• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

EPISODE 15(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~15

சில சமயங்களில் நம் வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகள் எதற்கு நடக்கிறது என்பது நமக்கே தெரியாது.. ஆனால் நடக்கும் பொழுது சிலருக்கு அது இனிக்கும் சிலருக்கு அது கசக்கும்..

அது போலவே ..சாஷினி வாழ்கையிலும் நடக்கும் நிகழ்விகள் அவளுக்கு இன்பமா துன்பமா என்ற கேள்வி அவள் அறியாமலே மனதில் தோன்றியது.. அது அவளின் மூளையை அடையும் நொடியில் அவள் பாதப்பதைத்தாள்..

“ம்மா சாஷினி ... இனிமே எங்க வொர்க் பண்ணலாம்ன்னு இருக்க ம்மா..”ரகுராம் கேட்க..

அவளோ என்ன சொல்வதென்று தெரியால் விழித்தாள்..அவள் கண்கள் யாரை பார்க்க என்று குழம்பியது.. பக்கத்தில் இருந்த தாயை தந்தையை அவள் கண்கள் ஏன் தேடவில்லை என்று அவளுக்கும் தெரியவில்லை.. அவள் கண்கள் தானே தேடி சென்றது அவன் கண்களை..

அவனின் உணர்ச்சியின் எழுச்சிக்கு அளவே இல்லை..அவளின் கேள்வியை புரிந்துக்கொண்டவன்..

“ப்பா..அத அவ கொஞ்ச நாள் கழிச்சி யோசிச்சி சொல்லுவா..”

அனைவரும் சரி என்றும் ஒத்துக்கொண்டதும் ..அவர்களின் வருகைக்கான காரணம் தலை தூக்க ஆரம்பித்தது..

அனைவரும் சாப்பிட அமர..அனைவருக்கும் ரகுராமின் மனைவி மீனாட்சி பரிமாறினாள்..



“அப்பறோம் முத்து சொல்லுங்க ...பசங்களுக்கு ஓகேன்னு ஆச்சு அப்போ நாம நம்ம கடமைகளை செஞ்சிடலாம்ல..என்ன சொல்றிங்க ரெண்டு பேரும்..” சாஷினியை தவிர அனைவருக்கும் அதில் உடன்பாடு இருந்தது..

அதை அவளின் பாவனைகளில் இருந்து கண்டுக்கொண்டவன் அவனின் மாமியாருக்கு சிக்னல் கொடுத்தான்.. அதை கப்பென்று பிடித்துக்கொண்டவர் “ அது வந்து.. பாப்பாக்கு ..”அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் கிருத்திகா முழிக்க ..

பொண்டாட்டி தான் இப்டின்னு பாத்தா மாமியாரும் அப்டியே இருக்காங்களே ..சரி சமாளிப்போம்..என்று நினைத்தவன்..

”இல்ல பா.இத நானே ஆண்ட்டிக் கிட்ட கேட்டேன்.. அவங்க சொல்ல தயங்குறாங்க அவ்ளோதான் ..அது என்னனா சாஷினி அங்க சென்னைல ஹாஸ்பிட்டல்ல ஏதும் இன்னும் சொல்லல கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்கு.. அதான் அவங்க கொஞ்ச நாள் ஆகட்டும்னு யோசிக்றாங்க..நாம கொஞ்ச நாள் அப்றோம் நிச்சயம் வச்சிக்கலாம் பா.. “

அவன் கேட்டு மறுத்தது ஏதும் இல்லை அதே தான் இதற்கும் .. தனக்காக இவ்வளவு ஏன் செய்கிறான் என்பதே அவளுக்கு புரியவில்லை போலும்.. திருமணம் என்ற ஒரு பந்தத்திற்காக அனைவரையும் சமாளிக்கிறான் என்றும் அவளின் சிறுமூளையில் தோன்றியது..

தான் மட்டுமே இந்த கல்யாண முடிவில் முட்டுக்கட்டையாக இருப்பதை தெள்ளென உணர்ந்தாள் சாஷினி..

இருகுடும்பமும் இவ்வளவு விரைவாக பரஸ்பரம் கொண்டாடும் என அவள் நினைக்கவில்லை என்பது தான் உண்மை.. எப்படி ஆனாலும் நேரம் இருக்கும் பொறுமையாக மனதை பக்குவப்படுத்திகொள்ளலாம் என்றே அவள் எண்ணி இருந்தாள்...

அனைவரும் குதுகளிப்பாய் பேசிகொண்டிருக்க அவள் மட்டும் ஏதோ தனிமையில் லயத்துகொண்டிருந்தால் .. யாரும் கவனிக்காத வண்ணம் அவளை அழைத்தவன்...அதை சாஷினியின் தாய் கிருத்திகா கண்டுகொண்டார்..

அவளும் கண்ணை காட்ட ..அவன் வெட்கத்தில் மூஞ்சை மூடிகொண்டான் ..இதை பார்த்த சாஷினிக்கு சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.. வெளியே சென்றே ஆகா வேண்டும் என்று நினைத்தவள் .. எழுந்தாள் அனைவரும் இவளை பார்க்க..

