• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
யாழியின் அறையில் நிற்க முடியாமல் தன் அறைக்கு வந்த விநாயக்
கட்டிலில் படுத்துக்கொள்ள மனமோ பழைய நினைவுகளை அசை போட
தொடங்கியது.கடந்த காலத்தின் நினைவுகள் ஈட்டியாய் அவன் மனதை
தாக்கின.

தீடீரென்று தன் கைப்பேசி அலற அதை எடுத்தவன் திறையில் ஹரிஷ்
பெயர் தெரிய சிரித்துக்கொண்டே எடுத்து,"சொல்லுடா மச்சா! எப்டி
இருக்க?" என்க அவனோ,"ஏன்டா மச்சா கடுப்ப கிளப்பற.நீ கிளம்பி
வீட்டுக்கு வாடா" என்க திகைத்த விநாயக் "எப்ப டா மச்சா யூ.எஸ்ல
இருந்து வந்த?" என்று கேட்க," நீ முதல்ல வீட்டிக்கு வா" என்று கூறி
போனை அணைத்துவிட்டான்.

மூன்று ஆண்டுகள் கழித்து நண்பனை காண போகிற மகிழ்ச்சியில்
காரை எடுத்துக் கொண்டு வேகமாக ஹரீஷ் வீட்டிற்குச் சென்றான்.

கோதை, "வாப்பா விநாயக்! அப்பா மா எல்லா நல்லா இருக்காங்களா?"
என்று கேட்க "எல்லாரு ரொம்ப நல்லா இருக்காங்க ஆண்டி" என்றான். "நா உனக்கு காபி கொண்டு வர. அவன் உள்ள போன் பேசிட்டு
இருக்கான்.நீ போய் பாரு" என்றார்.

அவன் உள்ளே செல்லும்பொழுது ஹரீஷ் போனை கட்டிலின் மேல் "
ச்சை.." என்று கூறி போட்டான்.விநாயக் "எப்டி டா மச்சா இருக்க?" என்று
அவனை கட்டிக்கொள்ள,"ஏன்டா நீ வேற" என்று அலுத்துக்கொண்டான்.

ஹரீஷ் எப்பொழுதுமே உற்சாகமாக இருப்பவன். தன்னைச் சுற்றி
இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்."சிரிச்சுச்
சிரிச்சு வயிறு வலிக்குதுடா" என்று மற்றவர்கள் கூறும் வரை
விடமாட்டான்.


அப்படிப்பட்டவனே இன்று இப்படி கவலை தேங்கிய முகத்துடன்
உட்கார்ந்திருப்பதை காண சகிக்காமல்"என்னடா மச்சா?" என்று கேட்க
ஹரீஷ் விநாயக்யை கட்டியணைத்து கதறிவிட்டான்.

நண்பன் சோகமாக இருக்கிறான் என்று தான் விநாயக் நினைத்தான்.
ஆனால் அவன் இப்படி அழுவான் என்பதை சற்றும் எதிர்பாராத
விநாயக்,"மச்சா! என்னாச்சு டா? சொல்லுடா .... எதா இருந்தாலும்
பாத்துக்கலாம்....சொல்லுடா..."என்று கூற தன் கண்ணை
துடைத்துக்கொண்ட ஹரீஷ் "அபிக்கும் எனக்கும் சின்ன சண்டை.
அதனால நா அவட்ட ஒரு மாசமா பேசல.அவல கோபத்துல
எல்லாத்துலையும் பிளாக் பண்ணிட்ட.அவளு பல வகையா என்கிட்ட
பேச முயற்சி செஞ்சா.நான் தா அவகிட்ட பேசல.தீடீர்னு நேத்து கவி கால்
பண்ணி சொல்றா அவளுக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க.அடுத்த வாரம்
கல்யாணம்னு...எனக்கு என்ன பண்றதுனே தெரில..போன் பண்ணா கட்
பண்றா..அது தா உடனே கிளம்பி வந்துட்ட.இப்ப என்ன பண்றதுனு
தெரில டா" என்றான்.

"அவ வீட்ல போய் பேசலா வாடா" என்று கூற அவனோ,"மச்சா!அவ என்
மேல ரொம்ப கோபமா இருக்கா டா.அவங்க வீட்ல பேச போய் என்ன
யாருனே தெரியாதுனு சொல்லிட்டா என்ன டா பண்றத?" என்றான்.

"பேசாம கவி கிட்ட சொல்லி அவள வெளில கூப்டூட்டு வர சொல்லலா..நீ அப்ப போய் அவள்ட்ட பேசு" என்று கூற அவன் தலையசைத்தான்.

அப்பொழுது தன் அண்ணணைக் காண வந்த கவிதா விநாயக்யைப்
பார்த்து,"ஹலோ அண்ணா! எப்டி இருக்கீங்க?" என்றாள்."சூப்பரா
இருக்க மா..நீ எப்டி இருக்க?ஸ்டடிஸ்லா எப்டி இருக்கு?" என்று நலம்
விசாரிக்க ஹரீஷோ,"இங்க ஒருத்த வாழ்க்கையே ஊசலாடிட்டு இருக்கு..
இதுல இவங்களுக்கு நல விசாரிப்பு கேக்குதாம்" என்று கூறி அலுத்துக்
கொண்டான்.

