• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 12(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
............

சனிக்கிழமை பண்ணிரண்டு மணிக்கே பள்ளி முடிய அது காதலர்களுக்கான நேரம் ஆனது... பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர் ,பார்க் என எல்லா இடத்திற்கும் அவர்கள் சென்றனர்..

பார்க்கில் துருவ் சாஷினி ஒரு ஓரமாக இருந்து பேச சஞ்சனாவும் கார்த்திக்கும் அங்கு இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவர் இல்லை என்றால் இருவரும் எங்கேயாவது போய் சாப்பிடுவர்..

“லட்டு மா.. நமக்கு கல்யாணம் எப்டி நடக்கும் டா...”

“இது என்ன டி கேள்வி.. ஒரு கோவில் இல்லனா ஒரு மண்டபம்ல நடக்கும் டி..”அவளின் கையை ஏந்திக்கொள்ள அவன் தோளில் அவள் சாய்ந்து அமர்ந்திருந்தாள்..கையை விடாது அவன் சீண்டுகொண்டிருக்க..

“ஆமா ..ஏன் டி திடிர்னு இந்த கேள்வி.?”

“நீ எதாச்சும் சூப்பரா சொல்லுவன்னு பாத்தேன் ..நீ உன்ன மாதிரியே மொக்கைய சொல்ற போடா..”

“லட்டு குட்டி..நீயே எதாச்சும் பெட்டெரா யோசிச்சு வச்சிருப்ப மா. அத சொல்லு..”சொல்லிக்கொண்டே அவளின் இருகைகளையும் பிடித்து அணைத்துக்கொண்டான்..

“டேய் விடு டா...”அவள் முயன்றும் தோற்றால் ..தோல்வியில் மகிழ்ச்சிக்கண்டாள்...அவளும் சற்று அவனுடன் நெருங்கியே அமர்ந்துக்கொண்டாள்..

“என்ன மா.. சத்தமே இல்ல.. தூங்கிடிங்க்லா பாப்பா..”அவளின் முகத்தை அவனை நோக்கி திருப்ப இருவரின் அதரங்கள் பக்கம் பக்கம் இருக்க அவள் திணறினாள்..விலகவும் மனமில்லை அணுகவும் எண்ணமில்லை..அப்படியே சிலையாயினர் இருவரும்...

அவன் கண் இமைக்க அவன் விழியில் இருந்து சாஷினி விடை பெற்றாள் ..”எப்பா சாமி கண்ணா இது ..பாத்த அப்டியே மயக்கிடுவான் பொறுக்கி...”மனதில் நினைத்தவள்..”டேய் நீ என்ன ரொம்ப டைவர்ட் பண்ற..”

“சரி சரி நான் ஏதும் பண்ணல “என்றவன் அவளிடம் இருந்து விலகி அமர்ந்தான்...

அந்த சிறு இடைவெளி கூட அவள் விரும்பவில்லை..அவனை இடித்துக்கொண்டு அருகில் அமர்ந்தவள் அவன் கைகளை அவள் பிடித்து அவன் மீது சாய்ந்துக்கொண்டாள் ..

உள்ளூர சிரித்துக்கொண்டவன்..”சொல்லு டி செல்லம்”என்றவன் அவளை இறுக பிடித்துக்கொண்டான்..வெட்கம் தலைக்கேறினாலும் கட்டுபடுதிக்கொண்டவள் சொல்ல ஆரம்பித்தால்...

“அதிகாலைல லாம் நம்ம கல்யாணம் இருக்க கூடாது.. ஒரு பத்து மணிக்கு தான் இருக்கனும்..கல்யாணம் கண்டிப்பா முருகர் கோவில்ல தான் நடக்கணும்.. அப்றோம் அங்க இருந்து கிளம்புற அப்போ நான் மிச்செஸ் துருவ் பத்மநாபன் ஆயிடுவேன்..”அதை சொல்ல அவளுக்கே அவ்வளவு பிடித்திருந்தது..

”ஹான் அப்றோம் நாம மண்டபம் போவோம்.. அங்க ஸ்டேஜ் அழகா இருக்கணும்,.. துருவ் வெட்ஸ் சாஷினினு எழுதிருக்கணும் அப்பறோம் பஸ்ட் நம்ம பாமிலி சேர்ந்து அழகா ஒரு போட்டோ..எல்லாரையும் கூப்டனும்.. நம்ம டீச்செர்ஸ் பிரிண்ட்ஸ் சீனியர்ஸ் எல்லாரும்..எல்லாரும் பாத்து பொறமை படுற அளவுக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கணும்”அவள் கண்களில் அந்த காட்சியை கண்டான் துருவ்...

ஆனால் அவளோ அந்த கட்சிகளை மனதில் ஒட்டிகொண்டிருந்தால்..”அப்றோம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் விளக்கு ஏத்த சொல்லுவாங்க அப்றோம் கொஞ்ச நேரம் இருந்துட்டு எங்க வீட்டுக்கு போவோம் உனக்கும் எனக்கும் பால் பழம் கொடுப்பாங்க ..ஏமாத்தி ஏமாத்தி சாப்டுட்டு எங்க வீட்ட விட்டு கிளம்புவோம்..நிரந்தரமா..”இதை சொல்லி முடிக்க அவள் கண்கள் கலங்கியது.. அவனுக்கு அதை பார்க்க விருப்பம் இல்ல..

“லட்டு மா.. போதும்.. நம்ம அம்மா அப்பா எல்லாரும் ஒரே வீட்ல இருப்போம்...சரியா..”அவன் பேச அவனுக்கு கார்த்திக் சத்தம் கேட்டது..