“கொஞ்ச நேரம் முயல்குட்டிய பாத்துட்டு வரேன்..”வெளியே செல்ல திரும்பியவள் “நீங்களும் வரீங்களா ..”அவனை பார்த்து கேட்டாள்..அவளின் கேள்வியில் அனைவரின் மனதும் நிறைவாய் இருந்தது ..

முயல்குட்டிகளை கையில் எடுத்துக்கொண்டவள் “எங்க அம்மாவுக்கு உங்கள ரொம்ப புடிக்கும்ல??”அவள் குட்டிகளின் தலையை தடவியவாறு கேட்க ..

“ஆமா.. உன்ன பாத்த அப்றோம் உங்க பேமிலியா பார்க்க நான் மட்டும் வந்தேன் .. அப்போ உங்க அம்மா அண்ணா மட்டும் இருந்தாங்க..அவங்க ரெண்டு பேரையும் ஒரு டூ இயர்ஸா தெரியும்ல அதான் அந்த புரிதல்..மாடர்ன் அம்மா..” சொன்னவன் அவன் மாமியார் செய்த உதவிகளை நினைத்து பெருமூச்சை மட்டும் வெளிகாடினான்...

“எல்லாரோட சந்தோஷத்திளையும் நான் மட்டும் தான் முட்டுகட்டையா இருக்கேன்ல..”மனதில் நினைத்ததை அவள் கேட்கவும் செய்தாள்...சற்று கையை தளர்தியதும் அந்த முயல்குட்டி அதன் குடும்பத்துடன் இணைந்தது..

“மேடம்.. இப்டி சோகமா மூஞ்சிய வச்சிகாதிங்க ..யாரும் உன்ன அர்ஜென்ட் பண்ண போறது இல்ல.. நமக்கு கல்யாணம் நடக்கும்.. ஆனா நீ எப்போ மனசார என்கிட்ட சொல்றியோ அப்போ... வெயிட் பன்னுவேன் ..”

அவன் பேச்சில் இருந்த உறுதி அவளை சற்று அசைத்து பார்த்தது.. ஆனால் அவளால் அனைத்தும் தடைபட்டு நிற்பது அவளுக்கு சங்கடமாகவே இருந்தது..

நாட்கள் ஓட ஓட துருவின் நினைவுகள் திரையிட்டு யாரோ மூடுவதை போல உணர்ந்தாள் ... கண் முழிக்கும் பொழுதும் அவனின் நினைவுகளிலே சஞ்சரித்துக்கொண்டிருன்தவள் மாற ஆரம்பித்தாள் ... அதை அவளுமே வெகுவாய் உணர்ந்தாள்... அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் இல்லை ..அவனின் நினைவுகள் தொலைவதில் அவளுக்கு வருத்தமும் தெரியவில்லை..இது தான் வாழ்கையின் உண்மை என்பது போல அவள் அவளின் சராசரி வாழ்கையை வாழ தொடங்கினாள்..

ஆனால் ஒன்றில் உறுதியாக இருந்தாள் தன்னை மனக்க கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருப்பவனின் மேல் தனக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் வரை அவனை ஏற்றுக்கொல்வாதாய் இல்லை என்று..

ஆனால் அது வர ஆரம்பித்து விட்டதை அவள் சற்றும் உணரவில்லை..அவன் உணர்ந்திருந்தாலும் அவளே உணரும் வரை காத்திருந்தான்..தனக்கானது தான் என்று தெரிந்த பின் காத்திருப்பதும் சுகம் தானே....

..................................................

சத்யா கார்த்திக்கின் காதலை பற்றி தெரிந்தும் அவளின் தந்தை இரண்டு நாட்கள் அமைதியாகவே இருந்தார்.. அது சத்யாவிற்கு சங்கடமாய் இருந்தது...

”இவர் அமைதியா இருக்கிதே பிரச்சன தானே.. எதாச்சும் அவசரப்பட்டு பன்னுனா நாம அதுக்கு எத்த மாதிரி எதாச்சும் பண்ணலாம்னு நினச்சா இவரு இப்டி பண்றாரே..”மனதில் நினைத்துக்கொண்டே காலை உணவை சாப்பிட்டவள் எதிரே இருந்த அவளின் தந்தை தங்கவேலுவை பார்த்தாள் சத்யா...

அவரும் முகத்தில் சற்றும் சலனமின்றி அமர்ந்திருந்தார்.. அவருக்கு ஒரு அழைப்பு வர தன் மனையாளை அதை எடுத்து வர சொன்னார்.. கையில் வாங்கியவரின் முகத்தில் பிரகாசம் மெருகேறியது..

சத்யாவிற்கு வயிற்ருக்குள் ஏதோ உருளுவதை போல உணர்ந்தாள்..ஏதோ தவறு நடந்து விட்டதை அவள் உள்ளுணர்வு நிமிடத்திற்கு நிமிடம் சொல்லிக்கொண்டே இருக்க ..அவளுக்கு ஏதேதோ தோனா ஆரம்பித்தது.. அவள் தனத்தை பேச ஆரம்பிக்க..அணைத்து சிந்தனையும் ஒதுக்கியவள் தற்செயலாக அவரின் பேச்சை கேட்பது போல் அவள் நடிக்க அவரும் அதை உணர்ந்துகொண்டு அவளுக்கு உதவினார்..