"நீ தான அவள வேண்டானு தூக்கி போட்ட.இப்ப எதுக்கு டா வந்துருக்க?"
என்று கேட்க அவனோ,"என்னது நா வேண்டானு சொன்னனா?
எங்களுக்குள்ள சண்டை தான்.அதுக்காக அவ வேண்டானு நா ஒருநாள்
கூட நினைச்சது இல்ல...அவ என் உயிர் அவ இல்லாமா நா எப்டி
இருப்ப?சண்டை நாங்க எப்பவும் போடறதுதான்.இந்த டைம் கொஞ்சம்
பெரிய சண்டை.அதுக்கு அவ இவ்ளோ பெரிய முடிவு எடுப்பானு நா
கொஞ்சம் கூட நினைக்கல" என்றான்.

கவியோ,"உங்க இரண்டு பேர்க்கும் என்ன சண்டைனு எனக்கு
தெரியாது...ஆன நீ அவகிட்ட சண்டை போட்டுட்டு பேசாம இருந்தப்ப அவ
எவ்ளோ துடிச்சானு எனக்கு மட்டு தா தெரியும்.என்ன கேட்டா அவ
எடுத்துருக்க முடிவில தப்பே இல்லனு சொல்லுவ"என்றாள்.

ஹரிஷ் அவளை விரக்தியாக ஒரு பார்வை பார்க்க விநாயக்,"கவி நீ
அவனோட தங்கச்சியா இருந்தாலு அவனோட பெர்சனல்ல
தலையிடறது தப்பு.அவங்க இரண்டு பேருக்குள்ள என்ன இருக்குனு
நமக்கு தெரியாது.அதனால நீ அவள மீட் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணு
மத்தத அவன் பார்த்துப்பான்"என்றான்.

தன் தவறை உணர்ந்த கவிதா,"ஸாரி" என்று தன் அண்ணணிடம்
கூறிவிட்டு அறையை விட்டுச் சென்றாள்.

விநாயக்,"மச்சா! அபி நீ சொன்னா புரிஞ்சுப்பா.எல்லா நல்ல படியா
நடக்கும். நீ நிம்மதியா தூங்கு"என்று கூறிவிட்டுச் சென்றான்.

அடுத்த நாள் கவிதா அபியை காபி ஷாப் அழைக்க அவளும் வருகிறேன்
என்றாள்.கவிதா இருந்த டேபிளில் வந்து அமர்ந்த அபி,"என்னடி தீடீர்னு
பாக்கனும்னு கூப்டுருக்க?"என்று வினவ அவள் பக்கத்தில் இருந்த
ஹரீஷ்யைப் பார்த்து திகைத்தாள்.

ஆனந்தத்தில் அபிக்கு தன்னை அறியால் கண்ணீர் வந்தது.கவிதா
அங்கிருந்து நகர்ந்து செல்ல ஹரீஷ் அவளைக் கண் இமைக்காமல்
பார்த்துக்கொண்டிருந்தான்.

வெயிட்டர் வந்து ஆடர் கேட்க தங்கள் நிலையிலிருந்து கலைந்தனர்.
ஹரீஷ் அபிக்கு பிடித்த சாக்லேட் ஓரியோ மில்க் சேக் இரண்டை ஆர்டர்
செய்தான்.

அபிக்கு இப்பொழுது அனைத்தும் நியாபகம் வர அங்கிருந்து எழுந்து
செல்ல எழுந்தாள்.அவள் கையை பிடித்தவன் ,"அபிம்மா ப்ளிஸ்! நா
சொல்றத கேளு" என்றான்.

அவள் அவனைப் பார்க்க அவன் பேசாமல் இருந்தால் அவள் எழுந்து
போய்விடுவாளோ என்ற பயத்தில் ,"அபி!உன்கிட்ட பேசாம வேலை
பாத்துட்டு இருந்தது தப்புதான்டா..யூ.எஸ்க்கும் இந்தியாக்கும் 6 ஹார்ஸ்
டைம் டிவ்ப்ரன்ஸ்...அதனால என்னால மேனேஜ் பண்ண முடிலடா..
உன்ன அவாய்ட் பண்ணணும்ணு நா நினைக்கல மா....நா அங்க போய்
ரொம்ப லோன்லியா ஃபில் பண்ண..நீ வேற உன் அத்தை பையன் கூட
போட்டோ எடுத்து சேன்ட் பண்ணியா அதனால தாடா கோபத்துல பிளாக்
பண்ண..நீ என்ன கடுப்பேத்த தா போட்டோ சேன்ட் பண்ணேனு தெரியும்.
இருந்தாலும் என்னால கோபத்த கண்ட்ரோல் பண்ண முடிலமா..சாரி"

"என் மாமா பையன் என்ன விட மூனு வருஷம் சின்ன பையன்.அவன்
இப்பவே பாரு எவ்ளோ ஹைட்டா இருக்கானு காட்ட தா உனக்கு
போட்டோ சேன்ட் பண்ண.நா சொல்றதுக்குள்ள நீ பிளாக் பண்ணிட்ட. "
என்றாள்.

