மனதும் இணைந்தது...

அடிகடி கேட்கும் பாடல் என்றாலும் தனக்கே உரியவன் பாடும் பொழுது தான் சொல்ல நினைக்கும் வார்த்தைகள் தானே பாடப்படும் பாடலின் வரிகளும் அர்த்தமும்...

உணர்சிகள் அடக்கி பழகிய சாஷினியும் துவண்டாள் சில வரிகள் அவன் பாடுகையில்....

“நெடுங்காலமாய் உறங்காமலே எனக்குள்ளே நேசம் கிடகின்றதே


உனை பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெரிகின்றதே.

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக

நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலேயே என் ஜீவன் வாழுதடி

நீ அதரவாக தோல் சாயிந்தாலும் என் ஆயுள் நீளுமடி....”

அவன் கெஞ்சலான முகத்தை வைத்து பாடியவனுக்கு அவளின் விழியோரம் ஒதுங்கிய கண்ணீர் துளிகளே கூறின ஆயிரம் ஆயிரம் காதல் வார்த்தைகளை....

அவன் பாடி முடித்ததும்..மேடையேறிய ஜோதி மிஸ்.. “வாட் எ மெஸ்மெரைஸிங் வாய்ஸ்.. பட் இட்ஸ் நாட் போர் கம்பெடிஷன்..ஜஸ்ட் எ நேயர் விருப்பம் ப்ரம் அவர் பிரின்சிபால்” அவர் கூற அனைவரும் கரகோஷங்களை எழுப்பினர்..அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினான் துருவ்..

ஓரத்தில் கார்திக் நிற்க அவன் அருகில் சென்றான்..

தன்னை பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கிடம் எந்த முகத்தை காட்ட வெட்கமாய் முகத்தை மூடி கொண்டான்..

“டேய் மச்சான் என்ன வெட்கமா .. அட சீ அசிங்கம பண்ணாத கைய எடு...”

“போ டா..”நகத்தை கடித்தவாறு வெட்கப்பட்டு கொண்டவனை பார்க்கவே காமெடியாக இருக்க “ஐயோ முடில டா... தங்கச்சி பண்ண வேண்டியது எல்லாம் நீ பண்ற டா..உன் அலபர தாங்கல டா சாமி. என்ன லவ் ஓ”என்று அவன் கூற...

“ஏன் கிட்ட கூட சொல்லல..போ டா..”பொய் கோபம் காட்ட..”உனக்கும் சேத்து தான் டா சர்ப்ரைஸ் “

“நடிக்காத டா ,சரி வா...”அவனை இழுத்துக்கொண்டு அவன் கிளாஸ் ரூமிற்கு வந்தான்...

“இங்க ஏன் டா கூட்டிட்டு வந்த..”துருவ் கேட்க அவன் பதில் சொல்லுமுன்னே புரிந்தது அவனுக்கு சாஷினியின் வருகையை பார்த்ததும்...

வெளிய நிக்றேன் டா மச்சான் நீ பேசிட்டு வா ....இத தான சொல்ல போற கார்த்திக்..நே போ டா..””என்றவன் அவன் காதருகே சென்று “அடங்கு டா.. உன்ன வந்து வச்சிகிறேன்..”.” என்றவன் வெளியே செல்ல..சாஷினி உள்ளே வந்தாள்..

ஸ்க்கூல் லவ் என்றாலே எல்லாம் திருட்டு தனம் தான்.. யாரும் இல்லாத நேரம் பேசிகொல்வதும்... யாரும் பார்க்காத நேரம் சைட் அடிப்பதும் எவ்வளவு கஷ்டம் என்பது ஸ்கூல் லவ்வர்ஸ்க்கு மட்டும் தெரிந்த யுக்தி...

உள்ளே வந்ததும் மெதுவாக கதவை பாதியாக சாத்தினான் கார்த்திக் ..

“சொல்லு லட்டு மா.. என்றான் துருவ்...

அமைதியாய் நின்றாள் சாஷினி ..பின்பு அவன் எதிர்பார்க்காத சமயம் அவன் அருகே சென்றவள் அவன் கையை பிடித்துகொண்டாள்...

“லவ் யூ லாட்ஸ் டா லட்டு மா..”கண்கள் கலந்தன.. வார்த்தைகள் ஒய்ந்தன.. மனமும் மனமும் காதல் பாஷையில் சம்பாஷனை கொண்டன.. பார்வை மட்டும் போதை ஏத்துமா என்ற கேள்விக்கு பதில் சொன்னது இருவரின் பார்வை பரிமாற்றம்.. எவ்ளோ மணி துளிகள் நிலைத்து என்பது இருவரும் அறியாத ஒன்று தான்....

“சாஷினி மா..”என்றான் மெல்லிய குரலில்..

“என்ன” என்பதுபோல் அவள் புருவம் ஏறி இறங்கியது

“என்ன விட்டு போகணும்னு நினைக்க மாட்டல.. “என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் கையை எடுத்தாள் அவனிடம் இருந்து...

“ஏன் டா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.”பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்..

அவள் முகத்தை கையில் ஏந்தியவன்..”அப்டி இல்ல மா.. எல்லாரும் ஸ்கூல் லவ் கடைசி வர போகாதுன்னு சொல்றாங்க அதுக்கு உன்ன மட்டும் காரணமா சொல்லல... சம்டைம் என்னால கூட நாம பிரியலாம்.. அதான் அப்டி கேட்டேன் ..சாரி மா.”. முகத்தை நிலத்திற்கு காட்டினான்...

“இங்க பாரு துருவ் எனக்கு என்ன பிரச்சன வந்தாலும் நா உன்ன விட்டு போகமாட்டேன்..இது ஏன் மேல ...........”முடிபதற்குள் அவள் வாயை மூடினான்....

“ஏன் அம்மா எபவும் சத்யம் பண்ண விட மாட்டாங்க சாஷினி.. அதனால நீயும் எந்த சூழ்நிலையிலும் சத்யம் பண்ணாத மா ப்ளீஸ்..”

சரி என்பதுபோல தலையை அசைதவள்...மெல்ல அவன் அருகில் சென்றாள்..

இதமாய் இணைந்தது இருவரின் இதழ்கள் சொல்ல இருந்த சத்தியத்திற்கு அர்த்தமாக..

கிரிஷின் சத்தத்தில் கண்முழித்தவன் உண்மையை உணர்ந்தான்....

இணைந்த இதழ்கள் பிரிந்ததே...இணைந்த இதயமும் உடைந்ததே...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
கஸ்தூரி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




olivellam

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
54
Reaction score
313
Location
USA
இதமாய் இணைந்தது இருவரின் இதழ்கள் சொல்ல இருந்த சத்தியத்திற்கு அர்த்தமாக..

Is this appropriate for school going kids? Just wondering...
 




kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
இதமாய் இணைந்தது இருவரின் இதழ்கள் சொல்ல இருந்த சத்தியத்திற்கு அர்த்தமாக..

Is this appropriate for school going kids? Just wondering...[/QUOT
everything is fair in love i guess so.... its happening everywhere..i think its not a big deal
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top