Episode 17(2)

kasthuri

Author
Author
#1
காவ்யா கூறியது போலவே கார்த்திக் வீட்டில் கூறிவிட்டு சசி ஒரு பையில் துணிகள் எடுத்து வந்தான்..
ஆர்த்தோ ஸ்பெசியளிஸ்ட் கௌதம் தான் கார்த்திக்கிற்கு வைத்தியம் பார்க்க ஒப்புக்கொண்டார்.. ஆர்யனின் வார்த்தையில் எத்தனை பவர் என்பதை காவ்யா கண்ணார கண்டாள்.. இவள் அழைக்கும் முன் டாக்டர் கௌதமே அழைத்தார்..
“காவ்யா..நான் கௌதம் ஆர்த்தோ ஸ்பெசியளிஸ்ட்... எந்த ஹாஸ்பிடல்ல கார்திக்க அட்மிட் பன்னிருகிங்க..”
“இந்திரா காந்தி ஹாஸ்பிடல்ல டாக்டர்.. சீப் டாக்டர் தயாள் ரௌண்ட்ஸ்ல இருக்காங்க..”
“அப்போ நீங்க டாக்டர் தயாள் கிட்ட போன் குடுக்ரிங்க்லா..”
“சரி டாக்டர்..”
அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்ள... டாக்டர் தயாள் சரி சரி என்பதை தவிர வேறு ஏதும் சொல்லவில்லை..முக மலர்ச்சியோடு பேசி முடித்தவர்..
“காவ்யா.. நீங்க இப்போவே கார்திக்க கூட்டிட்டு போகலாம்..அவரு மயக்கத்துல இருக்கிதால.. ஆம்புலன்ஸ் வரும்.. நீங்க ரெண்டு பேரு கூட போகலாம்..”அவர் கூற.. காவ்யாவிர்ற்கு ஆச்சரியம் மேல் ஆச்சரியம் தான்..
துருவிர்க்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.. அவன் கேட்கும் மனநிலையிலும் இல்லை.. இத்தனை வருடம் தனக்கெனவே அவன் இருந்தான்.. அவனுக்கு சின்னதாய் ஒன்று என்றாலும் தாங்கும் சக்தி துருவிர்க்கு இல்லை.. காவ்யா அழைக்கும் இடத்திக்கு பொம்மை போல் சென்றான் ..சைன் பண்ண வேண்டிய இடத்தில எல்லாம் முடித்துவிட்டு .. ஆம்புலன்ஸ்ஸில் கிளம்பினர்..
சசி ஆம்புலன்ஸை தொடர்ந்து துருவின் பைக்கில் வந்தான்..
நான்கு மாடி கட்டிடம் முன் நின்றது ஆம்புலன்ஸ்..ரிசெப்ஷனுக்கே வந்து விட்டார் கௌதம்..
ஸ்ட்ரக்ச்சரில் கார்த்திக்கை கொண்டு போக அதை தொடர்ந்து துருவ் காவ்யா சசி சென்றனர்..
வெகுநேரம் பரிசோதனை பின் வெளி வந்த கௌதம்... துருவின் நிலை புரிந்துகொண்ட காவ்யாவின் அருகே வந்தார்..
“காவ்யா.. கொஞ்சம் கிரிடிக்கல் தான்.. நீ போன்ஸ் ரொம்பவே டாமேஜ் ஆயிட்டு கிளாட் ஆயிருக்கு.. பட்..ஆர்யன் ரெண்டு வீக்ல சரி ஆகணும்னு சொன்னதால.. வேற ரெண்டு மூணு டாக்டர்ஸ வர சொளிருக்கேன்.. சீக்ரம் சரி பண்ணிடறோம் ... பயப்டவேணாம் மிஸ் ஆர் மிசெஸ் காவ்யா..”
“டு பி மிச்செஸ் டாக்டர்.. ரொம்ப நன்றி டாக்டர்.. எங்களுக்க இவ்வளவு பன்னிருகிங்க..”
“இட்ஸ் மை டியுடி காவ்யா..ஐ ஹாவ் சம் வொர்க்..பக்கத்துக்கு ரூம் உங்களுக்கு ஸ்டே பண்ண அல்லாட் பண்ணிருக்காங்க ..யு கேன் யூஸ் தட்.. கார்த்திக் அப்செர்வேஷன்ல இருக்கிறாறு.. இப்போ பாக்க முடியாது..”
“ஒகே டாக்டர்..”
“தென் சி யு காவ்யா..”அவர் வேகமாக வேறு அறைக்குள் சென்று விட்டார்..
ரிசெப்ஷன் சென்று எல்லா பார்மாலிட்டி முடித்து விட்டு நிற்க..சத்யா அழைத்தாள் துருவ் போனிற்கு...
அழுது அழுது குரலே போய்விட்டது சத்யாவிற்கு.
“துருவ்..”
“காவ்யா பேசறேன் சத்யா.. பயப்டாத..அண்ணாக்கு ஒன்னும் இல்ல.. இப்போ ஒரு அர்தோ ஸ்பெஷல் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம் “
“ஆர்த்தோ வா.. என்னாச்சு அவனுக்கு...”அவள் மேலும் பதற..
“லைட்டா நடக்க முடியாதுன்னு சொன்னாங்க..கொஞ்சம் சின்ன பிராக்சர்..”
“பெருசா ஒன்னும் இல்லல..”
“அதுலாம் இல்ல மா.. ஒரு டூ வீக் ரெஸ்ட் எடுத்தா சரி ஆயிடும்..”
“என்னால வீட்ட விட்டு வர முடியாது காவ்யா.. அவன பத்துக்கோ..”
“நீ சொல்லனுமா சத்யா..நான் பாத்துக்கிறேன்.. நீ உன் அப்பாக்கிட்ட ஜாக்கரதையா இரு.. “