"நம்ம எவ்ளோ சண்டை போட்ருக்கோம்.ஆன இந்த சின்ன சண்டைக்கு போய் ஏன் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கலாணு முடிவு பண்ணிட்ட..
நா இல்லாம உன்னால இருக்க முடியுமா?"என்று உணர்ச்சி ததும்பும்
குரலில் கேட்டான்.

"நா எப்ப வேற கல்யாணம் பண்ணிக்கறனு சொன்ன. லூசு மாறி பேசாத" என்க "அப்ப உனக்கு நிச்சயம் முடியலையா?நல்லவேளை "என்று கூறி பெருமூச்சுவிட்டான்.

தாங்கள் ஆர்டர் செய்த உணவு வர இருவரும் அதைப் பருக
ஆரம்பித்தனர்.

"உனக்கு மண்டையில எதாச்சு அடி பட்டிறுச்சா?ஏன்டா வந்ததுலயிருந்து
லூசு மாறி பேசிட்டு இருக்க?" என்று அபி கேட்க ,"கவி தா போன் பண்ணி
உனக்கு நிச்சயம் ஆயிருச்சு அடுத்த வாரம் கல்யாணம் அப்புடினு
சொன்னா.அதுதா உடனே பிளைட் புடுச்சு வந்த.ஏமாத்திட்டா பாவி".
என்று பெருமூச்சுவிட்டான்.

"நா நீ என்கிட்ட பேசாதப்ப அவகிட்ட சொல்லி அழுத அதனால அவ இப்டி பண்ணிருப்பானு நினைக்கற.அவ பண்ணதுகூட கரெக்ட் தா அதனால
தா நீ என்ன பாக்க வந்த. இல்லனா இப்ப கூட வந்திருக்க மாட்ட"
என்றவள் கோபித்துக்கொள்ள "உன்ன பாக்காம எவ்ளோ
கஷ்டப்பட்டேனு எனக்கு மட்டு தா தெரியும். ஐ ரியலி மிஸ் யூ.பட் அங்க
எனக்கு வெர்க் அப்டி.இனி உன்னவிட்டு நா போகமாட்ட.கல்யாணம்
பண்ணி என் கூடவே கூப்டுட்டு போற.இன்னைக்கு உங்க வீட்டில வந்து
நா பேசற" என்று கூற அபி நம்ப. முடியாமல் அவனைப் பார்க்க "வா
போலாம் " என்று கூறி அவளை வெளியே கூட்டிப்போனான்.

கவிதா விநாயக்கிற்கு தான் செய்ததைக் கூறினாள்.அபி ஹரீஷ்
வெளியே வர கவிதா மனதுக்குள் "உண்மைளா அண்ணாக்கு
தெரிஞ்சிருக்கும்.இன்னைக்கு நா செத்த" என்று நினைத்தாள்.

ஹரீஷ் கவிதாவைப் பார்த்து முறைத்து"ஏன்பொய் சொன்ன?" என்று
கேட்க"அபி ரொம்ப அழுதாளா...அதனால தா அண்ணா...சாரி"என்றாள்.

அபியோ, "நீ பண்ணது சரிதான்.அப்டியில்லனா இப்பகூட உன் அண்ணா என்ன பாக்க வந்திருக்கமாட்டா.தேங்க்யூ சோ மச் " என்று
கூறி அவளை அணைத்துக்கொண்டாள்.

ஹரீஷ் அபியின் வீட்டில் சென்று பேசி இருவருக்கும் திருமணம்
நடந்தது.ஹரீஷ் அபியுடன் யூ.எஸ் பறந்துவிட்டான்.விநாயக்
அவர்களிருவரையும் வழியனுப்பிவிட்டான்.
 




Last edited:

kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi kanishka varna
very nice start.....vinayak 's reminiscence of yazhini came out very interestingly cute.....definetely u filed so many qns for us to find out....triggering our interest.....nice start.....
but one thing.....my humble request tooo....all the verbs do not have an 'nn' or '' ill''--like partha,ketta,thaan ku pathil tha...etc....so reading is something very odd...so pls add those letters dear...it will definitely enrich ur words n the over all look of ur super story....
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
hi kanishka varna
very nice start.....vinayak 's reminiscence of yazhini came out very interestingly cute.....definetely u filed so many qns for us to find out....triggering our interest.....nice start.....
but one thing.....my humble request tooo....all the verbs do not have an 'nn' or '' ill''--like partha,ketta,thaan ku pathil tha...etc....so reading is something very odd...so pls add those letters dear...it will definitely enrich ur words n the over all look of ur super story....
Thank you so much mam.will correct it.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top