“மச்சான்..டேய்..என்ன டா பண்ணுற...”அவன் கத்த கனவுலகிலே இருந்தான் துருவ்..

கத்தி கத்தி சோர்வானவன் எழுந்தே வந்தான்..கைகள் கீபோர்டில் இருந்தது..கண்கள் ஸ்க்ரீனை பார்க்கிறது.. ஆனால் எதுவும் அசையவில்லை..

காதருகே சென்று..”டேய் மச்சான்..துருவ்..”அசையாமலே இருந்தான்..”இவன் என்ன கண்ண தொறந்து தியானம் பண்ணுறானா..எவ்வளோ நேரம் இப்படி இருக்கான்னு தெரிலேயே.. “

பொறுமை இழந்தவன்..அவனை பிடித்து குலுக்கினான்...

அப்போதே உயிர் பெற்ற துருவ் ..பொறுமையாக..”சொல்லு டா..”என்றான்..”டேய் என்ன வெறுப்பேத்துரியா...”அவன் கோபமாக கேட்க..

“ஏதோ நியபகம்ல இருந்துட்டேன்.. டைம் ஆச்சா..சாப்டுவோம் ..வா..”லஞ்ச்சை அவன் எடுக்க..”என்ன டா..சாப்பாடுலாம் புதுசா எடுத்துட்டு வந்துருக்க..”

“தேவி அம்மா கொடுத்தாங்க..”

“ஏது அம்மா வா..”வாயை பிளந்தான் ஆச்சிரியத்தில்..

அவனோ அசல்டாய்” ஆமா டா ..”

“என்ன டா..இன்னைக்கு ஏதோ புதுசா பேசுற பண்ணுற.. எனக்கு பயமா இருக்கு..”

“இல்ல டா..இப்ப தான் கரெக்டா இருக்கேன்.. இருக்றதா விட்டுட்டு இல்லாதத தேடி ஓடுறேன்.. லட்சுமி அம்மாவ நினைச்சி கூட இருக்கிற அம்மாவை விட்டுட்டேன்... என்னால என்ன விட்டு போன சாஷினிய நினைச்சி எனக்காக இருக்ற காவ்யாவ விட்டுட்டு இருக்கேன்.. இருக்றதா வச்சி வாழ தெரில டா.. காவ்யா அப்பா வந்து கல்யாணம் இந்த வர்ஷம் வைக்கணும்னு சொல்லிருகாரு.. எனக்கு ஓகே தான்.. ஆனா சாஷினி இல்லனு தெரிஞ்ச மனசுக்கு அவள மறக்க தெரில...”

உடைந்து போய் பேசும் தனது நண்பனை பார்க்க முடியவில்லை அவனால்...கட்டி தழுவியவன்”மச்சான் தேவி அம்மாவ எப்டி முழுசா எதுகிட்டியோ அதே மாதிரி எல்லாம் மாறும் சரி ஆகும் டா..”

“நானும் நம்புறேன் டா.. நான் வேணும்னு அவல நினைகள டா.. திடீர் திடிர்னு அவ நியாபகம் வருது... இதால காவ்யா கஷ்ட படுவாளோனு பயமா இருக்கு..என் வாழ்கைல காவ்யா எவ்ளோ முக்கியம்னு உனக்கே தெரியும்ல டா.. சாஷினியோட நியாபகமும் என்ன ஒரு பக்கம் சாவடிக்குது ..இன்னொரு பக்கம் காவ்யா கூட இருக்க போற மிச்ச வாழ்கை..நான் என்ன டா பண்ண..”அவன் மனதில் இருந்த அனைத்தையும் வெளியே சொன்னான்...

“சரி மச்சான்..எல்லாம் நல்லதுக்கு தான்..ரொம்ப குழப்பிக்காத..தங்கச்சி எப்டின்னு உனக்கே தெரியும்..அவ உன்ன முழுசா புரிஞ்சிகிட்டவ டா.. அவளுக்கு நீ ஏதும் சொல்லலனாலும் அவளுக்கு புரியும்..நீ ஏதும் யோசிக்காத..இப்ப சாப்டு..”

கார்த்திக் மனதுள் அவ்வளவு மகிழ்ச்சி.. அவனின் எல்லா கட்டத்திலும் இருந்தவன் இவன்.. அவன் இவ்வளவு மாறியதே அவனுக்கு போதுமாக இருந்தது..

காவ்யாவிற்கு அழைத்து அனைத்தையும் கூறினான்...அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம்...”இனி மாமா எனக்கு மட்டும் தான்..”என்று கார்த்திக்கிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்..

தெளிவு என்பது நமக்கு வேண்டியவரின் பிரிவு காண்பிப்பது இல்லை..அவர்கள் இல்லை என்பதை எப்போது மனதார உணருகிறோமோ அன்று தான் வாழ்கையின் தெளிவும் ஏற்படுகிறது..

இன்று கிடைக்கும் மகிழ்ச்சியும் வெற்றியும் நாளை வேறு யாரோடதோ.. அதை புரிந்தவன் வாழ்கையின் அணைத்து கட்டத்திலும் இன்பத்தை காணுவான்.. இன்று தோற்றவன் நாளை தோற்பதில் நிச்சயம் இல்லை.. அடுத்த நொடியே நிச்சயம் இல்லாத வாழ்கையில் நமக்கு விதிக்கப்பட போவதை எதையும் நாம் அறியபோவதில்லை.. இருக்கும் நொடிகளில் இருக்கும் உறவுகளை கொண்டு வாழ வேண்டும்..

நண்பனின் வாழ்கையை கண்டு மகிழ்ந்தவன் அவன் வாழ்கையை மறந்தானோ...

கனவுகள் தொடரும்.............................
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top