“சரி காவ்யா..”
“சின்ன பிராக்ச்சர்ன்னு சொன்னதுக்கே இப்படி பதறுறா.. உண்மைய சொல்ல வேணாம்..”நினைத்துகொண்டவள் துருவ் அருகே சென்றால்..
“மாமா..இப்டி இருந்தா அண்ணாவ யாரு பத்துப்பா சொல்லு..எல்லாம் சரி ஆயிடும் டா..”
அவளும் ஆரியனை பற்றி சொல்ல நினைத்தாள் தான்.. ஆனால் இந்த நிலைமையில் வேண்டாம் என்று முடிவெடுதவள் அமைதியானாள்..
தேவியும் கிரிஷும் தகவல் அறிந்து வந்தனர்.. சாப்பாடு கொடுத்துவிட்டு துருவிர்க்கு ஆறுதல் சொல்ல வந்தார்..அவன் உடைந்து போவான் என்று தெரியும் அவருக்கு..
“கார்த்திக் ஏன் உயிர்..” என்று அடிகடி சொல்ல கேட்டிருக்கிறார் ..சிறு வயது முதல் ஒண்ணாகவே வளர்ந்த பாசம் அன்பு அவனை நிலைகுலைய செய்தது..
“துருவ்.. இப்டியே இருக்காதா ப்பா..கார்த்திக் பார்த்தா வருத்தப்டுவான்ல மா..”
கட்டு படுத்தி வைத்த கண்ணீர் கரையை உடைத்து வெளியே சீறியது..
“ம்மா.. எனக்கு அவன் எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும்ல..என் உயிர் மா,.. அவன அப்படி பாக்க என்னால முடில ..என்ன என்னாலையே ஹாண்டில் பண்ணிக்க முடில மா.. “தேவியின் மடியில் படுத்துக்கொண்டான்..தன் கண்ணீரை யாரும் பார்க்க கூடாதென்று..
“புரிது டா கண்ணா.. கஷ்டம் வர நேரத்துல தான் நாம இன்னும் தைரியமா இருக்கனும்... ஒரு மேஜர் சர்ஜெரி அப்றோம் ஒரு மைனர் சர்ஜெரி .. சரி ஆகிடுவான் ப்பா.. நாமலே நம்ம வீட்ல வச்சி பாத்துக்கலாம் .. கார்த்திக் வீட்ல சொல்ல வேணாம் பயப்டுவாங்க.. நீ தான் டா எல்லாருக்கும் தைரியம் சொல்லணும்..”அவன் தலையை கோதிக்கொண்டே அவர் கூற..நிதானம் அடைந்தான்..
“அண்ணா..அழாதா..எனக்கும் அழுகையா வருது..”கிரிஷ் அவனை கட்டிக்கொள்ள..
“சரி டா செல்லம்.. அண்ணா அழல பாரு.. கண்ணுல தண்ணி வரல..”அவன் சிரிக்க காவ்யாவிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.. சிறிது நேரம் இருந்து விட்டு கிரிஷும் தேவியும் சென்றனர்..
காவ்யாவிற்கு நடந்ததை சொல்லாமல் இருப்பதே பெரிய சங்கடமாய் இருக்க சொல்லவேண்டும் என்று முடிவு எடுத்து அவன் அருகில் சென்றாள்..
“மாமா..”அவன் கையை கோர்த்துகொண்டால்..
“நமக்கு ரெண்டு பேருக்கும் டாக்டர்ஸ் யாரையும் தெரியாது.. நமக்கு தெரிஞ்ச ஒரே டாக்டர்..அது..”
“சாஷினி.”மெலிய குரலில் கூறினான்..
“ஆமா மாமா.. அவங்களுக்கு தான் கால் பண்ணேன்.. அவங்க பிரிண்ட்ஸ் தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா கேக்கலாம்னு..”
“ம்ம்..”கேட்டுகொண்டிருக்கிறான் என்பதற்கு அத்தாசியாய் வெளி வந்தது அவன் குரல்..
“அப்போ வேற ஒருத்தங்க பேசுனாங்க.. அவங்க பேரு..ஆர்யன்..அவங்க..சாஷினிய..”
“சாஷினிய கல்யாணம் பண்ணிக்க போறவரா..??”அவனே முடித்தான்..
“ஆமா..நான் கால் பண்ண அப்போ அவங்க ஏதோ சர்ஜெரில இருந்தாங்களாம்... ஆர்யன் ரெபர் பண்ணவங்க தான் டாக்டர் கௌதம்..” அதற்க்கு மேல் அவன் காதில் ஏதும் விழவில்லை..
அவனுக்கு ஒரு பக்கம் அதிகப்படியான மகிழ்ச்சி.. இன்னொரு பக்கம் சோகம்..அது கார்த்திக்கை பற்றியா இல்லை சாஷினிகாகவா என்று அவனுக்கே விளங்கவில்லை..
தனக்கென இருப்பவர்கள் ஏன் எப்பொழுதும் தனகானவர்களாகவே இருக்க முடியாதா...
காவ்யாவின் சொற்களில் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்துக்கொண்டான்..
கனவுகள் மெல்ல மெல்ல விலகிச்செல்ல.. நிஜங்கள் எல்லாம் தன்னை நெருங்குவதை உணர்ந்தான்..


கனவுகள் தொடரும்......................
 

Advertisements

Top