“சொல்லு மணி.. சொன்ன வேலை முடிஞ்சிச்சா..”அவர் அலைபேசியில் கேட்டுகொண்டே தன மகளின் முகத்தை பார்த்தார்...

இதை எதையும் கவனியாது சௌந்தர்யா அமைதியாய் நின்று கொண்டிருந்தாள்..

மறுமுனையில் நின்றவர் ஏதோ நல்ல விஷயம் சொன்னது போல அவர் மறுமொழி கொடுத்தார்..”நல்லது மணி.. லேட் ஆனாலும் சொன்னா ஆல கரெக்டா தூக்கிட்டியே .. வண்டி நம்பர் சொல்லறேன் எதுக்கும் பாத்துக்கோ..டி.என். ஒன் போர் –எஸ் டூ த்ரீ சிக்ஸ் போர்... “அவர் சொல்ல சொல்ல சத்யாவின் முகம் சிவந்தது..

“எங்க கிடக்கான் அவன்...”

“..............”

எதிர்முனையில் ஏதோ சொல்ல..சத்தமாக சிரித்தவர்..”சரி டா மணி.. அந்த நாய் அங்கேயே கிடக்கட்டும் அள்ளிட்டு போக யாராச்சும் வருவாங்க..”என்றவர் அழைப்பை துண்டித்தார்..

இவளுக்கு அது கார்த்திக்கா இருக்க கூடாது என்று உள்ளுணர்வு வேண்டினாலும் ... இன்னொரு பக்கம் அது அவன் வண்டி எண் தான் அப்போ அது அவன் தான் என்பதை சொல்லிகொண்டே இருக்க ..அவள் அயர்ந்து தான் போனாள்..தைரியத்தை வரவைதுக்கொண்டு கேட்டாள் அவளின் தந்தையிடம்..

“யாரா பத்தி பேசறிங்க...”அவள் சற்று அதட்டலாகவே கேட்டாள்..

அவர் ஏதும் பேசாது இருக்க சௌந்தர்யா பேசினாள்..

“அடியே ..அப்பாவயே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட டி.. அவரு யாரோ பத்தி பேசறாரு உனக்கென்ன..”

“ம்மா..உனக்கு தெரிஞ்சது வீடு சமையல் கட்டு ..நீ நடுல பேசி வாங்கிகட்டிகாத .. அவரு ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்காரு.. ஒழுங்கா அவர சொல்ல சொல்லு..”

அனைத்தையும் கேட்டு அவர் சிரித்த முகத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்..

“சத்யா..வாய அடக்கு.. பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.. இஷ்டத்துக்கு பேசுற ...”தாயின் பேச்சை கண்டுகொள்ளதவள் தந்தை முறைத்துக்கொண்டே “இப்போ சொல்ல போறிங்களா இல்லை....”அவள் சற்று நிறுத்த அமைதியை விட்டேரியவர்

“சொல்லு சத்யா சொல்லலனா என்ன பண்ணுவ..”அவர் வில்லத்தனமான முகம் வெளிவர ..சௌந்தரயாவே சற்று பதறினாள்..

“என்ன வேணாலும் பண்ணுவேன் பா..”

அவள் வர்தையிலுருந்தே அவருக்கு புரிந்தது அவள் செய்துவிடுவாள் என்று..ஆனாலும் கோவம் வெறியாக மாறியதால் “அந்த பொறுக்கிகாக உன் அம்மா அப்பவ இப்டி எதித்து பேசுற அளவுக்கு வளந்தாச்சுல..”

“அப்பா அவன பொறுக்கின்னு சொல்லாதிங்க..இங்க யாரு பொறுக்கி தனம் பண்ணிருக்கானு யோசிச்சு பாருங்க..”

அவள் தன்னை தான் சொல்வதை உணர்ந்தவர் அடிக்க கை ஓங்கினார்.. ஆனால் அவள் கண்ணிலோ சற்றும் பயமில்லை.. அடிச்ச அடிச்சிகோங்க என்ற பிரதிபலிப்பே இருந்தது ..அதை கண்டவர் சற்று தடுமாறினார்..கையை கீழே இறக்கவும் செய்தார்..

“இருபது வர்ஷம் உன்ன எப்பயும் கஷ்டப்படுத்தாம பூவா தாங்கற மாதிரி உன்ன ரெண்டு பேரும் பாத்துகிறோம்... ஆனா நீ எத தேடி போற.. அவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ண..நீயே தேடி தேடி அவன் பின்னாடி போனியாமே அசிங்கமா இல்ல கழுத..”ஏதோ அசிங்கத்தை பார்த்து பேசுவது போல முகத்தை அவர் வைத்துக்கொள்ள அவளுக்கு சுர்ரென கோபம் பொங்கியது..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top